Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம் ...2

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 2.

பள்ளிப்பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கோமதி. சற்றே கறுத்த நிறம். அதுவே அவளது அழகைக் கூட்டிக் காட்டியது. வெண்மை நிற நீண்ட விழிகள். அதில் கருணையும், சாந்தமும் பிரதிபலித்தன. புரிந்து கொள்ள சற்றே சிரமப்படும் சிறு குழந்தைகளுக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தாள்.

"கோமதி! மணி ஆறரை ஆச்சுதும்மா! எல்லாருமே சின்னப் பிள்ளைங்க! வீட்டுக்குப் போயி சாப்பிட்டுப் படுக்கணும். அனுப்பும்மா" என்றாள் அம்மா கல்யாணி அன்பாக. அனைவரையும் அனுப்பினாள். அம்மா சில குழந்தைகளிடம் "உங்கம்மா கிட்ட ஃபீஸ் கேட்டு வாங்கிட்டு வா என்ன?" என்றாள்.

"ஏம்மா இப்படிப் பண்ற? நீயே அவங்க வீட்டுல போயிக் கேக்கலாம் இல்ல? அதை விட்டுட்டு இப்படி சின்னப் பிள்ளைங்க கிட்டப் போயி ஏன் பணம் விஷயம் பேசுற?"

"உனக்கு ரொம்ப இரக்க குணம் கோமதி! தொண்டை தண்ணி வத்த வத்த ரெண்டு மணி நேரம் சின்னப் பிள்ளைங்களுக்கு பாட்டு, ரைம்ஸ், ஏ பி சி டின்னு எல்லாம் சொல்லிக்குடுத்துட்டு காசு வாங்காட்டா எப்படி? நாம என்ன சமூக சேவை செய்யற நிலையிலியா இருக்கோம்?"

"அம்மா கொஞ்சம் நிப்பாட்டேன்! எனக்கு கொஞ்சம் சூடா காப்பி தரியா? தொண்டை வலிக்குது"

"வலிக்காம என்ன செய்யும்? பகல் முழுக்க ஸ்கூல்ல பிள்ளைங்களைக் கட்டிக்கிட்டு அழ வேண்டியது இருக்கு. சாயந்தரம் ஆனா டியூஷன். இப்படி ஓயாம உழைக்கணும்னு உன் தலையில கடவுள் எழுதிட்டான் போல இருக்கு! உங்கப்பா இருந்திருந்தா உனக்கு இந்த நிலை வருமா? ஹூம்!"

"சரி சரி! ஆரம்பிக்காதே! காப்பி தானே கேட்டேன். அதுக்கு எங்கியோ போயிட்டியே? விடு எனக்குக் காப்பியே வேண்டாம்"

"இப்ப காப்பி குடிச்சா ராத்திரி தூக்கம் வரது. அதனால் தொண்டைக்கு இதமா மிளகு, சுக்கு போட்டு கசாயம் கொண்டாரேன். அதைக் குடி. நல்லா இருக்கும்" என்று சொல்லி விட்டு உள்ளே போனாள்.

ரைம்ஸ் புத்தகம், கலர் கிரேயான்ஸ், சிலேட்டு, குச்சிகள் என பொருட்களை அழகாக அதனதன் இடத்தில் வைத்துக் கொண்டிருக்கும் போதே அம்மா கல்யாணி ஆவி பறக்க டம்ளரில் கசாயம் எடுத்து வந்தாள். அதை ஆவலோடு குடித்தாள் மகள். வறண்ட தொண்டைக்கு மிகவும் இதமாக இருந்தது அது.

"ராத்திரிக்கு ஊத்தப்பம் செய்யட்டுமாடி கோமதி?"

"வேண்டாம்மா! காலையில சுட்ட இட்லி எடுத்து வெச்சிருந்தியே? அதுவே போதும் நமக்கு"

"என்ன பொண்ணோ போ! உன் வயசுப் பொண்ணுங்க எல்லாம் விதம் விதமா உடுத்துறதும், விதம் விதமாச் சாப்பிடுறதும்னு இருக்கறப்ப, நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்க? உங்கப்பாவும் இப்படித்தான் இருப்பாரு! ஹூம்! அவரு மாதிரி ஒரு நல்ல மனுஷனைப் பாக்கவே முடியாது! வடிவேலு வாத்தியார்னா எல்லாரும் அவ்வளவு மரியாதை குடுப்பாங்க! எனக்கு தாலி பாக்கியம் இல்ல! இல்லைன்னா கல்லு மாதிரி இருந்த மனுஷன் வெறும் காய்ச்சலுக்கு பலியாவாரா?"

"இதையே எத்தனை தடவைம்மா சொல்லுவே?"

"மனசு தாங்கலைடி! ஏதோ நீ டீச்சர் டிரெயிங்க் முடிச்சு ஒரு வேலைக்குப் போன பிறகு தானே நாம நல்லா சாப்பிடவே ஆரம்பிச்சோம்! இனிமே எனக்கென்ன உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா என் கடமை முடிஞ்சிடும்! பார்ப்போம்!"

"என்ன பேசுற நீ? எனக்கு கல்யாணம் பண்ணிட்டா உன்னை யாரு பார்த்துப்பா? அந்தப் பேச்சையே எடுக்காதே!"

"எனக்கு என்னடி? அப்பாவோட பென்ஷன் வருது! என் ஒருத்திக்கு அது தாராளமா போதும். உனக்கு ஒரு குழந்தை பிறந்தா அதைப் பாத்துக்க நான் வந்துட்டுப் போறேன்."

"சரி அதை விடு! நான் டியூஷன் சொல்லிக் குடுக்கும் போது பரமசிவம் மாமா வந்தாரே! என்னமா சொன்னாரு?"

"எல்லாம் உன் விஷயம் தான் கோமதி! உன் கல்யாண விஷயமா அவர்ட்ட சொல்லி வெச்சிருந்தேன். அவருக்குத் தெரிஞ்ச ஒரு இடம் இருக்குன்னு சொன்னாரு அதைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தேன்."

"யாரும்மா? நம்ம ஊரா?"

"இல்லை சென்னையாம்! ஆனா அவங்களுக்கு பூர்வீகம் நம்ம ஊரு தானாம். பையன் வக்கீலுக்குப் படிச்சுட்டு நல்ல சம்பாதிக்கிறாராம். வீட்டுல அம்மாவும் மகனும் தானாம்."

"வக்கீலா? அப்ப நிறைய வரதட்சிணை கேப்பாங்களேம்மா? அதுவும் போக டிகிரி படிச்ச பொண்ணாத்தான் பார்ப்பாங்க"

"இல்லை கோமதி! நான் எல்லாம் விவரமாக் கேட்டுட்டேன். அவங்களுக்கு பணம் காசு முக்கியம் இல்லையாம். நல்ல குடும்பத்துப் பொண்ணா வேணும்னு பாக்கறாங்களாம்." என்றாள்.

லேசாக வெட்கம் வந்தது கோமதிக்கு.

"எனக்குக் கல்யாணமா? அதுவும் ஒரு வக்கீல் என் கணவராக வரப் போகிறாரா? எத்தனை சந்தோஷமாக இருக்கிறது நினைக்கும் போதே?" என்று நினைத்தவள் தலையைத் தட்டிக் கொண்டாள். "சீ! என்ன அவசரம்? இன்னமும் அவர்கள் யார் என்ன என்று எதுவும் தெரியவில்லை" என்று நினைத்தபடி உறங்கிப் போனாள்.

மறு நாள் லீவு ஆனதால் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வீட்டில் ஓய்வாக இருந்தாள் கோமதி.

"கோமதி! இன்னைக்கு பரமு அண்ணன் உன்னையும் என்னையும் அவங்க வீட்டுக்கு வரச் சொன்னாரு! மதியம் சாப்பிட்டுட்டுப் போயிட்டு வருவோமாம்மா?"

"நான் எதுக்கும்மா?"

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோட உறவுக்காரங்கள் இன்னைக்கு வரேன்னு சொன்னாங்களாம். நீ படிச்ச பிள்ள! உனக்கு என்ன கேக்கணும்னாலும் நேரில நீயே கேட்டுக்கலாம்னு அண்ணன் சொன்னாரு. அதான்." என்றாள்.

மதியம் மூன்று மணிக்கு அவர்கள் வீட்டிலிருந்து ஃபோன் வர கிளம்பினார்கள். கூடத்தில் ஒரு சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தனர் வயதான தம்பதியினர். அவர்கள் எதிரில் காப்பிக் கோப்பைகள் இருந்தன.

"இதோ வந்துட்டாங்களே பொண்ணும் அவங்க அம்மாவும்! வாங்கக்கா வாங்க!" என்று வரவேற்றாள் பரமு அண்ணனின் மனைவி.

"இவ தாங்க என் ஒண்ணு விட்ட தங்கச்சி கல்யாணி! இது அவ மக கோமதி! இவளுக்குத்தான் உங்க வீட்டுப் பையனைப் பாக்கறோம்" என்றார்.

"என்ன பாக்கற கல்யாணி! இவங்க தான் நேத்து நான் சொன்னேனே வக்கீல் பையன் அவனோட மாமாவும் அத்தையும். உனக்கு என்ன கேக்கணுமோ கேட்டுக்கோ" என்றார் பரமசிவம்.

அமர்ந்து கொண்டனர் தாயும் மகளும். வந்தவர்கள் பேச ஆரம்பித்தனர்.

"மரகதம் எனக்கு தூரத்து சொந்தம். ஆனா அவ சின்ன வயசுல வளர்ந்தது எல்லாமே எங்க வீட்டுல தான். ரொம்பக் கெட்டிக்கார பொண்ணு! அப்புறம் கல்யாணம் ஆனதும் சென்னை போயிட்டாங்க! அதுக்கப்புறம் அப்படியே தொடர்பு விட்டுப் போச்சு! நாலு நாளைக்கு முன்னால மரகதம் எனக்கு லெட்டர் போட்டுது. அதுல தனக்குக் கல்யாணத்துக்கு ஒரு மகன் இருக்கறதாகவும், அவனுக்கு நல்ல கிராமத்துப் பொண்ணா பாக்கணும்னு எழுதியிருந்தது" என்றார் அந்த மனிதர்.

"ஐயா! மாப்பிள்ளை பேரு என்னங்க?"

"ராகவன்! ராகவன் ஏம் ஏ பி எல். அவனுக்கு சென்னை ஹை கோர்ட்டுல நல்ல பிராக்டீசாம். மாசம் 80,000க்கு குறையாம வருமானம் வருதாம். சொந்த வீடு வாங்கக் கூட திட்டம் போட்டிருக்கானாம் பையன். ஆனா வரப்போறவளுக்கு பிடிச்சா மாதிரி இருக்கணும்னு வெயிட் பண்றானாம். ஃபோட்டோ அனுப்பல்ல" என்று பேசி விட்டு மூச்சு வாங்கினார்.

கோமதியின் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது. ஆனால் புத்தி கடிவாளம் போட்டது.

"ஐயா! நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது! நீங்க சொல்றதைப் பார்த்த ரொம்பப் பெரிய இடம் மாதிரி தெரியுது! அந்த அளவுக்கு செய்ய எங்கிட்ட வசதி இல்லைய்யா! ஒத்தைப் புள்ளை! நிறையச் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனா வசதி வேணாமாய்யா?" என்றாள் கல்யாணி.

"நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான். என் தங்கச்சி சீரு வரதட்சிணை பத்தியெல்லாம் ஒண்ணும் எழுதல்ல! அவ ரொம்ப எதிர்பார்க்க மாட்டான்னு தான் நினைக்கிறேன்." என்றார் பட்டும் படாமலும்.

"சார்! அவங்க ஃபோன் நம்பர் இருந்தா பேசிடுங்களேன். இந்த மாதிரி ஒரு பொண்ணு இருக்கு. வசதி கொஞ்சம் குறைச்சலான இடம். ஆனா பொண்ணு டீச்சர் டிரெயிங்க் முடிச்சிருக்கு, நல்ல குடும்பம். வரதட்சணை எவ்வளவு எதிர்பாக்குறேன்னு நேரிடையாவே கேட்டுடுங்களேன்" என்றார் பரமசிவம்.

"அதுவும் நல்ல யோசனை தான்" என்று சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று பேசி விட்டு வந்தார்.

"அம்மா! நான் எல்லாம் விவரமாகவே பேசிட்டேன். அவங்களுக்கு பொண்ணு நல்ல குணமா இருக்குறது தான் முக்கியமாம். சீரு, வர தட்சிணை எல்லாம் அவங்க சவுகரியப்படி செய்யட்டும். அப்டீன்னு சொல்லிடிச்சு மரகதம்" என்றார்.

"கல்யாணத்துக்கப்புறம் உங்க தங்கச்சி இவங்க கூடத்தான் இருப்பாங்களா?"

"நீங்க கேக்குறதோட அர்த்தம் புரியுது! என் தங்கச்சிக்கு ரெண்டு மகன். மூத்தவன் கல்யாணமாகி பெங்களூர்ல இருக்கானாம். அவங்கிட்ட 6 மாசம், இளையவன் கிட்ட ஆறுமாசம் இருப்பேன்னு சொன்னா!"

"ஐயா! என் மக தகப்பனில்லாத பொண்ணு! சட்டுன்னு முடிவெடுக்க எனக்குத் தெரியல! எங்களுக்குக் கொஞ்சம் டயம் குடுங்க! நான் சொல்றேன்" என்றாள் கல்யாணி.

அம்மாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள் கோமதி.

"என்ன கேக்குறா உங்க மக?"

"ஐயா அது வந்து.. பையன் எந்த வக்கீல் கிட்ட சூனியரா இருந்தார்னு கேக்குறா?"

"அது சூனியர் இல்லம்மா ஜூனியர்! அந்த விவரம் எனக்குத் தெரியல்ல! நான் வேணும்னா கேட்டுச் சொல்றேன்" என்று ஃபோனை எடுத்தார்.

"இல்ல இல்ல! வேண்டாம் வேண்டாம்! அவ சும்மா தான் கேட்டா! அப்ப நாங்க கிளம்புறோம்" என்று விடைபெற்று வந்தனர் தாயும் மகளும். இருவரின் உள்ளத்திலும் ஏதேதோ யோசனைகள். வீட்டுத் திண்ணையில் வேணியத்தை அமர்ந்திருந்தாள்.

"எங்கடி போயிட்டீங்க ஆத்தாளும் மகளும்?"

"உள்ள வாங்க அண்ணி! விவரமாச் சொல்றேன்" என்று கூறி அவளை உள்ளே அழைத்துச் சென்றனர். கோமதியை காப்பி போடச் சொல்லிவிட்டு அண்ணியிடம் அத்தனையும் விவரமாகச் சொன்னாள் கல்யாணி.

"கல்யாணி! நல்லா விசாரிச்சுக்கிட்டு அப்புறமா பொண்ணைக் குடு! பொண்ணைக் குடுத்தோமோ கண்ணைக் குடுத்தோமோன்னு பெரியவங்க சொல்லுவாங்க!" என்றாள்.

"ஆமா அண்ணி! அதான் நானும் யோசிச்சுட்டு சொல்லலாம்னு வந்துட்டேன். அவங்க கொஞ்சம் அவசரத்துல இருக்காப்புல தெரியுது!"

"பட்டணத்துல இல்லாத பொண்ணுங்களா? எதுக்கு கிராமத்துப் பொண்ணு தான் வேணும்னு கேக்குறாங்க?" என்றாள்.

"இந்தக் காலத்துப் பட்டணத்துப் பிள்ளிய பெரியவங்களை எங்க மதிக்கிது? நம்ம ஊருப் பொண்ணுங்கன்னா மட்டு மரியாதை தெரிஞ்சி நடந்துக்கும் இல்ல?"

"ஆங்க! சரி தான் சரிதான்! கல்யாணி! நீ ஒரு தடவை பட்டணத்துக்குப் போ! அவங்க வீட்டைப் பாரு! மாப்பிள்ளையைப் பத்தி அக்கம் பக்கத்துல விசாரி! பெறகு அவங்களைப் பொண்ணு பாக்க வரச் சொல்லு! என்ன? அண்ணன் சொன்னாரு, தம்பி சொன்னாருன்னு கண்ணைக் கட்டிக்கிட்டு காரியத்துல எறங்கிப்புடாத" என்று எச்சரித்தார்.

மறு நாள் காலையிலேயே பரமசிவம் அண்ணன் வந்தார்.

"யம்மா! கல்யாணி! யோசிச்சுச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்ட? அப்புறம் பதிலே சொல்லலியே? அவங்க என்னைப் போட்டு நெருக்கறாங்க! நீ யோசிச்சுட்டியா?"

"அண்ணே! அது வந்து.... நம்ம வேணி மதனி இருக்காங்க இல்ல அவங்க மாப்பிள்ளை வீட்டைப் பார்த்துட்டு பெறகு முடிவு பண்ணுன்னு சொன்னாங்க! அதான் நான்..வந்து.."

"ஆமா! வேணி சொல்றதும் சரி தான். நான் ஒண்ணு செய்யிறேன். வர ஞாயிற்றுக்கிழமை கெளம்பி பட்டணம் போறேன். அங்க எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. அப்படியே அவங்க வீட்டையும் பார்த்துட்டு வந்துடறேன் என்ன சொல்ற?"

"ரொம்ப சந்தோஷம் அண்ணே! ஏதோ உங்க புண்ணியத்துல தான் கோமதி வாழ்க்கை துலங்கணும்" கல்யாணி பேசிக் கொண்டிருக்கும் போதே பரமசிவத்தின் ஃபோன் ஒலித்தது. பேசியயவரின் முகம் மலர்ந்திருந்தது.

"கல்யாணி! நம்ம கோமதிக்கு நல்ல காலம் வந்தாச்சு! வக்கீல் மாப்பிள்ளை அவளைப் பொண்ணு பாக்க இந்த வார வெள்ளிக்கிழமையே வராங்களாம். அம்மாவும் மகனும் மட்டும் தானாம். பொண்ணைப் பிடிச்சிருந்தா அப்பவே நிச்சயத்தை வெச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க" என்றார்.

கேட்டவளுக்கு சந்தோஷப்படுவதா? சந்தேகப்படுவதா? என்று தெரியவில்லை. விஷயத்தை மகளிடம் சொன்னாள்.

"என்னம்மா அவசரம்? மாமா அவங்க வீட்டைப் பார்த்துட்டு வரட்டும். பிறகு முடிவு செய்யலாம்" என்றாள்.

"நிச்சயமாடி! ஆனா அவங்க பொண்ணு பாக்கறது பார்த்துட்டுப் போகட்டுமே? அதுல என்ன வந்தது? பொண்ணு பார்த்தாலே கல்யாணமே முடிஞ்சதுன்னு அர்த்தமா?"

"எனக்கென்னவோ நாம அவசரப்பட வேண்டாம்னு தோணுது. வேணி அத்தை சொன்னாங்க இல்ல?"

"போடி போக்கத்தவளே! அவளுக்கு தறுதலையா ஒரு மகன் இருக்கான். அவனுக்கு உன்னைக் கட்டி வைக்கணும்னு திட்டம் போடுறாளோ என்னவோ? அதுக்குத்தான் அவ வர சம்பந்தத்தையெல்லாம் நொண்ணை சொல்லிக்கிட்டு இருக்கா! நான் பார்த்துக்கறேன் கண்ணு! நீ கவலைப் படாதே!" என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

வெள்ளிக்கிழமைக்கு இன்னும் நான்கே நாட்கள் தான் இருந்தன. ஆனால் அவை மிக மிக மெதுவாகச் செல்வதாகத் தோன்றியது கோமதிக்கு. அவர் எப்படி இருப்பார்? என்ன உயரம் இருப்பார்? என்ற இன்பக் கற்பனைகளில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது கடினமாக இருந்தது. வியாழன் மாலை வண்ண வண்ணக் கனவுகளுடன் காத்திருந்தாள் கோமதி.
 
Nirmala vandhachu ???
Innum read panna la pa
Konjam busy ahh so please Varen
 
:love::love::love:

நல்லவதுக்கு சொன்னாலும் சொல்றப்போ இப்படித்தான் பொறாமை னு சொல்வாங்க......
அடி பட்டபிறகு ஐயோ சொன்னாலே கெக்கலியே நான் னு ஒப்பாரி வைப்பாங்க......
இதான் உலகம்......

வேணி வார்த்தை அம்மா காதில் ஏறலை.....
MA BL :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வக்கீல் படிச்ச மாப்பிள்ளை :p:p:p
வக்கீல் மாப்பிள்ளையா இல்லை வாய் மட்டும் தான் வக்கீலா னு கல்யாணத்துக்கப்புறம் தெரியும்......
 
Last edited:
Top