Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 4 1

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் - 4

காலையில் எழுந்தவுடனே அவனுக்குள் ஏதோ ஒரு தெரியாத ஒரு படப்படப்பு இருந்துக் கொண்டே இருந்தது. அசோக்குக்கு போன் செய்து விட்டு… மார்னிங் ப்ரேக்பாஸ்ட்டு முடிச்சிட்டு தன் தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு விடைப்பெற்று சென்றான்.

இரவே மகள் இறந்ததை தவிர்த்து மகன் சென்னைக்கு செல்வதற்க்கான காரணத்தை சொல்லி விட்டிருந்தார். ஏன் என்றால் நேற்று மகன் பேசியதில் இருந்தே அவன் மன நிலையை ஒருவாறு அறிந்திருந்தார். பழிவாங்க தான் இந்த திருமணம் என்று அவன் கூறியிருந்தாலும், முகத்தை வைத்தே அவனின் விருப்பத்தை தெரிந்துக் கொண்டார்.

இரவு கணவர் கூறியதில் இருந்தே மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். மகன் ஆசிர்வாதம் வாங்கும் போது அவர் மனதில் தம்பதியாக எப்போது ஆசிர்வாதம் செய்வோம், என்ற ஏக்கமே… வந்து விட்டிருந்தது. மனதில் அவ்வளவு மகிழ்ச்சி தன் மகளும், பேத்தியையும் காணப் போகிறோம் என்று.

இங்கு ஏர்போட்டில் பிளைட் அரை மணி நேரம் லேட் என்றதில் அவ்வளவு எரிச்சல் அடைந்தான். தன் தலையை கோதியவாரே தன் மொபைலில் இருக்கும் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான். ஆம், அது பத்மனியின் போட்டோ தான். டிடக்டிவில் கொடுத்த ரிப்போர்ட்டில் இருந்த போட்டோவை சுட்டு விட்டான்.

அந்தப் படத்தை பார்க்க பார்க்க அவனால் சொல்ல முடியாத ஒரு உணர்வு. மனதுக்குள் என்னடா இது என்ன நான் டீன் ஏஜ் வயதிலா இருக்கிறேன் இருபத்தி ஒன்பது வயதே முடிந்து விட்டது. அதுவும் நான் பார்க்காத பொண்ணுங்களா! அவன் ஒரு விளம்பரம் கம்பெனியும் நடத்திக் கொண்டிருக்கிறான். அதில் மாடலிங் செய்ய வரும் பெண்களிடமும் தனியாக அவன் நேரத்தை செலவிட்டுயிருக்கிறான்.

ஆனால் இது ஒரு புதுமையான அனுபவமாக, தனக்கானது தனக்கு மட்டுமானது என்ற உரிமையுணர்வு வேறு எந்த பெண்ணிடமும் வந்ததில்லை. இந்த உணர்வு அவனுக்கு மிகவும் பிடித்த மாதிரியும் இருந்தது. இந்த மனநிலையில் தான் இருந்தால்… நல்ல பழிவாங்குனா மாதிரிதான்… என்று தன் மனதினிலேயே அவனே வாதாடிக் கொண்டிருந்தான். முடிவில் அவனே தீர்ப்பும் அளித்துக் கொண்டான்.

ஆம் அவனுக்குள் அவனே அவள் அப்பன் தானே நமக்கு எனிமி அவள் என்ன செய்வாள் பாவம் என்று முடிவு எடுத்திருந்தான்.

இவ்வாறு மனதுக்குள்ளே அவனே கேள்வியும், பதிலும், அளித்துக் கொண்டிருக்கும் போது இடையுறாக தோள் மேல் கைவிழுந்தது. யார் அது என்று தன் சிந்தனை கலைந்து தலை நிமர்ந்து பார்த்தால் அசோக் நின்றுக்கொண்டிருந்தான்.

“என்ன அசோக் இந்த நேரத்தில், அதுவும் இங்க?“ என்ற தன் நண்பனை தோளோடு அணைத்துக் கொண்டான் அசோக். எதுவும் புரியாமல் பிரதாப் கேள்வியாக அசோக்கை பார்த்தான்.

அசோக் எப்போதும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டால் மட்டுமே இவ்வாறு அணைத்துக் கொள்வான். மற்றபடி நீ என் நண்பன் உனக்கு என்னிடம் எல்லா உரிமையும் இருக்கு என்று எவ்வளவு முறை சொல்லியும் அவன் எப்போதும் தான் அவனிடம் வேலைப்பார்ப்பவன் என்ற வரைமுறையிலேயே இருப்பவன்.

அப்படிப்பட்டவன் அவனாகவே இவ்வாறு அணைத்திருப்பது ஆனந்தமாக இருந்தது. “பிரதாப் நீ நினைத்த காரியம் நல்ல படியாக நடக்க வேண்டும்.“ என்ற நண்பனை யோசனையுடன் பார்த்தான்.

“என்ன பிரதாப் உனக்கு புரியலையா? ஆனால், உன் மனசு எனக்கு தெரியும். உன்னாலையே புரிஞ்சிக்க முடியாத சில விஷயத்தை கூட எனக்கு தெரியும்” ஆம் அவன் கண்களை பார்த்தே தன் நண்பன் காதலில் விழுந்து விட்டான், என்று அவனால் அறிந்துக் கொள்ள முடிந்தது. அதை அவன் அறிந்துக் கொள்ளவில்லை என்பதையும் புரிந்துக் கொண்டான்.

“என்ன அசோக் என்ன என்னவோ உளர்றே”? என்ற நண்பனைப் பார்த்து “யாரு நான் உளர்றேன்னா… இன்னும் கொஞ்ச நாள் போச்சின்னா யாரு உளர்றதுன்னு பார்க்கலாம்”.

இவனுக்கு என்னவோ ஆயிடுச்சி என்று மனதில் நினைத்துக் கொண்டே “சரி யாரு உளர்றாங்கன்னு அப்புறம் பார்க்கலாம் முதல்லே நீ இங்க என்ன பண்ற அதே முதல்ல சொல்லு” என்ற நண்பனிடம்…. ஒரு புன்சிரிப்புடன் தன் பின்னால் மறைத்து வைத்திருந்த மலர்க்கொத்தை நண்பனிடம் நீட்டினான்.

அந்த மலர்க்கொத்தை பார்த்தவுடன் பிரதாப்புக்கு ஏனோ மினியின் முகம் வந்து சென்றது. ஆம் தன்னாலேயே பத்மினியின் செல்ல சுருக்கம் தன் மனதில் மினி என்று பதிந்தது. “உங்களை சென்டாப் கொடுக்க நான் வரக்கூடாதா…” என்று பிரதாப்பிடம் கேட்டான் .

அப்படி கேட்ட அசோக்கைய் பார்த்து, ”கண்டிப்பா வரலாம் தப்பில்லை. ஆனால்… நான் இதற்கு முன் எவ்வளவோ பிஸ்னஸ் டீலீங் முடிக்க வெளிநாட்டிற்கு எல்லாம், சென்றிக்கிறேன். ஆனால் அப்போது எல்லாம் வராமல் இங்க இருக்க சென்னை அதுவும் இது அவ்வளவு பெரிய பிஸ்னஸ் டீலீங் கூட இல்லை. இதற்கு வந்திருப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது.” என்ற நண்பனை பார்த்து…

“நீங்க பிஸ்னஸ் டீலீங்கை மட்டும் தான் முடிக்க போறீங்களா சார்….?“ என்று புன்னகையுடன் கேட்டான். தன்னைப்பற்றி தான் சொல்லாமலேயே நன்கு அறிந்து வைத்திருந்த நண்பனை பெருமையுடன் பார்த்திருந்தான். அப்போது பிளைட்டு கிளம்பவதற்க்கு அறிவிப்பு வர தன் நண்பனிடம் விடைப்பெற்று சென்றான்.

பிளைட்டில் தன் பக்கத்து இருக்கையில் தன் கம்பெனியின் மாடல் மோனா அமர்ந்திருந்தாள். அவள் இவனை பார்த்ததும் எப்போதும் “போல் ஓ மை ஹான்ஸம்” என்று வழிந்து தோள்சாய்ந்தாள்.

எப்போதும் அதை அனுமதிப்பவன் இப்போது ஏனோ தீ சுட்டது போல் விளக்கினான். ஆனால் முன்பெல்லாம் தன்னிடம் வந்து பழகும் பெண்களை அவன் எப்போதும் விளக்கியதே இல்லை. அது தன் அழகுக்கும் தன் அந்தஸ்துக்கும் கிடைக்கும் மரியாதை என்று கருதினான். இப்போது ஏனோ அது அருவெருப்பாக இருந்தது. ஏன் என்றால் அவனுக்கு தெரியாமலேயே அவன் மனதில் பத்மினி நுழைந்து விட்டாள்.

தன் இடது கரத்தால் அவளை விளக்கியவாரே “டோன் டச் மீ மோனா”‘என்று எரிந்து விழுந்தான். மோனாவுக்கு பிரதாப்பின் இந்த நடவடிக்கை புதுமையாக இருந்தது. அவன் எப்போதும் அவளிடத்தில் வழிந்தது கிடையாது. ஆனால் இவள் நெருங்கினால் விளக்கியதும் கிடையாது.

இதை மனதில் கருதி அவள் பல திட்டங்களை தீட்டியிருந்தாள். எப்போதும் அவனுடனே பாதுகாவலன் போல் இருக்கும் அசோச்கை பார்த்தால், தான் எரிச்சலாக இருக்கும். அவனைப் பற்றி பல தடவை பிரதாப்பிடம் கோல் சொல்லியும் அவன் அதை காதில் வாங்கிக் கொண்டதே கிடையாது.

பிறகு தான் தெரிந்தது அசோக் பிரதாப்புக்கு எவ்வளவு நெருக்கம் என்று…. பிறகு அந்த முயற்ச்சியை கைவிட்டு, அவனிடமும் நல்ல மாதிரியாகவே நடக்க ஆரம்பித்தால். ஆனால் எந்த முயற்சியும் அந்த அசோக்கிடம் பளிக்கவில்லை என்பதே நிஜம்.

இந்த பிரதாப் மட்டும் என்ன கொழுத்த பணக்காரன் இவனை வைத்து லைப்பில் செட்டில் ஆயிடலாம் என்று நினைத்தால் கழூவுற மீனில் நழுவுற மீனாகதான் இருக்கிறான். தான் அழைத்தால் மட்டுமே அதுவும் நான்கு முறை அழைத்தால் ஒரு முறை மட்டுமே வந்து செல்வான்.

சரி விட்டு பிடிக்கலாம் என்று பார்த்தால் முதலுக்கே மோசம் போல் உள்ளதே, என்று நினைத்தவாறே “என்ன ஹான்ஸம் ரொம்ப டென்ஷனில் இருக்கிற மாதிரி இருக்கு சென்னைக்கு தானே போறீங்க. எனக்கு தெரிஞ்சவங்களோட கெஸ்ட் ஹவுஸ் அங்க இருக்கு….” என்று கிறக்கமாக ஒரு பார்வை பார்த்தாள்.

அவள் பார்வையில் அருவருத்து போனான். “நோ… என்னை டிஸ்டப் பண்ணாதே” என்று அனல் கக்கும் பார்வையை செலுத்தினான். அப்பார்வைக்கு பிறகு அவன் பக்கம் மீண்டும் பார்வையை செலுத்த அஞ்சினாள். ஆனால் மனதில் என்ன விஷயமாக இருக்கும் என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

பிளைட்டு சென்னையில் லேன்டு ஆனாதும் பிரதாப் அவளை பார்த்து “மோனா மத்தவங்க கெஸ்ட் அவுஸில் தங்கனும் என்று எனக்கு அவசியம் இல்லை. இங்கே எனக்கு பெரிய பங்களாவே இருக்கு. உனக்கு என்ன பத்தி தான் நல்லா தெரியுமே, என் கிட்ட இவ்வளவு சொத்து இல்லேனா, என் கிட்டதான் நீ பழகி இருப்பாயா…?

அப்புறம் இனிமே இந்த கெஸ்ட்டு ஹவுஸில் தங்குறது அதெல்லாம் இனிமே எனக்கு செட் ஆகாது.” என்று கூறிவிட்டு அவளை திரும்பி பார்க்காமல் தன் வேக நடையுடன் விரைந்து சென்றான். அவன் செல்வதையையே வஞ்சத்துடன் பார்த்திருந்தாள்.

பிரதாப் தனக்காக காத்திருக்கும் காரில் அமர்ந்தவுடன். சென்னை ஓட்டலை விலை பேசும் முதளாளியை அலைபேசியில் அழைத்திருந்தான்.

அந்தப் பக்கம் அலைபேசி எடுத்தவுடன் “மிஸ்டர் சந்தானம்… நான் பிரதாப்” என்று பிரதாப் தான் பேச வேண்டியதை பேசி முடிப்பதற்க்குள் “சொல்லுங்க பிரதாப் நான் உங்களுக்காக தான் நானும், என் நண்பனும் வெயிட் பண்னிட்டு இருக்கிறோம்,” என்ற எதிர் பக்க பதிலில் அவர்களுக்கு பணம் இப்போது எவ்வளவு முக்கியம் என்று பிரதாப்பின் பிஸ்னஸ் மூளை வேகமாக செயல்ப்பட்டது.

“சார்... சார்“ என்ற எதிர்ப்பக்க அழைப்பில், “லைனில் தான் இருக்கேன். இங்க சிக்னல் விட்டு விட்டு கேட்குது. ஆ… நான் சென்னை லான்டு ஆகிவிட்டேன். இங்கு எனக்கு ஒரு பங்களா இருக்கு அங்கு சென்று, இன்னும் ஒன்னவரில் உங்க ஓட்டலில் இருப்பேன்.” என்று கூறினான்.

அந்தப்பக்கம் “ஏன் சார் நம்ம ஓட்டலே இருக்கும் போது நீங்க இங்கேயே வந்துடுங்க. நானும் என் பிரண்டும் வந்துவிடுகிறோம். சேர்ந்து சாப்பிட்ட மாதிரியும் ஆயிடுச்சி, நம்ம ஓட்டல் தரத்தை பார்த்த மாதிரியும் ஆயிடுச்சி“ என்ற யோசனை பிரதாப்புக்கு பிடித்துவிட சரி என்று சம்மதித்தான்.

கார் நேராக அவர்கள் சொன்ன ஓட்டலுக்கே செலுத்த சொன்னான். அங்கு சென்றவுடன் அவனுக்கு என்று ரூம் ஆல்ரெடி ரெடியாக இருந்தது. தன் லக்கேஜை ரூம் சர்வீஸ் வந்து வைத்தவுடன். ரூம் லாக் செய்து தான் வந்து சேர்ந்ததை தன் அப்பா, அம்மாவுக்கும் தெரிவித்தான்… பின் தன் பி ஏ வும் நண்பனுமாகிய அசோக்குக்கு அழைத்திருந்தான் …

அந்தப் பக்கம் “சொல்லு பிரதாப் என்றதுக்கு ”உடனே உனக்கு நான் சொன்ன வேலையைய் ரவிக்கு மாற்றி விட்டு அடுத்த பிளைட் பிடித்து சென்னை வந்து சேர்.” என்று போனில் தனக்கு அழைப்பு விடுத்த பிரதாப்பிடம் “என்ன பிரதாப் ஏதாவது பிரச்சினையா…?” என்றதுக்கு “ஏன் பிரச்சினைனா தான் உன்னை தேடுவேனா? வானா…. வா…” என்று சொன்னதுக்கு வேறு எதுவும் சொல்லாமல் சரி என்று போனை வைத்தான்.

ஏன் என்று தெரியவில்லை இங்கு வந்தவுடன் துணைக்கு அசோக் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அது தான் அவனுக்கு அழைப்பு விடுத்தான். பின்பு ரெடியாகி அவர்களுக்காக டைனிங் ஹால் எங்கு இருக்கு என்று வெயிட்டரிடம் விசாரித்து விட்டு அங்கு அவர்களுக்காக காத்திருந்தான்.

அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் உடனே சந்தானம் வந்து விட்டார். அவரிடம் கைகுலுக்கி தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான். அவரும் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார்.
 
???

ஹோட்டல் அக்காவோடதா???

மாடல் இவனை விட்டுடுவாளா???

அசோக் இப்போ எதுக்கு???
டென்ஷன் ஆகுறானோ???
 
Last edited:
Top