Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே- பாகம் 3

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் - 3

இடம்: பார்க்கிங் / BARKING

நேரம்: நடுஇரவு 1 .30



விதவிதமாய், வித்தியாசமாய் புரண்டு படுத்து பார்த்துவிட்டேன். தூக்கம் மட்டும் வரவே இல்லை. அந்த ராட்சஸன் மனசுக்குள்ள குத்தாட்டம் போடுகிறான். கண்களை இறுக்க மூடினாலும், யாரோ என்னைப் பார்வையால் அள்ளித்தின்பது போன்ற உணர்வு.

யோசிக்க யோசிக்க, அவன் முகம் பரிட்சயமானது போலிருக்கு. மறுபடியும் போன் எடுத்து 357 வது முறையா, எங்க செல்பியில் அவன் முகத்தை தேடுகிறேன். மங்கலாய் தெரிஞ்ச அந்த முகத்தை மீண்டும் மீண்டும் ரசிக்கிறேன். நிச்சயமாய் இந்த முக சாயலை எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே? எங்கே?

ஆங்… கண்டுப்பிடித்துவிட்டேன். என் பிரெண்ட் கவி ‘இந்த ஆண்டின் மிகச் சிறந்த முத்தம்’ என்று ஒரு வீடியோ அனுப்பியிருந்தாள். அதில் அந்த ஸ்பானிஷ் ஹீரோ ஹியூஸ் மஸ்கூரா, ஹீரோயினை அப்படி ஒரு காதல் வெறியோடு முத்தமிடுவான். கிட்டத்தட்ட 3 நிமிடம், அந்த பொண்ணு உதட்டை உறிஞ்சி எடுப்பான். அவன் மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருந்திருந்தால், என் ராட்சஸன் மாதிரித்தான் இருப்பான்.

ஐய்யோ கடவுளே! இன்றைக்கு நான் தூங்கிய மாதிரித்தான்!

அடுத்த நாள் காலை, 10 மணிக்கு, ஈஸ்தாம்(Eastham)-ல இருக்கும், எங்க கடைக்கு கிளம்பினேன். என் பிரண்ட் கவியோட அக்கா மலரும் அவங்க கணவரும் இங்க ஜவுளிக்கடை வைச்சிருக்காங்க. அக்காவுக்கு பல வருசம் கழித்துதான் குழந்தை உண்டானது. கர்ப்பபை பலவீனமா இருப்பதால், கருவுற்ற 4 வது மாசமே சேலத்துக்கு வந்திட்டாங்க. ரத்த உறவு அனைவரும் ஊர்ல இருக்கும் போது, ஏன் பிரசவ சமயத்தில் தனியா கஷ்டப்படனும் என்பது அவங்க எண்ணம். பொண்ணாட்டி புள்ளையை விட, காசு முக்கியமல்லன்னு மாமாவும் கூடவே ஊருக்கு போய்ட்டார்.(பிரெண்டோட அக்கா எனக்கும் அக்கா, அவ மாமா எனக்கும் மாமா. அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகாததால் அவ புருஷனை என்னவாக ஏத்துக் கொள்வது என்ற பிரச்சனை இப்போதைக்கு இல்லை).

எங்கப்பா, ஜவுளி மொத்த வியாபாரம் செய்கிறார். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வோம். சின்ன வயதில் இருந்து அப்பாகூடவே கடைக்கும், குடோனுக்கும் திரிஞ்சதால், அப்பாவின் வியாபார நுணுக்கங்கள் ஓரளவு தெரியும். குழந்தை பிறந்து, மலரக்கா உடம்பு தேறிய பிறகுதான் திரும்ப இங்க வருவாங்க. அதுவரைக்கும், அவங்க வீட்டில் தங்கி, கடையை பார்த்துக் கொள்ளத்தான் நான் லண்டனுக்கு வந்தேன்.

எங்க வீட்டில் கடைக்குட்டி நான். வெளிநாட்டு வாழ்க்கை, எனக்கு பல அனுபவங்களைத் தரும், அத்தோடு தனித்து செயல்படும் திறனையும் வளர்க்கும் என்று எங்கப்பாவும் என்னை இங்க அனுப்ப சம்மதிச்சாங்க. மலரக்கா பிளாட்க்கு கீழ ஒரு தமிழ் குடும்பம் இருக்கு. கடைல வேலை பார்க்கறவங்களும் அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சவங்கதான். அதுவும் ஈஸ்தாம் குட்டி சென்னை மாதிரி. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. ஆக எனக்கு, லண்டன் வந்த கொஞ்ச நாளில், வெளிநாட்டு உணர்வு இல்லாமல் போய்விட்டது.

அன்றென்னவோ, நான் ரொம்ப சிரித்த முகத்தோட உற்சாகமாய் இருந்ததாய் கடையில் வேலை பார்க்கிற மீனாக்கா சொன்னாங்க. இப்படியாய் என் பொழுதுகள் கழிந்தாலும், சாலையில், பேருந்தில் என எங்காவது உயரமான ஆண்களைக் கண்டால், அவன் நியாபகம் வந்து கும்மியடிக்கும்.

அன்றைக்கு ரோடு கடப்பதற்காக, சிக்னலில் நிற்கும் போது, நெஞ்சுக்குள்ள படபடன்னு ஒரு துடிப்பு. ஏதோ நடக்கப்போகிறதுங்கிற உணர்வு. ஓ மை கடவுளே!

ஆமா, அவனைப் நான் பார்த்தேன். இடது பக்க ரோட்டில் 2வதா நிற்கிற கருப்பு காரில் அமர்ந்திருப்பது அவன் தான். அவனே தான்! என் கண்கள் அந்த கண்களுக்கு ரகசிய அலைவரிசை அனுப்பியது போல, அண்ணலும் என்னை நோக்கினான். அடையாளம் கண்டு கொண்டதும் அத்தனை சிரிப்பு அவனிடம். வேகமாக கையசைத்தவன், கார் ஜன்னலைத் திறந்து ஏதோ சொன்னான். அது என் காதுகளை அடைவதற்குள் சிக்னல் விழுந்து வாகனங்கள் நகர துவங்க, என்னால் கேட்க முடியவில்லை.

இதெல்லாம் சினிமாவில் நடக்கற மாதிரி இருக்கா? அப்போ, சினிமா மாதிரியே நானும் இவனை காதலிப்பேனா?

அன்றிலிருந்து சரியாக 7வது நாள், வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் வரும் வழியில், பனியில் கவனக்குறைவாக நடந்து, கீழே விழுந்து தொலைந்தேன். கால்முட்டியில் நல்ல அடி, எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. அழுகை வெடித்து வந்தது. இந்த நிமிடமே ஊருக்கு போய், என் வீட்டு சோபாவில் படுத்துக் கொள்ளவேண்டுமென மனசு துடிக்கிறது. அருகில் இருந்தவர்கள் 999க்கு போன் பண்ண, ஆம்புலன்ஸில் கிங்க் ஜார்ஜ் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

அவசர சிகிச்சைப்பிரிவில் சில மணி நேரம் கழித்து, வந்த மருத்துவர் ‘’ ஹாய் அமுதினி. உங்க ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்ததில் உங்க மூட்டு எலும்பில் முறிவு ஏதும் இல்லை. வெறும் வீக்கம் மட்டும் தான். வலி அதிகமா இருந்தா பெயின்கில்லர் போடுங்க. கொஞ்ச நாளைக்கு கடினமான வேலை ஏதும் செய்யாதீங்க. நடக்க கஷ்டமா இருக்கும். எங்க முடநீக்கியல் நிபுணர்/ physiotherapist சில பயிற்சிகள் சொல்லித்தருவார். அதன் பிறகு நீங்க வீட்டுக்குப் போகலாம். டேக் கேர்’’ என்றார்.

மருத்துவர் சென்றதும் ,வழக்கம் போல மொபைல் எடுத்து பார்த்துகொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. திடிரென . ‘ஹாய் ஐ ஆம் பிசியோதெரபிஸ்ட் அர்ஜூன் ராமலிங்கம். மே ஐ ஹெல்ப் யூ? ‘’ என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தால், ஐய்யோ… அத்தான் நீங்களா!

இனி என் மொபைல் ரிங் டோன்

‘அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா

அம்பினால் அம்பினால் உள்ளம் தைத்த அர்ஜுனா’


காதல் வளரும்
 
Last edited:
பிரின்ட்யோட அக்கா எனக்கும் அக்கா அவளோட மாமா எனக்கும் மாமா அதுக்கு அடுத்தது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கடவுளே எப்படி இப்படி.... அட என்ன இது வளர்ந்து கெட்டவன் வருவான் பாத்தா அத்தான் வந்து இருக்காக .....
 
கடைசியில அந்த அவன் இவன்தானா?
வாங்க ஸார் வாங்க
வந்து உங்கள் பிஸியோதெரபியை ஆரம்பிங்க
 
பிரின்ட்யோட அக்கா எனக்கும் அக்கா அவளோட மாமா எனக்கும் மாமா அதுக்கு அடுத்தது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கடவுளே எப்படி இப்படி.... அட என்ன இது வளர்ந்து கெட்டவன் வருவான் பாத்தா அத்தான் வந்து இருக்காக .....

ஹா ஹா ஹா… உண்மைதானே… பிரெண்ட்டோட அம்மாவை அம்மான்னு சொல்றோம். அக்காவை அக்கான்னு சொல்றோம்.. அப்போ????
 
கடைசியில அந்த அவன் இவன்தானா?
வாங்க ஸார் வாங்க
வந்து உங்கள் பிஸியோதெரபியை ஆரம்பிங்க

அவரே தான்….. சாரும் செம ஹேப்பிதான்.. அடுத்த பாகத்தில் பாருங்க
 
Top