Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! -05

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் ஐந்து:

றுநாள் காலை மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தான் பேரின்பன். இன்னும் ஒரு மாதத்திற்கு சற்று கவனமாக இருக்கும்படி வலியுறுத்தியே அனுப்பி வைத்திருந்தார் மருத்துவர். காண்டீபன் கார் கொண்டு வந்திருக்க, பின் சீட்டில் அமர்ந்த இன்பன், கண்ணை மூடி சாய்ந்துக்கொண்டான்.



நேரே ரெஜிஸ்டர் ஆபிஸ் சென்று திருமணத்தை உறுதி செய்யும்படி கோகிலாவும் இன்பனும் கையெழுத்திட்டனர்.



அதன்பின்னே, வீட்டிற்கு வந்ததும், தங்கம் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து அவனை உள்ளே அழைத்து போக, ஒண்டிவீரர், “இனி கொஞ்ச நாளுக்கு நீ மாடியேற வேணாம்! கீழே இருக்க ரூம்லேயே இரு” என்றார் உத்தரவாய். அவனது பொருட்கள் எல்லாம் முன் கூட்டியே புது அறைக்கு மாற்றப்பட்டிருந்தது. அறைக்குள் சென்றதுமே அவன் கண்கள் தேடியது, வைதேகியை தான்!



அவன் எதிர்ப்பார்த்ததை போல அந்த அறையில் அவன் அன்னையின் நிழல்ப்படம் இல்லை. உடலுடன் சேர்ந்து மனமும் சோர்ந்து போக, கட்டிலை விடுத்து, தரையில் ஒரு பாயை விரித்து படுத்துக்கொண்டான். தங்கம் சுட சுட இட்லியுடன், அவனுக்கு பிடித்த தக்காளி தொக்கு செய்து கோகிலாவிடம் கொடுத்து விட, அவள் வரும்போது நல்ல உறக்கத்தில் இருந்தான் பேரின்பன்.



நடிக்கிறானோ என்ற எண்ணத்தில் இரண்டு முறை கால் கொலுசு சத்தமிட அங்கும் இங்கும் நடந்தாள். அவனிடம் அசைவின்றி போக, ‘எதையாவது எடுத்து அவன் மண்டைல போடலாமா?’ என்று தோன்றியதை ‘ச்ச ச்ச, இப்போ வேணாம்’ என்று ஒத்திவைத்தாள்.



பின் அடி விழாத ஆயுதமாய் அவள் தேடியதில் சிக்கியது என்னவோ தண்ணீர் சொம்பு தான். சொம்போடு அவன் மீது வீசலாம் என்ற முடிவை இறுதி நிமிடத்தில் மாற்றி, கை நிறைய தண்ணீரை அள்ளி, விசிறியடித்தாள் அவன் முகத்தில்.



பதற்றத்தோடு அவன் சட்டென எழுந்து உட்கார முயல, அடிவயிறு சுருக்கென இழுத்து பிடித்தது. வலி முகத்தில் தெரிய, ‘ஸ்ஸ்ஸ்’ என அவன் உதட்டை கடித்துக்கொண்டதும், ‘ஐயோ’ என்றானது கோகிலாவுக்கு.



தட்டை அவன் முன்னே வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்துக்கொண்டாள்.



அவளை பார்த்து மெலிதாய் புன்னகித்தபடி, “தண்ணியை தெளிக்குறதுக்கு பதிலா ‘மாமா, எழுந்துரிங்க மாமா’ன்னு குரல் கொடுத்துருக்கலாம்ல?” என்றவன் கேட்க, கோகிலா முறைத்த முறைப்பில், ‘எழுந்திரின்னு சொல்லவே வழியை காணோம், இதுல ‘மாமா’ வேற கேட்குதாடா உனக்கு?’ என அவன் மனம் இடித்துரைத்தது.



இட்லியை ஒரு வில்லை பிட்டு தொக்கில் தோய்த்தவன், “சாப்பிட்டியா மூக்கி?” என்றான்.



அவள் முகத்தை வெடுக்கென திருப்பிக்கொண்ட வேகத்தில், “யப்பா....” என்றான் அவன். அதன்பின்னே, தட்டை சுத்தமாய் காலி செய்துவிட்டு, போட வேண்டிய மாத்திரைகளுக்காக அவன் எழுந்துக்கொள்ள முயற்சிக்க, அவன் முகத்தருகே நீண்டது அவள் கரம்.



கையில் இருந்த மாத்திரைகளை கண்டவன், “வாவ், சுறுசுறுப்பான பொண்டாட்டியா இருக்க?” என்றான் பல்லைக்காட்டி.

“ப்ச்” என கோகிலா உச்சுக்கொட்ட, மாத்திரைகளை விழுங்கியவன், “ச்ச! கரெக்ட்டா வேட்டி கட்டுற இடத்துல தையலை போட்டுருக்கானுங்க, கட்டவும் முடியல, இறுக்கவும் முடியல!” என்று அவளுக்கு கேட்கும்படி முணுமுணுத்தான்.



அவள் கேட்டும் கேளாமல் இருப்பதை கண்டு, “ஹும்! உங்களுக்கெல்லாம் வசதியா நைட்டின்னு ஒன்னு இருக்கு! இந்த ஆம்பளைங்களுக்கு தான் ஒரு ‘டேட்டி’ கூட இல்லை!” என்றான்.



அப்போதும் அவள் திரும்பக்கூட இல்லை. ‘பேசுறேனே! மதிக்குறாளா பாரு?’ என பல்லைக்கடித்த இன்பன், வேண்டுமென்றே, “மூக்கிம்மா! உன்னோட நைட்டி எனக்கு தரியா? கொஞ்சம் ப்ரீயா இருக்கும்!!” என்று சொல்ல, அந்த நொடி அவள் முகம் போன போக்கை கண்டு அவன் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான்.



“என்னடா எனக்காக ஒரு நைட்டி கூட இனாமா குடுக்க மாட்டியா? நான் வேணுனா நாளைக்கு அதை துவைச்சு காயவச்சு குடுக்குறேன்!” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் கேட்ட விதத்தில், ‘நிஜமாவே கேட்குறானா?’ என குழம்பியே போனாள் கோகிலா.



அவள் பதில் சொல்லாது நிற்க, “ப்ச்!! என்ன செய்யுறது, ஆம்பளைங்க சொக்கா, டிராயரு, ஜிப்பான்னு எல்லாத்தையும் நீங்க போட்டுக்க நாங்க அனுமதிக்குறோம்! ஆனா இந்த நாட்ல ஒரு ஆண், நைட்டி போடக்கூட உரிமை இல்லை!!” என்று சோககீதம் வாசித்தவன், சட்டென,

“எப்ப ஒரு ஆம்பளையால பட்டபகல் பன்னெண்டு மணிக்கு நட்டநடு ரோட்ல சிலுக்கு நைட்டி போட்டு, சிரிச்சுக்கிட்டே போக முடியுதோ....! அப்போதான் இந்த நாடு வல்லரசு ஆகும்!!!” என்றான் சீறிய குரலில்.



கேட்டுக்கொண்டிருந்த கோகிலாவுக்கு தான் தலை சுற்றியது. ‘கீழ அடிப்பட்டதுல மேல எதுவும் ஆகிடுச்சா?’ என சந்தேகம் வேறு புதியதாய் உதிக்க, மாறாத பார்வையுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளை, “மூக்கி கண்ணு, ஏற்கனவே உனக்கு மூக்கு நீட்டம்! இதுல முறைச்சு முறைச்சு பார்த்தான்னா, மூக்கு மூணு சென்டிமீட்டர் முன்னாடி வருது!” என்றிட, ‘பட், பட், பட்டென’ முன்நெற்றியிலேயே மும்முறை அடித்துக்கொண்டு அந்த அறையை விட்டே ஓடினாள் கோகிலா.



அவள் ஓடுவதை கண்டவன், ‘மவளே, பேசாமயா போக்கு காட்டுற? உன்னை எப்படி பேசி பேசியே என் வழிக்கு கொண்டு வரேன் பாரு!!’ என்றான் உல்லாசமாய்.



தப்பித்து வெளியே வந்தவளோ, ‘நான் பேசாம இருந்து இவனுக்கு பனிஷ்மென்ட் குடுக்கலாம்ன்னு பார்த்தா, இவன் பேசி பேசியே எனக்கு டார்ச்சர் குடுக்குறானே? கடவுளே! என்னை மட்டும் காப்பாத்து’ என மானசீகமாய் சிரம் மேல் கரமெடுத்து கும்பிடு போட்டாள் கோகிலா.



கூடத்தில் நின்றவளை கண்ட தங்கம், “இன்பன் சாப்பிட்டானா கண்ணு?” என்றார்.



“சாப்பிட்டாங்க சித்தி”



“கண்ணு....” தயங்கிய அவர் குரல், “சொல்லுங்க சித்தி” என அவர் அருகே கோகிலாவை போக செய்தது.



“வந்ததுல இருந்து இன்பன் என்கிட்டே பேசவே இல்ல”



“நீங்களும் பேசலை தானே சித்தி”



“ஆமாம்! உன்னை அந்த நிலைல விட்டுட்டு போய்ட்டானேங்குற கோவம், அதான் நான் முகம் குடுத்து பேசல! அதுக்காக அவனும் பேசாம இருந்தா எப்டிம்மா?”



“உங்ககிட்ட பேசாம எங்க போய்ட போறாரு சித்தி! உடம்பு கொஞ்சம் சரியாகட்டும்!”



“ம்ம்ம்!! கண்ணு, இந்த டீயை கொஞ்சம் காண்டீபனுக்கு குடுத்துடுறியா?” தங்கம் வெகுவாய் தயங்கிக்கொண்டே கேட்க, “இதுக்கு ஏன் சித்தி தயங்குறீங்க? குடுங்க! நான் குடுத்துட்டு வரேன்” என்று டம்ளரை வாங்கிக்கொண்டவள், மாடியேறி சென்றாள் அவன் அறை நோக்கி!



கதவிரண்டும் திறந்திருக்க, கட்டிலில் அமர்ந்திருந்தான் காண்டீபன். கையில் எதையோ வைத்து பார்த்துக்கொண்டிருந்தவன், கோகிலாவின் கால் கொலுசு சத்தம் கேட்டதும் அவசரமாய் அதை இரு தலையணை கொண்டு மறைத்துவைத்தான்.



“வா கோகிலா”



“ம்ம்ம்... சித்தி டீ குடுத்தாங்க” அவள் நீட்டியதை பெற்றுக்கொண்டவன், “ஒரு சத்தம் குடுத்துருந்தா நானே வந்துருப்பேன்” என்றான்.



“ஏன், நாங்க வரக்கூடாத அளவுக்கு இங்க என்ன வச்சுருக்க?”



“ஒன்னும் இல்லையே... ஒண்ணுமில்லை” அவசரமாய் சொன்னவன் டீயை பருகும் சாக்கில் வாயை மூடிக்கொள்ள, கோகிலா அறையை விட்டு வெளியேற திரும்பினாள்.



“கோகிலா” காண்டீபன் அழைக்க, நின்றவளிடம், “கேட்டியா?” என்றான் மொட்டையாய்.



“என்ன கேட்டியா?” அவளுக்கு விளங்கவில்லை.



“ப்ச்! அவன்கிட்ட கேட்டியா? எங்க போனான் என்ன நடந்துச்சுன்னு?”



“கேட்கல!!”



காண்டீபன், “கேட்கலன்னு விட்டேத்தியா சொன்னா என்ன அர்த்தம் கோகிலா? அவனுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிய வேண்டாமா?”



“எதுக்கு தெரியனும்?”



“என்ன பேசுற நீ? எவனோ அவன்மேல கை வச்சுருக்கான், அவனை எப்படி சும்மா விட முடியும்? சென்னைல இருக்க நம்மாளுங்க கிட்ட சொல்லி போலிசை விட்டு கிஷோரை நல்லா துவைக்க சொல்லிட்டேன்! அவன் எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லன்னு கதறுரானாம்! அவனை தாண்டி வேற யாரா இருக்கும்ன்னு தெரியல!! உன் புருஷனே வாயை திறந்தா தான் உண்டு” கடுப்புடன் கத்தினான் காண்டீபன்.



“உனக்கென்ன திடீர் பாசம்?” கோகிலா அவன் கேட்டதை தாண்டி, பதில் கேள்வி கேட்க, ‘இது என்ன பேச்சு?’ என்பதை போல முறைத்தான் அவன்.



“என் வீட்ல இருக்க யார் மேல கை வச்சாலும் எனக்கு கோவம் வரத்தான் செய்யும்!!” சாதூர்யமாய் பதில் சொன்னவன், முகத்தை திருப்பிக்கொள்ள, “எனக்கு தெரியாது! எது கேட்கணுமோ, என்ன தெரியனுமோ அவர்கிட்ட நீயே பேசிக்கோ” என்றாள் கோகிலா.



‘நான் பேசுறதா?’ என அதிர்ந்தவன், “இங்க பாரு, நான் பேசுனா சண்டை தான் வரும்! அவனுக்கு எனக்கும் ஒத்தே வராது! அதனால நீயே கேட்டு சொல்லு” என்றான்.



கைகளை கட்டிக்கொண்டு திண்ணமாய் அவனை பார்த்தவள், “சொல்றதா இருந்தா நம்ம கேட்குறதுக்கு முன்ன அவரே சொல்லிருப்பாரு! சொல்லாம இருக்குறாருன்னா அதுல கண்டிப்பா ஏதோ ஒரு காரணம் இருக்கு!” என்றவள், “நான் கேட்டா என்கிட்டே சொல்லிடுவாரு! ஆனா நான் கேட்டுடக்கூடாதுன்னு நினைக்குறாருன்னு எனக்கு புரியுது!! நானா கேட்க மாட்டேன்! எப்பவும்!!” என்றதோடு முடித்துக்கொண்டாள்.



அவளையே விசித்திரமாய் பார்த்தான் காண்டீபன். ‘இன்பனிடம் அப்படி என்ன தான் இருக்கிறது இவள் இப்படி உருக?’ என்று தோன்ற அதை கேட்டும் விட்டான்.



மெலிதாய் சிரித்தவள், “தட்ஸ் அ மில்லியன் டாலர் குவஸ்ட்டீன்! அதுக்கான பதிலை தான் நான் தினமும் தேடிக்கிட்டு இருக்கேன்! நான் படிச்ச படிப்பு, வளர்ந்த விதம், என் பிரண்ட்ஸ் எல்லாத்தையும் மறந்துட்டு இங்க இருக்கேன்!” என்று சொன்னவள்,

“எல்லாத்தையும் மறக்க வைக்குறான் அவன்!!” என்றாள் கனவில் மிதப்பவள் போல...



“எனக்கு அவர்மேல கோவம் இல்லாம இல்லை. நிறைய இருக்கு!! ஆனா, கோவப்பட்டு அவரையே வேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு நான் முட்டாள் இல்லை!” என்றாள் அவள்.



காண்டீபன் வாயடைத்து நின்று போனான். என்ன சொல்லவென தெரியவில்லை அவனுக்கு.



“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல! இப்போதைக்கு தெரிஞ்சுக்கவும் எனக்கு விருப்பம் இல்லை. அவர்மேல வெறுப்பும் கோவமும் இருக்கமாறி இன்னும் எத்தனை காலத்துக்கு உன்னால நடிக்க முடியும்ன்னு மட்டும் கொஞ்சம் யோசி” என்றாள்.



“நான் ஒன்னும் நடிக்கல, நிஜமாவே அவனை எனக்கு பிடிக்காது” என்று காண்டீபன் சொல்ல, “வாட்எவர்” என அசால்ட்டாய் தோள் குலுக்கிவிட்டு வெளியே சென்றாள் கோகிலா.



அவள் சென்றதும் தலையணை கொண்டு மறைத்து வைத்திருந்ததை கையில் எடுத்தவன், “நான் நடிக்குறேனாம்மா? அப்பாக்கு பிடிக்காதனால எனக்கும் அவனை பிடிக்கலன்னு சும்மா தான் சொல்லிட்டு இருக்கேனா?” என்றான் சிரித்த முகமாய் நிழல்ப்பட சட்டத்தில் இருக்கும் தன் அன்னை வைதேகியிடம்.



அவன் கையில் இருந்த சட்டகம், நொடியில் பறிக்கப்பட, அதிர்ந்து திரும்பியவனை முறைத்துக்கொண்டு நின்றாள் கோகிலா.



“இது எங்க ரூம்ல இருந்தது தானே? அவர் வச்சுருந்த போட்டோவ எதுக்கு நீ எடுத்துட்டு வந்து வச்சுருக்க?” என்றாள் கோவக்குரலில்.



“அம்மாவை கொன்னுட்டு வெறும் போட்டோ வச்சு ஸீன் போட்டுட்டு இருக்கான்! அதான் எடுத்துட்டு வந்துட்டேன்!!” என்றுவிட, “ஏன், உங்கிட்ட வேற போட்டோவே இல்லையா?” என்றாள்.



முனகிய குரலில், “இல்ல!!” என்றவன், “அப்பாக்கு அம்மா நியாபகமா இருக்குன்னு அம்மா போட்டோ வைக்கவே கூடாதுன்னு சொல்லிட்டாரு வீட்ல!!” என்றான்.



“ஹும்ம்!! உனக்கு உங்க அம்மா வேணும்ன்னா அப்பாக்கிட்ட எதிர்த்து பேசி போட்டோ மாட்டிக்கோ! இப்படி அவருக்குன்னு இருக்க சின்ன சின்ன நிம்மதியையும் கெடுக்காத” என்றுவிட்டு தன் மாமியாரை கையோடு எடுத்துக்கொண்டு வெளியேறினாள் கோகிலா.



வாசல் தாண்டியவள் முகம் வாடி நிற்கும் காண்டீபனை கண்டு மனம் கேளாமல், “காண்டீபா!!” என்றழைத்தாள்.



உடனே முகத்தை சீர்ப்படுத்திக்கொண்டவன், “பார்ரா! காண்டீபன்னா கூப்பிட்ட? எனக்கு காட்ஜில்லான்னு தான் கேட்டுச்சு” என்று சொல்ல, “என் புருஷங்குறதுக்காக சொல்லல, இன்பன் ரொம்ப நல்லவரு! உன்மேல நிறைய பாசம் வச்சுருக்காரு! இனியாவது கொஞ்சம் கண்ணை திறந்து பாரு!” என்றாள்.



அவனோ பேச்சை மாற்றும் பொருட்டு, “நீ இப்படி சீரியசாவே இருக்காத கோகிலா, நல்லாவே இல்லை! கலகலப்பா சிரிச்ச முகமா இரு, அதான் உனக்கு சூட் ஆகுது” என்று சொல்ல, அவனை வெற்றுப்பார்வை பார்த்தவள் மௌனமாய் மறைந்துவிட்டாள்.



தங்கள் புது அறைக்குள் சென்று இன்பனின் கண்ப்படும்படி புகைப்பட சட்டத்தை மாட்டியவள், அவனை திரும்பி பார்க்க, ஆழ்ந்த உறக்கத்தில் திளைத்திருந்தான் பேரின்பன்.



அவன் இடுப்பில் இருக்கும் வெண்த்துணிகட்டை தொட்டு பார்த்தவளுக்கு, ‘எப்படி இது நடந்தது?’ என தெரிந்துக்கொள்ளும் வேகம் இருந்தும், அவனிடம் தானாய் சென்று கேட்கக்கூடாது என உறுதியாய் இருந்தாள்.



அதன் பின்னே அவள் தொலைபேசிக்கு நண்பர்கள் குலாம் திருமண சேதி அறிந்து தொடர்புக்கொள்ள, வெகு நாட்களுக்கு பின் பேசுவதால், நேரம் அப்படியே ஓடி போனது.

|
|
|
√please scroll down to read the rest of this epi
 
Last edited:
மதிய நேரம் கடந்தும் உறங்கிக்கொண்டிருந்தான் இன்பன். ஒண்டிவீரர் அறை வாசலில் நின்று, “இன்பா... இன்பா...” என இருமுறை அழைக்க, உடனே விழித்துக்கொண்டான் இன்பன்.

“தாத்தா?”
“சாப்பிட வா!!”
‘ஐயோ!! எல்லாரும் இருப்பாய்ங்களே!’ என மனம் அலற, தாத்தனே வந்து அழைத்ததால் வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.

தங்கம் பார்த்து பார்த்து உணவு வைக்க, இவன் யாரையும் பாராமல் விழுங்கிக்கொண்டிருந்தான். உணவு வேளை முடிந்ததும் அறைக்குள் புகுந்துக்கொள்ள பார்த்தவனை, “நில்லுடா” என்ற ஒண்டிவீரரின் அதட்டல் நிறுத்த, ‘போச்சே!!!!’ என நின்றான் இன்பன்.

“என்ன நடந்துச்சு, எங்க போன, யார் காரணம்...! வரிசையா இப்போ சொல்ற!!” அவர் அதட்டலில் ‘சொல்லியே ஆக வேண்டும்’ என்ற கட்டளை இருக்க, இன்பனால் தவிர்க்க முடியவில்லை.

“தாத்தா...!! அது... காண்டீபனுக்கு அடின்னு...” அவன் தொடங்கும்போதே, “நடந்ததை சொல்லு...” என்றார் ஒண்டிவீரர்.

நா வரண்டது அவனுக்கு. இத்தனை வயதிலும் என்ன ஒரு கம்பீரம்! எதிரில் நிற்பவனை வியர்த்து போக செய்யும் அளவுக்கு? என இன்பனால் தன் தாத்தனை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

இருந்தும், அவரது பேரனல்லவா? பயப்படாமல் மீண்டும் அதே சுருதியை பாடினான்.

“காண்டீபனுக்கு அடி பட்டுடுச்சுன்னு....”

“நடந்ததை சொல்லுன்னு சொன்னேன் பேரின்பா!!” அவர் தீப்பார்வை அவனை ஐந்தடி தூரத்தில் நின்றபோதும் சுட, ‘கடவுளே!! காப்பாத்து!!!’ என புலம்பினான் இன்பன்.

“அதான் தாத்தா, காண்டீபனுக்கு....” என இன்பன் தொடங்கும்போது, அமர்ந்திருந்த ஊஞ்சலில் இருந்து உக்கிரமாய் எழுந்தே விட்டார் ஒண்டிவீரர்.

‘அடிச்சுடுவாரோ!!’ என இன்பன் மனம் அழுத சமயம், வாசலில் இருந்து கேட்டது ஓர் அபய குரல்.

“பெரியய்யா....!!!”

‘யப்பா! எவனோ வந்துட்டான்!! எஸ்கேப் ஆகிடுடா கைப்புள்ள’ கிடைத்த கேப்பில் அறைக்குள் ஓடிவிட்டான் பேரின்பன்.

வெளியே எட்டிப்பார்த்த காண்டீபனுக்கு, தன் வருங்கால மாமனாரை கண்டதும், ‘பத்து நாளு அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா?’ என்றானது.

மாணிக்கம் நிற்பதை கண்டு, மனம் திடுக்கிட்டாலும், ‘என்றைக்காய் இருந்தாலும் இதை எதிர்க்கொண்டு தானே ஆக வேண்டும்!’ என்ற எண்ணத்தில் “வாங்க மாணிக்கம்! வாங்க” என்றார் ஒண்டிவீரர். சிவகாமியும் உடன் சென்று அழைக்க, மாணிக்கம் தன் மனைவி மகளோடு வந்திருந்தார்.

உள்ளே வந்தவர்களை அமர செய்து உபசரித்தபின், எப்படி ஆரம்பிப்பது? என ஒருவருக்கும் விளங்கவில்லை.

மாணிக்கமே, “பேத்தி கல்யாணம், இப்படி சட்டுன்னு வைப்பீங்கன்னு எங்களுக்கு தெரியாது! இல்லனா நாங்க வெளியூர் போயிருக்க மாட்டோம்! போன இடத்துல என் போனை தண்ணில வேற போட்டு தொலைச்சுட்டேன், வேலை செய்யாம போச்சு! உங்க யார்க்கிட்டயும் தொடர்புக்கொள்ள கூட முடியல!” என்று நிறுத்தியவர்,

“இன்னைக்கு காலைல வந்ததும் தான் எல்லாரும் நடந்ததை சொன்னாங்க!! வருத்தமா இருந்துச்சு!!!” என்றார் மாணிக்கம்!

ஒண்டிவீரர் அடுத்து நடந்தவற்றை எப்படி சொல்லவென யோசிக்கும்போதே, “உங்க பேத்தி, இன்பன் மாப்பிளையை தான் விரும்புறதா ஊரு முன்னாடி சொல்லிடுச்சாமே? நிசமா?” என்றார் அவர்.

‘ஆம்’ என சொல்ல அங்கே ஒருவருக்கும் வாய்வரவில்லை.

“மௌனமா இருக்குறதுலையே தெரியுது, அதான் உண்மைன்னு! இன்பன் தம்பிக்கும் உங்க பேத்தி மேல இஷ்டமா?” என்றார் மாணிக்கம். ‘மாப்பிள்ளை, தம்பியாக மாறியிருந்தது’

அறைக்குள் இருந்த இன்பனுக்கு நன்றாக கேட்டது. தான் வெளியே செல்ல வேண்டியதின் முக்கியத்துவம் உணர்ந்து அவன் வெளியே வர, முதலில் அவனை கண்டது சுசீலா தான்!

வந்ததில் இருந்து சிலை போல நின்றிருந்தவள் இன்பன் வந்ததும் அவனை வேகமாய் நிமிர்ந்து பார்க்க, அவளையே பத்து நாட்கள் காணாத தவிப்பில் பார்த்துக்கொண்டிருந்த காண்டீபனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

“வாங்க மாமா, வாங்கத்தை!!” என்றான் இன்பன் உபசரிப்பாய்.

“தம்பி...” என அவர் தொடங்க, “தப்பா நினைச்சுக்காதீங்க! எனக்கும் கோகிலாவுக்கும் நேத்துதான் வீட்டோட கல்யாணம் ஆச்சு! உங்களுக்கு வாக்கு குடுத்துட்டு ஏமாத்துறதா நினைக்க வேண்டாம்” என்றான் ‘கண்டேன் சீதையை’ என்பதை போல பட்டென!

வந்த மூவருக்குமே இது பேரதிர்ச்சி தான்! இன்பனையும் கோகிலாவையும் சேர்த்து வைத்து ஊரார் புரளி பேச, விரைவிலேயே சுசீலா இன்பன் திருமணத்தை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று வந்தவர்களுக்கு ‘திருமணமே முடிந்துவிட்டது’ என்ற செய்தி அதிர்வாய் தான் இருந்தது.

மாணிக்கம் சமாளித்துக்கொண்டு, “ஹோ!!” என்றார்.

சுசீலா கோகிலாவையும் அவள் கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிறையும் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மாமா...!!?” என்றாள் சுசீலா அவளை மீறி!
இன்பனுக்கு சுசீலாவை நிமிர்ந்து பார்க்கவும் சங்கடமாய் போனது. தம்பி மனைவியாய் வீட்டிற்கு வர போகிறவள், அனைவர் முன்னும் எதையாவது இவனிடம் ஏடாகூடமாய் பேசிவிட்டால் என்ன செய்வது? காலம் முழுதும் சங்கடம் இன்றி முகம் பார்க்க வேண்டுமே என்ற பதைப்பு!

அடுத்து அவள் பேசும்முன், “சுசீலா, அமைதியா இரு” என அதட்டினார் மாணிக்கம்.

“ஊரைக்கூட்டி நிச்சயம் செய்யலன்னாலும் மாணிக்கம் மவ பெரியவீட்டுக்கு மருமவளா போக போறான்னு ஊரே பேசிட்டு இருந்துச்சு! நம்ம சனங்க எல்லாருக்குமே ஒப்பு தாம்பூலம் மாத்துனதும் தெரியும்! இந்த நிலைல கல்யாணம் நின்னுடுசுன்னா, அடுத்து எப்படி மாப்பிள்ளை தேடுவேன், எந்த முகத்தோட இன்னொரு வீட்டு படியேருவேன்னு தெரியல அய்யா” என்றார் ஒரு பெண்ணை பெற்றவர் என்ற இயல்பான கவலையில்.

ஒண்டிவீரருக்கும் சிவகாமிக்கும் தர்மசங்கடமாய் போனது.

இன்பனும் கோகிலாவும் காண்டீபனை தான் ‘இப்போவாது பேசித்தொலடா’ என்ற ரீதியில் உறுத்து நோக்க, அவனோ சுசிலாவின் கசங்கிய முகத்திலேயே கவனமாய் இருந்தான்.

தலை குனிந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்த மாணிக்கம், “சரிங்கைய்யா, நாங்க கிளம்புறோம்!! இந்த குடும்பத்துல வாழ எங்க பொண்ணுக்கு குடுப்பினை இல்ல, அதுக்கு யார் என்ன செய்ய முடியும்!!” என்றவர் எழுந்து நின்று வணக்கத்தோடு விடைபெற செல்ல,
“மாமா... ஒரு நிமிஷம்!!” என்றான் காண்டீபன்.

“நானும் இந்த வீட்டு வாரிசு தான்!! உங்க பொண்ணை எனக்கு கட்டிக்குடுத்தாலும் அவ இந்த வீட்டு மருமக தான்! உங்க கண்ணுக்கு நான் தெரியவே மாட்டேனா?” என்று கேட்க, இன்பன் கோகிலாவுக்கு, ‘ஹப்பாடா!’ என்றிருந்ததென்றால் அவர்களை தாண்டி அனைவருக்கும், ‘என்ன பேசுறான் இவன்?’ என்றிருந்தது.

‘அண்ணனுக்கு பேசுன பொண்ணை தம்பிக்கு கட்டுறதா?’ இதுவே அவர்கள் எண்ணம்!!!

சுசீலாவுக்கு, ‘இந்த வெள்ளை காண்டாமிருகத்துக்கு நானா?’ என தோன்ற தலை கிறுகிறுவென சுற்றியது.

“கல்யாண தேதி குறிங்க மாமா! நான்தான் உங்க மருமகன்” என்றான் ஆணித்தனமாய்.

மேற்கொண்டு அவன் பேசியதை கேட்டதும், கிறுகிறுத்த தலை, வேகமாய் சுற்ற, தடுமாறி சரிய போனவளை வேகமாய் தன் வலிய கரத்தில் தாங்கிக்கொண்ட காண்டீபன், அரைகுறை கண்களில் அவனை கண்ட சுசீலாவுக்கு ரகசிய பறக்கும் முத்தம் ஒன்றை அவசரமாய் கொடுக்க, திறந்திருந்த அறைக்கண்ணும், அவசரமாய் மூடிக்கொண்டது.

-வருவான்...
 
எது செதுக்குறது..
நைட்டி ஜென் வர்ஷன்ஆஆஆஆ

காட்ஜில்லா காண்டாமிருகம் ஆனதா???

ஒண்டிவீரன் ஒத்தையா மன்றாடுறாரே பாவம் பெரிய மனுஷன்னு கொஞ்சம் சீக்கிரம் டென்ஷனை குறைச்சா தான் என்ன்???
 
Last edited:
Hi
இன்பன் நடந்ததை சொல்லப்போறான்னு ஆவலா இருந்தா சரியா சுசீலா வீடு வந்துட்டாங்க..
அதுவும் நல்லது தான்
காண்டு வாயைத் திறந்தான்.
 
Last edited:
:love: :love: :love:

இந்த வாரம் site ல சண்டை வாரம்மா????

அங்கை - ராஜன் முட்டிக்குது
மார்கழி - மாவீரன் முட்டிக்குது
இன்பன் - கோகிலா முட்டிக்குது
யார்தான் கட்டிக்குவாங்க..???
 
Last edited:
Top