Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 7

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் ஏழு :

பைபாஸில் அவர்களின் பயணம் முழுவதும் மௌனம் தான். இன்றைய நாள் அவன் நினைத்தும் பார்க்கவில்லை இப்படியாகும் என்று. இன்னும் இந்த நாள் அவனுக்கு நிறைய வைத்திருக்கிறது என்றும் புரியவில்லை.

பைபாஸில் இருந்து அவனின் கிராமம் செல்லும் சாலை திரும்புமிடம் ஒரு பெரிய ஹோட்டல் இருக்க, “சாப்பிட்டு போகலாமா” என்றான்.

“வீட்டில் அவளுக்கு உணவு உண்ண எதுவும் இருக்கிறதா தெரியவில்லை. அவள் தனியாய் இருப்பாளா அதுவும் தெரியவில்லை. அப்படியே அவள் இருக்கிறேன் என்று சொன்னாலும் தனியாக விடுவதில் அவனுக்கு மனதில்லை. வீட்டிற்கு அழைக்க முடியாது பெரியப்பா விரும்ப மாட்டார், அப்போது நான் அங்கே போய் இருக்க வேண்டுமா? வீட்டில் என்றால் நிறைய பேர், அங்கே செல்வது என்றால் நான் மட்டுமே செல்ல வேண்டும்”

“அம்மாவும் இல்லை, அங்கே பாட்டியுடன் மருத்துவமையில், முதலில் இவள் அனுமதிப்பாளா தெரியவில்லை”

இப்படி யோசனைகள் ஓடி அது நிற்க, அது வரையிலும் அங்கையிடம் இருந்து பதில் ஒன்றும் வராமல் போக, ஆக்டிவாவை நிறுத்தினான்.

ஒன்றும் பேசாமல் இறங்கினாள். மனதில் அப்படி ஒரு சோர்வு.

“உள்ள போகலாமா?” என்று கேட்க,

“ம்ம்” என்ற தலையசைப்பு,

உள்ளே சென்றவன் அவனுக்கு வேண்டியதை சொல்லி அவளுக்கு சொல்லச் சொல்ல, “பசிக்கலை ஜூஸ் மட்டும் போதும்” என்றாள்.

“நான் உனக்காகத் தான் சாப்பிட வந்தேன்” என்று ராஜராஜன் சொல்லவும்,

“அப்போ சரி வாங்க, எனக்கு எதுவும் வேண்டாம்” என்று அவள் டக்கென்று எழ,

“அங்கை, நான் சொல்ல வர்றது நீ சாப்பிடணும்னு”

“வேண்டாம் ஜூஸ் போதும்” என்று ஸ்திரமான குரலில் சொல்ல, அவனுக்கு வந்த உணவை சில நிமிடங்களில் காலி செய்து அமர்ந்திருக்க, அவளுக்கு ஜூஸ் வந்து விட,

அதை அங்கை மிக மெதுவாக குடிக்க, “ஜூஸ் குடிக்க இவ்வளவு நேரமா” என்பது போல பார்த்தான்.

அவனின் பார்வையை உணர்ந்தவள், “எனக்கு இங்க தொண்டை எல்லாம் அடைக்குது, சாப்பிட முடியலை” என்று சொல்ல, அழுகையை அடக்கி இருப்பது புரிந்தது.

“எதுக்கு இவ்வளவு எமோஷன் ஆகணும்” என்றான்.

“உங்களுக்கு புரியாது! சரி, அதை விடுங்க, உங்கம்மாவை யாராவது திட்டினா, இல்லை, மரியாதை இல்லாம பேசினா, நீங்க சும்மா விடுவீங்களா?” என்றாள்.

“கொன்னுட மாட்டேன்” என்று மனதிற்குள் நினைத்தவன் அதை அவளிடம் சொல்லாமல், “நிச்சயமா விடமாட்டேன்” என்று மட்டும் சொன்னான்.

ராஜலக்ஷ்மி என்று ஒருத்தி அவனுக்கு யாருமே கிடையாது. அவன் பிறப்பதற்கு முன்பே வீட்டை விட்டு போனவர், அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவரால் தங்களுக்கு பிரச்சனை, வசதிகள் இல்லாமல் போய்விட்டன, இப்படி தான்.

அதனால் அவனுக்கு அப்படி ஒன்றும் கோபம் பொங்கிவிடவில்லை. அதற்காக அவன் முன் ராஜலக்ஷ்மியை பேசினால் கேட்டுக் கொண்டு வருவான் என்று சொல்லி விட முடியாது. ஆனால் அவன் முன் யாரும் பேசியது கிடையாது!

“அவன் சொல்றான் அவ்வளவு அலட்சியமா ஓஹ் நீ அந்த ஓடிப் போனவ பொண்ணான்னு” என்று சொல்லும் போது முகம் சிவந்து கண்களில் நீர் நிற்க,

“என்ன பண்ணனும் அவனை?”

“அவனை அடிச்சு துவம்சம் பண்ணனும்னு ஆசையா இருக்கு. ஆனா அது என்னோட நோக்கம் கிடையாது. அவன் எங்க அம்மாவை அப்படி பேசக் கூடாது”

“அது... அவங்க அப்படி தான் பேசுவாங்க”

“எப்படி பேசுவாங்க? பேசினா தொலைச்சு கட்டுவோம்னு தெரிஞ்சா, ஏன் பேசப் போறாங்க. இல்லை நான் சொன்ன மாதிரி தான் நடக்கும், அவங்க வீட்டு பொண்ணுங்களை போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன்” என்று அவளின் குரலில் அப்படி ஒரு தீவிரம்.

“அப்படி எதுவும் பண்ணிடாத” என்று உடனே சொன்னவன், “முதல்ல அடிச்சு துவைப்போம், பின்ன வேற யோசிக்கலாம்” என்று எழுந்தான்.

“நிஜம்மாவா சொல்றீங்க”

“நிஜம்மா சொல்றேன் வா” என்று குழந்தைக்கு சொல்வது போலச் சொல்லி அழைத்து சென்றான்.

திரும்ப ஒரு பைக் பயணம், ராஜராஜனின் மனம் முழுவதும் நடந்த நிகழ்வே!

“ஓடிப் போனவ பொண்ணா” என்று கேட்கும் முன் ராஜராஜனின் மனைவி என்று தெரியாமலா இருக்கும், அப்படி தெரிந்தும் கேட்கும் தைரியம் கொடுத்தது எது?

“மீசை வைத்து முறுக்கி, ஊருக்குள் பெரிய சண்டியர் கணக்காய் நான் சுற்ற நான் ஒன்றுமேயில்லை என்று காண்பித்து கொடுத்து விட்டனர்” என்பது தான் அவனின் எண்ணம்.

ஆம்! போலிஸ் ஸ்டேஷன் என்பது அவனுக்கு பயம் கொடுத்தது தானே!

ஆத்மன் அமர்ந்திருக்க தன்னை நிற்க வைத்து தான் பேசினர், தான் யார் என்று கூட தெரியவில்லை. மிகவும் கீழிறக்கமாய் அவமானமாய் உணர்ந்தான்.

“நான் யார் என்பது ஆத்மனுக்கும் திலகனுக்கும் காண்பித்தே ஆக வேண்டும்” என்ற வெறியே அந்த நிமிடம் கிளம்பியது..

எப்படி சந்தர்ப்பத்தை உருவாக்க என்று யோசிக்கும் போதே ஆக்டிவா அவள் இருக்கும் வீட்டை அடைந்திருக்க, இறங்கியவள், “இங்க இருந்து உங்க வீட்டுக்கு நீங்க எப்படி போவீங்க, வண்டி கொண்டு போயிட்டு காலையில கொண்டு வந்து விடறீங்களா?” என்றாள்.

“ஏன் நான் எதுக்குமே லாயக்கில்லைன்னு முடிவு பண்ணிட்டியா?”

“நீங்க பேசறது புரியலை?”

“என்னோட தான் வர்ற, அப்புறம் எதுக்கு உங்க அண்ணாக்கு ஃபோன் பண்ணின”

“உங்களோட வந்தா என் அண்ணாக்கு ஃபோன் பண்ணக் கூடாதா, உண்மையா நீங்க வரும் முன்ன பண்ணினது தான் அது, ஆனா நீங்க இருந்தாலும் பண்ணியிருப்பேன்”

“வந்து என்ன பண்ணியிருப்பீங்க, உங்க மனைவியாகி ரெண்டு வருஷமாகுது. அப்போ இவனுங்களுக்கு இன்னும் தெரியாமையா இருக்கும், எங்கம்மா விடுங்க, உங்க மனைவின்னு தெரிஞ்சும் பேசாமையா விட்டான் அவன்” என்று ராஜராஜன் நினைத்ததையே அவளும் பேச, ராஜராஜனால் பதில் சொல்லவே முடியவில்லை

எல்லாம் வீட்டின் முன் இருக்கும் வெளி கேட் வாயிலில், இவர்களின் வாக்குவாதத்தை கேட்டு அங்கிருந்த ஒரு நாய்க்கு பொறுக்கவில்லை போல, அது குலைக்க ஆரம்பிக்க, எங்கிருந்தோ இரண்டு நாய்கள் வந்து அதனுடன் சண்டையிட ஆரம்பிக்க..

அங்கை வீட்டு கேட்டினுள் ஓடி நின்று கொண்டவள், கேட்டையும் மூடிக் கொண்டு “கடிச்சிடப் போகுது, நீங்க வீட்டுக்கு கிளம்புங்க” என்றாள்.

“கேட்டை திற” என்று அவன் அதட்ட, அவள் கேட்டை திறக்கவும் வண்டியை உள்ளே விட்டான்.

வெளியே நாய்கள் சண்டையிட்டு கொண்டிருக்க, “எப்படி நடந்து போவீங்க, நாய் வேற சண்டை போடுது, வண்டியில போயிருக்கலாம்”

அவள் நினைத்தது அவன் வண்டியை விட்டு நடந்து போகப் போகிறான் என்று. கிஞ்சித்தும் அவன் இங்கே தங்கப் போகிறான் என்று நினைக்கவில்லை.

“சில நிமிஷத்துக்கு முன்னே என்ன சொன்ன? உங்க மனைவின்னு தெரிஞ்சும் எப்படி பேசினாங்கன்னு தானே, ஏன்னா நான் உன்னோட இல்லை, அப்போ நீ என் மனைவின்றது யாரோட ஞாபகத்துலையும் இல்லை. அதனால இனிமே இங்க தான் இருக்க போறேன்” என்று வண்டியை நிறுத்தி இறங்கினான்.

திடீரென்று சொல்லவும் “என்ன இங்கேயா? அதெல்லாம் முடியாது! நான் ஒத்துக்க மாட்டேன்!” என்றான் பிடிவாதமான குரலில்.

“உன்னோட பெர்மிஷன் கேட்கலை, நான் இங்க இருக்கக் கூடாதுன்னா உங்கப்பவையோ உங்க அண்ணனையோ வந்து கூட்டிட்டு போக சொல்லு. உன்னை தனியா விட முடியாது” என்று முடித்தவன்.

“வீட்டை திற, ரொம்ப நேரமாச்சு, எனக்கு போகணும்” என்று ஒற்றை விரலை காண்பிக்க,

“ஹேய், அதெல்லாம் வேண்டாம்” என்றாள் பதட்டமாக.

“என்ன வேண்டாம், இதெல்லாம் அடக்க முடியாதும்மா?” என்றவன் “சாவி” என்று கை நீட்டினான்.

பின் தான் வண்டியின் சாவியை பார்க்க அதில் வீட்டின் சாவி இருக்க, திறந்து உள்ளே சென்றான்.

இதை சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை அங்கையற்கண்ணி.

“ஹேய், இதோ பாருங்க, கலாட்டா வேண்டாம், எனக்கு யாரோடையும் இருக்க முடியாது, பாட்டி அவங்க வேற, எனக்கு ரொம்ப அசௌகரியமா இருக்கும்”

“இப்போதான் ஸ்டேஷன்ல நான் வேற நீ வேற கிடையாது சொன்ன”

“அது சும்மா வெளி ஆளுங்க முன்ன உங்களுக்கு மரியாதை தேடி கொடுக்கறதுக்காக சொன்னது”

“அப்போ நான் மரியாதையில்லாதவன் சொல்ற”

“ஓஹ், கோஷ், பாப்ரே பாப், என்ன நீங்க அப்படியே பேச்சை மாத்துறீங்க” என்றாள் அதிர்ந்தவளாக.

“நீ சொன்னதை தான் சொன்னேன், நீ எங்கயோ ஃபீல் பண்ணியிருக்க, ஏதோ ஒரு இடத்துல, என்னால எதுவும் முடியாதுன்னு அதான் என்னை உட்கார வெச்சி மரியாதை தேடி கொடுக்க நினைச்சிருக்க” என்றான்.

“இல்லை, இல்லை, அப்படி இல்லை” என்று பதில் சொன்னவளுக்கு, தான் அப்படி தான் நினைத்தோமோ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

அதற்குள் அவன் குளியலறை நோக்கி விரைந்து விட்டான். அது ஒரு ஓட்டு வீடு, ஆனால் சில லட்சங்கள் செலவு செய்து, கேரளா பாணியில் ஓடு போட்டு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து, பழமையும் புதுமையும் சேர்ந்து, அதை மாற்றி கொடுத்திருந்தாள் கரிஷ்மா. தன் கணவனின் தங்கை தங்குவதற்காக.

ஆம்! அதிகாரம் மட்டுமல்ல, பணமும் மனோவிற்கு தண்ணீர் பட்ட பாடு தான். அவனது காதல் திருமணம், மனைவி கரிஷ்மா அவளது வீட்டில் ஒற்றை வாரிசு, ஏகத்திற்கும் சொத்துக்கள், தாத்தா ஒரு மத்திய மந்திரி, அப்பா ஒரு கட்டுமான கம்பனி வைத்திருக்க, அவர்கள் செய்யும் சிறிய ப்ராஜக்டின் பட்ஜெட்டே பல கோடிகள். இப்படி பெரிய பின்னணி அவனிற்கு. அவனுக்கு பெண் கொடுக்கும் பொழுது வைத்த ஒரே கண்டிஷன் இன்னும் பத்து பதினைந்து வருடம் உன் வேலையை பார் பின் என் தொழிலை பொறுபெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே.

அவன் கண் ஜாடையில் காரியங்களை செய்வாள் கரிஷ்மா. அப்படி ஒரு புரிதல் இருவரிடமும். தங்கையின் சௌக்கியம் கணவனுக்கு மிக முக்கியம் என்று கரிஷ்மாவிற்கு தெரியும் அவனுக்காக செய்தாள், அதையும் விட அங்கையர்கண்ணியை அவளுக்கும் பிடிக்கும் அவளிற்காகவும் செய்தாள்.

தான் கலக்டர், தன் தந்தை ஜெனரல் என்று பெருமையாய் சொல்பவன், மறந்தும் தன் மனைவியின் பின் புலத்தை உபயோகப் படுத்தமாட்டான். அது தேவையில்லாத பிரச்சனைகளை கொடுக்கும் என்று புரிந்தவன்.

மொத்தத்தில் புத்திசாலி! ஆனால் சறுக்கியது அப்பாவிடம், அங்கையின் வாழ்க்கையில் நடந்தவை நடப்பவைக்கு ராஜலக்ஷ்மி தான் காரணம் என்று நினைத்திருக்க, அன்பழகன் என்று தெரியாமலே போனது.

இப்போது தான் அப்பா ஏதோ ஒரு வகையில் இதில் இருக்கிறாரோ என்ற சந்தேகம்?

அவன் குளியலறை சென்றதுமே அப்பாவை அழைத்தவள், அவர் எடுப்பதற்காக காத்திருக்க, அவளின் கவனம் எல்லாம் அதில் இருந்தது. அப்பாவிடம் பேசி வருடத்திற்கு மேல் இருக்கும் அவர் மேலிருந்த கோபத்தில் பேசவேயில்லை. அவரின் அழைப்பை எடுக்கவில்லை, அவரின் மெசேஜ் பார்த்தாலும் அதற்கு பதில் கொடுக்க மாட்டாள். இப்போது அப்பாவின் நினைவில் இருக்க, ராஜராஜன் குளியலறையில் இருந்து வெளியே வந்ததை கவனிக்கவில்லை.

அவர் எடுத்தும் “பா” என அப்படியே ஒரு தேம்பல் வெடித்தது.

“என்னடா அம்மு” என்றார் அவரும் பதறியவராக. மனோ சொன்னது போல எதுவும் பிரச்சனையாகி விட்டதோ ஆத்மனால். ராஜராஜனால், அவனின் வீட்டினரால் அவர்களை சமாளிக்க முடியவில்லையோ? என்று பயந்து விட்டார்.

“ஏன்பா இப்படி பண்ணுனீங்க? என்னால இங்க இருக்கவே முடியலைப்பா, இங்க அம்மாவை ஓடிப் போனவ பேசறாங்க. எனக்கு அது பிடிக்கவேயில்லை. நான் ஊருக்கு வந்துடட்டுமா? இங்க பாட்டிக்கு உடம்பு சரியில்லை, அவங்க ஹாஸ்பிடல்ல, நான் தனியா இருந்துக்குவேன் சொன்னா கேட்காம ராஜன் இங்க வந்துட்டாங்க”

“இங்க தான் இருப்பாங்களாம், எனக்கு பிடிக்கவேயில்லை. எனக்கு அவங்களோட எல்லாம் இருக்க முடியாது. எனக்கு யாரையும் பிடிக்கலை, எனக்கு இந்த கல்யாணம் ஒத்துக்க முடியாது. எனக்கு விடுதலை குடுங்கப்பா” என்று தேம்பி தேம்பி அழுதாள்.

ராஜராஜன் அப்படியே நொறுங்கி போனவன், வந்த சுவடு தெரியாமல் குளியலறைக்குள் மீண்டும் நுழைந்து கொண்டான்.

அதிலும் அவன் நுழையும் போது கடைசியாக சொன்னது “நீங்க லவ் பண்ணினதுக்கு நான் விக்டிமா, உங்களை வளர்த்தவர்ன்னு நீங்க உங்க நன்றியை என்னை கல்யாணம் பண்ணி கொடுத்து காண்பிச்சிருக்க வேண்டாம் பா, என்னால கொஞ்சமும் முடியலை. இங்க எனக்கு பிடிக்கலை, என்னை ரெண்டு வருஷம் ஜெயில் மாதிரி இருக்க விட்டுட்டீங்க. என்னை கூப்பிட்டுக்குங்கப்பா, ப்ளீஸ் பா. இல்லைன்னா நான் அம்மா கிட்ட எல்லாம் சொல்லிடுவேன். நீங்க தான் என்னை இங்க இருக்க வெச்சிருக்கீங்க சொல்லிடுவேன்” என்று கெஞ்சல், மிரட்டல், அழுகை என்று கலவையாய் அவள் பேச,

அங்கே அன்பழகன் தவறு செய்து விட்டோமோ என்று நொறுங்கி போனார்.

“பா, எனக்கு இங்க பிடிக்கலைப்பா, என்னை கூப்பிட்டுக்குங்கப்பா” என்று அப்படி ஒரு அழுகை.

“அம்மு அழாத ப்ளீஸ், அம்மு உன்கிட்ட கேட்டுட்டு தானே அப்பா எல்லாம் செஞ்சேன், இப்போ இப்படி சொன்னா எப்படி டா?”

“எனக்கு சொல்ல தெரியலை, அப்போ என்னவோ ரொம்ப பெரிய இவ மாதிரி ஓகே சொல்லிட்டேன். இப்போ என்னால முடியலை”

“அப்பாக்கு டைம் குடு யோசிக்கலாம், இப்படி உடனே முடிவெடுக்குற விஷயம் கிடையாது”

“போங்க, போங்க, என்கிட்டே பேசாதீங்க” என்று ஃபோனிலேயே கத்தி ஃபோனை ஆஃப் செய்து, தூர தூக்கி போட்டு விட்டாள்.

அவளோடு தன் வாழ்க்கை சாத்தியமில்லை என்று புரிந்து மனோவிடமே அவளை அழைத்து செல்லுங்களேன் என்று சொன்னவன் தான் ராஜராஜன்.

ஆனால் இங்கே இவள் பிடிக்கவில்லை என்று அப்படி அழ, தாளவே முடியவில்லை. எதிலோ மோசமாய் தோற்று விட்ட உணர்வு. தெரிந்த விஷயம் தான் என்றாலும். அந்த நொடி ஜீரணிக்கவே முடியவில்லை.

குளியலறையில் இருந்து வந்தவன், வெளி திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

ஒரு கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தவள் “எனக்கு தூங்கணும்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“தூங்கு” என்றவன் அப்படியே அமர்ந்திருக்க,

அவள் உள்ளே செல்ல “கதவை பூட்டிக்கோ” என்றான்.

“வீட்டுக்கு போறீங்களா, ஓகே” என்று அவளே சொல்லிக் கொண்டவள், இவன் செல்கிறானா இல்லையா எப்படி செல்கிறான் என்று எதையும் பார்க்காமல், ஏன் வெளி கேட்டை பூட்ட கூட நிற்காமல், உள்ளே சென்று கதவை சாத்திக் கொள்ள,

சுற்றி பார்த்தான். அங்கே ஒரு கயிற்றுக் கட்டில் இருக்க, அதை எடுத்து போட்டுக் கொண்டவன், அதில் படுத்துக் கொண்டான்.

எதையும் யோசிக்க கூடப் பிடிக்கவில்லை, நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை, நடக்க இருப்பவை, எதையும்!

தன்னுடைய தாத்தாவினால் என்று நினைத்து இருந்ததால் தான் இந்த திருமணம், அதன் பிறகு இப்படி பாட்டி இங்கே வந்து இருப்பது என்று அத்தனையையும் மெளனமாக கடந்திருந்தான்.

இப்போது அப்படி இல்லையோ என்று தோன்றும் போது, போலிஸ் ஸ்டேஷனில் தோன்றிய அதே உணர்வு, நான் என்ன பொம்மையா அடுத்தவர் என்னை ஆட்டி வைக்க என்று அப்படி ஒரு ஏமாற்றம், கோபம் பிரவாகமாய் பொங்கியது.

“யோசிக்காதே” என்று மனதை முயன்று கடிவாளமிட்டு கண்களை மூடிக் கொண்டான்.


ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்







 
:love::love::love:

என்னம்மா கண்ணி அங்கயற்கண்ணி :mad: இப்படி சொதப்புறியே.........
பெரிய மாமா தான் உனக்கு சரி........ அன்பழகன் பொண்ணுன்னு நிரூபிக்கிறியே........

2 வருஷத்துக்கு பிறகு பொண்டாட்டி னு மதிச்சு உன்னை ஏத்துக்கிட்டவனுக்கு நல்லா பதில் குடுத்துட்ட........
உங்க மாமாக்கு மட்டும் தெரிஞ்சுது இது உன்னை ஓட ஓட விரட்டுவாங்க......

என்ன கேட்ட "நீங்க லவ் பண்ணினத்துக்கு நான் victim"-மா???
உங்கப்பா பொண்ணுக்கு கல்யாணம் என்ன கேலிக்கூத்தா இருக்குதா???

புருஷனா நினைக்க வேண்டாம்........ atleast ஒரு மனுஷனா???
சீ போ:devilish:

உங்கண்ணாக்கு பேசுனியே....... என்ன சொன்னாரு கலெக்டர்.....

பாப்ரே பாப்:p:p:p மல்லி ஹிந்தி தெரியாது :cry::cry::cry::cry:

@Admin மல்லி பைக் ஆக்டிவா ரெண்டுமே வருது.........
 
Last edited:
ராஜராஜன் எப்படி மாப்பிள்ளையானான்?
கல்யாணம் எங்கே நடந்தது???
நடத்திவச்சது யார்???

வளர்த்த நன்றிக்காக திருமணம்........ ராயர் கடைசி கட்டத்தில்???

கட்டாய கல்யாணத்தில் அப்போ அப்பாக்காக சம்மதித்த பொண்ணு இப்போ நோ சொல்றா........
அம்மாக்கு சம்மதமில்லையா கல்யாணத்தில்........ ஏன் தனியா இருக்காங்க அப்பா அம்மா கூட???
:unsure::unsure::unsure:இன்னும் வரும்..........
 
Last edited:
Hi,
அங்கை பேசியதை கேட்டதும்
ராஜன் மனசு உடைந்து விட்டதே...
இவ்ளோ அழுதும் அப்பா மனசு இளகாம
யோசிக்க நேரம் கேட்கிறார்...
 
Last edited:
நன்றி மல்லி ?

பெரும்பாலான கதைகள் ல ஹீரோயின் பார்த்தா தான் பாவமா இருக்கும்...
இதுல ராஜனை நினைக்க நினைக்க கண்ணீர் கொட்டுது..
ஒருபக்கம் பெரியப்பாவோட அதிகாரம்..
இன்னொரு பக்கம் ஆத்மனோட அவமானம்..
பக்கத்துலயே மனைவியோட பிடித்தமின்மை..
ஏன் கல்யாணம் நடந்தது ன்னு குழப்பம்...

ஒரு மனுஷன் எவ்வளவு கஷ்டம் தான் தாங்குவான்..
 
Last edited:
Station ல வச்சி உயிரே நீ தான் டா ன்னு பேசினா...
வீட்டுக்கு வந்தா அசௌகரியம்ங்றா..
பிடிக்கல ன்னு போன்ல அழறா...

இதே இவளுக்கு செஞ்சா சும்மா இருப்பாளா ..
அவன் பாவம் எதிர்த்தும் பேசாம அப்பிராணியா வெளிய காவலுக்கு படுத்து இருக்கான்...

என்ன செய்றது இவளை..
 
Last edited:
அண்ணனுக்கு phone பண்ணது ஒரு குத்தமா....
மனைவியாகி 2 வருஷம் ஆச்சு சேர்ந்து வாழவில்லை...
நாய் பார்த்து பயமா...
இடையில ஹிந்தி வருது.. :unsure: :unsure:
 
Last edited:
Top