பயணம் 22
"துளசி புரிஞ்சிக்க முயற்சி செய். இயற்கை விதிய மாற்ற நினைச்சா அது அழிவை தான் உருவாக்கும். பிறப்பு மாதிரி இறப்பைபும் ஏத்துக்க முயற்சி செய்." என்று துளசிக்கு புரிய வைத்திடும் நோக்கத்தில் ஸ்மிருத்தா பேச, அவளை நக்கலாக பார்த்தவள்
"எப்படி நீங்க இசையரசன் இறப்ப ஏத்துக்கிட்ட மாதிரியா?" என்று கேட்க, சில நொடி தயங்கிய ஸ்ருமித்தா துணிவுடன் நிமிர்ந்து அமர்ந்தாள்.
"எஸ் நான் தப்பு பண்ணிட்டேன். என்ன மாதிரி நீயும் தப்பு பண்ணிடாதன்னு தான் சொல்றேன். என் தப்ப நான் இப்போ சரி பண்ணிட்டேன். இன்னும் கொஞ்ச வருசத்துல முதுமை நான் உருவாக்கின இசையரசனுக்கும் வரும்.
முதுமையோ இல்ல அவர் முடியாமையோ எதோ ஒன்னால அவருக்கு மரணம் வர தான் போகுது. உன் அப்பா பத்தி இசை என் கிட்ட சொல்லியிருக்கார். அவரு நீ செய்யுறத பார்த்தா சந்தோஷப்படுவாரா. நேர்மையா வாழ்ந்த அவரு பொண்ணு துரோகியா மாறுனதை அவரால ஏத்துக்க முடியுமா." என்று தந்தை பற்றி பேசியதும் துளசி கலங்க ஆரம்பித்தாள்.
தன் சிறு வயதிலிருந்து தனக்காக வாழ்ந்த தந்தையை மீட்டு கொண்டு வர பாதை மாறினாலும் நியாயவாதியான சிவராம் மனக்கண்ணில் தோன்றி "என் மகளா நீ?" என்று கேள்வி கேட்க துளசியால் தலை நிமிர முடியவில்லை.
"அப்பாஆஆஆஆ...." என்று கதறிய துளசி அதே இடத்தில் மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
"எனக்கு என் அப்பா வேணும் ஸ்மிருத்தா மேடம் அவரு என் மேல எவ்வளவு பாசம் வைச்சிருந்தாரு தெரியுமா." என சிறு பிள்ளையாய் ஏங்கி தவிக்க ஆரம்பித்தாள்.
"இங்க பாரு துளசி உன் பேரு மாதிரி நீயும் புனிதமானவ தான். இறந்த உன் அப்பா உன் கூட இல்லன்னாலும் உன்ன பார்த்துட்டே தான் இருப்பார். அவருடைய அன்பை கொஞ்சமும் குறையாம கொடுக்க இனியன் இருக்கான்." என ஸ்மிருத்தா இனியனை பற்றி கூற, துளசியிடம் சிறுது மாற்றம் தெரிந்தது.
"இல்ல எனக்கு என் அப்பா பாசம் திரும்ப கிடைக்காது. நான் செய்த வேலை தெரிஞ்ச இனியன் என்னை வெறுத்துடுவார்." என்று மழலையாக மிளற்றியவளை சமாதானப்படுத்த ஸ்மிருத்தா மிகவும் கஷ்டப்பட வேண்டியதாக இருந்தது.
"உங்க ட்ராமா முடிஞ்சுதா..." என புதிதாக கேட்ட ஆணின் சத்தத்தில் பெண்கள் இருவரும் யார் என்று நிமிர்ந்து பார்த்தனர்.
நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சூத்திரதாரியான இம்ரானை பார்த்ததும் எழுந்து நின்ற துளசி "இம்ரான் சார் ஸ்மிருத்தா மேடமை விட்டுடுங்க. நான் செய்ய நினைச்சத என் அப்பாவே ஏத்துக்க மாட்டாரு." என்று கண்ணீருடன் கூறினாள்.
"சில்லி கேர்ள்... நீ என்ன நினைச்ச நான் உனக்காகவா இவ்வளவு செய்தேன்னு. யூ ப்ஃபூல் நான் இத எல்லாம் செய்தது எனக்காக. என்ன பொறுத்த வரை நீ என்னுடைய துருப்பு சீட்டு அவ்வளவு தான். நீ விலகி நில்லு இனி நடக்க வேண்டியத நான் பாத்துக்கிறேன்." என்று கூறியவன் துளசியை தன் வழியில் இருந்து தள்ளி விட அவளோ நிலத்தில் விழுந்தாள்.
நிலத்தில் விழுந்தவள் எழுந்து கொள்ள உதவிய ஸ்மிருத்தா இம்ரானை பார்க்க, அவனும் ஸ்வாரஸ்யமாக ஸ்மிருத்தாவை பார்த்து வைத்தான். அவனது பார்வையில் அறுவெறுத்தவள் முகத்தை திருப்ப அவள் முகவாயை பற்றி தன்புறம் திருப்பிய இம்ரான் "என் கிட்ட இந்த முகம் திருப்புற வேலைய வைச்சுக்காத பேபி. இதுவே உன் இடத்தில வேற யாராவது இருந்ததிருந்த இந்நேரம் சாவடிச்சிருப்பேன்.
பட் ஐ நீட் யூ. எனக்கு ஏத்தமாறி நடந்துக்கிட்டா இந்த இம்ரான் சாம்ராஜ்ஜியத்துல மகாராணியா இருப்ப. இல்ல உன்ன சேர்ந்தவங்கள உரு தெரியாம அழிச்சிடுவேன்." என்று மிரட்ட அதற்கெல்லாம் ஸ்மிருத்தா பயந்து விடவில்லை.
"என்னடா பண்ணுவ மிஞ்சி மிஞ்சி போன என்ன சேர்ந்தவங்கள கொலை பண்ணுவ அதான. நீ என்ன செய்தாலும் உனக்கு பயந்து அடி பணிய மாட்டடேன். உன்னால முடிஞ்சத செய்துக்கோ. அப்புறம் ரேப் பண்ற சில்லியான ஐடியா எதாவது இருந்த அத வைச்சு கூட என்ன பயம் காட்ட முடியாது." என்று தனது பதட்டத்தை இம்ரானுக்கு காட்டாது பேசினாள்.
"என் மேடம் இசையரசன் வந்து உங்கள காப்பாத்திடுவார்ன்னு நம்புறீங்க போல." என கூறி கொண்ட பிரபஞ்சன் காதுக்கு பின் ஒட்டப்பட்டிருந்த சிறு கடுகு விதை போல இருந்த கருவியை கையில் எடுத்தவன் ஸ்மிருத்தவின் முன் காட்டினான்.
"இந்த சின்ன டிவைஸ் வைச்சு இசையரசன் வந்து உங்கள காப்பாத்திடுவாருன்னு ரெம்ப நம்புறீங்க போல. நான் ஒன்னும் அவ்வளவு முட்டாள் இல்ல. எவ்வளவு நாள் தான் மறைஞ்சிருந்து சண்டை போட அதான் இன்னைக்கு இசையரசன நேருக்கு நேர மோத முடிவு பண்ணிட்டேன்.
நான் நினைச்சதால மட்டும் தான் உன் அண்ணன் இங்க வர முடிந்தது. இசையரசனும் இனியனும் வந்திடுவாங்க.ஆனா யாரும் உயிரோட திரும்ப போறது இல்ல." என இம்ரான் கையில் இருந்த கருவியின் பட்டனை அழுத்த இருந்த இடத்தின் காட்சி மாற ஆரம்பித்தது.
அதுவரை தான் ஒரு கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஸ்மிருத்தாவின் கண்கள் சாசர் போல விரிந்தது.
பூமியில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஸ்பேஸ்சிப் எனப்படும் விண்கப்பலில் கண்ணாடிக்கு பின் தெரிந்த அகண்ட வானை பார்த்தவளுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.
கண்ணாடி மீது கையை வைத்து இருண்ட வானில் தெரிந்த விண்மீன்களையும் விண்கலங்களையும் கண்டவளுக்கு மிகப்பெரிய எதிரியிடம் தாங்கள் மாட்டியிருப்பது புரிந்தது.
ஸ்மிருத்தாவிற்கு நெருக்கமாக அவள் கழுத்தில் மூச்சு காற்று படும் அளவு நெருக்கமாக நின்ற இம்ரான் அவள் கைகளுக்கு அருகே கையை வைத்து "என்னோட சிஃப் எப்படி இருக்கு ஸ்மிருத்தா. இந்த உலகத்தை பத்தி நீ தெரிஞ்சுக்காத பல விஷயம் இருக்கு. பூமில நிலத்தை விலைக்கு வாங்குற மாதிரி இந்த ஸ்பேஸ் இப்போ எனக்கு சொந்தம்.
என் அனுமதி இல்லாம யாராலையும் உள்ள வர முடியாது. கண்ணுக்கு தெரியாம இருக்கிற சீல்ட் எந்த ஸ்பேஸ்சிஃப் வந்தாலும் சாம்பல் ஆக்கிடும். இப்போ நீ உன் முடிவ சொல்லு. எனக்கு பேவரா நடந்துக்கிட்டா இந்த உலகத்தையே அடக்கி ஆள முடியும்."
இம்ரானின் அந்த நெருக்கம் ஒவ்வாமையை தந்த போதும் அமைதியாக நின்றாள். அவன் கூறியது போல இந்த உலகத்தை பற்றி அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. விண்மீண்களை விலைக்கு வாங்குபவர்களை பார்த்திருந்தவளுக்கு விண்வெளியை விலைக்கு வாங்க முடியும் என்று கூட அவள் நினைத்து பார்த்ததில்லை.
"என்ன ஸ்மிருத்தா என் இடத்த பார்த்து பிரம்மிப்பா இருக்கா. நான் சொல்றபடி நடந்த இது உனக்கு சொந்தமாகும். மனிதன் எவ்வளவோ கண்டுபிடித்தாலும் அவனால மரணத்தை ஜெயிக்க முடியல. ஆனா நீ அதை சாதாரணமா ஐநூறு வருசத்துக்கு முன்னவே செய்து காட்டியிருக்க.
உயிர் மேல ஆசை இருக்கிற பணக்காரங்க தான் என் டார்கெட். மரணமில்லா வாழ்க்கை கிடைக்கும்னு சொன்னதும் என் காலடியில் விழுந்து கிடக்க தயாரா இருக்காங்க. எனக்காக நீ இருப்பன்னு சொன்னா உன் காலடியில் விழுந்து கிடக்க நான் ரெடியா இருக்கேன்." என்று இம்ரான் கூறியதும் ஸ்மிருத்தா திகைப்புடன் பார்த்தாள்.
தன்னிடம் ஆணவத்துடன் பேசி கொண்டிருந்தவனது குரல் மெல்லிய கரகரப்பான மாறியதை உணர்ந்தவளுக்கு அந்த மாற்றம் உவப்பனதாக இல்லை. அவனின் ஆணவம் நிறைந்த பேச்சை விட அன்பொழுக பேசும் பேச்சு பெண்ணவளுக்கு பயத்தை கொடுத்தது.
ஸ்மிருத்தாவின் கண்களின் தெரிந்த அச்சத்தை கண் இடுங்க பார்த்தவன் மெல்ல அவள் முகவாயை பற்றி தன் முகம் நோக்கி உயர்த்தினான். அவன் கரத்தை தட்டி விட மனது கூறிய வேளையில் பொறுமையை கடைபிடிக்கும் படி மூளை எச்சரித்தது.
"என்ன பார்த்து இந்த பயம் வேண்டாம் ஸ்மிருத்தா. நானும் சயின்டிஸ்ட் தான். விண்வெளி சம்மந்தமா நான் கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகள் எத்தனைன்னு கணக்கே இல்ல. ஆனா என்னால என் கண்டு பிடிப்பா உன்ன மாதிரி சும்மா யாருக்கோ தானம் பண்ண முடியல.
என் உழைப்புக்கான விலையை நானே தீர்மானிச்சேன். பணம் சம்பாதிச்சேன் அகண்ட வானத்தில எனக்கான இடத்தை வாங்கிட்டேன். ஆனாலும் எனக்கான சோல் மெட் இன்னும் கிடைக்கலன்னு யோசிக்கும் போது தான் நீ வந்த. சின்ன வயசுல இருந்தே ஐ அட்மெயர் யூ. அது எப்போ ஈர்ப்பா மாறி காதலாச்சுன்னு தெரியல. பட் இட்ஸ் ஹேப்பன்ஸ்.
எனக்கு பிடிக்காத இசையரன் உன்ன இங்க அழைச்சிட்டு வந்தது தெரிஞ்சதும் ஐ ஃபில் ஐ எம் தி ஹேப்பியஸ்ட் மேன் இன் தி வேல்ட். இசை மரபணுவே சேகரிக்க துளசிய பயன்படுத்த நினைச்ச நான் உன்ன கடத்த வைச்சேன். இட்ஸ் ஆல் பார் யூ ஒன்னி.
ஐ வாண்ட் யூ இன் ரெஸ்ட் ஓப் மை லைப். அட் எனி காஸ்ட் உன்ன மிஸ் பண்ண விரும்பல. இன் பேக்ட் என் எதிரியான இசையரசன கூட உனக்காக விட்டுட தயாரா இருக்கேன்." என்று இம்ரான்,
அஃப்கோர்ஸ் நானும் உன்ன மாதிரி பஷீர் வாரிசு தான் பஷீர் பரம்பரை வாரிசா என்ன பார்க்காம சயின்டிஸ்ட்டா பாரு. எனக்கு இசையரசன் மாதிரி ஐநூறு வருசம் வாழ ஆசை இல்ல. ஐம்பது வருடம் உன் கூட சேர்ந்து இந்த நட்சத்திரங்களுக்கு நடுவில வாழ்ந்தா போதும்." என கண்கள் மின்ன கூறியவனை பார்த்த ஸ்மிருத்தாவிற்கு உள்ளுக்குள் குளிர் பரவியது.
காதல் தீவிரவாதியாக இருப்பவனிடம் எதையும் பேசி ஜெயிக்க முடியாது என்று அறிந்த ஸ்மிருத்தா இசையரசன் தன்னை மீட்க வர மாட்டானா என தவிக்க ஆரம்பித்தாள்.
"நான் யோசிக்கனும்..." என்று அப்போதைக்கு இம்ரானிடம் கூறிய ஸ்மிருத்தாவிற்கு மூளை செயலிழந்தது போல உணர்ந்தாள்.
"டேக் யுவர் வோன் டைம் பட் பதில் எனக்கு பேவரா இருந்த எல்லாருக்கும் நல்லது." என்று ஸ்மிருத்தாவின் கண்ணம் தட்டி கூறியவன் அவளிடம் விடை பெற்று சென்றான்.
இம்ரான் சென்றதும் கண்ணாடி மறுபுறம் இருந்த அண்டவெளியை பார்த்த ஸ்மிருத்தா நட்சட்திரங்களுக்கு நடுவே தனது நாயகனை தேட ஆரம்பித்தாள். ஏதோ ஒரு நம்பிக்கை இசையரசன் தன்னை மீட்டு செல்வான் என நம்ப வைத்தது.
துளசியும் பிரபஞ்சனும் வேறு வேறு அறையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்பதால் தப்பும் மார்க்கம் பற்றி யோசனையில் ஆழ்ந்தாள்.
ஸ்மிருத்தாவின் கரங்கள் தன்னிச்சையாக கழுத்தை தடவி பார்க்க அவள் கழுத்தில் அணிந்திருந்த செயின் இப்போது இல்லை என்பது நினைவு வந்தது. அது எப்போது தன்னை விட்டு சென்றது என்பதை நினைத்து பார்த்தவள் நம்பிக்கையுடன் 'இசை நீ என் கிட்ட சீக்கிரம் வந்திடுவ.' மனதுக்குள் கூறிக்கொண்டாள்.
_______________________________________________________
"துளசி உன்னை காதலிக்கிறது உண்மை இனியா. அவளுடைய அப்பா பாசத்தை இம்ரான் அவனுக்கு சாதகமாக பயன்படுத்திகிட்டான்." என்று வேதனையில் இருந்த இனியனுக்கு இசையரசன் ஆறுதல் கூறினான்.
அதுவரை காதல் வேதனையில் இருந்தவன் இப்போது அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து பெரிதாக அதிர்ந்தான். எப்பொழுதும் மறைந்திருந்து தக்கும் எதிரியான இம்ரான் இப்போது நேரடியாக களத்தில் சந்திக்க அழைத்திருக்கின்றான்.
இம்ரான் புத்திகூர்மை உடையவன் என்றாலும் அதை வியாபரமாக பார்ப்பவன். உலகில் முதல்தரம் வாய்ந்த குட்னஸ் லேப்பை தன் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வர துடிப்பவன். ஸ்மிருத்தா ஆரம்பித்த ஆய்வு கூடத்தை வியாபார தளமாக மாற்ற விடாமல் தடையாக இருக்கும் இசையரசனை பல முறை கொலை செய்ய கூட முயன்றிருக்கின்றான்.
பணபலத்திலும் அதிகார பலத்திலும் இசையரசனை விட ஒரு படி மேலே இருப்பவன் தான் இம்ரான். ஆனாலும் இசையரசனின் துப்பரியும் மூளை இம்ரானின் சதி வேலைகளை முறியடித்தது.
"எல்லாரும் இப்போ இம்ரானோட ப்ரைவேட் சிப்ல ஸ்பேஸ்ல இருக்காங்கன்னா நம்ம அங்க போனாலும் உயிரோட திரும்ப முடியாது. அவன் இடத்த சுத்தி இருக்கிற இன்விசிபில் லேசர் சீல்ட் எந்த ஸ்பேஸ்சிப்பையும் விட்டு வைக்காது." என்று கடத்தியவன் பற்றி தெரிந்ததும் இனியன் இம்ரானிடம் மாட்டியிருக்கும் மூவரின் நிலை நினைத்து பதட்டம் அடைந்தான்.
"இனியன் கூல்..." என இசையரசன் இனியனை அமைதிப்படுத்த முயற்சித்தார்.
"எப்படி அமைதியா இருக்க முடியும். அங்க மாட்டிக்கிட்டு இருக்கிறது என் துளசி, உங்க ஸ்மிருத்தா மேடம் அப்புறம் அவங்க அண்ணன்." என மேலும் பதட்டத்தில் புலம்ப ஆரம்பித்தான்.
"லேசர் சீல்ட் இல்லன்னா நாம அவங்களை காப்பத்திடலாமா இனியன்." என கேட்டதும் குழப்பம் மறைந்து இனியன் முகம் பிரகாசமாகியது.
"இது ஸ்மிருத்தா கண்டுபிடிச்சது தான். எந்தவிதமான ஹைய் பவர் லேசரை கூட தடுக்க கூடியது. இத ஸ்பேஸ்ல யூஸ் பண்ற மாதிரி மாத்தி அமைக்க சொல்லியிருந்தேன் இப்போ இது ரெடி. இப்போ நாமா இம்ரானை சந்திக்க போனா சரியா இருக்கும்.'' என இசையரசன் கூறியதும் இனியன் நொடியும் தாமதிக்காமல் தயாராகினான்.
மரபணுவில் மட்டும் அல்லாது பல வகை கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறமை ஸ்மிருத்தாவிடம் இருந்தன. ஆனாலும் அதை யாரிடமும் அவள் காட்டிக்கொண்டது இல்லை.
தேவை ஏற்ப்பட்டால் தவிர எந்த சூழ்நிலையிலும் தனது கண்டுபிடிப்பை சொந்த விசயத்தில் ஸ்மிருத்தா பயன்படுத்தமாட்டாள். தான் கேட்டால் லேசர் சீல்டை உடைக்கும் கருவியை தர மாட்டாள் என்பதாலே ஸ்மிருத்தா இங்கு வந்த சந்தர்பத்தில் லேசர் சிறையில் அவளை இசையரசன் அடைத்திருந்தான்.
அவன் எதிர்பார்ப்பை பொய்பிக்காமல் ஸ்மிருத்தா தனது கருவியை பயன்படுத்தி லேசர் சிறையை தகர்த்திருந்தாள். அதை அவளுக்கே தெரியாமல்(?) இசையரசன் தன்னிடம் வைத்துக் கொண்டான்.
இசையரசனா? இம்ரானா? யார் வெல்லுவார்?
இனி விண்ணை நோக்கி அவர்கள் பயணம் அடுத்த அத்தியாயத்தில்....