Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் 1

Advertisement

Nagaveni A

Member
Member
காதல்1

நிலவு மேகங்களுக்கு இடையில் மறைந்து மறைந்து பூமியை எட்டி பார்த்துக் கொண்டிருக்க. அந்த உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகளின் விளக்குகள் அணைக்கபட்டு அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் எந்த விளக்கும் அணைக்கபடாமல் எறிந்துக் கொண்டிருக்க. அவ்வீட்டில் உள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் எழுதி கிழித்து எறியபட்ட சிறுசிறு காகித துகள்கள் கிழே கிடக்க, பெட்ரூமில் அழகாய் அலங்கரிக்கபட்ட மேஜையில் அமர்ந்துக் கொண்டு தன் மனதின் சொற்க்களை வழக்கம் போல் கடிதமாய் எழுதிக் கொண்டிருந்தாள் கதையின் நாயகி சிவசத்யா.
மீன் போன்ற அகன்ற அழகிய விழிகளும் வில் போன்ற வளைந்த அடர்த்தியான புருவங்களும் கூர் நாசியும் சிவந்த உதடுகளும் சிறிய நெற்றியும் இடையை தாண்டிய கூந்தலும் சராசரி உயரத்துடனும் மாநிற மெல்லிய தேகத்துடன் பார்ப்போரை கவர்ந்திழுப்பவள்.

அனைவரிடமும் அழகாய், அளவாய், அன்பாய் பேசுபவள். யாரையும் புண்படுத்தும்படி எப்பொழுதும் ஒரு சொல் உதிர்க்கமாட்டாள். தன் நண்பர்களிடம் கலகலப்பாய் நட்பு பாராட்டக் கூடியவள். நண்பர்களுக்கும் சிவசத்யா என்றால் கொள்ளை பிரியம். இவளின் நட்பு வட்டாரங்கள் பற்றி கூற வேண்டும் என்றால், எண்ணிக்கையில்லாம்ல் நீண்டுக் கொண்டே செல்லும் அளவிற்க்கு எண்ணிக்கையற்ற நண்பர்களை கொண்டவள். செல்லும் இடங்களில் எல்லாம் நண்பர்களை தேடிக் கொண்டும் அவர்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டும் இருப்பவள். அதலாலே பழகுவோருக்கு சிவசத்யாவை மிகவும் பிடித்தமாகி போகும்.

'இதோட, இது எத்தனாவது லெட்டர்ன்னு தெரியல ஆனாலும் எழுதுறேன். தினமும் இதுவே எனக்கு வழக்கமா போச்சு ஆனா, உனக்கு என்னைப பத்தி தெரியுமான்னுக் கூட தெரியல, நியாபகம் இருப்பேனான்னும் தெரியல. சரி அதவிடு, இது என்னோட தினமும் புலம்பல்தானே, நான் ஒரு புது முடிவு எடுத்துருக்கேன் அது என்னன்னுதானே கேக்குற?? சொல்றேன், இனி உன்ன பத்தி நினைக்கமாட்டேன், உன்ன நினச்சு எனக்குள்ளையே பேசிக்கமாட்டேன், அழுகமாட்டேன், சிரிக்கமாட்டேன், தூங்கமாட்டேன், சாப்டமாட்டேன்,...etc இப்படி எதுமே பண்ணமாட்டேன். நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருக்க போறேன். என்ன நான் சொன்னத கேட்டு சிரிக்கிறீயா?? கொன்றுவேன்..' என எழுதியவளின் உதட்டில் புன்னகையும் கண்களில் இருந்து சிறு கண்ணீர் துளிகளும் கடிதத்தில் விழ மீண்டும் எழுத துவங்கினாள்.

'என்ன என்னால இருக்க முடியாதுன்னு சிரிக்கிறீயா?? முடியாதுதான், இருந்தாலும் ட்ரை பண்ணபோறேன். உன்ன பாக்குறத்துக்கு முன்னாடி என் வாழ்க்கை அவ்ளோ அழகா சந்தோசமா சோகம், வலி, வேதனை, அழுகை, தனிமை, மறைப்பு(மறைத்தல்) முக்கியமா இந்த ‘காதல்’ இப்படி எதுவுமே இல்லாமா போய்டு இருந்துச்சு. ஆனா, நான் எப்போ உன்ன பாத்தேனோ அப்போ அந்த நொடியில் இருந்து எல்லேமே தலகீழா மாறி இப்படி, என்னைய தனிமைல நிக்க வச்சு வேதனைய கொடுத்துட்டு போய்ட்ட...' என எழுதியவளின் கண்ணீர் அதிகமாக கையில் உள்ள பேனாவை தளர்தி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு மீண்டும் எழுத துவங்கினாள்.

'இதுல என்ன ஒரு கொடுமைன்னா?? இந்த வேதனைய என்னால யார்கிட்டையும் சொல்லவும் முடியல, உன்னகிட்டவும் சொல்லவும் முடியல. சரி, இதையும் விடு நான் புலம்ப ஆரம்பிச்சேன்னா புலம்பிட்டே இருப்பேன். அப்றம், உனக்கே ஃபோர்(Bore) அடிச்சு இவளுக்கு இதே வேலையா போச்சுன்னு திட்ட ஆரம்பிச்சுடுவ' என எழுதியவளின் உதட்டில் மீண்டும் சிறு புன்னகை பூத்தது.

'நான் என்ன சொல்ல வந்தேன்னா, இதுதான் நான் உனக்கு எழுதுற கடைசி லெட்டர். இனி எப்பவும் எழுதமாட்டேன். உன்ன மறக்க ட்ரை பண்ண போறேன் குட் பாய். அப்றம், நான் போறத்துக்கு முன்னாடி கடைசியா சொல்றேன் I LOVE YOU and I MISS U SO MUCH விபு.' என எழுதி முடித்தவளின் கண்களில் கண்ணீர் நிற்க்காமல் வழிய துவங்க தன் கண்களை இறுக்கமாய் மூடி அதை கட்டுபடுத்த முயற்சி செய்ய அம்முயற்ச்சி தோல்வியையே சந்தித்தது. சிறிது நேரம் அழுதவள் தன் முகத்தை துடைத்துவிட்டு லெட்டரை எடுத்து மீண்டும் படித்து "குட் பாய் I Miss You விபி" என்றுவிட்டு வழக்கம் போல் கடித்ததை சுக்கு நூறாய் கிழித்து தரையில் எறிய அது சிறுசிறு துகள்களாய் பறந்து அந்த அறையில் பரவியது.

பின் பாத்ரூமிற்க்கு சென்று தன் முகத்தை அலம்பியவள் பெட்டில் படுத்து போர்வைக்குள் தன்னை முழுவதும் ஒளித்துக் கொண்டு சிறிது நேரம் முழித்தபடி படுத்திருக்க, அவனின் முகம் கண்முன் தோன்றச் செய்யவும் வேகமாய் போர்வையை விலக்கி எழுந்தவள் கிட்சனிற்க்கு சென்று காபியை கலக்க துவங்கினாள்.
காபியை கலந்து முடித்து ஒரு சிப் அருந்தியதும் 'சர்க்கரை கொஞ்சம் போடனும்' என நினைத்தபடி சர்க்கரையை எடுத்தவளுக்கு "என்னதான் காபில சர்க்கரை கரைக்ட்டா இருந்தாலும் எக்ஸ்ட்ரா ஒரு ஸ்ப்பூன் போட்டு காபி குடிச்சா.. அப்..பா..! அதோட டேஸ்ட்டே தனிதான்" என்ற அவனின் வார்த்தைகள் நினைவு வரவும் காபி கப்பை வேகமாய் தரையில் வி்ட்டேறிந்துவிட்டு பால்கன்னியிற்க்கு சென்று வானத்தை வெறிக்க துவங்கினாள்.

"இதுவும் நல்லாதான் இருக்கும், வெளில வானத்த பாத்துட்டு நம்ம மனசுக்கு புடிச்சவங்க இல்ல அப்டின்னா, மனசுக்கு புடிச்ச விசியத்த நினைச்சு வானத்த பாத்துட்டு நின்னா நிம்மதியாவும் இருக்கும் மனசுக்கு அமைதியும் கிடைக்கும் அதோட சேர்த்து அவங்க நம்ம பக்கத்துல இருக்க மாதிரியும் இருக்கும்" என்ற அவனின் வார்த்தைகள் மீண்டும் நினைவு வரவும் தன் கண்களை மூடி தன் முன்னால் இருக்கும் கம்பியை இருக்கமாக பற்றியவளின் கண்களில் கண்ணீர் வர துவங்கியது.

'ஒரு நாள்ல ஒரு நொடிக் கூட உன்னோட நினைவு வராம இருக்கமாட்டேங்குதேடா?? இப்படி இருக்கும் போது நான் எப்படி உன்ன நினைக்காம இருக்குறது?? சொல்லு!! நான் செய்கிற ஒவ்வொரு விசியத்துலையும் நீ இருக்க.. நான் பாக்குற ஒவ்வொரு விசியத்துலையும் நீ தெரியுற.. இப்படி நீ எங்கையோ ஒரு இடத்துல இருந்துட்டு என்னைய கொஞ்ச கொஞ்சமா ஒவ்வொரு நொடியும் கொன்னுட்டு இருக்க முடியலடா.. நான் உன்ன பாக்கனும், பேசனும், என்னோட காதல சொல்லனும்.. ஆனா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லாம போச்சு ம்ப்ச்...' என நினைத்தபடி உள்ளே ஓடியவள் பெட்டில் படுத்துக் கொண்டு அழ துவங்கினாள். பல மணிநேரமாய் அழுது ஓய்ந்தவள் தன்னை அறியாமல் உறங்கியும் போனாள்.
சூரியன் தன் கதிர்களை மெதுவாய் பூமியில் படரவிட்டு தன் வருகையை அனைவருக்கும் அழகாய் தெரியபடுத்த சிவசத்யாவிற்க்கு ‘ஏன் விடிந்தது?’ என்பது போல் இருந்தது. ‘எப்போது விடியும்?’ என காத்திருந்த காலங்கள் சென்று ‘ஏன் விடிகிறது?’ என்ற காலம் வந்ததை நினைத்து கடந்த நான்கு வருடங்களாய் கவலைபட்டு அழுத்தும் பழகியும் போனது அவளுக்கு.

வழக்கம் போல் எழுந்து கண்களை திறக்காமல் சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் மெதுவாய் கண் விழிக்க முதலில் அவள் கண்களில் பட்டதென்னவோ முதல் நாள் இரவு கிழித்து எறிந்த காகித துகள்களே “விபு” என உதடுகள் தானாய் பெயரை உச்சரிக்க கண்களிலோ நீர் வெளிவர துடித்தது. இருப்பினும் அதை கடின உள்ளிழுத்தவள் எழுந்து தன் காலை வேலைகளை முடிக்க சென்றாள்.

சிறிது நேரம் கழித்து தன் தலையை துவட்டியபடி வெளியே வந்தவளின் கண்ணில் மீண்டும் காகித துகள்கள் பட பெருமூச்சுவிட்டபடி தன் அறையை விட்டு வெளியே வந்தவள் வழியில் மற்ற அறைகளில் கிடந்த காகித துகள்களை பார்த்துக் கொண்டு கிச்சனிற்க்குள் (Kitchen) நுழைய அங்கு இரவு விட்டேறிந்த காபி கப் சிறுசிறு சில்லாய் சிதறிக் கிடக்க சிந்திய காபி காய்ந்து அதை சுற்றிலும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தது.

“உன் கோபத்த குறைக்க பாரு சத்யா என்னதான் நீ நல்லா பேசுனாலும் பழகுனாலும் கோபம் வந்தா என்ன பண்றன்னே தெரியாம பண்ற அது எவ்ளோ பாதிக்கும்னு உனக்கு தெரியமாட்டேங்குது கோபத்த குறைக்க முயற்ச்சி பண்ணு” என்ற தன் தாய் சங்கரியின் வார்த்தைகள் நினைவு வர

“ நான் எங்கிருந்து கோபத்த குறைக்கிறது அதுக்குதான் வழியே இல்லாம இருக்கே…” என கூறிக் கொண்டவள் அதை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினாள்.
ஞாயிற்றுக் கிழமை என்பதால் வேலைகளை பொறுமையாய் செய்து காலை உணவை தயார் செய்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தவளின் ஃபோன் அலற அதில் அம்மா என்றிருக்கவும் உதடுகள் உயிரற்ற புன்னகையை உதிர்த்தது.

“என்னம்மா எழுந்துட்டியா…?”

“எழுந்துட்டேன்.. ம்மா”

“சாப்டச்சா..?”

“ஆச்சு”

“ஏன் ஒரு மாதிரி பேசுற? என்ன ஆச்சு?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நான் நல்லாதான் பேசுறேன்..”

“நான் உன் அம்மாடி அது உனக்கு தெரியும் தானே.. என் பொண்ணோட பேச்சு எனக்கு தெரியாதா?”


தொண்டையை அடைத்த அழுகையை கடினபட்டு முழுங்கியவள் “அட என்னம்மா.. நீ எப்போ பேசுனாலும் இதே சொல்லிட்டு இருக்க..? சரி ராம் என்ன பண்றான்..?” என சகஜமாய் பேசுவதுபோல் குரலை மாற்றி பேசினாள். இந்த நான்கு வருடங்களில் இதுவும் பழகிய ஒன்றே.

“உன் அண்ணன் தானே அவன் பண்ற அழுச்சாட்டியம் தான் தாங்க முடியல..”

“ஏன்ம்மா என்ன பண்றான்?”

“ உன் அண்ணிகிட்ட ஃபோன் பேச ஆரம்பிச்சான்னா.. ஓயாம நேரம் காலம் தெரியாம பேசிட்டே இருக்கான்.. அந்த பொண்ணும் பாவம் எவ்வளவு நேரம் பேசும்..?”
என பாவமாய் கூறினார்.

சிரித்தவள் “அதெல்லாம் கண்டுக்காதம்மா.. கல்யாணம் ஆகுற வரைக்கும் அவங்களாம் அப்படித்தான்..” என்று கூறவும்

“அதுசரி இந்த காலத்து பிள்ளைங்கள புரிஞ்சுக்கவே தனி காலம் ஒதுக்கனும் போல..” என்றவர் “சத்யாம்மா.. சம்மந்தி நேத்துக் கூட கேட்டாங்கடா.. பொண்ணோட தம்பிக்கு.. நீ பொண்ணு பாக்குறப்போதான் ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி வரலன்னு சொல்லிட்ட. அண்ணன் கல்யாணத்தவிட அப்படி என்ன முக்கியமான வேலைன்னு தெரியல எனக்கும் தெரியல அப்படி வந்திருந்தா கூட பையன நீ பாத்துருப்ப, உனக்கும் கண்டிப்பா புடிச்சுருக்கும். இந்நேரம் இரண்டு பேர் கல்யாணத்தையும் ஒன்னாக்கூட முடிச்சிருக்கலாம்.” என்றதும்

“அம்மா நான் பலதடவ சொல்லிடேன்.. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு.. நீங்க மறுபடியும் மறுபடியும் அதையே கேட்டுட்டு இருக்காதிங்க. அப்றம், உண்மையாவே எனக்கு அன்னைக்கு லீவு கிடைக்கல. நான் ராம் கிட்டையும் அதுக்கு சாரி கேட்டுட்டேன். நீங்க தய்வுசெய்து என் கல்யாணத்த பத்தி மட்டும் பேசாதிங்க” என கோபமாய் கூறினாள்

“சின்ன பிள்ள மாதிரி பேசத சத்யா தங்கச்சிய விட்டுட்டு அண்ணனுக்கு கல்யாணம் பண்ணா.. ஊர் என்ன பேசும்? நீ என்ன சின்ன பிள்ளையா? சரி, பொண்ணு சின்ன பொண்ணா இருக்கு அதுனால அண்ணனுக்கு முதல்ல கல்யாணத்த முடிக்கலாம்னு பண்றதுக்கு. அதையும் கூட உன் பிடிவாதத்துக்காக ஒத்துகிட்டோம். இப்போ அவங்களே வாய்விட்டு கேக்குறாங்க பையனும் நல்ல பையனா இருக்கான். பாத்தவொடனே எங்களுக்கும் புடிச்சு போச்சு கண்டிப்பா உனக்கும் புடிக்கும் சத்யா. நான் ராம்கிட்ட சொல்லி பையனோட ஃபோட்டோ அனுப்ப சொல்றேன் நீ பாத்துட்டு சொல்லு.”

“நீதான் சின்ன பிள்ளை மாதிரி பேசுற.. அப்படி உங்களுக்கு புடிச்சு இருந்தா அந்த நல்லவன நீங்களே வச்சு மெச்சிக்கோங்க. எனக்கு இங்க எதாவது ஃபோட்டோ வந்துச்சுன்னு வை நான் மனுசியாவே இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்.”
என கண்டிப்புடன் கூறினாள்.

“நீ ஒரே ஒரு தடவ மட்டும் பாத்துட்டு சொல்லேன்… கண்டிப்பா உனக்கு பிடிக்கும்.”
“ தய்வுசெய்து என்னைய போட்டு கம்ப்பல்(Compel) பண்ணாதம்மா.. ப்ளீஸ்!!”
என கெஞ்சினாள்

“சரி நீ எப்போ ஊருக்கு வர? இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம்.” என வெற்று குரலில் கேட்க

“இன்னைக்கு நைட்(Night) கிளம்பி நாளைக்கு மார்னிங் விடிய காலைல அங்க இருப்பேன்.”

“இத ஏன் சத்யா முன்னாடியே சொல்லல்ல?”
என சந்தோசமாய் கேட்க

“ம்ம்.. நான் சர்ப்ரைஸா(Surprise) வரலாம்னு பாத்தேன். சரி நீ கோபமா இருக்கியே உன்னைய சமாதானம் படுத்தலாமேன்னு இப்போ சொன்னேன் என்ன ஹாப்பி(Happy)தானே?” என மென்னகையுடன் கேட்டாள்.

“எல்லை இல்லாத அளவுக்கு சந்தோசமா இருக்கு. என் பொண்ண ஒரு வருசமா பாக்காம இருந்து பாக்க போறேன்.” என கண்ணளில் வழியும் ஆனந்த கண்ணீரை துடைத்தபடி கூறினார்.

“சரி.. சரி.. அழாத.. அழாத சங்கரி.. நீ அழுகலாமா..?” என கிண்டலுடன் கேட்டாலும் தன் தாயை ஏங்க வைத்ததை நினைத்து என்றும் போல் இன்றும் வருந்தினாள்.

“போடி.. வாலு.. இரு அப்பாட்ட கொடுக்குறேன்” என்றார்.

“ஹாலோ.. சத்யாம்மா.. என்னடா வழக்கம் போல திட்டு மழை பொழிஞாச்சா..?” என கேட்டார் சிவசத்யாவின் தந்தை ராஜன்.

“ஆமாப்பா.. இன்னைக்கு சங்கரி கொஞ்சம் அதிகமாவே பொழிஞ்சுருச்சு..” என சிரிப்புடன் கூற

“அதுசரி.. என்னடா இன்னைக்கு வரதா அம்மா சொல்றா? உண்மையா இல்ல வழக்கம் போல வரேன்.. வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வரலன்னு சொல்லிடுவியா?”

“இல்லா மிஸ்டர் ராஜன் கண்டிப்பா வருவேன் லீவ் சொல்லிட்டேன்.”

“நிஜமாவா..? அப்போ கார்ல வராதடா.. பஸ்ல இல்ல ட்ரைன்ல(Train) வா சரியா?”
என மகிழ்ச்சியுடனும் கண்டிப்புடனும் கூறினார்.

“இல்லப்பா.. கார்ல தான் வரேன் பஸ்ஸூம் ட்ரைனும் கும்பலா இருக்கும் ஃவெஸ்டிவல் டைம்(Festival Time) வேற.. சோ, நான் பாத்து பத்திரமா வந்துருவேன் நீங்க கவலபடாதிங்க. ஸ்பீடா கார் ஓட்டமாட்டேன் ஓகேவா?”

“நாங்க சொன்னாவே நீ கேக்கமாட்டேங்குற. என்னம்மோ நீ பத்திரமா பாத்துவாடா.. ஸ்பீடா ஓட்டாத.. ஸ்பீடா ஓட்டாத..”
என கவலையுடன் எச்சரித்தார் .

“சரிங்க ராஜன்.. சரிங்க ராஜன்.. நீங்க கவலபடாதிங்க. முன்னாடி மாதிரிலாம் நான் ஸ்பீடா ஓட்டுறது இல்ல.”

“ஆமாடா.. என் பொண்ணு முன்னாடி மாதிரி இல்லதான்.”
என்றார் கவலையுடன்.

“சரிப்பா.. எனக்கு ஆபிஸ்லெந்து கால் வருது.. நான் கிளம்பும் போது கால் பண்றேன்.” என வராத காலை வந்தாதாக கூறவும் தன் மகளின் செயலை புரிந்துக் கொண்டு அமைதியாய் கட் செய்தார்.

சிறிது நேரம் அமைதியாய் கையில் வைத்திருந்த சாப்பாட்டு தட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தவள் உணவை உண்டுவிட்டு ஷாப்பிங் செய்வதற்க்காக கிளம்பினாள். ஒரு வருடத்திற்க்கு மேல் தன் குடும்பத்தை பார்க்க போவதால் ஒவ்வொருவருக்கும் பிடித்தார் போல் பார்த்து பார்த்து வாங்கினாள்.

ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்க்கு வரவே இரவு ஆகிவிட. வாங்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்து பேக் செய்து கொண்டிருக்க ராம் கால் செய்தான்.

“சொல்லுடா அண்ணா..”

“என்ன குட்டி சாத்தான் கிளம்பிட்டியா? இல்ல எப்பவும் போல் வரலயா?”

“அடேய்.. கிளம்பிட்டு இருக்கேன்டா..”
என சினுங்கினாள்.

“அடேங்கப்பா.. கிளம்பிட்டியா..? நல்லபடியா வந்து சேர்ந்தா சரிதான்” என நக்கலாய் கூறினான்.

“வரேன்.. வரேன்.. அப்பாட்ட சொல்லிடு இன்னும் 5 மினிட்ஸ்ல கிளம்பிடுவேன்”

“சரி… நான் சொல்லிறேன் நீ பாத்துவா.. பொருமையா வா”
என கட் செய்தான்.

பின் வீட்டிலிருந்து கிளம்பியவள் காரை ஸ்டார்ட் செய்து FMமை ஆன் செய்ய அதில் RJ ஒருவள் பேசிக் கொண்டிருந்தாள் “ஹாய்.. ஹலோ.. மக்களே நான் உங்கள் RJசிவானி பேசுறேன். இன்னும் இரண்டு வாரத்துல வெலன்டன்ஸ்டே வர போகுதுங்க. நிறைய பேர்க்கு தன்னோட காதல காதலன்கிட்டயோ இல்ல காதலிகிட்டயோ சொல்லி அழக கொண்ட்டுவாங்க. இன்னும் சில பேர் எப்டின்னா தூரமா நின்னே லவ்வர பாத்துட்டு சொல்ல தயக்கத்தோடவும் பயத்தோடவும் வெலன்டன்ஸ்டேவ கொண்டாடுவாங்க. என்னங்க புரியலயா? அதாங்க ஒன் சைட் லவ்வர்ஸ்.. அவங்களலாம் லெஜண்ட் இல்லங்க… அல்ட்ரா லெஜண்ட்ன்னே சொல்லலாம். அவங்கதான் யாருக்கும் தெரியாம ரொம்பவே அழகா லவ் பண்ணுவாங்க. நம்ம ஷோல இன்னைக்கு அந்த ஒன் சைட் லவ் அல்ட்ரா லெஜண்ட்ஸ்ஸ பத்தித்தாங்க பேச போறோம்.. நம்ம எல்லாருக்குள்ளையும் ஒரு மறைக்கபட்ட புதைக்கபட்ட காதல்ன்னு ஒன்னு கண்டிப்பா இருக்கும். இல்லன்னு மட்டும் சொல்லாதிங்க அது பொய்யின்னு உங்களுக்கும் தெரியும்… எனக்கும் தெரியும்... அப்படியாபட்ட மறைக்கபட்ட புதைக்கபட்ட காதல என் கூட ஷேர் பண்ணுங்க. ஏன் நீங்க பேசுறத உங்களோட அந்த ஒரு தலை காதலுக்கு உரியவர் அத கேட்டுட்டுக் கூட இருக்கலாம். சோ,வாங்க ஷேர் பண்ணுங்க இந்த வெலன்டன்ஸ்டேவ கோலகலமா கொண்டாடுங்க. நீங்க என் கூட ஷேர் பண்ண்ணும்னா 9xxxxxxxxx நம்பர்க்கு டையல் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க ” என பேசி முடிக்க

சிவசத்யா காரை ஓட்டியபடி தன் கடந்த கால நினைவிற்க்கு சென்றாள்.


காதல் தொடரும்….???.
 
உங்களுடைய "சொல்லா
காதல் நீயே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நாகவேணி டியர்
 
Last edited:
உங்களுடைய "சொல்லா
காதல் நீயே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நாகவேணி டியர்
???????tq tq so much sis
 

Advertisement

Top