Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நதியிலே - 2

Advertisement

Lavi bala

Member
Member
அத்தியாயம் - 2

அவள் சாப்பிடும் போதே அவளறியாமல் அவளை ஒரு போட்டோ எடுத்தவன் ராம்-க்கு அனுப்பி வைத்தான்..

அவள் சாப்பிட்டு முடித்ததும் "இப்போ ok வா , நார்மலாயச்சா?? " என்று கேட்டான் விவேக்.. சிறு சிரிப்புடன் "ஐயம் ok நொவ் விவேக் " என்றவள் பின் " சாரி அன்ட் தேங்க்ஸ் விவேக், எங்களால் உனக்கு கஷ்டம் " என்றாள்.

அவளை முறைத்தவன் "அடி வாங்க போற நீ, சாரி தேங்க்ஸ் சொல்ற அளவு பெரிய ஆளா ஆய்டீங்களா மேடம் " என்றான்..

"இல்லை இல்லை வாபஸ் வாங்கிக்கிறேன்... "

ம்ம்ம் குட், சரிடா நல்லா தூங்கு, அவன் ஏதோ கோவத்துல இருக்கான். சரி ஆகிடுவான்.. உனக்கு தெரியாதா அவனை பற்றி.. அழாத அவன் ரொம்ப பீல் பண்ணுகிறான்.. நான் கிளம்பறேன் பை.. அவளை தோளோடு அணைத்து விடை பெற்று தெய்வாவிடம் பாத்துக்கோ என்று சொல்லி வெளியில் வந்தவன் செல்லில் ராம்மை அழைத்தான்...

முதல் ரிங்கிலேயே எடுத்தவன் "தேங்க்ஸ் டா மச்சான், போட்டோ பார்த்தேன்.. சாரிடா உன்ன டிஸ்டர்ப் பண்றோம் " என்றான்.. "டேய் ரெண்டு பேரும் இருக்கீங்களே.. ஆல்ரெடி பேசி வெச்சுப்பீங்களா ?? ஒரே டயலாக்கா சொல்லுறீங்க " என கேட்டான் விவேக்..

"லவர்ஸ்னா அப்படி தான்டா இருப்போம் "

"நல்லா இருந்தீங்க.. இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. முதல்ல அவகிட்ட பேசுடா.. உங்க இரண்டு பேருக்கும் சொல்ல தேவை இல்லை.. இருந்தாலும் பாத்துகோடா."

"சரிடா நான் பாத்துக்கிறேன் , நீ கிளம்பு.. லேட்டாகுது.. " என கூறி போனை வைத்தான்...

அங்கு லக்க்ஷனவோ ராமிற்கு "சாரி மை லவ், குட் நைட் " என்று மெசேஜ் செய்தவள் தங்கள் காதல் நாட்களை நினைத்துப்பார்த்தாள்....

லக்க்ஷனாவின் பெற்றோர் விஸ்வநாதன் - சங்கீதா இவர்கள் இருவரும் அரசு ஊழியர்கள்.. ஒரே பெண்ணான லக்க்ஷியின் மேல் அளவு கடந்த பாசம்.. விழுப்புரத்தில் இருந்து பணி மாறுதல் காரணமாக ஈரோடு வந்தனர்.. லக்க்ஷனாவை 6-ம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்க்க வேண்டும். எனவே ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் லக்க்ஷியை சேர்க்க முடிவு செய்து பீஸ் கட்டிவிட்டு வந்தனர். இன்னும் இரண்டு 2 நாட்களில் பள்ளி ஆரம்பம்...

நடராஜ் - கனகவல்லியின் 2-ம் புதல்வன் ராம்.. பெரியவன் சிவா.. நடராஜ் மெஷின்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.. சிவாவும் ராமும் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார்கள்.

ராமின் தாய்மாமா மகேந்திரன்.. மனைவியை இழந்தவர்.. அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. ஜனனி, மித்ரா..3 மற்றும் 1 வயதான இருவரையும் தனியாக வளர்க்க முடியாததால் தன் தங்கையின் வீட்டிலேயே தங்கி அவர்களின் உதவியோடு வளர்க்கிறார்..

அந்த பள்ளிக்குள் முதல் நாள் லக்ஷனாவை விட்டுவந்தனர்... ஒரு சில மாணவர்களே கலர் ட்ரெஸ்ஸில் இருந்தனர்.. தன் வகுப்பை தேடி கொண்டிருந்தாள் லக்க்ஷி.. அப்பொழுது ஒரு காரில் பள்ளிக்குள் வந்து இறங்கினர் ராம் மற்றும் சிவா.. அவரவர் வகுப்பை நோக்கி செல்லும் போது ராம் கண்டது அங்கு ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற பிராஃக் அணிந்து மாநிறத்தில் பெரிய விழிகளோடு தன் வகுப்பிற்கு எப்படி செல்வதென தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவளைத்தான்...

ஏனோ பார்த்ததும் பிடித்துவிட்டது ராமிற்கு.. அவளருகில் சென்றவன் "நியூ அட்மிஷனா, பேர் என்ன, எந்த கிளாஸ் " என்றான் சிரித்தபடி.. அவனைப் பார்த்து "ஆமா, லக்க்ஷனா 6th A" என்றவள் கவனித்தாள் தன் அருகில் வெள்ளையாக கன்னக்குழியுடன் சிரித்தபடி நின்றிருந்தவனை.. " என் பேரு ராம், என் கிளாஸ் தான் வா நான் கூட்டிட்டு போறேன்" என்றபடி அழைத்து சென்றவன் தன் தோழியும் பக்கத்துவீட்டு சிறுமியுமான சிந்துவின் அருகில் அவளை அமரவைத்துவிட்டு அவளுக்குப் பின்னால் உள்ள பெஞ்சில் சென்று அமர்ந்தான்...

வருடங்கள் சென்றது... ராம் லக்க்ஷி இருவரும் படிப்பில் போட்டி போட்டு படித்தனர்.. அது ஆரோக்கியமான போட்டியாக இருந்தது.. இதற்கிடையில் 9-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது ஒரு வாரம் லக்க்ஷி வரவில்லை... அவள் பெரிய பெண்ணாகியிருந்தாள்.. ராமிற்கு லக்க்ஷிக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.. யாரிடம் கேட்பதென்றும் தெரியவில்லை. அவனின் முன்னிருக்கை காலியாக இருந்தது.. அவனுக்கு வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.. அவளுக்கு என்ன ஆனதென்று யோசித்துக்கொண்டிருந்தான்...

வகுப்பு முடித்து மாலை அவன் வீட்டிற்கு ஹோம்வர்க் செய்ய வந்தாள் சிந்து.. எப்பொழுதும் இருவரும் சேர்ந்து தான் எழுதுவார்கள்.. அன்று ராம் நீ எழுது சிந்து நான் அப்புறமா எழுதிக்கிறேன் என்றான்.. சரி என்றவள் எழுதிக்கொண்டிருந்தாள்.. அப்பொழுது "சிந்து, லக்க்ஷி ஏன் வரலனு தெரியுமா??" ராம் கேட்டான்.. சிந்துவும் தெரில ராம் என்றாள்..

ஒரு வாரம் கழிந்த நிலையில் ராம் காலை வகுப்பிற்குள் நுழையும் போதே பார்த்தது அங்கு அமர்ந்து தன் தோழிகளிடம் பேசிக்கொண்டிருந்த லக்க்ஷியைத் தான்.. அவள் முகத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது அவனுக்கு. அவளைத் தாண்டி அவனிடத்தில் சென்று அமர்ந்தான்.... அவள் இவனை கவனிக்கவில்லை.. கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தவன் அவள் திரும்புவாள் என்று தோன்றாததால் வழக்கம் போல் அவள் ஜடையை பிடித்து இழுத்தான்..

ஆம்.. அவன் எப்பொழுதும் அவளை அழைக்கும் முறை இதுதான்.. அவளிடம் அவள் பெயரை கூறி அழைக்கமாட்டான்.. அவளுக்கு மிக நீளமான கூந்தல்.. எப்போதும் ஜடையை இழுத்து தான் அழைப்பான்.. திரும்பியவள் அவனை பார்த்து புன்னகைத்தாள்.. ஏன் வரல என்னாச்சு?? என கேட்ட ராமிடம் தான் ஊருக்கு சென்றுவிட்டதாக கூறியவள் ஆசிரியர் பாடம் எடுக்க ஆரம்பித்ததால் திரும்பி கொண்டாள்.. அவள் தாய் சொல்லியிருந்தார் யார் கேட்டாலும் ஊருக்கு போனதாக சொல்லும்படி.. அவளுக்கு எதும் ஆகவில்லை என்பதில் சற்று ஆசுவாசமடைந்தவன் பாடத்தை கவனிக்கலானான்..

அன்று மாலை வழக்கம் போல் சிந்துவுடன் ஹோம்வர்க் செய்ய உட்கார்ந்தான்.. சிந்துவிற்கு புரிந்தது லக்க்ஷி வந்த பிறகு தான் ராம் இயல்பு திரும்பி இருப்பது... அவளுக்கு பொறாமையாக இருந்தது.. ராமை அவளுக்கு சிறு வயதில் இருந்து தெரியும்.. ராம் அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் சென்று பேச மாட்டான். அவளிடமே அவள் இருந்தால் மட்டுமே சிறு பேச்சு.. அவள் இல்லையென்றாலும் தேடமாட்டான்.. அவள் வகுப்பிலேயே ராமிடம் பேசும் ஒரே பெண் அவள் தான்.. ராம் போல அழகான ஒருவன் தன்னிடம் பேசுவதை ஒரு கெத்தாக நினைத்திருந்தாள். மற்ற வகுப்பு பெண்களின் முன் வேண்டுமென்றே ராமிடம் பேசுவாள்.. ஆனால் இப்பொழுது ராம் லக்க்ஷியிடம் பழகுவதையும் அவளைத் தேடுவதையும் பார்த்தவளால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை...

அடுத்தடுத்து வந்த நாட்களில் இருவரையும் கவனிக்க ஆரம்பித்தாள்.. வகுப்பிற்குள் நுழையும் போது இருவரின் பார்வை ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வதையும் ராம் எப்பொழுதும் லக்க்ஷியின் பின் இருக்கையிலேயே அமர்வதையும் கண்டுகொண்டாள்..
சிந்து ஒரு நாள் வேண்டுமென்றே லக்க்ஷியிடம் நீ என்னுடைய பிளேஸ்ல உட்கார் நான் இங்க உட்கார்ந்து கொள்கிறேன் என்றாள். லக்க்ஷி சிறிது யோசித்தாள்.. அவளுக்குத் தெரியும் ராம் தன் பின்னால் தான் அமர்வான் என்று.. ஆனாலும் சிந்துவிடம் சரி என்றவள் இடம் மாறி உட்கர்ந்தாள்.. ராம் உள்ளே நுழைந்தவன் இருவரும் இடம் மாறி இருப்பதை பார்த்து புருவம் உயர்த்தியபடி வந்தவன் லக்க்ஷியின் பின்னால் அமர்ந்திருந்த மாணவனை மாறி அமரச்சொல்லி அவளின் பின் அமர்ந்தான்.. பார்த்துக்கொண்டிருந்த சிந்துவிற்கு தான் எரிச்சலானது..

இதை வளர விடக்கூடாது என்பதில் கவனம் வைத்த அவள் 10-ஆம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்ணே பெற்றாள்.. ராம் லக்க்ஷி இருவரும் நல்ல மார்க் எடுத்திருந்தனர்..அவர்கள் பயாலஜி குரூப்பிலும் சிந்து ஆர்ட்ஸ் பிரிவிலும் சேர்ந்தனர்..
 
Top