Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!- 19

Advertisement

Miloni

Active member
Member
சைதன்யா ஏதோ யோசனையிலேயே வந்தவள் கார் நிற்கவும் என்னவென்று புரியாமல் அவனை பார்க்க அவளை முன்புறம் வந்து ஏற சொன்னான்..

வெட்கத்துடன் சரியென தலையசைத்து எதுவும் சொல்லாமல் முன்புறம் வந்து ஏறிக் கொண்டாள்..

கார் சிறிது தூரம் செல்லும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை அவள் யோசனையிலேயே வருவதைப் பார்த்து தலையில் தட்டி இந்த மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என கேட்டான்..

எப்படி கேட்பது என தயங்கினாள் பிறகு அவனே வீணா ஏதாவது சொன்னாளா என்று கேட்டான் என்ன சொல்வது என தெரியாமல் அவனை பார்க்க அவள் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே அவள் எப்போதும் இப்படித்தான்..

எங்கள் எல்லோருக்கும் அவளைப்பற்றி தெரியும் அவள் பேசுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அத்தை மாமாவுக்காக நாங்கள் பொறுத்துப் போவோம் சின்ன வயதில் இருந்தே நானும் நிரஞ்சனாவும் அத்தையிடம் தான் வளர்ந்தோம்..

ரொம்ப நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்ததால் எங்களை அவர் குழந்தை போலவே வளர்த்தார் எங்கள் எல்லோருக்குமே அவர் மீது பாசம் அதிகம்..

சைதன்யா மனதிற்குள் அதனால்தான் யாரும் எதுவும் அவளை எதிர்த்து பேசவில்லையோ என நினைத்தாள்..

பிறகு அவளே தயக்கத்தை உடைத்து ஏன் லண்டனில் தொழில் தொடங்கி அது வெற்றிகரமாக இயங்கும் போது அதை விட்டுவிட்டு இங்கு வந்து விட்டீர்கள் என கேட்டாள்..

ஒரு சில நிமிடம் ஒன்றும் பேசாமல் சாலையில் கவனமாக காரை செலுத்திக் கொண்டிருந்தான் அவனின் தயக்கமும் புருவ முடிச்சுகளில் இருந்த யோசனையையும் பார்த்த பிறகு ஏன் கேட்டோம் என நினைத்தாள் சைதன்யா..

லண்டனில் இதுவரை நடந்ததை எண்ணி எப்படி சொல்வது என மனம் வருந்துகிறான் போலிருக்கிறது அப்படியானால் வீணா சொன்னது முழுதும் பொய்யில்லை வீட்டினர் யாருக்கும் அவன் எதற்காக லண்டனை விட்டு வந்தான் என்று தெரியாதபோது அவள் மிதுவை பற்றி பேசுவதை மறுக்கவும் முடியாது அதனால் தான் எல்லோரும் அமைதியாக இருந்திருக்கின்றனர்..

எது எப்படியோ இனி வரும் காலங்களில் எனக்கு உண்மையாக இருந்தால் மட்டும் போதும் வேறு எதையும் ஏன் பழசை பற்றிக்கூட இனி எதுவும் கேட்கப் போவதில்லை..

சைதன்யா ஒழுக்கத்தை ரொம்பவும் பெரிதாக கருதுகிறவள் தான் ஆனால் முன்பு செய்த தவறை எண்ணி வருந்துகிறவனை தண்டிப்பது தவறு என நினைத்தாள் அதைவிட அவன் மேல் கொண்ட காதல் அவளை அவ்வாறு யோசிக்க வைத்தது ஆறுதலாக அவன் கைகளைப் பிடித்து அழுத்தினாள்..

அவனும் புன்னகையுடன் அவள் கைகளில் முத்தமிட்டு எனக்கு உன்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன எல்லோரிடமும் சொன்னது போல் இல்லாமல் உன்னிடம் உண்மை மட்டும் சொல்ல நினைக்கிறேன்..

இப்படி ஒரே நேரத்தில் சொல்லி முடிக்கிற விஷயங்கள் அல்ல அது உன் முகத்தை கைகளில் ஏந்தி உன் கண்களை பார்த்துக்கொண்டே எல்லாம் சொல்ல வேண்டும்..

அதனால் கொஞ்ச நாட்கள் பொறுத்திரு கண்டிப்பாக உன்னிடம் எல்லாவற்றையும் சொல்கிறேன் எனவும் சரி என்று தலையாட்டினாள்..

அவள் வீட்டிலிருந்து சிறிது முன்னால் வண்டியை நிப்பாட்டி விட்டு இன்று நீ அப்சரஸ் போல இருக்கிறாய் தன்யா இப்படியே உன்னை பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது..

அவளை அணைத்து அவன் கண்கள், காது, கன்னம் என முத்தமிட்டு இறுதியில் இதழ்களில் வந்து நிலைத்தான்..

அவனை அவள் தடுக்கவும் இல்லை விலகவும் இல்லை இடைவெளியில்லாமல் முத்தம் தொடர்ந்து கொண்டிருக்க அவர்கள் வீட்டில் லைட் எரியும் வெளிச்சத்தை தொடர்ந்து கதவு திறக்கும் ஓசை கேட்டு இருவரும் விலகி அமர்ந்தார்கள்..

அது விலை உயர்ந்த வெளிநாட்டு கார் என்பதால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது அதோடு ஈபி காரர்கள் புண்ணியத்தில் சற்று நேரம் கரண்ட் இல்லாததால் அங்கு தெருவில் வெளிச்சமின்றி காணப்பட்டது இப்போதுதான் கரண்ட் வந்திருக்கும்போல அதனால்தான் எல்லார் வீட்டிலும் லைட் எரிகிறது..

அவள் வெட்கத்துடன் முகச் சிவப்புடனும் இறங்கி உள்ளே செல்ல பின்னாலேயே வந்தவன் அவர் பெற்றோர்களிடம் சிறிது நேரம் பேசி கிளம்பும் வரை அவள் கனவிலேயே மிதந்தாள்..

முகத்தை பார்த்தே புரிந்து கொண்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் விடைகொடுக்க வாசல்வரை வந்தவளிடம் என்னவென கேட்க வெட்கத்துடன் ஒன்றுமில்லை என வீட்டிற்குள் ஓடிவிட்டாள்..

சிரித்துக்கொண்டே சென்று காரை எடுத்தவன் விசிலத்தபடியே காரை ஓட்டி சென்றான்..

அடுத்து வந்த நாட்கள் எப்பொழுதும் போல சாதாரணமாக ஓடியது என்ன ஒன்று அடிக்கடி சைதன்யாவை அவன் அறைக்குள் அழைப்பதை வழக்கமாக்கி இருந்தான்..

எல்லோருடைய கவனமும் அவர்கள் மேல் இல்லாதவாறு பார்த்துக் கொண்டாள் அப்படியும் சுந்தரி கிறிஸ்டி போல ஓரிருவர் அவர்களை கண்டு கொண்டனர்..

அதுவும் கிறிஸ்டி அவர்கள் வீட்டுக்கு சென்று வந்ததிலிருந்து கிண்டல் செய்து கொண்டிருக்கிறாள் அவள் மூலம் விஷயம் அறிந்த சுந்தரியும் இப்போதெல்லாம் கிண்டல் செய்கிறாள்..

ஒருமுறை அவன் கூப்பிடுகிறான் என அவன் அறைக்கு சென்றால் அங்கு அவன் இல்லை எங்கே என்று தேடி ஓய்வெடுக்கும் அறைக்கு சென்று பார்த்தாள்..

சோபாவில் சோர்வுடன் அமர்ந்திருக்கும் அவனை கவலையுடன் பார்த்து என்னவென்று கேட்டாள் வேலை அதிகம் அதனால் தான் என அவன் சொல்ல இரண்டு தொழிலையும் ஒரே நேரத்தில் தொடங்கினால் வேலை அதிகமாக தான் இருக்கும்..

எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் நீங்கள் முதலில் உங்கள் ஐடி கம்பெனி தொடங்கி விட்டு பிறகுகூட டெக்ஸ்டைல் ஷாப்பை கொண்டு வந்திருக்கலாமே அவ்வாறு ஏன் செய்யவில்லை என வினவினாள்..

முதலில் அப்படி ஒரு ஐடியாவில் தான் இந்த காம்ப்ளக்ஸை தேர்ந்தெடுத்தேன் எதையோ சொல்ல வாயெடுத்துவிட்டு நிறுத்தி பிறகு இங்கு இதை நான் ஆரம்பிக்கவில்லை எனில் என்னை எப்படி பார்த்திருப்பாய் நானும் உன்னை பார்த்து விட்டு தான் இதையும் சேர்த்து தொடங்கினேன் என கேலியாக பார்க்க அவனை பொய்யாக முறைத்தாள்..

அவன் சொல்வது கேலியாக இல்லாமல் உண்மையாக இருந்தால் நன்றாக இருக்குமே என மனதுக்குள் நினைத்தாள்..
 
மிதுவும் சைதன்யாவும் பேசுவது நல்லாயிருக்கு
சைதுவிடம் மிது ஏதாவது மறைக்கிறானா?
 
Top