Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கீர்த்தனை.... பிரார்த்தனை....-2

Advertisement

praveenraj

Well-known member
Member
திருமண மண்டபம் கும்பக்கோணம் அன்று மாலை 5 .30.

அன்றைய காலை விடிந்தது முதல் நடந்ததை நினைத்துக்கொண்டிருந்தாள் அவள். அவள் சஹானா. அன்று மாலை மண்டபம் வந்தாகிவிட்டது.மேக் அப் போடவும் தயாராகி விட்டாள். அவளை தன் தோழிகள் கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருந்தனர். நேராக உள்ளே வந்த வத்ஸலா,
"என்ன இன்னுமா மேக் அப்போடுறீங்க?மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டாங்க. சீக்கிரம் ரெடி ஆகுங்க..."

"அதெல்லாம் கவலையே வேணாம் ஆண்ட்டி. நாங்க பார்த்துக்கறோம். யூ டோன்ட் ஒர்ரி.தேவதையாக அலங்காரம் செய்து கூட்டிவருகிறோம்..." என்றாள் சஹானாவின் தோழியும் அவளுடைய பிரைடல் மேக் அப் ஆர்டிஸ்டுமான ஐஸ்வர்யா.

சிரித்தவர் கண்ணாடியில் தெரிந்த தன் பெண்ணின் பிம்பத்தைப் பார்த்தார். அதில் தெரியும் குழப்ப ரேகைகளைக் கண்டு தானும் குழம்பி வருந்தினாலும் அவளைச் சமாதானம் செய்ய,"கண்ணு ஏன்டா டல்லா இருக்க?"

தன்னால் தன் தாயும் வருத்தப்பட வேண்டாம் என நினைத்தவள் பொய்ப் புன்னகை சிந்த சரியாக உள்ளே வந்தார் கீரவாணி.

"ஏ தங்கமயில்! என்னம்மா ஜொலிக்கிற தெரியுமா?என் கண்ணே பட்டுடும் போல" என்றவர் அவளை நெட்டி முறிக்க அவளோ ஒப்புக்குச் சிரித்து வைத்தாள்.

அருகே முகம் தொங்கியிருந்த தன் சித்தியை வம்படியாக இழுத்தவள்,"சித்தி நான் உண்மையிலே மயிலாட்டமா இருக்கேன்?" என்று கேட்க, என்ன சொல்வார்கள் அவர்கள்? இதுவரை பெரிதாக எந்த ஏமாற்றங்களையும் வலியையும் நிராகரிப்பையும் கண்டிடாதவள் கடந்த சில மாதங்களாய் எல்லாமும் அனுபவிக்கிறாளே? எல்லாத்தையும் கண்டும் தங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் தான் அவரை வாட்ட,

அதைப் பார்த்த கீரவாணி,"நீ வெளிய வா வத்ஸலா, சின்ன புள்ளைங்க அவங்க கலகலப்பா இருக்கட்டும். நாம ஏன் குறுக்க நந்தி மாதிரி. என்னடா ராதா சரியா?" என்று இன்னொரு தோழியிடம் வினவினார்.

"கண்டிப்பா ஆண்ட்டி. நாங்க தான் முன்னமே சொன்னோமே, மாப்பிள்ளை பார்த்ததும் பிளாட் ஆகணும். அப்படியிருக்கும் மேக் அப் பாருங்க..."

உள்ளே என்ன தான் சிரித்து கலகலப்பாய் இருப்பதைப் போல் காட்டிக்கொண்டாலும் மனமெல்லாம் ஒரு பதைபதைப்பில் தவித்தது. கீரவாணியும் வத்ஸலாவும் வெளியே வர, சோகமாய் வெளியே வரும் தன் அத்தைகள் இருவரையும் பார்த்து,
"என்ன அத்தை டல்லா இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்று வினவினாள் பூவிழி.

"ஒண்ணுமில்லைடா" என்ற அவர்களின் தொனியே என்னவோ இருக்கிறது என்பதைக் காட்ட,

"சொல்லுங்க அத்தை..." என்றாள் தனியாக அழைத்துச் செல்ல ஏனோ கண்களில் கண்ணீர் வர,
"என் பொண்ணு முகத்துல கல்யாணப் பொண்ணுக்கான சந்தோசமே வரவேயில்லை மா. கடமைக்கேனு அவ இருக்கா. நாங்களும் அவளுக்காக சந்தோசமாய் இருக்கோம். சாரி இருக்கற மாதிரி நடிக்கிறோம். அவளும் கொஞ்சம் நடிக்கிறா..."

அவளோ என்ன சொல்லுவாள் பாவம்!

"அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை. கல்யாணம்னாலே பொதுவா வர டென்ஷன். போதாக்குறைக்கு மேக் அப் அது இதுனு கூடவே பிறந்த வீட்டை விட்டுப் போறோம்னு கொஞ்சம் டென்ஷன். இது எல்லாப் பொண்ணுக்கும் சாதாரணம் தானே? நான் போய் உங்களுக்கு இதையெல்லாம் சொல்லனுமா?"

"இந்த வாட்டி எந்தப் பிரச்சனையும் வந்திடாது இல்ல?"

"ஐயோ அத்தை என்ன பேசுறீங்க? அபசகுனமா!"

"இல்லம்மா. எனக்கும் என்னவோ நெஞ்செல்லாம் திக்திக்குனு இருக்கு..."

"அதெல்லாம் ஒன்னும் பயப்படாதீங்க. கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்..."

அதற்குள் விராலி வர,"என்னாச்சு பெரியம்மா?"

"அது ஒன்னுமில்ல விராலி. சும்மா"

"பெரியம்மா அழுதீங்களா?"

ஏனோ இந்தக் கேள்வியைக் கேட்டததுமே அவர் கண்களில் மீண்டும் கண்ணீர் சிந்த,

"சும்மா இருக்க மாட்டையா விராலி?"- பூவிழி

"சாரி அண்ணி"

"போ, போய் அத்தைக்கு டீயோ காபியோ கொடுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லு"

அவர்கள் விடைபெற்றனர்.

இங்கே பூவிழியின் மனதிலும் அதே பயம் தான்.'கடவுளே என்ன இது சோதனை? இந்தப் பொண்ணுக்கு ஏதும் ஆகிடக் கூடாது.என்ன ஆனாலும் நல்லபடியா இந்தக் கல்யாணம் நடக்கணும்.பாவம் ஏற்கனவே மூணு முறை கல்யாணம் தடைப்பட்டுடுச்சி...' என்று மானசீகமாகவே வேண்டினாள்.

அவளின் பயம் கண்டு கலைவாணி அழைக்க,

"சொல்லுங்க பெரியம்மா"

"என்னாச்சு? ஏன் சம்மந்தி அம்மா வருத்தமா அழுத மாதிரி போறாங்க?"

"அதுவா?" அவள் பேந்தபேந்த விழிக்க,

"இழுக்காம சொல்லு"

"எந்தத் தடங்கலும் இல்லாம கல்யாணம்..."

"வாயை மூடு பூவு. அதெல்லாம் சிறப்பா நடக்கும். போய் வேலை எதாவது இருந்தா பாரு போ..."

எங்கே எதாவது சும்மா விளையாட்டுக்கு சொன்னால் கூட அதுபோலவே நடந்துவிடுமோனு எல்லோரும் குழம்பி பயந்தனர்.

எதிரே வந்த கற்பகத்திடம்,"எப்போ வாரானாம்?" என்றார் கலைவாணி.

"தெரியில அக்கா"

ஏனோ எப்போதுமே அவனுக்காக வக்காலத்து வாங்கும் கலை கூட இம்முறை வாயைத் திறக்கவே இல்லை. அது கற்பகத்திற்கே வருத்தமாக இருந்தது.

"போ, போய் வந்திருக்கவங்கள சாப்பிட வரச்சொல்லு"

உள்ளே கோவமாய் இருந்தவளின் முகத்தில் மருந்திற்கும் கூட சிரிப்பை கொண்டு வரமுடியவில்லை. ராதாவும்கா ர்த்திகாவும் அவளைச் சீண்டிக்கொண்டே போக எதற்குமே அவ்வளவாக ரியாக்ட் செய்யாமல் இருந்தவளைக் கண்டு இருவரும் வருத்தம் கொண்டனர்.

பின்னே எப்படிப்பட்ட பெண்ணிவள்? இவளிருக்கும் இடத்திற்கு சிரிப்பு கலகலப்பு கூத்திற்கும் பஞ்சமேயில்லாமல் இருக்கும். ஆனால் இன்று? மனமெல்லாம் கோபக் கனல்கள் சூழ, எப்போ அவன் இவளுக்கு நோ சொல்லி நோகடித்தானோ அன்று பிடித்த சனியென்று எண்ணி அவர்கள் கலங்கினார்கள்.

அதில் ஏனோ அவனின் முகம் நினைவுக்கு வர அமைதியானாள். இது எந்த மாதிரியான உணர்வு? இனி தன் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒன்றை எண்ணி மீண்டும் மீண்டும் வருந்துவது ஒரு கொடுமை. கையை இழந்தவன் தன் கை இருந்த இடத்தை தடவிப் பார்ப்பதற்கு சமமானது இது. மூச்சை இழுத்து விட்டாள். அப்போது தான் தன்னையே ஒருமுறை கண்ணாடியில் பார்த்தாள்.

அவளின் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வர எண்ணிய தோழிகள்,"என்னடி இது போதுமா? இல்லை இன்னும் கொஞ்சம் அலங்கரித்து மாப்பிளையை டோட்டலா கவுத்திடலாமா?" என்று கேட்ட தோழியிடம்,

சிரித்தவளின் முகத்தைப் பார்த்ததுமே இருவருக்கும் இது போலியான சிரிப்பு என்று புரிந்தது. எங்கே தான் வருந்துவது தெரிந்தால் இவர்களும் வருந்துவார்களோ என்று எண்ணி அவள் நடிக்க இவளும் பதிலுக்கு நடித்து வைத்தாள்.

ஆனால் அந்தக் கணம் அவர்கள் 'அவனுக்குக் ' கொடுத்த சாபத்திற்கு மட்டும் அளவே இல்லை. பின்னே எப்படி இருந்தவளை இப்படி ஆக்கிவிட்டானே?

*******************


ஜூஹூ கடற்கரை ரெஸ்டாரெண்ட், இன்று மாலை 6.30

இருவருக்குள்ளும் மௌனம். யார் ஆரமிப்பது? என்ன ஆரமிப்பது? எப்படி ஆரமிப்பது ?என்று தவித்தனர்.

அவன் நிமிர்ந்து அவளைப் பார்க்க, அவளோ அந்த சீ வியூ பாயிண்ட் கார்னெர் டேபிளில் கண்ணாடியின் ஊடே கடலையும் அதன் அலைகளையும் அங்கே இருக்கும் மனிதர்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லை வெறித்துக்கொண்டிருந்தாள். ஏதேதோ யோசனையில் இருந்தவள் அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து கொண்டவள் சட்டென திரும்பி அவனைப் பார்க்க அவன் அவளின் இடது கழுத்தின் அந்தப் பெரிய மச்சத்தைப் பார்த்து கைகளால் அவளின் கம்மலை ஆட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளையே ரசித்துக்கொண்டிருந்தான்.

அவன் இவ்வளவு நேரம் தன்னை தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று உணர்ந்து கொஞ்சமே கொஞ்சம் நாணம் எட்டிப்பார்க்க கூடவே குறுகுறுப்பும் ஏற்பட எல்லாம் சில வினாடிகள் தான் நீடித்தது.

அதுவரை பளிச்சென இருந்த வானத்தில் கருமேகங்கள் ஒன்றின் மீது ஒன்று மையல் கொண்டு தத்தம் இணைகளைத் தேடி வேகமாய்க் கூடிக்கொள்ள தங்கள் கூடலுக்கு தடுப்பணையாக இருந்த பகலவனை விரட்டியடிக்க (ஏற்கனவே அந்திசாயும் நேரம் தான்) இளமஞ்சள் வானம் சட்டென கறுப்பாடை அணிய மேகக் கூடலின் விளைவாய் முதல் குழந்தையாக ஒரு துளி மண்ணில் விழுந்தது தான் தாமதம் சடசடவென சீராய் அவ்விடம் அனைத்திலும் தங்கள் கூடல் லீலைகளால் நிரப்பிவிட்டிருந்தன மேகக் கூட்டங்கள். நாங்கள் கூடிவிட்டோமடா என்று உலகிற்கு உரக்க உரைக்க 'டமால் டுமீல்' என மேளச்சத்தங்களும் உண்டாகின.

வெளியே மழை. அந்தி சாய்ந்த வானம். கண்ணுக்கெட்டிய தூரத்திலெல்லாம் கடல். அரேபிய கடலில் ஆங்காங்கே சில கப்பல்கள். குளிரூட்டப்பட்ட கண்ணாடி குடுவை போன்ற அறைக்குள் இவர்கள். மல்டி லிங்குஸ்டிக் (பல மொழி) பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாய் ஒலிக்க இப்போது தமிழ் மொழியின் டர்ன் என்பதால்,

காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!

கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான்!
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சிக்குள் நீதான்!

என்னானதோ ஏத்தானதோ சொல் சொல்...


என்று எஸ் பி பி மனமுருகி பாடி காதலின் பிரிவை உணர்த்த, ஏனோ இவனின் நிலையை உணர்ந்த rj போலவே fm இல் இந்தப் பாடல் ஒலிபரப்ப வந்து இவ்வளவு நேரமாகியும் மௌனம் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருந்தது. இவன் பேசுவான் என்று அவளும், அவள் பேசுவாள் என்று இவனும் மனப்போராட்டங்கள் நிகழ்த்த இருவரும் பேச ஆரமிக்கும் வேளையில்,

"சார், யுவர் ஆர்டர் இஸ் ஹியர்!" - பேரர்.

தேஜாவு தான் இருவரின் மனநிலையும். அவளோ அந்த பிரௌனியை எடுத்து வாயில் வைக்க,

"எதாவது பர்ச்சேஸ் பண்ணனுமா?" என்று மென்மையிலும் மென்மையாக ஒலித்தது அவன் குரல்.

பதிலுக்கு ஒரு முறைப்பு தான் அவளிடம்.
'ரொம்பத்தான் அக்கறை! எல்லாம் நடிப்பு' என்று அவள் முணுமுணுக்க,

"உன்கிட்டத் தான் பேசுறேன் சஹா..." என்ற குரலில் கடுமை. ஆனால் இது தான் மற்றவர்கள் சாதாரணமாய்ப் பேசும் டெசிபெல். அவன் தான் மென்மொழியான்.

"எல்லாம் முடிந்தது" - அவள்

"எதுவும் முடியல" - அவன்

"இப்ப மட்டும் என்ன திடீர் அக்கறை?"

"கேள்வியே தப்பு. இது திடீர் இல்ல. எப்பயும்"

"எப்பவும்?" ஒரு நக்கல் அவளிடம்.

"ஆம். அப்பவும் இப்பவும் இனி எப்பவும்..." என்றவனின் குரலில் அழுத்தம்.

"எந்த மரத்துல உட்காந்து கிடைச்சது இந்த ஞானம்?"

"என்கிட்ட நீ ஒரு நொடிக்கூட உன் மேலேயான அக்கறை, பாசம், அன்பு இதை நீ பார்த்ததே இல்லையா? உணர்ந்ததே இல்லையா? எங்க உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு?"

அவன் முடிக்கும் முன்னே வந்தது வார்த்தை. "இல்லை". அவளுக்கு அதிலொரு கர்வம். அவனை வீழ்த்திவிட்ட ஒரு மிதப்பு அவமானப் படுத்திய ஒரு சந்தோசம் ஆற்றாமையினால் கோவமும் கூட என்று எல்லாம் கலந்த கலவையாய் ஒரு உணர்வுக் குவியல்.

முகத்திலிருந்த சின்ன உற்சாகம் கூட முற்றிலும் மறைந்தது. பருகிக்கொண்டிருந்த காஃபீயை அப்படியே வைத்தவன்,"இந்தா..." (பையிலிருந்து ஒன்றை எடுத்து நீட்ட)

அதை வாங்கிடக்கூட இல்லை அவள். டேபிளிலே வைத்தான். அவள் பார்த்துப் படிக்கட்டும் என்று அவள் புறமாய்த் திருப்பி வைத்தான்.

அவளோ அலட்சியமாக எதையோ நோக்குவதைப் போல கடைக்கண்களால் அதைப் பார்த்தவள் முகம் உக்கிரமாக கையிலிருந்த காபி மக்கை கோவமாகத் திருப்ப காஃபீயால் அலங்கரிக்கப் பட்டிருந்தது அது.
"ஐயோ!" என்று துடித்து (துடிப்பதைப் போல் நடித்து) அதை அவள் எடுக்க,

இப்போது தான் அவன் முகத்தில் நிம்மதி வந்தது. உற்சாகமாகி அந்த டவ்நட்டை ஒரு கடி கடித்தான் மொழி.

இதை ஒரு குறியீடாய் அவள் அறிய,"வேற வேண்டும். அதும் சாயும்காலமே!" என்று அதிராமல் வந்தது வார்த்தை. "ஐ வான்னா கெட் ரிட் ஆப் திஸ்..." என்ற முணுமுணுப்பு அவன் செவிகளில் அச்சு பிசகாமல் ஒலிக்க,

"இஸ் இன்டிட்?"

அருகிலிருந்த டிஸ்ஸு எடுத்தவன், கையிலிருந்த பேனாவால் எதையோ கிறுக்கினான்.

என்ன செய்கிறான் என்று அறிய ஆவலாய் எட்டி எட்டிப் படிக்க முயன்றாள். ஆனால் அது அவனுக்கும் தெரியக்கூடாது என்று ஒன்றரைக் கண்களால் பார்க்க அவள் பெயரைத் தான் எழுதிக்கொண்டிருந்தான். அருகில் அவன் பெயரையும் சேர்த்தவன் என்ன நினைத்தானோ அதை எடுத்து கிழித்து வீசி,
"போதும் இந்தக் கண்ணாம்மூச்சி ஆட்டம். இதுக்கொரு முற்றுப்புள்ளி வெச்சிடலாம் சஹானா..."

"................."

"உன்கிட்டத் தான் பேசுறேன். மற்ற நேரம் வாய் ஏழுவூர் கிழியும் இல்ல? இப்போ பேசு"

"வீட்டுல போக வேணாம்னு சொல்றாங்க..." என்று யாருக்கோ பதிலளிப்பதைப்போல் அவள் உரைத்தாள்.

"அதை நான் பேஸ் பண்ணிக்கிறேன்..." என்று வெளியே அவன் உரைத்தாலும் உள்ளுக்குள் 'நானும் அதைத்தான் டி விரும்புறேன்...' என்று எண்ணினான்.

"நானும் போறேன் பெங்காலுக்கு..."

அவளுள் தவிப்பு எழுந்தாலும் அதை அவள் வெளிக்காட்டவில்லை.

"ஓகே தெளிவாப் பேசிடலாம் சஹானா. நீ உன் கேரீர் பாரு. நான் என் கேரீர் பார்க்கறேன். ஒரு 6 மாசமோ ஒரு வருஷமா போகட்டும். ஒருவேளை உன் மனசு மாறினால்..." என்று அவன் முடிப்பதற்குள்,
"மாறாது..." என்று வார்த்தை உதிர்ந்தது.

"சரி, என் மனசு மாறி எனக்கேத்தவளை நான் பார்த்துட்டேன்னு வெய் உடனே அப்ளை பண்ணிடலாம்..." என்றதும் அவள் கோவமாய் விழித்தாள். அவள் கண்களில் ஒரு வித தவிப்பு இருந்தது.

"சத்தியமா உன் பொசெசிவ் எல்லாம் நான் தூண்டிவிடல. ஐ யம் சீரியஸ் சஹானா. மேலும் நான் ரியாலிடிய பேச நினைக்கிறன்"

அவள் முகம் வெளிற ஆரமித்தது. பின்னே அவன் காமெடியாகப் பேசுபவன் அல்லவே. அதும் இப்போது நிச்சயம் பேச மாட்டான். அதிலொரு உறுதி அவனிடத்தில் தென்பட்டது.

அவள் ஒரு குழப்ப கவலை ரியாக்சனை தந்தாள்.

"இதுக்கு தான் நான் முதன்முதலில் வேணாம்னு சொன்னேன்..." என்று அவன் முடிக்கும் முன்னே,

"இதுக்கா?" என்று அவள் முகத்தில் தீ ஜுவாலைகள் பரவியது. ஒரு பாத்திரத்தை வைத்தால் அது சூடாகிவிடும். அவ்வளவு கோவம்.

"இதுக்கும் தான். அப் கோர்ஸ் எனக்கு உன் மேல கோவம். அப்பறோம் அவர்..." என்று எதோ சொல்ல வர அவள் கேட்டிருப்பாளோ என்று இவன் பயப்பட,

"எல்லோரும் என் லைஃப்ல விளையாடிட்டிங்க இல்ல?"

கோவத்தில் அவன் உணர்ச்சிவசப்பட்டு,"நீ என் வாழ்க்கையில விளையாடியதை விடவா?" என்று சொன்னவன் தன் தவறை உணர்ந்து நாக்கை கடிக்க,

அவள் கோவமாய் முறைத்து,"நீ புரிஞ்சிக்கவே மாட்டேயில்ல மொழி?"

"நீ புரிய வைக்கவே மாட்டேயில்ல சஹா?" என்று பதிலுக்கு இவனும் கேட்க,

"நீ புரியணும்னு நெனச்சி கேட்கணும்..." -அவள்

"நீ புரிய வைக்கணும்னு நெனெச்சி பேசணும்" - அவன்

அவளிடம் பதிலில்லை.

"இதுதான் எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதம் பண்ணுனா எப்படி புரிய வெக்கிறது? புரிந்துக்கிறது?"

மௌனம்.

"உன்ன நான் சத்தியமா குத்திக்காட்டலை ப்ளீஸ்" என்றான் அவன்.

அவள் பேசத் தொடங்கவும் வானம் கொட்டித் தீர்த்தது.

"மழை விட்டது. வா சீக்கிரம் வீட்டுக்குப் போலாம். நாளைக்கு ஊருக்குப் போகணுமில்ல நீ?"

ஏனோ இம்முறை இந்தச் சொல் அவளைக் கூர்மையாகத் தாக்கியது. இருந்தும் மேஜையிலிருந்த பேப்பரில் காஃபீ கொட்டி கசங்கி இருப்பதைக் கண்டவள் அவன் இதைப் பற்றிப் பேசாதது அவளுக்குள் நிம்மதி தந்தது.

"செக் ப்ளீஸ்..."

பே செய்து காரில் ஏறினார்கள் இருவரும். (இசை ஒலிக்கும்...)
 
வானம் மேகம் உவமை உவமானம்லாம் பலமா இருக்குது ??
 
வானம் மேகம் உவமை உவமானம்லாம் பலமா இருக்குது ??
எப்பயாவது யோசிச்சா இப்படி வரிகள் அமையும்?? நன்றி
 
Top