Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 8 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்------8

இவை அனைத்தையும் தடுக்க முடியாத நிலையில் சகுந்தலா அம்மா வெறும் பார்வையாளராக மட்டும் நின்று விட்டார். அவருக்கு தெரியும் தன் மகன் இனிமேல் தன் பேச்சை கேட்க மாட்டான் என்று. சகுந்தலா அம்மாவுக்கும் பத்மினியின் விருப்பம் அவளின் முகத்தை பார்த்தே தெரிந்து விட்டது. இனிமேல் தான் என்ன தான் சொன்னாலும் பயன் இராது என்று.

மேலும் அவர் என்னதான் சொல்வார் ,என் மனதுக்கு சரி என்று பட வில்லை என்றா? திருமணத்தை தடுக்க எதாவது ஆதாரம் இருக்க வேண்டமா…?மேலும் நமக்கே இன்னும் சரியாக விளங்க வில்லையே. இது நமக்கும் கூட பிரம்மையாக இருக்கலாம்.இத் திருமணத்தால் தன் பேத்தி மகிழ்ச்சியுடன் இருக்கலாம் இல்லையா…?.என்று தன் மனதை தானே தேத்திக் கொண்டாள்.பின் நடப்பதை பார்ப்போம் என்று அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றார்.

பத்மினிக்கு பிரதாப்பின் முகத்தை பார்ப்பதற்கே தயக்கமாக இருந்தது. ஏன் என்றால்?அவன் முகத்தை பார்க்கையில் அவன் தன்னை பார்க்கும் போதும்… அவன் கண் தன் பார்வையில் கலக்கும் போதும்…. தன் உடலில் சொல்லவே முடியாத ஒரு உணர்வு. தன்னால் இயல்பாக கூட காட்டிக் கொள்ள முடிய வில்லை.நெஞ்சுக் கூட காலியான பிரம்மை.தன் முக சிவப்பையும் கட்டுப்படுத்த முடிய வில்லை.அதனால் அவன் முகம் பார்ப்பதையே தவிர்த்தாள்.

ஆனால் அசோக்கை பார்த்தவுடன் ஷாலினியுடன் தோன்றும் ஒரு தோழமை உணர்வுவே ஏற்பட்டது. அதனால் எந்தவித விகல்பமும் இல்லாமல் அவனிடம் பத்மினியால் பேச முடிந்தது. அந்த அடிப்படையில் அசோக்கை பார்த்தவாறு “வாங்க சாப்பிடலாம்”என்று ஒரு புன் சிரிப்புடன் அழைப்பு விடுத்தாள்.

அசோக்கும் பதிலுக்கு சிரித்தவாறே அவளுடன் இணைந்து நடந்து சென்றான்.பாவம் அவன் என்னவோ…. தன் நண்பனிம் மனைவி மற்றும் எதிர்கால முதலாளி ஆயிற்றே என்ற அடிப்படையில் தான் தன் சிரிப்பை கொஞ்சம் தாரளமாகவே படர விட்டான்.

ஆனால் அந்த சிரிப்பே தனக்கு ஆப்பு வைக்கும் என்று அவன் எதிர் பார்க்க வில்லை.ஆம் பிரதாப் என்ன தான் தன்னுடைய திருமண விஷயமாக பேசிக் கொண்டிருந்தாலும்….பத்மினியுடன் வந்த ஷாலினியை பார்த்தவுடன் அசோசக் முகத்தில் தோன்றிய ஆர்வத்திலேயே அவன் மனதை தெரிந்துக் கொண்டான்.அசோக் பெண்களை அவ்வளவு ஆர்வமாக எல்லாம் பார்க்க மாட்டான்.அதனால் அசோக்கின் ஷாலினியுடனான பார்வையிலேயே அவன் விருப்பத்தை தெரிந்துக் கொண்டான்.

அதனால் ஏற்கனவே கடுப்பில் இருந்த பிரதாப்.தன்னிடம் பேசாத பத்மினி அசோக்கிடம் சிரித்து பேசியது அவனுக்கு எரிச்சலை வரவழைத்தது.அது மட்டும் இல்லாமல் பதிலுக்கு அசோக்கும் அவளிடம் சிரித்தவாரே உடன் சென்றது.அவனுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. பிடிக்கவில்லை என்றால்…. அவன் சந்தேகம் படுகிறான் என்று இல்லை. ஏன் என்றால் அவனுக்கு அசோக்கை பற்றி நன்கு தெரியும்.

மேலும் பத்மினியுடன் பழக்கம் இல்லை என்றாலும் பத்மினியிடமும் அவனுக்கு சந்தேகம் இல்லை. என்ன ஒன்று அவள் தன்னிடம் பேசாமல் அசோக்கிடம் பேசியதில் தான் அவனுக்கு பிரச்சினையே….இதனால் தன் கவனத்தை ஷாலினியிடம் திருப்பினான்.

பிரதாப் ஷாலினியிடம் மெல்ல சிரித்த வாறே... “உங்கள் பெயர் என்ன”?என்ற பிரதாப்பின் ஒரு கேள்வியிலேயே பத்மினி சட்டென்று திரும்பி பிரதாப்பையையும், ஷாலினியையும், ஒரு சேர பார்த்தாள்.

பத்மினியின் இந்த பார்வையால் பிரதாப் குஷியாக போய் விட்டான்.அவன் என்னவோ அசோக்கை கடுப்பு ஏத்துவதற்க்கே ஷாலினியுடன் பேசினான். ஆனால் பத்மினி கடுப்பாவாள் என்பது அவன் எதிர் பாராதது அதனால் மேலும் பத்மினியின் கவனம் தன் பக்கம் திருப்புவதற்கு ஷாலினியிடன்” நீங்கள் எந்த காலேஜில் படிக்கிறீர்கள்?என்ற பிரதாப்பின் கேள்விக்கு…

நம் புத்தி சாலியான ஷாலினி முதலில் பிரதாப் தன்னிடம் வலிய வந்து தன் பெயர் கேட்டது மகிழ்ச்சி அளித்தாலும் பின் பத்மினியை பார்த்தவாறே தான் படிக்கும் காலேஜை பிரதாப் கேட்டவுடன் அவள் உஷாராகி விட்டாள்.

அவள் விளையாட்டு குணம் உடையவள் தான். ஆனால் விள்ளங்கமானவள் கிடையாது.பிரதாப்பை பார்த்தவுடன் அந்த வயதுக்கே உரிய வகையில் தன் தோழிகளிடம் கலைய்த்தாலே தவிர மற்றப்படி வேறு அபிப்ராயம் அவளுக்கே கிடையாது.

அதனால் பிரதாப்பின் பேச்சில் தன்னை வைத்து பத்மினியுடன் விளையாட பார்க்கிறான் என்று சடுதியில் புரிந்துக் கொண்டாள்.இவளும் தன் விளையாட்டை விளையாடா ஆரம்பித்தாள்.பிரதாப்பிடம் தானும் சிரித்துக் கொண்டே “***** காலேஜில் படிக்கிறேன் என்று கூறினாள்.

பிரதாப்புக்கு இவள் என்ன கூறுகிறாள்? பத்மினியுடன் தானே இவளும் படிக்கிறாள், என்று நினைத்தவாறே “ நீ பத்மினியுடன் தானே படிக்கிறாய். பத்மினி ****காலேஜ் தானே” என்று தன்னை அறியாமல் கூறி விட்டான்.

மேலும் ஷாலினியை ஒருமையிலும் அழைத்திருந்தான்.ஆம் ஷாலினியை யாரோ போல் அவனால் என்ன முடிய வில்லை.வீடியோவில் பத்மினியுடன் ஷாலினியையும் பார்த்த போதே அவளின் விளையாட்டு தனமான பேச்சை ரசித்தான்.

மேலும் இப்போது தன் நண்பனின் மனதில் இடம் பிடித்தவள் என்ற கூடுதல் தகுதியும் பெற்றதாள் தன் உடன் பிறந்த தங்கையாகவே கருதினான்.அதனால் அவளை வெளி ஆளாக தள்ளி வைக்காமல் உரிமையில் ஒருமையில் தன்னை அறியாமலேயே அழைத்து விட்டான்.

ஷாலினி பிரதாப்பிடம் சிரித்தவாறே “இப்ப வந்தீங்களா… வழிக்கு எப்படி எப்படி நீங்க உங்க ஆள வெறுப்பு ஏத்துறதுக்கு நாங்க ஊறுகாயா”?என்ற பதிலில் பிரதாப் ரசித்து சிரித்தான்.

அசோக் மனதில் இங்க என்ன தான்டா நடக்குது. பிரதாப் சென்னை வந்து ஆளே மாறி போயிட்டான்.கேசவமூர்த்தியிடம் தழைந்து போவது என்ன? சரி அதாவது பரவாயில்லை,...அவனுக்கு அவன் காரியம் நடக்க வேண்டும். ஆனால் தன்னிடம் மட்டும் தான் பிரதாப் சிரித்து பேசுவான்.

ஆனால் இப்போது என்னன்னா?பைய்யன் ஷாலினியுடன் இப்படி சிரித்து பேசியது… அவனுக்கு ஆச்சரியமாக இருந்ததே தவிர தவறாக நினைக்க வில்லை. அசோக் இவ்வாறு நினைத்தான் என்றால்… பத்மினிக்கு மனதில் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது.

ஷாலினியை முறைத்தவாறே வா நாம் போய் பாட்டிக்கு உதவி பண்ணலாம் என்று கையை பிடித்து அழைத்து சென்றாள். தவறு இழுத்து சென்றாள்.பிரதாப்பின் உதட்டில் புன் சிரிப்பை தவழ விட்டு போ ஷாலு சாப்பிட்டு நாம் பொறுமையாக பேசலாம். என்று சிரித்து கை அசைத்து விடை கொடுத்தான்.

அசோக் அவன் கையை தட்டி விட்ட வாரே… “ஏய்… கேசவமூர்த்தி சார் வராருடா, என்று கூறியவுடன் சட்டென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.பின் என்ன இப்போது தான் ஆயிரத்தெட்டு விசராணை கமிஷன் வைத்து ஒரு வழியாக பெண்ணை கொடுக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்காங்க அதை அசோக்கை வெறுப்பு ஏத்துறேன் பத்மினியை வெறுப்பு ஏத்துறேன்னுட்டு நான் ஷாலினியுடன் பேச போய் அதனால் பொண்ண கொடுக்க வில்லை என்றால்….,அவன் கவலை அவனுக்கு.

அசோக் பிரதாப்பிடம் “இவ்வளவு பயம் இருக்கு இல்லே பின்ன என்ன தேவைக்குன்னு நீ ஷாலினியுடன் பேசிக் கொண்டு இருக்கே….பேசுவது கூட பரவாயில்லை. இதோ இங்க இருக்க டையினிங் ரூமுக்கு போறதுக்கு என்னமோ வெளி நாட்டுக்கு போற மாதிரி கையை அசைச்சு விடை கொடுக்குற…..

அடங்கி இரு இன்னும் கல்யாணம் கூட முடிய வில்லை என்று கூறி தன்னால் ஷாலினியுடன் பேச முடிய வில்லை இவன் மட்டும் பேசுகிறானே என்ற ஆதாங்கத்தை இவ்வாறு பேசி தீர்த்துக் கொண்டான்.

பிரதாப்பும் அசோக்கிடம் “நீ என்ன தேவைக்கு பத்மினியுடன் பேசினாயோ அதே தேவைக்காக தான் நானும் ஷாலினியுடன் பேசினேன்” என்று கூறி கண் அடித்தான்.

அசோக்குக்கு வெக்கமாக போய் விட்டது ஒரு அசட்டு சிரிப்பை உதித்த வாரே “எப்படி டா கண்டு பிடிச்சே”என்ற கேள்வியில் “ம்….நீ ஷாலினியை பார்த்தவுடன் ஜொள்ளு விட்டாய் அல்லவா அப்போது பாத்து காற்று வேறு வீசுச்சா உன் ஜொள் என் மேல் தெளிச்சது. நான் என்னடா ஜீன் மாதம் மழை பெய்கிறேதேன்னு உன் கிட்டே சொல்லலாம் என்று உன்னை கூப்பிட திரும்பினால் ….அப்போது தான் தெரிஞ்சது… அது மழை இல்லை நீ விட்ட ஜொள்ளுன்னு….”
 
Top