Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலினும் காதல் கேள் - FINAL

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதலினும் காதல் கேள் ❤

“என்னம்மா…நினைச்சிட்டு இருக்கீங்க…நீங்க...? நீங்க செஞ்சு வைக்கிற வேலையால இவன் என்னை இம்சை பண்றான்…” என்று ஆர்கலி கத்த,

வள்ளிக்கு அவளது ‘அம்மா’ என்ற அழைப்பு மட்டுமே கேட்க,கண்ணீர் வந்துவிட,பேசவே முடியவில்லை அவரால்.இத்தனை வருடங்களான போதும் அவள் வள்ளியிடம் இப்படி நேராகப் பேசியதே இல்லை.

“தோசை கேட்டானேன்னு சுட்டு கொடுத்தா…எனக்கு ஆப்பிள் தோசை..வேணும்…ஸ்மைலி தோசை வேணும்னு என்னை டார்ச்சர் பண்றான்மா…இவன்….இதுல வேற….சிரிக்கிற ஸ்மைலி கேட்டா நீ முறைக்கிற ஸ்மைலி தோசை சுடுறேன்னு என்னைப் பார்த்து சொல்றான்…” என்று படபடவென பேசியவள்

“எனக்கே தலைசுத்தலா இருக்கு..மல்லுக்கட்டி எழுந்து இவனை ஸ்கூலுக்குக் கிளப்ப பார்த்தா….இவன் தொல்லை என்னால முடியல…” என்று பாவமாக சொல்ல

“என்ன..ஆரு..தலை சுத்தலா…இருக்கா…?” என்று வள்ளி பதட்டமாக,

“ப்ச்…முதல்ல..வந்து இவனுக்கு என்ன வேணுமோ சுட்டுத் தாங்க…” என்னால முடியல…” என்று அலுத்தபடி ஆர்கலி போனை வைக்க

அவள் முன்னால் நின்ற அவள் மகன் நரசிம்மனும் நரை கூடிய வரதராஜனும் சிரித்தபடி ஹைஃபை போட்டுக்கொள்ள,

“எல்லாம்….நீங்க கொடுக்கிற செல்லம் தான் மாமா…” என்று வரதனிடம் கோபிக்க

“தாத்தாவை திட்டினா…அப்பா கிட்ட சொல்வேன் மா…” என்று அவளது மகன் ஒற்றை விரல் நீட்டி மிரட்ட,

அவனது நீட்டிய விரலை பிடித்தவள்,

“கை நீட்டிப் பேசின….பிச்சுடுவேன்..உன்னை..ஸ்கூல் போய்ட்டு வாடா…உன் தாத்தாவுக்குத் திட்டுதான்..உனக்கு தோசை கரண்டி ரெடியா இருக்கும்…” என்று அவன் படுத்திய பாட்டில் வியர்த்தபடி அவள் பேச

“என்ன…என் சிங்கக்குட்டியை அடிப்பியா?என்னம்மா..நீ…?” என்று வரதராஜன் மருமகளிடம் குறைபட

“தாத்தா…அம்மா அடிப்பாங்களா…?” என்று சிங்க குட்டி சிம்மன் பாவமாகப் பார்க்க

“அடிக்க மாட்டாங்கடா..அடிச்சா அப்பா கிட்ட சொல்லிடுவோம்..இப்ப வள்ளி அம்மச்சி வருவாங்க….நீ தோசை சாப்பிட்டு ரெடியாகிடு…தாத்தா உன்னை ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போறேன்..” என்றபடி அவனுக்கு பெல்ட்,ஐடி கார்ட் எல்லாம் அவர் மாட்டி விட,அதையெல்லாம் ரசித்தாலும் வெளிக்காட்டாமல் அவள் அறைக்குள் போய் ஆசுவாசப்பட்டாள்.

முகத்தைக் கழுவியவள் ஆபிஸுக்கு ஏற்றவாறு ஒரு சுடிதார் அணிந்து,வெளியே வர,அதற்குள் வள்ளி பேரனுக்குத் தோசை சுட்டுக்கொண்டிருந்தார்.

வரதராஜன் அவன் காலைப் பிடித்து சாக்ஸ் போட்டு விட,கிச்சன் மேடையில் ஜம்மென்று அமர்ந்து,

“அம்மச்சி…ஸ்டார்…தோசை… நெக்ஸ்ட் மூன் தோசை..அப்புறம்…போதும்…” என்று சொல்லி தோசையை அவன் அம்மா வைத்த சாம்பாரில் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் சாப்பிட்டு முடிக்கவும்,ஆர்கலி கிச்சனுக்குள் போனவள்,

மகனது தலையை சரிசெய்து விட்டு,

“அப்பா…மாதிரி தலையைக் கலைச்சு விடாத…எத்தன வாட்டி சொல்றது உனக்கு..சிம்பா..…..பென்சில் எல்லாம் தொலைச்சுட்டு வந்த….உன்னைத் தொலைச்சுடுவேன் நான்….குட் பாயா இருக்கனும்….” என்று சொல்லி மகனுக்கு முத்தமிட்டவள் மாமனாரிடம்,

“மாமா..சாவி எடுத்துட்டு போங்க..நான் சாப்பிட்டு கிளம்பப் போறேன்…” என்றதும்

“சரிம்மா…” என்று அவர் பெயரனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட

“ஆரு…உனக்கும் தோசை ஊத்தவா…” என்று வள்ளி கேட்க

“டைம் ஆச்சும்மா…சீக்கிரம் தா…” என்று உரிமையோடு கேட்க

“சாரிடா…” என்றபடி அவளுக்கு ஒரு தோசையை தட்டில் வைக்க

“இந்த சாரி…எதுக்கு…?” என்றாள் அவரை பார்த்தபடி.

“எல்லாத்துக்கும்…” என்றவருக்கு அழுகை வந்துவிட

“ப்ளீஸ்மா…அதையெல்லாம் விட்டுடு…”

“அம்மாவை மன்னிச்சிட்டியா…?” அவர் ஏக்கமாக கேட்க

உண்மையில் அதற்கான பதில் அவளிடம் இல்லை.மன்னித்தாளா தெரியவில்லை.ஆனால் மறந்தாள்.காலம் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் மாற்றம் கொண்டு வந்திருக்க,

இப்போது மகனை கவனிக்கவே நேரம் சரியாக இருக்க,நெப்போலியனிடம் சண்டை போடக் கூட நேரமில்லை.சிறிது நேரம் அமைதியில் ஓட,

“அம்மா….இன்னொரு தோசை தா..டைம் ஆச்சு..….” என்று அவள் பேச்சை மாற்ற,அவரும் அதை கிளறவில்லை.

மாலையில் வீடு வந்தவள் மெத்தையில் படுத்துக் கொண்டு நெப்போலியனுக்கு போன் செய்ய,

“மார்கழி..!” என்று அவன் உற்சாகமாக அழைக்க

“என்ன பண்ற…நீ….எப்போ வருவ….உன் அப்பாவும் மகனும் என்னை கொடுமை பண்றாங்க…” என்று புகார் வாசித்தாள்.

ஆர்கலியின் சொல்லுக்கு தம்பி,தங்கைகள் என்று எல்லாரும் கட்டுப்பட்டாலும் அவளது மகன் இருக்கிறானே..அவன் அப்படியொரு சேட்டை.

அதிலும் ‘அப்படியே என் மகன் மாதிரியே பண்றான்…’ என்று வரதன் பேரனைப் பார்த்து பார்த்து புளங்காகிதம் அடைவார்.

நரசிம்ம வர்மனைக் கண்டிக்கும் ஒரே ஆள் ஆர்கலி தான்.அத்தனை பேரும் செல்லம் கொடுக்க,அவளுக்கும் மகன் என்றால் உயிர் தான்.ஆனாலும் எப்போதும் கண்டிப்போடே இருப்பாள்.

“அஞ்சு வயசுப்பையன்…டி அவன்…சும்மா இம்சை பண்ணாத…” என்று நெப்போலியன் சொன்னாலும்

“அஞ்சு வயசுல சொல்றது தான் ஆயுசுக்கும் இருக்கும்…” என்றிடுவாள்.

அவனும் அவள் கண்டிக்கையில் குறுக்கே வரமாட்டான்.

“இன்னிக்கு என்ன டி பண்ணினான்…?” என்று நெப்போலியன் சிரித்தபடி கேட்க

“உன் மாமியார்..அவனுக்கு டிசைன் டிசைனா தோசை சுட்டுக் கொடுத்திருக்காங்க….உன் மகனும்..என்னை இன்னிக்குக் காலையில…அப்படி தான் தோசை வேணும்னு இம்சை பண்றான்.மாமா ட்ரை பண்ணினா வரல….நான் ஊத்தினா…அப்படி செய்..இப்படி செய்னு என்னை நாட்டாமை பண்றான்..அதான் அவங்களையே ஊத்தி தர சொல்லிட்டேன்..” என்றதும்

“இன்னும் என்ன..என் மாமியார்…உன் அம்மான்னு சொல்லு டி..”

“ஹோ..! அதுக்குள்ள..எங்கப்பா நியூஸ் வாசிச்சுட்டாரா…?”

“ஹாஹா….ஆமா…” என்றவனிடம்

“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு முதல்ல…எங்க இருக்க..நீ..எப்ப வர….எனக்கு முடியல…நிஜமா…ரொம்ப டயர்டா இருக்கு…” என்றாள்.

இப்போதும் ஆர்கலிக்கு ஐந்தாம் மாதம்.அதுவும் இரட்டைக்குழந்தைகள்.

நெப்போலியன் அவனது ஸ்பேர் பார்ட்ஸ் ப்ரோடக்ஷன் விஷயமாக கரூர் வரை சென்றிருக்க, நாலு நாள் ஆகியிருந்தது.

“இப்போ….நான் நம்பர்.8, விவேகானந்தர் தெரு,கரூர் மெயின் ரோடு,கரூர்ல இருக்கேன்…நாளைக்கு நைட் வீட்ல இருப்பேன்…போதுமா…” என்றிட,

“என்ன டா…கிண்டலா…?” என்று ஆர்கலி சிரிக்க

“ஹாஹா..நிஜமா…” என்று அவனும் சிரித்தவன்

“முடியலன்னா…லீவ் போடு டி….”

“அய்யோ….இப்பவாச்சும் ஆபிஸ்க்கு போய் எஸ்கேப் ஆகிடுறேன்…உன் பையனும் அப்பாவும் அடிக்கிற லூட்டிக்கு நான் வீட்ல இருந்தேன்….கத்தி கத்தி என் வாய்ஸே போயிடும்…” என்றவள்

“சரி…ஒழுங்கா சாப்பிடு….ரெஸ்ட் எடுத்துட்டு வா…வேலை முடிஞ்சதா..?” என்று கேட்க

“ம்ம்..அவங்க பஸ் தயாரிக்கிற கம்பெனி.. நம்ம ஃபாக்டரிக்கு வந்து பார்த்துட்டு மேல பேசலாம்…சொல்லி இருக்காங்க…” என்றான் மகிழ்ச்சியோடு.

இப்போதெல்லாம் எங்கே போகிறேன்.எதற்காகப் போகிறேன் என்று சொல்ல பழகியிருந்தான்.பழக்கி இருந்தாள் ஆர்கலி.

அடுத்த நாள் இரவில் அவன் சொன்னது போல் ஆர்கலியின் அருகில் இருக்க,

“என்ன…டி இன்னிக்கு புடவை கட்டியிருக்க…?” என்று கேட்டான்.

ஆர்கலி வெளியே சென்றால் மட்டுமே புடவை உடுத்துவாள்.வீட்டில் எப்போதும் சுடிதார்.நைட்டி தான்.

அவனது கையை எடுத்து தன் வயிற்றில் வைக்க,

“என்னடி..வயிறு தெரியுது போல…” என்று சொல்ல

“ம்ம்..காலையில ஸ்கேனுக்குப் போனேன்..ஷாலினி ஹாஸ்பிட்டலுக்கு…”

“என்ன…சொன்னாங்க…?” என்று அவன் பரபரப்பாகக் கேட்க

“நீ பொண்ணு பொண்ணுன்னு ரொம்ப ஆசைப்படுவ…இல்ல..இரண்டும் கேர்ள் பேபிஸ்…” என்று அவள் பூரிப்போடு சொன்னாள்.

“ஷாலு பாப்பா சொல்லுச்சா…?”

“ஆமா..சந்தோஷம் தானே..?”

“சந்தோஷமா….எனக்கு என்ன சொல்லனே தெரியல…….தேங்க்ஸ்டி….” என்று அவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன்,

வெளியே முற்றத்தில் நீர் நிரப்பி அதில் ஆர்கலி மலர்கள் போட்டு வைத்திருக்க,அதில் அவர்களது சிம்பா குட்டி தாத்தா செய்து கொடுக்கும் காகித கப்பல்களை விட்டுக் கொண்டிருக்க,

சந்தோஷ மிகுதியில் வந்தவனுக்கு சத்தமும் மிகுதியாக,

வரதனைக் கட்டிக் கொண்டவன்,

“வரதா…..நம்ம வீட்டுக்கு இரண்டு முயல்குட்டீஸ் வர போறாங்க….” என்றதும் அவர் புரியாது பார்க்க

“வரதா….ஆர்கலி ஸ்கேன் பண்ணியிருக்கா…இரண்டும் பெண் குழந்தைங்க….” என்றதும் அவருக்கும் ஒரே மகிழ்ச்சி.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க,உள்ளே ஓடிய ஆர்கலியின் மகன்,

“அம்மா…!அப்பா….தாத்தாவை பெயர் சொல்லிட்டார்…..அப்படி சொல்லக்கூடாது நீங்க சொன்னீங்க தானே?” என்று சமத்தாக அப்பாவைப் போட்டுக் கொடுக்க

“அப்பாவுக்கு…அம்மா பனிஷ்மெண்ட் கொடுக்கிறேன்… நீ வா…விளையாடினது போதும்….சாப்பிட்டு தூங்கலாம்…காலையில..ஸ்கூல் இருக்கு…” என்று சொல்ல

“அம்மா.. நம்ம வீட்டுக்கு முயல்குட்டி வாங்கப் போறோமா..?” என்று கேட்க

“ஹாஹா… உன்னை சிங்கக்குட்டி சொல்றாங்க இல்ல…டா…அது மாதிரி…உனக்கு…இரண்டு லிட்டில் சிஸ்டர்ஸ் வரப்போறாங்க…அதை தான் அப்பா முயல் குட்டி சொல்றாங்க..” என்று சொல்ல

“அய்யா..ஜாலி..….இரண்டு பேபியா…..ம்மா…இன்னொரு பேபி வராதா..?” என்று மகன் அவள் மீது சாய்ந்தபடி கேட்க

“ஏன் டா…சிம்மும்மா…?” என்று அவள் அவனை அணைத்தபடி கேட்க

“அப்போதானே…டூ பேபி ஒன் டீம்..நானும் இன்னொரு பேபியும் ஒரு டீம் வைச்சு விளையாடலாம்…” என்று யோசனையாக சொல்ல

“ஹாஹா…விளையாட தானே…அதுக்கு தான் உனக்கு காயு சித்தி பாப்பா சமன்யு இருக்கானே…அவனும் உனக்கு தம்பி தான்..அப்புறம் ஷாலு சித்திக்கு பாப்பா வரும்…ரஞ்சித் மாமாவுக்கு பாப்பா வரும்…” என்று சொல்லும்போதே,

“என்ன…சொல்றான்…டி என் சிங்கக்குட்டி…?” என்றபடி மகனை தன் மேல் போட்டுக் கொண்டு நெப்போலியன் கேட்க

“ம்ம்…அவனுக்கு விளையாட டீம் ல ஆள் கம்மியா இருக்காம்..டிவின்ஸ் கூட எக்ஸ்ட்ரா பேபி கேட்கிறான்..முயல் குட்டினா என்னனு கேட்கிறான்…?” என்றதும்,

“இரண்டு குட்டி பாப்பா…என் சிம்முக்குட்டிக்கு வர போவுது..நீதான் நல்லா பார்த்துக்கனும்…” என்று மகனிடம் சொல்ல

அந்த குட்டியோ ,“ம்மா…அப்பாவுக்கு பனிஷ்மெண்ட்..” என்று ஞாபகப்படுத்த

“என்னடி..சொல்றான்..” என்று அவன் திரும்பும்போதே வேகமாக மெத்தையில் இருந்து குதித்தவன்

“நான் தாத்தாட்ட போறேன்…” என்று ஓடி விட

“உனக்கு…எத்தனை தடவ..சொல்றது….மாமாவை பெயர் சொல்லிக் கூப்பிடாத….அவன் நம்மளை அப்படியே கவனிக்கிறான்..” என்று ஆர்கலி நெப்போலியனின் கன்னத்தைக் கிள்ளியவாறே சொல்ல

“அடப்பாவி மகனே…அவ்வளவு அவசரமா அதை தான் சொன்னானா…?” என்று கேட்க

“ஆமா….இன்னொரு தடவ இப்படி அவன் வந்து சொன்னான்…உன்னை பிச்சிடுவேன்….நான்…” என்றாள் கோபமாக.

“ஏன் டி…எனக்கு ஒரு டவுட் கேட்கவா…?”

“என்ன…?”

“இல்ல….காயு எல்லாம் உன் மாமா மகனை வாங்க போங்கனு மரியாதையா பேசுறா…நீ என்னை வா போன்னு பேசுறியே…இதை நம்ம மகன் கவனிக்க மாட்டானா..?” என்று கேட்டுவிட்டு அவளை கெத்தாகப் பார்க்க

“அவ எவ்வளவு மரியாதையா அவனை கூப்பிடுவான்னு எனக்குத் தெரியும்…அதை விடு…நீ என்னை வாங்க போங்கன்னா சொல்ற…இல்லை தானே….வா போன்னு தானே பேசுற….இத்தனைக்கும் நான் அவன் முன்னாடி உன்னை டா போட்டுக் கூட பேச மாட்டேன்….”

“இப்போ நான் மட்டும் உன்னை மரியாதைக்காக வாங்க போங்க பேசி…நீ வா போன்னு பேசினா…என் பையன் சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க தான் மரியாதை கொடுக்கனும்..அப்படின்னு நினைச்சு வளருவான்…பசங்க எப்படி வேணும்னாலும் பேசலாம்..அப்படினு அவனுக்கு ஒரு நினைப்பு வந்துடும்… நம்ம இரண்டு பேரும் சரிபாதின்றப்ப….பேசுறதும் அப்படியே இருக்கட்டும்…நம்ம எப்படி நடக்கிறோமோ…அப்படி தான்…அவனும் நாளைக்கு நடப்பான்…”

“அப்போ….சொல்லிக் கொடுக்க வேண்டாம்…வாழ்ந்து காட்டனும்னு சொல்ற….”

“ஆமா..அதேதான்….”

“அப்போ…பாரு…உங்கூட நான் வாழ்ற வாழ்க்கையில….என் பசங்க…. நாளைக்கு எப்படி வாழ்றங்கன்னு..” என்றான் காதலினும் காதலாக.

“அப்புறம்…நம்ம ஷாலு பாப்பாவுக்கு ஒரு வரன் வந்திருக்கு…”

“அப்படியா..சூப்பர் சொல்லு..அவளுக்கும் இருபத்தைஞ்சு ஆகப்போகுது….மாப்பிள்ளை என்ன..பண்றாங்க…?” என்று அவன் முகம் பார்த்து ஆர்வத்தோடு கேட்க

“அவனும் டாக்டர்…தான்..”

“எந்த ஹாஸ்பிட்டல்..எந்த ஊர்…உனக்கு எப்படி தெரியும்..?”

“நம்ம ஷாலு வேலைப் பார்க்கிற ஹாஸ்பிட்டல் தான்…இதே ஊர் தான்.”

“அப்படியா….என்ன பெயர் சொல்லு..நான் ஷாலுகிட்டையே கேட்கிறேன்?”

“டாக்டர்.ஷ்யாம்..” என்றதும் அவளுக்கு முதலில் புரியவில்லை.

புரிந்தவுடன்,

“என்னது…அவனா..உன் ப்ரண்டை சொல்றியா..நீ..?” என்று அவள் கடுப்பில் பார்த்தாள்.

ஷாலினி இப்போது காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைப் பார்க்க,அதில் தான் ஷ்யாமும் வேலைப் பார்க்கிறான்.அவளுக்காகவே பெங்களூரை விட்டு அவன் வந்ததும் கூட..!

“ஆமா…டி..அவனுக்கென்ன குறைச்சல்…?”

“என்ன..குறைச்சலா…அவன் ஷாலுவை விட ஏழெட்டு வருஷம் பெரியவன்….அதெல்லாம் சரிவராது…” என்றிட

“என்ன சரிவராது…அவன் கல்யாணம் செய்யாம இருக்க காரணமே ஷாலு தான்…அவனுக்கு ஷாலினியை ரொம்ப பிடிச்சுருக்காம்….” என்று சொல்ல

“என்ன…சொல்ற நீ… அவ இங்க வந்தப்போ அவ ஸ்கூல் போன குழந்தை…அவன் அப்பவே டாக்டர்…அப்போ என் தங்கச்சியை அப்படிதான் பார்த்தானா…நான் அவனை என்னமோ நினைச்சா…இப்படியா…?” என்று பேச

“நிறுத்து..நிறுத்து…அவன் அவ காலேஜ் போன அப்புறம்..நம்ம காயத்ரி கல்யாணத்துல பார்த்த பின்னாடில இருந்துதான் பிடிச்சிருக்கு சொன்னான்…ரொம்ப நல்ல பையன் டி…நான் அவனுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்..என் செல்லமில்ல…” என்று அவளது கன்னத்தைக் கிள்ளி கொஞ்ச

“உனக்காகவெல்லாம் பார்க்க முடியாது….முதல்ல ஷாலு கிட்ட பேசுறேன்..” என்றதும்

“இப்பவே பேசு…”

“ஏன்….நாளைக்குப் பேசுறேன்….என்ன அவசரம்.?”

“அவனுக்கு ஏற்கனவே முப்பதுக்கு மேல வயசாச்சு டி….கற்பஸ் புலம்புது…முடிஞ்சா…அடுத்த மூகூர்த்தம்ல கல்யாணம் வைச்சிடலாம்..அப்படி தான் இருக்கு நிலைமை….சீக்கிரம் பேசுடி மார்கழி..” என்று அவன் நண்பனுக்காக கெஞ்ச

ஷாலினிக்கு அழைத்தவள்,

“ஷாலு….டாக்டர்.ஷ்யாம் எப்படி டா..?” என்று கேட்க

“ஏன் கா..தீடீர்னு…மாமாவுக்கே அவரைப் பத்தி தெரியுமே…”

“உங்க மாமா ப்ரண்டை பத்தி நல்லா தானே சொல்வார்….என் ப்ரண்ட் ஒருத்தங்க சிஸ்டருக்கு அவரைப் பார்க்க கேட்கிறாங்க…அதான் கொஞ்சம் சொல்லுடா..”

“அவர் நல்ல டாக்டர் கா…பேஷண்ட்ஸ்ட நல்லா அன்பா பேசுவார்….அவருக்குப் ப்ர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ் பேஷன்ட்ஸ் தான்….சாப்பிடாம கூட வேலை பண்ணுவார்..” என்று சொல்ல

“ஷாலு…நான் என்ன ஹாஸ்பிட்டல்ல வேலைக்கா அவரைப் பத்திக் கேட்கிறேன்…அலையன்ஸ்க்காக கேட்கிறேன் டா….அவர் ஜெனரலா எப்படி…சொல்லு…”

“நல்ல ப்ரண்ட்லி..ஹெல்பிங்..ஜோவியல்…” என்றதும்

“அப்போ…அவங்க கிட்ட நல்லவிதமா சொல்லவா..?” என்று கேட்க

“சொல்லிடு கா…” என்றதும் தான் ஆர்கலிக்கு நிம்மதியாக இருந்தது.

அடுத்த மூன்றே மாதங்களில் ஷாலினி மிஸஸ்.ஷாலினி ஷ்யாமாக மாறி இருந்தாள்.
 
Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
நான்கு வருடங்களுக்குப் பிறகு…………….

வெளியே நல்ல மழை..ஆர்கலி கிச்சனில் நின்று பஜ்ஜி செய்து,சட்னி வைத்தவள்,அங்கிருந்தே,

“மாமா…அவருக்குப் போன் பண்ணினீங்களா…?மழை எப்படி கொட்டுது பாருங்க…..அவனுக்குப் பரவாயில்ல….சகிக்கும் மைத்திக்கும் யாராவது ஒருத்திக்கு சளி பிடிச்சா இன்னொருத்திக்கும் வந்திடும்…அப்புறம் நம்மள படுத்தி எடுப்பாங்க…” என்றவளிடம்

“போன் பண்ணிட்டேன்மா..வந்துட்டேன் இருக்கேன்…சொன்னா…இதோ வந்துட்டாங்களே…” என்றபடி வாசலுக்குப் போனவர்

பேரக்குழந்தைகளைக் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தார்.

நெப்போலியனிடம் ஏதோ பேசியபடி அவனது ஒன்பது வயது மகன் நரசிம்மன் வர,வரதனின் இரண்டு கைகளையும் ஆளுக்கு ஒன்றாகப் பற்றியபடி,

ஒரு பக்கம் சாகரி..இன்னொரு பக்கம் மைத்ரி.அவரின் செல்ல தங்ககுட்டிகள்.

“பெரிய தங்கம்…சின்ன தங்கம்…வாங்க..முதல்ல..போய் டிரஸ் மாத்திடலாம்…கொஞ்சம் நனைஞ்சுட்டீங்க…” என்றவர் அப்பாவோடு வரும் பேரனைப் பார்த்து,

“சிங்கக்குட்டி….நீயும் வாடா…..உங்கப்பனுக்கு அறிவே இல்ல….பிள்ளைங்களை அழைச்சிட்டுப் போகும்போது பொறுப்பா வரனுமேன்னு..மழை வந்தா உடனே வர வேண்டியதுதானே..?” என்று பேரப்பிள்ளைகளை அறைக்குள் அவர் அழைத்து செல்ல

“அப்பா….வர வர..அதுங்களைப் பார்த்துட்டு நீ என்னைக் கண்டுக்க மாட்டேங்கிற…பார்த்துக்கிறேன்..உன்னை..” என்று அவன் கத்த

“நீ மட்டும்..என்னவாம்…?” என்று ஆர்கலி கிச்சனில் இருந்து குரல் கொடுக்க

“மார்கழி..!” என்று சத்தம் போட்டுக் கொண்டு அவளிடம் செல்ல

“தயவு செஞ்சு அப்படி கூப்பிடாத….உன் பசங்க அம்மா உனக்கு இரண்டு பெயரா..அப்படின்னு கேட்டு என்னை ஒருவழி பண்ணிட்டாங்க…”

“ஹாஹா…! சரி…என்ன நான் உன்னைக் கவனிக்கல…” என்று அவளைப் பார்த்துக் கேட்க

“எனக்காக வாங்கின ஜீப்ல..என்னை விட்டுட்டு உன் புள்ளைங்களை மட்டும் கூட்டிட்டு சுத்துற நீ..” என்று அவள் சொல்ல,

“உன்னை சுத்தனும்..அவ்வளவுதானே?” என்றவன் உடனே அவளைத் தூக்கி சுற்றி,

“அச்சோ..விடு…கீழ….எனக்குத் தலை சுத்துது…” என்று பதற,

“ஹாஹா..” என்றபடி மெல்லமாக அவளை இறக்கி விட்டவன்,

“நீதானடி எனக்கு வேலை இருக்கு..பசங்களை கூட்டிட்டுப் போன்னு சொன்ன..” என்றவன்

“என்ன….சட்னி வைச்சிருக்க…?” என்று பார்வையை ஓட்ட

“காரச் சட்னி…” என்றதும்

“உனக்குத் தேங்காய்ச் சட்னி தானே பிடிக்கும்…” என்றிட

“உனக்கு..மாமாவுக்கு பசங்களுக்கு எல்லாம் அதானே பிடிக்கும்..என் ஒருத்திக்காக தனியா செய்வேனா…” என்றவள்

“எனக்கு எண்ணெய்ல நின்னது கசகசன்னு இருக்கு…போய் குளிச்சிட்டு வரேன்…” என்று சொல்லி குளித்து விட்டு வர,அதற்குள் வள்ளியும் மாணிக்கமும் வந்திருக்க,

அனைவரும் முற்றத்தை சுற்றி,வானிலிருந்து விழும் மழைத்துளிகளைப் பார்த்தவாறே ஆளுக்கு ஒரு பேரக்குழந்தையை மடியில் வைத்திருந்தனர்.

வரதன் மேல் எப்பவும் போல் சிம்மா உட்கார்ந்திருக்க,வள்ளி மீது மைத்ரியும் மாணிக்கத்தின் மீது சாகரியும் உட்கார்ந்திருந்தனர்.எல்லாருக்கும் சிம்மா காகித கப்பல் செய்து கொடுக்க,

அதை தண்ணீரில் விட்டபடி விளையாடி,எங்கும் காகிதங்கள் சிதறிக்கிடந்தன.

குளித்து விட்டு ஆர்கலி வர,அவளுக்காக அறையில் காத்திருந்தவன் அவள் வந்ததும்,அவள் மீது பேப்பர் ராக்கெட்டைத் தூக்கிப் போட

தீடீரென தன் மேல் ஏதோ விழவும் பயந்தவள் ,

“ஏன்…இப்படி பண்ற….” என்றபடி அவனை நெருங்கி தோளில் அடிக்க

அவளை ஒரு கையால் வளைத்துக் கொண்டவன்,

“ஹாஹா…..சிம்பா செஞ்சுட்டு இருந்தான்….அதான்..எனக்கும் ஆசையா இருந்துச்சு…உன் மேல ராக்கெட் விடனும்னு…” என்று சொல்ல

“அவன்..இருக்கானே…பேப்பரா ஆக்கி வைச்சிருப்பான்…ஒழுங்கா க்ளீன் பண்ணலன்னா தான் இருக்கு அவனுக்கு…” என்று அவள் பேச,

அவள் முகத்தை மென்மையாக வருடியவன்,

“விடுடி….பசங்கன்னா அப்படி தான் இருப்பாங்க…” என்று சொல்ல

“நீ இப்படி இருந்தே ரொம்ப நாளாச்சு….” என்றாள் ஏக்கம் நிரம்பிய குரலில்

உண்மையும் அதுதான்.நெப்போலியன் தொழிலில் இறங்கிவிட,முன்பு போல் அவனிடம் விளையாட்டுத்தனமெல்லாம் இல்லை.அதுவும் மூன்று குழந்தைகள் இருக்க,மிகவும் பொறுப்பாக மாறி இருந்தான்.

ஆர்கலியோ வேலையை விட்டு இருந்தாள்.அப்போதும் அவளுக்கு வேலைகள் சரியாகவே இருந்தன.மூன்று குழந்தைகளை சமாளிக்க பெரும்பாடாக இருந்தது.ஆனால் அதை விரும்பியே செய்தாள்.

அதுவும் இரட்டையர்கள் வால்தனமெல்லாம் அவர்களை போலவே இரட்டிப்பு தான்.

“எப்படி…இப்படி கட்டிப்பிடிச்சா..?” என்று அவளை மொத்தமாக அணைத்தபடி கேட்க

“ப்ச்..அதில்ல….இப்படி வீட்ல இருந்து….அடிக்கடி இப்படி குழந்தைகளை வெளியே அழைச்சிட்டு போ…உன்னை ரொம்ப மிஸ் பண்றாங்க…” என்றாள்.

“அப்போ நீ ?” என்று அவன் கேள்வியாகப் பார்க்க

“எனக்கு வெளியே எல்லாம் சுத்த வேண்டாம்…இப்படி நீ சுத்திகிட்டாலே போதும்..” என்று சொல்ல

“சுத்தினா…மட்டும் எனக்குப் போதாது…” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட,அவளும் பதிலுக்கு இன்னொரு கன்னம் காட்ட,அவனும் சளைக்காது முத்தமிட

அதற்குள் ,

“ப்ப்பாஆஆஆ” என்ற அழுகையோடு அவர்கள் மகள் மைத்ரி வர

“என்ன டா….என் குட்டி தங்கம்…அழறாங்க…” என்றபடி மைத்ரியை நெப்போலியன் தூக்கிக் கொள்ள,

“என்னாச்சு குட்டிம்மா…ஏன் அழற..” என்று நான்கு வயது மைத்ரியிடம் ஆர்கலி கேட்க

“ம்மா…சாக்கி என்னோட போத்டை கவுத்துட்டா..” என்று அழ

“பட்டுமா…இங்க வா…” என்று ஆர்கலி சத்தம் கொடுக்க

“ம்மா…நான் எதுமே பண்ணல…அண்ணாவை கேளுங்க…” என்று சாகரி சிம்மாவைக் காட்ட

“ஆமாமா….! சகியோட போட் காத்துல மைத்தி போட்டை இடிச்சதுல..அது விழுந்துடுச்சு..அதுக்குப் போய் இவ அழற…” என்று சிம்மன் சாட்சி சொல்ல

“என் போத் பக்கம்..ஏன் அவ போத் வந்துது?” என்று மைத்ரி அழ

“அழாதடா…!” என்று நெப்போலியன் கண்களைத் துடைத்து மகளின் கன்னத்தில் முத்தம் வைக்க,

“ப்பா..நானு…” என்று சாகரி அப்பாவைப் பார்க்க,

“உனக்கும் தான் டா” என்று குனிந்து சாகரிக்கும் முத்தம் வைக்க,

“அப்பா….நான்…தான் ப்ர்ஸ்ட் பாய்” என்று சிம்மா கேட்க

“சிம்பா…அப்படி சொல்லாத…சொல்லியிருக்கேன்ல..” என்று ஆர்கலி அதட்டியவள்,

மகனைத் தன்னோடு அணைத்து,

“என் சிம்மாவுக்கு அம்மாவோட கிஸ்” என்று முத்தம் வைக்க,

இதையெல்லாம் பார்க்க அவ்வளவு லாளிதமாக இருக்க,

“தங்கங்களா….சிங்கக்குட்டி…..ஓடி வாங்க….” என்று வரதன் குரல் கொடுக்க,

“தாத்தா கூப்பிடுறாங்க இல்ல..போங்க….அம்மா உங்களுக்கு சாப்பிட எடுத்துட்டு வரேன்..” என்று அவள் கிச்சனுக்குள் போக,பின்னாலேயே நெப்போலியனும் வர,

பார்த்தால் அவளுக்குப் பிடித்த தேங்காய் சட்னியும் இருக்க,

“நீ செஞ்சியா…இல்ல..அம்மாவா..?” என்று ஆர்கலி கேட்க

“ நான் தான்….எல்லாருக்கும் நீ செய்ற…உனக்கு நான் செய்றேன்…” என்று காதலாக சொல்ல

அவனுடனான வாழ்வு கொடுத்த மகிழ்வில் முகம் பிரகாசிக்க,அவனுடன் இணைந்தபடி பிள்ளைகளுக்கு அருகே வந்து உட்கார,

“நான்…அப்பா கிட்ட..” என்று சாகரி சொல்லி விட்டு மாணிக்கத்திடம் இருந்து எழுந்து நெப்போலியனின் மடி மீது உட்கார,

“நானும் அப்பா மேல..” என்று மைத்ரியும் ஏறிக்கொள்ள

“நான்…தாத்தா கூட…” என்றபடி சிம்மா வரதன் மேல் உட்கார்ந்து கொண்டு,ஆர்கலி தந்த பஜ்ஜியை சாப்பிட

“ஆரும்மா…நீ வந்து அப்பா கிட்ட உட்கார்…” என்று சொல்ல,ஆர்கலி தாய்க்கும் தந்தைக்கும் நடுவில் உட்கார,அருகே கணவன், மாமனார், கண் நிறைந்த பிள்ளைகள் என அவளுக்கு நிறைந்த நிறைவு தான்.
அதே மன நிலையுடனும் மனம் கொண்ட காதலோடும் கணவனைக் காண,அவளைப் போலவே காதலினும் காதலாக கண் நோக்கினான் அவன்.

அங்கு ஆகாய மழை மட்டுமில்லை…அன்பின் மழையும் கூட..!!

காலம் போனாலும் அவர்கள் காதல் மீகியது.காதலினும் காதலாகியது


‘சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு:love: :love: :love: :love: :love: :love: :love:

* Thanksssssssssssssssssssssssssss soooooooooooooo muchhhhhhhh one and alll here.
நீங்க கூடவே வந்ததால் தான் என்னால இதை ஒழுங்கா எழுத முடிஞ்சது...நான் ரொம்ப நாள் கழிச்சு எழுதிய பெரிய நாவல் இது..சொல்லப்போனா நான் எழுதினதுல பெரிய நாவலே இதான். நான் நினைச்சது போலவே அதை விட நல்லாவே எழுதிட்டேன்..இடையில கொஞ்சம் gap விட்டாலும் முடிஞ்ச வரையில் correct அஹ் update போட்டேன். நிஜமா கடைசியில இதை முடிக்க மனசே இல்ல..ஐ மிஸ் தெம்..அண்ட் யூ டு....
எல்லாருக்குமே என் நன்றிகள்...Missssssssssss youuuuuuuuuuu all..கண்டிப்பா பாதியில விட்ட அலரை முடிச்சு தான் அடுத்த வேலை...ஆனா அது எப்போன்னு தெரில...நிஜமா..want some better circumstances to continue and comeback to writing..Have lots of personal commitments,exams and all.so ஒவ்வொன்னா முடிச்சிடுவேன்..முடிவுக்கெல்லாம் ஆரம்பம் வேணும்னு தான் முதல் அத்தியாயம் போட்டும் விட்டேன்.hope you all understand me atleast a few....Will continue after a few months friends.thanksssssssssss againn.

take care..Byeeeeeeeeeeeeee all...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
:love: :love: :love:

அழகான அருமையான கதை பவி
Superb writing...

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
 
Last edited:
Top