Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 4 2

Advertisement

Admin

Admin
Member
ஏனென்றால் இதற்கு முன் அவர்கள் நேரில் சந்தித்தது கிடையாது. அனைத்தும் போனில்தான்… ”நீங்க உங்க பிரண்டையையும் அழைச்சிட்டு வரேன்னு சொன்னிங்க… எங்க வரலையா?” என்று பிரதாப் சந்தானத்தை பார்த்து வினாவினான்.

“என்னுடன் தான் வந்தார் கார் பார்க்கிங்கில் தெரிந்தவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நாம் அவருக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்து விடுவோம்”, என்று கூறி தன்னையே பார்த்துக் கொண்டு பக்கத்திலேயே காத்திருக்கும் தன் ஓட்டல் வையிட்டரிடம், அழைத்து தேவையானதை ஆர்டர் கொடுத்து விட்டு பின் வைட்டரிடம் பிரதாப்பை காட்டி இனிமேல் இவர் தான் உங்களுக்கு முதாளாளி என்றதுக்கு அந்த வையிட்டர் பணிவுடன் வணக்கம் தெரிவித்தார். சரி… என்று தன் தலையசைப்புடன் அவன் வணக்கத்தை ஏற்றுக் கொண்டான்.

பிரதாப் சுற்றிலும் தன் பார்வையை செலுத்தி ஓட்டலின் தரத்தை ஆராய்ந்துக் கொண்டிருக்கும் போது எதிரில் நிழலாடுவதை உணர்ந்து தன் பார்வையை எதிரில் செலுத்தினான். தன் எதிரில் இருப்பவர்களை பார்தவுடன் இரு வேறு உணர்வுகளுக்கு ஆளாகினான். ஆம் எதிரில் கேசவமூர்த்தியும் , பத்மினியும், நின்றுக் கொண்டிருந்தனர்.

சந்தானம் பிரதாப்பிடம் இவர் தான் நான் சொன்ன பிரண்டும்….. அவரின் மகள் பத்மினி என்று அறிமுகப்படுத்தினார். பின் கேசவமூர்த்தியிடம் கேசவா இவர் தான் என் ஓட்டலை வாங்க போகிறவர் என்று முறையாக அறிமுகம் படுத்தி வைத்தார். இந்த இடைப்பட்ட நேரத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு பிரதாப் இருவருக்கும் பொதுவாக தலையசைத்து வைத்தான்.

ஆனால் கண்கள் பத்மினியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் பத்மினி அறிமுகத்துக்கு எந்த ரியாக்க்ஷனும் இல்லாமல் ஓட்டலை சுற்றியே கண்கள் ஆராய்ந்துக் கொண்டிருந்தது.

இவனாவது அறிமுகத்துக்கு தலையசைத்து வைத்தான். அவன் எப்போதும் அப்படி தான் கை குலுக்கி விஷ் பண்ணமாட்டான். வெறும் தலையசைப்பு தான். ஆனால் அவள் அதுவும் இல்லாமல் தன்னை சட்டையே பண்ணாமல் இருப்பது அவனை அவமானம் படுத்தியது போல் இருந்தது.

அதுவும் தன்னை யார் பார்த்தாளும் அவர்களின் கண்களில், ஆண்களாக இருந்தால் பொறாமையும், பெண்களாக இருந்தால் மயக்கத்தையும் தான் பார்த்திருக்கிறான். இவள் எந்த ஒரு ரியாக்க்ஷனும் இல்லாமல் இருந்தது. அவன் மனதில் சொல்ல முடியாத ஒரு உணர்வு.

ஆனால் பாவம் அவன் அறியாதது தூரத்திலிருந்தே அவனை பார்த்த அவள் தோழிகள் இவனை காண்பித்து இவனின் ஆன்மையை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது இவளும் அவனை பார்த்தாள்.

இவள் பார்க்கும் போது அவன் தன் அருகில் இருப்பவரிடம் பேசிக் கொண்டே தன் இடது கரத்தால் தன் இடது காதின் பின் பக்கத்தை தடவிக் கொண்டிருந்தான். அது அவனின் மேனரிசமாக இருக்கலாம். ஆனால் அதுவும் அவனுக்கு ஸ்டைலாகவே இருந்தது.

அவனின் ஆறடி உயரமும் சிவந்த நிறமும்… அவனின் நிறத்தை பார்த்தவுடன் தன் கையை பார்த்தால் நம்மோட கலராக இருப்பானோ என்று…. தன்னுடைய கையை பார்த்தவுடன் தான் அப்பாடி இல்லே என்னோட கொஞ்சம் கம்மி தான் என்று மனதில் சிறிது மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆனால் ஒரு ஆண் மகனுக்கு இந்த கலர் ஜாஸ்திதான் என்று இவ்வளவும் தன் மனதுக்குள்ளாக நினைத்து கொண்டே தன் பார்வையை அவனிடேமே இருந்தது.

அப்போது பக்கத்தில் இருக்கும் ஷாலினி ஏய்… அங்க பாரு உன் டாடி என்றவுடன் தான் தன் நிலையடைந்தால். அவள் டாடி என்றவுடன் அவள் காமித்த பக்கத்தில் தன் பார்வையை செலுத்தினாள்.

அவள் தன் தந்தையை பார்த்தவுடன் தான்… ஏதோ பெரிய தவறு செய்தது போல் உணர்ந்தாள். நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன். பெருசா அப்பாவிடம் நீங்கள் பார்ப்பவரைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் என்று விட்டு இப்போது எவனோ முன்பின் தெரியாதவனை ரசித்துக் கொண்டிருக்கிறேனே.

நான் அவ்வளவு பலகினமானாவாளா? என்று தன்னையே திட்டிக் கொண்டால், தந்தையும் தன்னை பார்த்து விட்டு அழைக்கவும் தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு தன் தந்தையை நாடி சென்றாள்.

அந்தோ பரிதாபம்! அவர் நேராக தான் இவ்வளவு நேரமாக யாரை ரசித்துக் கொண்டிருந்தாலோ அவனிடேமே அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தால்….. அவள் தான் என்ன செய்வாள். அதனால் தான் அவனை விடுத்து அனைத்து பக்கத்திலும் தன் பார்வையை பதிய விட்டாள். இதையறியாத பிரதாப் மனதில் திமிர்பிடித்தவள் என்று நினைத்துக் கொண்டு அதை அடக்குவதாக அவனே சபதமும் எடுத்துக்கொண்டான்.

திமிரை அடக்குவதைப் பற்றி மனது சபதம் எடுத்தாலும்... கண்கள் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தது அது தாங்க சைட்டுதான். பெண்களுக்கு ஏன் ரோஸ் நிறம் மிகவும் பிடிக்கிறது என்பதுக்கான அர்த்தத்தை அவளை பார்த்தவுடன் தான் அரிந்துக் கொண்டான்.

ஆம் அந்த நிறம் அவள் உடலுக்கு அவ்வளவு அழகாக இருந்தது. டிவியிலும் போட்டோவிலும் பார்த்ததை விட நேரில் அவ்வளவு அழகாக இருந்தாள்.

நேரில் அவள் சருமம் அவ்வளவு பலபலப்பாக மின்னியது. தன்னாலேயே அவற்றை பரிசோதிக்க கைமேல் எழுந்தது. நல்ல வேலை அதற்க்குள் சந்தானம் “என்ன சார் ஓட்டலை சுற்றி பார்க்கலாமா?” என்ற கேள்விக்கு, “என்ன ஓட்டல்” என்று கேட்டான் பார் ஒரு கேள்வி….. அந்த கேள்வியில் மூவரும் அவன் முகத்தைதான் பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் தன் தவறை உணர்ந்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

பின் பக்கா பிஸ்னஸ்மேனாக மாறி தன் பார்வையை அவளிடம் செலுத்தாமல்! “ம்...சொல்லுங்க சந்தானம் ஓட்டலில் எந்த பகுதியை சுற்றி பார்க்கலாம்” என்று கேட்டான் மறந்தும் அவன் பார்வையை கேசவமூர்த்தி பக்கம் திருப்பவில்லை. ஏன் என்றால் கண்டிப்பாக அவரை பார்த்தால் தன் வெறுப்பு தன் கண்களிள் தெரிந்துவிடும். அதனால் தான்… அதுவும் அவர் மகள் முன் செய்யவிரும்பவில்லை.

முள்ளை முள்ளால் எடுப்பது போல் தன் குடும்பத்திடம் கேசவமூர்த்தி என்ன செய்தாரோ திருப்பி அவருக்கு செய்ய விரும்பினான். அதற்கு கண்டிப்பாக பத்மினியிடம் எந்த காரணத்தைக் கொண்டும் அவளின் கண்ணோட்டத்தில் தான் தாழ்ந்து போவதை விரும்பவில்லை.

அந்த நேரம் சந்தானமிடம் ஒரு ஊழியன் வந்து ஏதோ வினவினான். சந்தானமும் வந்து விடுவதாக அனுமதி கேட்டு விடைப்பெற்றான். கேசவமூர்திக்கும் போன் வர அவரும் தனிமையில் பேச சென்றார். அவர்கள் இருவரும் சென்றவுடன் பத்மினிக்கு அவனிடம் தனித்திருப்பது ஒரு மாதிரியாக இருந்தது.

அதற்குள் பத்மினியின் தோழிகள் அவளை தேடி அங்கேயே வந்து விட்டார்கள். பத்மினி தன் தோழிகளை பார்த்ததும் பதட்டம் அடைந்தாள். அவளை பார்க்க கூடாது என்று நினைத்திருந்தாலும் அதை செயல்படுத்த முடியாமல், அவளுக்கே தெரியாமல் கீழ் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதனால் அவள் பதட்டத்தை பார்த்து விட்டான். யோசனையாக… இவள் யாரை பார்த்து இப்படி பதட்டம் அடைகிறாள் என்று அவள் பார்வை செல்லும் இடத்தை தானும் பார்த்தான். அவர்களை பார்த்தவுடன் தெரிந்து விட்டது அவர்கள் பத்மினியின் தோழிகள் என்று ஏன் என்றால் ஷாலினியை டிடக்டிவ் கொடுத்த செல் வீடியோவில் பார்த்திருக்கிறான்.

ஆனால் இவள் ஏன் இவர்களை பார்த்து பதட்டம் அடைகிறாள். காரணத்தை அறிய அவர்களை நோட்டம் விட ஆராம்பித்திருந்தான்.

பத்மினி ஏன் பயந்தால் என்றால்…. ஷாலினி பற்றி நன்றாக தெரிந்ததால், அவள் யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டாள். லானில் வந்தவுடன் முதலில் ஷாலினி தான் பிரதாப்பை பார்த்து மற்ற தோழிகளிடம் அவனை காண்பித்து பேசிக் கொண்டிருந்தால்… இப்போது அருகில் வந்து என்ன செய்ய போகிறாளோ என்று பயந்திருந்தாள்.

அவள் பயந்த மாதிரியே ஷாலினி அருகில் வந்தவுடன், ”ஏய்! நீ உங்க அப்பாவை பார்த்து தானே வந்தே! இப்போ இவர்…” என்ற அவள் கேள்விக்கு பத்மினி பதில் அளிக்கும் முன்பே “இரு…. இரு… நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் நானே கண்டுப்பிடித்து விட்டேன். இவர் உன் அப்பா பார்த்திருக்கும் மாப்பிள்ளை தானே…” என்ற அவள் அரிய கண்டுப்பிடிப்பை சொல்லி அவள் மானத்தை வாங்கினாள்.

தலையை பிரதாப் பக்கம் திருப்பாமல் “ஏய்… முதல்லே நீங்க எல்லாம் நாம் புக் பண்ணிருக்கும் டேபுள்ளுக்கு போங்க…! நான் அப்பா வந்தவுடன் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்.” என்றால். அதையெல்லாம் சட்டை பண்ணாமல். மற்ற தோழிகள் அனைவரும் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் ரவுண்டுக் கட்டி அமர்ந்தார்கள்.

அவர்கள் அமர்ந்ததும் பத்மினிக்கு பதட்டமும், பிரதாப்புக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. பத்மினியின் பேச்சை கேட்க அவன் அவ்வளவு ஆர்வமாக இருந்தான். பத்மினி அய்யோ…. இந்த அப்பா எங்க போனார்! அங்கிளும் இன்னும் காணவில்லையே என்று அவள் தன் தோழிகளை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

அவள் பார்வையை யார் சட்டை பண்ணுவது! அவர்கள் பாட்டுக்கு பிரதாப்பின் பக்கம் முகத்தை பார்த்தா மாதிரி அமர்ந்துக் கொண்டு “ சார்… நாங்க பத்மினியின் தோழிகள் ஹாய்” என்று கைக்குலுக்கி அவர்களே தங்களை அறிமுகம் செய்துக் கொண்டார்கள்.

அவனும் “ஐயம் பிரதாப்” என்று தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டான். ஷாலினி உடனே “பிரதாப் நாங்க முதலிலேயே வந்தவுடன் யார் இந்த ஹான்ஸம் யாருக்கு கொடுத்து வைச்சிருக்குன்னு பேசிக்கிட்டு இருந்தோம்.

அதுக்கு இவள் அந்த கொடுத்து வைச்சது நீ இல்லேன்னு சொன்னாளே…. அது நான்னு சொன்னாளா…..“ என்று ஷாலினி மேலும் பேசும் முன் பத்மினி இடை புகுந்து “இவர் அப்பாவின் பிரண்டோட இந்த ஒட்டலை வாங்க வந்து இருக்காரு…” இவள் சொல்லி முடிப்பதற்க்கும் சந்தானமும், கேசவமூர்த்தியும் ஒன்றாக வருவதற்க்கும் சரியாக இருந்தது.

அவர்களை பார்த்தவுடன் தான் அவளுக்கு நிம்மதியே. பிரதாப் அவள் முகபாவத்தையே பார்த்திருந்ததாள் அவளின் அந்த செயல் அவனுக்கு பிடிக்கவில்லை. இங்கு இவன் அவளிடம் தனியாக நேரம் செலவிட விரும்பினான். இவள் தன் பக்கம் கூட திரும்பி பார்க்காமல் இருக்கிறாள். அவள் அப்பாவை பார்த்தவுடன் அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி… என்று மனதுக்குள் பொங்கி கொண்டிருந்தான்.

கேசவமூர்த்தி வந்தவுடன் தன் மகள் அருகில் அமர்ந்து தலையை தடவியவாரே “என்னம்மா போர் அடிச்சுதா” என்றார் பத்மினி தந்தையை பார்த்து “இல்லேப்பா அதுக்குள் என் பிரண்டுங்க வந்துட்டாங்கப்பா. சரிப்பா நாங்க கிளம்புறோம். இன்னிக்கு நம்ம பூஜாவோட பர்த்டே அதை செலப்பிரெட் பண்ணதான் நாங்க இங்க வந்தோம்” என்று தந்தையிடன் விடைப் பெற்று சந்தானத்திடமும், ப்ராதாப்பிடமும் சிறு தலை அசையசைப்பில் விடை பெற்றாள்.

அவர்கள் சென்றவுடன் சந்தானத்தின் முகத்தை பார்த்து மட்டும் தன் டீலீங்கை முடித்து விட்டு மத்த டீடையில் தன் பி.ஏ வந்தவுடன் முடித்து விடலாம் என்று சீக்கிரம் தன் பேச்சி வார்த்தையை முடித்தான். பின்பு இருவரும் விடைப்பெற்று சென்றவுடன் அவசரம் அவசரமாக தன் ரூமுக்கு சென்று தன்னுடைய லக்கேஜை காலி செய்துக் கொண்டு தன் பங்களாவுக்கு சென்றான்.

அவனால் நேரில் பத்மினியை பார்த்து விட்டு யாரோ மாதிரி தள்ளியிருக்க முடியவில்லை. அதுவும் அவள் தன் தந்தையிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்க்கும் போது பொறாமையாக இருந்தது. அக்கா இறந்தது சொல்லாமல் விட்டதுமில்லாமல் அவர்கள் மகளை இருபது வருடம் தன் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்து வைத்தவருக்கு தண்டனையாக காலம் முழுவது அவரிடம் இருந்து அவர் மகளை பிரிக்க எண்ணினான்.
 
???

என்னம்மா friends இப்படி சொதப்பிட்டாங்களே மாமா முன்னாடி......
மாமா பழிவாங்க நினைக்கிறார்.....

எப்படி approach பண்ணுவான் பிரதாப்???
அவளுக்குக்கு புடிக்கும் but அப்பா சொல்லும் மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறா.....

சந்தானம் தான் help பண்ணுவாரா???
 
Last edited:
Top