Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 21 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----21

தீனதயாளனுக்கும்,பத்மினிக்கும், சாந்தி படிக்க சென்றவுடன்.வீடே ஒரு அமைதியில் ஆழ்ந்தது போல் இருந்தது.சாந்தி இவ்வீட்டுக்கு வந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது.அவளை விட்டு ஒரு நாளும் இருந்தது இல்லை.தீனதயாளன் பிஸ்னஸ் விஷயமாக வெளியுருக்கு சென்றாலும் நான்கு ஐந்து நாட்களுக்குள் வந்து விடுவார்.

இது மாதிரி நீண்ட நாட்களுக்கெல்லாம் பிரிந்தது கிடையாது. சாந்தி படிக்க சென்று இரண்டு வாரம் கடந்து இருந்தது.நாளை தான் அவளை பார்க்க அனைவரும் செல்கின்றனர்.தீனதயாளன்,பத்மினியோடு பிரதாப்புக்கு தான் சாந்தியின் பிரிவு மிக கடினமாக இருந்தது.

பிரதாப் அம்மா,அப்பா,இல்லாமல் கூட இருந்து விடுவான் சாந்தி இல்லாமல் இருந்ததே கிடையாது.சாந்தியின் பிரிவில் சரியாக உண்ணாமல் பாதியாக இலைத்து விட்டான் என்று கூட சொல்லலாம்.

நாளை தன் அக்காவை பார்க்க போக போகிறோம் என்று சொன்னதில் இருந்து.பிரதாப் “அம்மா அக்காவுக்கு ரவலட்டு பிடிக்கும் செய்ங்க…..தேங்காய் பருப்பி பிடிக்கும் செஞ்சுட்டிங்களா….?என்று பத்மினியை உண்டு இல்லை என்று செய்து விட்டான்.

சாந்தியும் அங்கு இதை விடமோசமாக பாதிக்க பட்டாள்.அவளுக்கு எது நடந்தாலும் தன் அம்மா,அப்பாவிடம் சொல்லி விடவேண்டும். பள்ளியை விட்டு வந்தவுடன் இன்று என்ன நடந்தது என்று தன் அம்மாவிடம் சொல்லிய பிறகே தன் ரூமுக்கு செல்வாள்.அப்படி பட்டவள் இங்கு யாரிடமும் பேசாமல் கிளாஸ் முடிந்தவுடன் நேராக தன் ரூமுக்கு சென்று விடுவாள்.யாரிடமும் பேசுவதும் இல்லை.

அவளுக்கு எப்போது ஆறு மாதம் முடியும் என்று இருந்தது.ஆம் அவள் சென்றது ஆறு மாதம் கோர்ஸ் தான். சாந்திக்கு நாளை அப்பா,அம்மா,தம்பி வருகிறார்கள் என்று சொன்னதும் அவளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.ஆனால் அவர்கள் வரும் போது நாம் இப்படி இருக்ககூடாது என்று கருதினாள்.

அவள் அங்கு சென்றதில் இருந்து துணி உடுத்துவதில் கூட நாட்டம் செல்ல வில்லை.காலையில் எழுந்து குளித்ததும்.கையில் கிடைத்ததை ஏனோ… தானோ… என்று கிடைத்ததை உடுத்தி கொள்வாள்.

சாப்பாடும் அப்படி தான் தட்டில் எண்ண போடுகிறார்கள் என்று கூட பார்க்காமல் போடுவதை சாப்பிட்டு விட்டு செல்வாள்.அதனால் அவர்கள் வரும் போது குளித்து விட்டு நல்ல உடையை உடுத்திக் கொண்டாள்.

அவர்களை வரவேற்க வெளியே கார்டனில் காத்திருக்கும் போது தான் முதன் முதலில் கேசவமூர்த்தியை பார்த்தாள்.அங்கு கேசவமூர்த்தி ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தார்.கேசவமூர்த்தியும் சாந்தி எடுத்த கோர்ஸை தான் படிக்க வந்திருந்தார்.அவர் எம்.பி.ஏ முடிக்கும் தருவாயில் தான் கேசவமூர்த்தியின் தந்தை இறந்தார்.அவர் தந்தையும் ஒட்டலை தான் நடத்திக் கொண்டிருந்தார்.

தந்தை இறந்த பிறகு ஒட்டலை கேசவமூர்த்தி நடத்தினார்.அவருக்கு துவரம் பருப்புக்கும்.கள்ளபருப்புக்கு கூட வித்தியாசம் தெரியாது.அதனால் பேசிக்காவது தெரியவேண்டும் என்பதற்காக தான் இந்த கோர்ஸை படிக்க வந்தார். கேசவமூர்த்தியின் வீடு அங்கையே இருந்ததால் விடுதியில் தங்காமல் வீட்டில் இருந்துக் கொண்டே படித்தார்.

கேசவமூர்த்தி தன் நண்பனிடம் பேசிக்கொண்டே சாந்தியை பார்த்தார்.சாந்தி முதலில் கேசவமூர்த்தியை எதேச்சையாக பார்த்ததோடு சரி.பின் வீதியே தான் பார்த்திருந்தாள் தன் வீட்டினருக்காக. சாந்தியின் அமைதி தவழும் முகத்தை பார்த்த கேசவமூர்த்திக்கு பார்த்தவுடன் பிடித்து விட்டது.

கேசவமூர்த்தி யாருக்காக இவள் இப்படி இவ்வளவு நேரமாக காத்திருக்கிறாள்….?என்ற யோசனையில் தன் நண்பனை பேசி அனுப்பி விட்டு .இவள் யாருக்காக காத்திருக்கிறாள் என்று தெரிந்துக் கொள்வதற்க்காக இவனும் காத்திருந்தான்.

அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் சாந்தியை பார்த்து கேட்க கூடாத வார்த்தையை சொல்லி அவளை கிண்டல் செய்தனர்.சாந்திக்கு அவ்வார்த்தையை கேட்டதும் எதுவும் பேச தோன்றவில்லை அழுகை தான் வந்தது. தெரு என்றும் பாராமல் அழுக ஆராம்பித்து விட்டாள்.

கேசவமூர்த்திக்கு மூன்று பேர் பேசும் வார்த்தையை கேட்டதும் ஆவேசத்துடன் அவர்களை அடிக்கவே ஆரம்பித்திருந்தார்.மூன்று பேரை தனி ஒருவனாக சமாளிப்பது கேசவமூர்த்திக்கு கஷ்டமாக இருந்தது.சாந்திக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை.

அவளுக்கு இது வரைக்கும் இது மாதிரி சூழ்நிலையை அவள் எதிர் கொண்டதே இல்லை.வீட்டில் இருந்து காரில் தான் செல்வாள்.அது போல் வருவதும் காரில் தான்.கார் டிரைவரும் சாந்தியின் சிறு வயது முதலே அவள் வீட்டில் டிரைவராக இருப்பதால் சாந்தியை மகள் போல் பத்திரமாக பார்த்துக் கொள்வார்.

அப்படிப்பட்ட பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்ந்த சாந்திக்கு இப்பேச்சும்…. தனக்காக ஒருவர் மூன்று பேருடன் சண்டையிடுவதையும் பார்த்த போது முதலில் ஒன்றும் புரியவில்லை.பின் தனக்காக சண்டையிடுபவரை அவர்கள் அடிப்பதை பார்த்ததும் சாந்தி அவர்களை தடுக்க அருகில் சென்றாள்.

கேசவமூர்த்திக்கு அவள் அருகில் வருவதை பார்த்ததும். அவள் பெயர் தெரியததால் “பொண்ணு வேண்டாம் போ “என்று கத்தினான்.அவனுக்கு அவளை பார்த்து அசிங்கமாக பேசியதையே …ஜிரணித்துக் கொள்ள முடியவில்லை. அவள் அருகில் வந்து இவர்கள் ஏதாவது ...நினைக்கவே முடியவில்லை.

கேசவமூர்த்தி வாரேதே சொல்லியும் அவள் அருகில் சென்றாள்.அவள் அருகில் செல்வதுக்கும் அவள் வீட்டு கார் அவள் அருகில் வந்து நிற்பதற்க்கும் சரியாக இருந்தது.சாந்தி தன் பெற்றவர்களை பார்த்ததும். “அப்பா..அப்பா...என்று அழுதுக் கொண்டே தந்தையிடம் அப்பா அவரை அடிக்கிறார்கள் தடுங்கள்” என்று சொல்லியவாறு திரும்பவும் சாந்தி அவர்கள் அருகில் செல்ல முயன்றாள்.

சாந்தியின் செயலை பார்த்த தீனதயாளன் சட்டென்று சாந்தயை இழுத்தவாறு டிரைவரிடம் “முத்து போய் அந்த பையன்னை பாருங்கள் என்று கூறியவாறு.சாந்தியை பத்மினியிடம் ஒப்படைத்து.அவரும் கேசவமூர்த்தியிடம் சென்றார்.

தீனதயாளனும் வருவதை பார்த்த அந்த மூன்று பேரும் ஒடி விட்டனர்.பின் தீனதயாளன் கேசவமூர்த்தியிடன் சென்று கை குடுத்து தூக்கிவிட்டார்.கேசவமூர்த்தியும் எழுந்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார்.அவர்களையே பார்த்திருந்த சாந்தியை அருகில் அழைத்த தீனதயாளன் சாந்தியிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்க்கு ஒன்றும் சொல்லாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.

தந்தையே என்றாலும் அவர்கள் பேசிய வார்தையை கூறுவதற்க்கு கூசியது.சாந்தியின் நிலையை புரிந்துக் கொண்ட கேசவமூர்த்தி விடுங்க சார்…..என்று தடுத்து நிறுத்தினார்.சாந்தியின் தலை குனிவும் கேசவமூர்த்தியின் பேச்சை மாற்றும் முயற்ச்சியையும் பார்த்த தீனதயாளன் அவர்கள் தன் மகளிடம் ஏதோ கேட்க கூடாத வார்த்தையை தான் கேட்டிருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்ட தீனதயாளனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

கேசவமூர்த்தியிடம் “ அவர்கள் யார்…? உங்களுக்கு அவர்களை தெரியுமா…?” என்று கேள்வி எழுப்பினார். தீனதயாளனின் கோபத்தை புரிந்துக் கொண்ட கேசவமூர்த்தி “விடுங்க அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.அவர்களை நீங்கள் ஏதாவது செய்தால் பின் பெரிய பிரச்சினையாகி உங்கள் மகளின் பெயர் வெளியில் வரும் படி ஆகிவிடும்.”என்று கூறியதற்க்கு.

“நீங்கள் செய்தால் என் மகள் பெயர் வெளியில் வராதா என்றதற்கு…”நான் செய்தால் அது ஸ்டுடண்ட் சண்டை என்று ஆகிவிடும்.” என்ற கேசவமூர்த்தியின் பதிலில் அப்போ அவுங்க ஸ்டுடண்டுங்களா….என்று இழுத்தவாறு நிறுத்தினார்.

அவர் இழுப்பிலேயே தன் மகளை தொடர்ந்து இங்கு படிக்க வைப்பதற்க்கு பயப்படுகிறார் என்று புரிந்துக் கொண்ட கேசவமூர்த்தி “வெளியில் வந்து விட்டால் பலதும் தான் இருக்கும் இதற்க்கெல்லாம் பயந்தால் வெளியிலேயே வரமுடியாது.உங்களை பார்த்தால் சொந்தமாக தொழில் செய்பவர் போல் உள்ளது.நீங்கள் சந்திக்காத பிரச்சினைகளா…?”நிறுத்தினார்.

கேசவமூர்த்தியின் பேச்சில் இருந்த உண்மையால் அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.அவரும் இதற்க்கு தானே சாந்தியை படிக்கவே வெளியில் அனுப்பியது.இருந்தாலும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது.

இவர்கள் பேசுவதை எந்த குருக்கிடும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த பத்மினி அவர்கள் அருகில் வந்து “ தம்பி சொல்வதும் சரி தாங்க”என்று தன் கணவரிடம் கூறிய பத்மினி கேசவமூர்த்தியிடம் “எங்க சாந்தியை கொஞ்சம் பார்த்துக்கப்பா” என்று கூறினாள்.

பத்மினின் பேச்சில் கேசவமூர்த்தி அகமகிழ்ந்து போய்விட்டார்.தீனதயாளனின் தயக்கத்தை பார்த்த கேசவமூர்த்தி எங்கே சாந்தியை அழைத்து கொண்டு போய்விடுவாரோ...என்று பயந்தே போய்விட்டார்.சாந்தியை பார்த்ததுமே கேசவமூர்த்திக்கு மிகவும் பிடித்து விட்டது.அதனால் தான் அவளை கவனித்து பார்த்தது.

கேசவமூர்த்தி பத்மினியிடம் “நீங்கள் கவலை படாதீர்கள் உங்கள் மகளை நான் பத்திரமாக பார்த்து கொள்கிறேன்.” என்று கூறினார். தன் மனதுக்குள் இதே போல் திருமணம் முடிந்ததும் அவள் வீட்டில் மாப்பிள்ளையாக அவர்களிடம் கூறவேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

பத்மினியிடம் பேசியவாரே கேசவமூர்த்தி திரும்பி பார்த்தார்.அங்கு சிறு குழந்தை போல் தன் தம்பியிடம் விளையாடி கொண்டிருந்தாள்.அதனை தீனதயாளன் ஒரு வாஞ்சையோடு பார்த்திருந்ததை பார்த்த கேசவமூர்த்தி இது போல் தன் குழந்தையோடு அவள் விளையாடுவதும்.அவற்றை தான் பார்த்து ரசிப்பதுமாக கற்பனையில் ஆழ்ந்தார்.

பின் சாந்தியின் குடும்பம் மனமே இல்லாமல் விடை பெற்று சென்றது.போகும் போது பிரதாப் அவ்வளவு அடம் பிடித்தான் அவனை சமாளிப்பதுதான் பெரும்படாக இருந்தது.பின் சாந்தியின் வார்த்தைக்கு தான் கொஞ்சம் கட்டு பட்டான்.

இதனை எல்லாம் பார்த்திருந்த கேசவமூர்த்திக்கு அப்போதே ஒரு பொறமை உணர்வு ஏற்பட்டது.இது என்ன ஒரு ஆறு மாதம் கூட பிரிந்து இருக்க முடியாத …பாசம்.எப்படி இருந்தாலும் பெண் பிள்ளையை திருமணம் செய்து வேறு வீட்டுக்கு அனுப்பதானே போகிறார்கள் அப்போது என்ன செய்வார்களாம் என்று தன் மனதுக்குள் கூறிக் கொண்டான்.

பாவம் அவனுக்கு தெரியாதது சாந்தியின் இந்த ஆறு மாதம் பிரிவையே தாங்கி கொள்ள முடியவில்லை.அதனால் அவளுக்கு வீட்டோடு தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்பதையும்,அந்த முடிவை கேசவமூர்த்தி பத்மினியோடு பேசிக் கொண்டிருக்கும் போது தான் சாந்தியிடம் கூறியதும். அதற்கு சாந்தி அகமகிழ்ந்து போனதும்.

சாந்தியின் வீட்டார்கள் போயும் அவள் போகமல் தெருவிலேயே இருப்பதை பார்த்த கேசவமூர்த்தி “அவங்க இவ்வளவு நேரத்துக்கு வீட்டுக்கே போய் சேர்ந்து இருப்பாங்க.இங்கேயே நின்னுட்டு இருந்தா திரும்பவும் எதாவது பிரச்சினை வரப்போகுது உள்ளே போ” என்று கூறினார்.

கேசவமூர்த்தியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு எதுவும் சொல்லாமல் சாந்தி சென்றாள்.அவள் எதுவும் கூறாமல் சென்றது கேசவமூர்த்திக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.நாம் சொன்னதற்கு அவள் கோச்சீக்கிட்டாளோ…? என்று.ஆனால் அவள் தன் விடுதியின் உள் நுழையும் போது கேசவமூர்த்தியை திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டே மறைந்தாள்.

அதனை பார்த்த கேசவமூர்த்திக்கு சந்தோஷம் பிடி பட வில்லை.நாள் செல்ல செல்ல சாந்தி கேசவமூர்த்திக்கு மேன்மேலும் சந்தோஷத்தையே கொடுத்தாள்.ஆம் எப்போதும் கேசவமூர்த்தியை பார்த்தால் சிரிப்பது.கேசவமூர்த்தி பேசினால் பேசுவது என்று அவர்கள் உறவு முறை வளர்ந்தது.

நாளை தான் அவர்களின் கோர்ஸின் கடைசி நாள். கேசவமூர்த்திக்கு சாந்தியின் பழக்கத்தில் இருந்து அவளும் தன்னை விரும்புகிறாள் என்பதனை அறிந்துக் கொண்டார்.அதனால் இன்று தன் விருப்பத்தை தெரிவித்து விடவேண்டும் என்று கருதினார்.அதனால் மாலை பக்கத்தில் உள்ள ஒரு பூங்காவுக்கு சாந்தியை அழைத்து இருந்தார்.சாந்தியும் எந்த தயக்கமும் இல்லாமல் சரி என்று ஒத்துக் கொண்டாள்.இதோ தன் பக்கத்தில் சிவப்பு நிறசுடிதாரில் அவள் அழகு பன்மடங்காக தெரிந்தது.அதனை ஒரவிழியில் ரசித்தவாரே…. எந்த வெளிபூச்சும் இல்லாமல் “சாந்தி உன்னை பெண் கேட்டு எப்போது என் அம்மாவை அழைத்து கொண்டு வரட்டும்.”என்று நேரிடையாக கேட்டார்.
 
:love::love::love:

காதல் வந்துடுச்சா???
வீட்டோடு மாப்பிள்ளைக்கு சம்மதிப்பாரா கேசவமூர்த்தி???
 
Last edited:
Top