Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 21 2

Advertisement

Admin

Admin
Member
அதற்க்கு சாந்தியிடம் இருந்து ஒரு நிமிடம் வரை எந்த பதிலும் இல்லை.அந்த ஒரு நிமிடத்தில் கேசவமூர்த்தியின் ஆர்ட் பீட் கன்டமேனிக்கு எகிறியது.அவனுக்கு நிச்சயம் அவளும் தன்னை விரும்புகிறாள் என்று.பின் ஏன் இந்த மௌனம் என்று தான் புரியவில்லை.

பின் சாந்தி கேசவமூர்த்தியின் புரம் திரும்பி “நான் உங்களை தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்.எனக்கு உங்களை பிடிக்கும் என்றோ…. இல்லை விரும்புகிறேன் என்றோ… அந்த சிறு சொல்லில் உங்கள் மீதான என் விருப்பத்தை கூறயியலுமா என்று தெரியவில்லை.”என்று நிறுத்தினாள்.

சாந்தியின் பேச்சை கேட்ட கேசவமூர்த்திக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.ஒருவர் விரும்புவதோடு விரும்பபடுதல் எவ்வளவு சந்தோஷத்தையும் பெருமையும் கொடுக்கும் என்று உணர்வு பூர்வமாக உணர்ந்தான்.

“சாந்தி அப்போ என் அம்மாவை நான் எப்போ அனுப்பட்டும்.”என்ற கேசவமூர்த்தியின் கேள்விக்கு ,கேசவமூர்த்தியிடம். “உங்கள் அம்மாவுக்கு நீங்கள் ஒரு பிள்ளை தானே…”என்று சம்மந்தமே இல்லாமல் பேசிய சாந்தியை பார்த்து என்ன பிரச்சினை சாந்தி எது இருந்தாலும் நேரிடையாக சொல்.

“எனக்கு வீட்டோடு தான் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.”என்று கூறி கேசவமூர்த்தியைய் பார்த்தாள்.கேசவமூர்த்தி எதுவும் பேசாமல் சாந்தியே பேசட்டும் என்று அமைதி காத்தார்.

“நான் அவர்களின் சொந்த மகள் கிடையாது.அவர்களின் தத்து மகள் தான்.ஆனால் இந்த விஷயம் எனக்கு தெரியும் என்று அவர்களுக்கு தெரியாது.என்னுடைய பதினைந்தாவது பிறந்த நாளும்,என் தம்பி பிரதாப்பின் ஐந்தாவது பிறந்த நாளும் அன்று தான்.என் பிறந்த நாள் என்பது அவர்களுக்கு நான் எப்போது கிடைத்தேனோ… அன்று தான் கொண்டாடுகிறார்கள் என்று எனக்கு பின்பு தான் தெரியவந்தது. என் பிறந்த நாளுக்கு என் அப்பா,எனக்கு ஒரு வைரநெக்லஸ் பரிசளித்தார்.என் தம்பிக்கு ஒரு விளையாட்டு காரை பரிசளித்தார்.அப்போது என் அத்தை அப்பாவின் அறையில் நான் பாத்ரூமில் இருப்பது தெரியாமல் எங்கிருந்தோ… வந்த தத்து மகளுக்கு வைரநெக்லஸ் சொந்த மகனுக்கு பிளாஸ்ட்டிக் கார் என்று என் அப்பாவிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்.அதற்க்கு என் அப்பா அத்தையிடம் சாந்திக்கு இந்த விஷயம் தெரிந்தது நான் சும்மா இருக்க மாட்டேன்.பிறகு அக்கா,தம்பி என்ற உறவே அறந்து போயிடும் என்று சத்தம் இட்டார்.அதற்க்கு பிறகு அவர்கள் அறையை விட்டு சென்றவுடன் தான் நான் வெளியில் வந்தேன். முதலில் எனக்கு மிக வருத்தமாக இருந்தது.பின் தான் யோசித்தேன் அவர்களுக்கு எனக்கு இந்த விஷயம் தெரியும் என்று தெரிந்தாள் கவலை படுவார்கள் அதனால் எனக்கு தெரியும் என்பதை மறைத்து விட்டேன்.”என்று தன் பேச்சை முடித்தாள்.

கேசவமூர்த்தி சாந்தியிடம் “நீ தத்து மகளுக்கும் வீட்டோடு மாப்பிளை ஆவாதற்க்கும் என்ன சம்பந்தம்”என்று கேட்டதற்க்கு “அவர்கள் விருப்பம் தான் என் விருப்பமும் என் அம்மா,அப்பா,கவலை படுவதை நான் விரும்ப மாட்டேன். மேலும் என் தம்பி என்னை பிரிந்து இருக்க மாட்டான்.நீங்கள் வீட்டோடு மாப்பிளையாக வருவதாக இருந்தாள் உங்கள் அம்மாவை அனுப்புங்கள்.”என்று இழுத்தவாறு நிறுத்தினாள்.

அதற்க்கு கேசவமூர்த்தி சாந்தியிடம் “இல்லை என்றால் நீ வீட்டில் பார்க்கும் வீட்டோடு மாப்பிள்ளையை…”என்ற கேசவமூர்த்தியின் வார்த்தையை முடிக்கவிடவில்லை.

“என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறிர்கள்.சட்டென்று என் மனதை மாற்றிக் கொள்வேன் என்றா...?உங்களை தவிர வேறு ஒருவரை கண்டிப்பாக நான் மனதால் கூட நினைக்க மாட்டேன்.பின் எப்படி திருமணம் செய்துக் கொள்வேன்.நான் இப்படியே எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டும் என் தம்பியை வளர்ப்பதிலும் இருந்து விடுவேன்.”என்று ஆவேசமாக கூறினாள்.

கேசவமூர்த்தி எதையோ அமைதியாக யோசித்தார் பின் “நான் நாளை மறுநாளே...என் அம்மாவை அனுப்புகிறேன்.என் நினைவில் நீ திருமணமனம் செய்யாமல் எல்லாம் இருக்க வேண்டாம்”என்று கூறியதற்க்கு….

“உங்கள் அம்மா ஒத்துக் கொள்வார்களா…..நீங்கள் அவர்களுக்கு ஒரே மகன் ஆயிற்றே….அதுவும் இல்லாமல் உங்கள் தந்தை வேறு சமீபத்தில் தான் இறந்ததாக சொன்னிர்கள்.” என்று ஏகப்பட்ட கேள்வியை படபடப்பாக கேட்டாள்.

அதற்க்கு நிதானமாக “அதை பற்றி நீ கவலை பாடதே நீ உன் அம்மா,அப்பா,தம்பி பிரியாமல் இருக்கிறாய் இல்லையா….எனக்கு அது தான் வேண்டும்.” என்று அழுத்தி கூறினார்.

இதை குதர்கமாக எடுத்துக் கொள்ளதா சாந்தி அகமகிழ்ந்து போனால் தனக்காக தானே தன் அம்மாவையும் விட்டு வீட்டோடு மாப்பிள்ளையாய் வரசம்மதித்தார் என்று அவருக்கு தன் மேல் எவ்வளவு காதல் என்ற என்னத்தோடு பக்கத்தில் இருக்கும் கேசவமூர்த்தியை கன்னத்தில் முத்தம் இட்டு ஒடி போனாள்.

கேசவமூர்த்திக்கு தான் காதலில் வெற்றி பெற்றோம்.ஆனால் தன்மானத்தில் படுதோல்வி தழுவினோம் என்றே கருதினான்.சாந்தியின் பதிலை திரும்பவும் யோசித்து பார்த்தான்.அவள் தன்னை பிடிக்கவில்லை என்று கூறியிருந்தாள் கூட இந்த அளவுக்கு வலித்திருக்காது என்றே….கருதினான்.

சாந்தியின் இந்த பதிலில் தன் மனம் மரண அடிவாங்கியதாகவே கருதினான்.ஆனாலும் அவளை விட எண்ணவில்லை.அந்த அளவுக்கு அவளை விரும்பினான்.தன் மனதுக்குள் ஒரு புது சபதமே….மேற்க்கொண்டான்.இன்னும் எண்ணி மூன்றே….மாதத்தில் அவளுக்கு அனைத்துக்கும் நானாகவே இருப்பேன்.நானாக மட்டுமே இருப்பேன் என்று.

பின் அதிவேகமாக காரியாம் அனைத்தும் நடந்து முடிந்தது.கேசவமூர்த்தியை தீனதயாளன் முன்பே பார்த்ததில் இருந்தே அவர் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு விட்டது.தன் மகளுக்காக மூன்று பேர் இருக்கிறார்களே….என்று கூட யோசிக்காமல் அவர்களிடம் சண்டையிட்டது வேறு அவர் மனதில் பதிந்து விட்டது.அதனால் கேசவமூர்த்தி தன் அன்னையுடன் வந்து தன் மகளை கேட்டதும் தன் மகளை தான் பார்த்தார்.அவள் முகத்தில் தெரிந்த விருப்பத்தை பார்த்த தீனதயாளன் சிறிதும் யோசிக்காமல் தன் சம்மதத்தை தெரிவித்தார்.

பின் அடுத்த மூன்று வாரத்தில் திருமணம் கோலகாலமாக நடந்தது.அப்போது சாந்தியின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியில் குடும்பமே மகிழ்ந்து போயினர்.பிரதாப் தன் அக்காவை விட்டு அங்கு இங்கு நகரவில்லை.தன் அக்காவின் மடியிலேயே தான் இருந்தான்.

தன் கடந்த காலத்தில் இருந்து நிகழ் காலத்திற்கு வந்த பாட்டி பத்மினி தன் பேத்தியி கை பிடித்து நாங்கள் சந்தோஷமாக இருந்தது அன்று தான் ராசாத்தி.திருமணத்திற்கு பிறகு மூன்று மாதம் மட்டும் தான் எங்கள் பெண் எங்களோடு இருந்தாள்.

அந்த மூன்று மாதத்தில் கூட உன் அப்பா எங்களிடம் சரியாக பேசவில்லை.வேலை முடிந்து வந்ததும் நேராக தன் ரூமுக்கு சென்று விடுவார்.சாப்பாடு கூட தன் அறையிலேயே முடித்து விடுவார்.

ஒரு நாள் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது உன் அம்மா மயங்கி வீழ்ந்தாள்.உன் தாத்தா தான் டாக்டரை அழைத்து பார்த்தார். அப்போது சாந்தி கர்ப்பமாக இருப்பதாக கூறியதும். எவ்வளவு மகிழ்ந்தோம் என்று சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை.ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் கூட நீடிக்கவில்லை.

இந்த விஷயத்தை போனில் உன் அம்மா,அப்பாவிடம் தெரியபடுத்தினாள்.கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் உன் அப்பா வந்து விட்டார்.அவர் வந்ததும் அவர்களுக்கு தனிமை கொடுத்து நாங்கள் எங்கள் அறைக்கு சென்று விட்டோம்.

சிறிது நேரத்திற்க்கெல்லாம் ஹாலில் கேட்ட சத்தத்தில் நாங்கள் வந்து பார்க்கும் போது பிரதாப் கீழே விழுந்து கிடந்தான்.உன் அப்பா கோவத்துடன் சாந்தியிடம் நீ இப்படி இருக்கும் போது அவன் உன் வயிற்றை இப்படி கட்டி பிடிக்கிறானே நம் குழந்தைக்கு எதுவும் ஆகிவிட்டால்.என்று சத்தமிட்டு கொண்டு இருந்தார்.

சின்ன வயதில் இருந்தே இது ஒரு பழக்கம்.சாந்தியும் சிறு வயதில் இப்படி தான் சந்தோஷத்தில் வயிற்றை தான் கட்டி பிடிப்பாள்.அவள் வளர்ப்பு தானே அவன் தம்பியும் அதே மாதிரி தானே இருப்பான். பின் அதுவே வினையாகவும் போனது.

பின் அடுத்த நாளே சாந்தி மாப்பிள்ளை எங்களிடம் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டனர்.எங்கு சென்றனர் என்று கூட எங்களுக்கு தெரியாது.முதலில் உன் தாத்தா இதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை.கோவத்தில் தன் அம்மாவிடம் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்று இருப்பார் என்றே...கருதினார்.

பின் மூன்று நாளுக்கு பிறகும் அவர்கள் வரவும் இல்லை ஒரு போனும் இல்லை என்றவுடன்…. நான் , உன் தாத்தா, பிரதாப் மூன்று பேரும் உன் பாட்டி வீட்டுக்கு சென்றோம்.அங்கு சென்றவுடன் தான் எங்கள் தலையில் இடியே….விழுந்தது.

உன் பாட்டி அங்கு இல்லை மூன்று நாளுக்கு முன்பே அவர் மகன் கேசவமூர்த்தி தன் மனைவியுடன் வந்து காலி செய்து அழைத்து சென்று விட்டதாக பக்கத்தில் இருப்பவர்கள் கூறினார்.பின் அது அவர்கள் சொந்த வீடு தானே என்று விசாரித்ததுக்கு ...அதனை அவர் விற்று விட்டதும்.மேலும் அவர்களுக்கு சொந்தமான ஒட்டலையும் விற்று விட்டார் என்று தெரிய வந்தது.

இதில் கொடுமை என்ன வென்றால் உன் அப்பா அந்த வீட்டையும் ஒட்டலையும் விலை பேசி அட்னான்ஸ் வாங்கி மூன்று மாதம் ஆகிவிட்டது என்று அவர்கள் கூறி கேட்டவுடன் தான் எனக்கு விளங்கியது.நம் மகளை முழுவதும் இழந்து விட்டோம் என்று.

பின் பிரதாப்பை சமாளிக்க எங்களால் முடியவில்லை.பின் அவனே மெல்ல மெல்ல மாறினான்.ஆனால் அவன் மாற்றம் தான் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.அனைவருடமும் ஒரு ஒதுக்கத்தையே…கடைபிடித்தான்.

அசோக்கிடம் மட்டும் கொஞ்சம் தாராளமாக பேசுவான்.தன் பேத்தி கைய் பிடித்து “ராசாத்தி அவன் இப்போது தான் அவன் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கிறேன்.அவன் தவறு செய்திருந்தாள்.அவனை மன்னித்து விடுமா…என்று தன் பேத்தியின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

பாட்டியின் பேச்சை கேட்ட மினி தன் தந்தையா …..இப்படி என்று அதற்க்கு மேல் சிந்திக்க கூட முடியவில்லை.மினி தன் பாட்டியிடம் “கவலை படாதிர்கள் பாட்டி நான் ஒன்றும் உங்கள் பையனை பண்ணமாட்டேன் “என்று உறுதி அளித்து தன் பாட்டியிடம் ஒய்வு எடுக்கும் படி சொல்லி விட்டு யோசனையுடன் அறையை விட்டு வெளியேறினாள்.

ஆனால் மினியே இந்த விஷயத்தில் பிரதாப்பை மன்னித்தாலும்… வெளியில் சென்ற பிரதாப்புக்கு சனி உச்ச கட்டத்தில் ஆட்சி செய்கிறது என்பதனை மாடல் மோனாவின் மூலம் தெரியவந்தது.
 
:love: :love: :love:

அப்பா செய்த தவறு புரிஞ்சுடுச்சு மினிக்கு.....

புள்ள மாமா மேல பாசமா வந்தால் மாமாவோட சனியும் சேர்ந்து வரும் போல......
 
Last edited:
Top