Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலினும் காதல் கேள் review

Advertisement

Kavyajaya

Well-known member
Member
காதலினும் காதல் கேள் பவிக்காகிட்ட அலர்... நக்கி... காளி... சக்தி 2nd பார்ட்ன்னு கேள் (சொல்ற எனக்கே மூச்சு வாங்குதே எப்ப இந்தக்கா வந்து எழுதி நாம படிச்சி ஹ்ம்ம்... கஷ்டந்தான்) எதை சொல்ல வந்து என்னத்தம்மா சொல்றன்னு பவிக்கா திட்டுறது எனக்கு கேட்ருச்சு உங்களுக்கும் கேக்குது தானே சோ நாம reviewக்கே போகலாம்.?‍♀️?

மாவீரன் நெப்போலியன்... அடேங்கப்பா! என்ன ஒரு பேருடா அப்படின்னு புருவத்தை தூக்கி முடிக்கலை அதுக்குள்ள அதோட பின்னணி பார்த்து வெடிச்சிரிப்பு. (மாவீரன் நெப்போலியன் நல்ல வேளை உசுரோட இந்த கொடுமைய பார்க்கலை)

அன்பானவன் பண்பானவன் தான் இந்த வாயை மற்றும் கோபத்தை குறைச்சா அது இல்லாததாலேயே செமத்தியா வாங்கி கட்டுவான் எல்லார் கிட்டயும் இன்க்லுடிங் ஹீரோயின் டூ...

இல்லாத சேட்டை பண்ணி ஆர்கலிய மார்கழி ஆக்கி அவ பெயரையே நம்மள மறக்கடிச்சி ஒரு வழியா மனசுல நுழைவான் ஹப்பாடின்னு ப்ரொபோஸ் சீன் எதிர்பார்த்தா இவன் வாயால பேச தெரியாம பேசி அடிவாங்கி நமக்கும் கோவம் வரவச்சிருவான். ஆனாலும் கடைசில பாசக்காரன்யா பாராட்ட அசால்ட்டா தட்டிக்கிட்டு போயிட்டான். realistic and natural character... :giggle::giggle::giggle:

மார்கழி... நெப்போ வச்ச பேரு தான் என்ன சொல்றது இவளை பத்தி... ஆரம்பத்துல கோவக்காரி அப்புறம் பார்த்தா பாசம் நேசம் காதல் வலி எல்லா பீலிங்ஸ் உள்ள பெண்ணா அசத்துவா... அவளோட உணர்வை அப்படியே நமக்கும் கடத்துன விதத்துல பவிக்கா எழுத்தில் மாயம் செஞ்சிருப்பாங்க. இவளை பற்றி சொல்ல இடம் பத்தாது..;););)

கூடவே வரதா இவரை பற்றி சொல்லணுமே நெப்போவும் இவரும் வந்தா சிரிப்புக்கும் நெகிழ்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது அப்பா மகன் இல்லை ஆனா அதுக்கும் மேல அபூர்வமான பந்தம்தான்.

மேலும் சில பல ஆனால் ஒவ்வொன்றா முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திங்கள் இருக்கு மாணிக், வள்ளி, ரஞ்சித், காயத்திரி, ஷாலினி, ஷ்யாம், ஆண்டாள், கற்பகம், மாஸ்கோ, ரவிவர்மன், ரத்னா கடைசியா வர குட்டீஸ் வரைக்கும். கதை முடிஞ்சாலும் ஐயோ முடிஞ்சிருச்சேன்னு பதைபதைக்க வைக்குற கதைல இதுவும் ஒன்னு இயல்பா நடக்குற கதைகளத்தோட போற போக்குல உவமை உவமேயம் தூவி கவிதை நடையில மனசை கொள்ளை கொள்ளுற அட்டகாசமான கதை. வாழ்த்துக்கள் பவிக்கா மேன்மேலும் சிறந்த கதைகள் நிறைய எழுதனும். (மேல சொன்ன நாலு கதைய தான் சொல்றேன் மறக்க கூடாதுல வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் வாங்கக்கா ஆல் த பெஸ்ட்.. :p:p:p)
 
Top