Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 3 2

Advertisement

Admin

Admin
Member
என்னதான் அக்கா மேல் கோபம் இருந்தாலும், எட்டு வயது வரை தாயிக்கு தாயாக வளர்த்தவளாயிற்றே. ஆம் சிறு வயதில் எதற்க்கும் தன் அன்னையை விட தன் அக்காவையே தேடுவான்.

அதனால் தான் தன்னை விட்டு சென்றவுடன் அந்த பிரிவை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதுவும் அதற்க்கு காரணமான கேசவமூர்த்தியை தன் வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டான்.

தன் தாயும் தந்தையும் இப்போது தான் பல வருடங்களுக்கு பிறகு கொஞ்சம் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப் பட்டால் அவர்கள் எப்படி தாங்கி கொள்வார்கள் என்று நினைத்து, கவலையில் அவனால் அடுத்து சிந்திக்க கூட முடியவில்லை.

அசோக் தான் அவன் சிந்தனையை கலைத்து நடப்புக்கு கொண்டு வந்தான் . “சார்” என்ற அழைப்புக்கு தன்னிலை அடைந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியதை செயல்படுத்த முன்னிலும் அதிக முனைப்புடன் ஈடுபட எண்ணினான். ஆம், என் தாய், தந்தையிடம் இருந்து தன் மகளை பிரித்தது போல் அவரிடம் இருந்து அவர் மகளை கண்டிப்பாக பிரிப்பேன் என்று மனதில் உறுதிக் கொண்டான்.

பின் மகள் பத்மினி என்று இருந்ததுக்கு நேர் எதிர் பி.காம் தேர்ட் இயர் என்று இருந்தது. பின் அதில் இருந்த அவள் போட்டோவையே சிறிது நேரம் பார்த்திருந்தான். அவள் முகத்தை பார்க்க பார்க்க மனதில் ஏதோ ஒரு மாற்றம்.

இது வரை உணர்ந்திராத அமைதி நிலைவியது, இவனின் முகபாவனையையே கவனித்துக் கொண்டிருந்த அசோக் நண்பன் திருமண வாழ்க்கையில் வெற்றி அடைந்து விடுவான் என்று மனதில் மகிழ்ச்சி அடைந்தான்.

இந்த மகிழ்ச்சியிலேயே அவள் பேசுவதை ரெக்கார்ட் செய்ததை போட்டு விட்டான். அவற்றில் அவள் தன் தோழிகளுடன் பேசும் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

தோழிகள் பேசுவதை முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருப்பதையும், பின் அவள் தோழி சொன்னதற்க்கு அவளின் பதில் அடியும் கேட்டவுடன் வந்த சிரிப்பை அசோக்கை நினைத்து அடக்கிக்கொண்டான். ஆனாலும் இதழ் ஓரத்தில் வெளிப்பட்ட இதழ் விரிவை பார்த்து விட்டு அந்த நண்பன் மனது நிம்மதி அடைந்தது.

பின் அவன் கவலை அவனுக்கு அவன் பின்னாடி சுத்துற பொண்ணுங்களை கழட்டி விடுறது எல்லாம் இவன் வேலை தானே…. எவ்வளவு கஷ்டமான வேலையை கூட பார்த்து விடலாம். ஆனால் இந்த வேலை பார்ப்பது என்பது அவனால் வெளியில் சொல்லக் கூட முடியவில்லை.இவன் வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டால் இந்த கஷ்டத்தில் இருந்து அவனுக்கு விடுதலை கிடைத்து விடும் இல்லையா?.

“சார்… சார்…. “ என்ற அழைப்புக்கு தன் நிலையடைந்து இருந்த பிரதாப் நண்பனிடம் தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டு தன் கெத்தை விடாமல் “என்ன அசோக் “ என்று வினாவினான். மனதினில் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கெத்துன்னு நான் பார்க்க தானே போகிறேன் மச்சான் என்று நினைத்துக் கொண்டான். வெளியில் “ஒன்னும் இல்லே சார்.”என்று பதில் அளித்திருந்தான்.

பிரதாப் மனதினில் எவ்வளவு சீக்கிரம் அவளை தன் சொந்தம் ஆக்கிக்கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொந்தம் ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் கேசவமூர்த்தியை பழிவாங்க முடியும், என்று தான் அவசரப்படுவதற்க்கு அதுதான் காரணம் என்று தானே ஒரு காரணத்தை கற்ப்பித்துக் கொண்டான்.

“அசோக் சீக்கிரம் சென்னையில் அந்த ஒட்டல் முதளாளியிடம் அப்பாயின்மென்ட் வாங்கிடு. பிறகு அவற்றை பொருத்து பிளைட்டுக்கு டிக்கட் புக் பண்ணிடு”. என்று கூறினான். “சரி சார்” என்ற அசோக், பிரதாப் சொன்ன வேலையை பார்க்க தன் கேபினுக்கு சென்றான்.

பிரதாப்பின் ஆர்வதை பார்த்த அசோக், சொன்ன வேலையை இரண்டு மணி நேரத்தில் அனைத்தையும் முடித்து விட்டிருந்தான். பிரதாப்பும் ஆறு மாதத்துக்கு உண்டான வேலையை யார் யார் பார்க்க வேண்டும் என்று பிரித்துக் கொடுத்திருந்தான்.

அவன் சென்னை கிளம்புவதற்க்கு வேண்டிய அனைத்து வேலையும் முடிந்து இருந்தது. மனதினில் ஒருபுறம் அமைதி மறுபுறம் கொந்தளிப்பு என்று இருவேறு மனநிலையில் வீட்டிற்க்கு சென்றான். தன் அன்னையிடம் அக்கா இறந்த விசயத்தை சொல்ல வேண்டாம் என்று முதலிலேயே முடிவு செய்திருந்தான்.

ஆனால் தன் தந்தையிடம் கண்டிப்பாக சொல்ல வேண்டும். எப்படி அவர் உடல் நிலையை பாதிக்காதவாறு சொல்வது என தன் ரூமில் யோசித்துக் கொண்டிருந்தான்.

லஷ்மி அம்மாள் சாப்பிட வாப்பா என்று கூப்பிடும் வரை இதே நினைப்பு தான். பின்பு எப்படியாவது சொல்லித் தானே ஆக வேண்டும் என்று டைனிங் ஆளுக்கு சென்றான்.

“என்னா கண்ணா உடம்பு ஏதாவது சரியில்லையா?“ என்று பாசத்துடன் விசாரிக்கும் தாயிடம் தன் முகத்தை காட்டாமல் தலை குனிந்தான். எப்போதும் ஏதாவது மறைப்பதாக இருந்தால் அவன் தன் தாய் முகத்தை நிமிர்ந்து பார்க்க மாட்டான்.

மகனின் குணம் அறிந்த தீனதயாளன் “விடு பத்தூ. சென்னைக்கு கிளம்புவதால் இங்கு முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கும் அந்த டென்ஷனாக கூட இருக்கும் “ என்று மனைவிக்கு பதில் அளித்தவாரே தன் மகனை யோசனையுடன் பார்த்தார்.

தீனதயாளனுக்கு தன் மகனின் அனைத்து குணமும் தெரியும், பெண்கள் சவகாசம் உள்பட. ஆனால் ஒரு வயதுக்குப் பிறகு தன் மகனே ஆனாலும், அனைத்து விசயத்தையும் கேட்க முடிவதில்லை. அதுவும் அவன் தொழிலில் எடுக்கும் முடிவில். தான் தொழிலை அவனிடம் கொடுக்கும் போது இருந்த வளர்ச்சியை விட, பல மடங்கு பெருகியிருக்கிறது.

மேலும் அவனே தன் வாழ்வை சீர்குலைய விட மாட்டான் என்றும், யார் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தன் மகனுக்கு தெரியும் என்ற காரணத்தால், தனக்கு தெரிந்ததாகவே காட்டிக்கொண்டது இல்லை. தன் மனைவிக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

இதையெல்லாம் ஜீரணம் செய்துக்கொள்ள அவளால் முடியாது என்ற காரணத்தால் மூடிமறைத்தார். மேலும், இந்த பெண்கள் பழக்கத்தில் இருந்து விடு பட மறைமுகமாக இரண்டு வருடமாகவே திருமணத்திற்க்கு முயற்சித்துக் கொண்டுத்தான் இருக்கிறார். ஆனால் அதுக்கு மகன் சம்மதம் கிடைக்க வேண்டுமே!

இப்போது மகன் கண்டிப்பாக மிக விரைவில் திருமணம் செய்துக் கொள்வான் என்று தன் மகனின் நடவடிக்கையில் அறிந்துக் கொண்ட விசயம் அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. மாறாக சிறு சஞ்சலமே மனதில் இருந்தது. சந்தோஷமாக திருமணம் செய்துக் கொண்டால் மகிழ்ச்சியே.

பழிவாங்க வேண்டும் என்ற காரணத்தால் செய்துக்கொள்ளும் திருமணம் இருவர் வாழ்வையுமே அழித்து விடுமே என்று கவலைக் கொண்டார். தன் மகனின் மனநிலை அறியாமல்.

தன் மகனிடம் தனிமையில் அதுவும் சென்னை போவதற்க்குள் பேச வேண்டும் என்ற காரணத்தால், தான் சாப்பிட்டவுடன் ”பிரதாப் சாப்பிட்டவுடன் ஆபிஸ் ரூமுக்கு வா உன்னிடம் பிஸ்னஸ் விஷயமாக பேச வேண்டும்.” என்று சொல்லி விட்டு சென்றார். அவர் அழைத்ததில் இருந்தே தன்னிடம் தாய்க்கு தெரியாமல் பேசவே அழைக்கிறார் என்று புரிந்துக் கொண்டான்.

தந்தை சென்றவுடன் “அம்மா நாளைக்கு நான் சென்னைக்கு போகிறே எப்படியாவது உங்கள் பேத்தியை கண்டிப்பா அழைச்சிட்டு வருகிறேன்“ என்றதற்க்கு “கண்ணா அப்போ சாந்திப்பா?” என்று தன் அன்னை கூறியவுடன் தான் தன் முட்டாள் தனம் தெரிந்தது.

மனதில் வேதனையுடன் கண்டிப்பாக உங்கள் மகளையும் அழைச்சிட்டு வருகிறேன் என்று பொய்யான வாக்குறுதி அளித்தான். பின்பு இதற்கு மேலும் சாமளிக்க முடியாது என்பாதாலும் தன் தந்தையுடன் வேறு பேசவேண்டிய அவசியத்தாலும்,

“அம்மா டைம் ஆகுது பாருங்க நீங்க மாத்திரை போடவேண்டிய நேரம். போய் மாத்திரை போட்டுக்கிட்டு தூங்க போங்க. நானும் அப்பாகிட்ட பேசிட்டு தூங்கனும் நாளைக்கு சீக்கிரம் வேற எழுந்து கிளம்பனும்” என்று கூறி தாயை அனுப்பிவிட்டு தந்தையை காண தயக்கத்துடன் சென்றான்.

தனக்காக காத்திருந்த தந்தையின் பக்கத்தில் தயங்கியவாறே வந்து மெல்ல அமர்ந்தான். மகனின் முகத்தில் கலக்கத்தையும், அவனின் தயக்கத்தையும் பார்த்து தான் கேட்கவேண்டியதை விடுத்து. “என்ன பிரதாப் ? என்ன விஷயம்” என்று கேட்டவுடன் எப்படியும் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பாதால் “அப்பா சென்னையில் அவர்கள் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஒரு டிடக்டிவிடம் சொல்லி இருந்தேன்.

மகன் பேச்சியில் இருந்தே கேசவமூர்த்தியின் குடும்பம் தான் என்று தெரிந்தே அவர் அவனின் தந்தை என்று நிருப்பிக்கும் வகையாக… ”எந்த குடும்பத்தை பற்றியப்பா விசாரிக்க சொல்லியிருந்தாய்?” என்று எதிர் கேள்வி கேட்டார்.

“அப்பா ப்ளீஸ் நான் சொல்வதை கொஞ்சம் அமைதியாக கேளுங்க. உங்களுக்கு எந்த குடும்பம் என்று நன்றாக தெரியும். காலையில் தான் நான் கேட்ட டீடையில்ஸ் கிடைத்தது. அதில்…. அதில்….”

“என்ன பிரதாப் எதுவா இருந்தாலும் சொல்லுப்பா”.

“அப்பா அக்கா ….. அக்கா….. பதினைந்து வருஷம் முன்னாடியே இறந்துட்டாங்கப்பா.”

அப்படியே முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கும் தந்தையை “அப்பா... அப்பா...” அவரை தொட்டு அசைத்தவுடன் வேதனைடன் “எப்படியாவது நான் இறப்பதற்க்குள் என் மகளை பார்த்துவிடுவேன் என்று நம்பி இருந்தேன். ஆனால் நான்…. நான்… இப்படி ஆகும் என்று நினைக்கவே இல்லப்பா.

அத்தோட… எப்படி உங்க அம்மா கிட்டே சொல்லுவேன்னு தெரியலேயேப்பா.” என்று கூறிய அப்பாவின் வேதனையை கண்டு மனதில் மிகவும் பாரமாக உணர்ந்தான்.

அவன் அப்பா தான் அவனுக்கு ரோல் மாடல். அவர் எதற்கும் அவ்வளவு சீக்கிரம் மனம் தளரவிட மாட்டார். அப்படிப் பட்டவர் இன்று வேதனையுடன் கலங்கியிருப்பதை பார்த்து அவர் வேதனையை போக்க முடியாத தன்நிலையை கண்டு வெட்கினான். அப்பா உங்கள் வேதனையை அந்த கேசவமூர்த்திக்கு கண்டிப்பாக நான் தருவேன் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

“இந்த விஷயத்தை உன் அம்மா கேள்விப்பட்டால்! எப்படி தாங்கிக் கொள்வாள் என்று தெரியவில்லை. இப்போது உன் அம்மாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம். நானே சமயம் பார்த்து சொல்லிக் கொள்கிறேன்.

ஆனா, நீயும் உன் அம்மா மனசு கஷ்டப்படுத்துவது மாதிரி ஏதாவது செஞ்சி வைச்சா, நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்று மகனை பார்த்து கண்டிப்புடன் கூறினார்.

“அப்பா! நான் என்னப்பா செய்யப் போறேன். அதுவும் அம்மா மனசு கஷ்டப்படும் மாதிரி” என்று தன் தந்தையை பார்த்து கேட்டான்.

“பிரதாப் மாப்…. கேசவமூர்தியை பழி வாங்க நீ என்ன பிளான் பண்றேன்னு தெரியாதுன்னு நினைச்சியா? இல்லே உன் பழக்க வழக்கங்கள், உன் நைட் ஷெட்யூல் எதுவுமே இந்த அப்பாவுக்கு தெரியாதுன்னு நீ நினைச்சி இருக்கேல்லே. நான் உன் அப்பாடா! தோளுக்கு மேல் வந்த பையனை எதுவும் சொல்ல முடியலே, அதுவும் இந்த மாதிரி விஷயத்தில் “ அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் விட்ட தன் தந்தையை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தான்.

“நீ சென்னைக்கு எதுக்கு போகிறாய் என்ற காரணம் தெரிஞ்சும், நான் சும்மா இருக்கிறதுக்கு காரணம், அந்த டி.வி நிகழ்ச்சியில் என் பேத்தியை பார்த்ததில் இருந்து எனக்கும் அந்த நினைப்புதான். ஆனால் உன்னை மாதிரி பழி வாங்க இல்லை.” என்று கூறிய தந்தையிடம்…

“அப்பா ஏன் பழி வாங்கன்னு நினைக்கிறிங்க. பார்த்தவுடன் எனக்கும் பிடித்து இருக்கலாம் இல்லையா”? என்று அவன் மனதில் இருப்பது அதுதான் என்ற உண்மை தெரியாமலேயே தன் தந்தையிடம் கூறினான்.

யோசனையுடன் மகனை பார்த்த வாரே “நீ சொல்வது உண்மைன்னா என்னைவிட சந்தோஷம் படுறவங்க யாரும் இல்லை. ஆனால் வேற மாதிரி உன் நடவடிக்கை இருந்ததுன்னா….” மேற்க்கொண்டு எதுவும் சொல்லாமல் மகனின் முகத்தையே பார்த்திருந்தார்.

தந்தையின் பார்வையை சந்திக்க முடியாமல் வேறு எங்கோ! பார்த்த வாரே “அப்பா கவலையே படவேண்டாம். என் மனைவியை நான் நல்ல படியாகவே பார்த்துப்பேன்.” என்று கூறினான். அவ்வாறு அவன் கூறும் போது அவன் மனதில் அப்படி ஒரு நிம்மதி.

மகன் முகத்தில் தோன்றிய முகபாவத்தில் அந்த தந்தையின் மனதில் ஏதோ விளங்குவது போல் இருந்தது. ஆனால் அது மகனுக்கே விளங்கவில்லை என்றும் புரிந்தது. இனிமேலாவது நல்லது நடந்தால் சரி என்று நினைத்து, ”சரிப்பா டைம் ஆயிடுச்சி போய் தூங்குப்பா நாளைக்கி சீக்கிரம் எழுந்தா தானே டைமுக்கு பிளைட்டை பிடிக்க முடியும்.“ என்று தன் சம்மதத்தை மறைமுகமாக தந்தார்.

மகிழ்ச்சியுடன் குட் நைட் உரைத்து விடைப்பெற்று தூங்க சென்றான். ரூமுக்கு வந்தவுடன் அவனால் தூங்க முடியவில்லை. தான் நினைத்தது சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அவனையறியாமலேயே ஒரு பதட்டம், உள்ளுக்குள் உருவானது. தான் நினைத்ததை சீக்கிரம் முடிக்க வேண்டும், என்று நினைத்தப்படியே உறங்கினான்.





















 
Top