Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 18 1

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 18
கார்த்திக் திருமனத்திற்கு முன்பே அவன் அலுவகத்தில் பெங்களூர் செல்வதற்கு தேர்வாகப் பட்டான். அவன் அலுவகத்தின் தலைமை அலுவகம் அங்கே இருந்ததால், அங்கே சில மாதங்கள் வேலை நிமித்தமாக செல்லுமாறு கூறினார் அவனின் மேல் அதிகாரி. ஆனால், திருமணத்தை காரணம் காட்டி, அது முடிந்தவுடன் செல்வதாக சொன்னான் கார்த்திக்.

எப்படியும் திருமணம் முடிந்ததும் அவன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். வீட்டை விட்டு சென்று சொந்த ஊரிலேயே தனியாக வசிப்பதும் சாத்தியப்படாது! மாயாவும் மைதிலியுடன் தான் சென்னையில் தங்கி படிக்கப் போகிறாள் என அறிந்துக் கொண்டான். அதுவும் இந்த நற்செய்தியை விநாயகம் சுப்பிரமணியத்திடம் கூறும் போது, பக்கத்து அறையில் இருந்த அவனுக்கும் கேட்டதால் தெரிய வந்தது! எனவே திருமணம் முடிந்ததும் பெங்களூர் செல்வது என முடிவெடுத்ததின் படி, மூன்றாம் நாளே தந்தைக்கு சிறு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு புது ஊருக்கு பயணப்பட்டான் கார்த்திக்.

யாரிடமும் சொல்லவில்லை…. மாயா அவளின் வீட்டில் இருந்ததால் அவளுக்கும் தெரியவில்லை. அவள் இரண்டு நாட்கள் கழித்து மைதிலியுடன் சென்னைக்கு பயணப்படுவதாக இருந்ததால், அதையோட்டியே அவள் மனம் இருந்தது. சுப்பிரமணியம் தான் அந்த கடிதத்துடன் மாயாவின் வீட்டிற்கு வந்து தெரிவித்தார் விஷயத்தை.

விநாயகமும் அப்போது அவனின் அலுவகத்தில் தான் இருந்தான். மாயா அவனுக்கு கால் செய்து கூறவும், “அவனை அப்போவே பெங்களூர் அனுப்ப பிளான் பண்ணாங்க. அவன் பெங்களூர் தான் போயிருப்பான் நினைக்கிறேன். இரு கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன்.” என்று போனை வைத்தான்.

விநாயகம் கூறியதை தன் மாமனார், தாயிடம் பகிர்ந்தாள் மாயா. சில நிமிடங்களிலேயே மீண்டும் அழைத்து தன் சந்தேகம் சரியானது தான் என தெரிவித்தான் மாயாவின் சகோதரன்.

அதை கேட்டு ஒரு பெருமூச்சை விட்டு பேசத் தொடங்கினார் கார்த்திக்கின் தந்தை. “எப்படியோ சென்னைக்கு வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்மா. அது வரைக்கும் சந்தோஷம். நீ எதை பத்தியும் யோசிக்காம நல்லபடியா படி! எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்னை கூப்பிட தயங்காத. அவன் பெங்களூர்ல வேலை விஷயமா தங்கியிருக்கான். நீ சென்னையில படிக்கறன்னு எல்லாருக்கும் சொல்லலாம். அப்போ நான் கிளம்பறேன். உடம்பை பார்த்துக்கோங்கமா…. நான் வரேன்.” தன் மருமகளிடம் ஆரம்பித்து தன் சம்பந்தியிடம் முடித்தார் அப்பெரியவர்.

தளர்ந்த நடையுடன் அவர் செல்வதை பார்த்து, கார்த்திக்கின் மேல் எழுந்த கோபத்தில் இவரிடம் பேசாமல் இருந்தது தவறோ என சிந்ததித்தாள் மாயா. அவளின் அன்னைக்கும் அதே எண்ணமே. கார்த்திக் இப்படி செய்வான் என யார் நினைத்தார்?? தங்களை போல அவரும் தான் ஏமாந்து போய்விட்டார். இனிமேலும் அவரிடம் பாரா முகம் காட்டுவது நல்லதல்ல என தாயும் மகளும் முடிவு செய்தனர்.

இங்கே இவர்கள் இப்படி சிந்தித்தால் விநாயகம் கார்த்திக் பெங்களூர் சென்றதிற்காக சந்தோஷப்பட்டான். இருவரும் ஒரே அலுவகத்தில் வேலை பார்த்தாலும், இருவரும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இருந்தனர். முன்பேல்லாம் சாப்பிடும் போதும், ஈவ்னிங் காபி குடிக்கும் போது கண்டிப்பாக ஒன்றாக தான் இருப்பர். ஆனால், பிரச்சனை வெடித்ததின் பின் விநாயகம் அந்த வழக்கத்தை அறவே மாற்றிக் கொண்டான். அலுவகத்தில் யாருக்கும் ஒன்றும் சொல்லவில்லை.

இருவரும் நெருங்கிய தோழர்கள் என எல்லோருக்கும் அங்கே தெரிந்திருந்ததால், கார்த்திக்கை பற்றிய விஷயங்கள் அவனின் காதுகளுக்கு எப்படியாவது எட்டி விடும். அப்படி தான் கார்த்திக்கின் பெங்களூர் பயணம் பற்றி அவன் அறிந்தான். எப்படியோ மாயாவுக்கு மீண்டும் அவனால் தொல்லை இருக்காது என நிம்மதி கொண்டான் விநாயகம்.

மாயாவுக்கும் சிறு அர்ப்ப சந்தோஷமே கார்த்திக் பெங்களூர் சென்றதால்! இப்போது அவள் எண்ணமேல்லாம் அவளின் படிப்பின் மேலும், தன் வீட்டார் மேலும் படிந்தது. அவள் பிறந்தது முதல் தாயை, தங்கையை பிரிந்து இருந்ததில்லை. எப்போதும் அவர்களுடனே இருந்து பழக்கப் பட்டவளுக்கு, இப்போது தாய் உடல் நலம் சரியில்லாத வேளையில் தான் மட்டும் சென்னைக்கு பயணப்படுவது நெஞ்சை நெருடியது.

விநாயகமும் ரித்த்யாவும் அபிராமியை தாங்கள் நன்றாக பார்த்துக் கொள்வதாக கூறி வாக்களித்தனர். அவள் கிளம்பும் நாளும் வந்தது. தானும் அழுது, மற்றவர்களையும் அழ வைத்து ஓர் பாச மழையை பொழிந்தே சென்னைக்கு பயணப்பட்டாள் மாயா.

புதியதோர் உலகம் தனக்காக காத்திருப்பது போன்ற பிரம்மை அவளை சூழ்ந்தது.

அவளின் நுழைவுத் தேர்வுகள் முடியும் வரை விநாயகமும் சென்னையில் தங்குவதாக அவளுடன் கிளம்பினான். சென்னையில் மைதிலியின் அடுக்குமாடி வீடு திருவான்மையூரில் இருந்தது. மாயாவுக்கு என தனியாக ஒரு அறையை கொடுத்து அவளை தன் சகோதரி போலவே நடத்தினாள் மைதிலி. “இந்த தடியன் மட்டும் தான் நமக்கு கூட பிறந்தவன்னு நிறைய நாள் பீல் பண்ணிருக்கேன். அதனால இனிமேல் நீ தான் எனக்கு தங்கச்சி….”

மைதிலி டிபனை பரிமாறியவாரே விநாயகத்தை நக்கலாக நோக்கி கூறவும், விநாயகம் சரியான பதிலடி கொடுத்தான். “ஹலோ சிஸ்டர்! என்னால தான் உங்களுக்கு இந்த தங்கச்சி கிடைச்சிருக்கா… தெரிஞ்சிக்கோங்க…”

தன் தாய் மொக்கை வாங்கியதை கண்டு தன் மழலை சிரிப்பை உதிர்த்தாள் லேகா. நான்கு வயது மழலை சிரிப்பை பார்த்ததும், தன் மனம் லேசாவது போல் உணர்ந்தாள் மாயா. அவளின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு விட்டு, தான் அடுத்த வாரம் எழுதவிருக்கும் தேர்வுக்காக தயாராக தொடங்கினாள் மாயா.

அவள் அப்ளிகேஷன் போட்டிருந்த டிப்ளமோ இன் சினிமாட்டோகிராபி படிப்பதற்கு, மொத்தம் மூன்று கட்டத்தில் நுழைவு தேர்வுகள் நடைபெறும். முதல் இரண்டு சுற்றும் எழுத்து வகையான தேர்வுகளே. முதல் சுற்று சாதாரணமான பொது நுழைவுத் தேர்வு தான். இரண்டாவது சுற்று ஓர் திரைப்படத்தை விமர்சனம் செய்யும் வகையில் ஆப்டிட்யூட் தேர்வாக நடக்கும். மூன்றாவது நேர் முக இன்டர்வ்யூ நடக்கும்.

இப்படி மூன்று கட்டமாக நடக்கும் தேர்வுகளின் முடிவில் வெறும் பதினாங்கே பேருக்கு தான் அங்கே படிக்க அனுமதி கிடைக்கும்!! அதிலும், ஒரு சீட் வேற்று மாநிலத்தவருக்கும், இன்னொரு சீட் திரைப்படத்துறையில் இருப்பவரின் மகன் அல்லது மகளுக்கு கொடுக்கப்படும். இந்த இரண்டிலும் மாயாவுக்கு வாயிப்பில்லாதலால் அவள் மீதம் இருந்த பன்னிரெண்டு இடத்திற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்.

அடுத்த வந்த நாட்கள் முழுவதும் அவளின் கவனம் தேர்வில் தான் இருந்தது. எப்படியோ அவள் முதல் இரண்டு தேர்வுகளை கடந்துவிட்டாள். அந்த முதல் இரண்டு தேர்வுகளை எழுத வந்தவர்களின் எண்ணிக்கையை பார்த்தவளுக்கு மனதில் திக்கென்றிருந்தது. மேலும் அதில் தொன்னூறு சதவீதம் ஆண்களே!! கடவுளே இங்கே எப்படி மூன்று வருடம் படித்து முடிக்க போகிறோம் என்ற மிகப் பெரிய கேள்வி மனதில் படையெடுத்தது!

ஆனால், மனதில் இருந்த உறுதிமொழியை மீண்டும் புதிப்பித்துக் கொண்டு தன்னை தானே தேற்றினாள் மாயா. கடைசியாக நேர் முக நேர்க்கானல் நடந்தது. அந்த நேர்கானலில், அவளுக்கு கேமராவின் மேல் இருந்த தீராத காதலை நம்பிக்கையுடன் பகிர்ந்துக் கொண்டு தன் படிப்பை அந்த கல்லூரியில் மேற்கொள்ள நங்கூறத்தை நச்சென பாய்ச்சினாள் மாயசித்ரா!

கடைசியில் தான் தேர்வான முடிவை கல்லூரியின் நோட்டிஸ் போர்ட்டில் பார்த்து கண்கள் ஆனந்த கண்ணீரில் கலங்க, வெகு நாட்கள் கழித்து மனதில் சந்தோஷம் குடிபுகுந்தது மாயாவுக்கு. கோயம்பத்தூரில் அபிராமிக்கும், ரித்தியாவுக்கும் மிக்க சந்தோஷம்…

விநாயகம் தான் ஆரப்பாட்டம் பண்ணினான் முடிவுகள் வந்ததும்! “அந்த காலேஜ்ல இந்த டிபார்ட்மென்ட்ல படிக்கப் போற முதல் பொண்ணு நீயாதா இருப்ப!” விநாயகம் கூறியதை கேட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள் மாயா.

“ஹலோ செவன்டீஸ்லயே சுஹாசினி மணிரத்தனம் அதே காலேஜ்ல இதை தான் படிச்சாங்க. தெரியாம சும்மா அளந்துவிடக் கூடாது!” மாயா கூறியதை கேட்டு, வீட்டில் கொல்லென சிரிப்பு மழை பொழிந்தது. “சரி என்ன இப்போ?? அவங்கள மாதிரியே நீயும் பெரிய ஆளா வருவ… இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும். பசங்க நோட்ஸ் எடுப்பாங்க…. உனக்கு சிலை வைப்பாங்க…”

“ஐய்யோ… கடவுளே போதும் போதும்!!!”

மாயா கை எடுத்து கும்பிட்டு சிரிப்புடன் சொல்லவும், அந்த புன்னகை என்றும் அவள் முகத்தில் நிலவ வேண்டும் என வேண்டினான் விநாயகம். கல்லூரி பீஸ் அபிராமி மாயாவுக்கு வங்கியில் பணமாக போட, அவள் அதை எடுத்து கட்டினாள் கட்டணத்தை. சுப்பிரமணியத்துக்கும் கல்லூரியில் சீட் கிடைத்ததை தெரிவித்தாள் மாயா.

அவர் தான் பீஸ் கட்டுவதாக கூறவும், அதை அறவே மறுத்தார்கள் மாயாவும் அவளின் அன்னையும். விநாயகம் அவளுக்கு கல்லூரிக்கு தேவையானவற்றை வாங்கி கொடுக்க, மைதிலி மாயா மறுக்க மறுக்க அவளுக்கு சுடிதார்களை வாங்கி குவித்தாள்.

“ஏற்கனவே கல்யாணம் அப்போ எடுத்தது நிறைய இருக்குக்கா. வேணாம் ப்ளீஸ்…”

“பரவாயில்ல இதையும் வைச்சுக்கோ. எதுவும் வேஸ்ட் ஆகாது. டெய்லி போட்டுட்டு போவல?? அப்போ இதுவே கம்மியா தான் இருக்கும்…”

தனக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும், தன் பக்கம் அன்பானவர்களை எப்போதும் இருக்க வைத்த கடவுளுக்கு ரொம்ப நாள் கழித்து நன்றி தெரிவித்தாள் மாயா. இவர்கள் இப்படி செய்தால், மைதிலியின் கணவர் ராம்பிரசாத் வேறு ஒரு நல்ல யோசனை கொடுத்தார்.

“அவ இனிமே முக்காவாசி பசங்க கூட இருக்கற மாதிரி வரும். வெளிய நிறைய டிராவல் பண்ணுவா. அதனால, மாயாவுக்கு செல்ப் டிபன்ஸ் ரொம்ப முக்கியம். அவள கராத்தே கிளாஸ் அனுப்பலாம்.”

இதை கேட்டதும் மாயாவுக்கும் விநாயகத்துக்கும் சுருக்கென குத்தியது மனதில். பிறகு அவர் கூறுவதும் சரி தான் என உணர்ந்துக் கொண்ட விநாயகம், அவர்கள் வீட்டின் அருகிலேயே இருந்த கராத்தே கிளாஸ்ஸில் சேர்த்து விட்டான் மாயாவை.

நிறைய நாட்கள் இல்லாமல், முக்கியமாக செல்ப் டிபன்ஸ் கிளாஸ் எடுக்கும்மாறு வற்புறுத்தினான் மாஸ்டரிடம். அவரும் செவ்வாய், சனி, ஞாயிறு மாலை வேளையில் கிளாஸ் வந்தால் போதும் என கூறினார். அதில் அவளை சேர்த்துவிட்டு திரும்ப தன் ஊருக்கு கிளம்பினான் விநாயகம்.

மாயாவுக்கும் கல்லூரி தொடங்கியது! தினமும் காலையில் எழுந்து மைதிலிக்கு சமையலில் உதவுவது, பின் லேகாவை ஸ்கூலுக்கு கிளப்பி தானும் கல்லூரிக்கு புறப்படுவது என நேரம் பறக்கும். அவர்கள் வீட்டிலிருந்து தரமணியில் இருக்கும் கல்லூரிக்கு செல்வதற்கு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் எடுக்கும் மாநகரப் பேருந்தில்.

மாலை கல்லூரி முடிந்ததும் மீண்டும் பேருந்தில் வீட்டிற்கு செல்வாள். கொஞ்ச நேரம் லேகாவுடன் விளையாடி ரிலாக்ஸ் செய்துவிட்டு, வீட்டு வேலைகளில் மைதிலுக்கு உதவிவிட்டு, படிப்பதற்கு எதாவது இருந்தால் அதையும் முடித்துவிட்டு, இரவு சாப்பாடு ஆனவுடன் படுப்பாள். இதையெல்லாம் முடித்து அசதியில் படுத்தால் தான் தேவையற்ற சிந்தனையின்றி நித்திரா தேவி அவளை தழுவிக் கொள்வாள். இல்லையேல் சிவராத்திரி தான்!

நாட்கள் இபப்டியே கழிந்தன… கல்லூரியில் அவள் வகுப்பில் அவள் தான் ஒரே பெண் மாணவி. மிகவும் தனிமையாக உணர்ந்தாலும், மாணவர்களிடம் சேர்ந்து பழகுவதில் ஓர் தயக்கம் இருந்தது அவளிடம். அதையும் அவளின் வகுப்பு மாணவர்கள் உடைத்து தங்களின் நட்புக்கரங்களை நீட்டினர். அவர்களிடம் பழகும் போதே தனக்கு திருமணமாகியதை மறைக்காமல் கூறினாள். ஆச்சரியமாக அவளை பார்ப்பர் எல்லோரும். வகுப்பிலோ அவளுக்கு அத்துறையை பற்றி தெரிந்தது கைமன் இல்லை விரல் அளவு மண் கூட இல்லை என்பது போல, பலவற்றை அவளுக்கு அறிமுகப்படுத்தினர். அனைத்தையும் கற்றாள் ஆவலாக!
 
Top