Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 10 (2)

Advertisement

Nice super Indhalu pullaya pottiya nenaikkurane loosu Paya edho secret irukku indhallukitta
 
இப்போதும் இன்பா தான் விட்டு கொடுத்து போய் இருக்கிறான்.
 
அத்தியாயம் 10 (2):

ன்பனை வீட்டை விட்டு போக சொன்ன காண்டீபன் அவன் செல்ல மறுக்கவே தானே வீட்டை விட்டு செல்வதாய் சொல்ல, சத்தியராஜன், அவனுடன் சேர்ந்து தானும் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்றுவிட, சிவகாமி தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.



பிரச்சனைக்கு காரணமானவளோ வீங்கத்தொடங்கிய தன் கன்னத்திலேயே கவனமாய் இருக்க, ஒண்டிவீரருக்கு ‘இது தன் வீடு தானா?’ என்ற சந்தேகமே வந்துவிட்டது.

எப்போதும் போல நடக்கும் வாய்த்தகராறு தான். காண்டீபனும் சத்தியராஜனும் எப்போதும்போல தான் நடந்துக்கொள்கின்றனர். ஆனாலும் இன்று ஏன் பிரச்சனை பெரிதாகிறது என யோசித்தவருக்கு, இத்தனை நாளும் இன்பன் ‘பொறுத்துப்’போனது மட்டுமே இந்த வீட்டை சச்சரவின்றி நிம்மதியாய் வைத்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாய் புரிந்து போனது.



தங்கம் தவிப்புடன், “காண்டீபா, அவனுக்காக நான் வேணுன்னா மன்னிப்பு கேட்குறேன்... வீட்டை விட்டு போறேங்குறதெல்லாம் என்ன பேச்சு? பேச்சை இத்தோட விட்டுட்டு அமைதியா போங்கப்பா” என்றார்.



“நீங்க சும்மா இருங்கத்தை! எங்க விஷயத்துல நீங்க வராதீங்க!!” என்ற காண்டீபன், “முடிவா என்ன சொல்ற? உன்னால இங்கிருந்து போக முடியுமா? முடியாதா?” என்றான் இன்பனிடம்.



கையை கட்டிக்கொண்டு நின்ற இன்பன், கொஞ்சமும் யோசிக்காது, “முடியாது!!” என்றான்.



காண்டீபன், “சுசீலா, கிளம்பு... நம்ம இந்த வீட்டை விட்டு போறோம்!!”



சிவகாமி, “போறேன் போறேன்னா எங்கப்பா போவ? ஊருக்குள்ள நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கா இல்லையா? இப்படி கோச்சுக்கிட்டு தனியா போனன்னு தெரிஞ்சா உன் தாத்தாக்கு அது எத்தனை அசிங்கம்? புது மருமவ வந்து குடும்பத்தை பிரிச்சுட்டான்னு பேச மாட்டாங்களா? யோசிக்க மாட்டியா?”



“அப்போ அவனை இங்கிருந்து போக சொல்லுங்க” என்றான் காண்டீபன்.



“நீ ஏன்டா அவனை துரத்துறதுலையே இருக்க?” ஒண்டிவீரர் கோவமாய் கேட்க, “மன்னிப்பு தான் கேட்க முடியாதாமே? என் பொண்டாட்டியை அவன் அடிப்பான், நான் பார்த்துட்டு சும்மா நிக்கவா? அவன் மேல கை வைக்க எவ்வளோ நேரம் ஆகும் எனக்கு?” காண்டீபன் சீறலாய் மொழிய, இன்பனை மன்னிப்பு கேட்க சொல்ல அவருக்கு மனமில்லை.



சத்தியராஜன், “உன்னை தான் எல்லோரும் சமாதானப்படுத்துறாங்களே தவிர, அவனை யாரும் மன்னிப்பு கேட்க சொல்ல மாட்டேங்குறாங்க பார்த்தியா? எப்பவுமே அவங்களுக்கு இந்த ராசி கெட்டவன் தான் முக்கியம்” காண்டீபனிடம் சொன்னவரின் வார்த்தைகள் இன்பனின் நெஞ்சத்து புண்ணை கீறிவிட்டு ரசித்தது.



‘ராசிகெட்டவன்!’ மௌனமாய் உச்சரித்த இன்பனின் இதழ்கள் வேதனையாய் வளைந்தது.



“நீ வாடா, நம்ம இதுக்குமேல இந்த வீட்ல இருக்க வேணாம்” சத்தியராஜன் சொல்ல, அவரை யாரும் தடுப்பதை போல தெரியவில்லை.



‘போறதுனா போட்டும்!’ என்ற முடிவுக்கே வந்துவிட்டார் ஒண்டிவீரர்.



காண்டீபனும் சுசீலாவும் உடனடியாய் கிளம்ப எத்தனிக்க, “ஒரு நிமிஷம் நில்லுடா! நம்ம போறதுக்கு முன்னாடி வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டே போய்டலாம்” என சத்தியராஜன் சொல்ல, அவரை குழம்பிய முகத்துடன் கேள்வியாய் வெறித்தனர்.



ஒண்டிவீரருக்குள் மெலிதாய் ஓர் அபாய மணி.



சத்தியராஜன், “என் பங்கையும் என் பையன் பங்கையும் சொத்துல இருந்து பிரிச்சுக்குடுங்க! நாங்க போயிடுறோம்!!”



ஒண்டிவீரர் எதிர்ப்பார்த்தது நடந்துவிட்டது. தாத்தன் பூட்டன் காலத்துக்கு முதலே வழிவழியாய் ஒரே ஆண்வாரிசை பெற்றுவந்த குடும்பத்தில் சொத்தை பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமின்றி இருந்தது. பூர்வீக சொத்தாக காலம்காலமாக இருப்பதை பங்குபோடுவது என்பதே தன் முன்னோர்களுக்கு செய்யும் அவமரியாதை என பலமுறை ஒண்டிவீரர் சொல்ல கேட்டிருந்த சத்தியராஜன் சரியான சமயத்தில் காய் நகர்த்தினார்.



சிவகாமி, “சொத்தை பிரிக்குறதா? ஏண்டா இப்படி பேசுற?” தலையிலேயே அடித்துக்கொண்டு அழ,



“இத்தனை வருஷமும் ஒத்த வாரிசா இருந்துட்டோம்! சொத்து பிரச்னை இல்லை! எப்போ மூத்த வாரிசு இளைய வாரிசுன்னு பேச்சு வந்துச்சோ, அப்போவே எனக்கும் என் புள்ளைக்கும் ஆகுறதை குடுத்துடுங்க! நான் ஒரேயடியா போயிடுறோம்!!” என்றார் சத்தியராஜன்.



காண்டீபன், “அப்பா, நீங்க பேசுறதுல எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. சொத்து பிரிக்கனுங்குற அவசியம் என்ன இப்போ?” தந்தையை எதிர்த்து கேள்வி கேட்க,



“நம்ம இப்போ வெளில போகணும்ன்னா எங்கடா போவோம்? நமக்குன்னு வீடு இருக்கா? இதோ இவன் போறான்னா சோளக்காடு இருக்கு, பொண்டாட்டியோட தங்கிக்குவான்... அப்படி நமக்கு என்ன இருக்கு சொல்லு? உனக்கும் எனக்கும் குடுத்த விவசாய நிலத்துல இதுக்குமேல ஒரு குடிசையை போட்டு குடிப்போக சொல்றியா? நம்ம எதுக்கு அப்படி கஷ்டப்படனும்? நமக்கு சேர வேண்டியதை குடுத்துட்டா நம்ம இஷ்டத்துக்கு இருந்துக்கலாம்ல?”



காண்டீபன், “அப்பா, என்னை என்ன அவ்வளோ கையாலாகதவன்னு நினைச்சுட்டீங்களா? என்னை நம்பி வாங்க! நான் பார்த்துப்பேன் உங்களை!!”



சத்தியராஜனின் சூட்சுமம் தெரியாது காண்டீபன் மல்லுக்கு நிக்க, ‘இவன் ஒருத்தன்!’ என மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டார் சத்தியராஜன்.



“நீ சும்மா இரு காண்டீபா! அப்பா பேசிக்குறேன்!!” என்றவரை தொடர்ந்து அவன் மீண்டும் பேச வரை, வம்படியாய் அவன் வாயடக்கினார் சத்தியராஜன்.



“சொத்தை பிரிச்சு குடுங்க, நாங்க போறோம்!!”

‘இதான் என் முடிவு’ என சத்தியராஜன் நின்றிவிட, இன்பன் எதற்கும் அசைந்தானில்லை.



ஒண்டிவீரர் ஓய்ந்த உருவில் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். சிவகாமி பதறி அருகே ஓடி, “நீங்க மனசு வருந்தாதீங்க! சும்மா சின்ன சண்டை தான்!!” சிறுபிள்ளையை சமாதானம் செய்வதை போல பேச, குனிந்திருந்த அவர் சிரம் அவரின் முழு வருத்தத்தை படம் போட்டு காட்டியது.



தங்கம் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்க, கோகிலாவுக்கு பெரியவர்களின் வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது.



இன்பனிடம் நேரே சென்றவள், அவனிடம் தான் பேசுவதில்லை என்பதை மறந்து, “மாமா! நீங்க அடிச்சது தப்பு தானே! மன்னிப்பு கேட்டுட்டா இதெல்லாம் முடிஞ்சுடும்! தாத்தா பாருங்க எவ்வளோ வருத்தப்படுறாங்கன்னு!!” என்றாள் அவன் கரம் பிடித்து.



அவளை வெறுமையாய் பார்த்தவன், “அவ பேசுனதுக்கு நான் அடிச்சது சரிதான் கோகிலா! நான் செஞ்சது எனக்கு தப்பா தெரியல... அந்த நேரத்துல அவ ஒரு பொண்ணுன்னோ, ஏன், என்னோட தம்பி மனைவின்னோ கூட எனக்கு தோணல!! என்னால மன்னிப்பும் கேட்க முடியாதுமா” என்றான்.



“ஏன் மாமா இப்படி பிடிவாதம் பிடிக்குறீங்க? நீங்க இப்படி கிடையாதே? சின்னதா ஒரு ‘சாரி’ சொல்லிட்டா இந்த பிரச்சனையே இல்லாம போய்டும்! விட்டு குடுத்து போங்களேன் மாமா!! என்ன குறைஞ்சுட போறோம்?”



“விட்டுக்குடுக்குறதா? விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து தானே 32வருஷம் வாழ்ந்துருக்கேன்! நான் இத்தனை நாளும் வாழ்ந்தது என் வாழ்க்கையே இல்லையே? அப்பாக்கு பிடிக்காது, தம்பிக்கு ஆகாதுன்னு அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அதை புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு தகுந்த மாதிரி வளைஞ்சு குடுத்தே தானே வாழ்ந்துருக்கேன்?



புள்ளையாச்சேன்னு அப்பா தான் எனக்காக பாவம் பார்த்தாரா? இல்ல கூட பொறந்தவன் தானேன்னு இந்த பய எனக்கு ஏதும் நல்லது செஞ்சானா?” என்றான் கோபமாய், ஆதங்கம் கலந்து. குவிந்த உணர்வுகளை அடக்கிய விதத்தில் அவனது கீழ்த்தாடை நடுங்கத்தொடங்கியது.



“இதுக்குமேலயும் என்னை வளைய சொல்றியா கோகிலா? சொல்லு...!! உனக்காக அதையும் செய்யுறேன்!!!” என்றவன், “இப்போ என்ன நான் மன்னிப்பு கேட்கணும், இல்லனா இந்த வீட்டை விட்டு போகணும் அதானே?” என்றான் உரக்க!!



“என்னால மன்னிப்பு கேட்க முடியாது!! நானும் கோகிலாவும் இந்த வீட்டை விட்டு போறோம்!!” என்றான் முடிவாய்.



இத்தனை நேரம் அவன் இளகிய மனது இறுகிக்கிடந்ததே அதிசயம் என்றால், தாத்தனின் ஓய்ந்த உருவும், பாட்டியின் கண்ணீரும், கட்டியவளின் கெஞ்சல் கேட்டுமா அவன் தன் பிடியில் இருந்து தளராமல் இருப்பான்?



ஆனாலும், ‘மன்னிப்பு’ என்ற ஒன்று தவறே செய்யாதபோது கேட்க முடியாது என்பதில் மட்டும் அவன் உறுதி ஆழமாய் இருந்தது.



“கோகிலா, நீ போய் முக்கியமான பொருள் மட்டும் எடுத்து வை, கிளம்புவோம்” என்றவன், தன் அலைபேசியை எடுத்து கிளிகளுக்கு அழைத்து வீட்டிற்கு ஒரு ஆட்டோவை அனுப்ப சொன்னான்.



சத்தியராஜிற்கு தான் நினைத்தது நடந்துவிடவும், அமைதியாய் சோபாவில் சென்று அமர்ந்துவிட்டார்.



தங்கம், “நீயும் போய்ட்டா நான் என்னையா பண்ணுவேன்?” கண்கள் குளம் கட்ட கையேந்தி தன் முன் நிற்பவரை கண்டு நெஞ்சுருகி போனது இன்பனுக்கு. அவனுக்காக வாழ்ந்தவராயிற்றே!!!



“அவன் மட்டும் ஏன் போனும்? நம்ம எல்லாரும் அவனோட போவோம்! என் பேரன் நம்மளை அருமையா பார்த்துப்பான்!!” கண்ணைத்துடைத்துக்கொண்டு எழுந்து நின்றான் சிவகாமி.



அவரிடம் இருந்து இப்படியொரு வார்த்தையை எதிர்ப்பார்க்காத காண்டீபன், “அம்மாயி!!!” என அதிர, “நாங்களும் உன்னோடவே வரோம் ராசா” என்றார் அவர் இன்பனிடம்.



காண்டீபன் வீட்டை விட்டு போகாமல் இருக்க, ‘குடும்ப கௌரவ’த்தை காரணம் காட்டிய சிவகாமி, இன்பன் வெளியேறுகிறான் என்றதும் கௌரவமாவது மண்ணாவது என தானும் உடன் வருவதாய் சொன்னது காண்டீபனுக்கும் சத்தியராஜனுக்கும் திகைப்பை கொடுத்தது.



இன்பன், “இல்லம்மாயி! நான் மட்டும் இங்கிருந்து போனா, வயலுக்கும் வீட்டுக்கும் தினம் அலைய முடியாம, பொண்டாட்டியோட கொஞ்ச நாளைக்கு மட்டும் சோளக்காட்டுக்கு குடி வந்துட்டதா சொல்லிக்குவேன்... அதே நீங்க எல்லாம் என்னோட வந்துட்டா, குடும்ப விஷயம் வெளில போகும்!!! அதை தாத்தா மட்டுமில்ல, நான் கூட விரும்ப மாட்டேன்”



கோகிலா இரண்டே பைகளுடன் வந்து சேர, “எடுத்தாச்சா?” என்றான் இயந்திர கதியில்.



“இன்னும் ஒரு பையும், அத்தையோட போட்டோவும் எடுக்கணும்!!” என்றாள். அவளைத் தாண்டி சென்றவன், இன்னும் தேவையான சிலதை எடுத்துக்கொண்டு வெளிவர, ஆட்டோ வந்து சேர்ந்தது. பொருட்களை வண்டியில் ஏற்றியவன், “நீ ஆட்டோல முன்னாடி போமா!!” என்று கோகிலாவிடம் வீட்டு சாவியை கொடுத்து அனுப்பி வைத்தான்.



மீண்டும் உள்ளே வந்தவன், கண்ணீரோடு நின்றவர்களை தாண்டி, “இந்த வீட்டை விட்டு நான் போறதால எனக்கும் இங்க இருக்குறவங்களுக்கும் தொடர்பு கிடையாதுன்னு யாரும் நினைக்க வேணாம்! இது என் வீடு!! என் தாத்தனோட வீடு!! இந்த வீட்டுக்கு மூத்த வாரிசு நான்!!! அதை யாரும் மறக்க VENAAMவேணாம்” என்றான் இறுதியில் குறிப்பாய் சத்தியராஜனை பார்த்து.



“போனவன் திரும்ப வரமாட்டான்னும் நினைக்க வேணாம், அடிக்கடி வருவேன்” என்றான் அழுத்தமாய்.



“அப்பாக்கூட கல்யாணமான புதுல சோளக்காட்டுல தானே தனியா இருந்தாங்க! நானும் அப்படி தான் இருக்கேன்! கொஞ்ச நாள்ல என் புள்ளையோட, பொண்டாட்டியயும் கூட்டிக்கிட்டு திரும்பி இங்கேயே வந்துடுவேன்...”



“தெள்ளத்தெளிவா சொல்லிருக்கேன்! புரிய வேண்டியவங்களுக்கு புரியும்!!!”



“அம்மாயி, அத்தே... தாத்தாவ நல்லா பார்த்துக்கோங்க!! அவர் மனசு வருத்தப்படுறமாறி நடந்துக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு! அதனால தான் பிரச்சனையை வளர்க்காம நான் கிளம்புறேன்! நான் போயிட்டேன்னு வருத்தப்படாம, பேரனும் பேத்தியும் ஹனிமூன் போயிருக்கோம்ன்னு நினைச்சு சந்தோசமா இருங்க... சீக்கிரமே கொள்ளுப்பேரனோட இந்த வீட்டுக்கு வந்துடுறேன்... சரியா?” என்றான் விளையாட்டுப்போல்...



அதற்குமேல் அங்கே நிற்காமல், காண்டீபனை ஒரு பார்வையும் ஏறிட்டு பாராமல், தன் இண்டு சுசுக்கியை இரண்டே மிதியில் உயிர்ப்பித்து அங்கிருந்து கிளம்பியிருந்தான் பேரின்பன்.




அவன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்த காண்டீபனுக்கு தன் உடலை விட்டு சக்தி அனைத்தும் கரைந்து காற்றில் கலந்ததை போல உணர்ந்தான்.



-வருவான்...

தப்பா கெஸ் பண்ணவங்களுக்கு "பிம்பளிக்கா பில்லாப்பி" ஹாஹா...
Why kandiba ivvo kovammm.
 
Top