Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிள்ளியின் சமுத்திரை - 2

Renju vinodh

Member
Member
1.2

குடும்பம் முழுதும் அந்த நேரத்தில் அங்கு குழுமி இருந்தது ,அழுது வீங்கிய முகமும் சிவந்த கண்களுமாக, வந்த கேவலை முந்தானை தலைப்பால் அடக்கிய படி வளவனின் தாய் தங்கம்மை அமர்ந்திருந்தார் .

குடும்ப தலைவர் ருத்ரன், “இறுதியில் நீ எங்களிடம் கை ஏந்தி நிற்கிறாய்” என்று ஏளனப்பார்வை வீசி நின்றார், அண்ணன் கார்த்தி முகத்தில் வெற்றிப்புன்னகை.

எப்பொழுதும் போல் அண்ணி நந்தினி எந்த உணர்வுகளும் காட்டாமல் கணவனை வெறித்து கொண்டு இருந்தாள், இவர்கள் இருவருக்கும் மூத்தவள் கோதை அவள் முகமும் அழுது கலங்கி இருந்தது ,அவளின் கணவன் பெருமாள் இதில் தனக்கு ஏதும் லாபம் கிட்டுமா என்று அனைவரையும் ஆராய்ந்து கொண்டு அமர்ந்திருந்தான்.

பார்த்திபனை பார்த்து கார்த்தி “என்னடா அவன் கிட்ட எல்லாம் சொன்னியா??” என்று வினவ , அவன் நண்பனை பார்த்துகொன்டே “சொல்லிட்டேன்” என்றான், “அப்புறம்? சார் என்ன சொல்லறாரு” என்றான் கார்த்திக் .

இப்பொழுது வளவன் தன் அண்ணனை நேரே பார்த்து “எனக்கு சம்மதம்” என்றான் பெரிய கேவல் ஒன்று அவன் தாயிடம் இருந்து எழுந்தது .

“வேண்டாம் பெரியவனே ரொம்ப பெரிய தப்பு செய்ற, அவன் உன் தம்பி டா.., அவனுக்கு அநியாயம் பண்ணாத சாமி”.

“அவன் செய்யறது மட்டும் நியாயமா? இவன் எவளோ தெரியாத ஒருத்திக்கு வேண்டி என்ன வேனா செய்வாராம் நாங்க கேள்வி கேக்க கூடாதாம் நல்லா இருக்கு உங்க நியாயம்” எண்ணையில் இட்ட கடுகாய் பொரிந்தான் கார்த்தி.

“அது அவன் தனிப்பட்ட விஷயம்., உங்களுக்கு பிடிக்கலைன்னா அவனுக்கு சேர வேண்டியதுல இருந்து குடுங்க, நாளா பின்ன சொத்த பிரிக்கும்போது இப்போ குடுக்கறத கழிச்சுக்கோங்க, என் பிள்ளை நியாயஸ்தன் அவனுக்கு சொந்தமில்லாத ஒத்த பைசா எடுக்க மாட்டான்”. அழுகையினுடே பெரிய மகனிடம் பேசினாலும் பார்வை கணவனிடம் இருந்தது.

“இங்க பாருமா என் முடிவை சொல்லிட்டேன், நா யாரையும் கட்டாய படுத்தல

உன் புள்ளைக்கு பணம் வேண்டானா இந்த பேச்சை இதோட விட்ரலாம்”. அழுத்தமான பார்வையை தம்பியின் மீது வைத்து பேசினான் அண்ணன்.

தன் இளைய மகனை ஆற்றாமையோடு பார்த்தார் தங்கம்மை, என்ன இல்லை இவனிடம்?? காற்றாற்று வெள்ளம் போல் எந்த கட்டுப்பாடுகளுக்கும் அடங்காமல் திரிந்தவன் ,கவலைகளை அவன் அருகில் கூட அண்டவிட மாட்டான், பேச்சிலும் நடத்தையிலும் வயதுக்கு மீறிய கம்பீரம் இருக்கும் .

தன் இரு பிள்ளைகளும் தன் நிறத்தை கொண்டு இருக்க, வளவன் அவர் கணவரின் கருமை நிறத்தையும் , மாமனாரின் கம்பீரத்தையும் கொண்டு இருந்தான், ஆளுமையான பார்வை,.. எவரையும் பார்த்தவுடன் அவன் முகத்தில் தோன்றும் புன்னகை அறியாதவரையும் அவனை நோக்கி புன்னகைக்க சொல்லும். தன் மகனின் வாழ்வு அப்படியே நிம்மதியாக போயிருக்கக்கூடாதா?? .

“முடிவா என்ன சொல்ற வளவா, எனக்கு வேற வேல இருக்கு” கார்த்திக்கின் வார்த்தைகள் சூடாக வந்து விழுந்தது ,
நன்றாக நிமிர்ந்து நின்று, தலை உயர்த்தி, கார்த்தியின் கண்களை ஊடுருவி ஆளுமையுடன் கேட்டான் “எங்க கையெழுத்து போடணும்”.உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ?-

நன்னெஞ்சே

தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?-

நன்னெஞ்சே!

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?-

நன்னெஞ்சே!

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!
 
Nirmala senthilkumar

Well-known member

Nirmala vandhachu 😍😍😍
 
Advertisement

Advertisement

Top