Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலெனும் பெருங்காடு - 1

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
223

காதலெனும் பெருங்காடு

காதலெனும் பெருங்காட்டில் தொலைந்திட்ட உனை
என் எதிர்பார்ப்புகள் மொத்தமுமாய் கொண்டு
தேடியலைந்ததில் கிடைத்தது என்னவோ
ஏமாற்றம் என்றாகிவிட்டது!

டெட்ராயிட் மாநகர விமான நிலையத்தில் Concourse Bயின் gate B10ல் அமர்ந்திருந்தேன். இன்னும் தோராயமாக இரண்டு மணி நேரம் இருந்தது, ஹூஸ்டன் நகர் நோக்கி நான் செல்லவிருக்கும் விமானம் புறப்படுவதற்கு. அங்குதான் அந்தப் பெண்ணை முதன்முதலில் பார்த்தேன். Walkatorல் எனது இடத்தை கடந்து சென்றார். ஏனோ, வைத்த கண் வாங்காமல் எனையே பார்த்துக் கொண்டு சென்றார். இருவருமே இந்தியர் என்பதால் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன். அவருக்கு என்னை விடவும் வயது அதிகம் இருக்கலாம் என்று தோன்றியது. அவரை நான் பார்த்த போது சட்டென்று பார்வையை இடம் மாற்றிக் கொண்டார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் எனைக் கடந்து மறுபுறம் சென்றார். இந்த முறையும் எனையே பார்த்துக் கொண்டு சென்றார், ஏனோ தெரியவில்லை!

மூன்றாவது முறை இதே போல் நடந்த பின்பு என்னைச் சங்கடம் தொற்றிக் கொண்டது.

எந்த நேரமும் பெண்களை ஆண்கள் ‘நோக்கி’க் கொண்டே இருப்போமே, உங்களுக்கும் இப்படித்தான் இருக்குமோ? என தோழியிடம் கேட்டிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.பத்து நிமிடங்கள் கழித்து என் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார். புருவத்தில் தெரிந்த ஈரம், முகம் கழுவிவிட்டு வந்தார் என்று உணர்த்தியது.

“Hi, if you don’t mind, நான் உங்க கிட்ட ரெண்டு நிமிசம் பேசலாமா?”

ஒரு இந்தியப் பெண்ணே வலிய வந்து என்னிடம் பேசுவது இதுவே முதல் முறை. அதுவும் நான் தமிழன் என்று கண்டுபிடித்துப் பேசியது சற்றே ஆச்சரியமாகத்தான் இருந்தது!

“சொல்லுங்க. என்ன விசயம்?” என்றேன்.

“உங்க சொந்தக்காரங்க யாரும் மதுரைல இருந்ததுண்டா?”

“இல்லியே, ஏன் கேக்குறீங்க?”

“ஓ! இல்லையா..” வார்த்தைகளில் மெல்லிய ஏமாற்றம் தட்டுப்பட்டது.

“என் சொந்தகாரங்கள உங்களுக்கு எப்படி தெரியும்?”

“…”

“அவங்கள பத்தி ஏன் விசாரிக்குறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

“இல்ல, எனக்கு பழக்கப் பட்ட ஒருத்தர் உங்க சாயல். அதான் ஒரு வேளை உங்களுக்கு சொந்தக்காரரோனு தெரிஞ்சுக்க கேட்டேன்.”

“ஓகோ! இல்லிங்க, அப்படி யாரும் எனக்கில்ல.”

சில நொடிகள் என்னையே குறுகுறு என்று பார்த்துக் கொண்டிருந்தார். சங்கடம் மிகுதியாக அவரிடம் கேட்டே விட்டேன், “என்னங்க இது? இப்படி சோகமா என்னையே உத்து பாத்துக்கிட்டு இருக்கீங்க? ஏதோ கேக்கணும்னு நினைக்குறீங்க. தயங்காம கேட்டுடுங்க. எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.”

சரி என்பது போல் மேலும் கீழுமாய் தலை அசைத்தார். மூன்றாவது முறை குனிந்த தலை நிமிர்த்தாமல் குனிந்த படியே இருந்தார். சில விநாடிகள் கழித்து சட்டென்று தன் கைபேசியில் விரல்கள் பதிக்க நான் செய்வதறியாது அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். பின் என்னிடம் தன் கைபேசியை காண்பித்தார். அதில் ஒரு புகைப்படம் இருந்தது. வெளிர் மஞ்சள் நிற சுடிதாரும் குட்டையாய் வெட்டப்பட்ட கூந்தலுமாய் நின்று கொண்டிருந்தார். சிலகாலம் முன்பு எடுத்தது போலும். அவர் அருகில் ஒரு ஆண்! பார்ப்பதற்கு என்னைப் போலவே இருந்தார். அவருக்கு படிய வாரிய முடி, எனக்கு சற்று சுருட்டை முடி. அவருக்கு கொஞ்சம் நீளமான மூக்கு. படத்தில் இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே அளவு உயரம். அதை வைத்துப் பாத்தால் அவர் என்னை விட உயரம் கொஞ்சம் குறைவாக இருக்கக் கூடும். மற்றபடி அவர் என்னுடைய carbon copy எனலாம். ஆச்சரியத்துடன் நானே பேச்சை ஆரம்பித்தேன், “இது எப்ப எடுத்த photo?”

“BE final yearல. ஏழு வருசம் முன்னாடி.”

“ஓ! நான் இப்பதான் 3rd year படிக்கிறேன். இவரு உங்க friendஆ? ஒரே batchஆ?”

“ம்ம். Boyfriend. ஒரே batch தான், ஆனா வேற department.”

Boyfriend என்று சொன்ன உடன் இவ்வளவு குறுகுறு என்று அவர் என்னைப் பார்த்ததன் அர்த்தம் புரிந்தது.

“அச்சு அசலா என்னைய மாதிரியே இருக்காரே!”

“ம்ம். முடி, மூக்கு, உயரம் தவிர இவரோட carbon copy தான் நீங்க.”

என் மனதில் தோன்றிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியது எனை வியப்பில் ஆழ்த்தியது.

“நான் நினைச்சத அப்படியே சொல்லிட்டீங்க. எத்தனை வருசம் பழக்கம் உங்க ரெண்டு பேருக்கும்?” என்றேன்.

“High schoolல இருந்து.”

“Wow! Super. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் எப்ப ஆச்சு?”

மௌனமாய் ஒரு கணம் இருந்து விட்டு இல்லை என்று தலையாட்டினார். பின் என் பார்வை தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

மனதிற்குள் திட்டிக்கொண்டேன், ‘மடையா. கல்யாணம் ஆயிருந்தா ஏன் பழைய photoவ காட்ட போறாங்க?’ கைபேசியை பார்ப்பதைப் போல தலை குனிந்து கொண்டு அவர் கால்களை பார்த்தேன். கால்களில் மெட்டியும் இல்லை.

“Break-up ஆயிடுச்சா?” என்றேன்.

அதற்கும் இல்லை என்று தலை அசைத்தார்.

“பின்ன?”

ஒரு இடைவேளைக்குப் பிறகு கூறினார், “He is no more!”

“அச்சச்சோ! எப்படி?” ஏதோ நெருங்கிய உறவினர் மறைந்த செய்தி கேட்டது போல் இருந்தது எனக்கு.

“Bike accident.”

“Oh no! I’m very sorry.”

“Thanks..”

சிறிது நேரம் அசௌகரியமான மௌனம் நிலவியது. அவரே மீண்டும் தொடர்ந்தார். “ரவி ரொம்ப safe driver. கவனமா ஓட்டுவான், signalல சரியா நிப்பான். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும்தான் பைக்ல இருந்தோம். Signalல இருந்து கிளம்பும் போது பின்னாடி இருந்த car வேகமா எடுத்துட்டான். Sideல தண்ணி lorry. இடிச்ச வேகத்துல நான் median பக்கமா விழுந்துட்டேன். அவன் lorry…” என்று தொடர்கையில் அவர் குரல் சற்று கம்மியது. “Helmet போட்டிருந்தான். ஆனா, lorry wheel ஏறி…load…helmet உடைஞ்சு…spotலயே…”

சற்றே கனத்த குரலில் உடைத்து உடைத்தும் வராத வார்த்தைகளுக்கு கைகளை அசைத்தும் அவர் பேசிய வரிகள் ஒரு கோர சம்பவத்தை மறு ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தன.

“…என் கண்ணு முன்னாடியே…” என்று அவர் தொடர முற்பட, நான் குறுக்கிட்டேன்.

“போதும். இதுக்கு மேல சொல்லாதீங்க.”

அழுகையையும் கண்ணீரையும் அடக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு சரியென தலை அசைத்து கூறினார், “I’m sorry.”

“பரவாயில்லைங்க.”

மீண்டும் அசௌகரியமான மௌனம். மௌனத்தை கலைக்க வேண்டி இந்த முறை நானே பேச்சைத் தொடங்கினேன், “அவர் பேர் என்ன?”

“ரவி.. ரவீந்திரன்.”

“ஓ! என் பேர் விஜய் ஆனந்த்.”

“நான் ராஜஸ்ரீ.”

“நீங்க என்ன விஜய்னே கூப்பிடுங்க.”

“ம்ம், சரி.”

“இப்ப எங்க போறீங்க ஸ்ரீ?”

“சென்னைக்கு. அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்.” என்றாள் புரியாத பார்வையோடு,

“ஏன்.. ஏன் அப்படி பார்க்குறீங்க.” என்றேன், ஏதோ இருக்கிறது என்ற படபடப்புடன்.

“நத்திங்.. எல்லாரும் ராஜின்னு கூப்பிடுவாங்க, ரவி மட்டும் ஸ்ரீன்னு தான் கூப்பிடுவான். நீ எனக்கு ஸ்பெஷல், சோ ஸ்பெஷல் நேம்ன்னு சொல்வான். நீங்களும் அப்படியேக் கூப்பிடவும், சாரி..”

இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் திருதிருவென என்னால் முழிக்க மட்டுமே முடிந்தது.

அவரே தொடர்ந்தார், “ஆனா இந்த கல்யாணம் நடக்காது. நான் போய் வேண்டாம்னு சொல்லி நிறுத்தப் போறேன்.”

“அச்சச்சோ, ஏங்க? உங்கள கேட்காம ஏற்பாடு பண்ணிட்டாங்களா?”

“இல்ல, கேட்டாங்க. நான் ok சொன்னதுக்கு அப்புறமாத்தான் ஏற்பாடே நடந்தது.”

“பின்ன ஏன் நடக்காதுனு சொன்னீங்க?”

“நீங்க தான் காரணம்.”

சட்டென்று என் மீது பழி சுமத்துகிறாரோ எனத் தோன்றியது.

“நானா?” சற்று கடினமாகவே எனது குரல் ஒலிக்க,

“இல்ல, இல்ல சாரி ஒரு குழப்பம், நீங்கன்னு உங்களை சொல்லல. உங்களுக்கும் ரவிக்கும் உள்ள உருவ ஒற்றுமை, இந்த சிச்சுவேசன், இத்தனை நாள் விட்டு இன்னிக்கு நான் உங்களை சந்திச்சது…”

“அதுக்காக…?”

“விஜய். உங்களை பழி சொல்லல.” என் பெயரை அழுத்தமாக உச்சரித்து அவர் கூறிய வார்த்தைகளில் எனது கோபம் சற்று குறைவது எனக்கே வியப்பாக இருந்தது.

“பிரச்சனை எங்கிட்ட தான் விஜய். இந்த ஏழு வருசத்துல நான் ரவியோட நினைப்ப விட்டு வெளிய வந்துட்டேன்னு நினைச்சேன். I thought I’d moved on. பட் உங்கள பாத்த உடனேயே அப்படி இல்லனு புரிஞ்சுக்கிட்டேன். ரவி உருவத்துல உங்கள பாத்ததுமே என் மனசு இப்படி குழம்புதே, நாளைக்கு என்னை கட்டிக்கப் போறவர் ஆசையா எங்கிட்ட பேசும் போதோ, இல்ல என்னை தொடும்போதோ இதே மாதிரி ரவி நினைவு வருமே, அப்ப நான் என்ன பண்ணுவேன்? அவன் நினைப்ப மனசுல வச்சுக்கிட்டு என்னால இன்னொருத்தருக்கு நல்ல மனைவியா எப்படி வாழ முடியும்? ரவியை காதலிச்சதுக்காகவோ, அவன் இறந்ததுக்காகவோ நான் வேணா கஷ்டப்படலாம், சம்பந்தமே இல்லாம இன்னொருத்தர் ஏன் கஷ்டப்படணும்? அதனால தான் ஊருக்கு போனதும் முதல் வேலையா கல்யாணத்தை நிறுத்தப் போறேன்.” படபடவென்று மூச்சு விடாமல் பேசி முடித்தார்.

தவறான முடிவு என்றே எனக்குப் பட்டது. இருந்தாலும் அவருக்கு எடுத்துரைக்க நான் யார்? இது அவர் வாழ்க்கை, அவர் முடிவு. எனவே மேலும் இதைப்பற்றி தர்க்கம் செய்ய விரும்பவில்லை.

ரவியைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தது. “ரவிய பத்தி, உங்க ரெண்டு பேருக்கும் உண்டான காதல் பத்தி எனக்கு சொல்வீங்களா?”

“முடிஞ்சு போன விசயம், அது எதுக்கு? வேண்டாமே please.”

இந்த நிராகரிப்பை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியாவது இவரைப் பேச வைக்க வேண்டுமே என யோசித்த படி, “தெரிஞ்சோ தெரியாமலோ உங்களோட இந்த முடிவுக்கு நானும் ஒரு வகையில காரணமாயிட்டேன். நீங்களும் அதை சுட்டிக் காட்டிட்டீங்க. I’m sorry for everything ஸ்ரீ.” என்றேன்.

“இல்ல விஜய், I am sorry. மறுபடியும் சொல்றேன், உங்கள பழி சொல்லணும்ன்னு என்னோட எண்ணமில்ல. Please don’t mistake me.”

“ம்ம், சரி. இருந்தாலும் உங்க சாரியை என்னால ஏத்துக்க முடியல”

“அதுக்கு என்ன பண்ணனும்?”

“பேசணும்.”

“என்ன பேசணும்?”

“ரவிய பத்தி – அவரை பாத்த முதல் நிமிசத்துல இருந்து அவரை நீங்க இழந்த விபத்துக்கு முந்தின நிமிசம் வரைக்கும் உங்க இருவரோட வாழ்க்கை பத்தி!”

மீண்டும் கேட்டதால் அவர் கோபமுற்றார். “முடியாது. நான் ஏன் உங்ககிட்ட இதெல்லாம் சொல்லணும்? அது என்னோட பர்சனல், அதை தெரிஞ்சுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” – என் மீதான இந்த சீற்றம் என்னை மிகவும் பாதித்தது. இது அர்த்தமற்றது, அநியாயமானது எனத் தோன்றியது.

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும். ஆதலால் நானும் கோபத்துடன் பதில் அளிக்கத் தொடங்கினேன், “உரிமையா? உங்களுக்கு மட்டும் என்ன உரிமை இருந்துச்சு, எங்கிட்ட வந்து பேசுறதுக்கு? ரவியோட போட்டோ காமிச்சதும் அப்படியே பேச்சை கட் பண்ணிட்டு போயிருக்க வேண்டியதுதான? எதுக்கு அந்த ஆக்ஸிடென்ட் பத்தி சொன்னீங்க? எதுக்கு கல்யாணத்தை நிறுத்த போறேன்னு சொன்னீங்க? அதுக்கு நான்தான் காரணம்னு வேற..இதெல்லாம் நான் கேட்டனா?”

“அதுக்காக உங்ககிட்ட என் கதையை சொல்லணும்னு அவசியம் இல்ல விஜய். இத்தனை நாள் நான் படுற கஷ்டம் போதாதா? உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லி do you want me to re-live the sad story again?”

“Come on ஸ்ரீ, ஏழு வருசம் முன்னாடி உங்க வாழ்க்கைல பெரிய இடி விழுந்திருக்கலாம். அதுக்காக you don’t get to play the victim today, even in front of a stranger. அன்ட் உங்களோட இந்த கோவம், I certainly don’t deserve” என்று கூறிவிட்டு விலகிச் செல்ல எழுந்தேன். இரண்டு எட்டு நடந்து பின் மீண்டும் திரும்பி, “You know what, உங்க வாழ்க்கை உங்க இஷ்டம். Do whatever you want, I don’t care. Who am I to you anyway?” என்று கூறிவிட்டு வேகமாக அவரின் பின்புறம் இரண்டு வரிசைகள் தாண்டிச் சென்று அமர்ந்து கொண்டேன்.

எப்படியாவது அவரை என்னிடம் வந்து பேச வைத்துவிடு ஆண்டவா என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டும் இருந்தேன்.


 
Banumathi jayaraman

Well-known member
Member
உங்களுடைய "காதலெனும்
பெருங்காடு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
சிறுகதைக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
வதனி டியர்
 
Last edited:
Advertisement

Advertisement

Top