Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 26

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---26
அவ்விடத்தில் ஜோடி இல்லாத வாசு மெல்ல அசோக்கின் காதில் “ ஷாலினியின் அக்கா பெயர் என்னடா…”என்று விசாரித்தான்.

அசோக் வாசுவிடம் “இப்போ பெயர் தெரிஞ்சு என்ன செய்ய போகிறாய் முனியம்மா என்ற பெயர் இருந்தாலும்.அவள் தான் உன் மனைவி அதில் எந்த மாற்றமும் இல்லை.”என்று தன் வேலையை மீண்டும் தொடர்ந்தான்.

வாசு மீண்டும் அசோக்கின் கையய் சுரன்டினான். “இப்போ உனக்கு என்ன தான்டா பிரச்சினை ஷாலினியை காமித்து அவள் வந்து இரண்டு நாள் ஆகுது.ஆனால் அவளிடம் தொடர்ந்தால் போல் ஒரு அரை மணி நேரம் தனியாக பேசமுடியலை.”என்று கடுப்புடன் கூறினான்.

இவர்கள் பேச்சை கேட்ட மினி ஷாலினி சேர்ந்தார் போல் சிரித்தனர்.இவற்றை பார்த்த பிரதாப் காலையில் சென்ற போது மினியின் முகம் இருந்ததை விட இப்போது ஏதோ மாற்றம் தெரிந்தது.தனிமையில் அவளிடம் பேச காத்துக் கொண்டிருந்தான்.

பின் ஷாலினி வாசுவிடம் “மாமா அக்கா பெயர் மாலினி “என்று கூறி தன் செல் போனில் உள்ள அவள் போட்டோவையும் காட்டினான்.

அதனை பார்த்த வாசு ஷாலினியிடம் “மாலினி பெயர் நன்றாக இருக்கு பார்ப்பதற்கும் உன்னை போவவே அழகாக இருக்கிறாள்.”என்று கூறி அசோக்கை பார்த்து சிரித்தான்.

பின் என்ன அவர் அவர் ஜோடி கிடைத்தது. என்று தன்னை கழட்டி விட்டதும் அல்லாமல்.தான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயர் கூட சொல்லாத அசோக்கின் மீது சம காண்டில் இருந்தான்.அதனால் தான் அசோக்கை வெறுப்பேற்ற இவ்வாறு பேசினான்.

இதனை கேட்ட அசோக் ஷாலினியிடம் “ஏய் இப்போ எதுக்கு அவனை மாமா வென்று அழைக்கிறாய் “என்ற கேள்விக்கு ஷாலினி பதில் அளிக்கும் முன் வாசு…

“என்ன சகலை அவள் அக்காவை நான் கல்யாணம் செய்துக் கொண்டாள். அவள் எனக்கு மச்சினச்சி தானே… அப்போ என்னை மாமா என்று தானே அழைக்க வேண்டும்.”என்று அவன் கூறியதை கேட்ட அசோக் “என்னது உனக்கு அவள் மச்சினச்சியா….என்று வாயய் பிளந்தான்.

பிரதாப் அசோக்கின் காதில் “இப்போது நீ அமைதியாக இருக்க போகிறாயா இல்லையா அவன் திருமணம் வேண்டாம் என்று சொன்னால்.உன் திருமணமும் பாதிக்கும் அதனால் அடக்கியே வாசி”என்ற நண்பனின் வார்த்தைக்கு கட்டு பட்டு அமைதி காத்தான்.

வாசுவும் அசோக்கிடம் “என்ன அசோக் அமைதியாக இருக்கே உன் நிலமையே பிரதாப் சொல்லிட்டானா”என்று கூறி சிரித்தான்.

பத்மினி பிரதாப்பை பார்த்தவாரே நேரம் சென்று விட்டது.அனைவரும் உறங்க செல்லுங்கள் என்று கூறினார். பிரதாப்பின் பார்வை நொடிக்கு ஒரு தரம் மினியை தொட்டு தொட்டு போவதும்.மினியும் தன் கணவனையே பார்த்திருப்பதையும் பார்த்த பத்மினி இவர்கள் இரண்டு பேரும் தனிமையில் பேசினால் தான் அனைத்தும் சுமுகமாக முடியும் என்று கருதியதால்.அனைவரையும் தூங்க அனுப்பினார். .

விட்டால் இவர்கள் விடிய விடிய பேசிக் கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து.

அன்று இரவு அனைவரும் அங்கு தான் தங்கினர்.அம்மா சொன்னவுடன் பிரதாப் தன் அறை நோக்கி விரைந்து சென்றான்.அதனை பார்த்த வாசு அசோக் ஒரு சேர பார்த்து போடா அடிவாங்க என்னடா உனக்கு அவசரம் என்று கூறி சிரித்தனர்.

பிரதாப் தன் ரூமுக்குள் நுழைந்த போது பாத்ரூமில் இருந்து நீர் விழும் சத்தம் கேட்டது.அவனுக்கு மிகபடபடப்பாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது.தவறு செய்து விட்டு வருந்துபவர்களுக்கு வரும் நியாயமான உணர்ச்சி அது.சிறிது நேரம் சென்று மினி பாத்ரூமில் இருந்து வெளிவந்தாள்.

இருவரும் பேசவே இல்லை.பிரதாப் தலை குனிந்தது குனிந்தது தான். நிமிரவே இல்லை.ஹாலில் ஆவாது மினியை பார்த்தான்.தனிமையில் அவள் முகம் பார்க்க அஞ்சி தலை குனிந்தே இருந்தான்.

ஆனால் மினி கண் சிமிட்டாமல் பிரதாப்பையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.பிரதாப் தன்னை பார்க்க போவது இல்லை என்று அறிந்த மினி மெல்ல பிரதாப்பின் அருகில் அமர்ந்து மாமா என்று கூறி அவன் தோளில் கைய் வைத்தாள்.

மினி கைய் வைத்தது தான் மினிக்கு தெரியும் பிரதாப் அவள் கையய் பற்றி தன் கண்ணில் வைத்துக் கொண்டான்.வேறு எதுவும் பேசவில்லை. அவன் தோள் குலுங்குவதில் இருந்தும் தன் கைய்யில் பட்ட ஈரத்தை வைத்து அவன் அழுகிறான் என்று தெரிந்தது.

மினி “மாமா… மாமா… என்னை பாருங்க மாமா அழாதீங்க மாமா” என்று வார்த்தைக்கு வார்த்தை மாமா போட்டாள்.

“அய்யோ என்னை கொள்ளாதே மினி என்னை நீ அடித்து இருந்தாலும் இவ்வளவு வலித்திருக்காது. குறைந்த பட்சம் என்னை திட்டி இருந்தாலும் இவ்வளவு வலித்திருக்காது.ஆனால் என்னை ஒரு வார்த்தை கூட நான் செய்த ஈனதனமான காரியத்தை பற்றி என்னிடம் பேசாமல்.எதுவும் நடக்காதது போல் என்னிடம் நடந்துக் கொள்வது தான் என்னை கொள்ளாமல் கொள்கிறது மினி.”என்று வேதனையுடன் கண்ணை மூடிக்கொண்டான்.

மினி பிரதாப்பின் தலையை நிமிர்த்தி தன்னை பார்க்கும் படி செய்தாள். பின் அவன் கண்களில் தன் கண்ணை கலக்கவிட்டவாரே…. “மாமா நான் ஒரு புக்கிலோ...பத்திரிகையிலேயோ...முன்பு படித்தது தான் இப்போது எனக்கு நியாபகம் வருகிறது. ஒரு கணவன் தன் மனைவியிடம் தன் மீது வந்த காதல் தான் அவளுக்கு முதல் காதலாகா இருக்க வேண்டும் என்றும்….அதே மனைவி தன் கணவனிடம் தன்னிடம் வந்த காதல் தான் அவரின் கடைசி காதலாக இருக்க வேண்டும் என்று நினைப்பாளாம்.

அது போல் நானும் யோசிக்க ஆராம்பித்து விட்டேனோ என்னவோ தெரியவில்லை.” என்று கூறிய மனைவியின் முகத்தை தன் மார்பில் புதைத்துக் கொண்டான்.

“சாரி மினி சாரி உன்னுடய இந்த வேதனைக்கு நான் தான் காரணம்.என்னை மன்னித்து விடு மினி.அப்புறம் ஒன்று சொல்கிறேன். உன்னிடன் தான் என் முதல் காதல் மற்றும் கடைசி காதலும் அதுவாக தான் இருக்கும்.மற்றது அதனை பற்று கூச தயங்கி அதனை காதல் என்று எல்லாம் சொல்லாதே அது காதலுக்கே இழுக்கு .”என்று கூறினான்.

“எனக்கு தெரியும் என்னிடம் தான் உங்கள் முதல் காதல் என்பது.நீங்கள் மோனாவிடம் போனில் பேசும் போது நானும் அதனை மற்ற லைனில் இருந்து கேட்டேன்.மேலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய தாய் பாசம்,தந்தை பாசம் கிடைக்காததுக்கு காரணம் என் அம்மா என்றால்.அக்கா பாசத்தை முற்றிலும் பறித்தவர் என் அப்பா.இப்போது உங்களை பிரிந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய மனைவியின் பாசத்தையும் உங்களிடம் இருந்து பறிக்க என்னால் முடியாது என்று கூறினாள்.”

“அப்போ இதுக்கு மட்டும் தான் என்னை விட்டு போகாமல் இருக்கிறயா…?” என்று வேதனையுடன் கேட்டான்.

“இந்த காரணம் எல்லாம் நான் உங்களிடம் தான் இருக்கவேண்டும் என்று நல்லவிதமாக யோசிக்க உதவியது.ஆனால் உண்மையான காரணம் உங்கள் மேல் எனக்கு இருக்கும் காதல்.”தான் என்று கூறியதை கேட்ட பிரதாப் வாரி அவளை அணைத்துக் கொண்டான்.

“என் பட்டுடி செல்லம்.இந்த மாமாவை எப்போது இருந்து உனக்கு பிடிக்கும்.”என்ற கணவனின் வார்த்தையாலும்,அவன் அணைப்பாலும்,மற்றும் அவன் பார்வையாலும் அவளை சிவக்க வைத்தான்.

“முதன் முதலில் நீங்கள் சந்தானம் அங்கிள் ஒட்டலை வாங்க வந்த அன்று பார்த்தவுடனே”என்று கூறி தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள்.

மனைவியின் வார்த்தையை கேட்ட பிரதாப் “அடி பாவி அப்போவே என்னை நீ பார்த்தியா நீ என்ன பார்க்கவே இல்லை என்று அன்று இரவு முழுவதும் தூங்காமல் உன்னை திட்டிக் கொண்டு வேறு இருந்தேன்.சரியான கள்ளிதான்டி நீ.” என்று தன் மனைவியை கொஞ்சினான்.

பின் மெல்ல அவன் மார்பில் இருந்து தன் தலை நிமிர்த்தி பிரதாப்பை பார்த்தாள்.மனையின் பார்வையில் தன்னிடம் பேச அவள் எதற்கோ தயங்குவதை புரிந்துக் கொண்ட பிரதாப் “என்னடா மாமா கிட்ட சொல்ல உனக்கு என்ன தயக்கம்.எது என்றாலும் என் கிட்டே தைரியமா சொல்லுடா…”என்ற கணவனின் பேச்சில் நம்பிக்கை அடைந்தவளாய்.

“இல்லை அப்பா மேல் இன்னும் உங்களுக்கு கோபம் இருக்கா…?”என்று கூறி தலை குனிந்துக் கொண்டாள்.

மனைவியின் தலை நிமிர்த்தி நீ எதுக்கும் இவ்வாறு தலை குனிய கூடாது.அது என்னிடம் இருந்தாலுமே…உன் அப்பா மேல் முதலில் கொலை வெறியே இருந்தது.ஆனால் இப்போது மொத்தமாக இல்லை என்று சொல்ல மாட்டேன்.ஆனால் குறைந்து இருக்கிறது.என்பது தான் உண்மை.அவர் அவர்களுக்கு ஒரு நியாயம் இருப்பது போல் அவருக்கும் ஒரு நியாயம் இருந்ததை இப்போது உன் தந்தை பேசும் போது தான் தெரிந்துக் கொண்டேன். ஒரு காதலனாக ஒரு கணவனாக அவர் நிலையில் இருந்து நான் யோசிக்கும் போது என் அக்கா சாந்தி அவருக்கு நியாயம் செய்யவில்லை.அவர் கூறியது போல் அவரை பிடிக்கவில்லை என்று கூறியிருந்தாலும் பாரவாயில்லை.ஆனால் என் அக்கா தந்த பதில் எந்த காதலனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.”என்று கூறி தன் பேச்சை முடித்தான்.

கணவனின் பேச்சைக் கேட்ட மினி தன் கணவனை ஆரதழுவிக்கொண்டாள்.பிரதாப் சிரித்துக் கொண்டே “இதற்க்காகவது உன் அப்பாவை முழுவதும் மன்னித்து விடலாம் போலவே”என்று கூறி அவனும் தன் அனைப்பை இறுக்கினான்.

ஐந்து வருடத்திற்கு பிறகு
“இந்த வாலு எங்க போனா அப்பா காலையில் இருந்து என் கண்ணிலேயே படவில்லை.”என்று மினி தன் தந்தையிடம் குறைப்பட்டு கொண்டிருந்தாள்.

அதற்க்கு கேசவமூர்த்தி “அவள் மாமா மாமி அறையில் தான் இருப்பாள் நீ ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய் குழந்தை என்றால் அப்படி தான் இருப்பாள்.”என்று தன் மகளிடம் கூறிக் கொண்டிருக்கும் போது இடைப்புகுந்த சகுந்தலா அம்மா.

“இப்போ புரியுதா….குழந்தை வளர்ப்புனா என்னன்னு நான் உன்னை திட்டும்போது எல்லாம் கோச்சுக்குன்னு உன் தந்தையிடம் என்னை பற்றி கம்ளைன்ட் செய்வாயே இப்போது ஞாபகம் இருக்கா” என்ற பாட்டியை மினி அணைத்துக் கொண்டு “பாட்டி என் செல்லத்தே நான் எப்போ கம்ளைன்ட் செய்தேன்.என் பாட்டினா எனக்கு ரொம்ப பிடிக்குமே”என்று தன் பாட்டியை ஐஸ்வைத்துக் கொண்டிருந்தாள்.

இதனை கண் குளிர பார்த்த பத்தூ,தீனதயாளன் சிரித்துக் கொண்டே தன் பேத்திக்கு டிரஸ் மாட்டி விட்டார்கள்.

ஆம் பிரதாப்புக்கும் மினிக்கும் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.பிரதாப்பின் பெயரையும் பத்மினி பெயரையும் இணைத்தவாறு பத்மபிரபா என்று பெயரிட்டு இருந்தனர்.ஆனால் பப்பி என்று தான் அழைப்பது.

மினியும் தன் சி.ஏ படிப்பை முடித்து விட்டு. தன் கணவரின் தொழில் கணக்கையும்,தந்தையின் தொழில் கணக்கையும் அவளே தான் பார்த்துக் கொள்கிறாள்.வீட்டை தன் இரு பாட்டிகளின் பொறுப்பிலும் விட்டு விட்டாள்.

இன்று பிரதாப்புக்கு இளம் தொழில் அதிபருக்கான விருது வழங்கபட உள்ளது.அங்கு செல்லவே அனைவரும் கிளம்பிக் கொண்டு இருந்தனர்.அனைவரும் கிளம்பி விட்டனர்.ஆனால் நம் குட்டி இளவரசியான பப்பி கிளம்புவதில் தான் தாமதமே….

கேசவமூர்த்தி… பிரதாப் வீட்டோடு மாப்பிள்ளையாக இல்லை என்றால் என்ன நானே இங்கு வீட்டோடு மாப்பிள்ளையாகவும்,மாமானாராகவும் இருந்து விடுகிறேன் என்று கூறி டெல்லியிலேயே தங்கி விட்டார்.சென்னையில் உள்ள கேசவமூர்த்துயின் ஒட்டலை அசோக் தான் பார்த்துக் கொள்கிறான்.

பிரதாப் சென்னையில் வாங்கிய ஒட்டலை அசோக்குக்கே கொடுத்து விட்டான்.இப்போது இந்த விருது வழங்கும் விழாவுக்கு அசோக், ஷாலினி ,மற்றும் வாசு அவள் மனைவி மாலினியும் டெல்லிக்கு ஏர்போட்டுக்கு வந்து விட்டதாகவும்.அங்கிருந்து கார் பிடித்து வந்துக் கொண்டு இருப்பதாகவும் தகவலை கேட்ட மினிக்கு தான் டென்ஷன் ஏறியது.பின் என்ன சென்னையில் இருந்து அவர்களே வந்து விட்டார்கள்.

பப்பி இங்கு கிளம்புவதில் நேரத்தை கடத்தினாள்.மினிக்கு கோபம் வருவது இயல்பு தானே…பப்பியை திட்டியவாறு அவளுக்கு கம்பலை மாட்டிக்கொண்டிருந்தாள்.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த அசோக் “ இன்னுமா நீங்க கிளம்பவில்லை.சென்னையில் இருந்து நாங்களே வந்து விட்டோம்.நீங்கள் இன்னும் கிளம்பவில்லை.என்ன இருந்தாலும் நீங்க ரொம்ப ஸ்லோ தான் என்று கூறினான்.

அதனைக் கேட்டவாரே படிக்கட்டில் இருந்து இறங்கி கொண்டிருந்த பிரதாப் “ஸ்லோவே பத்தியெல்லாம் நீ பேசவே கூடாது.எனக்கு திருமணம் முடிந்த நான்காம் மாதமே உனக்கும் திருமணம் முடிந்து விட்டது.ஷாலினியின் மேடிட்ட வாயிற்றை காட்டி இப்போது தான் ஏழாம் மாதமே….ஆனால் நான் பப்பியைய் காட்டியவாறு நான்கு வயது முடிந்து விட்டது.” என்று கூறினான்.

“அடப்பாவி எதுக்கு எதோட இணை சேர்த்து பேசுறது என்று விவஸ்தையே இல்லையா…..” என்று கூறிக்கொண்டே அவனின் கைய் பற்றிக் கொண்டு அவனுக்கு வாழ்த்தை தெரிவித்தான்.அவன் விருது வாங்குவதற்க்காக அப்போது அவன் சீமந்த புத்திரி பாட்டி போட்ட டிரஸை கழட்டி விட்டு வேறு போடும் படி அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அதனை பார்த்த மினி அனைவரையும் பார்த்து “ நீங்கள் கொடுக்கும் செல்லத்தால் தான் அவளுக்கு கொழுப்பு ஏகத்துக்கும் ஏறிக்கொண்டு இருக்கிறது.பெண் பிள்ளையைய் இப்படி வளர்ப்பது முறை அல்ல. நாளை வேறு வீட்டுக்கு செல்ல வேண்டிய பெண் என்று” அவள் வாக்கியத்தை முடிக்க வில்லை.

பிரதாப் உடனே “நான் என் பெண்ணுக்கு வீட்டோடு தான் மாப்பிள்ளை பார்ப்பேன்.”
அவன் கூறியதை கேட்ட அனைவரும் திரும்பவுமா….என்று அலறினர்.

பிரதாப் மினியைய் மைய்யலுடன் பார்த்திருந்தான்.அதற்கு சற்றும் குறையாத பதில் பார்வையை கொடுத்துக் கொண்டிருந்தாள் மினி.


மினி பிரதாப்பின் வாழ்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி முழுவதும் அவன் வசம் தஞ்சம் அடைந்தாள்.இவர்களின் மகிழ்ச்சி நிலைத்து இருக்கட்டும்.நாம் இவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.
 
எனக்கு ரொம்பவும் பிடித்த சூப்பர் ஸ்டோரி, விஜி டியர்
பிரதாப் அருமையான காதலன் கணவன்
சின்ன பத்மினி @ மினியும் அருமையான பெண்
பெரிய பத்மினி தீனதயாளன் அருமையான பெற்றோர்
கேசவ மூர்த்தியும் சகுந்தலா அம்மாவும் சூப்பர்
அசோக் அருமையான நண்பன் and பிரதர்
வாசுவும் நல்ல நண்பன்
சந்தானம் மயில்வாகனம் இவங்களும் சூப்பர்
மொத்தத்தில் ரொம்ப ரொம்ப அருமையான நாவல், விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:
Top