Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 11

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 11

அந்தி சாயும் வேளையில் தன் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து சிவப்பும் மஞ்சளும் சேர்ந்து மின்னிய ஆகாயத்தை யோசனையுடன் பார்த்திருந்தாள் மாயா. கார்த்திக் தன்னிடம் பேசிய நிமிடங்களை மீண்டும் அசைப் போட்டாள் மனதுக்குள். நடக்கயிருக்கும் திருமணத்தை பற்றி ஒன்றுமே விசாரிக்காமல், தன் கனவை எப்போதும் தொலைக்க வேண்டாம் என அவன் கூறியது நெஞ்சை நெருடியது….

திருமணத்தை பற்றி விசாரிக்க வேண்டாம், தனக்கு எல்லோரும் கூறும் வாழ்த்துகளை கூட கூறாமல் சென்றவனை என்னவென்று நினைக்க?? இதை பற்றி அவள் சிந்தனை ஓடிய நேரம் தான் கதிர் அவளை தொலைப்பேசியில் அழைத்தான்! அவன் எண்கள் செல்பேசியின் திரையில் மின்னிய நொடி, மாயாவின் மனம் தூக்கி வாரி போட்டது….

கார்த்திக்கை ஒரு முறை பார்த்தற்கே மனம் அவனையே சுற்றி வருகிறதே?? இது எங்கே போய் முடியும்? வேண்டாம் இந்த கார்த்திக்கின் நினைப்பே தன் மனதில் வேண்டாம்!!! கதிரின் அழைப்பை எடுக்காமலே விட்டு, தன் மனதில் குடியிருப்பவனை அங்கிருந்து அகற்ற முயன்றாள் மாயா… மனமோ வேண்டாம் என்பதை தான் வேண்டும் என்றது!

மாயாவின் நினைவுகள் இங்கே கார்த்திக்கை வட்டமிட்டு கொண்டிருக்க, கார்த்திக்கோ நிறைய நாள் கழித்து சலனமற்ற மனதுடன் இருந்தான். மாயாவிடம் இரண்டு வரிகள் பேசினாலும், தான் கூற வேண்டியதை தெளிவாக எவ்வித தடையும்யின்றி கூறி முடித்ததில் அவனுக்கு பரம சந்தோஷம்….

ஒரு பெருமூச்சுடன் அவள் நினைவுகள் தன்னை முழுமையாக ஆக்கிரமிப்பதை கனக்கும் நெஞ்சத்துடன் வலியுடன் உணர்ந்தான். ஆனால், தன் கைகளில் ஒன்றுமில்லை என்பது மட்டும் புரிந்தது. நடப்பது நடக்கட்டும்! வாழ்க்கை நமக்கு மீண்டும் மீண்டும் தோல்வி பாடம் புகட்டும் போது ஒருவித சலிப்புத்தன்மை நம்மை சூழ்ந்துக் கொள்ளும்.

அந்த நிலைமைக்கு இப்போதே வந்து விட்டான் கார்த்திக்! இன்னும் பல அறிய பாடங்கள் அவன் கற்பதற்காக இருக்கின்றன என்பதை அந்த நல்லவன் அறியவில்லை…

இப்படியே நாட்களை தள்ளியவன், சில நாட்கள் வேலை விஷயமாக வெளியிடங்களில் சாப்பிட ஆரம்பித்தான். அதுவும் மதியமும் இரவு பொழுதும் தான். அதற்கே அவனுக்கு சளியும், ஜுரமும் வாட்டியது…. ஒன்றும் முடியாமல், வீட்டிலேயே தங்கிவிட்டவனை அவன் தந்தை கவனித்துக் கொண்டார்.

அவன் வீட்டில் காலையில் சமையலும், மற்ற வேலைகளும் செய்யவென மீனம்மா இருந்தார். நடுத்தர வயதை கடந்து விட்ட அவர் காலை ஆறரைக்கு வந்து டிப்பனும், மதிய சாப்பாடும் செய்ய ஆரம்பிப்பார். பிறகு மற்ற வேலைகளை முடித்துவிட்டு, அவர் சென்றதும் தான் சுப்பிரமணியம் வேலைக்கு கிளம்புவார். இரவு உணவை மட்டும் வெளியில் இருந்தோ அல்லது தந்தையோ பார்த்துக் கொள்வார்.

இப்போது கார்த்திக்கிற்கு உடம்பு முடியாத வேலையில், மீனம்மாவே உடன் இருந்து பத்திய சாப்பாடு சமைத்து தந்தார். இரண்டு நாட்கள் அவன் படுத்திருக்க, மூன்றாம் நாள் காலையிலேயே கார்த்திக்கின் நண்பன் விநாயகம் ஆஜர் ஆனான், கதிருடன்!

நலம் விசாரிப்புகள் முடிந்தவுடன் அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் கார்த்திக் கதிரை ஆச்சரியமாக பார்க்க, “என்னடா வெள்ளிக்கிழமையே இங்க என்ன பண்றேன்னு பார்க்கறியா?? சும்மா உங்களை எல்லாம் பார்க்கனும் போல இருந்துச்சு அதான் வந்துட்டேன் ஒரு நாள் முன்னாடியே.” என்று விளக்கம் தந்தான் கதிர். அவன் எப்போதும் ஒரு வாரம் விட்டு இன்னொரு வாரம், சனி ஞாயிறு மட்டும் தான் வருவது தன் சொந்த ஊருக்கு!

“உங்களைனு பச்சையா பொய் சொல்லாதடா… மாயாவை பார்க்காம இருக்க முடியலனு சொல்லு! ஒத்துக்கறோம்…”

விநாயகம் கிண்டலுடன் கூறியதை கேட்டு கார்த்திக்கின் கண்கள் அவன் தந்தையின் கண்களை சந்தித்தது! பெரியவரின் கண்கள் மூடித் திறக்க, அதில் தனக்கு இருந்த தகவலை புரிந்துக் கொண்டு அமைதியாக தன் தோழர்கள் பேசுவதை கவனித்தான் கார்த்திக்.

“அங்கிள் அப்புறம் அடுத்த வருஷம் நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாமா??” விநாயகம் கூலாக கேட்க, சுப்பிரமணியம் ஒரு நிமிடம் திகைத்து பின் சுதாரித்தார்.

“இப்போ என்னபா அவசரம்?? இருபத்தி நாலு தானடா ஆகுது?? மெதுவா பண்ணலாம்.”

“நீங்க வேற அங்கிள். இதோ ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்கறானே… இவன் அம்மா கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி வைச்சுக்கலாம்னு சொன்னதுக்கு, அடம் புடிச்சு கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிட்டான். கேட்டா காதலாம்!! முடியல…. சோ, அடுத்து இவனுக்கு முடிஞ்சதும் நம்ம கார்த்திக்கு தான்!

நீங்க பார்க்கலாம்னு மட்டும் சொல்லுங்க, சும்மா எத்தனை பொண்ணுங்க கியூவ்ல நிக்கறாங்கனு பாருங்க!” விநாயகம் பேசப் பேச சுப்பிரமணியத்துக்கு கோபமும், ஆற்றாமையும் உள்ளுக்குள் எரிமலையாக பொங்கியது!

“ஆமா இவன் தான் ஏற்கனவே….”

“டாடிடிடிடிடி!!!!” கார்த்திக்கின் கோபமான குரல், அவரை நல்ல வேளையாக தடுத்து நிறுத்தியது. கார்த்திக்கை உறுத்து விழித்துவிட்டு, “நீங்க பேசிட்டு இருங்கப்பா. இதோ வந்திடறேன்.” என்று கூறி வெளியேறினார் அவன் தந்தை. போகும் அவரையே கார்த்திக் சோர்வுடன் பார்த்திருக்க, மற்ற இருவரும் என்ன விஷயம் என்று குடைந்தனர்.

“ஒண்ணுமில்லடா அப்பாக்கும் எனக்கும் ஒரு சின்ன பிரச்சனை. அப்புறமா சொல்றேன்.”

கதிர் புருவ முடிச்சுடன் தன் தோழனை நோக்க, விநாயகம் உடனடியாக வேறு விஷயத்துக்கு தாவினான். “மச்சான் நாளைக்கு இருக்குற ரேஸுக்கு நீ வர முடியாதுல? நான் அந்த பிரகாஷ் கிட்ட சொல்லிடவா, கேன்சல் பண்ண சொல்லி??”

“ஏன் கேன்சல் பண்ணனும்?? நாம ரெண்டு பேரும் அங்க போலாம். நான் ஓட்டறேன் இந்த வாட்டி… கொஞ்ச நாள் ஆச்சு நான் ரேஸ்ல கலந்துகிட்டு…”

கதிர் கூறியதை கேட்டு கண்களாலேயே முறைத்தான் விநாயகம். “வரற்தே ரெண்டு மூணு நாள் தான். இதுல நீ ரேஸ்ல கலந்துக்கலைனு யார் கேட்டா?? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.”

விநாயகம் கூறுவதை மற்ற இருவருமே கண்டுக் கொள்ளவில்லை! ஏன்னென்றால் அவனுக்கு எப்போதும் ரேஸ் என்றால் பிடிக்காது. ரேஸ்ஸில் கார்த்திக்கும் கதிரும் ஓட்டும் போது கூட விநாயகம் பின்னால் உட்கார்ந்து வருவானே ஒழிய அவன் ஓட்டுவதே கிடையாது. ஆனால், நண்பர்களை விட்டுக் கொடுக்க முடியாமல் அவர்கள் உடன் செல்வான், ரேஸ் நடக்கும் இடத்திற்கு.

“ஹே போடா… நாங்க எப்போவும் போறது தான! புதுசா லெக்சர் எடுக்குற?? ஆனா, கார்த்திக் எப்படியோ உன்னை மாதிரியே என்னையும் பைக், ரேஸ்னு சுத்த வைச்சு பையித்தியம் ஆக்கிட்ட! மாயாக்கு இதெல்லாம் பிடிக்காது. கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி விட போறேன்னு தெரியல.”

கதிர் கூறியதிற்கு ஒரு சிறு புன்னகை தான் வந்தது கார்த்திக்கிடம் இருந்து. ஆனால், கதிர் கூறியது நூற்றுக்கு இரநூறு சதவீதம் உண்மை! தன் பதினைந்து வயதில் விசையுந்தை ஓட்ட பழகினான் கார்த்திக். அதன்பின் அதுவே அவனின் முழு நேர பொழுதுப் போக்காக மாறியது. சிறு வயதிலிருந்து கார்த்திக்குடன் இருப்பதால், கதிருக்கும் இந்த பைக், ரேஸ் எல்லாம் பழக்கம் ஆகியது.

பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததற்காக தன் தந்தை கொடுப்பதாக கூறிய பரிசை புறக்கனித்துவிட்டு, கதிருக்கு கே.டி.எம். பைக்கை பரிசாக வழங்கினான் கார்த்திக்! தன்னுடைய விசையுந்தை ஆர்வமாக பார்க்கும், கதிரின் கண்களின் மொழியை படித்துவிட்டே அவன் அப்படி செய்தது….

விநாயகத்துக்கு இதில் எல்லாம் விருப்பமோ பெரிதாக ஆர்வமோ இல்லை. ஆனால், இவர்களுடன் பைக்கில் பயணம் செல்வது பிடிக்கும்! கார்த்திக்கின் எண்ணங்கள் இப்படி இருக்க, கதிரும் விநாயகமும் புறப்பட்டனர். அன்றும் மறுநாளும் ஓய்விலே இருந்தான் கார்த்திக்.

****************************************************************************************************

“எங்க உங்க லீடர காணோம்? உங்கள அனுப்பி வைச்சுட்டு அவன் எஸ்கேப் ஆகிட்டானா??”

பிரகாஷின் நக்கலான குரலைக் கேட்டு கதிரின் ரத்தம் அழுத்தம் எகிறியது. பக்கத்தில் இருந்த விநாயகத்தின் முகத்தை பார்த்தான். அவர்கள் இருந்த இடம் கோவையின் முக்கிய நெடுஞ்சாலையான அவினாசி சாலை! கார்த்திக் பங்கேற்கும் ரேஸ் பெரும்பாலும் பிரகாஷின் குழுவுக்கும், கார்த்திக்கின் குழுவுக்கும் தான் நடக்கும்.

கதிரும் கார்த்திக்கும் சம அளவில் பங்கு கொள்வர். அப்படி பங்கு கொள்ளும் போது பாதி நேரம் இவர்கள் வென்றால், மீதி நேரம் பிரகாஷின் குழுவில் யாராவது வெல்லுவர். பிரகாஷிற்கு எப்போதும் இவர்களை கண்டால் ஏத்தம் தான்…. சீண்டிக் கொண்டே இருப்பான். சீண்டப்பட்ட சிறுத்தையாய் கார்த்திக் பொங்குவான் ஒவ்வொரு முறையும். அவனை சமாளிப்பதற்கே விநாயகம் அன்று தனியாக சாப்பிடுவான்.

மாயா ஒரு வார்த்தை விட்டதுக்கே கோவப்பட்டவன் கார்த்திக்! அப்போது இதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள்…. இப்போதும் பிரகாஷ் சீண்ட, கதிர் கண்களை மூடி தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

‘உன்னோட கோவத்தையெல்லாம் ரேஸ்ல காட்டுடா. இன்னிக்கு ஜெயிச்சு அவன் முன்னாடி கெத்தா நிக்கனும், அப்புறம் பேசிக்கலாம்…’ தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, விநாயகத்தை பார்த்து தலையசைத்தான். பின் பிரகாஷின் பக்கம் திரும்பி, “தேவையில்லாம பேசாத. வந்த வேலையை மட்டும் பார்க்கலாம். யாரு இன்னிக்கு இறங்குறாங்க??”

“நான் தான் இறங்கறேன்.”

பிராகாஷின் கம்பீரமான குரலைக் கண்டு அஞ்சாமல், தன் இரு சக்கர வாகனத்தை நோக்கிச் சென்றான் கதிர். கதிர் துளியும் அஞ்சாமல் செய்யும் செயல்களில் ஒன்று ரேஸ்ஸில் பங்கெடுப்பது! “மச்சான் சிறுத்தை கூட சிக்கும்! சில்வண்டு சிக்காதுடா… சும்மா வண்டாட்டம் நீ பறந்துட்டே இருக்க என்னோட ஆசிர்வாதங்கள். வெற்றி உனக்கே. போய் வா மகனே…” விநாயகம் அசால்டாக கூறவும், ஆச்சரியமாக அவனை பார்த்தான் கதிர்! அதற்குள் மீண்டும் விட்டயிடத்தில் இருந்து தொடங்கினான் அந்த புண்ணியவான். “இப்படி எல்லாம் சொல்வேன்னு நினைக்காத! நான் என்ன சொல்வேன்னு உனக்கு தெரியாதா? முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணு. முடியலையா அடுத்த ரேஸ்ல வைச்சு செய்யலாம்!! பட், ரொம்ப ரிஸ்க் எடுத்து ஓட்டாத மச்சான். ஓகே வா?”

விநாயகம் வழக்கமாக கூறும் வாக்கியங்கள் தான் இவை. அதனால், பெரிதாக அதை கண்டுக் கொள்ளாமல் தன் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டே விசையுந்தின் வழியாக பொறுமினான் கதிர். “ஓவரா பேசறான்டா அவன். ஒரு நாள் நானும் கார்த்திக்கும் சேர்த்து வெளுத்து வாங்க போறோம் அவனை! அன்னிக்கு இருக்கு அவனுக்கு.”

“சரி சரி ரிலாக்ஸ்! ஃபீரியா வண்டிய ஓட்டு.” விநாயகம் கூறியதை கேட்டு மனதை நிலைப்படுத்தினான் கதிர். அதன் பிறகு, சில நிமிடங்களில் பிரகாஷும் கதிரும் தத்தம் வாகனங்களின் மேல் சீறிப்பாய தயாராக அமர்ந்திருந்தனர்.

எப்போதும் அவர்கள் அவினாசி சாலையில் ஒரு இடத்தை குறித்துக் கொள்வர். அந்த இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வர வேண்டும். அது தான் அவர்களுக்குள் கோட்பாடு! இப்போதும் அப்படியே ஆரம்பித்தனர். கதிர் தான் ஆரம்பித்ததில் இருந்து முன்னிலையில் இருந்தான்.

விநாயகத்திற்கு கால்கள் தரையில் படுவேனா என்றது. அவ்வளவு சந்தோஷம், அவ்வளவு பயம், தன் நண்பன் ஓட்டுவதை பார்த்து. பிரகாஷும் விடாமல் பஸ், லாரி, கார் என அனைத்தையும் தாண்டி வளைத்து வளைத்து ஓட்டினான். அப்போதும் கதிரை தாண்ட முடியவில்லை அவனால்.

கதிர் இப்படியே முன்னிலையில் இருந்து, யூ-டெர்ன் எடுத்து மீண்டும் ஆரம்பித்த புள்ளிக்கே வர தொடங்கினான். அவனிடம் எப்படியாவது இந்த ரேஸ்ஸை ஜெயிக்க வேண்டும் என்ற வெறியே ஓங்கியிருந்தது. பின்னால் அவனை துரத்திக் கொண்டிருந்த பிரகாஷுக்கு கோபம் அலை கடலென பொங்கியது.

அவனும் ஆக்சிலரேட்டரை முறுக்கியபடி வீருக் கொண்டு ஓட்டினான் தன் வாகனத்தை! ஒருவழியாக கதிரை பிரகாஷ் நெருங்கிவிட, கடைசியில் கதிருக்கு தான் டென்ஷன் ஆகியது!!! அவனும் எதிர்காற்றை கிழித்துக் கொண்டு முனைப்புடன் ஓட்ட, ஒரு முன்னூறு அடி தொலைவில் எல்லைக் கோடு தெரிந்தது. விநாயகமும் தெரிந்தான்…. எப்படியாவது இந்த ரேஸ்ஸை வென்றுவிட வேண்டும் என மனதில் நிறுத்திக் கொண்டு, வேகமாக விசையுந்தை கிளப்பினான்.

அப்போது தான் விதி நாய் ரூபத்தில் வந்து சாலையை கடந்தது. நாய் குறுக்கே வந்ததும், கதிரின் கைகள் ஆட ஆரம்பித்துவிட்டது!! அவன் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் மிக அதிக வேகத்தில் ஓடிய வண்டி நிலை தடுமாறியது….

தன் வலது பக்கமாக கதிர் வண்டியுடன் சாய, அவன் ஒரு பக்கமும் வண்டி வேறு ஒரு பக்கமும் பெரும் ஓசையுடன் தூக்கி எறியபட்டனர்! கதிர் என்னவென்று சுதாறிப்பதற்குள் பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து கதிரின் மேல் ஏறி, அவன் இறுதி மூச்சை விட வைத்தது!!!!
 
:eek::eek::eek:ஓ கடவுளே இப்படியா நடக்கனும் ...இத எதிர்பார்க்கவில்லை
சிஸ்.....
 
Top