Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 9 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் ஒன்பது :

வேறு வழியில்லாமல் அங்கை தேனீர் தயாரிக்க செல்ல,

ராஜராஜன் மனோவை பார்த்து, “ஆத்மன், அவரோட ஊருல இருக்குற ஏரில இருந்து தான் எங்க ஊருக்கு தண்ணி வருது”

இந்த வார்த்தை போதுமே பிரச்சனையின் நுனி புரிய, கலக்டர் அல்லவா? “ம்ம்” என்றவனிடம்,

“எங்க ஊர் பாசனம் அங்கே இருந்து தான். அவரோட கல்யாணம் நின்ன ஆத்திரத்துல தண்ணியே விடலை, பெரிய ஊர் கலவரம் ஆகிடுச்சு, உயிர் சேதமில்லை, ஆனா நிறைய அடிதடி, காயங்கள், சேதங்கள்”

“இந்த அடிதடி என்னவோ ஒரு பதினஞ்சு நாள் நடக்க, ஒரு பக்கம் போலிஸ், ஆர் டி ஓ விசாரணை, பஞ்சாயத்து எல்லாம் போச்சு, ஆனா ஆத்மன் தண்ணி வர விடலை”

“பயிர் எல்லாம் வாட ஆரம்பிக்க, அப்பா தான் இதெல்லாம் வேண்டாம்னு ஆள் விட்டு பேச விட்டார். ஊருக்கு தண்ணி விட்டுட்டார்” ஆம், இப்போது நிகழ்வுகளை சுவாமிநாதன் சொன்னார். அன்றைய நிகழ்வுகளுக்கே போய் விட்டார்.

“ஆனா எங்களுக்கு தண்ணி வர்ற வழில அவங்க நிலம் இருக்கு, அதுல அவசரமா ஒரு சிவன் கோவிலை கட்ட அடிக்கல் போட்டுட்டார். எங்களால ஒன்னும் பண்ண முடியலை. அதுக்கு ஏதாவது பண்ணினா ஊர் மொத்தமும் தண்ணி இல்லாம கஷ்டப் படும், அதனால் பொறுமையா போயிட்டோம்”

“கோவிலும் வேகமா வளர்ந்துடுச்சு, சிவன் சொத்து குல நாசம்ன்னு எங்கப்பா எந்த எதிர்ப்பும் அதுக்கு பண்ணலை, சொத்து தானே போனாப் போகுது, வேற எந்த கஷ்டமும் நமக்கு வராம இருந்தா சரின்னு விட்டுட்டார்”

“கிட்ட தட்ட ஒரு என்பது ஏக்கரா நெல் வெள்ளாம போச்சு, தோப்பு போச்சு, எல்லாம் போச்சு,தென்னை, மாமரம், வாழை, பருத்தி, மஞ்சள் எல்லாம் எங்க கண் முன்ன பட்டு போச்சு” என்று அவர் சொல்லும் போது குரல் கரகரத்து விட, எதிரில் இருந்த ராஜராஜன் அவரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

“ஊர்ல பெரிய சொத்து நம்மளது தான், அப்போ ரெண்டு வழியா வரும் தண்ணி, ஒரு பக்கம் வர்றதுல கொஞ்சம் நிலத்துக்கு மட்டும் தண்ணி வருது, அந்த பக்கம் தான் ஊருல மத்த நிலத்துக்கு போகுது. இன்னொரு பக்கம் வரலை”

“வேற சில தொழில், எல்லாம் முடங்கி போச்சு, இருக்குறதை வெச்சு காலத்தை ஓட்டுறோம், டவுன்ல கொஞ்சம் சொத்து இருந்தது அதை வித்து தான் பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணினோம்”

“சரி பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனா எங்களால முடியலை” என்று தோல்வியை பகிரங்கமாய் ஒத்துக் கொண்டார்.

அவரை ஆதரவாய் அணைத்துக் கொண்டான். “எங்க ஊர் அப்படியே தான் இருக்கு எங்க கிட்ட, ஆனா மத்த ஊர்ல வெளில தெரிஞ்சவங்க இப்படி எல்லாரும் எங்களை முன்ன பார்த்த மாதிரி பார்க்கலை. காசு இருந்து இல்லாம போறது எவ்வளவு பெரிய கொடுமைன்னு அதை அனுபவிக்கறவங்களுக்கு தான் தெரியும். வசதி வாய்ப்பு குறைஞ்ச உடனே எங்க போனாலும் எங்களை தான் முன்ன நிறுத்தி செஞ்சவங்க எல்லாம் எங்களை ஒதுக்கிட்டாங்க”

“அதெல்லாம் கூட ஒண்ணுமில்லை, காலத்தோட மாற்றம்ன்னு விட்டுடலாம், ஆனா எங்க வீட்ல பணமே மூட்டைல தான் இருக்கும், இப்போ எண்ணி எண்ணி செலவு பண்றோம். நாங்க வளர்ந்ததுல எங்க பசங்க பத்துல ஒரு பங்கு கூட வளரலை, இதோ இவன் அண்ணனுங்க படிக்கணும், அக்காங்க கல்யாணம்னு பதினெட்டு வயசுல இருந்து உழைக்கிறான்”

“ஏதோ பெரியவனுங்க உழைச்சு அவனுங்க தேவை போக எல்லாம் இங்க குடுக்கறானுங்க, இதுல எங்கப்பா வேற உங்க பொண்ணை இவனுக்கு கட்டி வெச்சிட்டார். எதுக்கு கட்டி வெச்சார்ன்னு எங்களுக்கு புரியலை, இப்போ இவன் வாழ்க்கை வேற தொங்குது”

“இப்போ திரும்ப பிரச்சனை , நான் அடிதடில தான் இறங்குவான்னு நினைச்சேன், இல்லை தண்ணில தான் கைவைப்பான்னு ராஜா சொல்றான்” என்று அவர் பெருமூச்சு விட்டவர்,

“இதுல ஊருக்கு பிரச்சனைன்னா, திரும்ப நாங்க தழைஞ்சு தான் போகணும்” என்று அவர் பேச, அங்கே ஆழ்ந்த அமைதி!

“ஏற்கனவே ராஜாக்கு அவன் அண்ணனுங்க ரைஸ் மில் வெச்சு குடுத்து ரெண்டு வருஷமாச்சு அதோட லோனை கூட அவனுங்க தான் கட்டுறானுங்க. அதுல வர்ற வருமானம் தான் எங்க செலவுக்கு. இப்போ அது கொஞ்சம் நல்லா வளர ஆரம்பிக்குது, அதுக்கே கரன்ட்ல பிரச்சனை பண்றான், வேலை தடைபடுது” என்று இத்தனை வருடம் மனதில் இருந்ததை கொட்டினார்.

மனோவிற்கு புரிந்தது, அதில் எங்கேயும் தன் அம்மா இல்லை, அவர்களை திட்ட வில்லை, எதுவும் இல்லை, அப்படியே ஒதுக்கி விட்டனர் என்று புரிந்தது.

அதிலும் தன் அப்பாவும் எங்கேயும் இல்லை என்று புரிந்தது. ஏழு வயதில் அந்த வீட்டினுள் அவர் சென்றார் என்று தெரியும், பின் இருபத்தி ஒன்றோ இரண்டோ அதுவரை அங்கே தான். ஆம்! அவனின் அம்மா ராஜலக்ஷ்மி பிறந்த ஓரிரு வருடத்தில் அந்த வீட்டினுள் சென்றவர்,

எல்லோரையும் விட அவனின் அம்மாவை தூக்கி வைத்திருப்பார் என்று எப்போதோ ஒரு நெகிழ்ந்த தருணத்தில் அவர் சொல்லி கேட்டிருக்கிறான். மற்றபடி இங்கே நடந்த நிகழ்வுகள் எதுவும் அவர்களுக்குத் தெரியாது.

அம்மாவும் பேசியதில்லை, அப்பாவும் பேசியதில்லை, இவனின் யோசனைகள் ஓடும் போதே, “விடுங்க பெரியப்பா, நாம வீட்டுக்கு கிளம்பலாம்” என்று எழுந்து கொண்டவன்,

“இதோ உங்க தங்கையை உங்க கிட்ட ஒப்படைசிட்டோம். என்னவோ பார்த்துக்கங்க. தண்ணி பிரச்சனை திரும்பவும் ஊருக்கு வந்தா நீங்க தான் பார்க்கணும், நாங்க அவன் கிட்ட கீழ போய் பேச முடியாது”

“நீதானே சொன்ன, பதவி, ஆள், பணம் எல்லாம் இருக்குன்னு, பிரச்சனை வந்தா முடிச்சிக்குடு பார்ப்போம். ஊரு பிரச்சனை மட்டும் பார்த்தா போதும் எங்க பிரச்சனை நாங்க பார்த்துக்குவோம்” என்று சொல்லி நடக்க எத்தனிக்க,

“டீ கேட்டீங்க” என்ற அங்கையின் குரல் கேட்டது. சற்று உரத்து ஒலித்ததோ.

எழ முயன்ற சுவாமிநாதனிடமும், தமிழ்செல்வனிடமும் “உட்காருங்க மாமா” என்று சொல்லியபடி டீ யோடு வந்தாள்.

அவளாய் அவர்களிடம் பேசியதே இல்லை. இதற்கு சுவாமிநாதனிடம் இன்று தான் போலிஸ் ஸ்டேஷனில் வைத்து பேசினாள்.

அப்படி ஒன்றும் அவர்களை மரியாதையாய் கூட பார்க்க மாட்டாள். இதற்கு நாச்சி எப்போதும் அவர்களின் பெருமை தான் பேசுவார், ஒரு நிமிடம் முடிவதற்குள் அவளின் காதினை இயர் போன் ஆக்கிரமித்து கொள்ளும்.

அது அந்த பெரியவருக்கு புரியாது...

அமைதியாய் அந்த இரவு நேரத்தில் டீ கொடுத்தாள். அவள் எட்டி பார்த்து நின்றது சமையலறை ஜன்னல் தான். அதனால் அவள் டீ தயாரித்து கொண்டிருந்தாலும் அவர்கள் பேசியது எல்லாம் காதில் விழுந்தது.

எல்லோருக்கும் கொடுத்து கடைசியாய் தான் ராஜராஜனுக்கு கொடுத்தாள். எடுத்துக் கொண்டவனின் பார்வை அந்த தட்டில் பதிய வேறு டம்ளர் இல்லாததால் அனிச்சையாய் “உனக்கு” என்று கேட்டான்.

“நான் டீ குடிக்க மாட்டேன்”

“நீ சாப்பிடலைன்னு எக்ஸ்ட்ரா ஜூஸ் வாங்கி ஃபிரிட்ஜ்ல வெச்சேன், எடுத்துக்கோ” என்று குடிக்க ஆரம்பிக்க,

அவள் ஃபிரிட்ஜில் இருந்து பால் எடுத்த போதே பார்த்திருந்தால், இருந்த சோர்வில் உடனே குடித்தும் இருந்தாள். “நான் குடிச்சிட்டேன், அதுதான் எனர்ஜெடிக்கா இருக்கேன்” என்று சொல்ல,

“ஓஹ் சரி” என்ற பார்வை பார்த்தவன் வேறு பேசவில்லை.

குடித்ததும் கிளம்பி விட்டனர், கிளம்பும் போது மீண்டும் ராஜராஜன் சொல்லியது “இனி பாட்டி இங்க வரமாட்டாங்க, உங்க தங்கையும் இங்க இருக்கக் கூடாது”

“ஒன்னு எங்க வீட்டுக்கு வரட்டும், இல்லை கூட்டிட்டு போயிடணும். ரெண்டுல ஒன்னு தான்” என்று சொல்லி விட்டே சென்றான்.

வெளியே வரவும் தான் பார்த்தான், அன்று கோவிலில் தன்னிடம் அடிவாங்கிய பாதுகாவலன் நின்றிருந்தான். “இவனே ஒரு சொங்கி பய, இவனை எதுக்கு கூட வெச்சிருக்கான்” என்ற எண்ணம் தான்.
 
ரொம்ப பேசுனைல பிரச்சினை நீயே முடிச்சு கொடு..

பிரச்சினை தீர்ந்தா போதும்
எதுக்கு வீராப்பு எல்லாம்...

ஊர் நல்லா இருக்க சுவாமிநாதன் குடும்பம் வலிய அவுங்களே கஷ்டத்தை அமைதியா ஏத்துக்கிட்டாங்க
குடும்பம் நல்லா இருக்க ராஜராஜன் கஷ்டத்தை ஏத்துக்கிறான்....

கரிஷ்மாஆஆஆஆஆஆ மாதிரி
அங்கை மாறுவாளா????
 
Last edited:
Top