Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 9 1

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் - 9

மறுநாள் காலை ஐந்து மணி அளவில் எப்போதும் போல் பிரதாப்புக்கு விழிப்பு வந்து விட்டது. அவன் செய்யும் வொர்க் அவுட் முடித்து விட்டு தன் முகத்தில் இருக்கும் வியர்வையை டவளால் துடைத்தவாரே…. பால்கனியில் தன் தோட்டத்தை பார்த்திருந்தான்..ஏனோ கண் முன் நேற்று பத்மினி வீட்டில் பார்த்த தோட்டமே வந்து நின்றது.

அதுவும் பத்மினி வீட்டில் அதிக அளவில் வெள்ளை நிறப் பூக்களே இருந்தது நினைவுக்கு வந்தது.ஒரு சமயம் பத்மினிக்கு வெள்ளை நிறம் பிடிக்குமோ…?ஆம் அவன் நினைத்தது சரி தான். பத்மினியின் திட்டப்படி தான் கேசவமூர்த்தி தோட்டத்தை அமைத்தார்.

அதுவும் வெறும் பூக்களை மட்டும் வைக்காமல் இயற்கை உரத்தில் வீட்டுக்கு தேவையான காய்கரியும் வைக்கும் ஐடியாவும் பத்மினியோடது தான்.அதுவும் விடுமுறை நாளில் அவளும் தோட்டத்தில் இறங்கி விடுவாள்.அவளுக்கு தோட்டம் என்றால் மிகவும் பிடிக்கும்.

பத்மினியின் நினைவிலேயே இருந்த பிரதாப்பின் கவனத்தை செல் போனின் ரிங்டோன் கலைத்தது.டிஸ்பிளேயரில் தந்தையின் எண்ணை பார்த்தவுடன் தன் கனவில் இருந்து விழித்தான். தன் தந்தையிடம் எப்படி தன் திட்டத்தை சொல்வது என்ற யோசனையிலேயே காலை அட்டன் செய்தான்.

“சொல்லுங்கப்பா…..நீங்க எப்படி இருக்கீங்க,? அம்மா எப்படி இருக்காங்க….”?என்ற பிரதாப்பின் கேள்வியில்….

“நானும் அம்மாவும் நல்லா இருக்கோம்பா…..அப்புறம் நீ போன விஷயம் என்ன ஆச்சு? உன் அம்மா இப்போதே என்னை தொன...தொனக்க ஆராம்பிச்சிட்டா…. எப்போது என் பொண்ணு சாந்தியையும், பேத்தி பத்மினியையும் கூட்டிட்டு வருவீங்கன்னு. நானும் ஏதோ சமாதானம் சொல்லி சாமளிச்சிட்டு இருக்கேன்.அதிக நாள் சமாளிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.எது இருந்தாலும் சீக்கிரமா முடிக்கிற வழியை பாரு….”என்ற தந்தையின் பேச்சில் தைரியம் பெற்றவனாய்….

“அப்பா அது பத்தி தான் உங்க கிட்டே பேசணும் என்று நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள் நீங்களே போன் பண்ணிட்டிங்க “என்று இழுத்தாவாறு நிறுத்தினான்.

“என்னப்பா எது இருந்தாலும் தைரியமா சொல்லு பிரதாப்…”என்ற தந்தையின் பேச்சில் ஒரு சளிப்பும், விரக்தியும், இருப்பதை கண்டு” என்னப்பா ஏதாவது பிரச்சினையா உங்க பேச்சு ஒரு மாதிரி இருக்கேப்பா….”

“எதை சொல்வது பிரதாப் உன் அம்மா இத்தனை வருடமாக காத்திருந்த மகள் இனி வரவே மாட்டாள் என்று எப்படி அவள் முகத்தை பார்த்து சொல்வது…..என்ற யோசனையிலேயே என் கவனம் வேறு எதிலும் செலுத்த முடியவில்லையே, அதை சொல்ல சொல்கிறாயா….இல்லை கேசவமூர்த்தியின் துரோகத்தால் என் தூக்கம் கெடுகிறதே அதை சொல்ல சொல்கிறாயா…..”எதை சொல்வது.என்ற தந்தையின் பேச்சில் மனம் கனக்க நின்றான்.

என்றும் தன் தந்தை இவ்வளவு விரக்தியுடன் பேசி அவன் பார்த்தது இல்லை.அவர் அறுவது வயதை கடந்து இருந்தாலும்,இளமையுடன் தான் இருப்பார்.தொழிலை தன்னிடம் கொடுத்தாலும் வேறு சமூக செயல்களின் மூலம் சேவை பல செய்து சமுகத்தில் நல்ல பெயர் எடுத்து இருப்பவர். அப்படி பட்டவரின் இன்றைய பேச்சு….. தான் இனிமேல் எதற்கும் தான் செய்வது சரியா…? தவறா….?என்று கலங்க கூடாது என்ற முடிவுக்கு வந்து இருந்தான்.

“அப்பா நீங்க எதுக்கும் கவலை பட வேண்டாம்.எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.நான் உங்க கிட்டே ஒன்று மட்டும் எதிர் பார்க்கிறேன்,என் செயலுக்கு உங்க சப்போர்ட் எனக்கு வேண்டும்.”என்ற மகனின் இந்த பேச்சில் ஒரு நிமிடம் யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்.

“உன் விருப்பம் போல் எது செய்வது என்றாலும் செய்.ஆனால் உன் செயலால் என் பேத்தி பத்மினிக்கு எந்த பாதிப்பும் வர கூடாது.உன் பேச்சில் இருந்தே உன் திருமணம் நாங்கள் இல்லாமல் நடத்த திட்டம் இட்டு இருக்கிறாய் என்று தெரிகிறது.உன் நிலமையையும் என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது.”என்ற தந்தையின் பேச்சில்…

சுழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு பேசும் தந்தையை நினைத்து பெருமை கொண்டவாறே “அப்பா அது மட்டும் இல்லை உங்கள் பெயர்களையே மாற்றி தான் சொல்ல போகிறேன்” என்று கூறி தன் பேச்சை நிறுத்தினான்.

சிறு மௌனத்திற்கு பிறகு சுருக்கமாக “சரிப்பா அது தான் வழி என்று எனக்கும் நன்றாக தெரியும். அதனால் அது படியே செய். ஆனால் எது செய்வது என்றாலும் சீக்கிரம் செய்.எனக்கும் உன் அம்மாவுக்கும் வயது ஆகி விட்டது.கடைசி காலத்தில் எங்கள் பேரன், பேத்தியுடன் காலம் கழிக்க வேண்டும். என்று நினைக்கிறேன்.”என்று அவர் கூறி முடித்தார்.

அப்பாவின் பேச்சை கேட்ட பிரதாப் தன்னை மிக பெருமையாக கருதினான்….இப்படி பட்ட தந்தை அமைந்ததுக்கு. பிஸ்னஸை தன் கையில் கொடுத்தவுடன் முற்றிலும் ஒதுங்கி கொண்டார். தன்னை பற்றி நன்கு தெரிந்தவராக அட்வைஸ் என்று எதுவும் கூறி தன்னை வெறுப்பு ஏற்றாமல்.

அதுவும் தற்போது தன்னுடைய பெண்கள் விஷயம் பற்றி கேள்வி பட்டும் கூட அதை பற்றி ஒன்றும் கூறாமல் நம்மை திருத்த நமக்கே தெரியாமல் திருமணத்தை முடித்து விட நினைத்த அவரை பற்றி நினைக்கவே…..என்ன சொல்வது அவர் ஒரு நல்ல தந்தையாக இருக்கிறார்.நாம் அவருக்கு நல்ல மகனாக இருக்கிறோமா….? என்று தனக்குள்ளாகவே கேள்வி எழுப்பிக் கொண்டான்.

முடிவில் அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். இவ்வளவு காலம் எப்படியோ….ஆனால் இனிமேல் அவர் மனது புன் படும் படி என்றும் நடக்க கூடாது என்று……..

இவ்வளவு யோசனை இடையிலும் அவர் சொன்ன பேரன் பேத்தியை பற்றி நினைக்கையில் பத்மினி சிறு வயதில் எப்படி இருப்பாள்.? இப்போதும் அவள் முகம் குழந்தை தனமாக தான் இருக்கிறது.அதனால் சிறு குழந்தையிலும் அவள் முகம் இப்போது உள்ளது போல் தான் இருக்கும். அதனால் கண்டிப்பாக தனக்கு பத்மினியை போலவே பெண் குழந்தை தான் வேண்டும் என்று கற்பனை உலகுக்கு சென்றான்.

ஒரு காலத்தில் திருமணம், குழந்தை இவை எல்லாம் ஒரு சுமையே என்று கருதியவன் இப்போது அதில் விருப்பதோடு இணைய எண்ணினான்.

இப்படி பிரதாப்பின் காலை பொழுது மகிழ்ச்சி, கவலை என்று அவன் யோசனையில் மூழ்கி இருக்கும் போதே… ராமைய்யா காலை உணவுக்கு அழைத்தவுடன் தான் நேரம் ஆனதே அவனுக்கு நினைவுக்கு வந்தது.

இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவு இருக்கும் போது… தான் யோசனையிலேயே காலம் கடத்தியதில் தன்னையே திட்டிக் கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தான்.பின் அவன் செயல் ஜெட் வேகம் தான்.

டையினிங் ரூமுக்குள் நுழைவதற்கு முன் ராமைய்யாவிடம் “அசோக் எழுந்து விட்டானா…..?”என்று கேட்டான்.

“இன்னும் எழ வில்லை அய்யா”என்ற ராமைய்யாவின் பதிலில் இன்னும் எழ வில்லையா…?என்ற யோசனையுடனே அசோக்கின் ரூமுக்குள் நுழைந்தான். அவன் எப்போதும் காலையிலேயே எழுந்து விடுவான்.பிரதாப்பை போலவே அவன் என்ன வேலை ஆனாலும் உடற் பயிற்ச்சியை தவற விட மாட்டான் அப்படி பட்டவன் இன்னும் எழவில்லை… என்பது ஏதோ உடல் நிலை சரி இல்லையோ என்று எண்ண வைத்தது.

அந்த பதட்டதுடன் ரூமில் நுழைந்ததால் கட்டிலில் அசோக் படுத்து இருப்பதை பார்த்தவுடன் வேகமாக சென்று அசோக்கின் பெட்சீட்டை இழுத்து அவன் நெஞ்சு, கழுத்தை தொட்டு பார்த்தான்.

பிரதாப்பின் தொடுதலில் அசோக்கின் தூக்கம் சிறிது கெட்டது. ஆனால் முற்றிலுமாக கெட வில்லை. தூக்க கலக்கத்திலேயே தொட்டு பார்த்த பிரதாப்பின் கையை பிடித்து இழுத்து அவனை தன் மேல் போட்டு கொண்டான்.

பிரதாப்புக்கு ஒரு நிமிடம் என்ன நிகழ்ந்தது என்றே புரிய வில்லை.அசோக்கும் தன் மேல் விழுந்த ஷாலினி ஏன் இவ்வளவு கணம் கணக்கிறாள் என்று கண்ணை திறந்து பார்த்தான். தன் மேல் பிரதாப் இருப்பதை பார்த்து ஏய் என்று கத்திய வாறே எழுந்தான்.

பிரதாப் முறைத்துக் கொண்டே “எனக்கு என்னவோ உன் மேல் சந்தேகமாகவே இருக்கு எது என்றாலும் என்னிடம் வெளிப்படையாக சொல்லி விடு தீராத பிரச்சினையே இல்லை. ஒரு நல்ல டாக்டரிடம் கான்பித்தால் சரியாக்கி விடலாம்.”என்ற பிரதாப்பின் பேச்சில் அசோக் கதி கலங்கி விட்ட்டான்.
 
Top