Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 17 2

Advertisement

பிரதாப் தன் மினிக்கு இப்படியா சர்பிரைஸ் கொடுப்பது. அவள் மயக்கம் தெளிந்ததும்ல இருக்கு உனக்கு.
 
அவன் கோவாவில் ஒரு மாதத்துக்கு என்று தான் திட்டம் இட்டான்.ஆனால் பத்மினியிடமும் கேசவமூர்த்தியிடமும்,பதினைந்து நாள் தான் என்று சொல்லியிருந்தான்.ஏன் என்றால் பத்மினி தன் படிப்பை பற்றி கூறி தன் அட்டனன்ஸ் அடிப்பட கூடாது என்று கூறியதால் அவ்வாறு உரைக்கும் படி ஆனாது.

ஆனால் பத்மினியின் படிப்பை டெல்லியில் தொடர்வர்தற்க்கு உண்டான அனைத்து காரியமும் தன் செல்வாக்கால் டெல்லியில் செய்து முடித்திருந்தான்.அதனை பற்றி பத்மினியிடம் சொல்வதற்கும் பின் அவர் தந்தையை பற்றி சமயம் பார்த்து கூறுவதற்க்கும் சேர்த்து தான் தன் ஹனி மூனை ஒரு மாதத்துக்கு திட்டம் இட்டான்.

ஆனால் பத்மினி பக்கத்தில் இருக்கும் போது தான் என்ன கூறவேண்டும் என்பதையே மறந்து… தன் இளமையின் தேவையே அவனுக்கு முதலில் பட்டது.பின் அவனே தனக்குள் கோவாவை விட்டு செல்லும் கடைசி நாள் சொல்லலாம் என்றும்… இப்போது உள்ள நல்ல சூழ்நிலையை கெடுத்துக் கொள்ளவேண்டாம். என்று தனக்கு தானே சமாதானமும் செய்துக் கொண்டான்.

ஆனால் இப்படி தன் அன்னையின் உடல் நலம் கெடும் என்று கனவிலும் நினைத்து பார்க்க வில்லை.அவனுக்கு இரு விஷயத்தை நினைத்து கவலைப் பட்டான்.ஒன்று தாயின் உடல் நிலை மற்றொன்று பத்மினியின் மனநிலை.டெல்லி சென்றவுடன் அவள் எப்படி நடந்துக் கொள்வாளோ என்றும்.

இவ்வாறு தன் நினைவலையுடன் தன் வேலையையும் முடித்துக் கொண்டான்.பிளைட்டின் டிக்கட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டு அவர்கள் தங்கி இருந்த ஓட்டலை வந்தடைந்த போது பத்மினி அனைத்தையும் பேக் செய்து ரெடியாக இருந்தாள்.

அவளை பார்த்தவுடன் எவ்வளவு மகிழ்ச்சியோடு இங்கு வந்தோம்.இப்போது அதற்க்கு எதிர்ப்பதமான மனநிலையில் திரும்புவதை நினைத்து வருந்தினான்.பத்மினி அவனை பார்த்தவுடன் இப்போதாவது தன்னிடம் ஏதாவது சொல்வான் என்று ஆவளுடன் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.

அவளின் அந்த முகபாவத்தை பார்த்த பிரதாப் விரைந்து வந்து அவளை அணைத்துக் கொண்டான்.”சாரி மினி ஏதோ டென்ஷனில் அப்படி உன்னிடம் பேசிவிட்டேன்.”என்று வருந்தி கூறினான்.

பத்மினி இதை தானே எதிர் பார்த்தாள் அவளுக்கு அவளை திட்டியது கூடபெரிதாக படவில்லை.ஆனால் அதற்கு உண்டான காரணத்தை சொல்லாமல் சென்றது தான் மனதை உறுத்தியது.

இப்போது அவனே வந்து வருந்தவும்… “பரவாயில்லை பிரதாப் விடுங்க…இப்போ அத்தைக்கு எப்படி இருக்கு“ என்று அவள் விசாரித்ததில் “அத்தையா யாரு?”அவன் கேள்வியில் என்ன பிரதாப் நான் உங்கள் அம்மாவைத் தான் சொல்கிறேன்.”பத்மினியின் பதிலில் ஒரு ஆழ மூச்செடுத்து “தெரியவில்லை சீச்சிரம் கிளம்பு பிளைட்டுக்கு டைம் ஆயிடுச்சி என்று கூறி அவளை துரிதபடுத்தினான்.

பின் விரைவில் ஏர்போட்டுக்கு வந்தடைந்தனர்.பிளைட்டில் அமர்ந்தவுடன் தன் தந்தைக்கு போனில் அழைத்தான் “அப்பா நாங்க கிளம்பியாச்சு இன்னும் இரண்டு மணி நேரத்தில் அங்கு இருப்போம்”என்று கூறியவுடன்.

அந்தப்பக்கம் தீனதயாளன் “பத்மினியை பார்த்து அழைத்துக் கொண்டு வா...அம்மா அவளை தான் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறாள்.சீக்கிரம் வாருங்கள்.”என்று போனை அணைத்தார்.

அவன் கண்ணை மூடி தன் நெத்தியை கையால் தடவிக் கொண்டான்.”என்ன பிரதாப் மாமா என்ன சொன்னார்கள்.அத்தைக்கு இப்போ பரவாயில்லை தானே… தலை வலிக்கிறதா...என் ஹன்பேகில் தைலம் இருக்கிறது தடவவா…”என்று கேட்டாள்.

“இல்லை வேண்டாம் சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலே சரியாகி விடும்” என்று கூறி அவள் பேச்சில் இருந்து தப்ப திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டான். அவள் அப்படி தன் தாய் தந்தையை உறவு மாற்றி அழைப்பதற்கு இவள் அவர்களை பற்றி விசாரிக்காமலேயே இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான்.இன்னும் இரண்டு மணி நேரம் தான் எல்லாவற்றுக்கும் விடை தெரிந்து விடும்.என்று நினைத்துக் கொண்டான்.

டெல்லி ஏர்போட்டில் பிளைட் வந்து இறங்கியவுடன் அவனுக்காக காத்திருந்த பிஎம் டபள்யூ காரில் தன் லக்கேஜை எல்லாம் வைக்கும்படி தன் டிரைவரிடம் கொடுத்தான்.ஆனால் அவன் அதனை கவனிக்காமல் ஒரு ஆச்சரியத்துடன் பத்மினியையே பார்த்திருந்தான்.

அந்த சூழ்நிலையிலும் அதை விரும்பாதவனாக “என்ன அங்க பார்வை ம்...சீக்கிரம் லக்கேஜை டிக்கியில் வைத்து வண்டி எடு என்று கூறி பத்மினியையும் ஏறும் மாறு ஜாடை காட்டினான்.பத்மினி டெல்லி ஏர்போட்டுக்கு வந்தவுடனே அவன் முகபாவமே மாறிவிட்டதாக எண்ணினாள்.

முகபாவத்தில் கடுமை கூடிவிட்டதாகவே கருதினாள்.பாவம் அந்த கார் ட்ரைவர் தன் முதலாளி மனைவி என்று தானே பார்த்தான்.ஏன் இப்படி தேவை இல்லாமல் கோபம் படவேண்டும்.என்று எண்ணிக் கொண்டே காரில் அமர்ந்தாள்.

காரில் அமைதியே நிலவியது.பத்மினியும் ஒன்றும் கூறாமல் சைடில் வேடிக்கை பார்த்தவாறு வந்தாள். கால் மணி நேரத்துக்குள் கார் ஒரு பெரிய அரண்மனை மாதிரி இருந்த பங்களாவின் முன் நின்றது. அந்த பங்களாவை பார்த்த பத்மினி பிரதாப் தங்களை விட வசதி என்று தன் தந்தை சொன்னாலும் இந்த அளவுக்கு எதிர் பார்க்க வில்லை.வாச்மேன் வந்து கேட்டை திறப்பதை பார்த்த பத்மினி கேட்டின் பக்கத்தில் கோல்டன் எழுத்தில் பத்மினி இல்லம் என்ற எழுத்தில் மின்னியதையும் பார்த்தாள்.

அவள் யோசனையுடன் பிரதாப்பை பார்த்தவாரே பிரதாப்பின் அம்மா பெயர் பார்வதி தானே சொன்னார்.என்று தன் ஞாபக ஏட்டை தட்டினாள்.எவ்வளவு தட்டினாலும் விடை பார்வதி என்று தான் கிடைத்தது.ஒரு சமயம் போன் மூலம் தன் பெயர் எழுத சொன்னாறோ….என்ற எண்ணத்தையும் அந்த எழுத்தின் தன்மை அது எழுதி ஆண்டு கணக்கில் ஆகியிருக்கும் என்று கருத வைத்தது.

இவள் யோசனை போகும் போக்கை நினைத்து தன்னையே திட்டிக் கொண்டாள்.பாவம் அவர் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை அதைப்பற்றி யோசிக்காமல் என்ன இது என்று கேட்டை தாண்டி இன்னுமா வீடு வரவில்லை என்று பிரதாப்பை பார்த்தாள்.

பிரதாப் அவளையே பார்த்திருப்பதை பார்த்த பத்மினி அவன் கையை பற்றி “ ஒன்றும் இருக்காது பிரதாப் “என்று ஆறுதல் கூறினாள்.அவள் கையை தன் கையால் இருக்க ஒரு முறை பற்றி எடுப்பதற்க்கும் கார் நிற்பதற்கும் சரியாக இருந்தது.

காரை விட்டு இறங்கிய பிரதாப் வாசலை விட்டு வந்துக் கொண்டிருந்த தன் தந்தையை பார்த்து ஆழமூச்செடுத்து …. அந்த பக்கத்தில் இருந்து இறங்கிய பத்மினியை அழமாக நோக்கினான்.

பிரதாப் அருகில் வந்த தீனதயாளன் பிரதாப்பை விட்டு பத்மினியிடம் விரைந்து வந்து அவளை அணைத்துக் கொண்டார்.பத்மினிக்கு யார் இவர் என்று கேட்க பிரதாப் பக்கம் திரும்பினால் அவன் அவள் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை.

என்னதான் அவர் பெரியவராக இருந்தாலும் அவர் அணைத்ததும் சங்கடத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டு அவரை பார்த்தாள்.தீனதயாளன் “வாம்மா….வா உன் பாட்டியை வந்து பார்.உன்னை பார்த்தால் அவள் சந்தோஷப்படுவாள்.நீ அப்படியே….சாந்தி மாதிரியே இருக்கேம்மா…” என்று கூறிக் கொண்டே அவள் கையை பிடித்து அவரே அழைத்துச் சென்றார்.


அப்போதும் பத்மினி பிரதாப்பை நோக்க அவன் இவள் பக்கம் திரும்பாமலேயே ஒரு அறையை நோக்கி விரைந்தான்.தன் கை பற்றி அழைத்து சென்றவரும் அந்த அறைக்கே அழைத்து சென்று அங்கு படுக்கையில் இருக்கும் ஒரு அம்மாவிடம் அருகில் சென்று “பத்தூ பார் யார் வந்து இருக்காங்கன்னு நம்ம பேத்தி வந்து இருக்கா…”என்ற பேச்சில் சட்டென்று கண்ணை திறந்து “வந்துட்டியாமா என் ராசாத்தி அய்யோ ஏங்க பார்க்க அப்படியே…. நம்ம பொண்ணு போலவே இருக்கா…”என்ற பேச்சில் அரைமயக்கத்துக்கு சென்றாள் என்றால் ….பிரதாப் “அம்மா டென்ஷன் ஆகாதீங்க உங்கள் பேத்தி இனி மேல் உங்கள் கூடவே தான் இருப்பாள்” என்ற பேச்சில் பத்மினி முழு மயக்கத்துக்கு சென்றாள்.
Padmini vs Padmini sabaash சரியான போட்டி
 
Top