Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 11 2

Advertisement

Admin

Admin
Member
அங்கையர்கரசி மட்டும் தான் இங்கே, ராஜராஜன் அவனின் அரிசி மில்லில் தங்கி கொள்கிறான். வீட்டில் தங்குவதில்லை.

அவர்களின் ஊர் பிரச்சனை தான் சரியானது உறவுப் பிரச்சனை இல்லவே இல்லை. அங்கையாய் பேசினால் எல்லோரும் பேசினர். ஆனால் அவர்களாய் பேசவில்லை, சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் வாசுகியும்.

தில்லை நன்றாய் பேசினார். உண்மையில் அந்த வீட்டோடு அவளை இழுத்து பிடித்தார். நாச்சி எப்போதும் போல தான்.

வீட்டிற்கு ராஜராஜனின் அண்ணன்களும் அக்காள்களும் வரும் போது சிறிது நேரம் அவர்களுடன் இருப்பவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வாள். பின்னே ரூமின் உள் சென்று அடைந்து கொள்வாள்.

புது இடம் ஒன்றில் சிவன் கோவில் கட்ட அடிக்கல் நாட்ட அடுத்த மாதம் நாள் குறித்து இருந்தனர். அடி மண்ணோடு பிரித்தெடுத்த சிவனை புது மண்ணில் பதிக்க எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது.

இதோ அன்பழகன் டெஹ்ராடூன் சென்று விட ராஜலக்ஷ்மி இன்னும் மனோவின் வீட்டில். முன்பு அன்பழகன் முறைத்து கொண்டிருக்க, இப்போது ராஜலக்ஷ்மி “என்னுடைய மகளுக்கு நான் யார்? எல்லாம் உங்களின் முடிவா?” என்று நினைத்தவர், அப்பாவின் பேச்சை கேட்டு எல்லாம் செய்து விட்ட அங்கையர்கண்ணியோடு பேசுவதில்லை.

மொத்தத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் எல்லாம் துருவங்களாய் நின்றனர்.

அடுத்த நாள் ஞாயிறு விடுமுறை என்பதால் விகாஸ், ஸ்ருஷ்டியை, கரிஷ்மா அங்கையிடம் கொண்டு வந்து விட வந்தாள். மனோ அவளிடம் கைபேசியில் பேசியிருந்தான்.

“இன்னும் ரெண்டு பேரும் ஒரு வாரம் இங்கே தான், மேனேஜ் பண்ணிடுவியா அங்கை” என்று கரிஷ்மா கேட்க

“அதெல்லாம் அண்ணி நான் பார்த்துக்கறேன்” என்றாள். குழந்தைகளின் மெடிசின் லிஸ்ட் கொடுத்து, ஏதாவது தொந்தரவு வந்தால் அவசரத்திற்கு என்ன மருந்து, பின்னே எந்த டாக்டரிடம் அவர்கள் திருச்சியில் காண்பிக்கின்றனர் என்று சொல்லி குழந்தைகள் இருவரையும் முத்தமிட்டு கிளம்பினாள்.

“டேக் கேர் அம்மா, பத்திரமா இருங்க” என்றான் விகாஸ் பெரிய மனிதனாய். அது அவனிடம் ராஜலக்ஷ்மி சொல்லும் வார்த்தை.

“அதெல்லாம் பத்திரமா இருந்துக்குவேன்” என்று மகனிடம் சொல்லி சென்றால் கரிஷ்மா.

வீடே வேடிக்கை பார்த்தது, அதையும் விட அவர்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. பிள்ளைகள் என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம். அவர்கள் பிறந்து விட்டால் எல்லாம் அவர்களை சுற்றி தான்!

இதோ கரிஷ்மாவை ஆச்சரியமாய் பார்த்தனர். ஆம்! மனோவும் கரிஷ்மாவும் அவர்களின் நண்பர்களுடன் ஒரு வாரம் சுற்றுலா செல்கின்றனர். எங்கே இந்தோனேஷியா பாலி தீவிற்கு,

ராஜலக்ஷ்மியை அங்கே வீட்டில் தனியாய் விட்டிருந்தனர் தகவலை அன்பழகனுக்கு சொல்லியிருக்க, அவர் கிளம்பி வந்து விடுவார். அவர்களுக்குள் ஒரு புறம் எல்லாம் சரியாக, கூடவே இவர்கள் ஊர் சுற்ற என்று.

இங்கே ராஜராஜனுக்கும் அங்கையர்கண்ணிக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள், இப்போது இவனின் வீட்டினில் இருக்க, வந்த பிறகும் இன்னும் இருவரும் தனி தனியே தான்!

காலை வந்து குளித்து உணவு உண்டு விட்டு செல்வான். மதிய உணவு அவனுக்கு சென்று விடும், இரவு உணவு வந்து உண்பவன், மீண்டும் ஒரு குளியல் போட்டு உறங்க மில்லிற்கு சென்று விடுவான்.

நாச்சி தான் முனகிக் கொண்டே திரிவார். ஆனால் அவர் பேச்சை அவன் கேட்பதில்லை.

தில்லை சமாதானம் செய்வார், “சின்ன பிள்ளைகளா அத்தை. அவங்க அவங்க வாழ்க்கை அவங்க பார்த்துக்குவாங்க” என்று.

“என்ன அம்மா நீ? கொஞ்சமும் கவலை இல்லையா உனக்கு” என்று நாச்சி குறை படும் போது, “உங்க பேரன் மாதிரி ஒரு பையனும், உங்க பேத்தி மாதிரி ஒரு மருமகளும் இருந்தா, இப்படி தான் அலட்டிக்காம இருக்கணும்” என்று வியாக்கியானம் பேச,

“அத்தை நான் ஸ்ருஷ்டிக்கு இட்லி ஊட்டுறேன், நீங்க இவனுக்கு தோசை சுடுங்க” என்று சொல்ல,

“பாருடா மாமியாருக்கு மருமக வேலை வைக்கிறா” என்று சொல்லியபடி ராஜராஜன் வந்தான்.

“எல்லாம் உன்னால தாண்டா, நீ இங்க இருந்தா எனக்கு ஏன் வேலை வைக்க போறா?”

“சரி விடு நான் தோசை சுடறேன்” என்று அவன் சொன்னது தான்,

“அம்மாடி அம்மா, உங்கப்பா கிட்ட என்னை அடி வாங்க வைக்க ப்ளான் பண்றியா, போடா இங்க இருந்து” என்று சமையல் அறையில் இருந்து துரத்த. இவர்களின் விளையாட்டை பார்த்தவளுக்கு ராஜலக்ஷ்மியின் ஞாபகம். செல்ல அம்மா, செல்ல மகள், எல்லாம் மாறிவிட்டது!

அதற்குள் “மாமா” என்ற படி அவன் மேலேற ஓடி வந்த விகாஸை தூர நிறுத்தியவன், “மாமா குளிச்சிட்டு வர்றேன்” என்று சென்று விட்டான்.

அவன் குளித்து விட்டு வரும் போது, உணவு மேஜை மேல் ஒரு புறம் ஸ்ருஷ்டி அமர்ந்திருக்க, அவளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள் அங்கை. பக்கத்தில் இன்னொரு சேரில் விகாஸ் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான்.

அவர்களது பெரிய உணவு மேஜை, பதினாறு பேர் அமரக் கூடியது, தேக்கு மரத்திலானது, பல வருடங்கள் பழமையானது. ஆனாலும் புதிது போல பளபளக்கும், அப்படி அதனை வைத்திருப்பர் வாசுகியும் தில்லையும்.

ஒரு புறம் இவர்கள் அமர்ந்திருக்க, இன்னொரு புறம் சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் நாச்சியும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு வாசுகி பரிமாற, தில்லை உள்ளே தோசை வார்த்துக் கொண்டிருந்தார்.

“மாமா கம் சிட்” என்று விகாஸ் சொல்ல, அவனும் விகாஸ் பக்கத்தில் வந்து அமர, அமர்ந்தவுடனே “நான் பிக் க்ரேனி கூட படுத்துக்குவேன்” என்றவன் நாச்சியை பார்த்து கத்தி இதனை சொன்னான்.

கத்தும் அவனை “விக்கி கத்தாத, என் கூட தான் நீ படுக்கணும், பாட்டியை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது” என்று அங்கை அதட்ட,

“நோ அத்தை, அம்மா சொல்லி விட்டாங்க, நான் உங்களுக்கும் மாமாக்கும் நடுவுல படுக்க கூடாது. உங்க பெட் சின்னது, பேபிக்கு மட்டும் தான் இடமிருக்கும். நான் பாட்டி கூட தான் படுக்கணும்னு சொல்லியிருக்காங்க” என்று சத்தமாய் பேச,

அங்கே அப்படியே ஒரு அமைதி!

இன்னும் அங்கை வீட்டினருக்கு தெரியவே தெரியாது, அவர்கள் சேர்ந்து இருப்பது இல்லை என்று.

அங்கே பெரியவர்களுக்கு உண்மையில் மனம் கனத்து போனது, ஏதேனும் தவறு செய்கிறோமோ? என.

அங்கை விகாஸிடம் “விக்கி எங்க பெட் பெருசு, நான் மாத்தினது அம்மாக்கு தெரியாது. சோ நீ என்கூட தான் படுக்கணும்” என்று சொல்லி விட,

“ம்ம், அப்போ சரி, எனக்கு இந்த டைம் ஹெர்குலிஸ் கதை தான் வேணும்” என்று கேட்டான்.

“சொல்லிடலாம்” என்று பதில் அவனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாலும், பார்வை முழுக்க ஸ்ருஷ்டியின் மேல், அவள் உண்டு முடித்ததும் அவளுக்கு வாய் துடைத்து அவளை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“நீயும் சாப்பிடு அங்கை” என்ற தில்லையிடம்,

“இல்லை அத்தை, எனக்கு பசிக்கலை” என்று சொல்லி உணவு அறைக்கு பக்கவாட்டில் இருக்கும் கதவை திறந்து அங்கிருந்த தோட்டத்திற்கு செல்ல,

“இந்த டைம் அங்க போகாத, ஏதாவது பூச்சி இருக்க போகுது” என்று வாசுகி அதட்டினார்.

ஒன்றும் மறுத்து பேசமால் “சரி” என்று உடனே சொல்லி, “விக்கி நீ சாப்பிட்டு வா, அத்தை ரூம்ல இருக்கேன்” என்று மாடி ஏறி விட்டாள்.

முகத்தில் ஒரு தொய்வு, விகாஸ் இப்போது ராஜராஜனிடம் பேச்சுக் கொடுக்க, அவன் பொறுமையாய் பதில் சொல்லி நிமிர்ந்த போது, உணவு மேஜையே காலியாக இருந்தது. அப்பா, பெரியப்பா, பாட்டி, பெரியம்மா என்று ஒருவரையும் காணோம்.

அவன் விகாஸ் தில்லை மட்டும் இருந்தனர்! விகாஸ் உண்டு முடிக்க “நீ போ விக்கி, அத்தை கிட்ட போ” என்று தில்லை அனுப்ப அவனும் சென்று விட்டான்.

“பசிக்குதும்மா” என்று ராஜராஜன் சொல்ல அவனுக்கு பரிமாறிக் கண்டே அவரும் உண்டவர், அவன் உண்டு முடித்ததும் “நீ செய்யறது சரியில்லை ராஜா” என்றார்.

“என்னம்மா?” என்றான்.

“நீ இப்படி மில்லுக்கு போய் படுக்கறதுல, எனக்கு உடன் பாடு இல்லை” என்று பேசினார்.

“வேற என்ன செய்வாங்க? அவங்கப்பா கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டார்ன்னு அவ கட்டாயத்துல இங்க இருக்கா, அவளுக்கு என்னை பிடிக்காது. அப்போ மான ரோஷம் விட்டு நான் அவளோட பேசணுமா?” என்று முறைக்க,

“ஏன்? ஏன் பேசினா என்ன குறைஞ்சிடுவ நீ?” என்றார் கோபமாக.

“அவ தான் உன் வீட்டுக்கு வந்திருக்கா, நீ ஒன்னும் அவ வீட்டுக்கு போகலை. அப்பா அம்மா எல்லோரையும் விட்டு வந்திருக்கா, நீ பாட்டுக்கு கொஞ்சமும் கண்டுக்காம சுத்தற, நீ இப்படி செய், அப்படி செய்ன்னு நான் எதுவும் சொல்லப் போறது கிடையாது, ஆனா இதை சரி செய்ய வேண்டியது உன்னோட பொறுப்பு”

“மா, அவளுக்கு என்னை பிடிக்கலை”

“இருந்துட்டு போகட்டும், கல்யாணமானவங்க எல்லாம் பிடிச்சு பிடிச்சு வாழ்றாங்கன்னு நினைக்கறியா, ஒரு இருபது சதவிகிதம் பேர் அப்படி இருந்தாலே அதிகம். பாக்கி எல்லாம் ஒரு கட்டாயத்தின் பேர்ல, இல்லை பிள்ளைகளுக்காக, இல்லை சமுதாயத்துக்கு முன்ன தாங்க தாழ்ந்து போயிடக் கூடாதுன்றதுக்காக வாழறாங்க. இன்னும் எவ்வளவோ காரணம் சொல்லலாம்”

“அவங்களை எல்லாம் பிடிச்சு வைக்கறது காதல் இல்லை, ஒரு சகிப்பு தன்மை, இது தான் நிதர்சனம்! ஒழுங்கா சேர்ந்து வாழ்ந்து பிள்ளை குட்டிய பெத்துக்கர வழிய பாரு”

“அவளுக்கு உன்னை பிடிக்கலைன்னா போகுது, உனக்கு அவளை பிடிக்க வைடா, அப்போ அவ என்ன பண்ணினாலும் உனக்கு தப்பா தோணாது. எனக்கு இதுக்கு மேல சொல்லத் தெரியலை. நம்ம வாழ்க்கை நம்ம கைல, அதை நல்லா ஞாபகம் வெச்சிக்கோ” என்றவர்,

“இனி நீ மில்லுக்கு படுக்க போகக் கூடாது” என்று கட்டளையாய் சொல்ல, அவரை மீறி செல்ல மனம் இடம் கொடுக்காததால், அப்படியே அமர்ந்திருந்தான்.

“இதுல பால் இருக்கு” என்று பெரிய பாத்திரத்தையும் டம்பளர்களையும் கொடுத்து, “குடிச்சிட்டு படுங்க” என்றவர் கூடவே,

“அவளோட நீ படுக்கையில படுப்பியோ, இல்லை கீழ தனியா படுப்பியோ? அது உங்க வரைக்கும், ஆனா இனி உங்க விஷயம் வெளில வரக் கூடாது” என்று சொல்லி போக,

“மா” என்று கத்தினான்.

“என்னடா?” என்று பதிலுக்கு தில்லை அதட்ட,

“அப்போ கூட நான் தான் கீழ படுக்கணுமா? அவ படுக்க கூடாதா? என்று தீவிரமாய் சண்டையிட்டான்.

அவனின் அருகில் வேகமாக வந்தவர், சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்று தெரிந்த பின்,

“டேய், என் வாயை புடுங்காத, போடா மேல” என்று கத்த,

“தில்லை” என்ற தமிழ்செல்வனின் குரல் உரத்து ஒலிக்க,

“இதோ வர்றேங்க” என்று சொல்லி முகத்தை சாந்தமாய் வைத்துக் கொள்ள,

“மா, எப்படிம்மா இப்படி மாறுற” என்று ராஜராஜன் ஆச்சர்யப் பட்டான்.

“நான் மாறாதது உன் கிட்ட மட்டும் தான். என்னால உன்கிட்ட எதுவும் பேச முடியும், உன் மனைவிக்கும் நீ அப்படி ஒரு சுதந்திரத்தை தான் கொடுக்கணும்” என்று பேச,

கையில் இருந்த டம்பளரில் சிறிது பாலை ஊற்றியவன் “முதல்ல நீ கொஞ்சம் குடி” என்றான்.

அதற்குள் மீண்டும் தில்லை என்ற குரல் கேட்டது.

“டேய், அவருக்கு நான் இன்னும் படுக்கை தட்டி போடலைடா, தூக்கம் வருமா இருக்கும்” என்று போக எத்தனிக்க,

“குடி” என்று அவரை அதட்டியவன்,

“வருவாங்காப்பா” என்று அவன் அதட்டலாய் குரல் கொடுக்க, அதன் பிறகு ஏன் தமிழ்செல்வன் பேசப் போகிறார்.

அம்மா சென்றதும், “எங்கம்மா வேற பால்லாம் என்கிட்டே கிட்ட கொடுத்து, ஏதோ முதல் ராத்திரிக்கு அனுப்பற மாதிரி அனுப்புது, எல்லாம் என் நேரம், இதை எடுத்துட்டு போய் அவ கிட்ட குடுத்தா, என்னை பார்த்து சிரிக்க போறா” என்று நினைத்துக் கொண்டே சென்றான்.

ஆனால் அவள் சிரிக்கவேயில்லை.




ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
:love: :love: :love:

மல்லி ஹீரோ எல்லாம் தோசை specialists :D:D:D

விகாஸ் குட்டி நீ கலக்குடா........
உங்க மாமாக்கு இன்னும் இடமில்லை அங்கே....... இப்போ கொடுத்து தானே ஆகணும் உங்க அத்தை.......

தில்லை பையன் :LOL::LOL::LOL:
உனக்கு அவளை புடிக்க வைடா........ உன் மனைவிக்கும் அப்படி ஒரு சுதந்திரத்தை கொடுக்கணும் (y)(y)(y)
வீட்டுக்காரருக்கு இன்னுமா படுக்கை தட்டி போடணும் :oops:

ராஜராஜா :p:p:p போடா போடா விகாஸ் உனக்கு காத்திருப்பான்........ அத்தைகிட்ட படுத்தே ஆகணும்.......

**************
மல்லி @Admin அங்கயற்கண்ணி ஓர் அங்கயற்கரசி???
 
Last edited:
கரிஷ்மா இந்த highwayயை ஏன்மா முன்னாடியே போடலை.......
ஒரு பக்கம் மாமியார்.......
இன்னொரு பக்கம் நாத்தனார்.......
நடுவுல உங்களுக்கும்........

ஒரே கல்லில் 3 ???
கலெக்டர் சார் enjoy :LOL:
 
Last edited:
என்னுடைய மகளுக்கு நான் யார்? எல்லாம் உங்களின் முடிவா?” என்று நினைத்தவர்,

அவ அப்பாவோட பொண்டாட்டி :p
உங்க பேரன் மாதிரி ஒரு பையனும், உங்க பேத்தி மாதிரி ஒரு மருமகளும் இருந்தா, இப்படி தான் அலட்டிக்காம இருக்கணும்” என்று வியாக்கியானம் பேச,

ரொம்ப தெளிவு
ஆனா இதை சரி செய்ய வேண்டியது உன்னோட பொறுப்பு”

தாய் சொல்ல தட்டாத ராஜா
தில்லை” என்ற தமிழ்செல்வனின் குரல் உரத்து ஒலிக்க,

“இதோ வர்றேங்க” என்று சொல்லி முகத்தை சாந்தமாய் வைத்துக் கொள்ள,
இஸ்திரி வேற வேற வேற லெவல்
 
Top