Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருத்தேனடி உனது காதலுக்காக!!- 20

Advertisement

Miloni

Active member
Member
அப்பா புதிதாக நகரத்தின் மையத்தில் பில்டிங் கட்டுகிறார் இல்லையா அங்கேயே டெக்ஸ்டைல்ஸ் ஷாப்பை கொண்டு போகிற ஐடியா இருக்கிறது..

உனக்கு பிடிக்கவில்லை எனில் இங்கேயும் தொடரலாம் "எனக்கா" என அவள் கேள்வியாக நோக்க ஆமாம் இல்லை எனில் நீ தான் உன் பொட்டிக்கை விட்டு வரமாட்டாயே..

இன்னொரு கேலி இல்லையெனில் என்னை கேட்க வேண்டிய அவசியம் என்ன அவள் முகத்தைப் பார்த்திருந்தவன் இளகி "என்னடா" உனது பொட்டிக்கின் மேல் சென்டிமென்ட் இருக்கும் என நினைத்தேன்..

உண்மையாகத்தான் கேட்கிறானா ஆனால் என்ன பதில் சொல்வது என்று ஒன்றும் தோன்றாததால் அமைதியாக இருந்தாள்..

அவனே ஒரு டீ போட்டு தருமாறு கேட்க எழுந்து சென்று டீ போட்டு எடுத்து வந்தாள் டீயை குடித்து நன்றாக இருக்கிறது என பாராட்டி விட்டு அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தினான்..

நீ டீ குடிக்க வில்லையா என கேட்க அவள் கூச்சத்துடன் இல்லை உங்களுக்கு மட்டும் தான் போட்டேன் எனவும் அவன் குடித்திருந்த டீயை அவளது வாய்க்கு இடம் மாற்றினான் வெட்கத்துடன் அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள்..

அதன்பிறகு நாட்கள் வழக்கம்போலவே சென்றன..

ஒருநாள் அவனுடைய ஐடி கம்பெனியில் வேலை பார்த்த வானதி என்ற பெண் எம்டி தன்னை கல்யாணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறி பிரச்சனை செய்யவும் போலீஸ் வரை சென்று அவளை வேலையிலிருந்து அனுப்பி விட்டதாகவும் ஐடி கம்பெனியில் வேலை செய்த ஒரு பெண் செல்வியிடம் சொல்ல செல்வி சைதன்யாவிடமும் சுந்தரியிடமும் சொன்னாள்..

உடனே சுந்தரி அந்த பெண் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்கும் அக்கா நம்முடைய எம்டி சாரை நாம் இவ்வளவு நாட்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நம்மிடம் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்கிறார்..

அதன்பிறகு அவர்கள் ஐடி கம்பெனியில் விசாரித்தவரை யாருக்கும் என்ன நடந்தது என தெரியவில்லை அந்த பெண் தான் சரியில்லை என பெருமளவு மிதுவுக்கு தான் சப்போர்ட் செய்தார்கள்..

ஓரிருவர் மட்டும் எல்லோரிடமும் பணத்தை காட்டி சரி செய்திருப்பார்கள் பெரிய பணக்காரர்கள் அல்லவா எனவும் சொன்னார்கள்..

மிதுர்வனும் இரண்டு நாட்கள் ஏதோ ஒரு இறுக்கத்துடனேயே இருந்தான்..

அதனால் அவனிடம் செல்லவும் அவளுக்கு வருத்தமாக இருந்தது நாம் போய் அவனை தேவை இல்லாமல் சங்கடப்படுத்த வேண்டாமே என்று நினைத்தாள் அவனும் அவளை அதிகமாக அழைக்கவில்லை..

ஒன்றிரண்டு முறை போனாலும் அவள் எதைப்பற்றியும் பேசாமல் சாதாரணமாக வேலைகளைப் பற்றிய விளக்கம் மட்டும் சொன்னாள்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்ணில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அது அந்தப் பெண் வானதியை பற்றி விளக்கம் கேட்பேன் என்று நினைத்தானா இல்லை அவனுக்கு ஆறுதல் சொல்வேன் என்று நினைத்தானா என்பது தெரியவில்லை..

எது செய்தாலும் அது அவனுக்கு வருத்தத்தையே தரும் ஆறிய புண்ணைக் கீறுவதுபோல அது வீணான வேலை...

கிளம்புமுன் அவனைப் பார்த்து சிறிது தயங்கிவிட்டு எது நடந்தாலும் மறந்துவிட்டு வேலையில் கவனத்தை செலுத்துங்கள் சார் எனவும் பழைய புன்னகை ஒன்று அவனிடம் தோன்றியது..

அவளது அறைக்கு வந்து வேலைகளை முடித்து விட்டு பொட்டிக் சென்றாள்.. சந்துவை இப்போது பார்ப்பதே அரிதாக இருந்தது அவளுக்கு..

பொட்டிக் வேலைகளுடன் விழா வேலைகள் என அவன் வேலைகள் அதிகமாகிவிட்டது..

பொட்டிக்கில் ஒரு கஸ்டமரை அட்டென்ட் பண்ணி விட்டு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சோர்வுடன் சந்து வந்து சேர்ந்தான்..

அவனிடம் என்னடா வேலை ரொம்ப அதிகமா என ஆதரவுடன் தலையை வருடி கேட்டாள்..

ஆமாம் தனு செட் போட ஆட்களை கொண்டு வருவது கடினமாக இருக்கிறது பொட்டிக் ஆர்டர்கள் வேறு நீ இல்லை என்றால் திணறிப் போயிருப்பேன்..

கணக்கு வழக்குகளை ஆராய்ந்த போதும் சைதன்யாவின் முகத்தில் யோசனையை கண்டு என்ன தனு உன் முகத்தில் எப்பொழுதும் இல்லாத குழம்பம் புதிதாக வந்திருக்கிறது..

அவளும் சிறிது தயங்கிவிட்டு நடந்த எல்லாவற்றையும் சந்துவிடம் கூறினாள்..

தனு அவர் உன்னைக் காதலிக்கிறார் என்பது உனக்கு நிச்சயம் தானே..

ஆமாம் சந்து அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக இன்னும் சொல்லாமல் இருக்கிறார் ஆனால் அவர் காதலிப்பது எனக்கு நிச்சயம் தான்..

யோசனையுடன் ஒரு சில நிமிடம் இருந்த சந்தோஷ் சரி தனு இதைப் பற்றி யோசிக்காதே நமக்கு தெரியாத விஷயத்தில் நாம் முடிவு எடுப்பது கடினம் எந்த உரிமையும் இல்லாமல் அவரிடம் கேட்பதும் எந்த அளவுக்குப் பலன் தரும் என தெரியவில்லை..

சீக்கிரம் உனக்கான பதிலை சொல்லச் சொல் இல்லை என்றால் கேட்டுப் பெறு அவர் என்னை காதலிக்கிறார் கண்களைப் பார்த்தே தெரிந்துகொண்டேன் என எத்தனை நாட்கள் சொல்லிக் கொண்டிருப்பாய்..

அந்த வானதியை பற்றி நன்றாகவும் கேள்விப்படவில்லை அதனால் அவளை வைத்து அவரிடம் கேள்வி கேட்பதும் தவறு..

ஆனால் ஒரு விஷயம் தனு நமக்கு இந்த கான்ட்ராக்ட் உன்னை காதலித்ததற்காகவா இல்லை நம்முடைய திறமைக்காகவா அதை பற்றி என்ன நினைக்கிறாய்..

என்ன சந்து இப்படி கேட்கிறாய் அவரை நான் இந்த கம்பெனியில் சேருவதற்கு முன் பார்த்ததில்லையே அவருக்கும் அப்படித்தானே (லிப்டில் பார்த்த போது கூட வேலையில் சேர்ந்த பிறகு தானே) என சொன்னாள்..

அப்படியே என்னை இதற்கு முன் தெரிந்திருந்தாலும் திறமை இல்லாத ஒருவரை நம்பி கண்டிப்பாக அவர் வேலையை ஒப்படைத்திருக்க மாட்டார்..

அவனும் தலையாட்டிவிட்டு சரி தனு எதுவும் குழப்பிக் கொள்ளாதே இப்பொழுது நாம் இந்த விழாவை நல்லபடியாக முடிப்போம் பிறகு இதைப் பற்றி யோசிப்போம் என்றான்..

அவனுடன் பேசிக்கொண்டே பார்க்கிங் ஏரியாவுக்குள் வந்து அவள் ஸ்கூட்டியை எடுத்து செல்லும் வரை பார்த்திருந்தான் அதே போல அவர்களை மிதுவும் பார்த்திருந்தான்..

சந்துவுடன் பேசிய பிறகு சைதன்யாவிற்கு இப்போது கொஞ்சம் மனது தெளிவாய் இருந்தது..
 
மிதுவைப் பற்றி வானதி என்ற பெண் தப்பாய் பேசிய புரளி வீணாவின் வேலையா?
 
மிதுவைப் பற்றி வானதி என்ற பெண் தப்பாய் பேசிய புரளி வீணாவின் வேலையா?
இல்லை பணத்திற்காக சில பேர் அப்படி செய்வதுண்டே அதில் ஒருத்தி..
 
அருமை, மிது, சந்துவுடன் சைதன்யா பேசுவதை பார்த்து இன்னும் பொறாமை படுகிறானோ ???♥️♥️♥️♥️???
 
அருமை, மிது, சந்துவுடன் சைதன்யா பேசுவதை பார்த்து இன்னும் பொறாமை படுகிறானோ ???♥️♥️♥️♥️???
மிக்க நன்றி sis.. சாதாரணமாக கூட பார்த்திருக்கலாம் sis..
 
Top