Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி - 9

Advertisement

Ramya Anamika

Well-known member
Member
?கைதி - 9?

"ஸ்ரீ, மிருணா, சீக்கிரம் வாங்க; நாங்க மூணு பேரும் எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது?", என்று வெளியே நின்று சத்தம் போட்டான் அமர். அவனுடன் விக்கி, ராக்கி, ஜாக்கி நின்றுகொண்டு இருந்தனர்.

"வரோம் வரோம், கிளம்பி வர வேண்டாமா?", என்று ஸ்ரீ மிருணாவின் கையை பிடித்துக்கொண்டு, தன் ஹேன்ட் பேகுடன் வந்தாள். நான்கு பேரும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு நின்றனர். ஸ்ரீ பிங்க் கலர் சுடிதாரில், மேலே லாவண்டர் நிற ஸ்வெட்டர் போட்டிருந்தாள். மிருணா லாவண்டர் நிற சுடிதாரில், மேலே ஸ்கை ப்ளூ நிறத்தில் ஸ்வெட்டர் போட்டு, இரு பெண்களும் லேசான அலங்காரத்துடன் தேவதையாக வெளியே வந்தனர்.

"ஸ்ரீ, மிருணா, பார்த்து போய்ட்டு வாங்க", என்றார் வாணி அவர்கள் பின்னாலே மீனாட்சியுடன் வந்து.

"கண்ணா, மிருணா பத்திரம்", என்றார் மீனாட்சி ஆண்கள் மூவரையும் பார்த்து. மூவரும் தலையை ஆட்டினார்.

ஜாக்கி குறைத்தது. மிருணா பயத்துடன் ஸ்ரீயின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

"ஜாக்கி!", என்றனர் விக்கியும் ராக்கியும். ஜாக்கி அமைதியானது.

"ஜாக்கி, மிருணா நம்ம வீட்டு பொண்ணு தான், உன்ன பார்த்து எப்படி பயப்படுறா பாரு", என்றாள் ஸ்ரீ பொறுமையாக.

"ஸ்ரீ, விடு, வா போலாம்", என்றாள் நடந்தபடி.

ஜாக்கி மிருணாவின் காலை நக்கியது. "ஏய்! என்ன பண்ற? கூச்சமா இருக்கு, கூசுது போடா அந்த பக்கம்", என்றாள் கூச்சத்துடன்.

"மிருணா, ஜாக்கிக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருச்சு போல, அதான் இப்படி பண்றான்", என்றாள் ஸ்ரீ. அனைவரும் மிருணாவைப் பார்த்து சிரித்தனர்.

அமர் மற்றவர்களை பார்த்துவிட்டு, ஸ்ரீ யைப் பார்த்து கண்ணடித்தான். ஸ்ரீ பொய்யாக முறைத்தாள். "இன்னைக்கு நம்ம ஆளு சூப்பரா வந்திருக்கால விக்கி", என்றான் ராகவ்.

"டேய்! எரும அவ உன் அண்ணி டா", என்றான் விக்ரம் முறைப்புடன்.

"அது முன்னாடி, இப்ப இல்ல பா தம்பி, இப்ப எனக்கும் ஒரு சான்ஸ் இருக்கு", என்றான் கிண்டலாக.

"டேய்! உன்ன", என்று பல்லைக் கடித்தான்.

"மச்சான் போலாமா?", என்றான்.

"சரி அமர் போலாம், யாரு என் கூட முன்னாடி வரீங்க?", என்றான் விக்ரம் மிருவைப் பார்த்துக் கொண்டே.

"டேய்! விக்கி என்னடா புதுசா கேக்குற? வழக்கம்போல நான் தான் உன் பக்கத்துல உட்காருவேன், வா டா வந்து வண்டிய எடு", என்று முன்னாடி ஏறினான் ராகவ். விக்ரம் முறைத்துக்கொண்டே டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான். மற்ற மூவரும் பின்னால் உட்கார்ந்தனர்.

"பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க", என்றனர் இரு அம்மாக்களும். விக்ரம் காரை ஓட்டிக் கொண்டே, "டேய்! நாதாரி எதுக்குடா என் லைன்ல கிராஸாகுறே?", என்றான் முறைத்துக் கொண்டே மெதுவாக.

"நான் எங்க உன் வழிக்கு வரேன்? நீ உன் வழில போ, நா என் வழில போறேன், யாரு ஃபர்ஸ்ட் போறாங்கன்னு பார்க்கலாமா?", என்றான் கிண்டலாக.

"அண்ணா! நாம அவுட்டிங் போயிட்டு வந்ததும், அப்பா அம்மாகிட்ட வீடியோ கால் பண்ணி பேசலாம், உன்ன பார்த்ததும் ஷாக் ஆயிடுவாங்க", என்றாள் சிரிப்புடன்.

"கண்டிப்பா டா மிருணா", என்றான் சிரித்துக்கொண்டே.

முன்னால் இருவரும் மெதுவாக சண்டை போட்டனர். பின்னால் மூவரும் அரட்டை அடித்துக்கொண்டே, மார்க்கெட் ஏரியாவிற்கு வந்தனர்.

"நான் போய் கார பார்க் பண்ணிட்டு வரேன், நீங்க முன்னாடி போங்க" , என்றான் விக்ரம். நான்கு பேரும் இறங்கி சென்றனர்.

"மிருணு பேபி! இங்க எல்லாமே நல்லா இருக்கும்; இங்க எல்லாமே கிடைக்கும்; இந்த ஏரியா ஃபுல்லா கடை தான்; உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ. பில் பே பண்ண தான் மூணு பேரு இருக்காங்களே நமக்கு", என்றாள் ஸ்ரீ கிண்டலாக.

மிருணா சிரித்தாள். "அடிப்பாவி! இப்படி எல்லாம் நீ செலவு பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா, ஊர் பக்கமே வந்திருக்க மாட்டேன்", என்றான் அமர் கிண்டலாக.

"அதான் வந்துட்டியே மச்சி, இப்ப சொல்லி என்ன பிரயோஜனம்? இவள கல்யாணம் பண்ண ஒத்துக்குறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்", என்றான் ராக்கி கிண்டலாக.

"டேய்! எரும எங்க பில்ல நீதான் கட்டணும், வாடா வா, உன் பர்ஸை காலி பண்ணாம விட மாட்டேன்", என்று முதுகில் அடித்துக் கொண்டே நடந்தாள்.

நான்கு பேரும் சேர்ந்து ஓர் துணிக்கடைக்கு சென்றனர். சிறிது நேரம் பார்த்து விட்டு, நான்கு பேரும் வெளியே வந்தனர். விக்ரம் இவர்களுடன் இணைந்து கொண்டான். ஸ்ரீயும் மிருணாவும் சுற்றிப் பார்த்து பேசிக் கொண்டே முன்னால் நடந்தனர். அவர்கள் பின்னால் கொஞ்சம் தள்ளி மூன்று ஆண்களும் பேசிக்கொண்டே வந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தனர்.

மிருணாவும் ஸ்ரீயும் ரோட்டில் இருந்த கடையில் உள்ள பொருட்களை, நின்று எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆண்கள் மூவரும் சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென்று மிருணாவின் தோளில் யாரோ கை வைத்தனர். பயத்துடன் ஸ்ரீயின் கையை பிடித்துக் கொண்டாள். ஆண்கள் மூவரும் இதனைப் பார்த்து பக்கத்தில் வந்தனர்.மிருணா பயத்துடன் திரும்பிப் பார்த்தாள்.

"ஏய்! லூசு எப்ப ஊட்டிக்கு வந்த? என்கிட்ட சொல்லவே இல்ல", என்று ஓர் இளம் பெண் அவளை அணைத்தாள்.

"அனு", என்று சந்தோஷமாக அணைத்து விடுவித்தாள்.

"எப்ப டி வந்த?? சொல்லவே இல்ல, ஆமா இவங்க யாரு?", என்றாள் சிரிப்புடன் ஸ்ரீயை காட்டி.

மூன்று ஆண்களும் வேகமாக பின்னால் வந்து நின்றார்கள். விக்ரம் முன்னால் வந்து, "மிரு யாரு இவங்க?", என்றான் வேகமாக.

"மிருவா! யாரு டி இந்த வளர்ந்தவன்?", என்று காதில் ரகசியமாக கேட்டுவிட்டு திரும்பி பார்த்தாள். "அமர் அண்ணா நீ எப்ப வந்த?", என்று அணைத்து விடுவித்தாள்.

"அனு எப்படிடா இருக்க? இது உன் ஊர்ல, நான் மறந்தே போயிட்டேன்", என்றான் கிண்டலாக.

"என்னையாச்சு ஞாபகம் இருக்கா சார்?", என்றாள் கிண்டலாக.

"உன்ன மறக்க முடியுமா? நீங்க தான் த்ரீ ரோஸஸ் ஆச்சே!", என்றான் சிரித்துக்கொண்டே.

"யார் இந்த பைங்கிலினு இன்னும் சொல்லவே இல்லையே?", என்றான் ராகவ் கிண்டலாக.

"இவ என் க்ளோஸ் ஃப்ரண்ட் அனுஜா, நான், சுதா, இவ மூணு பேரும் ரொம்ப க்ளோஸ். எங்கள த்ரீ ரோஸஸ்னு தான் காலேஜ்ல சொல்லுவாங்க, அனு இவ ஸ்ரீ நம்ம அமரோட வருங்கால மனைவி, அப்புறம் என் நியூ ஃப்ரெண்ட்", என்றாள் சிரிப்புடன்.

"ஹாய்! அண்ணி இந்த அண்ணாக்கு பொண்ணு கிடைக்காது, கடைசி வரைக்கும் சிங்கிளா தான் சுத்துவாங்கன்னு பார்த்தா, இப்படி இவ்ளோ அழகான அண்ணி கிடைப்பாங்கனு தெரியாம போச்சே!", என்றாள் கிண்டலாக அமரைப் பார்த்து.

"மிருணா டயலாக்க நீ பிடிச்சுக்கிட்டியா? இவ தான் என்னைய இப்படி ஓட்டுவா, இப்போ நீயுமா?", என்றான் பாவமாக.

"அவ ஃப்ரெண்ட் அவள மாதிரி தானே இருப்பேன்? அண்ணி இதெல்லாம் வெறும் சும்மா, நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க", என்றாள் சிரிப்புடன்.

"அனு, இந்த அண்ணி பன்னில்லா வேணாம். என்னைய ஸ்ரீனே கூப்பிடு, இனிமே நீயும் எனக்கு ஃப்ரெண்ட் தான்", என்றாள் சிரிப்புடன்.

"அப்ப டபுள் ஓகே ஸ்ரீ, ஆமா! இவங்க ரெண்டு பேரும் யாருன்னு சொல்லவே இல்லையே டி மிருணு", என்றாள் விக்ரம் மற்றும் ராகவை காட்டி.

"இவங்க ரெண்டு பேரும் ஸ்ரீயோடா அண்ணா டி".

"ஹாய்!",
என்றாள் இருவரையும் பார்த்து.

"ஹாய்!", என்றனர் சிரிப்புடன்.

"மிருணு வீட்டுக்கு வாடி, அம்மாவும் அப்பாவும் உன்ன பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவாங்க".

"இல்ல, இங்க தான் கொஞ்ச நாள் இருப்பேன், இன்னொரு நாள் வரேன்டி".

"ஆமா எங்க ஸ்டே பண்ணி இருக்க?".

"நான் இப்ப ஸ்ரீ வீட்லதான் இருக்கேன் டி".

"எரும! ஸ்ரீ வீடுன்னு சொன்னா, அட்ரஸ் சொல்லிடுவாங்களா டி?",
என்றாள் தலையில் அடித்துக் கொண்டே.

ஸ்ரீ அவள் வீட்டின் முகவரி மற்றும் அப்பாவின் பெயரை சொன்னாள். "ஓ அவங்கள நீங்க? சரி சரி, மிருணா சுதா கல்யாணத்துக்கு போனியா? அவ எப்படி இருக்கா? அவ கல்யாணம் அப்ப தான், எங்க அத்த பொண்ணுக்கும் கல்யாணம் டி, அந்த நாய் கிட்ட எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டிகிறா, போன் பண்ணுனா போன் எடுக்குறது இல்ல டி, காலேஜ் முடிச்சுட்டு வந்தது தான் அந்த பக்கமே வரமுடியலடி , சுதா இன்னும் என் மேல ரொம்ப கோவமா இருக்காளா? ஆமா உன் போனுக்கு என்னாச்சு டி? ஏன் கால் போக மாட்டிகிது?", என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

"இந்தாமா பொண்ணு! ஒரு கேள்வி கேளுங்க. இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டா எப்படி மா பதில் சொல்றது, சரி வாங்க எல்லாரும் காபி ஷாப்ல போய் பேசலாம்", என்றான் ராகவ். ஆறுபேரும் காபி ஷாப்பிற்கு வந்து ஆடர் செய்தனர்.

"இப்ப சொல்லு".

"நீ நாளைக்கு மாமா வீட்டுக்கு வாடி உனக்கு விவரமா சொல்றேன், இப்ப இத பத்தி இங்க பேச வேணாம்".


ஆடர் செய்த காபி வந்தது. அனைவரும் எடுத்து குடிக்க ஆரம்பித்தனர். அனு யோசனையுடன் மிருணாவை பார்த்துக்கொண்டே, "சம்திங் ராங் வித் யூ டி, நாளைக்கு நான் வரேன் இப்ப உன் நம்பர் குடு", என்று ஸ்ரீ நம்பரையும் சேர்த்து வாங்கிக் கொண்டாள். சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

"ஷாப்பிங் பண்ணனுமா? நான் வேணா இருக்கட்டுமா?".

"இல்ல நீ திங்ஸ் வாங்க தானே வந்த, அம்மா உன்ன தேடுவாங்க, நீ கிளம்பு நாளைக்கு தான் வீட்டுக்கு வருவல்ல அப்ப பேசிக்கலாம்".

"சரிடி, நான் அப்போ கிளம்புறேன் பாய்",
என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு எழுந்தாள்.

"அனுஜா வெய்ட் வெய்ட்", என்றான் ராகவ் வேகமாக எழுந்து.

அனைவரும் புரியாமல் ராகவைப் பார்த்தனர். டேபிளில் அழகுக்காக வைத்திருந்த பூக்களில், ஒரு ரோஜாவை எடுத்து அவள் முன் நீட்டி, "ஐ லவ் யூ அஜீ டார்லிங், உனக்கு ஆள் இருக்கா? இல்லையா? எதுவும் எனக்குத் தெரியாது, எனக்கு இப்ப தெரிஞ்சதெல்லாம், என் முன்னாடி தேவதையா நிக்கிற நீ மட்டும் தான், உன்ன பார்த்ததுமே என் மனசுல நீ வந்துட்ட, நாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?", என்றான் கண்ணடித்து.

அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். "ஏய்! தைரியசாலி உன் ஃப்ரெண்டுக்கு ஆள் இருக்கா?" என்றான் மிருணாவை பார்த்து.

"ஆ…", என்று முழித்தாள்.

"புரியலையா? லவ்வர் இருக்கானா?".

"இல்ல, ஆனா நீங்க?",
என்றாள் முழித்துக்கொண்டே.

"நான் தான் கேட்குறேன். சரி அத விடு, நீ சொல்லு டார்லிங். எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு, என்னைய பத்தி உன்கிட்ட சொல்லல, ம்ம் சரி நான் ஹரி ராகவன், சன் ஆஃப் சோம மூர்த்தின்னு யாரும் சொல்ல மாட்டாங்க , சக்கரவர்த்தியோட ரெண்டாவது பையன்னு தான் சொல்லுவாங்க, நான் சிபிஐல இருக்கேன், நவ் ஒர்கிங் இன் சென்னை, நான் உன்ன பார்க்குறதுக்கு முன்னாடி சிங்கிளா இருந்தேன், இப்ப உன்ன பார்த்ததும் கமிட்டெட் ஆயிட்டேன்", என்றான் கண்ணடித்து.

"ஹலோ! என்ன நீங்க பாட்டுக்கு பேசிட்டே போறீங்க? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்", என்றாள் கோபமாக.

"எதுக்கு கோவப்படுற? சரி வேற மாதிரி ப்ரொபோஸ் பண்ணுறேன். உனக்கு எந்த மாதிரி பண்ணனும்னு சொல்லு அப்படியே பண்றேன்", என்றான் கிண்டலாக சிரித்துக்கொண்டே.

"ஸ்ரீ, மிருணா இதெல்லாம் ரொம்ப ஓவர். கண்டிச்சு வைங்க இவர, லூசு மாதிரி பேசிட்டு இருக்காரு நான் வரேன்", என்று கோவமாக கிளம்பினாள்.

"பாய்! அஜீ டார்லிங்", என்றான் சிரிப்புடன். அனு திரும்பி முறைத்து விட்டு சென்றாள்.

"டேய்! என்னடா பண்ணுற? அவ என் தங்கச்சி மாதிரி டா. ஏன்டா இப்படி பண்ற? நீ ப்ரொபோஸ் பண்ணுனதப் பார்த்து பயந்து போயிட்டா", என்றான் அமர் முறைப்புடன்.

"எதுக்குடா இவ்ளோ அவசரப் படுற?", என்றான் விக்ரம்.

"என்னைய என்ன பண்ண சொல்ற? விட்டா நீ எல்லாரையும் அண்ணின்னு கூப்பிட வச்சுருவ, அதான் நான் முந்திக்கிட்டேன்", என்றான் கண்ணடித்து.

இரு பெண்களும் இருவரையும் முறைத்தனர், அமர் லேசாக சிரித்தான். "ஏன்டா இப்படி பொய் பொய்யா சொல்லுற? சரி வாங்க போகலாம் திங்ஸ்லா வாங்கன்னும்ல", என்று பேச்சை மாற்றி அழைத்து சென்றான்.

ஐந்து பேரும் ஒன்றாக சேர்ந்து, தேவையான எல்லா பொருளையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். அங்கு சில ரவுடிகள், ரோட்டில் இருக்கும் கடைகளில் மிரட்டிக் கொண்டு இருந்தனர். "கைஸ் சீக்கிரம் என் பின்னாடி வாங்க", என்று மிருணாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான். மூவரும் பின்னாலே ஓடிவந்தனர். ஓர் முட்டு சந்து இருந்தது. அதன் பக்கத்தில் வேகமாக சென்று நின்றான். அந்த சந்து இரண்டடி அகலம் தான் இருந்தது. நீலம் போய்க்கொண்டே இருந்தது. முதலில் ஸ்ரீயை உள்ளே அனுப்பினான். பாதி தூரத்திலே நிற்க சொன்னான். அமரும் அவளுடன் உள்ளே சென்றான். பிறகு ராகவ் சென்றான். விக்ரம் மிருணாவின் கைகளை பிடித்துக் கொண்டு, வெளியே பார்த்துவிட்டு உள்ளே அவள் கையை பிடித்து கொண்டு சென்று, எதிரே நிற்கவைத்து கொண்டான். இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டும் தான் இருந்தது.

"மிருணா இங்க வந்து நின்னுக்கோ!", என்றான் ராகவ் தனக்கு எதிரே காட்டி.

"வேணாம் அவ இங்கேயே இருக்கட்டும்", என்றான் முறைப்புடன். மிருணா பயத்தில் இருந்ததால் இவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை.

'கிடைக்கிற கேப்புல எல்லாம் கெடா வெட்டுறானே! ம்ம் நம்ம தங்கச்சியும் மச்சானும் என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம், என்ன சத்தத்தையே காணோம்?’, என்று நினைத்துக் கொண்டே திரும்பி பார்த்தான்.

"ஹனி செல்லம்! உனக்கு இந்த டிரஸ் செம்ம சூப்பரா இருக்குடி", என்றான் அவள் முகத்தில் இருந்த மூடியை காதுக்கு பின்னால் செருகி.

"ம்ம் நிஜமாவா? தேங்க்ஸ்", என்றாள் வெட்கத்துடன்.

"ஆமா டி என் பட்டு குட்டி", என்று அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சினான்.

'அடப்பாவி என்னாமா பேசி கவுக்குறான், வேணாம்டா ராக்கி இந்த பக்கம் பார்த்தா நாம கெட்டுப் போயிடுவோம்', என்று மனதிலே புலம்பிக்கொண்டு மறுபக்கம் திரும்பிப் பார்த்தான்.

"மிரு…", என்றான் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே.

"ம்ம்…".

"மிரு குட்டி",
என்றான் மென்மையாக.

"ம்ம் என்ன?", என்றாள் கோபமாக அவன் முகத்தைப் பார்த்து.

"டென்சனா இருக்கியா?".

"இல்ல, ரொம்ப கூலா இருக்கேன், எரிச்சல கிளப்பாத",
என்றாள் அடிக் குறளில்.

"புஜ்ஜி குட்டி", என்றான் அவள் முகத்தில் உதி.

"நீ என் கிட்ட அடி வாங்கப்போற பாரு", என்றாள் கோவமாக.

"பரவால்லடி, நீ தானே அடிக்கிற அடிச்சுக்கோ", என்றான் அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்து.

இழுத்த வேகத்தில் அவன் மார்பில் முட்டி நின்று, "ஆ…. எதுக்குடா இப்படி இழுக்குற?" ,என்றாள் தலையை தேய்த்துக் கொண்டே.

விக்ரம் அவள் இடுப்பில் கை வைத்து லேசாக அணைத்தபடி, "பின்னாடி பாரு டி, அட்டை போகுது அதனால் தான் இழுத்தேன்".

"எங்க போயிருச்சா?",
என்றாள் பயத்தில் திரும்பி பார்க்காமல்.

"பின்னால போகுது பயப்படாத, இது முட்டு சந்து, இங்க எலி எல்லாம் வரும் பார்த்து கவனமாயிரு", என்றான் பொறுமையாக.

"எலியா?", என்று பயத்தில் கத்தி கொண்டே, அவன் காலில் ஏறி நின்று அவனை பிடித்து கொண்டாள்.

இவள் சத்தத்தில் ஸ்ரீயும் அமரும் திரும்பிப் பார்த்தனர். "ஒண்ணுமில்ல மிரு பயப்படாத. அவ்ளோ பெரிய ரவுடிய ஈஸியா மிரட்டுற, தம்மாத்துண்டு எலிக்கு, அட்டை பூச்சிக்கு இப்படி பயப்புடுற", என்றான் கிண்டலாக அவளை அணைத்து.

"அவன் மனுஷன் அவன் கூட சண்டை போடலாம், என் பாஷ அவனுக்குப் புரியும், இதுங்களுக்கு என் பாஷ புரியுமா?", என்றாள் லேசான பயத்துடன்.

ராகவின் காதில் புகை வந்தது. "அனு எதுக்கு டி நீ போன? நீ கூட வந்திருந்தா, நானும் இப்படி ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்துப்பேன், ஒரு சின்ன பையனா நடுவுல வச்சுக்கிட்டு, ரெண்டு பக்கமும் ரொமான்ஸ் பண்ணி என் உயிரை வாங்குறாங்க", என்று வாய் விட்டு புலம்பினான்.

"ப்ச்… சும்மா இரு அண்ணா, மிருணா பயப்படாத", என்றாள் ஸ்ரீ.

"பாப்பா, உள்ள அண்ணா கிட்ட வா டா ", என்றான் அமர்.

"ம்ம்", என்று விலகினாள்.

விக்ரம் அமரை மனதிலயே அர்ச்சனை செய்து கொண்டு, அவனுக்கு பின்னால் பார்த்தான். உள்ளே தொலைவில் மேலே வெளிச்சம் தெரிந்தது. "ராக்கி நான் சொல்ற மாதிரி பண்ணு டா", என்று தன் திட்டத்தை சொல்லி, கார் சாவியை கொடுத்தான்.

ஸ்ரீ, அமர், ராகவ் வெளியே சென்றனர். "மிரு வா", என்று கையை பிடித்து கொண்டான்.

"இங்க ரொம்ப இருட்டாவே இருக்கு, இருட்டுல எதுவுமே ஒழுங்கா தெரியல, ஆமா அது என்ன தண்ணி போகுது?", என்றாள் ஓரமாக தண்ணி போவதை காட்டி.

"இது மூட்டு சந்து, கடையில இருக்க தண்ணீர், இப்படி ஏதாவது போகும் பார்த்து வா", என்று மெதுவாக உள்ளே நடந்தான்.

"இல்ல எனக்கு பயமா இருக்கு, பேட் ஸ்மெல்லா வேற வருது உள்ள போறப்ப", என்றாள் ஓர் கையால் மூக்கை பிடித்து கொண்டே.

"ஒன்னும் இல்லடி, இப்படி தேங்கி தேங்கி நின்னா நாம எப்படி வெளில போறது?", என்றான் அவள் முகத்தை பார்த்து.

"உன் போன்ல லைட்ட போடு முதல்ல".

"சரி",
என்று போட்டான். அங்கு எலி, அட்டை, பெயர் தெரியாத பூச்சிகள் இப்படிலாம் இருந்தது. "உள்ள போக வேணாமே", என்றாள் அவனை ஒட்டிக்கொண்டே.

"குட்டிமா, அதெல்லாம் ஒன்னும் பண்ணாது வா", என்று ஒரு கையால் அணைத்தபடி முடிவிற்கு அழைத்து வந்தான். விக்ரமை ஒட்டிக் கொண்டே நின்று, கீழே எதுவும் போகுதான்னு பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"ஓய்", என்றான் அவள் முகத்தில் உதி குறும்பாக.

(தொடர்ச்சி கீழே.............)
 
Last edited:
மிருணா முறைத்துக்கொண்டே விலகினாள். "மிரு எலி", என்றான் குறும்பாக.

மிருணா முறைத்துக்கொண்டே, "நீ ரொம்ப ஓவரா பண்ற, என் பயத்த உனக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிற", என்று கத்தினாள்.

அவள் சத்தம் எதிரொலித்தது. விக்ரம் வேகமாக அவள் வாயில் கை வைத்து மூடி, "சத்தமா பேசாத டி, நாம இங்க இருக்குறது யாருக்கும் தெரியாது, சத்தம் போட்டு காட்டி கொடுத்துறாத", என்றான் மெதுவாக.

விக்ரமின் போன் அடித்தது. மிருணாவின் உதட்டை லேசாக வருடி விட்டு போனை எடுத்தான். "ம்ம் ஓகே", என்று வைத்து விட்டு, "மிரு மேல ஏறு, இந்த கல் இருக்குல்ல அது மேல கால வச்சுக்கோ, மேல இருக்க கல்ல பிடிச்சுக்கிட்டு, ஒவ்வொரு ஸ்டெப்பா ஏறு, அந்தப் பக்கம் ராக்கியும் அமரும் இருக்காங்க ஏறு".

"இல்லல்ல, இந்த கல்லுக்கு நடுவுல பாம்பு, தேள், பூச்சியில்லா எதுவும் இருந்தா",
என்றாள் பயத்துடன்.

"நீ அடி வாங்கப்போற பாரு டி, ஏறு ரொம்ப நேரமா அவங்க அங்க நிக்க முடியாது, தூக்கி விடுறேன் மெதுவா மேல ஏறு", என்று இடுப்பை பிடித்தான்.

"ஏய்! கைய எடு", என்று தட்டிவிட்டாள்.

"ஏய்! சண்டைபோட இது நேரமில்ல, ஏத்திவிடுறேன் அமைதியா ஏறு", என்று மீண்டும் இடுப்பைப் பிடித்தான். மிருணா கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவனைப் பார்த்தாள். "மிரு என்னைய அப்பறமா பார்க்கலாம் ஏறு", என்று ஏற உதவி செய்தான். மிரு கல்லை பிடித்துக் கொண்டே மேலே ஏறி உட்கார்ந்து, அந்தப் பக்கம் பார்த்தாள். அமர் மற்றும் ராகவ் நின்று கொண்டு இருந்தனர்.

"மிரு இறங்கு டி", என்றான் விக்ரம்.

மிருணா அந்தப்பக்கம் இறங்க, பாதி தூரம் இறங்கும் போதே, கால் சறுக்கி கையில் அடிப்பட்டு விழ போனாள். அமர், ராகவ் வேகமாக வந்து பிடித்து இறக்கினர்.

"விக்கி நீ வா", என்றான் ராகவ். விக்ரம் வேகமாக ஏறி இந்த பக்கம் இறங்கினான்.

"டேய்! இவள வண்டியில உட்கார வைக்காம, எதுக்குடா வெளிய நிக்க வச்சு இருக்கீங்க? சீக்கிரம் ஏறுங்க", என்றான் கோவமாக.

திடீரென்று மூன்று ஜிபில் ரவுடிகள் வருவது தெரிந்தது." மிரு முதல ஏறு", என்று அவள் கையை பிடித்து வண்டியில் அவளை தள்ளி விட்டு, பக்கத்தில் உட்கார்ந்தான். ராகவ் டிரைவர் சீட்டிலும் அமர் பக்கத்திலும் உட்கார்ந்தான். ராகவ் வேகமாக காரை எடுத்தான்.

"ஏய்! ஏய்!", என்று கத்திக் கொண்டு வந்தனர். மிருணா பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டே இருந்தாள். பாதி தூரம் சென்றதும், பின்னால் வந்த ஜீப்பை காணவில்லை.

வீட்டிற்கு வந்ததும், "அம்மா ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ கொண்டு வாங்க", என்றான் விக்ரம் சத்தமாக.

மீனாட்சியும் வாணியும் பதறி எடுத்து வந்தனர். "மிரு உக்காரு ஸ்வெட்டரை கழட்டு", என்று அவளை சோபாவில் உட்கார வைத்து, மருந்து போட வந்தான்.

மிருணா ஸ்வெட்டரை கழட்டி கொண்டே, "வேணா இந்த மருந்து எரியும்", என்றாள் வேகமாக.

"கொஞ்சம் எரியும் பொருத்துக்கோ", என்று ஸ்வெட்டரை அவளிடம் இருந்து வாங்கி வைத்து, உதிக் கொண்டே, அவள் கையில் முழங்கை வரைக்கும் சிராய்து ரத்தம் வந்த இடத்தில் மருந்து போட்டான்.

"போதும் போதும் என்னைய விடு, அண்ணா விட சொல்லு", என்றாள் கெஞ்சலாக.

"பாப்பா, மருந்து போட்டா தான் சரியாகும் அமைதியா இரு", என்று பக்கத்தில் உட்கார்ந்தான். விக்ரம் மருந்து போட்டதும், மிருணா அமர் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"பாப்பா, சாப்பிட்டு தூங்குடா. அத்த இவளுக்கு சாப்பாடு கொண்டு வாங்க".

"இல்ல வேணா, நான் போய் ரீஃபிரேஷாகிட்டு வரேன்",
என்று எழுந்து மேலே சென்றாள்.

"ராகவ், நீ வா நமக்கு கொஞ்சம் வேல இருக்கு", என்று விக்ரம் தனியாக அழைத்து சென்றான்.

"அமர் எனக்கு ரொம்ப பயமா இருக்கு, பேபிய அவங்க பார்த்திருப்பாங்களா?", என்றாள் பயத்துடன்.

"ஹனி பயப்படாத. அப்படியெல்லாம் ஆயிருக்காது, நல்லதே நினை, போய் பிரஷ்ஷாகு போ டா, மிருணாவோட மைண்ட நாம மாத்தனும்", என்றான் யோசனையுடன்.

"சரி", என்று சென்றாள்.

"அமர் என்னாச்சு?", என்றனர் அம்மாக்கள் இருவரும்.

அமர் நடந்த பிரச்சனையை மீனாட்சி மற்றும் வாணிடம் சொன்னான். மாலை ஆறு மணிக்கு மேல் தான் விக்ரம், ராகவ் வீட்டிற்கு வந்தனர். மிருணா, அமர், ஸ்ரீ, மீனாட்சி, வாணி ஐந்து பேரும் உட்கார்ந்து லேப்டாப்பில் மிருணாவின் அப்பா, அம்மா, தங்கையிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.

"டீ கொண்டு வரட்டா டா??", என்றார் வாணி.

"வேணாம்மா ", என்றனர் இருவரும்.

"சரி", என்று வாணியும் மீனாட்சியும் கிச்சனுக்கு சென்றனர்.

"அப்பா! விக்கியும் ராக்கியும் வந்துட்டாங்க, டேய் இங்க வாங்கடா", என்று பக்கத்தில் உட்கார சொல்லி லேப்டாப்பை திருப்பி, அறிமுகம் செய்தான் அமர். இருவரும் அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

"மாமா! அக்கா சொன்னா, இன்னைக்கு நடந்த பிரச்சனைய ரொம்ப தேங்க்ஸ் மாமா", என்றாள் சிரிப்புடன் இருவரையும் பார்த்து.

"அது எங்க கடமை டா", என்று இருவரும் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பொய்யாக முறைத்துக் கொண்டனர்‌

"நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க, நாங்க வெளியில போயிட்டு வரோம், கொஞ்சம் வேல இருக்கு", என்றார் லக்ஷ்மணன்.

"சரி மாமா", என்றனர். லக்ஷ்மணன் கவிதாவும் சென்றனர்.

"மாமா சண்டி ராணி எங்க? ஆள காணோம்", என்றாள் கிண்டலாக.

"சண்டி ராணியா?", என்றனர் இருவரும்.

"நாய் சேகரி பிச்சுப்புடுவேன் பிச்சு", என்று லேப்டாப்பை தன் பக்கம் திரும்பினாள்.

"ஏய்! அந்த பேர சொல்லாதன்னு எத்தனை தடவை சொல்லுறது டி, கேட்கவே நாராசமா இருக்கு", என்றாள் கோபமாக.

"அப்படி தான் சொல்லுவேன், நாய் சேகரி‌‌ நாய் சேகரி", என்றாள் கிண்டலாக. நான்கு பேரும் சிரித்தனர்.

"இப்படி எல்லாம் பண்ணுன, நான் கட் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன், அண்ணா அண்ணி பக்கத்துல இருக்காங்கன்னு ஜொள்ளு விட்டுகிட்டு என்னைய கண்டுக்காம இருக்க", என்று சண்டையில் ஆரம்பித்து கிண்டலாக முடித்தாள்.

"நான் பாட்டுக்கு பேசாம தானே இருக்கேன், ஏன்டா ஏன்?", என்றான் பொய்யான சோகத்துடன்.

ஸ்ரீ சிரிப்புடன், "விஷா உங்க அண்ணாவ பத்தி உனக்கு தெரியாதா?", என்றாள் கிண்டலாக.

"ஆமா ஆமா அண்ணி, அண்ணா வழியிது துடைச்சுக்கோ, மிருணா முகி வரலையா டி?".

"என்னது முகியா??",
என்றாள் சந்தேகமாக.

"ஒன்னும் இல்லடி இப்படி சந்தேகமா பார்க்காத", என்று மென்று முழுங்கினாள்.

"இவளும் லவ் பண்ண மாட்டா, லவ் பண்றவளையும் விடமாட்டா", என்று முனகினான் விக்ரம்.

"ஆமா டா", என்றான் ராகவ். விக்ரம் பொய்யாக முறைத்தான்.

"விஷா என்னைய பாரு, முகில் கிட்ட பேசுறியா??".

"ம்ம்",
என்று தலையை ஆட்டினாள்.

"மேட்டர் ரொம்ப சீரியஸா?".

"தெரியல".

"சரி சரி ரொம்ப யோசிக்காத, நான் அவன் கிட்ட பேசுறேன்".

"ஏய்! நானே இன்னும் எதுவும் பேசல டி, நீ எதுவும் சொல்லாத",
என்றாள் கெஞ்சலாக.

"இதப் பத்தி பேச மாட்டேன் ஓகே வா".

"ம்ம் சரி டி செல்ல குட்டி. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன், இங்க தனியாவே சுத்துறேன், நீ எப்ப வருவ?",
என்றாள் அழுகையுடன்.

"ஏய்! லூசு எதுக்கு அழுகுற? நீ அழுகுறத அப்பாவும் அம்மாவும் பார்த்தா அவ்வளவு தான், அவங்களுக்கு யாரு ஆறுதல் சொல்றது? உன்ன இப்படி அழுமூஞ்சில பார்க்கிறப்ப ரொம்ப கேவலமா இருக்க, இப்படியே ஒரு செல்பி எடுத்து பேஸ்புக்ல போடு, உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் உன்ன அண் ஃப்ரெண்ட் பண்ணடும்", என்றாள் கிண்டலாக.

"போடி நாயே! நானே ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன், வந்துட்டா இத சொல்றதுக்கு, சரி நான் நாளைக்கு பேசுறேன் சரியா, பாய் பாய் டாட்டா எல்லாருக்கும்", என்று சென்றாள்.

மிருணா லேப்டாப்பை மூடி விட்டு, கண்களை மூடி தன்னை அமைதிப் படுத்திக் கொண்டு இருந்தாள்.

"மிருணா", என்றாள் ஸ்ரீ அவள் தோளில் கை வைத்து.

மிருணா கலங்கிய கண்களை கண் சிமிட்டி சரி செய்து கொண்டே," என்ன பேபி?".

"பேபி! அழுக வந்த ஆழுதுரு, இப்படி இருக்காத",
என்றாள் கவலையாக.

"இல்லல்ல நான் அழ மாட்டேன் அழ மாட்டேன்", என்று தனக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டாள்.

"பாப்பா, இந்த முகில பார்த்தியா? இத பத்தி நம்ம கிட்ட ஒன்னுமே சொல்லல, முகில பத்தி நீ என்ன நினைக்கிற?", என்று பேச்சை மாற்றினான்.

"அண்ணா, அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல பார்க்கலாம்".

"மிருணா, உன் தங்கச்சி சோ ஸ்வீட் ரொம்ப க்யூட்டா பேசுறா",
என்றான் ராகவ்.

"ஆமாடா, எவ்ளோ அழகா நம்மள மாமான்னு கூப்பிட்டா, சின்ன பொண்ணு அவளுக்கு எப்படி முறை வைச்சு கூப்பிடானும்னு தெரியிது, சில பேர் வளர்ந்து என்ன பிரயோஜனம்?", என்றான் விக்ரம் கிண்டலாக மிருணாவை பார்த்து.

மிருணா முறைத்துக்கொண்டே, "எதா இருந்தாலும் டைரக்டா சொல்லுங்க", என்றாள் கோபமாக.

"டேய்! அவள வம்பு பண்றத நிறுத்திட்டு, போய் ரெப்ரேஷ் பண்ணுற வழிய பாருங்க டா", என்று கிச்சனில் இருந்த படி சத்தம் போட்டார் மீனாட்சி. இருவரும் உள்ளே சென்றனர்.

இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். விக்ரம் ஒரு மணி போல் மாடி ஹாலில் உட்கார்ந்து போன் பேசிக்கொண்டு இருந்தான். அப்பொழுது மிருணா கத்தும் சத்தம் கேட்டது.

மிருணா எதற்கு கத்தினாள்? துரத்தி வந்தவர்கள் யார்? மிருணாவை பற்றி சிவாவுக்கு தெரிய வருமா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…………...

? கைதி சிறை தொடரும்?.................
 
Last edited:
Top