Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 5 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் ஐந்து :

ஆம்! திகைத்து தான் நின்றான். போலிஸ் அதனுடன் பிரச்சனைகள் எல்லாம் அவன் பார்த்ததில்லை. அவனிற்கும் வந்ததில்லை. அவன் பெரிய ஆள் தான். ஆனால் அவனின் ஊருக்குள் மட்டுமே. அவனின் கிராம எல்லைக்குள் வரும் போலிஸ் ஸ்டேஷனை தெரியும். அங்கிருக்கும் ஆட்களையும் தெரியும். அப்போதும் அங்கே கூட பிரச்சனை என்றால் பெரியப்பா தான் செல்வார். இவனுக்கு பரிட்சயமில்லை.

ராஜராஜனின் முகத்தினில் திகைப்பை பார்க்கவும், “ஒன்னும் பயமில்லை, இவங்களும் நம்மை மாதிரி மனுஷங்க தான். ஆனா பல சமயம் தப்பான ஆளுங்க கிட்ட சலாம் போட்டு, சரியான ஆளுங்க கிட்ட கெத்து காட்டுவாங்க” என்று அவர்களின் முன்னமே சொல்ல,

அது அந்த காவலர்களை சரியாய் பதம் பார்த்தது. அதுவரை எகிறிக் கொண்டிருந்தவர்கள் சற்று நிதானித்தனர்.

அந்த ஊர் முடிந்து, இவர்களின் கிராமம் செல்லும் ஹைவேய்ஸ் ஆரம்பித்து ஒரு இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

பக்கத்தில் ஒரு கார் கண்ணாடி உடைந்து இருக்க, அங்கே இரண்டு பேர் நின்றிருக்க, அதுவரை ராஜராஜனின் கவனம் கூட அதில் செல்லவில்லை. “பார்த்தீங்களா சார் உங்க கிட்டயே எவ்வளவு திமிரா பேசறான்னு” என்று என்று அதில் இருந்த ஒருவன் சொல்ல,

“மரியாதையில்லாம பேசின நான் வாடா போடான்னு பேசுவேன்” என்று அங்கை எகிற, அப்போது தான் அவர்களின் புறம் பார்வையை திருப்பிய ராஜராஜன் , யார் என்று பார்த்தான், முகமும் கோபத்தை தத்தெடுத்தது.

அங்கிருந்தது ஆத்மனின் மகன், கூட இன்னும் ஒருவன்!

“என்னமா நீ?” என்று காவலர் இப்போது பேச,

“சர் என்ன விஷயம்?” என்று ராஜராஜன் முன்னே சென்றான்.

“நீங்க யாரு?”

“நான் இவளோட புருஷன்” என்று சொல்ல,

“இந்தம்மா கார் கண்ணாடியை உடைச்சு, கார்ல கல்லை கொண்டு கிறுக்கி இருக்கு, நாங்க பார்த்தோம்” என்றனர்.

“ஏதாவது இவங்க வம்பு பண்ணி இருப்பாங்க” என்று ராஜராஜன் சொல்ல,

“இல்லை, நாங்க ஒன்னும் பண்ணலை” என்று ஆத்மனின் மகன் திலகன் சொல்ல,

“ரோட்ல இத்தனை கார் போகுது, எல்லோர் காரையுமா நிறுத்தி உடைச்சாங்க” என்று ராஜராஜன் திரும்ப பேச,

“நாங்க இவளுக்கு..” என்று ஆரம்பித்த திலகன்,

“என்னடா சொன்ன?” என்ற ராஜராஜனின் கர்ஜனையில்

“இவங்களுக்கு உதவி பண்ண நிறுத்தினோம்” என்று மாற்றினான்.

“நீங்க எல்லோரும் ஸ்டேஷன் வாங்க” என்று அவர்கள் கூப்பிட,

அவர்கள் கண்ணாடி உடைந்த காரில் ஏற, அவள் அவளின் ஆக்டிவாவை மீண்டும் உதைக்க ஆரம்பித்தாள் ஸ்டார்ட் ஆகாததினால்.

அவளின் அருகில் வந்த ராஜராஜன், “இந்த வண்டியை பூட்டிட்டு என்னோட வா” என்று சொல்லவும்,

“அதெல்லாம் வர முடியாது, நான் என் வண்டில வர்றேன், நீங்க உங்க வண்டில வாங்க”

“ஒன்னு நீ என் வண்டில வா, இல்லை நான் உன் வண்டில வர்றேன்” என்று பிரச்னையை இலகுவாய் கையாண்டான் ராஜராஜன், சொன்ன நேரம் அவளின் ஆக்டிவா ஸ்டார்ட் ஆகிவிட,

அவனின் பைக்கை ஒரு ஓரமாய் நிறுத்தி பூட்டி, அவளிடம் வண்டியை “நான் ஒட்டவா” என்று கேட்க,

அவள் வண்டியில் அமர்ந்து இருந்தவள் அசையாமல் இருக்க, அவன் அதன் பிறகு யோசிக்கவில்லை, பின்னே அமர்ந்தான். புது வித அனுபவம், அவன் நன்றாய் வண்டி ஓட்ட ஆரம்பித்ததில் இருந்து காரோ இரு சக்கர வாகனமோ அவன் இருந்தால் அவன் தான் ஒட்டுவான். அவனுக்கு யார் பின்னும் அமர்ந்த ஞாபகம் இல்லை. இப்போது ஒரு பெண்ணும் பின்புறம் அதுவும் மனைவி என்ற ஒருத்தி, என்ன படாமல் அமர்வது சிரமமாய் இருந்தது. இடித்துக் கொண்டு அமரவும் மனதிற்கு ஒப்பவில்லை. ஒரு மாதிரி அமர்ந்து பார்க்க,

அப்போதும் அவள் வண்டியை கிளப்பாமல் நின்றாள்.

“இப்போ என்ன?” என்றவனிடம்,

“வழி தெரியாது சொல்லுங்க” என்று முறைப்பாய் கேட்க,

ராஜராஜனிற்கு சிரிப்பு வந்து விட சிரித்து விட்டான். சப்தமானதொரு சிரிப்பு. அதை பார்த்திருந்த திலகனிற்கு அப்படி ஒரு ஆக்ரோஷத்தை கொடுத்தது. உடனே ஆத்மனிற்கு அழைத்து விட்டான்.

பின் ராஜராஜன் வழி சொல்ல, அவளோ மிதமான வேகத்தில் சென்றாள். அவளின் பின்னே திலகனின் கார் வர, அதனின் பின்னே ஹைவே பேட்ரல் வர,

“கொஞ்சம் வேகமா போகலாமே” என்றவனிடம்

“அவனுங்க மெதுவா வரட்டும், என்ன அவசரம்? என்னை ஜீப்ல ஏற சொல்றானுங்க, நான் என்ன கொலையா பண்ணினேன்” என்று திட்டி கொண்டே வந்தாள்.

“என்ன பிரச்சனை?” என்று சொல்ல..

அப்படியே அவள் வண்டியை நிறுத்தி அவனை பார்த்து திரும்பி “எல்லாம் உங்களால, உங்க வீடுனால” என்று கோபமாய் பேசினாள்.

பிரச்சனையின் நுனியை பிடித்தான், அவளின் அம்மாவை திலகன் பேசியிருக்கக் கூடும் என்று.

அதற்குள் “ஏன் நிறுத்தினீங்க?” என்று அங்கிருந்த காவலர் கத்த,

“வண்டி நின்னுடுச்சு, என்னன்னு பார்க்கறோம்” என்று குரல் கொடுத்த ராஜராஜன், இறங்கு என்று அவளிடம் ஸ்திரமாய் சொல்ல,

முறைத்துக் கொண்டே இறங்கினாள், பின் வண்டியை இயக்கியவன், அவனே ஒட்டுமிடம் அமர்ந்து, “நம்ம சண்டை அப்புறம், ரோட்ல எல்லோருக்கும் காட்சி பொருள் ஆக வேண்டாம், உட்காரு” என்று அதட்ட அமர்ந்து கொண்டாள்.

பின் அவன் போலிஸ் ஸ்டேஷன் நோக்கி வேகமெடுக்க, எல்லோர் வண்டியும் பின் தொடர, ஸ்டேஷன் வாசலில் வண்டியை நிறுத்தவும், அங்கு வாசலில் நின்றிருந்த காவலர், இவனை பார்த்ததும் வேகமாய் அருகில் வந்தவர் “தம்பி என்ன இங்க வந்திருக்கீங்க? அதுவும் நம்ம பொண்ணோட” என்று பேசினார், அவனின் ஊர்காரர். அவர் அங்கிருப்பதே அவனுக்கு ஞாபகமில்லை.

“ஒரு சின்ன பிரச்சனைண்ணா கார் கண்ணாடியை கோபத்துல உடைச்சிட்டா, அது பிரச்சனை ஆகிடுச்சு”

“அதுக்கு எதுக்கு பொண்ணை கூட்டிட்டு வந்தீங்க”

“இவ உடைச்சதை ஹைவே பேட்ரல் பார்த்துட்டாங்க”

“சரி, நீங்க உள்ள போங்க, நான் சமயம் பார்த்து ஐயா கிட்ட சொல்றேன் நம்ம ஆளுங்கன்னு” என்று அவர் சொல்லும் போதே, வேகமாய் ஆத்மனின் கார் வந்து நின்றது.

அதிலிருந்து ஆத்மன் இறங்க, அதுவரையிலும் கூட அசால்டாய் நின்ற ராஜராஜனிற்கு பயம் வந்தது. ஆம்! பயம் தான் வந்தது. அவனோ இல்லை வீட்டினில் யாரோ வேறு ஆண்மக்கள் இருந்திருந்தால் அவனுக்கு பயமில்லை. ஆனால் அங்கை இருக்கவும் பயம், அவளை எதிலும் சிக்க வைப்பானோ என, எதுவாகினும் பார்த்துக் கொள்ளலாம் என்பது வேறு.

ஆனால் பெண்பிள்ளை எதிலும் பேர் அடிபடுவதில் அவனுக்கு ஏற்பு இல்லை. அப்படி தான் அவன் வளர்க்கப் பட்டான்.

ஆனால் அங்கையற்கண்ணி அப்படி அல்லவே, அவள் வேறு மாதிரி! பெண்பிள்ளை என்ற வார்த்தையை கொண்டு அடக்கப் பட்டால், அடுத்த நிமிடம் கிளம்பிவிடுவாள், “ஏன் பசங்க தான் செய்யணுமா? நாங்க செய்யக் கூடாதா? ஏன் செய்யக் கூடாது?” என்பதாக. அவளுக்கும் தெரியும் சில விஷயங்கள் தவிர்த்தல் நலம் என்று. அதை செய்ய மாட்டாள் தான், ஆனாலும் விட்டுக் கொடுக்காமல் வேண்டுமென்றே பேசி நிற்பாள்.

“தம்பி ஆத்மன் ஐயா வேற வந்திருக்காரு” என அவனின் ஊர் காவலர் சொல்ல,

“அவர் பையன் வந்த கார் கண்ணாடியை தான் உடைச்சா”

“ப்ச் பிரச்சனை பெருசாகுமே” என்று சொல்ல,

“ஆத்மன்” என்ற பேர் போதுமாக இருந்தது, அங்கையின் கோபத்தை கிளப்ப,

ராஜராஜனிற்கு ஏற்கனவே மனதில் பயம், அது அவளுக்கு தெரிந்தால் தானே, “இது என்னோட பிரச்சனை, நான் பார்க்கறேன், நீங்க பேசக் கூடாது ராஜன்” என்று கண்டிப்பாய் சொல்ல,

“அட நம்மளே முழிச்சிட்டு நிக்கறோம் என்ன செய்யன்னு? இவ வேற.. பெரியப்பா கிட்ட சொல்வோமா? வேண்டாமா?” என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அந்த காவலருக்கு அப்படி எந்த யோசனையும் இல்லை போல, தனியாய் போனவர் சுவாமிநாதனுக்கு அழைத்து சொல்லி விட்டார்.

“அட, சின்ன பையன் மாதிரி உங்கப்பாவை கூட்டிட்டு வந்துட்டியா? இதுவும் நல்லதுக்கு தான். எனக்கு இவரை பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா ஒரு எண்ணம். இப்படின்னு தெரிஞ்சிருஞ்சா தேடி வந்து உன் கார் கதவை உடைச்சு உங்கப்பாவை முன்னமே பார்த்திருப்பேனே” என்றாள் தீவிரமாக.
 
:love::love::love:

ராஜராஜனை விட அங்கை தான் ஆத்மன் மேல செம கடுப்புல இருக்கா.........
ரொம்ப வாங்கியிருப்ப போலவே அந்த குரூப் கிட்ட.......

இடிக்கிற மாதிரி வந்தானுங்களா???
அந்த கார் கண்ணாடியை உடைச்சு கோடு போட்டா பார்த்தியா ???

விடாதமா அங்கை........ போலீஸ் முன்னாடியே கேளு........
உங்க மூத்த மாமா வேற வரப்போறார்.......
என்னவாகுமோ??? பெரியப்பாவை உன் வீட்டுக்காரன் சமாளிப்பான்.......


நான் இவளோட புருஷன் (y)
பொண்டாட்டி வழி தெரியலைனாலும் வண்டி ஓட்டுறா நீ பின்னாடி உக்கார்ந்து ரசிக்கிற.......
perfect வீட்டுக்காரன் நீ தான்......

பெரியப்பா ரெண்டு போரையும் இங்கே பார்த்து சாமியாடாமல் இருக்கணுமே.......
 
Last edited:
கட்ட நினைச்ச பொண்ணு தான் விட்டுட்டு போச்சே அந்த அசிங்கம் பத்தாதுன்னு அதை வச்சே பழி வாங்குறேன்னு நீ பட்ட அவமானத்தை மைக் போட்டு சொல்லாத குறையா சொல்லிட்டு திரிஞ்சதும் இல்லாம..
அவ பெத்த பொண்ணுகிட்டயும் அசிங்கப்படனும்னு விதி போல
 
Last edited:
நன்றி மல்லி... ?

@Joher 3 comment delete பண்ணுங்க..
எனக்கு first page ல இடம் கொடுங்க

Thank you joher☺️

போற வழி தான் தெரியல..
ஆனா பேசுற முறை, கண்ணாடியை உடைக்கிறதுலாம் நல்லா தெரிஞ்சிருக்கு...
கமான் அங்கை...
உன் கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்..
.
 
Last edited:
Top