Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 13 2

Advertisement

Admin

Admin
Member
இதை கேட்டு சுப்பிரமணியம் தீவிர யோசனைக்கு சென்றார். சிறிது நாட்களாகவே மனதில் அசைப்போட்ட திட்டம் தான். ஆனால் இதற்கு எல்லாருடைய சம்மதமும் முதலில் வேண்டும். அதன்பின் தான் மேற்கொண்டு அடியெடுத்து வைக்க முடியும். இவரின் சிந்தனைகளின் நாயகன் கார்த்திக் அப்போது தான் அவன் அறையிலிருந்து வெளியே வந்தான், விநாயகத்தின் குரலைக் கேட்டு.

“கார்த்தி இதுக்கு மேலையும் எதையும் மறைச்சு ஆகப்போறதில்லை. விநா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடு.”

தந்தை திடீரென அவனுடைய ரகசிய கண்ணாடியை போட்டு உடைக்கவும், என்னவென்று புரியாமல் திருதிருவென முழித்தான் கார்த்திக். “என்னடா விஷயம் சொல்லுடா… மறைச்சேன்னு வேற அப்பா சொல்லாரு…. மரியாதையா சொல்லு!”

விநாயகம் அதட்டவும், தன் காதலை பற்றி அவனிடம் விளக்கினான் கார்த்திக். முடித்துவிட்டு அவன் நிமிர விநாயகத்தின் கை கார்த்திக்கின் கன்னத்தை பதம் பார்க்க, கார்த்திக் திகைத்தான். தனக்கு இது தேவை தான் என்றும் மனசாட்சி உரைத்தது! “பெரிய இவனா நீ?? உன்னை பத்தி யோசிச்சு பார்த்தியாடா?? வாய்ல எதாவது வந்திரும் ஏடாகூடமா…! நீங்க கூட சொல்லலைபா…”

“டேய் இவன் அவங்க அம்மா மேல சத்தியம் வாங்கிட்டான். என்ன பண்ணச் சொல்ற??”

ஒரு நிமிடம் அசௌகரியமான மௌனம் அங்கே நிலவியது. அதை சுப்பிரமணியமே கலைத்தார். “எனக்கு அந்த பொண்ண உடனே நம்ம வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வரனும்னு தோணுதுடா. அவங்க அம்மாவுக்கும் மனசு கவலை எல்லாம் போய், பழைய மாதிரி ஆகிடுவாங்க. ஆனா, இதுக்கு முதல்ல உன்னோட பிரெண்டும் மாயாவும் ஒத்துக்கனும்.”

இருவரும் கார்த்திக்கையே முறைத்துக் பார்க்க, தன்னிலை விளக்கம் சரளமாக வந்தது அவனிடமிருந்து. “எனக்கும் அப்படி தான்பா இருக்கு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவள இங்க கூட்டிட்டு வரனும் போல இருக்குபா. ஆனா, நாலு மாசம் தான் ஆகுது கதிரு…. அதனால கொஞ்ச நாள் போகட்டும்னு இருந்தேன்.”

கதிர் இறந்துவிட்டான் என்பதை கூட அந்த உத்தமபுத்திரனால் கூற இயலவில்லை.

“எல்லாம் சரிபா ஆனா இதுக்கு முதல்ல மாயா ஒத்துக்கனுமே?? கண்டிப்பா அபிம்மா உங்கள வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க…”

விநாயகம் கூறியதை கேட்டு கார்த்திக்கு மனது திக்கென்று ஆனது. ஆனால், தந்தையோ அசாதாரணமாக கூறினார், “அதையும் போய் கேட்டுடுவோம். நாளைக்கே அவங்க வீட்டுக்கு நாம மூணு பேரும் போறோம். வேணாம் நீ எதுவும் சொல்ல வேணாம்… எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். நாளைக்கு காலையில பதினொன்னுக்கு அங்க இருக்கனும் சொல்லிட்டேன், அவ்வளவு தான்!”

மறுத்து பேச வந்த விநாயகத்தையும் தடுத்து கார்த்திக்கையும் கண்களால் அளந்துவிட்டு, எழுந்துச் சென்றார் தந்தையவர். கேட்ட கார்த்திக்கிற்கு வெகு நாட்கள் கழித்து மனதில் மகிழ்ச்சியும் காதலும் சம அளவில் கலந்து ஓர் ஊற்று! விநாயகத்துக்கு தான் குழப்பமாகவே இருந்தது, மாயா சம்மதிப்பாளா என. அவளின் மாறுதல்களை கண் கூடாக பார்ப்பவன் ஆயிற்றே. என்ன இருந்தாலும் இப்படி ஒருவன் தன் மேல் பையித்தமாக இருப்பதை அவள் அறிந்தே ஆக வேண்டும் என்பது அவனின் எண்ணனும் கூட! அதனால், இருவரையும் அழைத்துக் கொண்டு அடுத்த நாள் மாயாவின் வீட்டு வாசலில் இறங்கினான்.

பார்த்த மாயாவின் வீட்டினருக்கு ஒரே குழப்பம். எதற்கு மூவரும் சேர்ந்து வந்திருக்கின்றனர் என. வீட்டில் கோதை அத்தையும் இருந்தார். கதிரின் வீட்டில் சுப்பிரமணியத்தை பார்த்திருக்கிறார்கள் அனைவரும். மற்றபடி கார்த்திக் அங்கே இருந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். மாயாவுக்கு என்னவோ நடக்கப் போகிறது என அடி வயிறு கலங்கியது.

கார்த்திக் அவளையே நோக்கி கண்களின் வழியாக மனதில் அவளை நிறப்பினான். நலம் விசாரிப்புகளுக்கு பின் சுப்பிரமணியம் நேரடியாக விஷயத்தை போட்டுடைத்தார். கார்த்திக்கின் காதல், அவனின் விட்டுக்கொடுத்தல் பற்றியெல்லாம் கூறிவிட்டு, “அவன் என்னவோ நினைச்சான். நடுவுல என்னவோ நடந்து போச்சு! இப்போ உங்க வீட்டு பொண்ண என்னோட பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களானு கேக்க தான் வந்தேன். என்ன சொல்றீங்க??” என்று நெத்தி அடி அடித்தார்.

அபிராமிக்கு ஒரு நிமிடம் தான் காண்பது கனவா நிஜமா என்று புரிபடவில்லை. அவ்வளவு சந்தோஷம் அவருக்கு. சந்தோஷ கண்ணீருடன் தன் நாத்தனாரை அவர் பார்க்க, அவரும் மிகவும் மகிழ்ச்சுயுடன் காணப்பட்டார். ரித்தியாவுக்கு குழப்பம் கலந்த சந்தோஷம். தன் அக்கா நினைத்தவனே கை பிடிக்கப் போகிறாள் என சந்தோஷப்பட்ட மனது, இன்னொரு பக்கம் மாயா சம்மதம் கிடைக்குமா என்பதில் தேங்கி நின்றது. எல்லோரின் பார்வையும் மாயாவையே பார்க்க, அவளோ தளும்பிய கண்களுடன், “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல, அங்கிள். சாரி!” என அழுகும் குரலில் கூறிவிட்டு அவளின் அறைக்குள் புகுந்தாள்.

எல்லோருக்கும் அதிர்ச்சி தான்…. கார்த்திக் சடாரென்று எழுந்து அபிராமியிடம், “நான் மாயாகிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன் அத்தை.” என தெரிவித்து சென்றான். அறைக்குள் நுழையும் அவனின் புறம் பார்வையை திருப்பாமல், மாயா பாட்டிற்கு அழுதுக் கொண்டிருதாள். அவளின் பக்கம் சென்று “மாயா” என கூப்பிட்டது தான் தெரியும்.

அதற்குள் பொங்கி எழுந்துவிட்டாள் அவன் காதலி! “என்ன சொல்ல போற? எனக்கு உன்னை விட என்னோட பிரண்டு தான் முக்கியம். அதான் அப்படி பண்ணிட்டேனு சொல்லப் போறீயா?? தேவையில்லை! பேசாம போயிடு…”

“சாரிமா!! ஆயிரம் வாட்டி சாரி. நான் பண்ணது தப்பு தான் எனக்கு தெரியுது. ஆனா அவன் காதல்ல தோத்தா ஏதாவது பண்ணிப்பானோனு தான் நான் என்னோட லவ் பத்தி சொல்லலை…. எப்படியும் உனக்கு ரெண்டு பேரும் ஒண்ணு தான். அதான்……”

“ரெண்டு பேரும் ஒண்ணா?? யாருடா அப்படி சொன்னா உன்கிட்ட!? நான் சொன்னனா?? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு தான் எனக்குனு??”

இக்கேள்வியில் கார்த்திக் வாயடைத்து நிற்க, அவனை மேலும் வருந்த வைக்க மாயா தன் காதலை அவனிடம் பகிர்ந்தாள். மனதின் ஒரு மூலையில் புதைந்து போன காதல் பீறிட்டு கிளம்பியதே அதற்கு காரணம்! “கேமரா வழியா பார்த்துப் பார்த்தே என்னோட மனசுக்குள்ள புகுந்துட்டடா பாவி! அதுக்கப்புறம் நீ பார்க்கவேயில்ல. நீ லவ் பண்ணுறியா, இல்ல சும்மா தான் பார்த்தியானு தெரியாம எத்தனை நாள் தவிச்சுருப்பேன் தெரியுமா?? கடைசியா ஒரு நாள் கதிரோட வந்து நின்ன பாரு! மனசு செத்துப் போச்சு….

சரி இதான் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கைனு எவ்வளவு கஷ்டப்பட்டு என்னோட மனசை மாத்த ட்ரை பண்ணேன் தெரியுமா?? இப்ப என்னடானா என்னோட கோபம், குழப்பம், வருத்தம் எல்லாமே தேவையில்லாததா போயிடுச்சு. உன்மேல இப்போ எனக்கு கோபம் மட்டும் தான் இருக்கு. லவ் சுத்தமா இல்ல! அதனால நீ என்னை சீண்டாம கிளம்பு. இனிமே என்னோட முகத்துலையே முழிக்காத… ”

அவள் கூறியதிற்கு மாறாய், அதன்பின் கார்த்திக் நிறைய பேசினான். எதற்குமே மாயா மசியவில்லை. அவள் தன் முடிவில் தெளிவாக இருந்தாள். “மாயா கதிர் அப்படி ஆனதுக்கு நான் தான் காரணம்னு கோபமா இருக்கியா??”

இக்கேள்வியின் தாக்குதலில் கசப்பான புன்னகையுடன் கார்த்திக்கை ஆழமாக கண்களுக்குள் ஊடுறுவினாள்.

“அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதிர் இறந்தப்போ எனக்கு கொலைவேறி தான் உன்மேல! ஆனா, அவனோட அந்த முடிவு தான் உனக்கு பெரிய பனிஷ்மென்டே. அது புரிஞ்சதும் உன்மேல இருந்த பாதி கோபம் போயிடுச்சு. நீ இப்போ சொன்ன விஷயத்தை மனசுல வைச்சு தான் என்னோட முடிவெடுத்தேன். உன்னோட பிரெண்டுக்காக உன்னோட காதலை தூக்கிப் போட்டுட்ட இல்ல? அவ்வளவு ஸ்ட்ராங் உன்னோட லவ். முதல்லயே வந்து உன்னோட ஆசைய சொல்லியிருந்தினா எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உன்னை தான் கை பிடிச்சிருப்பேன்! ஆனா இப்போ என்னால முடியாது!!! நீ பிரஸ்ட் முடிவு பண்ண மாதிரியே வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ!”

தான் அவனை மனதில் இருந்து அகற்ற நினைத்து கஷ்டப்பட்ட பொழுதுகள் அவளின் மனக்கண்ணில் தோன்ற, ‘பெரிய தியாகி இவரு! நினைச்சா ஆசையா பார்ப்பான். நினைச்சா தூக்கி தியாகம் பண்ணிட்டு போயிடுவான்.’ என மனதில் திட்டித் தீர்த்தாள்.

ஒன்றும் செய்ய முடியாமல் கார்த்திக் வெளியே வர, திறந்திருந்த அறையின் வழியாக அனைத்தையும் கேட்ட அபிராமியின் முகத்திலும் கோதையின் முகத்திலும் பேரதிர்ச்சி தெரிந்தது. ‘நம்ம பொண்ணு மனசுல இவ்வளவு இருந்துருக்கா??’ அபிராமி திகைப்புடன் ரித்தியாவை நோக்க, அவளும் தலையசைத்து ஆமோதித்தாள்.

மேலும் தங்களுக்குள் நடந்த உரையாடலை எல்லாம் கூற, மாயா கார்த்திக்கின் மேல் எவ்வளவு ஆசை, பிரியம் எல்லாம் வைத்திருக்கிறாள் என புரிந்து போனது தாயுள்ளத்துக்கு. அப்போதே முடிவு செய்தார் கார்த்திக் தான் அவ்வீட்டின் மூத்த மாப்பிள்ளை என.

அவர் அப்படி முடிவெடுக்க மேலும் சில காரணங்கள் இருந்தன. முதலாவது சுப்பிரமணியம் இந்த துரதிஷ்ட ராசியின் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை என திட்டவெட்டமாக கூறியது. இரண்டாவது தன் பெண்ணை பற்றி அவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். தன் காதலை ஒருவனிடம் கூறிவிட்டாள். அதனால் வேறு யாரையும் கண்ணெடுத்து கூட பார்க்க மாட்டாள் என தெரியும்.

மூன்றாவது கார்த்திக்கின் குணம். ஆம், நட்புக்காக காதலையே தியாகம் செய்யும் அளவுக்கு மன முதிர்ச்சி இருக்கிறது. எவ்வளவு கடினமான முடிவு அது? போதாதற்கு வந்ததில் இருந்து அவன் கண்களில் மாயாவின் மேல் கொண்ட காதலை மட்டுமே பார்த்தார். அறையில் அவன் வெளியே இருப்பவர்களுக்கு கேட்கும் என்று தெரிந்தும் மாயாவிடம் கெஞ்சியது…. அந்த அளவுக்கு மாயாவை பிடித்திருக்கின்றது, அவனுக்கு!!

இதெல்லாம் போதாதா அவருக்கு?? அது மட்டும் இல்லாமல் விநாயகமும் நிறைய முறை கார்த்திக்கை பற்றியும் அவன் தந்தையை பற்றியும் கூறியிருக்கிறான். என்ன மாயா தான் பிரச்சனை பண்ணுகிறாள். அவளுக்கும் தானே கார்த்திக்கை பிடித்திருக்கின்றது… சீக்கிரமே வழிக்கு கொண்டு வந்து விடலாம் என அபிராமியின் மனம் கணக்கு போட்டது.

சமையல் அறைக்கு சென்று நிறைந்த மனதுடன் காபி போட்டு, தன்னுடைய சம்மதத்தை சுப்பிரமணியனிடம் தெரிவித்தார்.

ஹாலில் இதை கேட்ட எல்லோருக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி தான். இருந்தாலும் ஒப்புதல் அளிக்க வேண்டியவளிடமிருந்து எதுவும் வரவில்லையே, கோபத்தை தவிர! “சந்தோஷம்மா. இருந்தாலும் மாயாக்கு இதுல சம்மதம் இல்லை போலுருக்கு….”

சுப்பிரமணியம் இழுப்பதை பார்த்து, அபிராமி வாக்களித்தார். “மாயாகிட்ட நான் பேசறேன். அவளுக்கும் தான் தம்பியை பிடிச்சிருக்கு. ஏதோ கோவம் உள்ளுக்குள்ள. சரியாகிடும் ஒண்ணும் பிரச்சனையில்ல.”

கூறும் போதே எவ்வித தடங்கலும் நடக்க கூடாது என மனம் கடவுளிடம் பிராத்தித்தது! ‘இந்த பொண்ணு எதுவும் கிறுக்குதனமா பண்ணாம இருந்தாலே போதும், பகவானே!!’ அபிராமியின் மனம் நினைப்பதை டெலிபதி மூலம், மாயா அறிந்துவிட்டாளோ? இல்லையென்றால் அபிராமி வாக்களித்ததை மறுக்கும் வண்ணம் ஆவேசமாக வெளியே வந்து, “இல்ல எனக்கு அவனை பிடிக்கலை! நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நான் மனசு மாறுவேன்னு யாரும் நினைக்க வேணாம்!!” என்று உறுதியுடன் அனைவரின் முன்பும் தெரிவித்திருக்க மாட்டாள்.

ஒரு சங்கடமான மௌனத்தை தொடர்ந்து சுப்பிரமணியம் கார்த்திக்குடன் கிளம்பினார். “நீங்க பேசி முடிவு பண்ணிட்டு சொல்லுங்கமா. நாங்க வரோம்.” அவளையே பார்த்தபடி கார்த்திக்கும் கனக்கும் மனதுடன் கிளம்பினான். அதற்கு பின் தான் மாயாவின் வீட்டில் கச்சேரியே அரங்கேரியது!! அனைவரும் மாயாவின் மூளையை சலவை செய்ய நினைக்க, அவள் யார் கூறுவதையும் காதில் வாங்கமும் இல்லை, கருத்தில் கொள்ளவும் இல்லை!

இது அந்த வாரம் முழுதும் தொடர, நாட்கள் செல்ல செல்ல மாயாவுக்கு அவ்வீட்டில் மூச்சு அடைத்தது. வெகு காலமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கும் அணை வெள்ளம் தன் தாளை உடைத்துக் கொண்டு பீறிட்டது… அதன் விளைவாக மாயசித்ரா தன் வீட்டை விட்டு வெளியேறினாள்!!!

 
Top