Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி -6

Advertisement

?கைதி -6?


"டேய்!!! குரு எவன்டா அவனுங்க" என்று சிவா வேகமாக குடோனுக்கு உள்ளே வந்தான்.

"இதோ இவங்க நாலு பேரு தான் அண்ணே!!" என்று காட்டினான்.

"வணக்கம்ணே!!!" என்று கும்பிடு போட்டனர்.

"ஏய்!!! வணக்கம்லா இருக்கட்டும் முதல்ல இந்த போட்டோல இருக்கற பொண்ண பார்த்தீங்களா டா, அத சொல்லுங்க" என்றான் போனில் இருந்த மிருணாவின் போட்டோவை காட்டி.

"இந்த பொண்ணு மாதிரிதான் இருந்ததுணா" என்றான் ஒருவன்.

"எங்க பார்த்த??? எப்ப பார்த்த??" என்றான் வேகமாக.

"நேத்து ராத்திரி ரெண்டு இல்ல ரெண்டரை மணி இருக்கும் எக்ஸ் எக்ஸ் ஏரியால பார்த்தோம்ணே!!!" என்றான் மற்றொருவன்.

"குரு இவன் சொல்லுற ஏரிய தானே மிருணா ஏரியா??".

"ஆமாணே!!! டேய்!!! இந்த பொண்ணு தானடா நல்லா பார்த்து சொல்லுங்க. உண்மையாவே இவங்கள தான் பார்த்தீங்களா டா, நல்லா பாருங்க" என்றான் குரு.

"அண்ணே!! இந்த பொண்ண தான் பார்த்தோம்" என்றான் இன்னொருவன்.

"எப்படி இவ்ளோ உறுதியா சொல்லுறீங்க ???" என்றான் மீண்டும்.

"அதுணே!!! இந்த பொண்ண நைட்டு விருந்துக்காக துரத்தினோம், அதுக்குள்ள நடுவுல போலீஸ்காரங்க வந்துட்டாங்க" என்று உளறினான் ஒருவன்.

"என்னது துரத்துனீங்களா??? அதுவும் நைட்டு விருந்துக்கா???" என்று சொன்னவன் கையை பின்னால் திருப்பி முறுக்கினான் சிவா.

"அம்மா.. கை... கை... வலிக்குது.. வலிக்குது.." என்று அலறினான். அவன் அலறலை கேட்டு மற்றவர்கள் பயந்து நடுங்கினர். சிவா கையை உதறியதும் கீழே விழுந்தான்.

"மேல சொல்லுங்கடா" என்று கர்ஜித்தான்.

"அண்ணே!!!" என்றனர் நடுங்கிக் கொண்டே.

"சொல்லுன்னு சொன்னேன்" என்று மீண்டும் கர்ஜித்தான்.

"துரத்திடிட்டு போனோம் மெயின் ரோட்டுல இரண்டு போலீஸ் நின்னாங்க, இந்த பொண்ணு அவங்க கிட்ட ஓடிருச்சு" என்றான் மூவரில் ஒருவன்.

"அப்புறம் அந்த போலீஸ் எங்களை போக சொல்லிட்டு அந்த பொண்ண கட்டாயப்படுத்தி அழச்சிட்டு போன மாதிரி இருந்தது" என்றான் மற்றொருவன்.

"எனது கட்டாயப்படுத்துற மாதிரியா??" என்றான் குரு ஆச்சரியமாக.

"ஆமாண்ணே!!! அவங்க ரெண்டு பேரும் வண்டில ஏற சொன்னாங்க. அந்த பொண்ணு முதல்ல ஏறவே இல்ல, அப்புறம் எங்களை பார்த்தது, அவங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாங்கன்னு தெரியல ஏறி போயிருச்சு" என்றான் இன்னொருவன்.

"அவங்க யாருன்னு அடையாளம் காட்ட முடியுமா உங்களால??" என்றான் சிவா வேகமாக.

"இல்லனா இந்த பொண்ண வெளிச்சத்துல பார்த்தோம் அவங்க ரெண்டு பேரையும் வெளிச்சம் அவ்வளவா இல்லாத இடத்துல பார்த்தோம், முகம் சரியா தெரியல லேசா தான் தெரிஞ்சது " என்றான் ஒருவன்.

"டேய் இவனுங்க கதைய முடிச்சுடு".

"அண்ணே!! இவங்க தான் நமக்கு இப்போதைக்கு கிடைச்சிருக்கற துருப்புச் சீட்டு , இவங்கள வச்சு தான் அவங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிக்க முடியும்" என்றான் சிவாவிடம்.

"சரி குரு ஃப்ளைட், ரயில்வே ஸ்டேஷன் எல்லா இடத்துலயும் தேடுங்க, அவ பேரு இருக்கானு பாருங்க, பஸ் ஸ்டாண்ட்ல டிரைவர் கண்டக்டர் ஒருத்தர் விடாமல் எல்லார்கிட்டயும் போட்டோவை காட்டி கேளுங்க, அப்புறம் அவ அப்பா, அம்மா ,தங்கச்சி எங்க இருக்காங்கனு பாரு, ஒரு இடம் விடக்கூடாது" என்று ஆணையிட்டான்.

"சரிணே!!".

"அப்புறம் அந்த அமர வாட்ச் பண்ண ஆள் போட சொன்னேன் போட்டியா?? அவன் போன் நம்பர், வீட்டு நம்பர், யார் யார் கிட்ட இருந்து கால் வருது இவன் யார் யார் கிட்ட பேசுறான் எல்லாம் தெரியனும், அவன வாட்ச் பண்ணிக்கிட்டே இருங்க".

"சரிணே!!! ஆள் போட்டுட்டேன், போன்ல பேசுறத வாட்ச் பண்ண இன்னொரு ஆள் போடுறேன், இவனுங்க நாலு பேரையும் விட்டுரலாம், அந்த போலீஸ்காரன் மாதிரி எவனையாச்சும் பார்த்தா தகவல் சொல்ல சொல்றேன்".

"இவனுங்கள விட எனக்கு மனசே இல்ல " என்றான் யோசனையுடன்.

"அண்ணே!! நாங்க பண்ணுனது தப்புதான் அண்ணிய பத்தி தெரியாம இப்படி பண்ணிட்டோம், மன்னிச்சிடுங்க கண்டிப்பா அந்த போலீஸ் மாதிரி பார்த்தா உடனே தகவல் தரோம்" என்று ஒருவன் வேகமாக பக்கத்தில் வந்து கெஞ்சினான்.

"ம்ம்.. சரி சரி அண்ணின்னு சொன்னதுக்காக விடுறேன், குரு சொன்னத பண்ணிடு நான் கிளம்புறேன்" என்று கட்டளையிட்டு விட்டு சென்றான்.

நான்கு பேரும் வெளியேறினர் பாதி தூரம் சென்றதும்."டேய்!! பாஸ்க்கு போன் போடு டா" என்றான் ஒருவன்.

"அதுக்கு முன்னாடி என்னைய ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போங்கடா" என்றான் அடி வாங்கியவன்.

"உன்னைய யாரு விருந்து அது இதுன்னு சொல்ல சொன்னா டா?? குடுத்த காசுக்கு நடிக்காம அதைவிட அதிகமா நடிச்சா இப்படித்தான்" என்றான் ஒருவன் கிண்டலாக.

"டேய்!! நானே வலியில இருக்கேன் டா, இப்ப இந்த அட்வைஸ் தேவையா டா??" என்றான் சிரமத்துடன்.

"வா ஆட்டோல ஹாஸ்பிடல் போயிட்டு அப்புறம் பாஸ் கிட்ட பேசிக்கலாம்" என்றான் மற்றொருவன். நான்கு பேரும் வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றனர்.

ஊட்டி:

காலைப் பொழுது இனிமையாக விடிந்தது. மிருணா எழுந்து ரிஃபிரஷாகி விட்டு கீழே வந்தாள். மீனாட்சியும் வாணியும் கிச்சனில் பேசிக்கொண்டே சமைத்துக் கொண்டிருந்தனர்." ஆன்ட்டி குட்மார்னிங்" என்றாள் சிரிப்புடன்.

"எழுந்துட்டியா டா?? இரு காபி தரேன்" என்றார் மீனாட்சி அன்பாக.

"ம்ம்.." என்று தலையை ஆட்டினாள்.

"நைட் நல்லா தூங்கினியா டா??" என்றார் வாணி அன்பாக.

"நல்லா தூங்குனேன், செம்ம தூக்கம்".

"நல்லது டா காப்பியக் குடி" என்று கொடுத்தார்.

"ஆன்ட்டி ஸ்ரீ எங்க?? இன்னும் எழுந்திருக்கலையா??" என்றாள் குடித்துக்கொண்டே.

"அவ முன்னாடியே எழுந்துட்டா டா, தோட்டத்துல இருப்பா போய் பாரு" என்றார். காபியுடன் தோட்டத்திற்கு வந்தாள்.

ஸ்ரீ அங்கு போடப்பட்டிருந்த சேரில் உட்கார்ந்து போன் பேசிக்கொண்டு இருந்தாள். மிருணா அவள் பக்கத்தில் வந்தாள்." அண்ணா போதும், உனக்கு வேலை இருக்கு அவ்வளவுதானே. போ போய் அதையே கட்டிக்கிட்டு அழு" என்றாள் கோபமாக.

மிருணா ஸ்ரீயை பார்த்து சிரித்துக் கொண்டே அவள் பக்கத்தில் உட்கார்ந்து மீதியிருக்கும் காபியை குடித்துக் கொண்டிருந்தாள்.

"உங்க ரெண்டு பேர் கூட பேசுறது வேஸ்ட் தான், எனக்கு புது ஃப்ரெண்ட் கிடைச்சுட்டா அவ எழுந்து வந்துட்டா நான் அவ கூட பேசப் போறேன் பாய் தடிமாடுங்களா" என்று பதிலை எதிர்பார்க்காமல் வைத்தாள்.

"என்னாச்சு ஸ்ரீ??" என்றாள் லேசான சிரிப்போடு.

"அது ஒன்னும் இல்ல மிருணு அவங்கள பத்தி பேசுறது வேஸ்ட் தான்" என்றாள் கோபத்துடன்.

"ஹா.. ஹா.. ஹா.. உன்னைய பார்த்தா எனக்கு நானும் விஷாவும் அமர் அண்ணா கிட்ட ஃபைட் பண்ணுற மாதிரி நியாபகம் வருது, நாங்களும் இப்படித்தான்" என்றாள் சிரிப்புடன்.

"ம்ம்... மிருணு நீ டயர்ட்டா இருந்த அதனால தான் நேத்து உன்கிட்ட நான் எதுவும் கேட்கல, உன் லைஃப்ல அப்படி என்னதான் நடந்தது, அமர் கிட்ட இத பத்தி கேட்டா தெளிவா சொல்லவே இல்ல" என்றாள் பொறுமையாக.

"நான் கண்டிப்பா சொல்றேன் ஸ்ரீ அதுக்கு முன்னாடி நான் பெரியப்பா கிட்ட பேசணும், நான் இங்க வந்ததும் அங்கிள் அண்ணாகிட்ட சொல்லிட்டாங்க, அண்ணா பெரியப்பா கிட்ட சொல்லி இருப்பாங்க, நான் இன்னும் பேசல முதல்ல அவங்க கிட்ட பேசணும்" என்றாள் யோசனையுடன்.

"சரி நம்பர் சொல்லு??".

"போன்ல இருக்கு, போன் மேல இருக்கு, என்கிட்ட பேலன்ஸ் இல்ல".

"நீ போய் ஃபோன எடுத்துட்டு வா, நாம பேசலாம் அப்பாவும் பேசுனா பெரிய மாமாவுக்கு ஆறுதலா இருக்கும்".

"பெரிய மாமா வா..??" என்றாள் சிரிப்புடன்.

"ஆமா உனக்கு அமர் அண்ணானா உன் பெரியப்பா எனக்கு பெரிய மாமா தானே!!" என்றாள் கண்ணடித்துவிட்டு.

"ம்ம்... ஆமா.. ஆமா.." என்றாள் சிரிப்புடன்.

"வா உள்ள போலாம் உனக்கு இந்த கிளைமேட் ஒத்துக்காது" என்று அழைத்து சென்றாள். ஹாலில் சக்கரவர்த்தி மற்றும் சோமு பேப்பரை பார்த்து பேசிக்கொண்டிருந்தனர்.

"மிருணா நீ போய் எடுத்துட்டு வா".

"சரி.." என்று மேலே சென்று எடுத்து வந்தாள்.

"அப்பா மிருணா பெரியமாமா கிட்ட பேசணும் உங்க போன் குடுங்க" என்றாள். அவர் மிருணாவிடம் எடுத்துக் கொடுத்தார். மிருணா ராமனுக்கு போன் செய்தாள். "பெரியப்பா...".

"மிருணா..." என்றார் உணர்ச்சிவசப்பட்ட குரலில்.

"பெரியப்பா நான் நல்லா இருக்கேன்" என்றாள் கரகரத்த குரலில்.

"உனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லையே டா" என்றார் கவலையாக.

"இல்ல பெரியப்பா நான் நல்லா இருக்கேன் கவலைப்படாதீங்க".

"எப்படிடா கவலைப்படாம இருக்க சொல்லுற, உன்ன மட்டும் அங்க விட்டுட்டு நாங்க எல்லாரும் இங்க இருக்கோம், அங்க கிளம்பி வரலாம்னா டிக்கெட் கிடைக்க மாட்டேங்குது, டிக்கெட் கிடைக்கிறப்போ லக்ஷ்மணன், கவிதா, விஷா இங்க வராங்க, உன்னைய மட்டும் விட்டுட்டு நாங்க மட்டும் எப்படி இங்க இருக்குறது???" என்றார் ஆதங்கமாக.

"பெரியப்பா நான் சேஃபா தான் இருக்கேன், கவலைப்படாதீங்க ப்ளீஸ்" என்றாள் கெஞ்சலாக.

சக்கரவர்த்தி இவள் கெஞ்சுவதை பார்த்ததும்,"மிருணா குடு நான் பேசுறேன்" என்றார்.

"ம்ம்.. பெரியப்பா இருங்க அங்கிள் உங்க கிட்ட பேசுறேனு சொன்னாங்க தரேன்" என்று தந்தாள்.

"வணக்கம் சம்மந்தி நான் சக்ரவர்த்தி பேசுறேன், அமரோட மாமனார்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"வணக்கம் சம்மந்தி அமர் உங்கள பத்தி சொன்னான், நாம சொந்தக்காரங்க தான் இப்படி ஒரு சூழ்நிலையில அறிமுகமாகுற மாதிரி நடந்துருச்சே!!" என்றார் வருத்தமாக.

"நீங்க கவலையே படாதீங்க, நாங்க மிருணாவை பார்த்துக்குறோம், இங்க வீட்ட சுத்தி காவலுக்கு ஆள் இருக்காங்க, வீட்டு காம்பவுண்ட் பெருசு வெளியிலிருந்து யாருமே உள்ள பார்க்க முடியாது, ஒரு கிலோமீட்டருக்கு நம்ம ஆளுங்க காவலுக்கு இருப்பாங்க, தெரியாத ஆளுங்க யாரும் இங்க நோட்டமிட வரமுடியாது, வந்தாலும் நம்ம ஆளுங்க விசாரிப்பாங்க சம்மந்தி பயப்படாதீங்க" என்றார் ஆறுதலாக.

"உங்ககிட்ட பேசுனதும் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு, வீட்டுக்கு போனதும் நான் போன் பண்றேன் என் மனைவி சாரதா மிருணா கிட்ட பேசணும்னு சொன்னா, நான் வெளியில இருக்கேன். நைட்டு லக்ஷ்மணன் வந்துருவான் அவன் உங்ககிட்ட பேசுனா கொஞ்சம் நிம்மதியா இருப்பான்".

"நானுமே அவர்கிட்ட பேசணும் தான் நினைச்சேன், நல்ல வேலை நீங்களே சொல்லிட்டீங்க, வந்ததும் போன் பண்ணுங்க என் மனைவியும் பேசணும் சொன்னாங்க, நீங்க போயிட்டு கால் பண்ணுங்க சம்மந்தி" என்று வைத்துவிட்டு, "மிருணா கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியா போயிடும் டா" என்றார் ஆறுதலாக அவள் தலை முடியை கோதி.

"தேங்க்யூ அங்கிள்" என்றாள் கரகரத்த குரலில்.

"மாமாக்கு யாராச்சும் தேங்க்யூ சொல்லுவாங்களா டா??" என்றார் சோமு கிண்டலாக.

மிருணா லேசாக சிரித்தாள். "சோமுப்பா தலைல ரெண்டு தட்டு தட்டி சொல்லுங்க அப்பதான் கேப்பா" என்றாள் ஸ்ரீ கிண்டலாக.

"யாருப்பா அது என் மருமகளோட தலையில தட்ட சொல்லுறது" என்று வந்தார் மீனாட்சி. அவருடன் வாணியும் வந்தார்.

"எல்லாம் இந்த வீட்டோட இளவரசி தான்" என்று கிண்டலாக தன் காலர் இல்லாத சட்டையை தூக்கி விட்டாள்.

"ம்ம்... மிருணாவ தட்டி தான் பாரேன் அண்ணா வந்து உன் தலையில கொட்டு வைப்பான்" என்று சிரித்தார் வாணி.

"எனக்கு உங்க எல்லார் கூடவும் இருக்குறது என் குடும்பம் கூட இருக்குற மாதிரியே பீல் ஆகுது" என்றாள் உணர்ந்து.

"ஓ.. அப்ப இது உன் குடும்பம் இல்லையா?? இரு இரு சென்னைக்கு போன் போடுறேன்" என்றாள் விளையாட்டாக.

"வேணாம் வேணாம் ஸ்ரீ என் குடும்ப தான் ஒத்துக்குறேன்" என்று சரண்டரானாள். அனைவரும் சிரித்தனர். சிறிது நேரத்தில் சாப்பிட்டு சக்கரவர்த்தியும் சோமுவும் வெளியே சென்றனர். மீனாட்சியும் வாணியும் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். ஸ்ரீ மிருணாவிற்கு வீட்டை சுற்றிக் காட்டினாள். எல்லா அறையும் எல்லா வசதியுடன் இருந்தது.

"மிருணு அண்ணா ரூம்கு அண்ணா வந்ததும் அழைச்சிட்டு போறேன், அவங்க ரூம்க்கு அவங்க இல்லாம போனா அவங்களுக்கு பிடிக்காது, ஊர்ல இருந்து வரப்ப சொல்லுவாங்க அம்மாங்க ரெண்டு பேரும் அப்ப போய் கிளீன் பண்ணீடுவாங்க மத்த யாரும் போக மாட்டோம்".

"ஓ.. ஏன் அப்படி?? எங்க இருக்கு?? எந்த ரூம்??".

"உன் ரூமுக்கு எதிர்ல இருக்குறது பெரிய அண்ணா ரூம், என் ரூமுக்கு எதிர்ல இருக்கிறது சின்ன அண்ணா ரூம், அது என்னனு தெரியல இரண்டு மூணு வருஷமா இப்படித்தான், என் ரூம் காட்டுறேன் வா.." என்று அழைத்து சென்றாள்.

ரூம் சுவர் முழுவதும் ப்ளூ நிறத்தில் இருந்தது. முதலில் சிறிய ஹால் அதில் பெரிய ஷோபாவும் போட்டிருந்தது. உள்ளே சென்றால் பெரிய அறை நடுவே தேக்குமர பெரிய கட்டில் நான்கு ஆள் படுக்க கூடிய அளவில் இருந்தது. பெரிய பெரிய ஜன்னல்கள். இடப்புற ஜன்னலை ஒட்டி திண்ணை போல் ஓர் ஆள் படுக்கக் கூடிய பெட் போட்டிருந்தது. அங்கு படுத்துக் கொண்டே வெளியே பார்க்க வசதியாக இருந்தது. இடது புற ஓரத்திலே பெரிய பாத்ரூம், வலது புற பாதி சுவர் ஸ்கிரீன் போட்டு இருந்தது.

"ஏன் இது ஃபுல்லா ஸ்க்ரீன் போட்டிருக்கு??".

"அதுவா வா காட்டுறேன்" என்று ஸ்க்ரீனை விலக்கினாள். அந்த இடம் முழுவதும் கண்ணாடி சுவராக இருந்தது அதன் ஓரத்தில் வெளியே செல்ல கதவு போட்டிருந்தது. அங்கிருந்து பார்த்தால் பச்சைவண்ண போர்வை போத்தி தன் அழகால் பார்ப்பவரை மயக்கியது அந்த மலை பிரதேசம்.

"வாவ்.. செமையா இருக்கு" என்றாள் முகம் மலர.

"உள்ள இருந்து பார்த்தா வெளியே தெரியும் வெளியிலிருந்து பார்த்தா உள்ள ஒண்ணுமே தெரியாது அந்த மாதிரி கண்ணாடி. பால்கனி போலாம் வா" என்று கதவை திறந்து அழைத்துச் சென்றாள்.

அங்கு இருவர் உட்காரக்கூடிய இரு சேரும் ஒரு டேபிளும், ஓர் ஆள் உட்கார்ந்து ஆட கூடிய குடை ஊஞ்சலும் இருந்தது. "ஸ்ரீ உன் ரூம் ரொம்ப அழகா இருக்கு, எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு " என்றாள் சந்தோஷமாக.

"இது எல்லாம் பெரிய அண்ணா ஐடியா தான், இத விட கொஞ்சம் பெரிசா சின்ன அண்ணா ரூம் இருக்கும். இங்க பாதி சுவர் தான் கண்ணாடி மாதிரி இருக்கு, சின்ன அண்ணா ரூம்ல ஒரு சைடு சுவர் ஃபுல்லா கண்ணாடி போட்டிருக்கும் " என்றாள் சிரிப்புடன்.

"அப்ப உன் பெரிய அண்ணன் ரூம்ல" என்றாள் ஆர்வமாக.

"அவனோடது எங்க ரெண்டு பேரோட ரூம்ம விட பெருசு, அது தாத்தா ரூம், தாத்தா இறந்ததும் அத அவன் எடுத்துக் கிட்டான், அவனோடத சின்ன அண்ணா எடுத்துக்கிட்டான், சின்ன அண்ணா ரூம்ம நான் எடுத்துக்கிட்டேன், எல்லாரும் மாத்திக்கிட்டோம்" என்றாள் சிரிப்புடன்.

"அடப்பாவிகளா.. மாத்தி மாத்தி எடுத்துக்கிட்டீங்களா??" என்றாள் கிண்டலாக.

"ஈஈஈஈஈ... பெரியண்ணா வரப்ப உன்னைய கூட்டிட்டு போய் காட்டுறேன் அப்ப பாரு அண்ணா ரூம" என்று சேரில் உட்கார்ந்தாள்.

"சரிங்க மேடம் உனக்கு அண்ணாகும் எப்படி மேரேஜ் பிக்ஸாச்சு?? " என்று ஆர்வமாக கேட்டுக் கொண்டே உட்கார்ந்தாள்.

"அமர் உன்கிட்ட எதுவும் சொல்லலையா??" என்றாள் ஆச்சரியமாக.

"இல்ல நா லவ்வுல விழுந்துட்டேன் டா ரெண்டு பேர் வீட்லயும் ஓகே சொல்லிட்டாங்க அவ்ளோதான்னு சொன்னான்" என்றாள் பாவமாக.

"எப்போதுமே இப்படித்தான் எதையும் முழுசா சொல்ல மாட்டான் உன் அண்ணே, எனக்கு அவரு தூரத்து சொந்தம்".

"எவ்ளோ தூரம் ஊட்டி டு சென்னை தூரமா??"
என்றாள் கிண்டலாக.

"இப்படி கிண்டல் பண்ணுனா நான் சொல்ல மாட்டேன்" என்று பொய்யாக முகத்தை திருப்பினாள்.

"ஈஈஈஈஈ... சரி சொல்லு பேபி நான் கிண்டல் பண்ண மாட்டேன்" என்று சரண்டரானாள்.

"குட்.. நீயும் ஒரு வகையில எனக்கு ரிலேஷன் தான் செல்வம் மாமா உனக்கு பெரியப்பா தெரியும்ல".

"ம்ம்.. அப்பா சொல்லி இருக்காங்க ரிலேஷன் விட ஃப்ரெண்ட்லியா இருக்கறதுதான் ரொம்ப பிடிக்கும்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க".

"ம்ம்.. ஆமா எங்க அம்மா வீட்டு தாத்தா ஊர் கோபி அங்க எல்லாரும் ஒன்றரை வருசத்துக்கு முன்னாடி திருவிழாக்கு போனோம். அமர் வீட்டுலையும் வந்துருந்தாங்க அப்ப தான் அமரப் பார்த்தேன். பார்த்ததும் ரெண்டு பேருக்கும் இனம்புரியாத உணர்வு, ரெண்டு பேருக்கும் பிடிச்சுருந்தது, முதல்ல ஃப்ரெண்ட்லியா பேச ஆரம்பிச்சோம், நான் லவ் பண்றேன்னு என் கிரிமினல் அண்ணா கண்டுபிடிச்சுட்டாங்க" என்றாள் சிரிப்புடன்.

"எப்படி கண்டுபிடிச்சாங்க???" என்றாள் ஆர்வமாக.

"எத்தன கிரிமினல விசாரிச்சு இருப்பாங்க எல்லாத்தையுமே சந்தேகக் கண்ணோடு பார்ப்பது தானே வேலையே!! என்னைய கவனிச்சுக்கிட்டு இருந்திருப்பாங்க போல என் சின்ன சின்ன சேஞ்சஸ பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டாங்க" என்றாள் சிரிப்புடன்.

"உங்க அண்ணா போலீஸா??" என்றாள் அதிர்ச்சியுடன்.

"ம்ம்.. ஆமா பெரியண்ணா சி.பி.ஐ சின்னண்ணா சி.ஐ.டி உனக்கு தெரியாதா???" என்றாள் குழப்பமாக.

"அப்படியா எனக்கு தெரியாதே!! இந்த நச்சுப்பாம்பு கிட்ட மாட்டுனதும் கமிஷனர் கிட்ட தான் பேச போனோம், எல்லாரும் அவனோட ஆளுங்க, உங்க அண்ணா இருந்திருந்தா அவங்க கிட்டயே சொல்லிருக்கலாமே!!" என்றாள் சந்தேகமாக.

"உன் பிராப்ளம் வந்தப்ப அண்ணா ரெண்டு பேருமே சென்னையில இல்ல டெல்லி போய் இருந்தாங்க, அதனால தான் கமிஷனர் பார்க்க போய் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் சமாதானமாக.

"இருந்தாலும் அண்ணா ஏன் என்கிட்ட இத சொல்லவே இல்ல??" என்றாள் யோசனையுடன்.

"தெரியலையே!! அவர் கிட்ட தான் கேக்கணும் , ஆமா நச்சுப்பாம்புன்னு சொன்னியே அது யாரு???" என்றாள் புரியாமல்.

"எல்லாம் அந்த சிவா தாதா தான், எப்ப பார்த்தாலும் என் காலையே சுத்திட்டு இருக்குது அத நான் கொல்லனும் இல்லனா என்னைய அது கொன்னுடும், என் பின்னாடியே சுத்துறான்ல அதான் இந்த பேரு" என்றாள் சிரிப்புடன்.

"கரெக்டான பேரு தான் அப்படி என்னதான் உன் ஃப்ரெண்ட் கல்யாணத்துல நடந்தது??".

மிருணா நடந்த அனைத்தையும் சொன்னாள்." சரி நடு ராத்திரி எப்படி வந்த?? உனக்கு பயமா இல்லையா??" என்றாள் ஆச்சரியமாக.

"செம்ம பயம் தான் நாய்லாம் வேற குரைச்சுது " என்று அவள் ட்ரெயின் ஏறியது பற்றி சொன்னாள்." பணமரம் பக்கத்துல தென்னைமரம் பார்த்திருக்கியா?? நான் பார்த்தேன்" என்றாள் சிரிப்புடன்.

"என்னது பணமரம் பக்கத்துல தென்னமரமா ??" என்று வந்தார் மீனாட்சி. அவருடன் வாணியும் வந்தார்.

"அது ஆன்ட்டி" என்றாள் தயங்கியபடி.

"அத்தைன்னு கூப்பிடுடா ஆன்ட்டின்னு கூப்பிடுறது யாரோ போல இருக்கு, இனிமே ஒழுங்கா அத்தை மாமானு கூப்பிட்டு பழகு" என்று சொல்லிக்கொண்டே அவள் நெற்றியிலும் ஸ்ரீ நெற்றியில் விபூதி வைத்தார்.

"ம்ம்.. சரி வாணித்த" என்றாள் சிரிப்புடன்.

"குட்.. நாங்க ரெண்டு பேரும் சமைக்கப் போறோம் எதாச்சும் வேணும்னா இன்டர் காம்ல கூப்பிடுங்க, வா வாணி நாம போகலாம் " என்று அழைத்து சென்றார்.

"அந்த மரம் ரெண்டு அப்படி என்ன பண்ணுச்சு பேபி??".

"இரண்டும் சரியான ஜொள்ளு பார்ட்டி, எவனாச்சும் தெரியாதவங்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து ட்ரெயின் கிளம்புற வரைக்கும் இருப்பாங்களா?? ரெண்டும் ட்ரெயின் கிளம்பிற வரைக்கும் நின்னுது, இதுல என் நேம், போன் நம்பர் எல்லாம் கேட்டுச்சு அந்த பணமரம் " என்றாள் சலிப்புடன்.

"சொல்லிட்டியா?? ஒருவேள அவனுங்க சிவாவோட ஆளா இருந்தா??" என்றாள் பதறியபடி.

"இருந்திருந்தா என்னைய விட்டிருக்க மாட்டானுங்க, நான் எப்படி சொல்லுவேன் அவங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர். என் ஓல்ட் நம்பர குடுத்துட்டேன், நேம ட்ரெயின்ல ஏத்தி விடும் முன்னாடி பார்த்துட்டானுங்க நான் உன் நேம்ல தானே வந்தேன் அதனால அதான் என் நேம்னு நினைச்சுட்டானுங்க, சரியான ஏமாளிங்க, இதுங்களாம் எப்படி தான் குற்றவாளிங்கள பிடிக்க போகுதுங்களோ!!" என்றாள் சிரிப்புடன்.

"சரியான டுபாக்கூர் போலீசா இருப்பானுங்க போல, இவங்கள எல்லாம் எப்படி தான் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல எடுத்தாங்களோ!! ஒருவேளை கூர்க்காவா இருப்பானுங்களோ!!" என்றாள் சிரிப்புடன் .

"இல்லல்ல போலீஸ் ஜீப்ல வந்தானுங்க, சரியான சிரிப்பு போலீஸ் பேபி, அப்புறம் எப்படி மேரேஜ் பிக்ஸ் பண்ணுனாங்க??".

"அப்புறம் அண்ணா அப்பா கிட்டயும் மாமா கிட்டயும் ஐடியா கொடுத்தாங்க, ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணலாம்னு உடனே ரெண்டு வீட்டிலேயும் ஒத்துக்கிட்டாங்க, மேரேஜ் உடனே பண்ணாம ஒரு வருஷம் ஆகட்டும்னு சொல்லிட்டாங்க " என்றாள் சிரிப்புடன்.

"ம்ம்...சூப்பர் " என்றாள் சிரிப்புடன்.

"சரி வா கீழ போலாம் வீட்டுக்கு பின்னாடி இருக்க தோட்டத்துல்ல ஊஞ்சல் இருக்கு, உனக்கு காட்டுறேன்" என்று அழைத்து சென்றாள். நாட்கள் அதன் போக்கில் நகர, ஒர் மாதம் சென்றது. மிருணா அவர்கள் குடும்பத்தில் ஒரு ஆளாக மாறி போனாள். தினந்தினம் மிருணாவின் குடும்பத்தினர் அனைவரிடம் பேசி பேசி இரு குடும்பமும் ஒரே குடும்பமாக மாறிப்போனார்கள்.

சென்னை:

"இங்க பாருங்க கமிஷனர் உங்க போலீஸ் டிபார்ட்மெண்ட்ல தான் ரெண்டு பேரு மிருணாவ தப்பிக்க விட்டிருக்காங்க, நானும் உங்க கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கேன் ஆனா நீங்க ஸ்டெப் எடுக்குற மாதிரி தெரியல"
என்றான் கோவமாக.

"சிவா நாங்களும் தேடிக்கிட்டு தான் இருக்கோம், அந்த பொண்ணு எங்க போனான்னு தெரியல??" என்றார் லேசான பயத்துடன்.

"இத சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல மிருணா குடும்பத்தையும் கண்டுபிடிக்க முடியல, டெல்லியில் ஒரு பக்கம் ஒரு இடம் விடாம தேடியாச்சு அவங்களும் கிடைக்கல" என்றான் கோபமாக.

"நீங்க தான் பெரிய ரவுடியாச்சே!! நீங்க தேடியே கிடைக்கல நாங்களாம் சாதாரண போலீஸ், உங்களாலயே பண்ண முடியாதது எங்களால எப்படி பண்ண முடியும்" என்று நக்கலாக கேட்டுக்கொண்டே ஒருவன் உள்ளே வந்தான்.

வந்தவன் யார்?? சிவாவிடம் மாட்டிய நான்கு பேர் யார்?? அவர்கள் சொன்ன பாஸ் யாராக இருப்பார்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்......................


? கைதியின் சிறை தொடரும்?.............
Sooper sis kadhai arputhama move aaguthu
 
Top