Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி-4

Advertisement

Ramya Anamika

Well-known member
Member
?கைதி-4 ?



"விஷா எல்லாம் எடுத்து வச்சுட்டியாடி" என்றாள் மிருணா.

"ம்ம்... எல்லாம் எடுத்து வச்சுட்டேன்" என்றாள் காலேஜ் பேக்கை மூடியபடி.

"குட்... அப்பா பெரியப்பாகிட்ட பேசுனீங்களா???".

"பேசிட்டேன் டா, உன்னைய விட்டுட்டு வரதுதான் அவருக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னாரு டா" என்றார் வருத்தமாக அவள் தலைமுடியை கோதியபடி.

"அப்பா எனக்கும் வர ஆசைதான், நாடு விட்டு நாடு போறப்ப ஃபிராடு தானமா டிரெயின் டிக்கெட் வாங்குன மாதிரி ஃப்ளைட் டிக்கெட்ட வாங்க முடியாது, அப்படி ஏதாச்சும் பண்ணி மாட்டிகிட்டா ஜெயில் தான்" என்றாள் பொய்யான சிரிப்புடன்.

"உன்னைய விட்டுட்டு போகவே எங்களுக்கு மனசு இல்லடி " என்று கலங்கினார்.

"அம்மா கொஞ்ச நாள்தான் எல்லாம் சரியாகிடும், அப்பா உங்க வண்டி டயர பஞ்சர் பண்ணிட்டீங்களா???".

"காலையில்ல பால் வாங்க போற மாதிரி போய் பாத்திரத்தை கீழே விட்டு ஆணிய சொருகிட்டேன் டா" என்றார் சிரிப்புடன்.

"சூப்பர் பா" என்றனர் இரு பெண்களும் சிரிப்புடன்.

"உங்க அப்பா உங்க கூட சேர்ந்து சேர்ந்து எப்படி ஃபிராடு வேலை பார்க்கணும்னு கத்துக்கிட்டாருடி" என்றார் கிண்டலாக.

"நானா கவிமா " என்றார் காதல் பார்வையுடன். கவிதா வெட்கத்துடன் தலைகுனிந்தார்.

"நாங்க இங்க தான் இருக்கோம் உங்க ரொமான்ஸை உள்ள போய் வச்சுக்கோங்க" என்றாள் மிருணா கிண்டலாக.

"ஏய் மிருணா சீக்கிரமா கண்ண மூடிக்கோ டி இதெல்லாம் நாம பார்க்க கூடாது" என்று கிண்டலாக ஒரு கையை அவள் கண்களிலும் மறுகையை மிருணாவின் கண்களிலும் மூடினாள்.

"உங்கள விட்டா பேசிட்டே இருங்கடி வரேன்..." என்று அடிக்க வந்தார். இரு பெண்களும் தப்பித்து ஓடினர்.


லக்ஷ்மணன் சிரிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார். "நாளைக்கு நம்ம வீட்ல யாரும் இருக்க மாட்டோம்ல இந்த இடமே அமைதியா இருக்கும்" என்றார் லக்ஷிமணன் வருத்தத்துடன்.

மூவரும் விளையாட்டை நிறுத்திவிட்டு அவர் பக்கத்தில் வந்தனர்."ஏங்க கொஞ்சநாள் தான் ஒன்னு இழந்தா தான் ஒன்னு கிடைக்கும், நமக்கு நம்ம பொண்ணு தான் முக்கியம்" என்றார் ஆறுதலாக.

"எல்லாம் என்னால தான் " என்றாள் வருத்தமாக.

"சச்ச.. அப்படிலாம் இல்ல டா நீ அதெல்லாம் நினைச்சு வருத்தப்படாத" என்றார் லக்ஷ்மணன் வேகமாக.

"ஸ்சப்பா... இந்த சீரியல் ஸீன்ன என்னால பார்க்க முடியல சேனல மாத்துங்க பா" என்றாள் விஷாலினி கிண்டலாக.

"எங்க வருத்தம் உனக்கு சீரியலாடி??" என்று காதை பிடித்து திருகினார்.

"அம்மா... அம்மா... விடு வலிக்குது" என்று அலறினாள்.

"நல்லா வேணும் டி உனக்கு வானரம்" என்றாள் மிருணா சிரிப்புடன்.

கவிதா சிரிப்புடன் காதை விட்டார். "அந்தக் கூட்டத்தோட தலைவியே நீதானேம்மா" என்றாள் சிரிப்புடன் காதை தேய்த்துக்கொண்டே.

"விஷா டைமாச்சு சீக்கிரம் கிளம்பு டா நீ கிளம்புனதுக்கு அப்புறம் தான் நான் கிளம்ப முடியும்".

"அச்சோ!! ஆமாப்பா அம்மா நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வந்துடுங்க, மறக்காம ஃபோன் எடுத்துக்கோங்க ஏர்போர்ட்ல பார்க்கலாம் பாய்.. பாய்.." என்று வேகமாக அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பி போக போனாள்.

"பாய்.." என்றனர் மூவரும்.

போன வேகத்தில் திரும்பி வந்து மிருணாவை அணைத்து அழுதாள். "அக்கா பார்த்து போய்ட்டுவா, எங்க இருக்கேன் மெசேஜ் பண்ணு. நான் அண்ணா கிட்ட அண்ணி நம்பர் வாங்கிட்டேன். அண்ணி உன்னைய பத்திரமா பார்த்துப்பாங்க. நீ பத்திரமா இரு ஒழுங்கா சாப்பிடு சரியா " என்றாள் பிரிந்து அவள் முகத்தை பார்த்து.

"ஸ்சப்பா... இந்த சேனல மாத்துங்க பா" என்று கிண்டலாக சொல்லிவிட்டு, "அழாத டி இது தற்காலிகம் தான் நிரந்தரம் இல்ல, நீ பத்திரமா இரு நான் அங்க போயிட்டு கால் பண்றேன் சரியா" என்றாள் கண்ணீரை துடைத்துக் கொண்டே.

"டெய்லியும் வீடியோ கால் பண்ணனும்" என்றாள் கலங்கிய குரலில்.

"கண்டிப்பா.. காலேஜ் பஸ் விட போற பாரு" என்றாள் கிண்டலாக அவள் மனநிலையை மாற்ற.

"அச்சோ!! ஆமால பாய்டி சண்டிராணி" என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

"பாய்டி நாய் சேகரி" என்றாள் கிண்டலாக.

"ஏய் உன்னை எத்தன தடவ அப்படி சொல்லாதன்னு சொன்னேன்" என்று சண்டைக்கு வந்தாள்.

"அது என்னடி நாய் சேகரி?? இப்படி ஒரு பேரா??" என்றார் கவிதா குழப்பமாக.

"இவ பாடி ஸ்ட்ராங் மா ஆனா பேஸ்மெண்ட் ரொம்ப வீக்குல்ல அதனாலதான் நாய் சேகர்ன்னு வாடிவேல் வச்ச பெயர நாய் சேகரின்னு மாத்திட்டேன்" என்றாள் கிண்டலாக சிரித்துக்கொண்டே.

"போடி சண்டிராணி உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது பாய்.. பாய்.." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

லக்ஷ்மணன் மிருணாவின் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டார். "அப்பா.." என்றாள் கரகரத்த குரலில்.

"நோ டா குட்டிமா அழக்கூடாது என் பொண்ணு எப்போதுமே அழ மாட்டா" என்றார் ஆறுதலாக.

"நீ அழுதா நாங்க எப்படி போறதுடி??" என்றார் கவிதா சமாதானமாக அவள் முதுகை வருடி.

"இல்லப்பா நான் அழ மாட்டேன், நீங்க கிளம்புங்க ப்பா டைமாச்சு, உங்களுக்கு இப்போதைக்கு லீவ் சொல்லியிருங்க" என்றாள் விலகி.

"சரிடா பத்திரமா போ கவி பத்திரமா வந்துடு" என்று மிருணாவின் நெற்றியில் இதழ் பதித்து விட்டுச் சென்றார்.

மிருணாவுக்கு கவிதா நிறைய அறிவுரைகள் சொல்லி விட்டு அணைத்து நெற்றியில் இதழ் பதித்து விட்டு கலங்கி கண்களுடன் பூஜை கூடை, பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினார் . அனைவரும் சென்றதும் கதவை மூடிவிட்டு தலையில் கை வைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து யோசித்தாள்.

விஷாலினி டீஸி எல்லாம் வாங்கிக்கொண்டு நண்பர்களிடம் எதுவும் சொல்லாமல் முகில்காக காத்து கொண்டு இருந்தாள். முகிலன் காரை நிறுத்திவிட்டு அவள் பக்கத்தில் வந்தான். "நீ வர இவ்ளோ நேரமா சீக்கிரமா வர மாட்டியா?? " என்றாள் கோவமாக.

"வந்ததும் எதுக்கு காட்சி பூச்சுன்னு குதிக்கிற, எல்லா ஃபார்மலிடியும் முடிச்சிட்டியா?? உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லிட்டியா???".

"எல்லாம் முடிச்சுட்டேன். ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் ஒன்னும் சொல்லல ஊருக்கு போறேன்னு மட்டும் தான் சொன்னேன்".

"குட் உனக்கு மண்டையில ஒன்னும் இல்லைன்னு நினைச்சேன் பரவால்ல கொஞ்சம் இருக்கு போல " என்றான் கிண்டலாக.

"டேய் என்ன லந்தா???" என்றாள் கோபமாக.

"எனது டேய்யா போடி நீயே கிளம்பி ஏர்போர்ட்டுக்கு போ, அந்த சிவா ஆளுங்க உன்னைய தூக்கட்டும்" என்று பொய்யான கோபத்துடன் வண்டியில் ஏற போனான்.

"ஏய் வெயிட்... வெயிட்.. சாரி.. சாரி.. ப்ளீஸ் என்னைய அழச்சிட்டு போ ப்ளீஸ்.. எனக்கு சண்டன ரொம்ப பயம்" என்றாள் வேகமாக வந்து அவன் கையைப் பிடித்து.

'அப்படி வா வழிக்கு' என்று மனதில் நினைத்துக்கொண்டு," இட்ஸ் ஓகே வா போலாம்".

"ம்ம்... சரி" என்று தலையை ஆட்டினாள்.

"தலைய ஆட்டினா மட்டும் பத்தாது என் கைய விட்டா தான் கிளம்ப முடியும்" என்றான் கிண்டலாக. விஷா வேகமாக அவன் கையை விட்டுவிட்டு முழித்துக் கொண்டே சிரித்தாள். முகிலன் சிரிப்புடன்," ஏறுங்க மேடம் போலாம்".

விஷா வேகமாக காரில் ஏறினாள். லக்ஷிமணன் மற்றும் கவிதா ஏர்போர்ட்டில் காத்துக்கொண்டிருந்தனர். விஷாவை ஏர்போர்ட் உள்ளே அழைத்து சென்றான்." விஷா டிக்கெட் எல்லாம் வாங்கிட்டியா??".

"வாங்கிட்டேன் பா முகில் குடுத்துட்டாரு".

"முகில் ரொம்ப தேங்க்ஸ் பா" என்றனர் லக்ஷிமணன் மற்றும் கவிதா.

"பரவால்ல அங்கிள் ஆன்ட்டி பார்த்து போயிட்டு வாங்க, எம்மா படிப்ஸ் அங்க போயி காலேஜ் சேர்ந்துகோ" என்றான் கிண்டலாக.

"எனக்கு தெரியும் ஹ்ம்ம்..." என்று உதட்டை சுழித்தாள்.

முகில் பொய்யாக முறைத்தான். திடீரென்று அவன் தோளில் யாரோ கை போட்டனர். யாரென்று திரும்பிப் பார்த்தான்." என்ன சிங்கு இந்த பக்கம் ஏதாவது வேலையா??" என்றான் கிண்டலாக.

"முகில் அமர் எப்ப வருவான் ?? ஆளையே காணம், இவரு யாரு???" என்றார் லக்ஷிமணன்.

"ம்ம்.. அத இந்த சிங்குக் கிட்டயே கேளுங்க அங்கிள்" என்றான் சிரிப்புடன்.

"அண்ணா..." என்று அவன் மார்பில் புதைத்தாள்.

"விஷா கண்டுபிடிச்சுட்டியா டா, சரி பார்த்து போய்ட்டு வாங்க, உங்களுக்கு என்ன திங்ஸ் வேணுமோ அங்க போய் வாங்கிக்கோங்க" என்றான் விஷாலினியை லேசாக விலகி தோளில் கை போட்டு. விமானம் அறிவிப்பு வந்தது.

"அமர் பத்திரமா இரு. செல்வம் கிட்ட வரப்ப பேசுனேன். எங்க போனாலும் கவனமா போயிட்டு வா".

"சரிப்பா"
என்று விஷா விலக்கி விட்டு லக்ஷ்மணனை அணைத்து விடுவித்தான்.

"கண்ணா ஒழுங்கா சாப்பிடு டா" என்று அவன் நெற்றியில் இதழ் பதித்தார்.

"அம்மா பத்திரம். கவலைப் படாம போய்ட்டு வாங்க" என்று அணைத்து விடுவித்தான்.

"போதும் போதும் உங்க பாச மழை யெல்லாம் இன்னொரு தடவை அல்லோன்ஸ் பண்ணிட்டாங்க கிளம்புங்க" என்றான் முகில் பொய்யான சலிப்புடன்.

"தேங்க்ஸ் முகில்" என்றாள் விஷா முகிலனைப் பார்த்து சிரிப்புடன்.

"யார்கிட்ட பேசுற??? என்கிட்டதான் பேசுறியா?? எனக்கு தான் தேங்க்ஸ் சொன்னியா???" என்றான் கிண்டலாக.

"அண்ணா இவன எங்கிருந்து புடிச்சீங்க?? உன் கிட்ட போய் தேங்க்ஸ் சொன்னேன்ல என்னைய சொல்லணும்" என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

"விஷா குட்டி ரிலாக்ஸ் டா டைமாச்சு கிளம்புங்க".

"மிருணா"
என்றனர் மூவரும்.

"அவள நாங்க பார்த்துக்குறோம்" என்றனர் இருவரும் சேர்ந்து.

மூவரும் லேசாக சிரித்தனர். "இருந்தாலும் மிட் நைட்ல" என்றார் லக்ஷிமணன் தயங்கியபடி.

"அவள மேல இருக்குறவன் பார்த்துப்பான்" என்றனர் இருவரும் கோரசாக.

"மேல யாரு???" என்றாள் விஷாலினி முழித்துக் கொண்டே.

"அடியே கடவுள் டி இவ ஒருத்தி எப்ப பார்த்தாலும் லூசு மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டே!!!" என்றார் கவிதா அவள் தலையில் லேசாக தட்டி.

"சரி டைமாச்சு பாய் டா ரெண்டு பேரும் பத்திரமா இருங்க, வாங்க போலாம்" என்று இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் லக்ஷிமணன்.

இவர்கள் நல்லபடியாக ஏர்போட்டின் உள்ளே அனுப்பியதை மிருணாவிற்கு மெசேஜ் செய்தான் அமர். அதனை பார்த்த பிறகுதான் மிருணாவிற்கு நிம்மதியாக இருந்தது.

விஷாலின் இடமிருந்து "ஒழுங்கா சாப்பிடு, ஃப்ளைட் கிளம்பப் போகுது" என்று அனுப்பினாள். இவளும் "சரி" என பதில் அனுப்பி விட்டு நிம்மதியாக சாப்பிட்டு படுத்து தூங்கினாள்.

மாலை வீட்டின் காலிங் பெல் விடாமல் அடித்துக்கொண்டே இருந்தது.'யாரு??' என்று நினைத்துக்கொண்டே தூக்க கலக்கத்துடன் சென்று கதவை திறந்தாள். "ஹாய் டார்லிங் தூக்கத்த கலச்சுட்டானா??" என்றான் சிவா இழித்துக்கொண்டே.

'ச்சை.. இவனா' என நினைத்துக் கொண்டே," ஆமா " என்றாள்.

"வீட்ல வேற யாரும் இல்லையா?? அத்த எங்க??" என்று உள்ளே நுழைய வந்தான்.

மிருணா வேகமாக விலகி," இல்லை..".

சிவா வீட்டில் உள்ளே போனான்." எங்க எல்லாரும்?? மாமா , உன் தங்கச்சி எல்லாரும் இந்நேரம் வந்து இருப்பாங்களே!!" என்றான் யோசனையுடன்.

'அச்சோ!! இவன யோசிக்க விடக்கூடாது ' என்று நினைத்துக்கொண்டே," பாட்டிக்கு உடம்பு சரியில்ல கீழ விழுந்துட்டாங்க , அவங்கள பார்க்க மூணு பேரும் போயிருக்காங்க" என்றாள் வேகமாக.

"ஓ... நீ போகலையா?? நாம வேணா ரெண்டு பேரும் கிளம்பி போலாமா?? வண்டி எடுக்குறேன்" என்று சொல்லப் போனான்.

மிருணா வேகமாக அவன் கையை பிடித்து தடுத்து," இல்லல்ல கல்யாணத்துக்கு இன்னும் மூணு நாள்தான் இருக்கு, எதுக்கு அங்க இங்கன்னு அழையின்னும் தான் அவங்க மூணு பேரு மட்டும் போயிருக்காங்க, பாட்டிய வரப்ப அழச்சுட்டு தான் வருவாங்க" என்றாள் வேகமாக.

"ஓ.. அப்படியா சரி சரி " என்றான் அவள் கையையும் முகத்தையும் மாறி மாறி பார்த்தபடி.

மிருணா வேகமாக கையை விடுவித்தாள். சிவா சிரித்துக்கொண்டே," உனக்கு மூகூர்த்த புடவ வாங்குனேன் அத தர தான் வந்தேன்" என்று ஒரு கவரை தந்தான்.

மிரூணா வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரிப்புடன் ," தேங்க்ஸ்" என்று வாங்கி கொண்டாள்.

"பரவாயில்லையே!! என் கிட்ட கூட சிரிச்சு பேச ஆரம்பிச்சுட்ட பெரிய மாற்றம் தான்" என்றான் யோசனையுடன்.

"நான் வேணாம்னு சொன்னா மட்டும் நடக்காம இருக்க போகுதா அதான் என் மனச மாத்தி கிட்டேன் " என்று வேகமாக கவரை பிரித்து புடவையை எடுத்து பார்த்தாள்.

"வாவ் சூப்பரா இருக்கு" என்று மேலே போட்டுக் காட்டி "நல்லா இருக்கா எனக்கு??" என்றாள் பொய்யான சிரிப்புடன்.

"ம்ம்... உனக்கென்ன நீ எந்த புடவ கட்டினாலும் அழகா தான் இருப்ப டார்லிங்" என்று இழிப்புடன் பக்கத்தில் வந்தான்.

மிருணா வேகமாக நகர்ந்தாள். சிவாவின் போன் அடித்தது." சரி நான் கிளம்புறேன். ஆமா நைட் நீ எப்படி தனியா இருப்ப?? நான் வேணா இருக்கட்டா???".

"இல்ல... வேணா.. வேணா.. நைட்டு வந்துடுவாங்க அப்பா சொல்லிட்டு தான் போனாங்க" என்றாள் வேகமாக.

மீண்டும் போன் அடித்தது ."சரி வெளிய பசங்க இருப்பாங்க எதாச்சும் வேணும்னா அவங்க கிட்ட சொல்லு வாங்கிட்டு வருவாங்க" என்று கிளம்பினான். அவன் போனதும் கதவை அடைத்து விட்டு உள்ளே வந்து அவன் வாங்கி குடுத்த புடவையை கசக்கி மூலையில் தூக்கிப் போட்டாள்.

"இந்த நச்சுப்பாம்ப எப்ப தான் நசுக்கி போட போறனோ!!! தெரியல" என்று திட்டிக்கொண்டே முகத்தை கழுவி வந்து காபி போட்டு குடித்தாள்.

விஷாலின் இடமிருந்து போய் சேர்ந்து விட்டோம் என்று தகவல் வந்தது. 'இனிமே நாம கிளம்புறது தான் ' என நினைத்துக் கொண்டு பதில் அனுப்பினாள். நடு இரவு ஒரு மணி ஆனதும் ஜன்னலை லேசாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கங்கு நின்ற அடியாட்கள் ஒன்றாக ஒரே இடத்தில் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் அனைவரும் அப்படியே போதையில் படுத்தனர்.

மிருணா ஜன்னலையும் வீட்டில் உள்ள அனைத்து கதவையும் சாத்திவிட்டு பின்னால் வழியாக வெளியே வந்தாள். ஜீன்ஸ் பேண்டும் மேலே டாப் கழுத்தை சுற்றிய ஸ்கார்ப், மொத்தமாக முடியையும் ஒரே பேண்டில் போனி டைலும், காதில் சிறிய வளையம், கழுத்தில் சிறிய செயினும், நெற்றியில் சின்ன கருப்பு நிற வட்ட பொட்டும், வலது கையில் வாட்சுடன் இரு பக்கம் மாட்டிய பேக்குடன் வேகமாக மெயின் ரோட்டிற்கு நடந்து போய்க் கொண்டிருந்தாள். அங்கங்கு நாய்கள் ஊலை இடும் சத்தம் கேட்டது லேசாக பயத்துடன் நடந்தாள். திடீரென்று ஓர் சந்தில் இருந்து நான்கு பேர் பைக்கில் வந்தனர்.

'அச்சோ!!!' என்று பயத்துடன் வேகமாக கழுத்தில் போட்டிருந்த ஸ்கார்பை தலையில் போட்டுக் கொண்டு அவர்களை கடந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

"டேய் என்னடா ஒரு பொண்ணு நடந்து போகுது" என்று வண்டியை நிறுத்தினான் அதில் ஒருவன்.

"ஆமா டா" என்று மற்றவர்களும் நிறுத்திவிட்டு இறங்கினர்.

"வாங்கடா போலாம்" என்று அவள் பின்னாலேயே நடந்து போக ஆரம்பித்தனர். இவர்கள் வருவதைப் பார்த்ததும் ஓட ஆரம்பித்தாள்.

"டேய்!! பிகர் சூப்பரா இருக்கும் போல இன்னைக்கு நமக்கு விருந்து தான் வாங்க டா" என்றான் ஒருவன்.

"ஆமாடா முதல்ல பிடிக்கலாம் அதுக்கப்புறம் யாரு முதல்லன்னு முடிவு பண்ணிக்கலாம், குட்டி ஓடுது டா நாம நடந்து போயிட்டு இருக்கோம், இப்படியே விட்டா பிகர் போயிடும் வாங்க டா" என்றான் ஒருவன். நான்கு பேரும் பின்னாலே ஓடிவந்தனர்.

மிருணா வேகமாக மெயின் ரோட்டிற்கு ஓடிவந்தாள். அங்கு இருவர் ஜிபின் பக்கத்தில் நிற்பது போல் நிழல் தெரிந்தது. வேகமாக அவர்களிடம் ஓடி வந்தாள். அந்த இருவரையும் பார்த்ததும் அதிர்ந்து நின்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். நான்கு பேரும் அவள் பக்கத்தில் பின்னால் வந்தனர். இவர்கள் இருவரின் பார்த்ததும் அவர்களும் அப்படியே நின்றனர்.

"டேய்!! என்னங்கடா இங்க சுத்திட்டு இருக்கீங்க???" என்றான் அந்த இருவரில் ஒருவன் சத்தமாக.

"ஒன்னும் இல்ல சார் சும்மாதான்" என்றான் ஒருவன்.

"சும்மா சுத்த என்னடா இருக்கு?? அதுவும் நடுராத்திரி" என்றான் மற்றொருவன் சத்தமாக.

"இல்ல சார் படத்துக்கு போயிட்டு வந்தோம்" என்றான் மற்றொருவன்.

"எங்க டிக்கெட் காட்டுங்க டா??" என்றான் முதலில் பேசியவன்.

"சார் அது இந்தாங்க" என்று எடுத்துக் காட்டினான். இருவரும் பக்கத்தில் சென்று வாங்கி பார்த்தனர்." சரி கிளம்புங்க இங்க எதுக்கு நிக்கிறீங்க??? கிளம்புங்க டா முதல்ல" என்றான் இரண்டாவதாக பேசியவன்.

நான்கு பேரும் மிருணாவை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றனர்." மேடம் யார் நீங்க??? இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க????" என்றான் இரண்டாவதாக பேசியவன்.

'கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு நிக்குமாம், அது மாதிரி ரவுடி நாய் கிட்ட இருந்து தப்பிச்சு வந்து இப்படி போலீஸ் குரங்கு கிட்ட மாட்டிக்கிட்டேனே!!! ஒருதன் போலீஸ் டிரஸ் போட்டு இருக்கான் இன்னொருத்தேன் நார்மல் டீசர்ட் போட்டுருக்கான். பாரு டா பனைமரம் தென்னைமரம் பக்கத்துல பக்கத்துல நிக்கிடு' என்று மனதிலே புலம்பினாள்.

"என்னமா நாங்க பேசுறது கேட்கலையா ஒருவேளை காது கேட்கல யோட இந்த பொண்ணுக்கு" என்றான் போலீஸ் உடையில் இருக்கும் முதலில் பேசியவன்.

"ம்ம்... கேக்குது சார் சும்மா தான் வாக்கிங் வந்தேன்" என்றாள் வாட்சை பார்த்தபடி.

"வாக்கிங் வர டைமா இது?? அதுவும் நடுராத்திரி" என்று புருவம் உயர்த்தினான் சாதாரண டீசர்ட் போட்டவன்.

'டேய் பனைமரம் ஏன்டா கேள்வி கேக்குற???' என்று மனதிலே புலம்பிக்கொண்டே," நான் வீட்டுக்கு போறேன்"என திரும்பி நடக்கப் போனாள்.

"ஹலோ மேடம் போன அந்த பசங்க அங்க தான் உங்கள பார்த்துக்கிட்டு நிக்கிறாங்க அத முதல்ல பாருங்க" என்றான் போலீஸ்காரன்.

அப்பொழுதுதான் கவனித்தாள் சந்திலிருந்து அந்த நான்கு பேரும் எட்டி எட்டி பார்த்தனர். மிருணா முழித்துக் கொண்டே நின்றாள். "என்ன மேடம் இப்பவாச்சும் எங்க போறீங்க சொல்றீங்களா??? ராகவா இந்த பொண்ணு மேல எனக்கு சந்தேகமா இருக்கு ஒருவேள போதைமருந்து கடத்துறவளா இருப்பாளோ!!" என்றான் டீசர்ட் போட்டவள்.

"எனக்கும் சந்தேகமா தான்டா இருக்கு விக்ரம் மேடம் வண்டில ஏறுங்க முதல்ல உங்கள விசாரிக்கணும்" என்றான் .

"இல்ல.. இல்ல.. நான் போத மருந்துல கடத்துல" என்றாள் வேகமாக.

"அப்ப எங்க போறீங்க???" என்றான் விக்ரம்.

"ஸ்டேஷனுக்கு.." என்றாள் சலித்த படி.

"நாங்களும் ஸ்டேஷனுக்கு தான் போறோம் என்னடா விக்ரம்??" என்றான் சிரிப்புடன்.

"நான் சொன்னது ரயில்வே ஸ்டேஷனுக்கு" என்றாள் முறைப்புடன்.

"ரயில்வே ஸ்டேஷனா?? நீங்க எங்க ஸ்டேஷன் தான் சொல்லுறீங்கனு நினைச்சுட்டேன்".

"ஆமாடா தென்னைமரம்" என முனங்கினாள்.

"ரயில்வே ஸ்டேஷன் எதுக்கு??? அதும் இந்த டைம்ல".

'போலீஸ்காரனே சும்மா இருக்கான் இவனுக்கு என்ன?? கேள்வி மேல கேள்வி கேக்குறான்', என்று மனதிலே புலம்பிக் கொண்டே," எதுக்கு போவாங்க டிரெயின்ல வெளியூர் போக தான்" என்றாள் முறைப்புடன்.

"எந்த ட்ரெயின்?? எந்த ஊர் போறீங்க??'.

'அச்சோ!! இந்த பனைமரம் என் உயிர வாங்குது' என மனதிலே புலம்பி முறைத்துக்கொண்டே," மும்பை டிரெயின்".

"ஓமைகாட் உங்களுக்கு ட்ரெயின்னுக்கு டைமாச்சு நாங்களும் ஸ்டேஷன் தான் போறோம் ஏறுங்க" என்றான் தென்னை மரம் (ராகவ்) வேகமாக.

மிருணா யோசனையுடனே நின்றாள்."என்னமா ஏன் நிக்கிற???".

"இல்ல சார் நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன், உங்களுக்கு எதுக்கு சிரமம்??".

"எங்கள பார்த்தா எப்படி தெரியுது?? ஆட்டோ புடிச்சு போறீங்களா?? அதுவும் இந்த டைம்ல, அப்புறம் அது நடந்துச்சு இது நடந்துச்சுன்னு உன்கிட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது, இதே வேலையா போச்சு, வண்டில ஏறுங்க முதல்ல" என்றான் பனைமரம் (விக்ரம்).

"ம்ம்.." என்று முனகிக்கொண்டே ஏறினாள்.

"டேய்!! இந்த பொண்ணு சூப்பரா இருக்காடா" என்றான் ராகவன் விக்ரமிடம்.

"அவ உனக்கு அண்ணி டா".

"டேய் நீ வேணா அண்ணின்னு கூப்பிடு என்னைய அப்படி கூப்பிட சொல்லாத, உன் கூட வந்தாலே இதே தொல்லைதான், வண்டில ஏறு டா அந்த பொண்ணு நாமல தான் குறுகுறுனு பார்க்குற" என்று டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்.
விக்ரம் மறுபக்கம் உட்கார்ந்தான்.

இருவரும் மிருணாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு வம்பு பண்ணி கொண்டே வந்தனர். டென்ஷனாக இருந்தாள்.' இவனுங்க அந்த சிவாவோட ஆளுங்களா இருப்பாங்களோ!! சரியான கேள்விக்கு பிறந்தவனுங்களா இருப்பானுங்க போல கேள்வி மேல கேள்வி கேட்டு உயிர வாங்குறானுங்க' என்று மனதிலேயே புலம்பிக்கொண்டே வந்தாள்.

மிருணா ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் வேகமாக அவர்கள் இருவரும் இறங்குவதற்கு முன்னால் இறங்கி வந்து," ரொம்ப தேங்க்ஸ் சார்.. டைமாச்சு நான் கிளம்புறேன்" என்று பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே வேகமாக ஓடினாள்.

வேகவேகமாக முகத்தை மறைத்து கொண்டு அவள் உட்காரும் இடத்தை தேடி சென்று உட்கார்ந்தாள்.' இன்னும் பதினைந்து நிமிஷம்தான் இருக்கு யார் கண்ணுலையும் மாட்டிக்காம போயிறனும்' என்று மனதில் பேசிக்கொண்டு இருந்தாள்.

"மேடம் இந்தாங்க" என்று டீயை நீட்டினார் டீ விற்பனையாளர்.

"நான் கேட்கவே இல்லையே!!".

"உங்ககிட்ட தான் கொடுக்க சொன்னாங்க மேடம்" என்று நீட்டினார்.

"யாரு???" என்றாள் அவரிடம்.

"நாங்கதான்" என்று இருவர் வந்தனர். மிருணா அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.

வந்தவர்கள் யார்??? மிருணா டிரெயினில் சிவாவிடம் மாட்டுவாளா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்............


?கைதியின் சிறை தொடரும்?........
 
Top