Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 3

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அத்தியாயம் - 3

செய்தித்தாளின் பின் தெரிந்த முகத்தை கண்டு கைகளைஉதறியபடி பின் நகர்ந்தாள் கண்மணி
.

இவளது பதட்டத்தை பார்த்து சிரித்தபடி வந்த தாமரை "பயந்துட்டியா தங்கம்? இவன் என்ர அக்கா மகன் ..ஊர்ல இருந்து வந்திருக்கான் ..வாத்தின்னு நினச்சுட்டியாக்கும் ?" என்றார் .
தன் கணவரை வாத்தி என்று தான் கூறுவார் இவளிடம் மட்டும் ..தனக்குள் அழைக்கும் செல்ல பெயர் .அது இவளிடம் மட்டும் வெளிப்படும்.
"சாரி சாரி " என்றபடி சிதறிய தாள்களை சேகரித்தவள் அவனிடம் தந்துவிட்டு அவனை நிமிர்ந்தும் பாராமல் உள்ளே ஓடிவிட்டாள்.
இவளது பதட்டத்தை உள்ளூர ரசித்தவனாய் இளம் புன்னகையோடு நின்றவன் கதிர்!
யௌவனமும் முதிர்ச்சியும் சரி பாதியாய் கலந்த தோற்றம் ..மெத்த படித்த மிடுக்கு.. சற்றே கரிய நிறம் .. திடகாத்திரமான உருவம் நித்தம் அவன் செய்யும் உடற்பயிற்சியை பறைசாற்றியது !
புகை காணாத சிவந்த இதழ்களுக்கு மேல் கற்றையாய் வீற்றிருந்த மீசை வசீகரமாய் இருந்தது .. கல்லூரியில் விரிவுரையாளனாய் இருந்ததால் தாடியை முழுக்க மழித்திருந்தான்.
கண்களின் ஒளி அறிவின் தீர்க்கத்தை சொல்லாமல் சொன்னது!
கண்ணில் இருந்து மறைந்த யுவதியின் முகமே நெஞ்சுக்குள் ஆட எப்போதும் அதை ரசிக்கும் அதே பாவனை அவன் வதனத்தில்!

தாமரையின் பின்னே ஓடியவளின் மனமும் அவனையே நினைத்து கொண்டிருந்தது ..
அவன் ..கதிர் ..அவள் படிக்கும் அதே கல்லூரியில் லெக்ச்சரர் மற்றும் PhD ஸ்காலர் !
கல்லூரியில் அவன் பெயர் வெகு பிரபலம்..
கதிர் சார் என்று அவன் பெயர் சொல்லி உருகும் பெண்கள் கூட்டம் அதிகம் .அதைவிட ஆண்கள் கூட்டம் அதிகம்..
இவள் வகுப்பு ஆண்கள் கூட அவனை குறித்து புகழ்ந்தபடியே இருப்பர்..

மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியனாய் இருப்பது மிகவும் சிரமமான ஒன்றல்லவா ? அவர்களை விட கடுமையான விமர்சகர்கள் யாரும் இல்லையே .அவர்களையே இவன் வசப்படுத்தி இருந்தானே ..போதாதற்கு மாணவர்கள் வெளி கல்லூரிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகளுக்கு இவனே பொறுப்பேற்பவன் .
இவனுக்காகவே போட்டிகளில் பங்கு பெரும் பெண்கள் கூட்டமும் உண்டு. இத்தனை இருந்தும் பெண்கள் விஷயத்தில் ஒரு குறையும் சொல்ல முடியாது .
கல்லூரியில் இவ்வளவு பிரபலமானவனின் விழிகளோ கண்மணியையே சுற்றி வரும் என்பது அவளே அறியாத உண்மை!

ஆனால் இவள் தூர இருந்து பார்ப்பதோடு சரி. அவனது துறையும் இவளதும் வெவ்வேறு என்பதால் ஓரிரு வார்த்தைகள் பேசியதுண்டு . மற்ற பெண்களை போல் காரணங்களை உண்டு பண்ணி கொண்டு அவனிடம் பேசியதெல்லாம் இல்லை !

கல்லூரியில் அனைவரின் அபிமானத்துக்கும் உரியவன் ..இவர்கள் தூர இருந்து ரசிப்பவன். அவனை இங்கே தனது ஊரில் தனது தாமரை அத்தையின் வீட்டில் எதிர்பாராத ஒரு தருணத்தில் சந்திப்போம் என்று அவள் நினைத்ததேயில்லை.

மனம் தடதடத்துக் கொண்டிருந்தது கண்மணிக்கு! சற்றும் எதிர்பாராத சந்திப்பு ..கொஞ்சம் அதிர்ச்சி என்று கூட சொல்லலாம்,, ஆனால் இனிய அதிர்ச்சி!

சமையலறையில் இருந்த சிறு முக்காலியில் அமர்ந்தவள், தாமரை லாவகமாக சமைக்கும் அழகையே ரசித்து கொண்டிருந்தாள் .மட மட வென தேங்காயை துருவிய கைகள் மிக்சியில் சட்னியை அரைத்தெடுக்க அதை ரசித்தபடி பொட்டுக்கடலை பாட்டிலை எடுத்து கொறிக்க ஆரம்பித்தாள் கண்மணி.
"பார்த்திபன் எப்படி இருக்கான் அத்தை ?"
"நல்லாருக்கான்மா ..அடுத்த மாசம் வருவான் " என்றார் தாமரை.
பார்த்திபன் அவர்களது ஒரே மகன் ..இப்போது பத்தாம் வகுப்பு .. ஐ ஐ டி படிப்பிற்கு தயார் செய்வதால் அதற்கு தோதான வெளியூர் பள்ளியில் தங்கி படிக்கிறான். மகனின் நினைவில் மனம் கனிந்தது தாமரைக்கு.
"பேசாம நாமளும் அவன் கூடவே தங்கிடலாம்னு சொன்னா.. உங்க மாமா எங்கே விடறாரு? அவருக்கு ஊரு ஊரு ஊருதான் எப்பவும் ! நாங்கல்லாம் ரெண்டாம் பட்சம் தான் " என்றார் மனத்தாங்கலாய்!
"அவ்வளவு தானே அத்தை ..வாத்தி வரட்டும்.. ஒரு கை பாப்போம் " என்றவள்
"ஏன் அத்தை? வெளியே உக்காந்திருக்கது யாரு ..?” என்றாள் அறியா பிள்ளை போல்.
"கதிரு..என்ர ஒன்னு விட்ட அக்கா மகன் ..நீ படிக்கிற காலேஜுல தான் கண்ணு வேலை பாக்குறான். நீ பாத்ததில்லையாக்கும் ?"
"பாத்திருக்கேன் அத்தை ..ஆனால் ரொம்ப பழக்கமில்லை..வேற டிபாட்மென்ட் "

"ரொம்ப பதவிசான பையன் மா. எங்கக்கா சின்ன வயசிலேயே போய்ட்டா ..சின்ன வயசில நான் தான் கண்ணு அவனை வளத்தேன்..அப்போ கொஞ்ச நாள் நாங்க ராமேஸ்வரத்தில் இருந்தோம்ல அப்போ" என்றவரின் கண்கள் லேசாக கலங்க தனக்குள்ளே ஆழ்ந்தவராய் சிறிது நேரம் எரியும் அடுப்பு தீயில் பார்வை பதித்து நின்றவர் " உங்க மாமாவுக்கு இங்க மாத்தலானதுக்கு அப்புறம் எப்போவாது நாங்க போய் பாக்கிறது தான்.இது தான் முத முறையா இங்க வந்திருக்கான் ..காலையில மொத பஸ்ஸில தான் வந்தான் " என்றார்

‘மொத பஸ்லயா? நாமளும் அதே பஸ்ஸில தானே வந்தோம் ..இவனை பாக்கவேயில்லையே!
அடியே கண்மணி இப்படியா அக்கம் பக்கம் யாரிருக்கான்னு பாக்காம வருவ?இதுக்குதான் அப்பா நம்மள தனியா அனுப்பறதில்லை போல!
ஒரே பஸ்ஸில ஒட்டுக்கா வந்துட்டு..அவன் கூட பேசற சான்சை மிஸ் பண்ணி போட்டியேடி’ என்று அவள் மனம் இடித்துரைக்க ..
தாமரை சட்னியை தாளித்து முடிக்க அந்த மணத்தை ஆழ்ந்து நுகர்ந்தபடி "மாமா எங்கத்தை?" என்றாள்.
"கொஞ்சம் புறத்தால போய் வாழ எலே ஒன்ன அறுத்தா கண்ணு " என்றவர்
"நேத்து சாயங்காலமே ஊர் விஷயமா வக்கீலை பாக்கோணும்னு கோயம்புத்தூர் போனாக ..இன்னும் வூட்டுக்கு வரல கண்ணு ..” என்றார் .
அவளது கேள்விக்கு இதழ்கள் பதிலளித்தாலும் மனம் கலக்கமாக இருந்தது கதிர் வந்தது அறிந்தால் தன கணவர் என்ன சொல்லுவாரோ என்று.

இட்டிலியையும் சட்னியையும் பாத்திரங்களில் எடுத்து கொண்டு கூடத்திற்கு வந்த தாமரை கதிரை உணவருந்த அழைக்க அவன் கொல்லைப்புறம் சென்று கை கழுவ சென்றான்.
விழிகள் வாழை மரத்தில் இலை அறுத்துக் கொண்டிருந்த பாவையையே மேலிருந்து கீழாக அளந்தன.
சிவப்பிற்கும் மாநிறத்திற்கும் இடையிலான நிறம் ..பளபளக்கும் சருமம் .. வட்டக் கருவிழிகள் ..தன்னுள் ஒரு ஆழியையே அடக்கி வைத்திருப்பதுபோன்ற ஆழமான விழிகள்! லேசாக சிவந்த இதழ்கள்.
சற்றே பூசினாற் போன்ற உடல்வாகு தான் .. விடுதி உணவிலும் படிப்பின் தீவிரத்திலும் இப்போது மெலிந்திருந்தது. ஆனாலும் அதுவும் அவளுக்கு அழகாகவே இருந்தது.
எப்போதும் சரியான அளவில் அவள் அணியும் சல்வார் அவளை பாந்தமாய் காண்பிக்க ....அதுவும் இன்று அவள் அணிந்திருந்த இளம் பச்சை நிற உடையோடு வாழைகளுக்கு இடையே நிற்கையில் அவளே ஒரு வாழைக் கன்றாக தெரிந்தாள் அவன் விழிகளுக்கு .
லேசாக சிவந்த இதழ்கள்.. எப்போதும் ஒரு சிறு புன்னகையை தத்தெடுத்திருக்கும் . பிறை போன்ற நெற்றி ..அதில் எப்போதும் தவழும் ஒரு குழல் கற்றை!
தாடையின் ஓரம் இருந்த சிறு மச்சம் திருஷ்டி பொட்டு போல் இருந்தாலும் அவளது அழகிற்கு மேலும் கண்படவே செய்தது.

ஆடவன் ஒருவனின் விழிகள் காதலுடன் தன்னை நோக்குவது அறியாதவளாய், வாழை இலையை குழாய் திறந்து நீரில் கழுவியவள், உள்ளே சென்று டைனிங் டேபிளில் இலையை போட.. தாமரை உணவை பரிமாற ..உண்டவனின் வயிறும் உள்ளமும் ஒருங்கே நிறைந்து கொண்டிருந்தது.

சட்டென நினைவு வந்தவளாய் "தம்பி கதிரு.. இது நம்ம சொந்தக்கார புள்ள .சென்னையில நீ வேல பாக்கிற காலேஜில் தான் படிக்கிறா " என்று தாமரை அறிமுகம் செய்யவும் "பாத்திருக்கேன் சித்தி “ என்றவன் ஒன்றுமே அறியாதவன் போல "எந்த டிபாட்மென்ட் ?"
என்று அவளை நோக்கி கேட்க .. 'அடப்பாவி ஒண்ணுமே தெரியாத மாதிரி என்ன ஸீன் போடுறான் 'என்று நினைத்தவள் அதற்கு பதிலளிக்க முற்படும் போதே வாசலில் அரவம் கேட்க திரும்பி பார்த்தான்.
சொக்கலிங்கம் தான் வந்து கொண்டிருந்தார்.

அவரை கண்டதும் தாமரையின் முகத்தில் வெளியில் போன கணவர் வீடு திரும்பிய நிம்மதியும் கதிரை கண்டு என்ன சொல்லுவாரோ என்ற கவலையும் ஒருங்கே தோன்றின.
கண்மணியோ சந்தோஷத்தில் "ஐ மாமா வந்தாச்சு "என்று குதூகலிக்க ..கதிரோ தன் முகத்தில் எதையும் காட்டாத அழுத்தத்துடன் உண்பதை தொடர்ந்து கொண்டிருந்தான்.
கண்மணிக்கு சொக்கலிங்கம் என்றால் ரொம்ப பிரியம்..வெகுவாக வார்த்தையாடுவாள் அவரிடம்.
வயது எழுபதை தொட்டிருக்க ..அவருக்கும் தாமரைக்கும் கிட்ட தட்ட பதினெட்டு வயது வித்தியாசம்.

தாமரை அத்தையின் கணவர் என்பது தொட்டு மாமா என்று அழைத்தாலும் ஒரு தாத்தா பேத்திக்குரிய வாஞ்சை இருக்கும் இருவருக்குள்ளும்.
பெரும்பாலும் மாமா என்று கூட அழைக்க மாட்டாள். 'என்ன வாத்தி' என்பதாகவே இருக்கும்.
அவரும் தன் மிடுக்கையெல்லாம் விட்டுவிட்டு வார்த்தையாடுவார் கண்மணியிடம்.

வாசலுக்கு ஓடி வந்த கண்மணியை கண்டதும் செல்ல சிரிப்பு உதட்டில் மலர "வாடா குட்டி ..எப்போ வந்த ? உன் காலேஜு பக்கம் ஒரே கலவரமா கெடக்குன்னு சொன்னாங்களே .ஒன்னும் பிரச்னை இல்லையேம்மா?" என்று கேள்வியெழுப்பியபடி உள்ளே வர "அதெல்லாம் பத்திரமா வந்து சேந்துட்டேன் மாமா "என்றபடி அவரது கைப்பொருட்களை வாங்கி தாமரையிடம் கொடுக்க "வாங்க "என்று சுரத்தேயில்லாமல் அழைத்தபடி வந்த மனையாளை பார்த்தவரின் முகம் யோசனையை பூசியது.

சொக்கலிங்கம்....
ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தின் படி வாழ்ந்து கொண்டிருப்பவர் ..கல்வி ஒன்றே கடவுள் என்று நினைப்பவர்! அதற்கேற்ற மரியாதையான ஆனால் எளிமையான தோற்றம். கல்விக்கண் கொண்டு பலர் வாழ்வில் வெளிச்சம் வர அவர் ஆற்றிய பணி அளப்பரியது.

பல வருடங்களாக இதே ஊர் பள்ளியில் பணியாற்றியவர் இடையில் சிறிது காலம் ராமேஸ்வரத்தில் பணியில் இருந்தார். மறுபடி தலைமை ஆசிரியராக தன் சொந்த ஊருக்கே வந்தவர் தன் பணிகளை இன்று வரை நிறுத்தவில்லை. பணியில் இல்லாவிட்டாலும் தினமும் பள்ளிக்கு சென்று வந்து விடுவார்.அவரது வழிகாட்டலியேயே அந்த பள்ளி இன்னமும் இயங்கி வந்தது.

தலை முழுக்க வெள்ளி முளைத்திருக்க மெலிந்த தேகம் லேசாக தளர்ந்திருந்தாலும் கண்களின் ஒளி கொஞ்சமும் குறையவில்லை!
தாமரையின் தாய் மாமன் அவர் ஆகையால் இருவருக்கிடையில் வயது வித்தியாசம் அதிகம் ..ஆனால் வெகுவாக புரிதல் நிறைந்த தம்பதியர் ..
மனைவியின் "வாங்க " என்ற அழைப்பே ஏதோ சரியில்லை என்று உணர்த்த கூடத்திற்குள் நுழைந்தவரின் கண்களில் உணவுண்டு கொண்டிருந்த கதிர் பட அதிர்ச்சியும் கோபமும் ஒருங்கே அவர் முகத்தில் தாண்டவமாடின.

"நீ எதுக்குடா வந்த ?"
அவர் அப்படி நேரடியாக கேட்பார் என்று தாமரையோ கண்மணியோ நினைக்கவில்லை!
ஆனால் அவன் அசரவில்லை .."ஏன் உங்க வீட்டுக்கு நான் வர கூடாதா?" என்றான்.

கண்மணி இருப்பதால் சற்றே தயங்கியவர் " வேலையை போட்டுட்டு இங்க வர அளவுக்கு இப்போ என்ன அவசியம் ?"
"வேலையை போட்டுட்டு எல்லாம்வரலை ..காலேஜு பத்து நாள் லீவு..எனக்கு போக சொந்தம்னு யார் இருக்கா? சித்தியை பாக்கணும்னு தோணுச்சு ..அதான் வந்தேன் "

"காலேஜு லீவுன்னா உக்காந்து phd வேலைய பாக்க வேண்டியது தானேடா.. அத விட்டுட்டு இங்க வந்துருக்க ? உங்கப்பனுக்கு தெரியுமா நீ வந்தது ?"

இதற்கு பதிலளிக்காமல் "ஆமாஅவருக்கு தெரிஞ்சா விடுவாராக்கும் ?" என்று வாயோரம் முணுமுணுத்தது கண்மணியில் காதில் நன்கு விழுந்தது.

அவன் பதிலை எதிர்பார்க்காதவராக "மத்தியானம் பஸ்ஸில ஒழுங்கா ஊரை பாத்து போற ..புரியுதா ?" என்றவர் தாமரையை உற்று நோக்க அவர் தலை சரியென்பது போல் ஆடியது.

"கண்ணு குட்டி ..நீ வீட்டுக்கு போடா ..உங்கம்மா தேடுவாங்க "என்று இவளையும் கிளம்ப சொன்னவர் வாசலியேயே அமர்ந்துவிட...
இன்று ஏதோ சரியில்லாததை உணர்ந்த கண்மணி "சரி மாமா .அத்தை நான் போய்ட்டு வரேன்." என்றவள் பார்வை தன்னையும் அறியாமல் அவனிடம் தாவி மீள அதை உணர்ந்து உள்ளூர குதூகலித்தான் கதிர் .

அவன் லேசாக தலையசைத்து விடைகொடுக்க தெருவில் இறங்கி நடந்த கண்மணிக்கு எல்லாமே புதிராயிருந்தன. காலையில் இருந்தே கலங்கி இருந்த மனம் இப்போது முற்றிலும் குழம்பிவிட்டது.

சொக்கலிங்கம் மாமா யாரிடமும் இப்படி கடினமாக நடந்து கண்டதில்லை ..
கதிரிடம் மட்டும் ஏன் இந்த கோபம்?
தன்னையும் போ என்று துரத்திவிட்டாரே!
பல மணி நேரம் இவள் அவரது வீட்டில் இருந்தாலும் இவளோடு வார்த்தையாடியபடி இருப்பாரே தவிர இவளை வீட்டுக்கு போ என்று சொன்னதேயில்லை..இவளை தேடி வடிவு ஆள் அனுப்பும் வரை இவர்கள் வீட்டில் பொழுது போக்கிக் கொண்டு வாத்தியை வம்பிழுத்துக் கொண்டிருப்பாள்.

வரும்போது செழிப்பாக இருந்த சொக்கலிங்கத்தின் முகம் கதிரை கண்டவுடன் தான் களையிழந்து கோபம் சுமந்தது என்பதை உணர்ந்த போது ஏனோ மனதுக்குள் சுருக்கென்றது..அவனை அவருக்கு பிடிக்காதோ !
 
அப்பா மேல் கோவமா தானே இந்த பிள்ள இருந்து
 
நல்லா இருக்கு பதிவு
அவன் மீது கோபமா
 
கதிர் அப்பாவுக்கும் வாத்திக்கும் எதுவும் பிரச்சனையோ.. அதான் கதிரை விரட்டுறாரோ...
 
Top