Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 10

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் - 10

பிரதாப் சென்றவுடன் அசோக் மனதில் புது உற்சாகம் தொற்றிக் கொண்டது.அந்த மகிழ்ச்சியுடனே குளித்து முடித்து டைனிங் டேபுள் நோக்கி விரைந்தான்.அங்கு பிரதாப் தனக்காக சாப்பிடமால் காத்திருந்ததில் மன்னிப்பு கேட்டவாறு அவன் அருகில் அமர்ந்தவாறு, “இப்போ சாப்பிட்டு முதலில் முதியோர் இல்லம் போகலாமா,இல்லை……

“ இரு… இரு… என் பேச்சில் முதியோர் இல்லம் என்று நான் சொல்லவே இலையே”என்ற பிரதாப்பின் கேள்விக்கு அசோக் முழித்த வாறு “இல்லை நீதான் பெற்றவர்களாக நடிக்க மரியாதையான பெரியவர்கள் வேண்டும் என்று இப்போது தானே சொன்னாய்.

“சொன்னேன் ஆனால் அதற்கு முதியோர் இல்லம் செல்ல அவசியம் இல்லை. பாவம் அவர்களே தன் பிள்ளைகளிடம் இல்லாமல் மனதளவில் வேதனையை அனுபவித்து இருப்பவர்கள். அவர்களிடம் சென்று இச்செயலை செய்ய சொல்ல விருப்பம் இல்லை.”என்ற பிரதாப்பின் பேச்சில் உள்ள நியாயத்தால் அசோக் மவுனம் சாதித்தான்.

“பிரதாப் பின் என்ன தான் செய்வது.?நமக்கு நேரம் அதிகம் இல்லை…. எது செய்வது என்றாலும் சீக்கிரமாக முடிக்க வேண்டும்.”

“நீ சொல்வது சரி தான் ஆனால் அதற்கு நான் ஏற்பாடு பண்ணி விட்டேன்.” என்ற பிரதாப்பின் பதிலில் இவன் எப்போது ஏற்பாடு செய்தான். என்னிடம் இப்போது தானே பெரியவர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னான். தன் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

பிரதாப் அவன் முகத்தையே பார்த்த வாறு”நீ வர லேட் பண்ணலே அந்த டைமில் தன் செல் போனை காட்டியவாறு இதன் மூலம் விஷயத்தை முடித்து விட்டேன்.”என்ற பிரதாப்பை முறைத்தவாறு….

“நான் எங்கே லேட் செய்தேன். நீ போன உடனே இரண்டே, இரண்டு மக்கு தண்ணீ தான் என் மேல் உற்றினேன். பாவம் நீ வெயிட் பண்ணுவியே என்று அதுக்குள் உனக்கு லேட் ஆயிடுச்சா…”என்ற நண்பனின் பதிலில்

“அப்போவே நான் நினைத்தேன் என்னடா சென்டு வாசனை கொஞ்சம் தூக்குலா தெரியுதேன்னு இது தான் விஷயமா” என்ற பிரதாப்பின் பதிலில்…

இவன் எந்த பக்கம் போனாலும் அடிக்கிறானே, அப்பா...இப்பேயே கண்ணை கட்டுதே இவன் கல்யாணம் முடியுறதுக்குள்ள நம்மை ஒரு வழி பண்ணிடுவான் போலயே என்று மனதுக்குள் பேசிக் கொண்டான்.

“கட்ட போறது உன் கண் மட்டும் இல்லடா…. உன் காலையும் தான்.”என்ற பிரதாபின் பதிலில்..

“இரு...இரு… நான் என் மனதுக்குள் தானே பேசினேன் உனக்கு எப்படி கேட்டுச்சு…..அப்புறம் அது என்ன காலையும் கட்டறது…”அசோக் குழப்பத்துடன் கேட்டான்.

“முதலில் நீ மனதுக்குள் பேசவில்லை மனதுக்குள் பேசறதா… நினைத்து வெளியே மற்றவர்களுக்கு கேட்பது போல் தான் பேசினாய்.ம்...ம்… அப்புறம் என்ன கேட்ட கால் கட்டு பத்தி தானே… இதோ இப்போ நீ என்ன பண்ற என்பதை தெரியாமலேயே பண்ணிட்டு இருக்கியே லூசு மாதிரி அதை தெளிய வைக்க தான் உனக்கும் ஷாலினிக்கு கால் கட்டு போட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.?நீ என்ன நினைக்கிறே?”

ஒரு நிமிட மவுனத்திற்கு பிறகு “எனக்கு பெண் கொடுப்பாங்களடா…”என்று வேதனையுடன் கேட்டான்.

“ஏன் உனக்கு என்ன குறைச்சல் பெண் கொடுக்க மாட்டேன் என்பதற்கு….நான் விளையாட்டுக்கு கேட்க வில்லை சீரியஸாக தான் கேட்கிறேன்.நம்ம இரண்டு பேருடைய கல்யாணத்தை ஒண்ணாவே வைச்சிடலாமா…”

“பிரதாப் நீ என்ன சொல்றே முதலில் விளையாடுவதாக தான் நினைத்தேன்.ஆனால் நீ என்ன நிஜமாக கேட்கிறாய். நான் முதலில் ஷாலினியிடம் என் விருப்பத்தை சொல்ல வேண்டும்.அவள் ஒகே சொன்னாலும், அதற்கு அவள் பெற்றவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.முதலில் உன் விஷயத்தை பார்ப்போம்.என் விஷயம் பொறுமையாக பிறகு பார்க்கலாம்.”என்று தன் வேதனையை உள் அடக்கி கூறினான்.

“அசோக் நான் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டேன்.என் திருமணம் நடந்தவுடன் நாம் கண்டிப்பாக சென்னையில் இருக்க மாட்டோம். திருமணம் முடிந்த மறு நாள் டெல்லிக்கு கிளம்பி விடுவோம்.திருமணத்திற்க்கு பிறகு பத்மினியின் நிலை என்னவாக இருக்கும் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது.அவள் அப்பா பாசத்தில் நமக்கு எதிராக கூட செயல் படுவாள்...என்றே நினைக்கிறேன்.”என்ற பிரதாப்பின் பேச்சில் திருமணத்திற்க்கு பிறகு பிரச்சினை வரும் என்று முன் கூட்டியே இவ்வளவு சாதரணமாக கூறும் அவன் நண்பனை கவலையுடன் பார்த்தான்.

அசோக்கின் பார்வையில் இருந்தே அவன் எண்ண ஒட்டத்தை புரிந்து கொண்ட பிரதாப் “என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நீ கவலை பாடதே அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது உன்னை பற்றி யோசி நான் என்னதுக்கு இந்த விஷயத்தை இவ்வளவு தூரம் சொல்கிறேன் என்றால்…..பத்னிமியும் ஷாலினியும் சிறு வயது முதலே நெருங்கிய பிரண்ட். பத்மினிக்கு என்னால் ஏதாவது பிரச்சினை என்று ஷாலினிக்கு தெரிந்தால் என் பிரண்ட் என்ற ஒரு காரணம் போதும் அவள் உன்னை நிராகரிக்க”என்று கூறிய நண்பனை வியப்புடன் பார்த்தன்.

தன் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு பிரச்சினை வரும் என்று தெரிந்தும் அதை பற்றி கவலை படாமல்…. அவன் பிரச்சினையால் தனக்கு ஏதும் பாதிப்பு வந்து விட கூடாது.என்று யோசிக்கும் நண்பனை பற்றி நினைக்கையிலேயே தன்னை அறியாமல் கண்ணில் நீர் சுரந்தது.

பிரதாப் அசோக்கின் கண்ணீல் நீறை கண்டவுடன் அவன் மன நிலையை மாற்ற “ஏய்...ஷாலினியை கல்யாணம் பண்ணுவதை பற்றி தானே கூறினேன். அதற்க்கா அழுகிறாய். சரி இவ்வளவு வேதனையுடன் ஒன்றும் நீ ஷாலினியை திருமணம் செய்ய வேண்டாம்.நான் ஏன் ஷாலினியை உனக்கு கல்யாணம் செய்யலாம் என்று நினைத்தேன் தெரியுமா….?பத்னிமியும், ஷாலினியும் பிரிய வேண்டாம் என்று தான். நான் என்ன உனக்காக செய்வதா நினைச்சிட்டியா….?என்ற பிரதாப்பின் பேச்சில் கவலை மறந்து சிரித்தான்.

“சரி அசோக் நான் சொல்வதை கேள்….எப்படியும் எனக்கு இங்க நடிக்க பெற்றோறை ஏற்பாடு செய்ய போகிறோம்.அவர்களையே உனக்கும் கார்டியனாக ஏற்பாடு செய்திடலாம்.அது உண்மையும் கூட தானே ...என் பெற்றோர் தானே உனக்கு கார்டியன். என்ன ஒன்று இப்போது என் பெறோரை வரவழைக்க முடியாது என்ற காரணத்தால் இப்போது நடிப்பவர்களையே ஏற்பாடு செய்ய போகிறேன்…அவ்வளவுதான்.”என்னவோ சப்பாத்திக்கு பதிலாக உப்புமா சாப்பிட போகிறோம் மாதிரி பேசும் நண்பனை வியந்து பார்த்தான்.

“ஏண்டா வில்லனை பார்க்குற மாதிரி பார்க்கிறாய். யாருக்கு வேண்ணா நான் வில்லனா இருப்பேன். உனக்கு இருப்பேனா …..உன் நல்லதுக்கு தான் சொல்கிறேன்.திரும்பவும் சென்னை வருவதை நான் விரும்ப வில்லை .அதனால் இரண்டும் ஒன்றாய் முடித்து விடலாம்.” என்னவோ இரண்டு பிஸ்னஸ் டிலீங்கை ஒன்றாக முடித்து விடலாம் என்று கூறுவது போல் கூறினான்.

இன்னும் அசோக்கின் முகம் தெளியாததை கண்டு “ஒரு கல்யாணம் செய்ய ஆயிரம் பொய் கூட சொல்லலாம் என்று நம் பெரியவர்கள் சொல்லியிருக்காங்க…..நாம் இரண்டு கல்யாணம் நடத்த ஒரு பத்து பொய் சொன்னா தப்பே இல்லே…”என்று தன் புருவத்தை உயர்த்தி புன்னகையுடன் வினாவினான்.

“ஆமா…. ஆமாம் சொன்னாங்க நீ பெரியவர்களின் பேச்சை கேட்டு அப்படியே நடப்பவன் என்று”அசோக்கின் பதில்லில்….

“என்னை ரொம்ப புகழாத அசோக் இந்த புகழ்ச்சி எனக்கு பிடிக்காது என்று தான் உனக்கு தெரியுமே.”பிரதாப் சிரித்துக் கொண்டே உரைத்தான்.

பிரதாப்பின் சிரித்த முகத்தை பார்த்த அசோக் இவன் புன்னகை என்று மாறமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.

பிரதாப் அசோக்கிடம் “போதும் அசோக் நாம் தேவைக்கு அதிகமாகவே பேசிவிட்டோம்.நான் சொல்வது போல் செய்வது தான் நல்லது என்று நான் நினைக்கிறேன்”

பிரதாப் அசோக்கை கேள்வியாக பார்த்தான் “சரி பிரதாப் என்ன செய்ய வேண்டும் செய்கிறேன்.”இது தான் அசோக் எவ்வளவு விளையாட்டாய் இருந்தாலும் வேலை என்றால் பிரதாப் எதிர் பார்த்ததை விட விரைவாகவும் அதே சமயம் சரியாகவும் எந்த பிரச்சினையும் இல்லாமல் செய்து முடிப்பான்.

அதனால் தான் பிரதாப்பே ஏதாவது ஒரு வேலையை சொன்னால் இது சரி பட்டு வருமா? என்று கேட்டு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்தே அந்த வேலையில் இறங்குவான். இறங்கினால் சரியாக முடித்து விடுவான்.

அதனால் தான் பிரதாப் சொன்னவுடன் இது சரிப்பட்டு வருமா என்று யோசித்தான்.பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக “சொல்லு பிரதாப் நம்ம அடுத்தது என்ன செய்யணும்”என்ற அசோக்கின் கேள்வியில்,

“நான் பெற்றோறாய் நடிப்பதற்க்கு பெரியவர்களை ஏற்பாடு செய்ய நம் வாசுவிடம் சொல்லி விட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் இங்கு வருவதாய் சொல்லி இருக்கான்.அதற்குள் நாம் செய்ய வேண்டியதை முதலில் உன்னிடம் சொல்லிவிடுகிறேன்.”

என்ற பிரதாப்பின் பேச்சை உன்னிப்பாக கேட்க ஆராம்பித்தான். “இப்போ வாசு வந்ததும் நாம் அவனை அழைத்துக் கொண்டு அவன் சொன்ன இடத்திற்கு பெரியவர்களை பார்க்க செல்ல வேண்டும்.”

இடையில் அசோக் “அந்த பெரியவர்கள் நமக்கு சரிப்பட்டு வருவாரா பிரதாப் ஏன் என்றால் தோற்றம் மரியாதை மிக்க தாக இருக்க வேண்டும்.”

“அதையும் நான் யோசித்து விட்டேன்.அதனால் வாட்சப்பில் போட்டோவை அனுப்பி வைக்க சொன்னன் தோற்றம் ஓகே தான்.பின் அந்த பெரியவர்களும் இந்த ஊர் கிடையாது வெளியூர் தான். எதற்கும் அவர்களை பார்த்து முடிவு செய்து விட்டாலும் கேசவமூர்த்தியிடம் திருமணத்திற்கு முன் நாள் தான் கொண்டு நிறுத்த வேண்டும். அதனால் தான் நான் முன்பே கேசவமூர்த்தியிடம் அப்பா, அம்மா, வேல்ட்டு டூர் போயிருக்காங்கன்னு முதலிலேயே சொல்லி வைச்சிருந்தேன்” என்ற பிரதாப்பின் திட்டத்தை கேட்ட அசோக் இவன் ஹீரோவா…. வில்லனா….என்ற யோசனைக்கு பதில் தான் கிடைக்க வில்லை.

எப்போதும் போல் அசோக்கின் முகபாவத்தில் இருந்தே அவன் எண்ண போக்கை புரிந்துக் கொள்ளும் பிரதாப் “யோசித்து டைமை வெஸ்ட்டு பண்ணதே நான் நல்லவனா,கெட்டவனா,என்பதை பிறகு பார்க்கலாம்.”என்ற பேச்சின் முடிவில் வாசுவின் கார் சத்தம் கேட்டது.

பிறகு அவர்களுக்கு பேச ஏன் ?யோசிப்பதற்க்கு கூட நேரம் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தது.வாசு சொன்ன பெரியவர்களை பார்த்து அவர்களிடம் பேச வேண்டியதை பேசி அவர்கள் எப்போது வரவேண்டும். ஏன்? எந்த டிரஸ்ஸில் வரவேண்டும் என்பதையும்,பிரதாப் திட்டம் போட்டு கொடுத்தான்.

பின் இதில் ஏதாவது எங்களுக்கு தெரியாமல் நீங்கள் செய்வதாக இருந்தாலோ, அல்லது எங்களுக்கு எதிராக செயல் பட நினைத்தாலோ, உங்கள் வயதை கூட பொருட்படுத்த மாட்டேன். என்னுடைய தண்டணையே கடுமையாக இருக்கும் என்று அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தான்.

பின் அவர்களுக்கு அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பணம் கொடுத்து. அதுவும்…. அது வெறும் அட்வான்ஸ் தான் என்று கூறியவுடன் பெரியவர்கள் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அவன் எப்போதும் அப்படித்தான். தான் நினைப்பதை மற்றவர்கள் மாற்றினாலோ,அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய நினைத்தாலோ அவர்களுக்கு அவன் கொடுக்கும் பனிஷ்மென்ட். வாங்கினவன்….திரும்பவும் அவன் வழியில் வரயோசிப்பது என்ன அவனை திரும்பியும் பார்க்க பயப்படுவார்கள்.

அவன் எண்ணப்படி நடந்தால் குளிர் நிலவாகவும், அவன் எண்ணத்திற்க்கு எதிர்பதமாக நடந்தால் சுடும் சூரியனாக விளங்குவான்.

பத்மினிக்கு குளிர் நிலவாக இருப்பானா….? சுடும் சூரியனாக விளங்குவானா….?
 
???

பத்மினி தான் இவனை அலரவிடுவா போல.....
ஏண்டா அவனை அழவைக்குற???
பாவம் அவன் கல்யாணம் நடக்குமானு கவலை படுறான் பார்.....

அம்மா அப்பா சரியா நடிப்பாங்களா???
 
Last edited:
:love: :love: :love:

பிரதாப் & அஷோக்காக ...

என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da எல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என்ன எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்
 
superb sis
 
Top