Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி-2

Advertisement

Ramya Anamika

Well-known member
Member
?கைதி-2?

சிறையில் சிக்கித் தவிக்கும் கைதி
எனை காக்க வருபவன்
காவலனா??? ராவணனா???

"அண்ணா சாரி என்னால தான் இதெல்லாம்" என்றாள் மிருணா வருத்தமாக.

"உன்னால்ல ஒன்னும் இல்லடா விடு பார்த்துக்கலாம்" என்றான் அமர் சமாதானமாக.

"என்னாச்சு??? அமர்.... " என்று பதறி கலங்கிய கண்களுடன் கோதை (அமரின் அம்மா) மற்றும் கவிதா உள்ளே வந்தனர். அவர்களுடன் லக்ஷ்மணன் மற்றும் செல்வம்(அமரின் அப்பா) வந்தனர்.

"ஒன்னும் இல்லமா அழாதீங்க" என்றான் சமாதானமாக.

"மிருணா டாக்டர் என்னடா சொன்னாங்க ??? எப்படி இவன ஹாஸ்பிடல சேர்த்த???" என்றார் செல்வம்.

"அப்பா அது வந்து.. ஆட்டோல அண்ணாவ அழைச்சுட்டு வந்துட்டேன், அட்மிட் பண்ணதும் உங்களுக்கு கால் பண்ணேன், தலையில் காயம் ஆழம்லாம் இல்ல அதனால எந்த பிரச்சினையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க".

"என்னாச்சுப்பா காலையில ரெண்டு பேரும் நல்லா தானே வந்தீங்க எப்படி அடிபட்டது???" என்றார் லக்ஷ்மணன் அமரிடம்.

"அது வந்து பா.." என்றான் தயங்கியபடி.

"என்னப்பா தயங்குற எப்படி நடந்தது???" என்றார் செல்வம் சந்தேகப் பார்வையுடன்.

"அப்பா வீட்டுக்கு போய் இத பத்தி பேசிக்கலாமே!!!" என்றான் தயங்கியபடி.

"அப்படி என்ன விஷயம் அமர்?? ஏன் தயங்குற??" என்றார் கவிதா.

"யார்கிட்டயாச்சும் சண்டைக்கு போனியா டா???? மிருணா நீ சொல்லு என்னாச்சு ???" என்றார் கோதை அவளிடம்.

"அம்மா எல்லாம் என்னால தான்" என்றாள் கரகரத்த குரலில்.

நான்கு பேரும் யோசனையுடன் அவளைப் பார்த்தனர்." மிருணா நான் வீட்டுக்கு போய் பேசலாம்னு சொன்னது காதுல விழுந்ததா??? இல்லையா??? " என்றான் லேசான கோபத்துடன். அவள் அமைதியானாள். விஷயம் ஏதோ பெரிது என நினைத்து நான்கு பேரும் அமைதியாக இருந்தனர். ஒரு மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினர். வீட்டுக்கு வந்ததும் அமர் நடந்த அனைத்தையும் சொன்னான்.

"அடிப்பாவி வாய மூடிட்டு அமைதியா இருக்க மாட்டியா டி??? உன்னால இப்ப அமருக்கு இப்படி ஆச்சு, அடுத்து யாருக்கு என்ன நடக்குமோ???" என கலங்கினார்.

"அம்மா அவன் தப்பு பண்ணுனான் மா, யாரு தப்பு பண்ணுனாலும் எதிர்த்து கேட்கணும்மா, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!! இப்படி யாரும் கேட்காம பயந்து இருக்கிறதனால்ல தான் இந்த மாதிரி ரவுடிங்க எல்லாம் நாட்டை ஆளுறாங்க, அதுக்கு நாம இடம் தரக் கூடாது" என்றாள் வேகமாக.

"அப்ப உன் அண்ணேன் அடி வாங்கி இருக்கானே!! அதுக்கு என்ன பதில் சொல்லப் போற???" என்றார் கோபமாக.

"அது... அண்ணா சாரி.. அவன் நம்மல பயப்பட வைக்க தான் இப்படியல்லாம் பேசிட்டு அலையிறான்" என்றாள் அவனிடம்.

"இங்க பாரு பாப்பா அவன பார்த்தா பயப்பட வைக்க சொன்ன மாதிரி தெரியல " என்றான் யோசனையுடன்.

"ம்ம்... ஆமா அமர் சொல்றது சரிதான், இவன் சொன்னதை வச்சு பார்த்தா விஷயம் ரொம்ப பெருசுன்னு தோணுது" என்றார்.

"எனக்கும் அப்படி தான் தோணுது செல்வம்" என்றார் லக்ஷ்மணன்.

"அப்பா ஏன் பயப்படுறீங்க?? எதுவும் நடக்காது அவன் பயப்படனும்னு தான் பேசிட்டு இருக்கான், அவன் வந்தா நான் பார்த்துக்கிறேன்" என்றாள் துணிச்சலுடன்.

"மிருணா நீ தைரியமான பொண்ணுதான் ஒத்துக்கிறேன், அதுக்காக இந்த ரவுடிங்க கூட சண்டை போட்டு உன்னைய காப்பாற்றுகிற அளவுக்கு இல்ல, என்னதான் இருந்தாலும் நீ பொண்ணு அசாத்திய துணிச்சல முதல்ல விடு " என்றார் கோதை பொறுமையாக.

"அப்படி சொல்லுங்க அக்கா இவ எப்போதுமே இப்படிதான் இருக்கா, ஆழம் தெரியாமல் காலை விட கூடாதுன்னு சொல்லுவாங்க நீ பண்ணியிருக்க வேலையும் அந்த மாதிரி தான்டி" என திட்டினார்.

"அம்மா இப்ப என்னதான் என்னைய பண்ண சொல்றீங்க?? நான் தான் பேசிட்டு வந்துட்டனே!! அவன் பொண்ணு தாங்கன்னு வந்து நின்னான்னா, விடுங்கம்மா பார்த்துக்கலாம்" என்றாள் சலிப்புடன்.

"பாருங்க அக்கா இவ இப்பகூட சீரியஸ்னஸ் தெரியாம நடந்துக்கிறத" என்றார் கலங்கிய குரலில் .கோதை அவர் கையை பிடித்து சமாதானம் செய்தார்.

"கவிதா பார்த்துக்கலாம் விடுமா" என்றார் செல்வம்.

"நம்மள மீறி எதுவும் நடக்காது கவிமா" என்றார் லக்ஷ்மணன் சமாதானமாக.

அமர் யோசனையுடன் மிருணாவை பார்த்து, "மிருணா நீ கொஞ்சம் கவனமா இரு, எங்க போனாலும் என்னை கூப்பிடு".

"சரி அண்ணா..."
மூவரும் சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றனர். வீட்டிற்கு விஷா வந்ததும் கவிதா நடந்த அனைத்தையும் சொல்லி புலம்பினார். திடீரென வீட்டுக்குள் பத்து பேர் உள்ளே வந்தனர். இரு பெண்களும் , எட்டு ஆண்களும், நான்கு பேரும் வந்தவர்களை பார்த்து அதிர்ச்சியுடன் எழுந்து நின்றனர்.

"வணக்கம்!! சம்மந்தி நான் சிவாவோட அப்பா திரு , இவர் சிவாவோட மாமா மூர்த்தி, இவங்க என் மனைவி மங்கை, இவங்க என் தங்கச்சி கோமதி" என அறிமுகம் செய்தார் .மிருணா அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

"என்ன சம்மந்தி பார்த்துகிட்டே இருக்கீங்க வாங்கன்னு கூப்பிட மாட்டீங்களா???" என்றார் மங்கை.

"உட்காருங்க " என்றார் வெற்றுக் குரலில்.

"டேய் எல்லாரும் வெளிய நில்லுங்க டா நாங்க பேசுனதுக்கு அப்புறம் கிளம்பலாம்" என்று கூட வந்தவர்களை வெளியே அனுப்பினார் மூர்த்தி. இவர்கள் நான்கு பேரை தவிர மற்றவர்கள் வெளியே சென்றதும் உட்கார்ந்தனர்.

"நீதான் பொண்ணாம்மா???? பார்க்க தங்க சிலை மாதிரி இருக்க, அதான் எங்க பையன் சிவா உன்கிட்ட விழுந்துட்டான் போல" என்றார் சிரித்துக்கொண்டே.

"ஆமா கோமதி பொண்ணு அழகா இருக்காளா??" என்றார் மங்கை சிரிப்புடன்.

"நான் சுத்தி வளச்சி பேச விரும்பல சார் என் பொண்ண நாங்க கல்யாணம் பண்ணித்தார ஐடியாவுல இல்ல" என்றார் அழுத்தமாக.

"பொண்ண தாங்கன்னு கேக்கல மாமா, உங்க பொண்ணு எனக்குத் தான்னு உங்ககிட்ட சொல்ல தான் வந்திருக்கோம்" என உள்ளே வந்தான் சிவா.

"இங்க பாருங்க தம்பி என் பொண்ணு வாழ வேண்டிய பொண்ணு, உங்களுக்கு வேற பொண்ணு பார்த்துக்கோங்க" என்றார் கெஞ்சலாக.

"அம்மா நீ எதுக்கு இவன் கிட்ட எல்லாம் கெஞ்சுற?? இங்க பாருங்க உங்க பையன அழைச்சுக்கிட்டு முதல்ல கிளம்புங்க " என்றாள் கோபமாக.

"டேய்!! தம்பி நீ சொல்றப்ப இந்த பொண்ண பத்தி நம்பல டா பார்த்தத்துக்கு அப்பறம் நம்புறேன் டா" என்றார் சிரிப்புடன்.

"அப்பா பார்த்தீங்களா எனக்கு ஏத்த ஜோடியா இருக்கால்ல??" என்றான் சிரிப்புடன்.

"ஆமாப்பா " என்றனர் நான்கு பேரும்.

"ஏய்!! என்ன உன் வீட்டு ஆளுங்கள அழைச்சிட்டு வந்து பயமுறுத்த பார்க்குறியா???" என்றாள் கோவமாக.

"நான் தான் உன் கிட்ட சொன்னனே!! உன்னைய முறைப்படி வந்து பொண்ணு கேட்பேன்னு" என்றான் இழிப்புடன்.

"கேட்டதும் கொடுத்துடுவாங்களா?? எல்லாரும் வெளிய போங்க, இல்லனா நான் போலீஸ்கிட்ட போவேன்" என்றாள் கோவமாக.

"மிருணா கொஞ்சம் பொறு, சார் எதுக்கு வீணா வந்து பிரச்சனை பண்றீங்க??" என்றார் பொறுமையாக.

"மாமா நாங்க பிரச்சனை பண்ண வரல்ல, பிரச்சனை பண்ற மாதிரி இருந்தா இந்நேரம் அடியாட்கள் உங்க வீட்டுக்குள்ள இருப்பாங்க, நாங்க சம்பந்தம் பேச தான் வந்திருக்கோம், இன்னும் பத்து நாள்ல கல்யாணம் அத சொல்லதான் எங்க வீட்டு ஆளுங்கள அழைச்சுக்கிட்டு வந்திருக்கேன், நான் நினைக்கிறது தான் நடக்கும் உங்க பொண்ணு தான் என் மனைவி அத யார் நினைச்சாலும் மாற்ற முடியாது, உங்க பொண்ணோட மனச மாத்திக்க சொல்லுங்க, வாங்க நாம போலாம்" என்று அவர் வீட்டு ஆட்களை அழைத்துக் கொண்டு சென்றான்.

விஷாலினி மற்றும் கவிதா அழுதனர்.மிருணா யோசனையுடன் சோபாவில் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். லக்ஷ்மணன் செல்வதிற்கு போன் செய்து அனைத்தையும் சொன்னார். அவரிடம் பேசிவிட்டு வந்து மிருணாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தலை முடியை கோதினார்." அப்பா..." என்று அவர் தோளில் சாய்ந்தாள்.

"என்னடா பயமா இருக்கா???".

"இல்லப்பா எப்படி தடுக்குறதுன்னு யோசிக்கிறேன்??"
.

"கவி.. விஷா.. இப்ப எதுக்கு அழுதுகிட்டு இருக்கீங்க?? விஷா.. மிருணா மாதிரி தைரியமா இருக்கணும் டா இப்படி எல்லாம் பயப்படக்கூடாது".

விஷா எழுந்து வந்து அவர் தோளில் சாய்ந்து உக்காந்து, "எப்படிப்பா மிருணா மாதிரி பயப்படாம இருக்குறது?? எப்படிப்பா இத சமாளிக்க போறோம்??" என்றாள் பயத்துடன்.

"அப்பா இருக்கேன்ல கவலைப்படாதீங்க, நாளைக்கு நாங்க கமிஷ்னர பார்த்து பேச போறோம்".

"அப்பா அப்ப நானும் வரேன் பா" என்றாள் வேகமாக.

"இல்ல மிருணா நீ போலீஸ் ஸ்டேஷனுக்குல்ல வேணாடா நாங்க போயிட்டு வரோம், நீ வீட்டை விட்டு வெளிய எங்கேயும் போகாத".

"சரிப்பா".

"சீக்கிரமா இந்த பிரச்சனை சரியாகிடணும் முருகா!!! சரியான பால் அபிஷேகம் பண்ணுறேன் " என கைகூப்பி வேண்டினார் கவிதா. மூவரும் அவரை பார்த்து லேசாக சிரித்தனர்.

மறுநாள் காலையில் செல்வம் மற்றும் லக்ஷ்மணன் கமிஷ்னரை பார்த்து விட்டு மதியம் மூன்று மணி போல் வீட்டிற்கு வந்தனர். அவர்களுடன் அமரும் வந்தான்.

"அப்பா என்னாச்சுப்பா?? என்ன சொன்னாங்க ??? " என்றாள் ஆர்வமாக.

"ஏங்க நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகாதுல்ல??" என்றார் எதிர்பார்ப்புடன். மூவரும் அமைதியாகவே சோபாவில் உட்கார்ந்தனர்.

"என்னப்பா?? மிருணாவும் அம்மாவும் கேக்குறாங்க ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்கீங்க??" என்றாள் விஷா.

"போச்சும்மா.. நம்மளால ஒண்ணுமே!! பண்ண முடியாது, கமிஷ்னர் கைய விரிச்சுட்டாரு, இங்க இருக்கிற எல்லா போலீஸும் அவன் ஆளுங்களா இருக்காங்க" என்றார் கவலையாக.

"அப்பா என்னப்பா சொல்றீங்க?? புரியுற மாதிரி சொல்லுங்க பா" என்றாள் குழப்பமாக.

"மிருணா கமிஷனர் கிட்ட சொன்னோம் டா சிவாவ எதிர்த்து எதுவும் பண்ண முடியாது, உங்க பொண்ண அவருக்கே கல்யாணம் பண்ணி வச்சா உயிரோட பார்க்கலாம், இல்லனா உங்க பொண்ணு உயிரோட இருக்க மாட்டான்னு சொன்னாரு மா" என்றார் செல்வம் வருத்தமாக.

"எல்லாருமே அந்த சிவாவோட ஆளுங்க தான்மா, நமக்கு யாரும் உதவி பண்ண மாட்டாங்க " என்றார் வருத்தமாக.

"ச்சை... எல்லாரும் ஏன் மனுஷங்களா இல்லாம இப்படி இருக்காங்க?? " என்றாள் ஆத்திரமாக.

"மிருணா பொறுமையா இருடா ஏதாச்சு யோசிக்கலாம்??".

"எப்படி அண்ணா பொறுமையா இருக்குறது??அவன் மட்டும் கல்யாணம் பண்ண வரட்டும் நானே குத்தி கொண்ணுறேன்" என்றாள் ஆத்திரமாக.

"கொஞ்சம் பொறுமையா இருடி, ஒன்னும் ஆகாது" என்றாள் விஷா.

"நீ வாய மூடிட்டு இருந்திருந்தா இப்படி நடக்குமா?? டி இப்ப நீ இந்த ஊர விட்டு எங்கயாச்சும் போ போயிரு" என்றார் கவிதா அழுகையும் ஆத்திரமுமாக.

"ஐடியா!! லக்ஸ் அப்பா பெரியப்பாவுக்கு போன் போட்டு நடந்த எல்லாத்தையும் சொல்லுங்க, நான் மிருணாக்கு யூ.எஸ் போக டிக்கெட் இருக்கான்னு பார்க்குறேன் இருந்தா உடனே!! போடுறேன், இங்க நிலமை எல்லாம் சரியாகட்டும் அதுக்கப்புறம் இவ இங்க வரட்டும்" என்றான் வேகமாக.

"சரி அமர்.." என்று போன் பேச சென்றார் .அமர் டிக்கெட் போட ஏற்பாடு செய்தான்.

லக்ஷ்மணன் பேசிவிட்டு வந்து,"அண்ணே!! உடனே அனுப்ப சொன்னாரு".

"சரி.. நாளைக்கு டிக்கெட் கிடைக்கலப்பா நாளை மறுநாள் தான் கிடைச்சிருக்கு, அன்னைக்கு போட்டு இருக்கேன், நாளைக்கு தேவையான எல்லாம் வாங்கிடலாம் பாப்பா, நீ கிளம்பி இரு நான் வந்து அழைச்சிட்டு போறேன் , தைரியமா இருங்க" என்று தைரியம் சொல்லிவிட்டு செல்வத்துடன் கிளம்பினான்.

மிருணாக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்தனர் .மறுநாள் காலையில் மிருணாவின் போன் அடித்தது." ஹலோ...".

"ஹாய் டார்லிங்!! நான் தான் உன் மாமா பேசுறேன்".

"யாருடா?? யாருக்கு மாமா?? எவன்டா பேசுறது?? " என்றாள் கோபமாக.

"நான் தான் உன் வருங்கால கணவன் சிவா பேசுகிறேன்" என்றான்.

"டேய்!! என்னைய காலையிலயே டென்ஷன் படுத்தாத போனை வைடா" என்று கத்தினாள்.

"ஓ.. கமிஷ்னர் கிட்ட பேசியும் எதுவும் நடக்கலன்னு கோவப்படுறியா?? செல்லம்" என்றான் நக்கலாக.

மிருணா ஓர் நிமிடம் அதிர்ந்து," அவன் உன் ஆள் தானே!! உனக்கு தான் சாதகமா பேசுவான்" என்றாள் ஆத்திரமாக.

"இங்க பாருடா செல்லம்.. இந்த மாமா உன்ன நல்லா பார்த்துப்பேன் ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதிக்குற வழிய பாரு இல்லன்னா நடக்குறதே வேற" என எச்சரித்து விட்டு வைத்தான்.

"என்னாச்சு மிருணா?? யாரு போன்ல??".

"வேற யாரு அந்த குரங்கு சிவாதான்" என்றாள் கோவமாக.

"அக்கா மேட்டர் ரொம்ப சீரியஸா போகுது எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்றாள் பயத்துடன்.

"ஒன்னும் இல்லடி விஷா விடு பார்த்துக்கலாம்" என்று அவள் மனதிற்கும் சேர்த்து தைரியம் சொன்னாள்.

"ம்ம்... சரி பார்த்து போய்ட்டு வா, நான் காலேஜ் கிளம்பறேன்" என்றாள் .

"ம்ம்.. சரி நீயும் கவனமாயிரு" என்றாள் யோசனையுடன். சிறிது நேரத்தில் அமர் வந்ததும் அவனுடன் சென்று அவளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தாள். அந்த நாள் அமைதியாகவே சென்றது .விடியும் விடியல் நல்லதாகவே விடிய வேண்டும் என நான்கு பேரும் வேண்டிக் கொண்டு படுத்தனர். சூரியன் தன் கடமைகாக பயணம் செய்ய ஆரம்பித்தது. மிருணாவும் தன் பயணத்திற்காக தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு தன் குடும்பம் மற்றும் அமர், செல்வத்துடன் ஏர்போர்ட்டிற்கு கிளம்பி சென்றாள்.

ஏர்போர்ட்டில் உள்ளே நுழையும்போதே சிவா அவன் ஆட்கள் ஐந்து பேருடன் நின்றான். அனைவரும் அதிர்ந்தனர்." என்ன செல்லம்.. என்னைய விட்டுட்டு பிளைட்ல ஏறி போலாம்னு நினைச்சியா?? எதுவும் பண்ண விடமாட்டேன், எனக்கு எல்லா இடத்திலையும் ஆள் இருக்காங்க" என்றான் சத்தமாக சிரித்துக்கொண்டே. அனைவரும் அமைதியாக என்ன செய்வது என தெரியாமல் முழித்தனர்.

"உன் குடும்பத்துக்கு சமாதி கட்டி தான் உன்னைய கல்யாணம் பண்ணனும்னா அத பண்ண கூட நான் தயங்க மாட்டேன், அப்புறம் உன்கிட்ட என்ன சொன்னேன் இவ கூட சுத்தாதன்னு சொன்னேனா?? இல்லையா?? டா நேத்து இவ கூட சுத்திட்டு இருக்க" என்றான் அமரை பார்த்து கோபமாக.

"இங்க பாருங்க அவ என் தங்கச்சி தேவை இல்லாம பேசாதீங்க" என்றான் கோபமாக.

"டேய்!! உன்னைய பாவம் பார்த்து விட்டா ரொம்ப தான் பேசுற, உன்னைய.." என அடியாட்கள் கையில் இருந்த கத்தியை வாங்கினான்.

"அமர்... அண்ணா..." என அனைவரும் அலறினர்.

"ஏய்!! இங்க பாரு உனக்கும் எனக்கும் தானே பிரச்சனை நடுவுல எதுக்கு இவங்கள இழுக்குற?? இவன் ஒன்னும் என் கூட பிறந்த அண்ணேன் இல்ல, தேவை இல்லாம நடுவுல எல்லாரையும் இழுக்காத" என்றாள் கோபமாக.

"உனக்கும் எனக்கும் நடுவுல யாரும் வரக்கூடாதுன்னு நினைக்கிறியா?? நானும் அப்படித்தான் நினைக்கிறேன், ஆனா இவன எப்படி சும்மா விடுறது??" என்றான் யோசனையுடன்.

"இங்க பாரு இவங்க எனக்கு யாரோ!! தேவை இல்லாம இவங்கள இழுத்த நடக்குறதே வேற" என்றாள் கோபமாக.

"மிருணா..." என்றான்.

"நீ சும்மா இரு உன்னைய எனக்கு எத்தனை நாளா தெரியும் சொல்லு.. இனிமே!! என் வாழ்க்கையில தலையிடாத நீயும் அப்பாவும் முதல்ல கிளம்புங்க" என்றாள் கோபமாக. அமர் மற்றும் செல்வம் லேசான அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

"என்னைய பார்த்தா இப்படி சொன்ன பாப்பா" என்றான் வலியுடன்.

"உன்னைய பார்த்து தான் சொன்னேன் போ முதல்ல.." என்றாள் கோபமாக .அவள் கண்களை உற்றுப் பார்த்தான் அதில் எதை கண்டானோ!! செல்வத்தையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

"இப்ப பண்ணுன பார்த்தியா இதுதான் சரி" என்று சத்தமாக சிரித்தான்.

"ஏய்!! அவங்க எனக்கு மூணாவது மனுஷங்க தான் அவங்களுக்கு ஒன்னுனா அப்போதிக்கு மட்டும்தான் வருத்தப்படுவேன், அவங்கள வச்சு என்னை மிரட்டலாம்னு நினைக்காத" என்றாள் ஆத்திரமாக.

"நீ யாரு எனக்கு மனைவியா வரப்போறவளாச்சே!! இப்படித்தான் இருப்ப, சரி கிளம்பி வீட்டுக்கு போ இனிமே இப்படி தப்பிச்சு போகலாம் அப்படி இப்படின்னு நினைக்காத, எனக்கு தெரியாம ஒரு ஆணியும் புடுங்க முடியாது" என்றான் மிரட்டலாக.

"மிருணா வா போகலாம்" என இழுத்து சென்றனர் லக்ஷ்மணன்.

மிருணாவின் கண்களில் சொன்ன சேதி என்ன??? சிவாவிடம் இருந்து எப்படி தப்பிப்பாள்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்............

? கைதியின் சிறை தொடரும்?.......
 
அருமை அருமை மிகவும் அருமை மேம்
 
Top