Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -12

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*12*

இந்தா என் இதயம்,

அதை நீ விளையாடும் வரை விளையாடிவிட்டு தூக்கிப்போட்டுவிடு,

அது அதற்குத்தான் படைக்கப்பட்டது...!

உச்சிபொழுது வெயிலில் கையில் உள்ள மண்வெட்டியை வலுவாய் பிடித்துக்கொண்டு, மண்ணைத் தோண்டி வரப்பு வெட்டிக்கொண்டிருந்தான் பேரின்பன்.

வீட்டில் அன்று நடந்த வாக்குவாதம் முடிந்து ஒரு வாரமே ஓடிவிட்டது. ஆயினும் இன்னமும் ஒருவரும் முன்புபோல சகஜநிலைக்கு திரும்பவில்லை. ஒன்டிவீரரின் உடல் நலம் விசாரிக்க, எப்போதும் ஆட்கள் வந்துக்கொண்டே இருந்தனர். செல்லமும் ஷங்கரும் அந்த வீட்டில் இருக்கவும் முடியாமல், அங்கிருந்து செல்லவும் முடியாமல் சங்கடத்துடன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர்.

கோகிலாவுக்கு தன் நிட்சயக்காரியம் தான் சொல்லாமல் பேரின்பனுக்கு தெரியவந்ததில் பெரும் அதிருப்தி. கண்டிப்பாக அவனுக்கு தன் மேல் கோவம் இருக்கும் என்பதை நம்பினாள். அதற்கேற்றார் போலவே இந்த ஒரு வாரமாய் இன்பனை வீட்டில் பார்க்கவே இயலவில்லை. காலை சேவல் கூவும் முன்னே எழுபவன், வீட்டிலேயே இருப்பதில்லை. இரவு நள்ளிரவு தாண்டி வந்தாலும் விறுவிறுவென தன் அறைக்குள் சென்று அடைந்துக்கொள்கிறான். வேண்டுமென்றே கோகிலாவை தவிர்க்கிறான் என்பது அவளுக்கே புரிந்தது.

பகல் பொழுதில் மில்லில் வைத்தாவது பேசிவிடலாம் என எண்ணினால், முதல் இரண்டு நாட்கள் அவளிடம் அங்கும் இங்கும் ஓடி பூச்சாண்டி காட்டியவன், அதன் பிறகு மில்லுக்கே வருவதில்லை. அவனைப் பற்றி விவரம் கேட்குமளவு வீட்டில் யாரும் சகஜமாய் இல்லை. கணவருக்கு முடியாமல் போனதிலே மிகவும் ஓய்ந்து விட்டார் சிவகாமி. தங்கம் முன்பை விட மோசமாய் தன் கூட்டுக்குள் ஒதுங்கிவிட்டார்.

காண்டீபன் எந்நேரமும் மந்திரித்து விட்ட கோழி போல ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருக்கிறான். அதை மீறி அவனிடம் பேசினாலும் சரியான பதில் வராது என்பது அவள் அறிந்ததே! இனி மிச்சம் சத்தியராஜன் தான்!! அவரிடம் விவரம் கேட்க விருப்பமில்லை என்றாலும் மூன்று நாட்கள் பொறுத்தவள் அதன் பின் பொறுக்காமல் கேட்டு விட்டாள்.

சத்தியராஜன் சொல்லித்தான் வயலில் சில நாட்களாக அவன் நடமாட்டம் இருப்பதே தெரியவந்தது அவளுக்கு. நேரே அவனிடம் சென்றவளுக்கு முதுகு காட்டி மண்ணை தோண்டி புதையல் எடுப்பவன் போல ஒருவித வேகத்துடன் வெட்டிக்கொண்டிருந்தான் பேரின்பன்.

அவர்களை விட்டு சற்றே தொலைவில் அல்லக்கை கிளிகள் வேலை செய்வதை கண்டு, ‘மாமா எங்கன்னு கேட்டதுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டு இப்போ அவர் கூடவே நிக்குதுங்க பாரு’ என பல்லைக்கடித்து கோகிலா முனக, அது அவர்களுக்கு தெரிந்ததோ என்னவோ, அவள் பக்கம் திரும்பவேயில்லை அவர்கள்.

வியர்த்து வலிய இடைவெளியின்றி வேலைசெய்பவனை எப்படி அழைப்பது என தெரியாது அவள் தயங்கி தயங்கி அவன் பின்னே நிற்க, வேலையில் இருந்த சில பெண்கள் கண்களில் அவர்கள் படவே, “இன்பா தம்பீ..!!! உன் அத்தை மவ உன்னையே வச்ச கண்ணு வாங்காம பார்க்குது, திரும்பி தான் பாரேன்!!” ஒருத்தி சொல்லிவிட்டு சிரிக்க, அவளுடன் சேர்ந்து மற்ற பெண்களும் கிண்டலாய் கலகலத்தனர்.

அதற்குமேல் பார்க்காமல் இருக்க முடியாது என உணர்ந்து மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு திரும்பியவன், தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து வியர்த்த முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டான். பேச்சை துவங்க முடியாது கோகிலா வார்த்தைகளின்றி திக்கி நிற்க, “சொல்லு மூக்கி” என்றான் இன்பன்.

சற்றும் எதிர்ப்பார்க்காத அவனது சகஜமான அழைப்பில், “ஹான்!!!!” என வெளிப்படையாகவே வாயை பிளந்து நின்றாள் கோகிலா.

தன் இரு விரலால் அவள் விரிந்த உதடுகளை மூடியவன், “பார்க்கனும்ன்னு வந்துட்டு இப்படி வாயை பொழந்துக்கிட்டு நின்னா, எப்படி?” மேலும் அவன் சீண்ட, கொஞ்சமே தெளிவானவள், “மா...ம்மா...!! உங்களுக்கு என்மேல கோவம் இல்லையா?” என்றாள் நம்பமுடியாத விம்மித உணர்வில்.

“இல்லையே” அவன் உடனே சொல்ல, அவன் முகத்தை கூர்ந்து கவனித்தாள் கோகிலா. அதில் ஒரு ஒரத்திலாவது எங்கேனும் துளி கோவம் தெரிகிறதா என தேட, அவள் கண்களில் சிக்கவேயில்லை.

இருப்பினும் மனம் கேளாமல், “கொஞ்சம்க்கூட கோவம் இல்லையா மாமா?” என மீண்டும் கேட்க, “நமக்கு நடுவுல உன் அப்பா அம்மா வரமாட்டாங்கன்னு தான் முன்னாடியே சொல்லிட்டேனே!!” என்றவன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

அவன் பின்னோடே நடந்தவள், “நான் அதை கேக்கல மாமா!” என்றுவிட்டு, “அது...அது... எனக்கு... அது...” அதை சொல்லமுடியாமல் தடுமாறினாள் கோகிலா. அதற்குள் பரந்த கிளைகளை கொண்ட ஆலமரத்தின் அடிவேரில் சென்று வாகாய் அமர்ந்துக்கொண்ட பேரின்பன், “எதுக்கு மூக்கி, தல டைலாக் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க?” என்றான்.

அவன் கிண்டலில் தடுமாற்றம் குறைய, அவனை சிறிது முறைத்தவள், அருகே இருந்த வேறொரு வேர்க்காலில் அமர்ந்தாள். தன் விரலில் இருந்த ஒற்றைக்கல் வைர மோதிரத்தை உருவி கையில் எடுத்தவள், “எனக்கு ஒருத்தரோட நிச்சயம் ஆச்சுன்னு உங்ககிட்ட சொல்லாம விட்டுட்டேன்னு கோவம் இல்லையா?” என்றாள்.

அவள் செய்வதை பார்த்துக்கொண்டிருந்த பேரின்பன், “ஹோ, இதான் அந்த மோதிரமா? இங்க குடு!” ஒரே எட்டில் முன்னுக்கு வந்து அவள் கையில் இருந்ததை வாங்கிக்கொண்டான். அதை முன்னும் பின்னும் உருட்டிப் பார்த்தவன், “அழகா இருக்கு!! ஒரு அம்பதாயிரம் இருக்குமா?” தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டே அவன் கேட்க, அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை புரிந்துக்கொள்ளவே முடியாமல் குழம்பி போயிருந்தாள் கோகிலா.

மீண்டும் மோதிரத்தை அவளிடம் நீட்டியவன், “கைல போட்டுக்கோ! தொலைஞ்சுட போகுது” என்றான். அவள் தயங்கவே, “அட புடிங்குறேன்ல!!?” அவள் உள்ளங்கையில் மோதிரத்தை வைத்துவிட்டு, “இவ்வளோ நாள் தான் சொல்லாம ஏமாத்திட்ட! இப்போதான் எனக்கு தெரிஞ்சுடுச்சே!” என்றான் இன்பன்.

அவள் முகம் சற்றே மலர, “ஒழுங்கா ட்ரீட்டு வையு!!” என்றதும் மலர்ந்த அவள் முகம் கூம்பிப்போய்விட, “மாமா? ஆர் யூ ஆல்ரைட்? நல்லாதானே இருக்கீங்க!?” என்றாள் அவனை மிக மிக சந்தேகமாய் பார்த்து.

“ம்ம்ம்... எனக்கென்ன? ஐயம் ஆல்ரைட்!!” என்ற இன்பன், “சரி எனக்கு வேலை கடக்கு, நீ கிளம்பபு” என்று எழுந்துக்கொண்டான். அவன் செல்ல எத்தனிக்க, “மாமா...மாமா...” என்றாள் அவசரமாய்.

“சொல்லு” என்ற இன்பன் அவள் முகம் பார்க்க, “கொஞ்ச நேரம் பேசலாம்ன்னு நினைச்சு வந்தேன் மாமா” என்றாள் வாட்டமாய்.

“வீட்ல பேசிக்கலாம்!! அடிக்குற வெயிலுக்கு இந்த வயக்காட்டுல இன்னும் ஒரு மணி நேரம் நீ நின்னாக்கூட உன் வெள்ளத்தோலெல்லாம் வெந்து போய்டும்!! இடத்தை காலிப்பண்ணு!” அவன் அங்கிருந்து திரும்பி நடக்க, நகராது நின்ற கோகிலா, “நீங்க வீட்ல இருந்தாதானே பேச முடியும்? ஒரு வாரமா தான் என்கிட்டே கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருக்கீங்களே மாமா?” அவள் குரலில் தொனித்த கவலையில் அவன் கால்கள் நடையை நிறுத்தின.

அவனருகே சென்று, முன்னே நின்ற கோகிலா, அவன் முகத்தை ஆராய்ச்சியாய் கண்டு, “நீங்க என் பக்கத்துலையே இருக்கீங்க, ஆனா தூரமா தெரியுறீங்க! ஏன் மாமா?” அவள் கண்களில் சட்டென நீர் கோர்க்க, தவிப்புடன் தன் முகம் பார்க்கும் கோகிலாவை கண்டு இறங்காதவன், “நல்ல கண் டாக்டரா பாரு!!” என்றான் சிரிப்புடன்.

அவன் விளையாடுறான் என உணர்ந்தவள் சுற்றி வளைக்காது, “எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு மாமா!! உங்களுக்கும் என்னை பிடிச்சுருக்கு, எனக்கு தெரியும்!! அன்னைக்கு ராத்திரியே உங்கக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிருக்கணும், அந்த நிமிஷத்தை வீணடிக்க கூடாதுன்னு நினைச்சு, சொல்லாம விட்டு பெரிய தப்பு பண்ணிட்டேன்! எனக்கு நிச்சயம் ஆச்சுன்னு தெரிஞ்சப்போ உங்களுக்கு எவ்வளோ வலிச்சுருக்கும்? எனக்கு புரியுது மாமா” பேசிக்கொண்டே சென்றவளை, “ஏய்..ஏய்.. ஏய்... நிறுத்து” என தடை செய்தான் இன்பன்.

“என்ன ஏதேதோ பேசிட்டே போற? நான் எப்போ உன்னை பிடிச்சுருக்குன்னு சொன்னேன்?” முகத்தில் கேலிகிண்டலோ, விளையாட்டோ கொஞ்சமும் இன்றி கேட்கும் இன்பனை திகிலாய் பார்த்தாள் கோகிலா.

“வி...விளையாடாதீங்க மாமா!! அன்னைக்கு ராத்திரி தானே நம்ம மனசு விட்டு பேசிக்கிட்டோம்?” என்று சொன்ன கோகிலாவை கண்டு சத்தமாய் சிரித்தான் இன்பன். சத்தம் போட்டு அவன் சிரித்ததில் அங்கிருந்தோரின் கவனம் இவர்கள் மேல் திரும்ப, அவன் புன்னகையை ரசிக்க முடியாமல் உள்ளுக்குள் பயபந்து ஓட, “சிரிக்காதீங்க மாமா!! ப்ளீஸ்” என்றாள் கோகிலா.

இன்னமும் சிரித்துக்கொண்டிருந்தவன், அவள் மீண்டும் ‘ப்ளீஸ்’ போட சிரமப்பட்டு தன் சிரிப்பை மட்டுப்படுத்த முயன்றான். சில நிமிடங்களில் அவன் சிரிப்பு மறைய, கோகிலா முகத்தில் அப்பட்டமான கலக்கம் குடிக்கொண்டது.

சிரிப்பை விட்டு, “அன்னைக்கு ராத்திரின்னு நீ எதை சொல்ற? மொட்டை மாடில குளுருக்காக ஒண்டி நின்னுக்கிட்டு இருந்தோமே அதுவா?” அவன் கேட்டுவிட்டு மீண்டும் சிரிப்பை தொடர, கோகிலாவின் கரித்த கண்கள் கண்ணீரை கோடென கீழிறக்கின.

அவள் கண்ணீரை கண்டதுமே, “ஏய் லூசு! என்ன?” என்றான் இன்பன். “மாமா?! நான் உங்களை விரும்புறேன் மாமா! என்கிட்டே விளையாடாதீங்க” தன்மானம் தகர்த்து இறைஞ்சி நிற்கும் தன் நிலையை எண்ணி, கீழுதட்டை கடித்து அழுகையை கட்டுப்படுத்தினாள் கோகிலா.

“முதல்ல கண்ணை துடை! நான்தான் உன்னை ஏதோ பண்ணிட்டேன்னு எல்லாரும் நினைக்க போறாங்க!” சுற்றிலும் ஆங்காங்கே வேலையூடே தங்களை வேவுப்பார்ப்பவர்களை காட்டி அவன் கடுகடுக்க, “ஏன் மாமா என்னை அழ வைக்குறீங்க? என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க மாமா” என்றாள் வெட்கத்தை விட்டு.

ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் முகத்தில் தேக்கி அவளை பார்த்த இன்பன், “ஹே! என்ன கிண்டல் பண்ணுறியா? உனக்கு நிச்சயம் முடிஞ்சுப்போச்சு! நியாபகம் இருக்கா?” என்றான்.

“எனக்கு அதுல விருப்பம் இல்ல மாமா! அப்பாக்காக தான் ஒத்துக்கிட்டேனே தவிர எனக்கு அவன் மேல எந்த பிரியமும் இல்லை! ஆனா உங்களை பார்த்ததுக்கு அப்புறம் என்னால என் அப்பா ஆசைக்கு உடன்ப்பட முடியும்ன்னு தோணல மாமா, ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டேன்ட் மீ, ஐ வான்ட் டு பி வித் யூ மாமா!!” கண்களில் நிற்க்காமல் கண்ணீர் வழிந்தோட, அழுகையூடே, தன் மனதை வெளிப்படுத்தியவளை கண்டு கொஞ்சமும் அசராத இன்பன், “உனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருக்கலாம்! ஆனா எனக்குன்னு ஒருத்தி இருக்காளே! அவளை விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணம் செய்யுற எண்ணமெல்லாம் எனக்கில்லை” என்றான் அவள் முகத்திற்கு நேரே.

“பொய் சொல்லாத மாமா!!” வாய்விட்டு அவள் கத்த, அந்த சத்தத்தை மறைக்கும்படி பெரிதான ஒரு இடிசத்தம் பகல் வேளையை தொல்லை செய்ய, அடுத்த நிமிடங்களில் பெருமழை பெய்யத்தொடங்கியது. வேலை செய்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் மறைவான இடம் தேடி ஓட, இன்பனும் கோகிலாவும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

“அந்த சுசீலா மேல உனக்கு எந்த விருப்பமும் இல்லை! நீ பொய் சொல்ற!” என்று கத்தியவள், “அன்னைக்கு ராத்திரி உன் கண்ணுல நான் காதலை பாத்தேன்! நீ என்னை உனக்குள்ள இறுக்கிக்கிட்ட, நான் இப்பவும் உனக்குள்ள இருக்கேன்! நீதான் வேணுன்னே அதை மறைக்குற!” என்று அவள் குற்றம் சுமத்த, “மண்ணாங்க்கட்டி!! நிச்சயம் பண்ணவன் இருக்கும்போது என் மேல எப்படி உனக்கு ஆசை வரலாம்! தப்பா தெரியல உனக்கே!?” என்றான் சூடாய்.

“நீ என்னை எப்படி வேணாலும் நினைச்சுக்கோ! ஐ டோன்ட் கேர்! எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்! நீதான் எப்படியாவது நிறுத்தனும்!!” என்று அடமாய் அவள் சொல்ல, “அதுக்கு வேற எவனையாவது பாரு” என்றான் இன்பன் இரக்கமின்றி.

“நீங்க என் அப்பாக்கிட்ட போட்ட சவால்ல ஜெயிக்க வேணாமா? அதுக்கு நீங்க என் கல்யாணத்தை நிறுத்தி தானே ஆகணும்?” கடைசியாய் கிடைத்த பற்றுக்கோலை உறுதியாய் பிடித்துக்கொண்டு அவள் கேட்க, “போட்ட சவால்ல ஜெயிச்சே ஆகணுமா என்ன? யானைக்கும் அடி சறுக்கும்! எனக்கும் சறுக்கட்டும்!” என்றான் விட்டேத்தியாய்.

இதற்குமேல் என்ன சொல்லி அவனை தன் வழிக்கு கொண்டு வருவது என தெரியாமல் அவள் அழுத அழுகை மழையில் காணாமல் போனது. இறுதி முயற்சியாய், “என் அப்பா அம்மாவை பழிவாங்குறதா நினைச்சு என்னை தண்டிக்குறியா மாமா?” என்று கதறியவளை கண்டு இளகாதவன், “தண்டனையை நான் குடுக்கணும்ன்னு அவசியம் இல்லை! அவங்க சேர்த்து வச்சுருக்க புண்ணியமே உனக்கு அதை கொடுத்துடும்” என்றான்.

“முடிவா என்ன சொல்ற?”

“கல்யாண பொண்ணா லட்சணமா உன் மாப்பிளைக்கிட்ட பேசிட்டே நாளை கடத்து! குறிச்ச நாளுல கல்யாணம் முடிச்சு சந்தோசமா இரு” இருகைகளையும் தூக்கி ஆசீர்வாதம் போல அவன் சொல்ல, “முடியாது!! இந்த கல்யாணம் நிக்கும்! நீ நிறுத்துவ, உன்னை நிறுத்த வைப்பேன்!!” அவள் கண்களில் ஒருவித பிடிவாதம் தெரிய, “எனக்கு பிடிவாதம் பிடிச்சா பிடிக்காது” என்றான் இன்பன் வெறுப்பாய், பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத்துப்பி.

“உனக்கு பிடிக்காத ‘பிடிவாதம்’ உன்னோட என்னை சேர்த்து வைக்கும்ன்னா, நான் பிடிவாதம் பிடிப்பேன்! நான் நினைச்சது தான் நடக்கும்! நீயும் பார்க்கத்தானே போற?” என்ற கோகிலாவை, “அம்மா புத்தி வருது போலயே” என்றான் இன்பன்.

“அவங்க பொண்ணுதானே நான்!? ஆசைப்பட்டதை அடையுறதுல அவங்க புத்தி கொஞ்சம் கூடவா எனக்கு இருக்காது!?” என்றாள் கோகிலா.

உதட்டை பிதுக்கியவன் இலகுவாய் தோள் குலுக்க, “என்னை கல்யாணம் செஞ்சுக்க தயாரா இருங்க மாமா!!” என்ற கோகிலா அவனை விட்டு நடக்கத் துவங்க, ஓசையோடு ஓங்கி அடித்த மழை, அவளோடே நகர்ந்து குறைந்தது.

அதுவரை கல்லென இறுகியிருந்த இன்பனின் கண்களில் ஈரம் சுரக்க, அவன் மனம் கடந்து வந்த கசப்பான அந்நாளை நினைவுப்படுத்தியது.

“காண்டீபா...!!!” பேரின்பனின் பெருங்குரலில் வெறுப்போடு வாசலில் நின்றிருந்தவன் உள்ளே ஓடி வர, ஒண்டிவீரரை கையில் சுமந்தபடி அவன் ஓடிவருவதும், அவன் பின்னே அலறலோடு மற்றோர் விரைவதும் அவன் கண்ணில் பட, நொடிக்கூட தாமதிக்காது தன் காரை உயிர்ப்பித்தான் காண்டீபன். பின்சீட்டில் ஒண்டிவீரரை அமரவைத்த இன்பன், உடன் சிவகாமி, தங்கத்தை அமர சொல்லிவிட்டு தன் சுசுக்கியை உயிர்ப்பிக்க, முன்னிருக்கையில் சத்தியராஜன் அமர்ந்ததும் காண்டீபனின் கட்டளையில் கார் காற்றென கடந்தது.

மருத்துவமனை வளாகத்தை காண்டீபன் அடையும் முன்னரே அங்கே சென்றிருந்த இன்பன், ஸ்டெச்சரை தயாராய் வைத்துக்கொண்டு நிற்க, ஒண்டிவீரர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சற்றும் எதிர்பாராத இந்நிகழ்வுக்கு தானே காரணம் என விடாது அழுதுக்கொண்டிருந்தார் சிவகாமி. அவரை தேற்றுவதே தங்கத்திற்கு பெரும்பாடாய் போக, அவர் தனியே அழுக நேரமே இல்லை.

இன்பனும் காண்டீபனும் மாற்றி மாற்றி மருத்துவர்களிடம் சூழ்நிலை அழுத்தம் பற்றி கேட்டுக்கொண்டே இருக்க, சத்தியராஜன் தொய்ந்து போய் அமர்ந்துவிட்டார். தந்தை மேல் சிறு வயதில் எத்தனை முரண்பாடு இருந்தாலும், தான் ஒரு தந்தையாய் மாறிப் போன பின்னே, அவர் மீது தனிவித பாசமும் ஒட்டுதலும் உருவாகியிருந்தது.

கம்பீரமான அவர் பேச்சையும் நடையையும் சிறுவயது முதல் பார்த்தவரானதால், சரிந்து விழுந்த தன் தந்தையின் தோற்றம் அவர் கண்ணை விட்டு போகாமல் இம்சித்தது.

இன்பனுக்கு அன்றைய நாளே மிகவும் மோசமாய் அமைந்தது. பல கனவுகளோடு காலையில் கண் விழித்தவன் உள்ளுக்குள் உடைந்து நொறுங்கிப்போகும் அளவு காயப்படுத்தியிருந்தது கோகிலாவின் நிச்சயத்தார்த்த காணொளி. அதிலிருந்தே மீள வழியில்லாமல் மனதோடு மருகிக்கொண்டு தன் அன்னையிடம், ‘நான் சிரிக்கவே கூடாதாம்மா?’ என்று கதறிக்கொண்டிருந்தவனை மேலும் பாதிக்கவென ஷங்கர் அவன் வளர்ப்புத்தாயை குறை கூற, மருகல் மருவி ஆத்திரமாய் மாற, வார்த்தைகள் அவனை மீறி வந்தது. இதனிடையே இதுவரை பேசாத சத்தியராஜன் தனக்காக வந்ததோ, காண்டீபன் தன்னை ஆதரித்து பேசியதோ அவன் மூளையை எட்டவேயில்லை. ஷங்கரின் மீது கை வைக்காமல் போனதே பெரும் காரியமாய் அவனுக்கு தோணியது.

கோவத்திலும் அந்த அளவு சுயக்கட்டுப்பாடு வந்துவிட்டதா? என தன்னை நினைத்தே ஆச்சர்யப்பட்டு போனான் இன்பன்.

சிகிச்சை ஒருமணி நேரம் தாண்ட, சிவகாமிக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என அஞ்சுமளவு நெஞ்சை பிடித்துக்கொண்டு கதறிக்கொண்டிருந்தார். ஒருவழியாய் மருத்துவர் வெளியே வந்து, “பி.பி ரொம்ப அதிகாகிடுச்சு! அதான் மயங்கிட்டாரு! இன்னும் கொஞ்ச நேரம் கவனிக்காம விட்டுருந்தாக்கூட ஹார்ட் அட்டாக் வரதுக்கு வாய்ப்புகள் அதிகம்! வயசாகிடுச்சு இல்லையா? ரொம்ப கேர்புல்லா இருக்கணும்!” என்றவர், “ரொம்ப ஸ்ட்ரெஸ் குடுக்காதீங்க! அவர் மனசை கஷ்டப்படுத்துற மாதிரி எதுவும் சொல்லாதீங்க! சந்தோசமா வச்சுக்கோங்க!! அதுதான் இப்போதைக்கு அவருக்கு நல்லது!!” என்றார்.

அதிக பேச்சுக்கொடுக்காமல் பார்த்துவர அனுமதி கிடைத்ததும், உள்ளே சென்றவர்கள் அரை மயக்கத்தில் கிடப்பவரை கண்டு சோர்ந்து போயினர். தங்கமும் சிவகாமியும் சத்தத்தை அடக்கி அழுதுக்கொண்டிருக்க, ஆண்களால் கண்ணீரை சிந்தமுடியவில்லை.

மெல்ல கண் திறந்த ஒண்டிவீரர் சிவகாமியை கண்டு சொபையாய் சிரிக்க, “என்னங்க...?” என வாய்விட்டே கதறினார் சிவகாமி.

அங்கிருந்த செவிலியர் கண்டிக்க, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவர், “என்னங்க பண்ணுது?” என்றார் உதடு துடிக்க.

“ஒண்ணுமே இல்லை! லேசா மயக்கம் தான்!!” என்றிட, “அப்பா....!!!” என அழுத தங்கத்தை கண்டு, ஒன்டிவீரரின் கண்கள் கரித்தன.

அவர் தலையை ஆதூரமாய் வருடிக்கொடுத்த ஒண்டிவீரர், “உன் வாழ்க்கையை அப்படியே விட்டுட்டேனேம்மா” என்றார் பெரும் குற்றம் செய்துவிட்ட தொனியில்.

“இல்லப்பா!! அப்படி ஒன்னும் இல்லை! என் விருப்பத்தை கேட்டு தானே மறுகல்யாணம் பேச்சை எடுக்காம விட்டீங்க! எனக்கு இந்த வாழ்க்கை தான் பிடிச்சுருக்கு ப்பா” என்றார் அவர் கரத்தை பற்றிக்கொண்டு.

“குடும்பம் சிதராம ஒத்துமையா இருக்கனும்ன்னு தானே, எல்லாரையும் மன்னிச்சு ஏத்துக்கிட்டேன்! இப்போ அதுவே நம்ம குடும்பத்தை உதைக்குதே!” என்ற ஒண்டிவீரர் கண் கலங்க, “அதெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பா” என்றார் சத்தியராஜன்.

ஒண்டிவீரர் பதிலின்றி ஓரமாய் நின்றிருந்த பேரின்பனை பார்க்க, அவன் தலை குனிந்தான். சைகையில் அவனை அருகே அழைத்தவர், “ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு பதிலாகாது! கோகிலா கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்! எனக்காக, இந்த கிழவனுக்காக எந்த தகராறும் செய்யாம இருக்கியாப்பா?” சிரமத்துடன் பேசிய ஒண்டிவீரர் அவனிடம் இருந்து பதில் பெரும் முன்னே, மூச்சுவிட அசௌகர்யப்பட, “போதும் எல்லாரும் கிளம்புங்க, பேஷன்ட் ரெஸ்ட் எடுக்கட்டும்” என அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினார் செவிலியர்.

ஒன்டிவீரரிடம் பதில் சொல்லாவிட்டாலும் இன்பனின் மனது அவர் கேட்டதற்கும் ‘சம்மதம்’ என சொன்னது.

நினைவுகளில் உறைந்திருந்தவனை உலுக்கினார் கிளிகள்.

“என்னாண்ணே மழை விட்டது கூட தெரியாம கனா லோகத்துல இருப்ப போல” என பச்சை கிளி கிண்டலடிக்க, “அது இருக்கட்டும், அந்த பொண்ணு என்னாண்ணே உன்கிட்ட பேசுச்சு?” என்றான் வெட்டுக்கிளி.

இரு கிளிகளையும் முறைத்த இன்பன், “போய் சாணி அள்ளுங்க போங்க” என துண்டால் அடித்து விரட்டினான்.

அசராத இருவரும் நகராது நிற்க, “அண்ணே! உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும்... ஆன்...ஆன்...ஆன்...”
என்று குறும்பாய் சிரித்து வைத்தனர்.

“என்ன ஆன்?? எதுவுமில்லை” என்றவன் முகத்தை திருபிக்கொள்ள, “இல்லண்ணே கோக்கிக்கும் உனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு!!” என விஷமமாய் சிரித்தான் வெட்டுக்கிளி.

துளைத்து துளைத்து கேட்கும் கேள்வியில் கடுப்பானவன், “சம்பந்தமும் இல்ல, சீமந்தமும் இல்ல, போய் தொலைங்கடா” என கத்திவிட்டு அவன் ஓடிவிட்டான்.

-தொடரும்...
 
Super
 
ஹாஹாஹா இன்பன் போட்ட சபதத்தை கொக்கி நிறைவேற்ற போறா...
But இன்பன், கொக்கி கான்வெர்சஷன் இப்படிஇருக்கும் nnu நான் நினைக்களை... very nice. ud
செல்லம், ஷங்கர் கொஞ்சம் கூட குற்ற unarchi இல்லாம பேசினத்துக்கு ஏதாவது செய்யணுமே... yaru செய்ய போறா.. பெண்ணே செய்ய போறலா.....
 
Top