Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கெளதம் பேகனின் "High on காதல் - 4"

Advertisement

Gowtham began

Member
Member
May 2017,
Outting Plan சொதப்பிய கடுப்பில் இருந்த ஸ்ருதியை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தான் அருண். ஆனால் ஸ்ருதி கோபபட்டதே தனக்கான Respect அருணிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தான் என அன்றைக்கு புரியவில்லை. அருண் மற்றவர்களிடம் வாழைப்பழம் போல் பேசுவான் ஆனால் ஸ்ருதியிடம் மட்டும் சில தடவை நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று என்ற ரகம் தான்.

இந்த Communication Problem அவர்கள் அவர்களின் காதலை விட நன்கு வளர்ந்து கொண்டிருந்தது. ஸ்ருதிக்கு எப்பொழுதும் அருண் தன்னை மதிப்பதில்லை தன் நண்பர்களிடம் விட்டு கொடுத்து பேசுகிறான் என்ற நினைப்பு உண்டு.
இதே போல் ஒரு முறை அருண் மற்றும் அவன் நண்பர்கள் அனைவரும் தத்தமது ஜோடியுடன் 3 நாள் பாண்டிச்சேரி ட்ரிப் போட்ட பொழுது அருணின் நண்பர்களால் ட்ரிப் ஒரே நாளில் முடித்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்பொழுதும் ஸ்ருதி கடுப்பில் உச்சத்திற்கு போனாள்.

இப்படி அவர்களுக்குள் மனக்கசப்பு இருக்கும் பொழுது ஸ்ருதி ஊரில் இருந்து வருவதை அருணிடம் சொல்ல மாட்டாள். இது போன்ற நேரத்தில் ஸ்ருதியின் நண்பர்களிடம் அவன் கேட்டு தெரிந்துகொள்வான்.
அதனாலேயே ஸ்ருதி -அருண் சண்டை இருவரின் நண்பர்களுக்கும் தெரிந்து விடும் வாய்ப்பு இருந்து விடும்.

அப்படி தான் ஒரு நாள் ஸ்ருதியின் வருகையை தெரிந்து கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் அவள் வீட்டிற்கு Surprise Visit அடித்த பொழுது,
வா அருண் என்ன திடீர் visit? உங்களுக்குள்ள ஏதாச்சும் சண்டையா மறுபடியும்?? புன்னகையுடன் வரவேற்ற ஸ்ருதியின் அம்மா.
சிரித்து தலையாட்டிக்கொண்டே,
அவ இருக்காளா ? என்றபடி உள்ளே வந்தான்..

அவ அவங்க அப்பா கூட Passport size photo எடுக்க போயிருக்கா. நீ உட்காருபா எதாவது சாப்பிடுறியா?
என்றபடி வழக்கமான பேச்சு தொடர்ந்தன இருவருக்கும்.
சரிப்பா நீ TV பாத்துட்டே இரு, இன்னைக்கு சஷ்டி.. நான் முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன் நீ இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்.
என்ற கண்டிப்புடன் ஸ்ருதியின் அம்மா. இது போன்று கோவில், குளம் என்று செல்லும் பொது வீட்டில் ஸ்ருதி தனியாக தான் இருப்பாள். இது அருண்- ஸ்ருதி இருவருக்கும் சாதகமாக அமைவது சில முறை என்றாலும் பெரும்பாலும் அமைத்துக்கொள்வது தான் அதிகம்.

ஸ்ருதியின் பெற்றோருக்கு அருணை மிகவும் பிடிக்கும் என்பதால் மட்டும் அல்ல இருவர் மீதும் அதீத நம்பிக்கையும் இருப்பதால் மற்ற பெற்றோர்கள் போல் சந்தேக கண் கொண்டு பார்க்க மாட்டார்கள். இது போன்ற நேரத்தில் நெருக்கமாக இருக்கும் இருவரும் முதலில் பெற்றோரின் நம்பிக்கைக்கு Guilt ஆனாலும் தாங்கள் சந்தித்து கொள்வதே குறைவு என்பதால் காலப்போக்கில் காதல் அவர்களின் Guilt-ஐ மறைத்து விட்டது.
இது தான் சரியான சமயம் ஸ்ருதியை பார்த்த உடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் அனைத்து பிரச்னையும் முடிவுக்கு வந்து விடும் என்று வானில் மிதந்து கொண்டு இருந்தான் அருண் ஏனென்றால் ஒருமுறை ஸ்ருதி,

நமக்குள்ள எவ்ளோ பிரச்னை இருந்தாலும், நீ என்னை வந்து கட்டிபிடிச்சா எல்லாம் சரி ஆயிடும் அருண்.

நெஜமாவா ??எப்போவுமா ??

நாம எந்த வயசுல இருந்தாலும், நம்மகூட யாரு இருந்தாலும் நீ கிட்ட வந்து என்னை Hug பண்ணிக்கிட்டா எந்த சண்டையா இருந்தாலும் நான் மறந்தே போய்டுவேன்..

நினைத்து கொண்டு இருக்கும் பொழுதே ஸ்ருதி கதவை தட்டினாள்..
ஆவலுடன் கதவை திறந்தான்.
ஹாய்

ஹ்ம்ம்… ஹாய்


அவள் கடுப்பாய் இருப்பதை உணர்ந்தான்.

நான் வந்தது தெரியுமா??

அம்மா சொன்னாங்க..

கதவை மூட அருண் முயன்ற பொழுது தடுத்தாள் ஸ்ருதி.. புரியாமல் பார்த்தான்..
வெளிய வராண்டால பக்கத்து வீட்டுக்காரங்க இருக்காங்க. நீ வந்தது தெரியும் நல்ல இருக்காது..

சற்று மௌனம் கலந்த ஏமாற்றத்துடன் அருண். அப்புறம் எப்போ வந்த?? சாப்பிட்டியா?? போன்ற உரையாடல்கள். மறந்தும் கூட இருவரும் தாங்கள் போட்ட சண்டையை பற்றி பேசி கொள்ளவில்லை…

“அம்மா Kitchen-ல எதோ பண்ண சொன்னாங்க நீ wait பண்ணு..”

கிச்சனுக்குள் கூடவே போனான் அருண். கதவு திறந்திருந்தாலும் அங்கிருந்து யாரும் கிச்சனை எட்டி பார்க்க முடியாது என்பதால் இது தான் சமயம் என்று கட்டிப்பிடிக்க ஆவலுடன் வந்தான்.. ஏதேதோ வேலைகளை செய்துகொண்டு அதற்கான சந்தர்ப்பம் அமையாமல் பார்த்துக்கொண்டாள் ஸ்ருதி..

அப்படியும் அருண் கிட்ட நெருங்குவது தெரிந்ததும்,
“ஹேய்ய் அருண் வேணாம்… ஆளுங்க வெளியே இருக்காங்க நல்ல இருக்காது….” என்று கடிந்து கொண்டாள். அருணிற்கு முகம் சட்டென்று வெளிறி போனது. இதற்கு மேல் இப்படி செய்தால் தான் அலைவது போல் இருக்கும் என்று மரியாதையை காப்பாற்றி கொள்ள நினைத்தான் அருண்.
இருப்பினும் எப்படியாவது அவளை சமாதானப்படுத்தி விட வேண்டும் அதிகம் முனைப்புடன் போராடி கொண்டு இருந்தான்…


ஆனால் அந்த பக்கத்தில் இருந்த ஒரு Reaction-um தெரிவதாய் இல்லை.. குப்பையை கொட்ட போகும் நோக்கத்தில் மும்மரமாய் இருந்தாள் ஸ்ருதி. Atleast இதற்காகவாது உதவி செய்வோம் என்று,

அதை என்கிட்ட குடு நான் டிஸ்போஸ் பண்ணிட்றேன் என்று சொல்லி வாங்குவதற்குள்… படக்கென்று பிடுங்கினாள் … ஒன்றும் புரியாமல் ஏன் என்பது போல் பார்த்தான்.

வேணாம் அதெல்லாம்.. விடு

ஹே பரவாயில்லை யா! இதுல என்ன இருக்கு…

என்று உரிமையுடன் மீண்டும் வாங்க முயற்சிக்க..
தள்ளு அருண் சொன்ன புரிஞ்சுக்க அதெல்லாம் நீ தொடாத… மீண்டும் முகத்தில் அடித்தார் போல ஸ்ருதி..

அப்படி அந்த குப்பையில் என்ன தான் இருக்கிறது என்று நகர்ந்து கொண்டு நோட்டம் விட்டான் அருண்… அவளின் Sanitary napkin போல தெரிந்தது.

நான் தானே… இதுக்கு ஏன் இப்படி behave பண்றா? என்கிட்டே ஏன் இந்த Distance?
என்று மனதிற்குள் நினைத்து வெறுப்புடன் சோபாவில் அமர்ந்தான் அருண்..

இதை மேலும் பெரிதாக்க கூடாது என்று சகஜமாக இருப்பது போல் தன்னை மாற்றிக்கொண்டான் அருண்.

ஹே ஸ்ருதி நாளைக்கு மீட் பண்ணுவோமா??

ஹ்ம்ம்..Ok நான் நாளைக்கு சொல்றேன்!

ஒரு மணிக்கு மேல ஒகே யா ??? எப்போ Free - னு சொல்லு
என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுதே ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் வந்து விட்டார்கள். அவர்களிடம் கொஞ்சம் பேசி விட்டு கிளம்ப தயாரானான் அருண்.
ஸ்ருதி வீட்டின் வெளி Gate-in பக்கத்தில் நின்று கொண்டு,

நாளைக்கு Plan பத்தி சொல்றேன்.. பாத்து போ… Reach ஆகிட்டு Text பண்ணு:” என்று அக்கறை காட்டியவுடன்.

Am very sorry யா எதையும் மனசுல வெச்சிக்காத Sorry for all the things happened”

“Its Okay! - அவள் சிரிப்பில் செயற்கைத்தனம் தெரிந்தது …

இப்பொழுது எல்லாம் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் கெஞ்சலாக, “ஒரு Hug ? என்றான் அருண்..

Formal ஆக அவளின் உடல் அவன் மீது படாதவாறு ஒரு Hug கொடுத்தாள் ஸ்ருதி..

Bike start செய்து Bye சொல்லிவிட்டு யோசித்துக்கொண்டே சென்றான் அருண்.

“நாம எந்த வயசுல இருந்தாலும் நம்மகூட யாரு இருந்தாலும் நீ கிட்ட வந்து என்னை Hug பண்ணிக்கிட்டா எந்த சண்டையா இருந்தாலும் நான் மறந்தே போய்டுவேன் “
ஸ்ருதியின் Echo- வாய்ஸில் அவள் சொன்னதை மூளைக்குள் ஒட்டி பார்த்தான் அருண்.

எப்படியோ சமாதானம் ஆகி விட்டாள் என்று Just for sake நினைத்துக்கொண்டாலும் ஸ்ருதி பழையபடி அவனிடம் இல்லை என்று அருணின் உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.



September 2018,
சனிக்கிழமை நாட்களில் இப்படி அவன் வெறுமையாக இருந்ததே இல்லை. வெள்ளிக்கிழமை இரவே ஹைதராபாதில் இருந்து சென்னை வரும் ஸ்ருதியின் சனி, ஞாயிறு Outting Plan-கள் ஒரு நிமிடம் கூட சொதப்பிட கூடாது என்று காலை எட்டு மணிக்கே எண்ணெய் வைத்து தலைக்கு குளித்து கொள்ளும் பரபரப்பு அருணிடம் இப்பொழுது அறவே இல்லை.
பொதுவாகவே காதல் தோல்வி என்றால் முகம் முழுக்க தாடி வைத்து கொள்ளும் அன்றைய (Note – 90’s Kids ) பொதுபுத்தியும் அருணிற்கு வாய்க்கவில்லை. மீசை தாடி நன்கு வளரும் கொடுப்பினை இல்லாததே அதற்கு காரணம். அதனால் எப்பொழுதும் தனக்கு ஏன் வம்பு என்று Clean shave தோற்றத்தில் தான் திரிவான்.

இருந்தாலும் அருண் ஒரு வித Chocolate boy அழகன் தான்!!! லோ பட்ஜெட்டில் அலைபாயுதே படத்தை மணிரத்னம் எடுத்திருந்தால் அருணை தான் கண்டிப்பாக அணுகியிருப்பார். அப்படி ஒரு சுமாரான வசீகரத்தில் இருப்பவனுக்கு எப்பொழுதும் சைட் அடிக்க ஒரு Particular demographic பெண்கள் கூட்டம் இருப்பதை அருணும் அறிவான்..

ஆனாலும் காதலியே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்து கொண்டிருந்த ஸ்ருதியின் இந்த ஏகபத்தினி விரதன் தன்னிடம் பேசும் பெண்களிடம் பெரிதாக முயற்சி எடுத்துக்கொள்ளமாட்டான்.. பேசினாலே ஸ்ருதிக்கு துரோகம் இழைத்து விடும் செயலாகி விடுமோ என்று நம்பி கொண்டு இருந்தான் அருண்.

வெறுமையே உருவாய் இருந்த அப்படி ஒரு சனிக்கிழமையில் தான் யாமினி என்றவளிடம் இருந்து ஒரு Fb Notification!!!!.
Mutual Friends – இரண்டு! அதுவும் யாரென்று தெரியாத ஒரு Fb profile - இல் இருந்து Friend request வந்திருந்தது. பார்ப்பதற்கு சின்ன கல் மூக்குத்தி போட்ட Drew Barrymore போல் இருந்த அந்த பெண்ணின் Profile -ai கொஞ்சம் மேய்ந்து கொண்டு இருந்தான். சற்று பூசினார் போல் இருந்தாலும் கண்களில் ஒரு கிறக்கம் இருந்ததை பார்க்க நன்றாக தான் இருந்தது.. எதையோ யோசிக்க முற்பட்டு பின்னர் சட்டென்று Friend request – Confirm என்ற Button-ai அழுத்தினான்.

சற்றும் தாமதிக்காமல் அவளிடம் இருந்து வந்தது Hiii… என்ற ஒரு Message!!
இந்த வேகம் அவன் எதிர்பாராதது தான் என்றாலும் நிதானமாய் ஒரு Hello!! அனுப்பினான்.

Wassup wid yo?

Nothing much, Hbu?

Same here, So are you committed?


இப்படி ஒரு கேள்வியால் கொஞ்சம் ஆடி தான் போய் இருந்தான் அருண்… நாம் என்ன அப்படி ஒரு அழகனா?? அல்லது இக்காலத்து பெண்கள் கொஞ்சம் ஸ்பீடாக இருக்கிறார்களா?? என்று நினைத்துக்கொண்டே
No not yet என்று பதில் போட்டான்…

எதற்கு நாம் இப்பொழுது சிங்கள் என்று பொய் சொன்னோம் எல்லாம் நிஜமாகவே முடிந்து விட்டதா அல்லது நான் ஸ்ருதியை விட்டு விலகி விட்டேனா என்ற ஒரு வித Guilt மனநிலையில் குழம்பி கொண்டே
And you? என்று கேட்டு Reply எதிர்பார்த்து கொண்டு இருந்தான் அருண்…

Ohh nice. I was in serious relationship with a guy but he ditched me.. So not as of now...Actually I have seen you somewhere else.

போச்சு டா…. எப்பொழுதோ அருண் நடித்த ஒரு “Short Film” Youtube -ல் கொஞ்சம் Viral ஆகி இருந்தது… அதற்கு பிறகு நிறைய Girls இடம் இருந்து Messages, Notifications வந்தாலும் ஸ்ருதி பிரிந்த பிறகு இன்று தான் FB யில் Active ஆனான் அருண்.

Yeah.. I have already acted in a tamil short film.

தமிழ் தானா நீ?? I thought you were a gulte.

“LOL” பச்சை தமிழன் யா. - உண்மையிலேயே சிரித்து கொண்டான் அருண்!!!

சரி உன் Short film Link Send பண்ணு.


ஒரு Youtube லிங்க் ஒன்று யாமினிக்கு அனுப்பி விட்டு வேறு ஒரு Call வந்தது என்று சென்றான் அருண்…

பிறகு இரவு உணவை முடித்து விட்டு Fb Messenger – ai Check செய்து பார்த்தான் அருண், யாமினியிடம் ஒரு பதிலும் வரவில்லை… ஒரு வேலை இந்த Shortfilm- ஐ பிடிக்க வில்லையோ…!!! சரி பரவாயில்லை என்று வழக்கம் போல் Whatsapp, FB Block list - இல் இருந்து தம்மை ஸ்ருதி Unblock - செய்து விட்டாளா என்று செக் செய்ய போனான்.

எப்பொழுதும் இரவு இது போல் செக் செய்து விட்டு இளையராஜா,… ரஹ்மான், Adele…. இன்னும் எந்த எந்த மொழிகளில் காதல் தோல்வி பாடல்கள் வந்திருக்குமோ அத்தனையும் கேட்கும் முயற்சியில் தன்னை மூழ்கடிப்பான் அருண்!!!

அனிருத்தின் இசையில் “கனவே கனவே” பாடல் புதிதாக அவனை அன்று ஈர்த்து இருந்தது… தனக்காகவே அந்த இசையும் வரியும் Compose செய்யபட்டதாக உணர்ந்து அருண் Continuous Loop-இல் படுக்கையில் கேட்டு கொண்டு இருந்தான்…
முன்பு போல் பாடல்களை கேட்டு கொண்டே தேம்பி தேம்பி அழுது தலையணை -யை நனைக்காமல் வீராச்சாமியில் மும்தாஜிற்காக கண்ணீர் விடும் டீ.ராஜேந்தரை போல் இன்று அழுவதற்கே அல்லாடி கொண்டு இருந்தான். இந்த மாற்றத்தை அவனே சற்று கவனித்தான்.

யாமினியிடம் இன்று Fb- யில் Pre Flirt செய்ததும் நினைவுக்கு வர,
‘ஒரு வேலை நாம Move -on ஆகி விட்டோமோ’ என்று குழம்பி கொண்டே கொட்டாவி விட்டான்….
” நிழலும் போனது…. நிஜமும் போனது…” என்று அனிருத் ஒரு பக்கம் கரைய….
விட்டத்தை பார்த்து கண்ணயர்ந்தான்!!!!
 
Hi sago... Direct copy pasting செய்யாம, லிங்க் போட்டு குடுங்களேன்... படிக்க ஈஸியா இருக்கும்...
Front page ல instructions இருக்கு....
 
Top