Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 3 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 3

மாயசித்ராவின் வகுப்பில் மாணவிகளும் மாணவர்களும் சம அளவில் இருந்தனர். அவள் வந்த சில நாட்களிலேயே தெரிந்துக் கொண்டாள். சக மாணவிகள் பேசும் நேரத்தில், பாதி நேரம் அவர்களின் பேச்சு, கார்த்திக்கை பற்றியே இருக்கும்!

அதிலும் காயத்ரி என்பவள் அவன் மேல் பைத்தியமாகவே இருந்தாள்! முதலில் மாயாவுக்கு இவளின் ஹீரோ தன்னுடைய வில்லன் தான் தெரியாமல் இருந்தது. பின்னொரு நாள் தூரத்தில் செல்லும் கார்த்திக்கை அந்த அறிவுக்கொழுந்து பார்த்து சுட்டிக் காட்டவும் தான் மாயாவுக்கு விம் போட்டு விளங்கியது.

‘ஷபா… இவனுக்கு தான் இவ்வளவு பில்டப்பா??’ முகத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அலட்சியத்தை வர வைத்து, தன் தோழி கனிமொழியை பார்த்து முறைத்தாள். கனிமொழிக்கு இவளின் கதை தெரியுமாதலால், உதட்டோரம் நக்கலை புன்னகையில் மறைத்து வைத்தாள்.

காயத்ரியும் அவளின் தோழிகளும் கார்த்திக்கையே நோக்கினர். அவர்களின் பிதற்றல்கள் சில… “ஹே இன்னிக்கு செமையா இருக்கான்ல?? க்ரீன் கலர் அவனுக்கு சூப்பரா இருக்கு…”

“அவனுக்கு எது போட்டாலும் நல்லா தான்டி இருக்கும். இதுக்கேல்லாம் தனி குடுப்பினை வேணும். எவளுக்கு குடுத்து வைச்சுருக்கோ??”

“ஹே ஹே கூலர்ஸ் மாட்றான் பாரேன்! செம ஹேன்ஸம் ஹன்க்டி இவன்!”

“அவன் பைக் ஓட்டுற ஸ்டைலே வேற லேவல் போ…. ஆனா, நான் பைக்ல வரேன்னு சொன்னதுக்கு முடியாதுனு சொல்லிட்டான்.”

அதுவரை அவர்களின் பேச்சை அசுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்த மாயா, கடைசி வார்த்தையில் நிமிர்ந்தாள் திகைத்தபடி. “நீங்க அவன்கிட்ட எல்லாம் பேசுவீங்களா??”

மாயசித்ராவின் கேள்வியில் சிரித்தபடி பதில் கூறினாள் காயத்ரி. “பேசுவீங்களாவா?? எங்க எல்லாரையும் நல்லா தெரியும் அவனுக்கு. அவன் மேல எங்களுக்கு ஒரு க்ரஷ் இருக்குன்னும் தெரியும். ஆனா, எப்போவுமே கழுவுற மீன்ல நழுவுற மீனாவே இருப்பான்.

சிக்கவே மாட்றான்… அவன் எம்.பி.ஏ படிக்கறான். பி.இ.யும் இங்க தான் பண்ணான். நாங்க, கார்த்திக், அவன் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ரெண்டு தடவ படத்துக்கு கூட போயிருக்கோம். பட், அவனுக்கு இந்த லவ், காதல் இதெல்லாம் மேல பெருசா நம்பிக்கை இல்ல! கேட்டா பெரிய கும்பிடு போடுவான். லவ்வே வேணாம்னு ஓடுற அவன் பின்னாடி தான் நாங்க ஓடுறோம்!”

“ஏன் லவ் பிடிக்காது அவனுக்கு?” கனியின் கேள்விக்கு பெருமூச்சை எறிந்தபடியே பதிலளித்தாள் காய்த்ரி. “பெருசா ரீஸன் எல்லாம் சொல்ல மாட்டான். இந்த காலத்துல எல்லாரும் சுத்தறத பார்த்து, நம்பிக்கையே போயிடுச்சுனு சொல்லுவான்.”

மாயாவின் மனது அவளையும் அறியாமல், அனைத்தையும் பிற்காலத்தில் உபயோகப் படுத்த செமித்து வைத்தது. இதில் கூட்டத்தில் இருந்து திடீரென ஒருத்தி, “இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல… அவன் எப்படி சூப்பரா பாடுவான் தெரியுமா? கிட்டார் எடுத்துட்டு, ஸ்டேஜ் போனான்னா கிளாப்ஸ் சும்மா பறக்கும்.” என்று கூறவும், மாயசித்ராவின் கிண்டல் முந்திரிக் கொட்டையாய் முந்திக் கொண்டது.

“நாங்கலாம் ஒருத்தர் ஸ்டேஜ் ஏறுனதே பிடிக்கலனா தான், கிளாப்ஸ் பறக்கவிட்டு கீழ வர வைப்போம்.”

காயத்ரி இதனை கேட்டு பொங்கிவிட்டாள். “ஹே சும்மா தெரியாம பேசாத! அவன் பாடுறதை பத்தி இந்த காலேஜ்ல கேட்டுப்பாரு சொல்லுவாங்க. வாங்கடி போகலாம், கிளாஸுக்கு டைம் ஆச்சு!”

மாயாவை எச்சரித்துவிட்டு, அவளின் ‘கேங்கை’ அழைத்துச் சென்றாள் காயத்ரி. கனிமொழியும் மாயாவும் தனித்து விடப்பட, “ஹே என்னடி அவனுக்கு போய் இவ்வளவு டிமான்டா?? இவங்க கிட்ட எல்லாம் ஒழுங்கா இருப்பானா?” என்று சந்தேகத்துடன் வினவினாள்.

“நானும் அவனை பத்தி கேள்விப்பட்டேன்டி. அவங்க அப்பா பெரியா ஆடிட்டராம்! வசதியான வீட்டு பையன், பிளஸ் பார்க்கவும் சூப்பரா இருக்கான்ல? அதான் எல்லாரும் போய் விழறாங்க. அப்புறம், அவன் நிறைய காலேஜ் கல்சுரல்ஸ்ல சிங்கிங்ல வின் பண்ணிருக்கானாம். கிட்டார், கீபோர்ட் ரெண்டுமே சூப்பரா வாசிப்பானாம். இல்லனா அவனுக்கு அவ்வளவு க்ரேஸ் இருக்குமா சொல்லு…”

கனியின் பேச்சை கேட்டு, இதழ்களை சுழித்தாள் மாயா. “என்ன தான் சொன்னாலும் அவன் இவங்க எல்லாம் சொல்ற அளவுக்கு வொர்த்தா தெரியல! என்னமோ பண்ணிட்டு போகட்டும்…. நமக்கு என்ன??”

இப்படியாக மாயாவின் மனதில் கார்த்திக் குடிப்புக, கார்த்திக்கின் மனதில் மாயா வேறு விதமாக குடியேறினாள். அன்று மாலை காலேஜ் நூலகத்தில் சிறிது நேரம் கழித்துவிட்டு, மைதானத்தில் இறங்கி நடக்கத் துவங்கினாள். கனிமொழியின் வீடு வெகு தொலைவில் இருந்ததால், அவள் காலேஜ் விட்டதும் சென்றுவிடுவாள். தனியாக நடந்து வந்துக் கொண்டிருந்த இவளை பார்த்து, அவளின் சீனியர் மாணவர்கள் சிலர் கிண்டல் அடிப்பது, தூரத்தில் வந்த மாயாவுக்கும் தெரிந்தது.

எதையும் காதில் ஏற்றிக் கொள்ளாமல், அவர்களை கடந்து செல்ல முயன்றாள். திடீரென அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், அமைதியாக சென்றுக் கொண்டிருந்த இன்னொரு மாணவனை இவளின் மேல் தள்ளிவிடவும், மாயாவின் மேல் அந்த மாணவன் சாய்ந்தான்.

அதற்குள் மாயசித்ரா சுதாரித்து நகர்ந்துவிட, அந்த சீனியர் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தான். வந்ததே கோவம் மாயாவுக்கு… கூடியிருந்த மாணவர்கள் இவர்களை கவனிக்க ஆரம்பித்து இருந்தனர். அந்த மாணவர் கூட்டத்தில் நம் மூவர் கூட்டணியும் இருந்தனர்.

கோபமாக அந்த சீனியரை உறுத்து விழித்த மாயா, நேராக ராகேஷிடம் சென்றாள். அவன் தான் அந்த சீனியர். “இப்போ எதுக்கு அவனை தள்ளிவிட்ட?? இந்த மாதிரி தள்ளிவிட்டு விளையாடுறதுக்கு பொண்ணுங்க அவ்வளவு கேவலமா போயிட்டோமா??”

ஆத்திரத்தின் உச்சாணி கொம்பில் நின்றிருந்த மாயாவுக்கு, என்ன செய்கிறோம் என்றே விளங்கவில்லை! இவள் திட்டியதை பொருட்படுத்தாமல், சிரித்தப்படி இருந்த ராகேஷை பார்த்தப் போது இன்னும் நாசி புடைக்க கோவம் ஏறி, முகமே சிவந்தது மாயாவுக்கு!

ஓங்கி ஒன்று விட்டால் என்ன, என்று அவள் மூளை யோசிக்கும் போதே கைகளை ஓங்கிவிட்டாள்! ராகேஷும் இதை எதிர்பார்ர்க்காதலால் அப்படியே திகைத்து நின்றான். ஏன் கூடி இருந்த அனைவருமே மாயாவின் செயலை யூகிக்கவில்லை! ஆனால், ஓங்கிய கைகள் ராகேஷின் கன்னத்தை தொடவில்லை!

கைகளை அவன் கன்னத்திற்கு மிக அருகில் கொண்டு சென்று நிறுத்திவிட்டு, அழுத்தமான குரலில் எச்சரிக்கை மணியடித்தாள் மாயா. “இன்னொரு தடவ இந்த மாதிரி செஞ்சனா, என்னோட கைக்கும் உன்னோட கன்னத்துக்கும் இருக்குற கேப் இருக்காது! ஒழுங்கா நடந்துக்கோ…”

சொல்லிவிட்டு மிடுக்கான நடையுடன் தன் ஸ்கூட்டியை எடுத்துச் சென்றுவிட்டாள். ராகேஷ் கன்றிப் போன முகத்துடன் அவ்விடத்திலிருந்து செல்ல, மூவர் கூட்டணியும் கேன்டீன் நோக்கிச் நடையை கட்டினர். விநாயகத்தின் முகமே பேயறைந்தது போல் இருந்தது!

கதிர் தான் அதை கவனித்தான். “என்னடா இவன் மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கான்?” கார்த்திக்கும் என்னவென்று விநாயகத்திடம் வினவ, பேராச்சரியத்துடன் பதில் கூறினான்.

“என்ன பொண்ணுடா அவ!? ஈஷ்வரா!!! அவ அடிச்சு இருந்தா கூட இவ்வளவு பயமா இருந்திருக்காது. ஆனா அடிக்காம கையை நிப்பாட்டினா பார்த்தியா, தில்லா ஒரு லுக்கோட?? அங்க நிக்கறாடா அவ… இதுல பஞ்ச் டையலாக் வேற! இனிமே அந்த பொண்ணுகிட்ட போவேன்னு நினைக்குற? டென் ஸ்டெப்ஸ் பேக் தான்… ஆல்ரெடி அந்த பொண்ணு என்னைவிட அரை இன்ச் ஹைட்டா இருக்கு!”

இதை கேட்டு கதிர் சிரித்தபடி, “மச்சா அந்த பொண்ணு மாயா அடிக்க போனதுக்கு, ராகேஷ் பயந்தானோ இல்லையோ, இவன் நல்லா பயந்துட்டான்டா.” என்றான் குரலில் கிண்டலை கலந்து.

பதில் வரவில்லை என்றதும் தான், கார்த்திக்கின் முகம் சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதை கவனித்தான். கார்த்திக்கின் தோளை தொட்டு, கண்களாளே என்னவென்று கதிர் கேட்க, புரியாத ஒரு வகை உணர்வுடன் பேசினான் கார்த்திக்.

“இல்ல இவ மத்த பொண்ணுங்கள மாதிரி இல்லைடா. முடியை ஐயர்ன் பண்ணிட்டும், கோனல் மானாலா வாரிட்டும் வர இந்த காலத்துல, இவ கொஞ்சம் ஹோம்லியா இருக்கான்னு நினைச்சேன். பட், அவ நடந்திருக்கிறது பார்த்தா ரொம்ப தைரியமான பொண்ணா இருக்கா… அவ காரக்டரையே புரிஞ்சுக்க முடியல!”

கார்த்திக் சொல்வது போல், மாயசித்ரா இடுப்பளவு முடியுடனே இருப்பாள். ரித்தியா கூட எத்தனையோ முறை சொல்லிவிட்டாள், முடியை ஸ்டைலாக வெட்டிக் கொள்ள. ஆனால், மாயாவின் பதில் எப்போதுமே ஒன்றாகதான் இருக்கும். “எத்தனையோ பேர் முடி வளர்க்க கஷ்டப்படுறாங்க. எனக்கு இதுவே போதும். வேற ஹேர்ஸ்டைல் எல்லாம் வேண்டாம்.”

ஏனவே பார்ப்பவர்களுக்கு அவளின் தோற்றம் ஹோம்லியாகவே இருக்கும். இவர்கள் பார்த்தப்போது எல்லாம் சுடிதாரிலேயே இருந்ததால், கார்த்திக்கிற்கு அப்படி தோன்றியது. ஆனால், கார்த்திக்கின் இந்த பதிலை கேட்டு விநாயகம் பொங்கிவிட்டான்.

“டேய் கவனிக்கல கவனிக்கலன்னு சொல்லிட்டு, இவ்வளவு சொல்ற மாயாவ பத்தி?? பாவி, உன்னை மட்டும் நம்பவே கூடாதுடா… இதுல, அந்த பொண்ணு ‘திமிராரகம்’ன்னு வேற கூவிட்டு இருந்த! நீ வேணும்னா அப்படி வைச்சுக்கோப்பா. எனக்கு அந்த பொண்ணு இனிமே, ‘பயாநகம்’ தான்.”

கன்னத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு, பயந்த முகத்துடன் விநாயகம் கூற, கார்த்திக்கும் கதிரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சூப்பர்ஸ்டாரின் தீவிர விசிரியாக இருந்த மூவரும், பெண்களை ‘படையப்பா’ படத்தில் வருவது போல், ரக வாரியாக பிரிப்பர்.

‘சாத்வீகம், பச்சோதகம், பயாநகம்’ என தலைவரின் ஃபார்முலாவை இவர்கள் வழிப்பற்ற, மாயசித்ராவை காலேஜில் பார்த்தவுடன், அவளின் திமிர்த்தனம் மட்டுமே கார்த்திக்கின் கண்களுக்கு பட்டது. அவள் இந்த மூவகையிலும் சேர மாட்டாள் என கூறி, புதிதாக அவளை ‘திமிராரகம்’ என தனியாக வகையருத்தான் அந்த நல்லவன்.

விநாயகத்தின் பயமும் புரிந்ததால், மேலும் அவளை பற்றி பேசாமல் கலைந்து சென்றனர் மற்ற இருவரும். ஆனால், இரண்டே நாட்களில் மாயசித்ராவை சந்திக்கும் தருணம் வந்தது விநாயகத்துக்கு. அதுவும் தனியாக!

ஒரு ஞாயிறு காலை, பத்து மணியளவில் அவனுடைய வீட்டருகில் இருக்கும் சூப்பர்மார்கேட்டுக்கு சென்றான். பொருள்களை எடுத்துவிட்டு, பில் போடும் போது தான் கவனித்தான் தன்னுடைய பர்ஸை எடுத்து வரவில்லை என!!!

மூச்சடைத்து பேந்த பேந்த விழித்துக் கொண்டே கடைக்காரரிடம் பர்ஸை வீட்டிலிருந்து எடுத்து வருவதாக கூற, அவர் முறைத்துக் கொண்டே தலையாட்டினார். இவன் சில முறையே அந்த கடைக்கு வந்திருந்ததால், அவனை கடைக்காரருக்கு தெரியவில்லை. அதற்குள் ஒரு கை மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டி, “அண்ணா இவருக்கும் சேர்த்தே பில் போட்டுறுங்க. எனக்கு தெரிஞ்ச அண்ணா தான்.”

‘யாருடா அது நமக்கும் சேர்த்து பில் போடுற தங்கச்சி?’ கேள்வியுடன் திரும்பி பார்த்தால் நின்றிருந்தாள் மாயசித்ரா. இவனை பார்த்து, சில சென்டிமீட்டர்கள் உதட்டை இழுத்து வைத்தாள். அவ்வளவே… ஆனால், இவளுக்கு தெரிந்தவர் என்றவுடன் கடைக்காரர் முகமெல்லாம் பல்லாக பில் போட்டார். “ஹோ உனக்கு தெரிஞ்சவராமா? நல்லது.” ‘நம்மள விட இந்த பொண்ண இங்க தெரிஞ்சிருக்கு! அண்ணானு வேற கூப்பிடறா? ஒண்ணும் விளங்கலையே’ யோசித்தபடியே இவன் பொருள்கள் அடங்கிய பையை வாங்கிக் கொண்டு நிமிர, அதற்குள் மாயா தன் வண்டியில் ஏறி பறந்துவிட்டாள்!
 
:love: :love: :love:

அண்ணாக்கு உதவிக்கரம் நீட்டியாச்சு :p :p :p
பயாநகம் இனி பாசப்பயிர் வளர்க்குமா???

திமிராரகம் தேவராகம் பாடுவான் போல.......
 
Last edited:
Top