Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 2

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் - 2

தன் நிலையை மறந்தது, சில நிமிடங்களே. அடுத்த கணமே தன் தாயின் நிலை உணர்ந்து “அம்மா” என்று ஆதாரவாக அவர் தோளில் கைப்போட்டு அணைத்துக்கொண்டான். தன் தோளில் தன் மகன் கைப்பட்டவுடன் தன்நிலை உணர்ந்த பத்மினி மகன் முகத்தை பார்த்தார். (ஆம் பிரதாப்பின் தாயின் பெயரும் பத்மினியே.)

தன் தாயின் கவலைதோய்ந்த முகத்தை கண்டதும் வேதனை அடைந்தான்! தொழிலில் எவ்வளவு வெற்றியை அடைந்தும் வீட்டில் மகிழ்ச்சியை கொண்டு வரமுடியவில்லையே, என்று நினைத்துக்கொண்டே அம்மா என்று அழைப்பதற்க்குள் “கண்ணா, கண்ணா அவுங்க… அவுங்க கேசவன் தானே பக்கத்துல, பக்கத்துல நம்ம சாந்தி மாதிரியே…

ஆனால் சின்ன வயசா இருக்கேப்பா அப்போ இந்த பொண்ணு நம்ம சாந்தி பொண்ணா? பெயர் கூட பத்மினின்னு!! கண்ணா நான் உடனே என் பொண்ணு பேத்தியை பாக்கணும்”.

“பாக்கலாம் கண்டிப்பா பார்க்கலாம். ஆனால் அதுக்கு எனக்கு ஒரு சிக்ஸ் மன்த் டைம் வேண்டும்” என்ற மகனை, “ஏன் கண்ணா பிஸ்னஸில் உடனுக்கு உடன் தீர்வு காணும் நீயா, அம்மாவுடைய ஆசையை நிறை வேற்றுவதற்க்கு ஆறு மாதம் அவகாசம் கேட்கிறாய்! இருபத்தியோரு வருஷம் நான் காத்திருந்தது போதாதா?” என்ற தாயை பார்த்து சிரித்துக் கொண்டே “அம்மா பாத்திங்களா பொண்ணு, பேத்தியை, பார்த்ததும் உங்கள் மகனையே திட்ட ஆரம்பித்து விட்டிங்களே, நான் கேட்கிறதுக்கு முதலில் பதில் சொல்லுங்க உங்க பெண்ணும் பேத்தியையும் அப்ப, அப்ப பார்த்தா போதுமா? இல்லை நிரந்தரமா இங்கேயே இருக்கணுமா? சொல்லுங்க”.

“என்னப்பா சொல்ல வர நீ சொல்றது எனக்கு புரியலையே…”

“அம்மா நான் கேட்டதுக்கு முதல்லே பதில் சொல்லுங்க.” என்ற மகனை கண்ணில் வழியும் நீருடன் , “நான் பிறந்ததே பெரிய செல்வந்தர் வீட்டில் தான். கல்யாணமும் அப்படிதான் அதுவும் உங்க அப்பா என்ன ரொம்ப மகிழ்ச்சியா வைத்துக்கொண்டார். அதுவும் கல்யாணத்துக்கு பிறகு தொழிலில் அவர் தொட்டதெல்லாம் பொன்னாச்சு. இந்த டெல்லியில் உங்க அப்பாவை தெரியாதவங்களே யாருமில்லை. ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் நான் அனுபவிச்சேன். யாரு கண் பட்டுதோ தெரியவில்லை. இருபத்தியோரு வருஷமா… மனதில் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன்.

நீ மட்டும் அவங்க இரண்டு பேரையும் நிரந்தரமா இங்கேயே கொண்டு வந்தால் முதலில் நான் அனுபவித்த சந்தோஷம், இந்த சந்தோஷத்துக்கு முன்னாடி, வார்த்தையாலே சொல்ல முடியல கண்ணா.” என்ற தாயை பார்த்து “அம்மா கவலையை விடுங்க உங்க சந்தோஷத்தை கண்டிப்பா…. உங்க கிட்ட கொண்டு வந்து சேர்ப்பேன்.” என்று வெளியிலும், மனதில் உங்க இருபத்தியோரு வருஷம் கஷ்டத்தை அவங்களுக்கு திருப்பிக் கொடுக்காமல் விடமாட்டேன் என்று மனதினுள் எண்ணிக்கொண்டான்.

இவை அனைத்தையும், மாடிப் படிக்கட்டிலிருந்து கேட்டுக்கொண்டுருந்த பிரதாப்பின் தந்தை தீனதயாளன். தன் மகன் முகத்தையே பார்த்துக்கொண்டு படிக்கட்டிலிருந்து இறங்கிக் கொண்டே, “என்ன பிரதாப்?“ என்று கேட்டுக் கொண்டே தன் மகனின் தோளில் கைப்போட்டு மகனின் முகத்தை பார்த்தார்.

அவர் பார்வையிலேயே அனைத்தையும் கேட்டிருக்கிறார் என்று அறிந்து கொண்டு உடனடியாக தன் முகபாவத்தை மாற்றிக்கொண்டான். ஏன் என்றால், அவர் பிரதாப்பின் தந்தையாயிற்றே! தன் முகமாறுதலை வைத்தே தன் எண்ணப்போக்கை கண்டுகொள்வார் என்று தெரியும்.

ஆனால் பாவம் மகனுக்குத்தான் தெரியவில்லை. தன் முகமாறுதலுக்கு முன்பே தன்னை அப்பா கண்டுக் கொண்டார் என்று. கணவர் குரலை கேட்டவுடன் “என்னங்க.. என்னங்க… டிவியில் நம்ம, நம்ம பொண்ணு“ என்று உணர்ச்சி மிகுதியில் வார்த்தை வராமல் அவரின் தோள் சாய்ந்தார்.

“பத்தூ நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன், நீ எதுவும் சொல்ல வேண்டாம். கவலைப்படாதே, இதுவரை அவர்கள் எங்கே இருக்காங்கனு தெரியாம இருந்தது. ஆனால் இப்போ சென்னையிலே இருக்காங்கன்னு தெரிஞ்சிடுச்சு. நாங்க கண்டிப்பா நம்ம பெண் பேத்தியை, கூட்டிட்டு வருவோம். நீ வீனா கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். போய் ரெஸ்ட்டு எடு, அவுங்க வந்தா கவனிக்க உன் உடம்பில் தெம்பு வேணுமில்லே” என்ற சொல்லுக்கு பயன் இருந்தது.

“நீங்க சொல்வதும் சரிதாங்க. நான் போய் லஷ்மிகிட்டே சமையல் பத்தி சொல்லிட்டு என் ரூம்லே போய் ரெஸ்ட்டு எடுத்துக்கொள்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டே தன் வயதையும் பொருட்படுத்தாமல் விரைந்தார்.

மனைவி செல்வதை பார்த்து விட்டு தன் பார்வையை மகனிடம் செலுத்தினார் தீனதயாளன். “பிரதாப் உன் மனதில் என்ன ஓடுது?” என்ற தந்தையின் கேள்விக்கு “என்னப்பா கேக்கறிங்க? எனக்கு புரியலையே.” என்றான் மகன்.

அதற்க்கு பதிலாய் “பிரதாப் நான் உன் அப்பா! அம்மா கிடையாது. நீ என்ன சொன்னாலும் நம்புவதற்க்கு. அவங்க இருவரையும் நிரந்தரமாக கொண்டு வரப்போவதாக உன் அம்மாவிடம் சொன்னவுடனே, நீ உன் மனதிலே ஏதோ ப்ளான் போட்டுட்டேன்னு தெரிஞ்சிடுச்சு. அம்மா இப்போதுதான் சந்தோஷமாயிருக்கா அதை அழித்துவிடாதே. அவ்வளவுதான் நான் சொல்வது”. மகனிடம் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.

செல்லும் தன் தந்தையை யோசனையுடன் பார்த்திருந்தான். அவன் கவனத்தை செல்போன் சத்தம் கலைத்தது. செல்லை காதில் வைத்துக்கொண்டே “சொல்லு அசோக்” என்று பேசிக் கொண்டே மாடியேறினான்.

தன் ரூமுக்கு வந்தவுடன் கவனமாக டோர் லாக்செய்தான். “அசோக் இப்போ நான் சொல்வதை கவனமாக கேள். இன்னிக்கு ******* டிவி சேனலில் 6.30க்கு ஒரு ப்ரோகிராம் ஒளிப்பரப்பாச்சு. அதோட காப்பி எனக்கு வேண்டும். இந்த விஷயம் பத்தி எங்க பேமிலிக்கு எதுவும் நீ சொல்ல கூடாது”.

“ஏன் ப்ரோ அப்படி சொல்றீங்க??”. அசோக் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் பிரதாப்பை அப்படி தான் அழைப்பான். அவர்கள் சிறு வயது முதலே ஒன்றாக படித்தவர்கள். பிரதாப் வீட்டின் கார் டிரைவரின் மகன் தான் அசோக். பிரதாப்பின் தந்தை அசோக்கையும் பிரதாப் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்தார்.

கல்லூரியும் ஒன்றாகவே படித்தனர். பின்பு பிரதாப் மேல் படிப்புக்கு வெளிநாடுக்கு சென்று விட அசோக்கின் அப்பா இறந்து விட்டார்.பின் அசோக் பிரதாப்பின் தந்தை தீனதயாளனிடமே வேலை பார்த்தான். பிரதாப் தன்னுடனே மேல் படிப்புக்கு வெளிநாட்டுக்கு அழைத்தும் அவன் செல்லவில்லை.

“ஏன் ப்ரோ வீட்டுக்கு தெரியக்கூடாதுன்னு சொல்றே” என்ற அசோக்கின் கேள்விக்கு, “ஏன்னா? இது ஆபிஸ் விஷயம் இல்லை. பர்சனல் விஷயம்… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலையை முடி.” என்று கட்டளையிட்டான்.

“யெஸ் ப்ரோ. வேலையின்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரன்னு உங்களுக்கு தெரியாதா”.

“இந்த வாய் பேசுவதை விட்டுட்டு சீக்கிரம் நான் சொன்ன வேலையை முடிக்க பார்”. பிரதாப்பின் இந்த குரலிலேயே விஷயம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்த அசோக்.

“சரி ப்ரோ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த காப்பியை கொண்டு வர பார்க்கிறேன்”. இது தான் அசோக். எவ்வளவுக்கு எவ்வளவு விளையாட்டு பேச்சு இருந்தாலும் பிரதாப்பின் குரலை வைத்தே சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல் படுவான்.

அசோக்கிடம் பேசிவிட்டு கட்டிலின் மேல் அமர்ந்துக்கொண்டு தலையணையில் தலை சாய்த்தான். தான் என்ன மாதிரி உணர்கிறோம், என்பதையே வரையறுக்க முடியவில்லை.

டிவி நிகழ்ச்சி கண்டதிலிருந்து பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகியிருந்தான். ஒருபுறம் தென்றல் சாமரசம் வீசுவது போல் அமைதி, அதே சமயம் மறுப்புறம் சீற்றம் உள்ளடக்கிய கொந்தளிப்பு. இரு வேறுமனநிலையில் இருந்தான்.

அவன் இந்த மனநிலையிலிருக்கும் போதே அசோக்கிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. மனதினில் பையன் வேலையின்னு வந்துட்டா வெள்ளகாரன்தாண்டா, என்று நினைத்துக்கொண்டே, ”சொல்லு அசோக்” என்றான். “உங்க இமெயில் ஓப்பன் செய்து பாருங்க ப்ரோ” என்று சுருக்கமாக முடித்தான் அசோக்.

தன்னுடைய சிஸ்டமை ஒப்பன் செய்து தன் பார்வையை அதனில் பதித்தான். சிறிது நேரதுக்கு முன் தென்றல், புயல், என்று புரியாத கேள்விக்கு பதில் கிடைத்தது போல் இருந்தது.

திரையில் இருக்கும் முகத்தையே பார்த்திருந்தான். மற்ற பெண்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தாள். பிரதாப் பெண்களை அறியாதவன் இல்லை. மேக்கப் இல்லாமலும் ஒரு பெண் இவ்வளவு அழகாக இருக்க முடியும், என்று இன்று தான் அறிந்துக்கொண்டான். புருவத்தைக்கூட சீர்த்திருத்த வில்லை. இவன் பார்த்த பெண்கள் எல்லாம் ஒரு நாலு இன்ச்சுக்கு முகத்தில் கண்டிப்பா பட்டி பாத்துட்டுதான் வெளியிலேயே வருவார்கள்.

ஏன் என்றால் இவனிடம் பழகும் பெண்கள் இவனின் பணம் மற்றும் இவனிடம் பழகுவது, சமூகத்தில் கவுரவமாகவும் கருதுபவர்களே. சில பெண்கள் அவனிடம் பழகினால் பெரிய மாடல் ஆகலாம் என்ற சுயநலத்துக்காகவும் பழகினர். இப்படிப்பட்ட பெண்கள் எப்படி இருப்பார்கள்? இவ்வளவு விளையாட்டிலும் தொழிலில் அவனை மிஞ்ச யாரும் இல்லை.

இவன் பெண்களை தேடிசெல்லமாட்டன். தன்னிடம் மயங்கும் பெண்களிடம் கண்ணியமும் காக்கமாட்டான். இந்த பழக்கத்திலிருந்து பிரதாப்பை விடுவிக்க அசோக் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும் பயன் இல்லை!

வேலை முடிந்து மாலை நைட்டு பப்புக்கு பிரதாப்புடனே அவனும் செல்வான். பயன் இவன் பின்னாடியும் இரண்டு பொண்ணு சுத்துனதுதான் மிச்சம். இது ஏதுடா வம்புன்னு பின் அந்த முயற்சியை விட்டுட்டான்.

அதுவும் இல்லாம இது மாதிரி இடத்துக்கெல்லாம் இரண்டு பேரும் ஒன்னாப்போன்னா அவனா நீன்னு எல்லாரும் கேக்கிறாங்கடான்னு பிரதாப்பும் சொல்லிவிட்டதால், அவன் கூட செல்வதை நிறுத்தி விட்டான்.

மேலும் என்னாதான் நண்பர்கள் மாதிரி பழகினாலும் அவனிடம் வேலைபார்த்துக் கொண்டு இதற்க்கு மேல் அவனாலும் கண்டிக்க முடியவில்லை.

பிரதாப்புக்கு இமெயில் அனுப்பி விட்ட அசோக் என்னத்துக்கு இவ்வளவு அவசரமாகவும், பதட்டமாகவும், அனுப்ப சொன்னான்? அப்படி அதுலே என்ன இருக்கிறது என்று தானும் பார்த்தான்.

பார்த்தவன் உடனே பிரதாப்புக்கு அழைத்து ப்ரோ என்ன? நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அதுலே ஒரு பெண்ணோட பேட்டி இருக்கு. இதையேன் அவ்வளவு பதட்டமாகவும், அவசரமாகவும் அனுப்பச் சொன்னிங்க?” என்ற கேள்விக்கு ஒரு மர்மமான புன்னகையையே பதிலாக அளித்தான்.

அவன் பதில் அளித்தாலாவது சாதாரண விஷயம் என்று விட்டுருப்பான். இந்த மர்மப் புன்னகையே அவனைப் பற்றி சிறு வயது முதல் அறிந்திருந்ததால், அவனுக்கு மிகவும் பதட்டத்தை அளித்தது.

திரும்பவும் கணினியில் பார்வையை பதித்தான். அந்த குழந்தைத்தனமான முகத்தை பார்த்துக் கொண்டே பிரதாப் பழகும் பெண்களுக்கும், கணினியில் இருக்கும் பெண்ணுக்கும், ஒரு சம்பந்தமும் இல்லையே.

அதுவும் இது வரை எந்த பெண்ணையையும் இவன் தேடி சென்றதும் இல்லையே என்ற தன் சிந்தனையை தடை செய்த “அந்த பெண் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று ஒட்டாத தன்மையில் கேள்வி எழுப்பினான்.

அசோக்கின் கேள்வியின் மாறுப்பாட்டால், அவன் எண்ணப்போக்கை உணர்ந்த பிராதாப் “போதும்டா உன் கற்பனை குதிரையை கொஞ்சம் இழுத்து பிடி. நீ தான் ரொம்ப நாளா சொல்லிட்டியிருந்தியே, இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுட்டு லைப்லே செட்டில் ஆகுன்னு சரி இந்த பொண்ணு என் அளவுக்கு இல்லனாலும் ஏதோ சுமாரா இருக்கே பார்க்களான்னு நினைத்தேன்.” என்ற நண்பனின் பதிலில் அவனுக்கு பேச்சே எழவில்லை.

“ப்ரோ இந்த பொண்னு உங்களுக்கு அவ்வளவு பிடிச்சி இருக்கா?” என்ற கேள்விக்கு, “இல்லை பக்கத்துள்ள நிக்கிறாறே அவள் அப்பா, அவர் தன் பொண்ணோட பதிலில் அவர் முகத்தில் வந்து போச்சு பாரு கர்வம். அந்த கர்வத்தை அழிக்கணும்.

எங்க வீட்டில் இருந்து எங்க வீட்டு பெண்ணை பிரிச்சி, என்னுடைய பெற்றோர் முகத்தில் நிரந்தர கவலையை தந்து விட்டு அவர் மட்டும் அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியில் இருப்பதா? கண்டிப்பாக அவரிடம் இருந்து அவர் மனைவி, மகளை நிரந்தரமாக பிரிப்பேன்.” என்ற பிரதாப்பின் பதிலில், அசோக் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

“ப்ரோ அப்போ அந்த பொண்னு சாந்தி அக்காவோட பொண்ணா”?

“ஆம்... ஆனால் இனி மேல் அவங்களை என் அக்கான்னு சொல்லாதே. என் குடும்ப சந்தோஷத்தை அழிச்சவங்க.” என்ற பிரதாப்பின் பதிலிலேயே நண்பனின் திட்டத்தை அறிந்துக்கொண்ட அசோக், “வேண்டாம் ப்ரோ ஒரு திருமணம் காதலில் அமையவேண்டும், இல்லை அன்பிலாவது அமையவேண்டும். இரண்டும் இல்லாமல் இது மாதிரி பழி வாங்குவதற்க்காக திருமணம் செய்ய கூடாது.

அதுவுமில்லாமல் அப்பா, அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வருத்தபடுவாங்கன்னு யோசிச்சி பாரு? இது பிஸ்னஸில்லை திட்டம் போட்டு காய் நகர்த்துவதற்க்கு” என்றான் அசோக்.

“அதனால் தான் அம்மாவிடம் உண்மையை சொல்லப்போவது இல்லை. உங்க பேத்தியை டிவியில் பார்த்ததும் இப்போ நீ சொன்னியே என்ன அது? ஆ! காதல் கடலில் தொபுக்கடீர்ன்னு வீழ்ந்துட்டேன்னு சொல்லுவேன். என்ன ஒண்ணு அப்பாவை நம்பவைக்கிறது தான் கொஞ்சம் கஷ்டம் ஆனால் நம்ப வைச்சிடுவேன்.

சரி சரி போதும் இப்போ பேசி டைம் வேஸ்ட்டு பண்ண வேண்டாம். நாளைக்கு சீக்கிரம் காலையிலேயே 7.30க்கு நம்ம ஸ்டார் ஓட்டலிலேயே மீட் பண்ணலாம்”. என்று திமிர்த்தனமாக பேசி தொலைபேசியை அணைத்தான்.

இன்னும் கொஞ்ச நாளில் அவன் கிண்டலாக சொன்ன காதல் என்னும் கடலில் வீழ்ந்து, கரையேறுவதற்க்கு துடுப்பாக அவளின் கையைதான் தான் தேட போவது தெரியாமல்.

இரவு முழுவதும் தூங்காமல் அசோக்கிடம் நாளை என்னென்ன வேலையை அவன் வசம் ஒப்படைப்பது, என்று சிந்தித்து இருந்தான். சாந்தி க்ரூப் என்ற பெயரில் பெரிய ஒரு தொழில் சாம்ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தான்.

தன் திட்டப்படி சென்னையில் எப்படியும் ஒரு ஆறு மாதமாவது தங்க வேண்டியது இருக்கும். இங்கு தன் தொழிலில் எந்த பிரச்சினையும் வரவிடக்கூடாது.

அவனின் சிந்தனை முடிவதற்க்கும் பொழுது விடிவதற்க்கும் சரியாக இருந்தது. பின் ஜிம்மில் ஒரு அரை மணிநேரம் உடற்பயிர்ச்சி செய்துவிட்டு, ரெடியாகி மார்ன்னிங் பிரெக் ஃபாஸ்ட்டுக்கு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான்.

டைனிங் டேபிளில் உணவு உண்டுக்கொண்டிருந்த தன் தாய் தந்தையை பார்த்து, “குட்மார்னிங்ப்பா, குட்மார்னிங்ம்மா” என்ற வாழ்த்துக்கு தன் பெற்றோர்களின் பதில் வணக்கம் வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு உற்சாகமாக இருந்தது.

“கண்ணா எப்போதுப்பா என் பெண்ணையையும் பேத்தியையும் அழைச்சிக்கிட்டு வரப்போற?” என்று ஆவலாக தன் முகம் பார்த்துக் கேட்கும் தாய்க்காக தான் எடுத்த முடிவில் இன்னும் உறுதியாக இருந்தான். அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக காரியத்தை முடிக்க வேண்டும். என்னவோ பிஸ்னஸின் டீல் பேசி முடிப்பதுப் போல் நினைத்துக்கொண்டான்.

ஏன் என்றால் இது வரை அவன் நினைத்ததை நடத்திவிடுவான். ஆனால் இது பிஸ்னஸில்லை வாழ்க்கை, இதற்க்கு தான் மட்டுமே முடிவு எடுக்க முடியாது, அதற்க்கு மற்ற ஒருவரின் அனுமதியும் வேண்டும் என்பதை மறந்து விட்டானா? இல்லை, தேவையில்லை என்று நினைத்து விட்டானா, என்பது அவனுக்கே வெளிச்சம்.

அப்போது தான் தாய்க்கு பதில் அளிக்காதது நினைவு வந்து ஆவளுடன் தன் முகத்தையே பார்த்திருக்கும் தாய்க்கு, “கண்டிப்பா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைச்சிட்டு வரம்மா” என்று வாக்குறுதி அளித்தான். அவன் வாக்குறுதியை நிறைவேற்றுவானா? பார்க்கலாம்.
 
:love: :love: :love:

அக்கா பொண்ணு பத்மினி........ வயசு வித்தியாசம் ரொம்ப அதிகம் போலவே அக்காக்கும் தம்பிக்கும்........

அக்கா காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டது ஓகே........
இப்போ இல்லைனு தெரியலையே :cry:
அக்கா பொண்ணை நெருங்கும் போது இருக்கு பெரிய ஷாக்.......

அம்மா தான் பாவம் பொண்ணு இறந்தது கூட தெரியலையே :cry::cry::cry:

எப்படி அவனிடம் கொண்டுவர போறான்???
அசோக் வேலை விஷயத்தில் வெள்ளைக்காரன் :D:D:D
எள்ளுன்னா எண்ணெய் இல்லையா???
 
Last edited:
Top