Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் அழகானது 39

varsha

Tamil Novel Writer
The Writers Crew
இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது 'பாஸ்' என்ற கதறலோடு மகவைப் பெற்ற ராதிகா ஆழ் மயக்கத்திற்கு சென்று , அன்று தாயிடம் சொன்னது போலவே கொச்சின் விமான நிலையம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மதுரைக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தவனை, ஜானகி தன் பேரனைக் கையில் வைத்துக் கொண்டு கட்டிக் கொண்டு அழுகவும் , மகனைக் கையில் வாங்கிக் கொண்டு ,

"ம்மா… ர.. ர .... ரதி " என வார்த்தைகள் தந்தியெடுக்க கேட்டவனைப் பார்த்த ரமேஷ் ,

"மச்சான் ..... தங்கச்சிக்கு ஒன்னுமில்லடா …. ஆனா .. ஆனா ரொம்ப நேரமா கண்ணு முழிக்கல ….. மயக்கத்தில இருக்கா" எனத் தடுமாற , மனைவியைச் சென்றுப் பார்த்தவனுக்கு பேச்சே வரவில்லை , பல இயந்திரங்களுக்கு நடுவில் கையிலும் முகத்திலும் பல்வேறு கருவிகள் மாட்டப்பட்டிருக்க கண்களை மூடி உறங்குவது போல் இருந்தவள் அருகில் சென்றவன் , தொண்டை கரகரக்க….

"ஹேய் கேகே … என்ன ரொம்ப நேரமா தூங்குறியாம் … எழுந்திரி… நான் வந்து எவ்வளவு நேரமாகுது , வெளியூர் போய்ட்டு வந்தா வழக்கமா தர்ற ஸ்வீட் கூட தராம..… " என்றுப் பேசியவனால் அதற்கு மேல் அழுகையை அடக்கமுடியவில்லை. ஒரு நர்ஸ் மட்டுமே அந்த வார்டில் இருக்க … அவர் என்ன செய்வது என்றுத் தெரியாமல் விழிக்க , வெளியே வந்து மருத்துவரிடம் தகவல் அளித்தார்.

அந்த மருத்துவமனைக்கு அவர்கள் குடும்பத்தாரால் வழி வழியாக நிறைய உதவிகள் செய்யப்ட்டிருப்பதோடு அவர்களது நிறுவன பங்குகளும் பெற்றிருந்ததால், தான் சொன்னதும் அவன் வரும் வரை அவளுக்கு மருத்துவம் செய்துக் கொண்டிருந்த அத்தனை மருத்துவர்களும் அங்கு வந்து விட்டனர்.

அவனை அவர்கள் தனியாக அழைத்துச் சென்று , இரத்த அழுத்தம் அதிகமானதால் …. உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தால் … அளவுக்கதிகமான இரத்தப் போக்கால் …. PPH அது இது என ஆங்கிலத்திலும் புரியாத என்ன என்னவோ மருத்துவ வார்த்தைகளைக் கூறி இதனால் தான் என்றாலும் …. கடுமையான மன அழுத்தமே முக்கியக் காரணம் ….அதிலும் அவனது கார் ஆக்ஸிடென்ட் என்ற வார்த்தையைக் கேட்டுத்தான் அவள் இப்படி ஒரு நிலைக்கு ஆளானது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள். சிலருக்கு மனச்சிதைவு நோயில் கொண்டு விடும் … சிலர் இப்படி நிலைக்குச் செல்வார்கள் என்று விட்டார்கள்.

அதிலும் அவள் கடைசியாக அரவிந்தின் கார் விபத்துக்குள்ளானதைக் கேட்டதும் அவள் கூறிய வார்த்தைகளை அரவிந்திடம் சொன்னவர்கள் .. ராதிகா அரவிந்திற்கு என்னவோ ஆகி விட்டது என்றக் காரணத்தினால் மன அதிர்ச்சிக்கு ஆளாகி அவள் தன் உணர்வுகளை இழந்து விட்டாள் என்றனர்.

அரவிந்த் அப்படியே உறைந்து விட்டான் … அவன் அம்மா … மாமன் மனைவி அதாவது ராதிகாவின் தாய் இருவருமே இப்படிப்பட்ட ஒரு சூழலில் தானே தன் நினைவை இழந்தார்கள்….. அது ராதிகாவையும் விட்டு வைக்கவில்லயா….

இந்த நிலை ஆறு மணி நேரமாகவோ , ஆறு நாட்களாகவோ அல்லது ஆறு மாதங்களோ சொல்ல இயலாது என்று விட்டனர். தங்களால் ஆன முயற்சிகளை செய்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்தனர். அரவிந்தை யாராலுமே சமாளிக்க முடியவில்லை … அந்த அளவிற்கு மனம் உடைந்துப் போனான்.

மருத்துவர்கள் அவன் நன்றாக இருப்பதையும் உயிருடன் அவளருகில் இருப்பதையும் அவளருகில் அமர்ந்து அவள் உணரும்படிச் செய்யுங்கள் என்றார். குடும்பமே ஓய்ந்து போய் இருந்து விட்டார்கள். குழந்தைக்கு நர்ஸ்களின் உதவியோடு தாய்ப்பால் புகட்டப்பட்டது. மகனின் ஸ்பரிசம் அவளை மீட்டுக் கொண்டு வராதா என்று ஏங்கினார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த ஒரு வாரமும் அரவிந்த் ராதிகாவை விட்டு நகரவில்லை .அன்று அவளை பரிசோதித்த மருத்துவக் குழு … எப்போது விழிப்பாள் என்றுச் சொல்ல முடியாது என்று விட்டனர்.

" கே கே எந்திரிச்சு வா…. இங்க பார் உன் பாஸ் சின்ன கீறல்க் கூட இல்லாம முழுசா உன் முன்னால நிக்கிறேன் ..... ஸ்ரீயை பார்த்தியா , பசியமர்த்தினா போதுமா … எந்திரிச்சு வாடா ….இந்த ஏசி ரூம் உனக்கு குளிரல ..... வா....போ.… போர்வை போர்த்தி விடுறேன்." என்று அவள் ஊசிகளில்லாத இடக்கையை பிடித்துக் கொண்டு விழிகளில் நீர் திரள அமர்ந்திருந்தான்.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் இதற்கு பெயர் போன மருத்துவர்களை எல்லாம் அழைத்து வந்து மருத்துவம் பார்த்தும் ராதிகா எழவே இல்லை .அவளது நீண்ட கூந்தல் பராமரிக்க செவிலியர்கள் சிரமப்பட அதனை சிறியதாக வெட்டி விட அனுமதித்த அரவிந்துக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. தினமும் அவளைப் படுக்கைப் புண் வராது பராமரிக்கும் செவிலியர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காது தானே ராதிகாவை குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டான்.

மூன்று மாதம் இருக்கும் தந்தையின் முகமும் தாயின் முகமும் அறிந்துக் கொண்ட குழந்தை தந்தையிடமே இருந்தது. அவனை வைத்துக் கொண்டு உள்ளேயே இருப்பது கூடாது என்பதால் வெளியே குழந்தையை அழைத்துக் கொண்டு வரும் போது தான் , ரமேஷ் அனைத்துப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு செய்வது மனதை
 
varsha

Tamil Novel Writer
The Writers Crew
உறுத்த , பகலில் சிறிது நேரம் அலுவலகம் செல்ல ஆரம்பித்தான் .

ஜானகி தான் மகனையும் தேற்றி பேரப்பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டார். ஒரு நாள் எழுந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் அவளருகில் அமர்ந்து தினமும் பேசிக் கொண்டு இருந்தான் அரவிந்த்.

"உங்கம்மாவ சொன்ன ….இப்ப நீ என்ன பண்ணிட்டு இருக்க... ம்.... ஸ்ரீயை தவிக்க விட்டு நான் தான் பெரிசுனு தானஇப்படி இருக்க ….இனி உங்கம்மாவ திட்டு அப்புறம் பாரு.... காதல் பிடிக்காதாம்.... காதல்னா என்னனு தெரியாதாம்.... போடா ….இதுக்குப் பேர் காதல் இல்லாம என்னது ….. நானெல்லாம் என்ன லவ் பண்ணேன். இப்படி தான் உன் காதல நிரூபிக்கணுமா …. தூங்குறத பாரு..... எந்திரிச்சு வா … வந்து எனக்கு தூங்கணும் பாட்டுப் பாடுங்கனு சொல்லிப் பாரு உனக்கு இருக்கு ….இனி உனக்கு பாட்டு பாட மாட்டேன் …."

இப்படி எதற்குமே எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் உறங்கியவளை எந்த வகையில் எழுப்ப என்று உலகம் முழுவதும் சல்லடைப் போட்டுத் தேடி மருத்துவக்குழுவை இந்தியா அழைத்து வந்தவன். அவளைக் கேட்பவர்களிடம் படிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறாள் என்பதாக அறிவித்துவிட்டான். மீடியாக்காரர்கள் காதுகளுக்கு செல்லாமல் எப்படி செய்ய முடியுமோ எல்லாவற்றையும் ரமேஷ் பார்த்துக் கொண்டான்.

அங்கு பணிபுரியும் ஒரு கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் அரவிந்தின் நிலையைக் கண்டு அவனிடம் ,

"சார் நான் இங்க வேலை செய்றேன் தான். இந்த மாதிரி உங்க கிட்ட சொல்றதும் தப்புதான். ஆனா உங்களப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு … மனைவி மேல இவ்வளவு அன்பையும் காதலையும் வச்சுருக்கிற ஒருத்தர நேர்ல பார்க்கிறேன்னுக் கூட சொல்லலாம். அதுதான் நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே … இதனால என் வேலைப் போனால் கூட பரவாயில்லைனு சொல்றேன் சார்...." என நிறுத்த ,

"சிஸ்டர் … நீங்க சொல்லப் போற விஷயத்துனால என் ரதி திரும்ப எழுந்து வருவான்னா … என் உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கேன்.... சொல்லுங்க சிஸ்டர்."

அவனது பதிலில் நெகிழ்ந்த அவர் , "சார் நான் கேரளாங்கிறதுக்காக அப்படிச் சொல்லல ….. ஆனா இது சாத்தியம்ங்கிறதுக்காக சொல்றேன் … அது... அது கேரள ஆயுர்வேத மருத்துவத்துல நிறைய வியாதிகளை குணமாக்ககூடிய சக்தி இருக்கு .அதுவும் இப்படி அதிர்ச்சியில ஆழ்நிலை மயக்கத்துக்கு போனவங்கள தொன்னுத்தொன்பது சதவீதம் மீட்கலாம்ங்கிற நம்பிக்கை இருக்கு.... நீங்க முடிஞ்சா ட்ரை பண்ணுங்க என்றவர் அவருக்குத் தெரிந்த ஓர் இடத்தையும் சொல்லிவிட்டு சென்றார்.

ராதிகாவிற்காக எதையும் செய்ய தயாராக இருந்ததால் இவனிடம் பேசிய செவிலியரை எந்த விதத்திலும் சேர்க்காது மருத்துவர்களிடம் பேசி , ஆயுர்வேத மருத்துவத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தெளிவுப்படுத்தி அவனுக்கு திருப்த்தியான பிறகே திருவனந்தபுரத்திலிருந்து சிறிது தள்ளி இருந்த தீவு போன்ற ஒரு அழகிய கிராமத்தில் இயங்கும் மிகப் பிரபலமான ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்று விட்டான்.


அது கடலை ஒட்டிய , தென்னை மரங்களும் , பசுமையும் சூழ்ந்த ஒரு பகுதி ,அங்கு சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. குடும்பத்தினர் எல்லோரும் தங்க அனுமதி இல்லாததால் அரவிந்த் அந்தப் பகுதியிலயே ஒரு வீட்டை உடனடியாக வாங்க ஏற்பாடு செய்து , அங்கு ஜானகியையும் மகனையும் மட்டும் அழைத்துச் சென்றான். குழந்தையையும் அதிகமாகக் கூட்டிக் கொண்டு வர இயலாது என்பதால் சிறிது சிறிதாக ராதிகாவிடமிருந்து பாலைச் சேகரித்து புட்டியில் தர, முதலில் தாயின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்த குழந்தை பின் சிப்பருக்கு பழகி விட்டது.

அன்றோடு அங்கு வந்து இரண்டு மாதங்கள் ஆனது .ஆம் நான்கு மாதங்களாக ஆங்கில மருத்துவ சிகிச்சைப் பெற்றவளை இங்கு அழைத்து வந்து இரு மாதங்களானது . சிறிது சிறிதாக அவளது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் அவன் அங்கேயே இருந்தான்.

அவளது சிகிச்சை நேரம் போக மனைவியின் அருகிலேயே தான் இருந்தான் அரவிந்த்.ரமேஷ் சிவா போன்றவர்கள் அவனின் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு அவனை இயன்ற அளவு அதிக தொந்திரவுக்கு ஆளாக்கவில்லை.

ஆறு மாத மகனை சிறிது நேரம் அவளருகில் விட்டு விளையாட , குழந்தையின் ஸ்பரிசம் உணர்ந்தாளோ என்னவோ கை விரல்களை அசைக்க ஆரம்பித்தாள். இதைக் கண்டு மகிழ்ந்தவன் , தினமும் குழந்தையை அருகில் விட , அது ஒரு குளிர் காலம் என்பதாலும் மழையும் பெய்யவும் , குழந்தைக்கு உடல் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. ஜானகியை அழைத்து வராததாலும் மழையில் குடிலில் இருந்து அழும் குழந்தையை வெளியேக் கொண்டு வர இயலாமல் , மழைவிடுவதற்காக காத்திருந்தவன் , குழந்தையை தோளில் போட்டு 'பூவிலே மேடை 'எனப் பாட ஆரம்பித்தான்.

இருள் பரவிக் கொண்டிருந்த நேரம் , மழையும் பெய்ததால் மகனை எப்படி வெளியே அழைத்துச் செல்வது என்று யோசித்தவன் மனைவியை , அவளது கண்களை
 
varsha

Tamil Novel Writer
The Writers Crew
கவனிக்காது விட்டு விட்டான். குழந்தையின் அழுகுரலோ , கணவனின் குரலோ .. அல்லது அந்தப் பாடலோ ஏதோ ஒன்று அவளது காதுகள் வழியாக மூளையைச் சென்றடைய கண்களின் ஓரம் கண்ணீர் வழிய ஆரம்பித்தது , கைகளும் கால்களும் சென்று குழந்தையைத் தூக்கச் சொல்கிறது. ஆனால் முடியவில்லை.

மழை சிறிது விடவும் ராதிகாவைப் பார்த்துக் கொள்ளும் பெண்ணிடம் சொல்லிவிட்டு அவன் குழந்தையை அழைத்துச் சென்று விட்டான். ஒரு வழியாக மழையில் வீடு வந்து சேர , அங்கு ஜானகியும் குளிரில் நடுங்கிக் கொண்டு இருக்கவும் ,அரவிந்துக்கு மனம் மிகவும் நொந்துவிட்டது.

அவரையும் அழைத்துக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைச் செல்ல , குழந்தைக்கும் ஜானகிக்கும் காய்ச்சல் அதிகமாகி அங்கேயே அட்மிட் செய்யச் சொல்லிவிட்டார்கள்.

அரவிந்திற்கே தன் நிலை மிகக் கொடூரமாகத் தெரிய தலையலடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். மனைவி… தாய் …மகன்… அவன் நிலை மிகப் பரிதாபகரமாகியது … கண் விழித்த ஜானகியிடம் ,

"ம்மா சாரிம்மா….. எனக்காக உங்களயும் இங்க அழைச்சிட்டு வந்து கஷ்டப்படுத்துறேன்னு புரியுதுமா ... நீங்க பேரனை அழைச்சிட்டு நாளைக்கு ஊருக்குப் போயிருங்க , ரமேஷும் அனுமாவும் வந்துட்டு இருக்காங்க...."

அவன் கைப்பிடித்தவர் , "நீ எப்படி இப்படி பேசலாம் … எனக்கு அனுவும்… ராதாவும் வேற வேறயா… என் மருமக குணமாகாம நான் இங்கயிருந்து எங்கயும் போகமாட்டேன். நீ பேரன கவனி... எனக்குப் பரவாயில்ல."

அன்று இரவு முழுவதும் அரவிந்தால் அவர்களை விட்டு நகர முடியவில்லை …. ரமேஷ் விமானத்தில் ஏறி விட்டோம் என்ற தகவல் தந்தவன் , இந்நேரம் வந்து இறங்கிவிட்டானா எனக் கேட்க ஃபோனை எடுக்க அது எப்போதோ ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. ஒரு வழியாக ரமேஷ் அனன்யாவையும் தாயம்மாவையும் அங்கு அழைத்துக் கொண்டு வந்து சேர அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டது.

ரமேஷ் வந்தவன் அரவிந்தை அழைத்துக் கொண்டு வெளியில் வந்து , "அரவிந்த் உன் ஃபோன் ஸ்விட்ச் ஆப் … ஆகி ரொம்ப நேரம் ஆகிருச்சுப் போல … " என்றவன் தனக்கு வந்த தகவலை அவனிடம் பகிர்ந்து ஆயுர்வேத மையத்துக்கு அழைத்துச் சென்றான்.

ராதிகாவைக் காணவில்லை என்றத் தகவல் தான் அது. அதிலும் அவர்கள் அளித்த விவரமோ…. அரவிந்திற்கு மகிழ்ச்சி துக்கம் இரண்டையும் ஒரு சேர அளித்தது. அங்கிருந்த சிசிடிவி பதிவுகளைப் பார்க்க , மழையில் , மெல்லிய வெளிச்சத்தில் , அந்தக் குடிலை விட்டு மெல்ல சோர்வுடன் வெளியேறும் ராதிகா …. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நடக்கிறாள். பின் வெளிவாசலில் அவள் சாலையைக் கடந்து இருளில் போவது மட்டுமே தெரிகிறது. அதன் பின் அவள் எங்கு சென்றாள் என்ன ஆனாள் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அவள் எழுந்து நடமாடியதால் அவளுக்கு காவல் வைத்த பெண்ணை ஒன்றும் சொல்லாது விட்டு விட்டான். பத்து நிமிடம் மெழுகுவர்த்தி எடுக்கச் சென்ற நேரத்தில் ராதிகா எழுந்து செல்வாள் என்று அந்தப் பெண்ணுமே நினைக்கவில்லை … அங்கு மழையில் ஒதுங்கி அமர்ந்திருந்த காவலாளியும் நினைத்திருக்கவில்லயே ….

அது ஒரு சிறிய மீன்பிடி கிராமம்தான் … வீடுகளும் அவ்வளவாக கிடையாது , தென்னை மரங்களும் , சிறு சிறு ஓடைகளுமே சாலையின் இரு மருங்கிலும் , அங்கு முழுவதும் தேடிப் பார்க்க ராதிகா கண்ணிலேயேப் படவில்லை. தண்ணீரில் விழுந்து விட்டாளோ… இல்லை இருக்காது …ஒரு வேளை வீட்டிற்கு சென்று விட்டாளோ எனப் பேருந்து வழியாக ரயில் வழியாக என ஆட்களை அனுப்பி விட்டு , அவர்கள் அனைவரும் விமானம் மூலம் கோவை வந்தடைய … ராதிகா தான் வருவதாக இல்லை. அவர்களது நிறுவன நம்பிக்கைக்கு பாத்திரமான டிடெக்டிவ் மூலமாகவும் தேடிக் கொண்டு தான் இருந்தார்கள். அப்பொழுதுதான் அரவிந்த் தான் செல்வந்தனாக பிறந்ததை நினைத்து மனம் வெறுத்துப் போனான்.

அவன் மனைவியை வெளிப்படையாக காணவில்லை என்று சொல்லி தேடுவது அவர்களுக்கும் , அவளுக்கும் மிகப் பெரியச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதே நடைமுறை உண்மை. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் குழந்தையின் ஒரு வயதுவரை அவனின் முகத்திற்காகவே, அவன் உயிருடன் இருந்தாலே போதும் எனத் தன்னைத் தேற்றிக் கொண்ட அரவிந்த் அவளைக் கொச்சினில் காணும் வரை நரக வேதனை அனுபவித்தான் என்பதே உண்மை.

கண்ட பின்னும் உயிரும் உடலுமாக இருந்தவனையே யார் என்று அவள் கேட்ட போதோ .....

உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி'

அப்படித்தான் இருந்தது அரவிந்துக்கு …..தன் நிலை யாருக்குமே வரக்கூடாது என்றுதான் நினைத்தான் அந்த காதல் கணவன்.

இப்படி ஒரு பிரளயத்தையே வாழ்க்கையில் உருவாக்கி அவள் மீது அன்பு வைத்திருந்த அத்தனைப் பேரையும் நிலை குலையச் செய்து விட்டு ….இன்று தூங்கி எழுந்தவள் போல் பேசிக் கொண்டிருப்பதைப் பார் என்று தான் நினைத்தான். அதுவும் அவனை இழுத்து முத்தம் தந்து 'ஐ லவ் யூ' என்ற போது கண்கள் கலங்கியவன் , மகளோடு
 
varsha

Tamil Novel Writer
The Writers Crew
சேர்த்து மனைவியையும் அணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்து விடுவித்தவன் , ஒரு நிமிஷம் என அறையை விட்டு வெளியேறி அந்த அமைதியான இரவு நேரத்தில் கட கடவென்று படியேறி எட்டாவது தளத்தில் இருந்த மொட்டை மாடிக்குச் சென்று …. வந்த வேகத்தில் அப்படியே முழங்கால் மடித்து கீழே அமர்ந்து …..

"டேய் அழுகை வருதுடா ….. இங்க வந்து பார் என்ஹார்ட் எப்படித் துடிக்குதுனு….. நீ சொன்னது போல தொலைஞ்சுப் போன நினைவுகளை தொலைச்ச இடத்துலயே மீட்டுட்ட ….. ஐ லவ் யூ டியர்.... ஐ லவ் ... ..யூ... இப்படி என்னை செத்து பிழைக்க வைக்கிறேியேடா .… "


என்று மகிழ்ச்சியில் கண்களில் நிரம்பியக் கண்ணீரை இரு கரம் கொண்டு அழுந்தத் துடைத்தவன் ஃபோனை எடுத்து அனைவருக்கும் சொல்லலாம் என நினைக்க , காலையில் சொல்லலாம் என்று வைத்து விட்டு , எழுந்து லிப்டில் தரை தளம் சென்றவன் , இரவு பணியில் இருந்த மருத்துவரைச் சந்தித்து விவரம் கூற … அவர் இப்பொழுது அவளிடம் எதுவும் கூறாமல் இயல்பாக இருங்கள் , மறுநாள் அதற்கான நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் வந்தப் பிறகு அவளிடம் என்னப் பேசலாம் என முடிவெடுப்போம்… என்று விட்டார்.

எனவே அமைதியாகவே கீழே வந்தவன் , அவளருகில் சென்று அமர்ந்து தோளோடு சாய்த்துக் கொண்டான்.

"பாஸ் …. இந்த நேரம் எங்க போய்ட்டு வாறீங்க..... "

"அது .....உனக்கு சாப்பிட கேன்டின் ல எதாவது வாங்கலாம்னு போனேன் டா"

"எனக்கு பசிக்கல… காலையில சாப்பிட்டுக்கலாம்… பாஸ்"
"சொல்லுடா"

".இனி நான் எங்கம்மாவ திட்ட மாட்டேன் பாஸ்.. இவ்வளவு நாள் சொல்லத் தோணாத காதல இப்ப சொல்லத் தோணுது …. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் .... தனியா அடுத்து என்ன செய்யனு முழிச்சுட்டு இருந்த எனக்கு தாலி கட்டி , மனைவிங்கிற அடையாளம் கொடுத்து , காதல அள்ளி அள்ளிக் கொடுத்து ….. இப்போ இப்போ ….இந்த தேவதையை எனக்குத் தந்து 'தாய்'ங்கிற பெரிய ஸ்தானத்த தந்து காதல் இல்லாம இது சாத்தியமில்லனு….. 'காதல் அழகானதுனு ' புரிய வச்சீட்டீங்க பாஸ்..... yes Love is beautiful ....."

அதற்குள் குழந்தை உறங்கியிருக்க ….வாங்கி தொட்டிலில் படுக்க வைத்தவனிடம் ,

"மூணாறுலருந்து எப்ப வந்தீங்க ….குட்டிமா பிறந்ததும் வந்தீங்களா ,முதல்லயே வந்துட்டீங்களா …. ஊருக்கு போய்ட்டு வந்து இன்னும் ஹான்ட்ஸம் ஆகிட்டீங்க …. நாளைக்கு ஷேவ் பண்ணிடுங்க ….அப்புறம் உங்கப் பொண்ணு அழப்போறா....." அவளது இந்த இலகுவான பேச்சில் மகிழ்ந்தவன் ,

" என் பொண்ணு அழுவாங்கனு சொல்றியா …. இல்ல உனக்கு தாடி டிஸ்டர்பன்ஸா இருக்கும்னு சொல்றியா ….ம்...." என புருவம் ஏற்றி இறக்கியவனின் பேச்சில் முகம் சிவந்தவள் ….

"பா.... ஸ்…" என்ற சிணுங்கலுடன் …. நைட் ரெண்டு மணிக்கு பேசிட்டு இருக்கோம் … அவங்க திரும்பக் கூப்பிடுறதுக்குள்ள ( குழந்தையைக் காட்டியவள் )ஒரு தூக்கம் போடுங்க … எனக்கு என்னமோ தூக்கமே வரல … நான் ஃபோன் பார்க்கிறேன் … கொடுங்க என் ஃபோனை ...."

இலகு பேச்சில் அவளின் நிலையை மறந்திருந்தவன் ஞாபகம் வர , நீ கொஞ்ச நேரம் படுடா.. நான் உன் பக்கத்துலயே இருக்கேன்.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் மடியில் படுக்க , அவளது கலைந்திருந்த தலையை ஒதுக்கியவனிடம் ,

"பாஸ் எப்போ வீட்டுக்கு போகணும் … நம்ம மருமகன் எப்படி இருக்காரு… அனு மூணாவது நாளே வீட்டுக்கு வந்துட்டாளே … அப்ப நாமளும் நாளைக்கு போயிரலாமா … "

"ம்... நாளைக்கு டாக்டர்ஸ் வந்து உன்னையும் பாப்பாவையும் செக் பண்ணிட்டு என்ன சொல்றாங்கப் பார்த்துட்டு கிளம்பலாம் சரியா.... இப்ப தூங்குடா…"

"தூங்கணுமா இவ்வளவு நேரம் தூங்குனது போதாதா.... இத்தனை நாள் கழிச்சு வந்துருக்கீங்க … வழக்கமா தர்ற ஸ்வீட் கூட தரல .... நான் தான் தந்துருக்கேன்."

"வீட்டுக்கு வா …. நீ போதும் போதும் சொல்ற அளவுக்கு திகட்ட திகட்ட தாறேன்…"

முகம் சிவந்தவள் … "சரி உங்க கார் எங்க சர்வீஸ் போயிருக்கா … "

" இ... இல்லயே ஏன் கேட்கிற … " என்று பதட்டமடைய ,

"ம் … அதுதானே … அது வெளிநாட்டுக் கார் .... அந்த வசதி… இந்த… வசதி எனக்கு ஒன்னும் ஆகாதுனு சொல்லி என்னை சமாதானபடுத்தி வச்சுருந்தீங்களே.....உங்க கார் ஆக்ஸிடென்ட்னு கேட்டதும் எனக்கு உயிரே போயிருச்சு…..வலில மயக்கமாகிட்டேன்….அப்புறம் நீங்க .. வந்து இங்கப் பாரு உன் பாஸ் ஒரு நகக்கீறல் கூட இல்லாம வந்துட்டேன்னு சொன்னப் பிறகு தான் நிம்மதியா தூங்குனேன்...."

வியந்து விழித்தவன் , " அடிப்பாவி என்னைய தூங்கவிடாம பண்ணிட்டு நீ நிம்மதியா தூங்குனியா … " என்று ஆதங்கப்பட்டவன்…

"ஏன்டா அப்ப நான் பேசினது எல்லாம் கேட்டுச்சா … "

"ஆமா… பாப்பா அழுதப்போ நீங்க நம்ம ஃபேமிலி சாங் கூட பாடூனீங்களே….அதுதான் ….பூவிலே மேடை" என்று வாய் விட்டு நகைத்தவள்…

"பாஸ் எந்த திருவிழா கூட்டத்துலயாவது நாம தொலைஞ்சுப் போய்ட்டா …. மேடையில மைக்ல 'பூவிலே மேடை ' பாட்டு பாடுனோம்னு வைங்க …. சினிமால வர்ற மாதிரி எல்லோரும் வந்து
 
varsha

Tamil Novel Writer
The Writers Crew
அசெம்பிள் ஆகிடுவோம்..." என மறுபடியும் பொங்கி பொங்கி சிரித்தவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ,

"பாப்பாவும் உடனே அழுகைய நிறுத்திடுச்சே .. உங்க கிட்ட பாப்பாவ தாங்கனு சொல்லனும் போல இருந்தது … ஆனா ரொம்ப மயக்கம் போல முடியல … ஆமா நான் தூங்கி எழுந்ததும் எல்லாம் சொல்ல வேண்டியது தான ….அதுவும் சொன்னதையே சொல்லி காமெடி பண்ணிட்டு .....போங்க பாஸ்"

இப்பொழுது வாய் விட்டு சிரிப்பது அரவிந்தின் முறையானது. நெடுநாள் சிரிக்காத சிரிப்பையெல்லாம் தேக்கி வைத்து சிரித்தான் …. " அடிப்பாவி கடைசில என்னை காமெடி பீஸாக்கிட்டியே " என்று நினைத்து நினைத்து நகைத்தவனை ,

"ஐயோ ….மெதுவா… மெதுவா… இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கிறீங்க …. குட்டிமா எழுந்துக்குவாங்க பாஸ்...." என்று சிணுங்கிய ராதிகா … அவன் சிரிப்பை அடக்க அந்த இரவு நேரத்தில் தன் இதழ் என்னும் ஆயுதத்தை தான் எடுத்தாள். தன் இதழை அவன் இதழோடு சேர்த்ததுதான் தெரியும்….தன் காதல் மொத்தத்தையும் அவளிடம் இதழின் வழியே சொல்லுவது போல் அரவிந்தின் இறுக்கிய உடல் அணைப்பிலும் இதழ் அனணப்பிலும் தான் ராதிகா இருந்தாள்.

'வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ

தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ……'

காதலுக்கு எது ஆரம்பம் எது முடிவு என்று தெரியாது..... அழகிய காதலுக்கு முடிவு தேவையில்லைதான்..... ஆனால் ….

' காதல் அழகானது'

அடுத்து இறுதி அத்தியாயத்தில் சந்திப்போம் ….
 
Deputy

Well-known member
Member
Azhakana kadhala niraivadaya pokuthunu ninaikurapo varuthama iruku....but 1st epi la epadi chairoda nunila okkandhu padicheno athe mathiri than intha epi varaikum....azhakana ezhuthu nadai...vera enna sollanu theriyala enaku....intha story la ovorutharoda kadhal ovoru mathiri....aana aru and radhiyoda kadhal than different....nama nejathula ipadi kadhalikiromanu theriyathu...but intha mathiri kadhalika padanumnu aaval erpaduthuna story....semma epi pa....anyways waiting for the last part eagerly pa....
 
Top