Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 12 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் பன்னிரண்டு :

ராஜராஜன் மேலே சென்று பார்த்தபொழுது, அங்கையற்கண்ணி படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருக்க, முகம் அழுத பாவனையில் இருந்தது.

ராஜராஜனிற்கு பார்க்கவே பாவமாக இருந்தது. அவனின் மனதில் அப்போது உதித்த எண்ணம் இது தான், “என்னை பிடிக்கலை, என்னோட வாழ முடியாதுன்னா, முடியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே. எதுக்கு இப்படி வந்து இங்க உட்கார்ந்து இருக்கணும்”

சில சமயம் அவளோடு வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று மனம் விழைந்திருந்தாலும், இந்த இரண்டு வருடத்தில் ஒரு சலிப்பு வந்திருந்தது. அதுவும் அவனை வீட்டின் வெளியில் படுக்க வைத்தது “ச்சே, இவ எனக்கு வேண்டாம்” என்றே தோன்ற வைத்திருந்தது. அதனால் தான் அன்பழகனிடம் அப்படி சொன்னான். அவர் என்னடா வென்றால் இவளை வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு போய்விட்டார்.

“இவர்களுக்கு நான் பிணையா?” என்ற கோபம் இப்போது சற்று அதிகமாய் தான் இருந்தது. முன்பு பலமுறை பேச முயற்சித்து இருந்தான், ஆனால் அங்கையற்கண்ணி இடம் கொடுக்கவில்லை.

ஆனால் அவள் வீட்டிற்கு வந்த பிறகு அவன் பேச முயற்சிக்கவில்லை. வேண்டுமென்றால் வரட்டும் என்று நினைத்திருக்க அவள் பேசுவதாய் காணோம்.

இதோ இப்போது அம்மாவின் கட்டாயத்தின் பேரில் வந்து விட்டான். அவள் பேசுகிறாளோ இல்லையோ தான் இன்று பேசிவிட வேண்டும். “என்னோடு வாழ விருப்பமிருந்தால் இரு, இல்லை கிளம்பிக் கொண்டே இரு” என்பது போல.

அவளிடம் பார்வையை நிலைக்க விட்டுக் கொண்டே தான் இந்த யோசனைகள் எல்லாம். ஆனால் அவளின் கவனம் இவனிடம் திரும்பவில்லை. பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது. ஸ்ருஷ்டி அவளின் நெஞ்சத்தில் சுகமாய் மஞ்சம் கொண்டிருந்தாள். குழந்தைக்கு பாதி உறங்கியும் உறங்காத நிலை.

“அம்மா பால் குடுத்து விட்டாங்க” என்று சொல்ல, அவளிடம் ஒரு திடுக்கிடல் இவனை அங்கே எதிர்பார்க்கவில்லை போல.

அதற்குள் அவளின் பக்கத்தில் படுத்திருந்த விகாஸ், “ஷ்” என்று வாயில் விரல் வைத்தவன், “பாப்பா தூங்கறா, அத்தைக்கு மூட் சரியில்லை” என்று ரகசியம் பேசினான்.

“பாப்பாக்கு பால் குடிக்க வெச்சு, தூங்க வைக்கலாம்” என பதில் ரகசியம் விகாஸ் போலவே பேச, அங்கையை பார்த்தான் விகாஸ்.

“நான் நகர்ந்தா இவ எழுந்திடுவா விக்கி, அப்புறம் அழுவா, மாமாவை இவளோட சிப்பர்ல ஊத்திக் கொடுக்க சொல்லு” என்று சொல்ல,

“எங்க இருக்குன்னு கேளு” என்று இவன் சொல்ல, இப்படியாக விக்கி நடுவில் நிற்க, அவள் சொல்ல சொல்ல இவன் செய்து கொடுத்தான்.

ஸ்ருஷ்டி பால் குடித்ததும் நன்கு உறங்கிவிட, விகாஸிற்கு பால் விட்டு கொடுத்தவன், அங்கைக்கும் எடுத்தவன், அவளிடம் நீட்ட, வாங்கிக் கொண்டவள் குழந்தை நெஞ்சில் இருக்க மெதுவாய் குடிக்க ஆரம்பித்தாள்.

“பாப்பா அசைஞ்சா, மேல சிந்திடும், பால் வேற சூடா இருக்கு” என்று சொல்லியவன் அசைவு கொடுக்காமல் ஸ்ருஷ்டியை தூக்கினான். குழந்தையை அசையாமல் தூக்கியவனால், விரல் அவள் மீது படாமல் தூக்க முடியவில்லை.

சில நொடி என்றாலும் பட்ட இடம் விவகாரமானது தானே!

அங்கையற்கண்ணி முறைக்க, “சாரி, தெரியாம பட்டுடுச்சு” என்று உடனே மன்னிப்பு கேட்டான்.

அங்கைக்கு ஏற்கனவே மனது சரியில்லை. அதனை அவளுக்கு சொல்லவும் ஆள் கிடையாது. அவளின் கோபத்தை காண்பிக்கவும் ஆள் கிடையாது. இப்போது எல்லாம் சரியாய் ராஜராஜனை நோக்கி திரும்பியது. இந்த ஒரு மாதமாய் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டு, இப்போது திடீரென்று ரூமில் வந்து நின்றது அதிர்ச்சியாயும் இருந்தது. “என்னோட ரூம் ஷேர் பண்றதுக்கு, என்னோட பெர்மிஷன் வேண்டாமா? இது இவன் வீடா இருந்தா கூட கேட்க வேண்டாமா?” என்பது தான். அவள் வளர்ந்த, பார்த்த சூழல்கள், அவளை அப்படி தான் யோசிக்க வைத்தன.

ராஜராஜனை நோக்கி வார்த்தையை விட்டாள், “ஏன் தெரிஞ்சு தான் தொட்டு பாரேன்” என்று. அங்கை சொன்ன விதம் “என்னை நீ தொட்டு விடுவாயா?” என்று அறைகூவல் விடுவது போல தோன்ற,

அது ராஜராஜனை சரியாய் சீண்ட, “ஏன் தொட மாட்டேனா?” என்று அவனும் எகிறினான்.

குழந்தையிடம் அசைவு தெரியவும், அவளை படுக்கையில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தவன், அவளுக்கு அணைவாய் அவளை சுற்றி தலையணை வைத்தான். பின் விகாஸிடம் தன் மொபைல் கொடுக்க, அவன் அதில் கேம் விளையாட ஆரம்பிக்க, இப்போது தெளிவாய் திரும்பி அவளை பார்த்து முறைத்தான்.

பின்பு நிதானமாய் “தொட்டு காண்பிக்கட்டுமா?” என்று சொல்ல வேறு செய்தான்.

அங்கையும் சற்றும் அசராமல், “ம்ம், காண்பி” என்று அவளும் வாகாய் சாய்ந்து அமர்ந்து, கைகளை கட்டிக் கொண்டவள், தோரனையை பேச..

“குழந்தைங்க இருக்காங்கன்னு பார்க்கறேன். எனக்கென்னா உன்னை பார்த்து பயமா?” என்றான்.

“பயம் இல்லைன்னா ஒரு மாசம் என்னை பார்த்து எதுக்கு ஓடின”

“என்ன நான் ஓடினேனா? என்ன வாய் நீளுது?” இருந்த கோபத்தில், “அதெல்லாம் உங்கம்மா பண்ற வேலை” என்று வேறு சொல்லிவிட்டான்.

அப்படியே ஒரு ஆங்காரத்தில் எழுந்தவள் “எங்கம்மா பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசின என்ன பண்ணுவேன்னு கூட எனக்கு தெரியாது” என்று அருகில் வந்து அடிப்பது போல பேசினாள். கூடவே கண்களில் கரகரவென்று நீர் இறங்க, முகமும் சிவந்து விட, வார்த்தைகளும் முடிக்கும் போது தடுமாறி விட,

அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டாள் என்று புரிய, “பேசுனா என்ன பண்ணுவ?” என்று கேட்க வந்தவன் அமைதியாய் ஒரு தலையணையை எடுத்து கீழே போட்டு படுத்துக் கொண்டான்.

விகாஸ் எதுவும் கவனிக்காமல் மொபலில் கவனமாய் இருக்க, பேசிவிட்டு இவன் படுத்துக் கொள்வானா? அப்படியே அவனை எட்டி ஒரு உதைவிடும் ஆத்திரம் பொங்கியது அங்கைக்கு.

குழந்தைகள் இல்லாவிட்டால் திரும்ப அவன் அடித்தாலும் பரவாயில்லை என்று ஒரு உதை விட்டிருப்பாள்.

அவனை முறைத்து பார்த்து நின்றாள். “போய் தூங்கு” என்று அமைதியாய் சொல்ல முற்பட்டான்.

“தூங்கறதா, என் வாழ்க்கையே தூங்கிட்டு தான் இருக்கு. என்ன பண்றேன்? எதுக்கு இந்த வீட்ல இருக்கேன்? எதுவுமே எனக்கு தெரியலை?” என்றாள் ஆத்திரமாய்.

அங்கையின் அந்த ஆத்திரம், ராஜராஜன் அமைதியாய் இருக்க நினைத்தாலும், அவனை உசுப்பிவிட, “யார் கூப்பிட்டா உன்னை இங்க? நீயா தானே இங்க வந்த” என்று அவன் சொல்லிவிட..

அதற்கு மேல தாளவே முடியவில்லை, வேகமாய் அங்கிருந்த பால் கனி கதவு திறந்தவள், அதனை வெளிப்புறம் சாத்தி, அங்கே சென்று ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டவள், தேம்பி தேம்பி அழ துவங்கினாள். என்ன முயன்றும் சத்தம் அடங்கவேயில்லை. அவளை மீறி தான் சத்தம் வந்தது. நேர் கீழே இருந்த சுவாமிநாதனின் அறையினில் அது நன்கு கேட்க..

வாசுகியும் சுவாமிநாதனும் வெளியே அவள் இருந்த பக்கம் வந்து பார்க்க, அவளின் அழுகை சத்தம் இன்னும் நன்கு கேட்டது.

அவர்கள் என்னவோ ஏதோ வென்று பதறி நாச்சியை எழுப்ப, அவரும் மேலே ஏறி வர, தில்லை அப்போது தான் உறங்க செல்ல இருந்தவர் அவரும் இவர்களோடு வந்தார்.

இவர்களின் அறை கதவு திறந்து தான் இருந்தது.

அங்கே பார்த்தால் ஸ்ருஷ்டி நல்ல உறக்கத்தில் இருக்க, விகாஸ் படுக்கையில் அமர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருக்க, இவன் தரையில் படுத்திருக்க, முதலில் உள்ளே நுழைந்தார் தில்லை.
 
:love::love::love:

என்னங்கடா ரெண்டு பேரும் நேரே பேசமாட்டிங்களா??? mediator விகாஸ் குட்டியா???
அச்சோ என்னடா பாலெல்லாம் கொடுத்துவிட்டால் இப்படி ஒப்பாரி வைக்கிறா அங்கை........
பாட்டி அம்மா அத்தை எல்லோரும் வந்தாச்சு........

ஒரு மொபைல் குடுத்து விகாஸை mute பண்ணிட்டியே RR........

படிச்சி படிச்சி சொல்லிஅனுப்புனாங்களே........ அதே மாதிரி கீழே படுத்துட்டான்.......
என்ன சொல்ல போறாங்க watch woman :unsure::unsure::unsure:
 
Last edited:
ஸ்ருஷ்டி நீ கொடுத்து வச்சவமா...
மாமன் தூங்க வேண்டிய இடத்துல நீ தூங்கிட்டு இருக்க... ;)

குழந்தைங்கனாள அவன் அடி வாங்காமல் தப்பிச்சான்...
 
Last edited:
தூங்குறதா? என் வாழ்க்கையே தூங்கிட்டு தான் இருக்கு....... என்ன பண்ணுறேன் அதுக்கு இந்த வீட்டுல இருக்கேன் தெரியல :cry::cry::cry:

டேய் ராஜராஜா ரொம்ப பேசுற நீ.......
அவளா சும்மா இருந்தாலும் நீ இருக்க விடமாட்டா போல........
 
Last edited:
அவன் பால் கொண்டு போகிற வேகத்தை பார்த்து....
பிரியாணி கிடைக்கும்னு பாத்தா மல்லி இப்படி பழைய சோத்தை போட்டு கவுத்துட்டாங்களே.... :p :p :p
 
Last edited:

Advertisement

Top