Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 6

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் ஆறு :

ஆத்மன் எந்த ஒரு பிரதிபலிப்பும் காண்பிக்கவில்லை. “போடா பொறுக்கி” என்ற வார்த்தை அவரின் லகுதன்மையை காணாமல் போக செய்திருந்தது.

“என்ன பிரச்சனை?” என்று அர்விந்த் அங்கையை கேட்கவில்லை, திலகனை பார்த்து தான் கேட்டான்.

“இவங்க வண்டி வழில நின்னுட்டு இருந்தது. ஸ்டார்ட் ஆகலை போல, அவங்களுக்கு ஹெல்ப் பண்ண நிறுத்தினோம்”

“யார்ன்னு கேட்டோம், அவங்க இருக்கிற ஊர் சொன்னாங்க. அந்த ஊர் எங்களுக்கு ஆகாது. அப்போ யார் வீடுன்னு கேட்டோம், அவங்க சொன்னாங்க”

“அப்போ யாருன்னு கேட்டோம், அப்போ சொன்னங்க”

“அவங்க பொண்ணான்னு கேட்டோம், பிரச்சனையாகிடிச்சு” என்று சொல்ல

இப்படி நிறுத்தி நிறுத்தி திலகன் பேச அர்விந்திற்கு புரியவில்லை!

“என்ன அவங்க? யாரு பொண்ணு? எனக்கு புரியலை?” என்றான். அங்கை தலையிடவே இல்லை. பார்த்து தான் நின்றாள்.

“அவங்க அம்மா அப்பா பேர் சொன்னாங்க, ஓடிப்போனவ பொண்ணா சொன்னோம்” என்று சொல்லிவிட்டான்.

அங்கையின் முகம் அவ்வளவு கடுமையாய் மாறியது. “அவன் பொறுக்கி மாதிரி பேசறான். அதனால அவன் கண்ணாடியை உடைச்சேன். போடா பொறுக்கின்னு எழுதினேன், என்ன தமிழ் தெரியாது அதனால அதை இங்கிலீஷ்ல எழுதினேன்”

“திரும்ப அந்த வார்த்தையை சொன்னான்னா அவனையே அடிப்பேன்” என்று நிறுத்தி நிதானமாய் சொல்ல,

“ரொம்ப பேசற பொண்ணு நீ” என்றார் ஆத்மன். அவரின் முகத்தினில் அப்படி ஒரு கோபம். “என் மகனை நீ அடிப்பாயா இதை சொல்வதற்கு என்ன தைரியம் உனக்கு” என்று பார்வை கேட்டதோ?

“எங்கம்மாவை யார் பேசினாலும் அப்படி தான் நான் பேசுவேன்”

“அர்விந்த் என்ன?” என்று புரியாமல் பார்க்க,

“என் அம்மா, அப்பா, காதல் கல்யாணம். காதல் சொன்னப்போ வீட்ல ஒத்துக்கலை. பொண்ணு கேட்ட எங்கப்பாவை அடிச்சு விரட்டிட்டாங்க. அப்போ தான் எங்கப்பா மிலிடரி சேர்ந்தார்”

“எங்கம்மாவோட சம்மதம் இல்லாம இவரோட கல்யாணம் நிச்சயம் பண்ணினாங்க” என்று ஆத்மனை காண்பித்தவள், “கல்யாணம் அப்போ எங்கம்மா மனசை மாத்திக்க முடியாம சூசைட் அட்டம்ப்ட் பண்ணிடாங்க. அப்போ தான் எங்கப்பா மூணு வருஷம் கழிச்சு வந்திருக்கார்”

“எங்கம்மாவை சாக பார்த்ததும் கூட்டிட்டு போயிட்டார், இது தான் நடந்தது. எங்கப்பா தான் கூட்டிட்டி போனார். எங்கம்மா ஒன்னும் ஓடிப் போகலை. சாக பார்த்ததும் அந்த சமயம் ஒன்னும் ஓடலை. இல்லை சொல்லி கூட்டிட்டு போற தைரியம் இல்லாதவங்க கிடையாது”

“பாகிஸ்தான் பார்டர்ல கூட எங்கப்பா திரும்பி ஓட மாட்டார்டா. எங்கப்பா ஒரு மேஜர் ஜெனரல், அதோட மரியாதை கூட இவங்களுக்கு தெரியுமா தெரியலை. இவங்க எப்போவோ நடந்ததுக்கு இன்னும் ஓடி போனவ சொல்வாங்களா? காதலிக்கறது அவ்வளவு தப்பா என்ன?”

“அதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இந்த பெரிய மனுஷன் ஒரு கல்யாணம் பண்ணி, மூணு குழந்தை பெத்த பிறகும், எங்கம்மாவை இவங்க பேசுவாங்களா? இனி என்னோட அம்மாவை இவங்க பேசக் கூடாது. பேசினா விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை” என்று ஆவேசமாய் பேச,

“என்ன பண்ணுவ பொண்ணு?” என்றார் அலட்சியமாய் ஆத்மன்.

“என்ன வேணா பண்ணுவேன்? எங்கப்பா எங்கண்ணா எல்லாம் நீதி நேர்மை நியாயம், இதுல கொஞ்சமும் பிசக மாட்டாங்க. இன்னும் எங்க தாத்தா வீடு பத்தி எனக்கு ஒன்னுமே தெரியலை. ஆனா அவங்களுக்கு நீங்க செஞ்சதுக்கு பொறுத்து தான் போயிட்டாங்க. அவங்களும் நல்லவங்க தான் போல”

“ஆனா நான் அப்படி கிடையாது. எதிராளி எப்படியோ அப்படி தான் நான். நீங்க நல்லவங்கன்னா நாங்க ரொம்ப நல்லவங்க, நீங்க கெட்டவங்கன்னா நான் ரொம்ப கெட்டவ தான்”

“ம்ம், செம டைலாக்” என்றார் ஆத்மன் இன்னும் அலட்சியமாய் நீயெல்லாம் ஒரு ஆளா என்பது போல.

“பொண்ணு தானே என்ன செய்ய முடியும் இவளாலன்னு நினைக்க வேண்டாம், உங்க வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்கன்னு நினைக்கறேன், இது நாள் வரை எப்படியோ எங்கம்மாவை பத்தி ஒரு வார்த்தை இந்த மாதிரி வந்தது, உங்க வீட்டு பொண்ணுங்களை பத்தி உங்க மனைவியை பத்தி போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன்” என்று பேச,

“என்ன?” என்று ஆத்மன் ஆவேசமாய் முன் வர,

அதே நொடி “தப்பு அங்கை” என்று ராஜராஜன் அவளின் முன் வந்தான் ஆத்மனை ஒரு பார்வை பார்த்தபடி.

“இவங்க வீடு சொன்னா வலிக்குது. அப்போ எங்கம்மாவை சொல்லலாமா” என்று ராஜராஜனை பார்த்து கேட்கும் போது கண்களில் நீர் வந்து விட்டது.

அதுவரை கையை பிடித்து கூட இராத ராஜராஜன் அவளின் கையை பிடித்து “அவங்க தப்பு பண்ணினா நாமளும் பண்ணனும் இருக்கா என்ன?” என்று ஆறுதலாய் சொல்ல,

இதுவரை ஆத்மனை பேசிக் கொண்டிருந்தவள் “ஓஹ், நீங்கல்லாம் இவ்வளவு நல்லவங்களா இருக்குறதுனால தான் அவங்களுக்கு தைரியம் ஆகிடுச்சு. அப்படி என்ன பொறுத்துப் போகணும்னு”

சுவாமிநாதன் புறம் திரும்பியவள் “உங்க கூட பிறந்த தங்கை தானே, யாராவது ஒரு பொண்ணை பேசினாலே நானெல்லாம் முன்ன போய் நிற்பேன். எப்படி பேசலாம்னு கேட்பேன்? அந்த மாதிரி ஒரு உணர்வெல்லாம் உங்களுக்கு வராதா?” என்று அத்தனை பேர் முன்னும் கேட்டு விட,

கேட்கும் போதே கண்களில் நீரும் வந்து விட, அப்போதும் அது அழுகை கிடையாது, ஒரு அடக்கப் பட்ட ஆவேசம் தான்.

“சர் கிட்ட சொல்லிட்டு கிளம்பு, எதுன்னாலும் பார்த்துக்கலாம்” என்றான் ராஜராஜன்.

அங்கை தன்னை சமன் செய்யவும், “சொல்லிட்டு கிளம்பு” என்றான் மீண்டும். என்னவோ இவ்வளவு பேச்சுக்கள் தேவையில்லை என்பது அவனின் எண்ணம்.

“தேங்க்ஸ் ஃபார் கமிங் அர்விந்த் சர்” என்றாள் மரியாதை நிமித்தம்.

“நீங்க போங்க” என்று அவளிடம் சொன்னவன் “கூட்டிட்டு போங்க” என்று ராஜராஜனிடமும் சொல்ல,

“நான் இருக்கேன் நீ கூட்டிட்டு போ” என்றார் சுவாமிநாதனும் ராஜராஜனிடம் முகம் இருகியவராய். அவர்கள் சென்றதுமே அங்கே பெரிய களேபாரம் ஆகியது.

“என்னடா வீட்டுக்குள்ள புகுந்து இத்தனை வருஷமா இருந்துட்டு, பொண்ணை விட்டு பேச வைக்கறீங்களா. அதுவும் எங்க வீட்டு பொண்ணை போஸ்டர் அடிச்சு ஒட்டுவாளா. என்ன பண்றேன்னு பாருங்கடா” என்று ஆத்மன் ஆக்ரோஷமாய் பேச

“ஷ்” என்று நடுவில் வந்த அர்விந்த், “அவங்க வீட்டு பொண்ணுங்களை நீங்க பேசலைன்னா ஏன் பிரச்சனை வரப் போகுது” என்றான்.

“என்ன டி எஸ் பீ உங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு சப்போர்ட் பண்றீங்களா?” என

“தெரிஞ்சவங்க, சப்போர்ட் பண்றாங்கன்னு வந்துடக் கூடாதுன்னு தான் பொறுமையா இருக்கேன், பொண்ணுங்களை மனரீதியா உளைச்சல் கொடுக்கறது கூட பெரிய குற்றம் தான். அதை சொல்லி உங்க பையனை தூக்கி உள்ள வைக்க எனக்கு அஞ்சு நிமிஷம் கூட ஆகாது ஆனா அப்படி செய்யலை சுமுகமா முடிக்க தான் பார்க்கறோம்”

“எனக்கு உங்களை விட பெரிய ஆளுங்களை தெரியும்”

“யாரை வேணா தெரிஞ்சு வெச்சிக்கங்க, இப்படி பேசினா அப்புறம் உங்க பையனை தூக்கி உள்ள வைக்காம விட மாட்டேன். பார்க்கறீங்களா?” என்று அர்விந்த் ஆவேசமாக பேச.

ஆத்மன் சற்று தணிந்தவர், “பார்த்து இருந்துக்க சொல்லுங்க, இப்போ தான் ஊர் பிரச்சனை இல்லாம இருக்கு, திரும்ப பிரச்சனை ஆக்கணும்னா நாங்க தயார்” என்றார் அவர்.

பின் அர்விந்த் பொறுமையாய் ஆத்மனிடம் “இனி இப்படி நடக்க வேண்டாம்” என்று சமரசம் பேசி அனுப்பி வைத்தவன், மனோ கணபதிக்கு அழைத்து சொன்னான்.

“என்ன பண்ணட்டும்? அவ அங்க இருந்தா இப்படி தான் ஏதாவது பண்ணுவா? இவ்வளவு நாள் அமைதியா இருந்ததே பெருசு. படிச்சிட்டு இருந்தா, அப்போ அப்போ இங்க வந்து போயிட்டு இருந்தா. இதுவரை ஆத்மனை அவங்க பையனை பார்க்க அவளுக்கு சந்தர்ப்பம் அமையலை. எனக்கு அவளை அங்க தனியா விட இஷ்டமில்லை. அவளை அழைச்சிக்கட்டுமா?” என்று அர்விந்திடமே யோசனை கேட்டான்.

இருவரும் நண்பர்கள். பயிற்சி காலத்தில் அவன் ஐ ஏ எஸ், இவன் ஐ பி எஸ், இருந்தாலும் நல்ல தோழமை உண்டு. “எனக்கு சொல்ல தெரியலை மனோ, இப்போதைக்கு இந்த டிஸ்டிரிக்ட் என் கண்ட்ரோல் தானே இருக்கு பிரச்சனையாகாம பார்த்துக்கலாம்” என்று தைரியம் சொன்னான்.

மனோ தெளிவாய் சொன்னான் “அவனோட சொந்த பிரச்சனையை ஊர் பிரச்சனையாக்கி, இத்தனை வருஷம் வெச்சிருக்கான். என் மாமனுங்களும் மாக்கானுங்க மாதிரி விட்டு வெச்சிருக்கானுங்க. என்ன சொல்ல” என்று அலுத்துக் கொண்டான்.

“எங்க மாப்பிள்ளை எப்படி?” என்று அரவிந்திடம் கேட்க

“எனக்கு ஒன்னும் சொல்ல தெரியலை மனோ” என்றான் அர்விந்த் மீண்டும்.

“அடேய், இதையே நீ சொல்வியா”

“ஒன்னும் பயந்தவன் மாதிரி தெரியலை, ஆனா நம்ம அங்கை மாதிரி ஆவேசமில்லை. அவ ரொம்ப பேசின போது அடக்கி கூட்டிட்டு போயிட்டான்”

“அவன் பேச்சு கேட்டாளா?”

“ம்ம் கேட்டா”

“என்னவோ டா, அவ மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியவேயில்லை” என்றான் பொறுப்பான அண்ணனாய்.

“இப்போதைக்கு நான் பார்த்துக்கறேன், ஆனா பிரச்சனை முடியும்னு தோணலை” என்று அர்விந்த் சொல்லிவிட,

மனோவிற்கு கவலை வந்து அமர்ந்து கொண்டது. அப்பாவிற்கு அழைத்து விட்டான். இவன் இப்போது தான் சமீபமாய் திருச்சி மாவட்ட கலக்டராய் பணியில் அமர்ந்தான்.

அதற்கு முன் டெல்லியில் இருந்தான் வேறு பதவியில். முன்பே மாற்றிக் கொண்டு வந்திருப்பான். அங்கே அங்கை படித்துக் கொண்டிருந்தாள். அவள் வர போக இருக்க வேண்டுமே என்று அங்கேயே இருந்தான். அவள் படிப்பை முடிக்கவுமே இங்கே மாற்றல் வரும் படி செய்து வந்து விட்டான்.

என்ன அவள் இருப்பது தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிக்கு பக்கம் தான். அங்கே தான் கேட்டான். அங்கே சமீபமாய் தான் ஒருவருக்கு மாற்றல் கொடுத்திருக்க இவனுக்கு முடியவில்லை. சரி என்று பக்கம் வந்து விட்டான்.

அப்பா டெஹ்ராடூனில் இருக்க, அவருக்கு அழைத்தவன் விஷயம் சொல்லவும், “அவ புருஷன் இருக்கான் பார்த்துக்குவான். இதுல நாம செய்ய ஒண்ணுமில்லை, நான் அங்க இருந்தா வேற, இங்க இருந்து ஒன்னும் செய்ய வேண்டாம்” என்று விட்டார்.

கண்ணுக்குள் பொத்தி வைத்த வளர்த்த தங்கை, மனமே இல்லை. “நான் போய் பார்த்துட்டு வரட்டுமா?” என்றவனிடம்,

“வேண்டாம், அந்த வீட்ல இருக்குறவனும் ஆம்பிள்ளை தாண்டா பார்த்துக்குவான்” என

“பா ஏன் இப்படி பண்றீங்க, அவளை ஏன் தனியா விட்டீங்க?” என்று ஆதங்கமாய் கேட்க,

“எங்கடா தனியா விட்டேன். அவ பாட்டியோட தானே இருக்கா, அவங்க தாண்டா எனக்கு சாப்பாடு போட்டு என்னை பார்த்துக்கிட்டாங்க” என்று விட்டார்.

“அப்போ நீங்க இந்த கல்யாணம் ஒத்துக்கறீங்களா?” என்றான் அதிர்ச்சியாக. அவன் நினைத்திருந்தான் இது தாத்தாவின் ஆசை என்று.

அதற்கு அவர் பதிலே பேசவில்லை. அவனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

“அப்பா, அவ ஒரு இடத்துல இருக்கா, அம்மா இங்க என்கூட இருக்காங்க, நீங்க தனியா இருக்கீங்க, என்னப்பா நடக்குது? ஏன்பா இப்படி? அம்மாவையாவது கூட அழைசிக்கங்க” என்றான்.

அதற்கும் பதில் பேசவில்லை.

அவனுக்கு என்ன தெரியும்? ஏன் யாருக்கு மட்டும் தெரியும்? எல்லோரும் திருமணம் நடக்க காரணம் ராயர் என்று நினைத்துக் கொண்டிருக்க, ஏன் நாச்சியே அப்படி தான் நினைத்திருக்க, இல்லை, இல்லவே இல்லை. அது நடக்க காரணம் அன்பழகன்.

இது அங்கையற்கண்ணிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம், இல்லையென்றால் அந்த சின்ன கிராமத்தினில் யாரால் அவளை நிறுத்தி வைத்திருக்கக்கூடும்.

யாருக்கும் எதுவும் தெரியாத போது ராஜராஜனுக்கு மட்டும் என்ன தெரியும். அவரின் கட்டாயத்தின் பேரில் தான் அங்கை அங்கே இருக்கிறாள். இந்த திருமணம் எல்லாம் ஒரு விஷயமல்ல, அவளுக்கு இன்னும் அப்படி ஒன்றும் ஒரு அங்கீகாரம் இல்லை இந்த திருமண பந்தத்தில்.

இன்று அங்கையர்கண்ணி ராஜராஜன் என்று சொன்னதற்கு காரணம் கூட அது அவளுக்கு அவளின் அப்பா சொன்னது. இனி நீ அங்கையற்கண்ணி அன்பழகன் கிடையாது, அங்கையற்கண்ணி ராஜராஜன் என்று.

இது எதுவும் தெரியாதவன், ஊரை நோக்கி வண்டியை செலுத்த, அவனின் பின்னே அங்கையர்கண்ணி இருபுறமும் கால்களை போட்டு அமர்ந்திருந்தாள். நன்கு இருட்டி விட்டதால் ராஜராஜனின் வேகத்திற்கு இருட்டை கிழித்துக் கொண்டு தான் அந்த டூ வீலர் சீறி பாய்ந்தது.


ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்

 
:love: :love: :love:

அன்பழகன் மேஜர் ஜெனெரலா இல்லை கிரிமினலா.......
பக்காவா பிளான் போட்டு பொண்ணை அங்கே குடுத்துட்டு பொண்டாட்டியையும் விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறார்......

அண்ணனுக்கு தான் பொறுக்கலை தங்கை தனியா இருக்கிறது........
RR இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவானா???

தாய்மாமா வந்து என்ன சொல்வாரோ???
அம்மா அப்பாவை விட்டுட்டு வரட்டும்னு சொல்றார்........
ஆனால் அப்பாவின் பிளான் படி அப்படியெல்லாம் போகமாட்டான் அங்கை.......

மாமா தான் விட்டுக்கொடுக்கணும் மாப்பிள்ளைக்கு.......
waiting.......
 
Last edited:
Hi
ஓஹோ
கதை வேற பாதையில் போகுதே
அப்பாவோட விருப்பம்
இது யாருக்கும் தெரியல
எல்லாரும் இப்படி தனிதனியாக இருக்காங்களே பாவம்.
 
Last edited:
Top