Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 9 2

Advertisement

Admin

Admin
Member


பதட்டதுடன்” ஏய் …..சத்தமா பேசாதடா யார் காதிலாவது விழுந்துட போகுது…..ஏண்டா நானே என் வாழ்க்கையில் இது வரை கனவே கண்டது கிடையாது. முதல் முறை கனவு கண்டேன் அதுவும் உனக்கு பொறுக்கலையா …. உனக்கு நண்பனாகவும், உன் கிட்டே வேலை பார்கிறேன் என்பதற்காக எவ்வளவு தாண்டா தாங்குவது.”

என்ற நண்பனை இப்போ நம்ம என்ன சொல்லிட்டோம் என்று இவன் ஒரு முழம் நீளத்திற்கு டைலாக் விடுகிறான். என்ற யோசனையில் … “ஏய்...இப்போ நான் என்ன சொல்லிட்டேன் உன் நல்லதுக்கு தானே சொன்னேன்.”

“எது நல்லது அவனா…. நீன்னு சொல்வதா…..இருந்து…இருந்து…. இப்போ தான் ஒரு பெண்ணையே நான் லவ் பண்ண ஆரம்பித்து இருக்கேன்.அதுவும் இன்னும் அவகிட்ட கூட சொல்லலே….நீ பேசுறது யார் காதிலாவது வீழ்ந்துச்சு அவ்வளவு தான். என் திருமண வாழ்க்கையே ஒரு கனவாவே ஆகிவிடும்.”என்ற அசோக்கின் பேச்சில்…

“இவ்வளவு பயம் இருக்குல்லே அப்போ ஏண்டா…? எழுப்ப வந்த என்னை இழுத்து உன் மேல் போட்டுக் கொண்டாய்”

என்ற பிரதாப்பின் பேச்சில் பதில் அளிக்க முடியாமல் முகத்தில் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.அசோக்கின் முகத்தையே பார்த்திருந்த பிரதாப் இப்போ என்னதுக்கு இவன் முகத்தை இப்படி அஷ்ட கோணலா பண்றான் என்ற கடுப்புடன் அவனை முறைத்து பார்த்தான்.

அவன் இது வரை பெண்கள் வெக்கப் பட்டே… பார்த்தது கிடையாது. ஆண்கள் வெக்கப்பட்டு எங்கே பார்த்திருக்க போகிறான் பாவம்.நேரம் வேறு சென்று கொண்டு இருக்கிறது அந்த கடுப்பும் சேர்ந்துக் கொள்ள “முதலில் என்னை ஏன் இழுத்து உன் மேல் போட்ட அது முதலில் சொல்? என்று அதிலிலேயே நின்றான்.

அசோக்குக்கும் கோபம் வந்து விட்டது அவனும் கோபத்துடன் “நேரில் தான் ஷாலினியை பார்க்க விடமா இழுத்துட்டு வந்துட்ட…. சரி அதை கூட பொருத்துக் கொள்ளலாம்.ஆனால் கனவில் எங்களுக்கு திருமணம் முடிந்து முதல் இரவும் முடிந்த காலை வேளையில்… கையில் காபியுடனும் தலையில் கட்டிய துணியுடன் வெக்கத்துடன் என்னை தொட்டு எழுப்புகிறாள் நான் இழுத்து என் மேல் அவளை போட்டுக் கொண்டேன். என் மேல் அதிகம் கனம் இருப்பதை தாங்க முடியாமல் தான் கண்ணை திறந்து பார்த்தேன்” என்று உண்மையை ஒத்துக் கொண்டான்.

அசோக்கின் பேச்சில் பிரதாப்புக்கு சிரிப்பு வந்து விட்டது. “அது எப்படிடா எல்லா படத்திலேயும் சரி கதையிலேயும் சரி முதல் இரவு முடிந்தா…. பெண் முதலில் எழுந்து குளித்து அதுவும் தலையில் டவளை வேறு கட்டிக் கொண்டு.ஏண்டா முதல் இரவு முடிந்திருந்தால் அந்த பெண்ணுக்கு டையர்டா இருக்காது….அவள் எப்படி முதலில் எழ முடியும் பேசிக் சென்ஸ் வேண்டாம்.”

என்ற பிரதாப்பின் நியாமான பேச்சில் அசோக் வாய்யடைத்து நின்றான்.பிரதாப் மேலும் “இந்த கால பெண்களிடன் நீ இதை எதிர் பார்ப்பதே தவறு.அதுவும் ஷாலினியிடம் சுத்தம்”என்ற பிரதாப்பின் பேச்சில் கோபம் கொண்டவானாய்….

“ அது என்ன ஷாலினி…. ஷாலினி பத்தி உனக்கு எல்லாம் தெரியுமோ,”?என்று கோபம் கொண்டான். பின் என்ன? இவன் இங்கு கனவு கண்டு அதை தன் நண்பன் கலாய்ப்பது வரை வந்து ஆயிற்று. ஆனால் ஷாலினி தன்னை பார்த்தாளா? என்பதே சந்தேகம் தான்.மேலும் அவள் தன்னிடம் பேசாமல் பிரதாப்பிடம் பேசியது ஒரு பொறாமை உணர்வை தோற்று வித்தது.அந்த கோபமும் சேர்ந்து கொள்ள பிரதாப்பிடம் இவ்வாறு பேசினான்.

பேசிய பிறகு தான் நாம் மிக அதிகமாக பேசி விட்டோம் என்று கருதி தன் நண்பன் முகத்தை பார்த்தான்.அதில் வேறு எந்த வித்தியாசமும் காண முடியவில்லை.இருந்தும் மனது கேளாது…”சாரி பிரதாப் நான் மிக அதிகமாக பேசிவிட்டேன்.”என்ற நண்பனின் மன்னிப்பில் அவன் தோளை தட்டியவாறே …

“இப்போது தான் நீ என் நண்பனாக பேசுகிறாய் என்று சந்தோஷப் பட்டேன்.அதுக்குள் மன்னிப்புன்னு ஏண்டா”? என்று இவன் நண்பனிடம் இவன் கோபம் கொண்டான்.

பிரதாப்பின் பேச்சில் நெகிழ்ந்து அவனின் தோள் மீது தன் கையை போட்டு அவன் வார்த்தையை தான் ஏற்றுக் கொண்டதை மறை முகமாக உணர்த்தினான்.

அசோக்கின் கை மீது தன் கையை வைத்து… “அதுவும் உன் உணர்வு எனக்கு புரியுது முதலில் என்றால் எனக்கு புரிஞ்சு இருக்குமா…?என்பது சந்தேகம் தான். ஆனால்,இப்போது உன்னை என்னால் புரிந்துக் கொள்ள முடியுது. ஷாலினி உன்னிடம் பேசாதது உனக்கு கஷ்டமாக தான் இருக்கும்.ஆனால்,நீ ஒன்று புரிஞ்சுக்கணும் அவளிடம் நீ பேசவே முயற்சி பண்ண வில்லை அப்படி இருக்கும் போது அவளா… எப்படி வந்து உன் கிட்டே பேசுவா…?என்ற நண்பனின் நியாயமான கேள்வியில் வாய் அடைத்து நின்றான்.

“ஆமாம் பிரதாப் நான் அவள் கிட்டே பேசியிருக்கணும் ...என் மேல் தான் தவறு”என்று உண்மையை ஒத்துக் கொண்டான்.

மேலும் சிரித்த வாரே ”அட்வைஸ் எல்லாம் எனக்கு மட்டும் தானா…..? நீ மட்டும் என்னவாம் பத்மினி என்னை திரும்பி கூட பார்க்கலே என் கிட்டே பேசவே இல்லே அப்படின்னு சொல்லலே?”

“ஏய்... உன் விஷயம் வேறு என் விஷயம் வேறு” என்ற பிரதாப்பின் பேச்சில்…குழம்பி போனது தான் மிச்சம் .

அவன் முகத்தை பார்த்தே அவனுக்கு புரிய வில்லை என்று தெரிந்து. “முதலில் ஓட்டலில் அவள் என்னை பார்க்க வில்லை என்று சொன்னது தவறு தான். ஆனால், அதுக்கும் ஒரு காரணம் இருந்தது. உனக்கு தான் தெரியுமே… எப்பவும் பெண்கள் என்னை பார்த்தா… அவர்களே வந்து என்னிடம் பேசுவார்கள்.இப்போ புரியுது பத்மினியிடம் அந்த மாதிரி நடவடிக்கையை நான் எதிர் பார்த்தது என் தவறு தான். ஆனால்,நேற்று அவள் அப்பா எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார். அவளும் தானே திருமணத்துக்கு சம்மதம் சொன்னா….பிறகும் என்னை பார்க்க வில்லை என்றால்….எனக்கு கோபம் வருவது இயல்பு தானே…..”

பிரதாப்பின் நியயாமான கேள்வியில் ஆமாம் என்று அசோக்கால் தலை அசைக்க மட்டும் தான் முடிந்தது.

பின் பிரதாப் சுழ்நிலையை சகஜமாக்க …… “ஆனால் நான் ஒன்று சொல்வேன் நீ கோபம் பட கூடாது.”

“சொல்லு ராசா சொல்லு சென்னை வந்ததில் இருந்து நீ ஒரு மார்கமாக தான் சுத்திட்டு இருக்கே என்ன சொல்லணுமோ சொல்லு”

பிரதாப் தன் புன்னைகையை உதட்டில் மடித்து அடக்கிய வாறே… “எது உண்மையோ.இல்லையோ…. ஆனால் இப்போ நான் சொல்வது உண்மைடா,நீ கனவு கண்ட மாதிரி அந்த டவள்,காப்பி எல்லாம் உன் வாழ்க்கையில் நடக்கும்.”

“ம்…...சொல்லு ஏன் நிறுத்திட்ட என்னை டேமேஜ் பண்ணனும் என்று முடிவு கட்டிட்ட,அப்புறம், என்ன சொல்ல வேண்டியதை சொல்லி முடி.

“பால் மாத்தி நடக்கும்….புரியல நீ தான் டவளைக் கட்டிக் கொண்டு வந்து காப்பியை ஷாலினிக்கு கொடுக்க வேண்டும்.என்ன ஒன்னு ஷாலினினா தலையில் டவளை கட்டிட்டு வருவா நீ என்றால் டவள் இடம் மாரி இடுப்பில் இருக்கும் அவ்வளவே..” என்று கூறி சிரித்தான்.

பிரதாப் தன்னை கிண்டல் செய்கிறான் என்று அறிந்தும் மனம் விட்டு சிரித்தான்.அவன் தன்னையையும் ஷாலினியையும் இணைத்து வைத்து பேசியதே அவன் மனதிற்க்கு அவ்வளவு இதமாக இருந்தது.

“பிரதாப் நீ சொன்ன மாதிரி நடக்குமாடா….?”என்று ஒரு எதிர் பார்புடன் கேட்டான்.

“கண்டிப்பா இரண்டு பெண்ணையையும் நாம் டெல்லிக்கு தூக்குறோம்”

“ஏய் என்னடா சொல்றே”அசோக் அலண்டு விட்டான்.

“ஏண்டா பயப்படுற நீ ஷாலினியை தூக்கு நான் பத்மினியை துக்குறேன் “

“அதையாடா இந்த லட்சனத்துள்ள சொன்ன ஒரு நிமிஷம் நான் ஆடி போயிட்டேன்”

“ஏன் ?நான் ஷாலினியையும் தூக்குவேன். என் மச்சானுக்காக என் தங்கையை தூக்க கூடாதா..?” என்ற பிரதாப்பின் பேச்சில் அசோக் நெகிழ்ந்து நின்றான்.

“பார்த்தியா….நான் என்னதுக்கு வந்தேன் அதை விட்டு உன் கிட்ட அரட்டை அடிச்சிகிட்டு இருக்கேன் பாரு?சீக்கிரம் கிளம்பு கனவு கண்டா மட்டும் போதாது அதற்க்கு தீயா செயல் படணும் நிறைய வேலை இருக்கு என்று தன் மனதின் திட்டத்தை அவனிடம் பகிர்ந்தான்..நான் டையினிங் டேபிளிள் வையிட் பண்றேன் சீக்கிரம் கிளம்பி வா.

அவர்கள் எண்ணம் ஈடேறுமா…...
 
Top