Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிள்ளியின் சமுத்திரை - 1

Renju vinodh

Member
Member
1.1

ஒன்றா? இரண்டா? கோடிகள், அதும் இரண்டு கோடி, எப்படி? எங்கிருந்து கொடுப்பது?, பத்து தினங்களாக பைத்தியக்காரன் போல் அலைகிறான் வழி மட்டும் தெரியவில்லை .

அணைத்து கதவுகளையும் முட்டியாயிற்று, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாய் இருந்து, கைபிடித்து உயர்த்தி தோழனை போல் தோள் கொடுத்த தாத்தாவும் மறைந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டது.

இன்று அந்த எம்பெருமான் சந்நிதியில் இனி நீயே துணை, எங்காவது ஒரு வெளிச்சப் புள்ளியை காட்டி விடு இறைவா!!! என்று கண்மூடி தூணில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்.

இமையோரம் கசிந்த நீர்த்துளி அவன் மன பாரத்தை குறைப்பதாகயில்லை. மனம் முழுதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது, ஒரே சிந்தை ஒரே பிரார்த்தனை

"ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாத

ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராத"

எத்தனை மணித்துளிகள் கடந்தது என்று அறியவில்லை…

தோளில் அழுந்திய கரம் அவன் உணர்வுகளை மீட்டது, நிமிர்ந்து பார்த்தான் ஆருயிர் நண்பன் பார்த்திபன் நின்றிருந்தான்.

நண்பனை வேதனையாக பார்த்த பார்த்தி அவன் அருகில் அமர்ந்து தரையை வெறித்து கொண்டு இருந்தான்.

அவனேயே உற்று பார்த்த வளவன் “என்னடா? என்ன விஷயம் ?” என்றான் , பார்த்திபனிடம் இருந்து வார்த்தைகள் வெறுப்பாக வந்தது , “அண்ணா போன் பண்ணாரு வளவா !! காசு ..., காசு தரேன்னு சொன்னாரு” என்றான்.

சட்டறென்று துள்ளி எழுந்தான் வளவன், “ஏன்டா நல்ல விஷயம் தானே அத ஏன் இப்படி சொல்ற?” என்றான்.

ஆனால்? நண்பனின் தயக்கத்திற்கு பின், மிக பெரிய காரணம் இருக்கும் என்று அறிவான் வளவன், எதுவாகினும் பார்த்தியே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

பார்த்திபனின் பொறுமை பறந்தது “பணம் கிடைக்கறது நல்ல விஷயம் தான்,.. ஆனா அதுக்கு அவர் சொல்ற கண்டிஷன எப்படி ஒத்துக்க முடியும் ,நம்ம சூழ்நிலையை அவர்க்கு சாதகமா முடிக்க பாக்குறாரு, அதுக்கு மாமாவும் கூட்டு”.

“உனக்கு அப்பாவாவும் அத்தைக்கு புருஷனாவும் போய்ட்டாரு இல்ல” என்று பல்லை கடித்தான்.

இப்பொழுதும் தன்னை விட்டு கொடுக்காமல், "நம்ம சூழ்நிலை" என்று தான் சொல்கிறான்.

வளவனுக்கு மனம் கனிந்தது இது போன்ற ஒரு நட்பு கிடைக்க என்ன புண்ணியம் செய்தேனோ என்று.

“பார்த்தி” ஆழ்த்த குரலில் அழைத்தான் வளவன், தன் முகம் பார்த்த நண்பனிடம், “இப்போ தேவை நமக்கு தான் ,உன் உசுர குடு காசு தரேன்னு யாராவது சொன்ன..., நான் அதுக்கும் தயாரா தான் இருக்கேன்”.

வளவனின் கையை பிடித்த பார்தி அவன் கண்களை பார்த்து, “ நீ ஏன் டா உயிரை குடுக்கணும் நான் எதுக்கு இருக்கேன் உசுர குடுத்தாதான் பணம் கிடைக்கும்னா என்னோடது தான் முதல்ல” என்றான்.

பார்த்திபனை ஆரத்தழுவிக்கொண்டான் வளவன், இருவரும் எம்பெருமானுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து ஒரு நன்றியை உரைத்து விரைந்து வீடு சென்றனர்.வீட்டின் முன் சென்று வண்டியை நிறுத்தி இறங்கினான் வளவன், பிறந்தது முதல் ஓடி விளையாடி, மகிழ்ந்து, வாழ்ந்த வீடு, இனி இது தனக்கில்லை, மனதில் எங்கோ ஒரு சிறு வலி தோன்றியது.

ஆனால் இந்த வீட்டை இழப்பதால் தனக்கு கிடைக்கப்போவது வாழ்வின் மிக பெரிய நிம்மதி. பார்த்திபனும் வீட்டைத்தான் பார்த்திருந்தான், அவன் தன் வீட்டில் இருந்த நேரத்தை விட இங்கு வாழ்ந்ததே அதிகம்.
 
Nirmala senthilkumar

Well-known member

Nirmala vandhachu 😍😍😍
 
Top