Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -14

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
கமெண்ட்ஸ் போடுற எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!! சில கமெண்ட்ஸ் பார்க்கும்போது பார்த்துட்டே இருக்கனும்ன்னு போல ஆசையா இருக்கு!! எப்படி இவ்வளோ டீப்பா படிக்குறீங்கலோன்னு ஒரு சைட் ஆச்சர்யமா கூட இருக்கு!! keep encouraging like this my sweet sisters!! brothers இருக்கீங்களான்னு தெரியல! இருந்தா அவங்களுக்கு என்னோட ஸ்வீட் தேங்க்ஸ்!!!

குண்டேரிப்பள்ளம்....!!!

இதான் அது!!!

119120
 
*14*

ஏற்கனவே பூத்த பூ தான் எனினும், நீ சூடும்போது மறுபடி பூக்கிறதே!?

“இந்த வாரமே இன்பனுக்கும் சுசீலாவுக்கும் பரிசம் போடுங்க!” என்று காண்டீபன் சொல்லிவிட, “ஏன்ப்பா இவ்வளோ அவசரமா?” என்று காரணம் புரியாமல் தயங்கினார் சிவகாமி.

“அவசியம் இருக்கு அம்மாயி! பொண்ணு வீட்ல முடிவு சொல்லாம நம்ம காக்க வைக்கிறது சரியில்லையே?” என்றவன் சொல்ல, “முடிவு தானே? சொல்லிட்டா போச்சு! அதுக்காக உடனே பரிசம் போடணும்ன்னா எப்புடி? சுடுதண்ணிய காலுல கொட்டுன மாறி குதிக்க முடியுமா?” ஏனோ சிவகாமிக்கு இன்னமும் வெளியில் இருந்து பெண்ணெடுக்க மனம் ஒப்பவில்லை.

“நம்மளை நம்பிக்கிட்டு அந்த பொண்ணு வீட்ல ஊருக்கே சொல்லி வச்சுட்டாங்க, ஒண்டிவீரர் வீட்ல சம்பந்தம் செய்யுரோம்ன்னு! நம்ம காலம் தாழ்த்த தாழ்த்த அந்த பொண்ணுக்கு தானே அசிங்கமா போகும்?” காண்டீபன் வலுவாய் பேச, மௌனமாய், ‘டேய் டேய் ஏன்டா இப்படி உசுர எடுக்குற? அவங்க தான் வேண்டாம்ன்னு சொல்றாங்கல்ல, விட வேண்டியது தானே?’ என புலம்பினாள் கோகிலா.

இன்பனுக்கு ஒன்று மட்டும் விளங்கவேயில்லை. சில வருடங்களாகவே, சரியாய் சொல்ல வேண்டுமானால் சுசீலா பெரிய பெண்ணானதும் அவளுக்கு குடிசை கட்ட நேரடி தாய்மாமன்கள் இல்லாததால் ஒன்று விட்டு மாமன்காரன்கள் உரிமை யாருக்கு என அடித்துக்கொள்ள, யாருக்கும் அவ்வுரிமை இல்லை என காண்டீபனை குடிசை கட்டி, முறை செய்ய சொல்லி மத்தியஸ்தம் செய்து வைத்தார் ஒண்டிவீரர். அன்று முதலே காண்டீபன் சுசீலாவின் மீது ஒரு வித பிரியத்துடன் இருப்பது போலவே இதுநாள் வரை அவனுக்கு தோன்றியது. அதனாலேயே அவனுக்கு சுசீலாவை திருமணம் முடிக்க கேட்டபோது முடிவும் சொல்ல முடியாமல், காண்டீபனிடம் நேரடியாய் கேட்கவும் முடியாமல் அவன் நாட்களை கடத்திக்கொண்டிருப்பது.

இன்றென்னவென்றால் காண்டீபனே வழிய வந்து இன்பனின் திருமணத்தை பற்றி பேச்செடுக்க, ‘நம் கணிப்பு தப்போ?’ என ஐயமுற்றான் பேரின்பன்.

காண்டீபனின் கேள்விக்கு, “அப்படி யாரு ஊரு முழுக்க தம்பட்டம் அடிக்க சொன்னது அவுகள? பொட்ட புள்ளையை வச்சுக்கிட்டு பரிசம் போடும் முன்னே ஊருக்கு சேதி சொல்லக்கூடாதுங்குற கூறு கூட கிடையாதா?” சிவகாமி பொரிந்தார்.

அதுவரை கணவனின் உடல்நிலை எண்ணி குமைந்துக்கொண்டிருந்தவர் வீட்டில் இரு ஆட்கள் குறைந்த சிறிது நேரத்திலேயே பழைய சிவகாமியாய் எழுந்து நின்றார்.

“ப்ச்!! அம்மாயி இதெல்லாம் என்ன பேச்சு?” காண்டீபன் சலித்துக்கொண்டு, “நீங்க ஏன் தாத்தா எதுவுமே சொல்லாம இருக்கீங்க?” என்றான் தன் தாத்தனிடம்.

சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்து நின்ற ஒண்டிவீரர், வாசலில் நின்று வேடிக்கைப் பார்க்கும் இன்பனைக்காட்டி, “நீ முடிவு கேட்க வேண்டியது முதல்ல அவன்கிட்ட தான்! அதுக்கு பொறவு எங்ககிட்ட வா” என்றுவிட்டார்.

வாசலில் தன் முகம் பார்த்து நின்றவனை பார்த்தானே தவிர, ஒரு வார்த்தை கேட்கவில்லை காண்டீபன். இன்பனின் முடிவில் தான் அவன் திருமணம் என்று உணர்ந்த கோகிலா யாருமறியாமல், ‘மாமா, பரிசம் பாயாசம்ன்னு ஒன்னும் வேணாம்ன்னு சொல்லு, மாத்தி சொன்ன நான் மனுஷியா இருக்க மாட்டேன்!’ என்று அவன் காது கடித்தாள்.

தன் பின்னால் நின்றவளை திரும்பி கண்களில் ஒளியோடு பார்த்த இன்பன், “என்ன சொல்றதுன்னு தெரியாம குழம்பிப்போய் நின்னேன்! தேங்க்யூ” என்றுவிட்டு, வீட்டில் உள்ளோரிடம் சத்தமாய், “எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான்! பரிசம் போடுங்க” என்றான்.

கோகிலாவிற்கு கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. காண்டீபனோ கடைசி நம்பிக்கையும் அற்று போன அயர்வில், “ஆக வேண்டியதை பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

“அப்போ பரிசத்துக்கு நாள் பார்த்துடலாமா?” இன்பனுக்கு ஒரு நல்லது நடக்கப்போகும் ஆத்ம மகிழ்வில் கையில் பஞ்சாங்கத்தோடு கூடத்திற்கு வந்தார் தங்கம். வெகு நாட்களுக்கு பிறகு அவர் முகம் புன்னகை பூசி ஒளிர்ந்தது.

தன் அத்தையின் மகிழ்வை ஆசையாய் பார்த்த இன்பன், “பொறுங்க அத்தே!!” என்றான். கோகிலாவிற்கு ‘வேண்டாம்’ என சொல்ல போகிறானோ என்ற ஆர்வம். அறைக்குள் இருந்த காண்டீபனுக்கும் அதே நிலை.

இன்பனோ, “என்னதான் இருந்தாலும் வீட்ல ஒருத்தி கல்யாணத்துக்கு நிக்குறா, அவளை வச்சுக்கிட்டு வீட்டு ஆம்பளை கல்யாணம் பேசுறது முறையாப்படல! கோகிலா கல்யாணம் முதல்ல முடியட்டும், அதுக்கு பிறகு என் கல்யாணம் சிறப்பா நடக்கட்டும்!” என்றான்.

“அதுவும் சரிதான்” என்றார் ஒண்டிவீரர்.

அருகருகே நின்றிருந்த கோகிலாவையும் இன்பனையும் பார்க்க பார்க்க சிவகாமிக்கு ஆயாசமாய் இருந்தது. நடக்கவே போவதில்லை என்று தெரிந்த பின்னும் வளர்ந்து நிற்கும் ஆசை, இத்தனை வயதுக்கு அதை அடக்க தெரியாத விந்தை!

“கல்யாணத்துக்கு முதல் நாள் பரிசம் போட்டுக்கலாம்! இப்போ சும்மா ஒப்பு தாம்பூலம் மட்டும் வெத்தலைப்பாக்கு ஏழேகால் ரூவா காசோட பாரியூர் கோவில்ல வச்சு மாத்திக்கலாம்! பெருசா யாருக்கும் சொல்ல வேணாம்” இன்பனே செய்ய வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட நாள் பார்த்து பெண் வீட்டுக்கு சேதி சொல்வது மட்டுமே இவர்கள் வேலையாய் இருந்தது.

“இதெல்லாம் உங்கப்பன் தான் செய்யணும்! அவனுக்கு நீ இருக்கன்னு கூட கண்ணு தெரிய மாட்டேங்குது” சிவகாமி அலுத்துக்கொண்டே நாள் பார்க்க, இன்பன் பதிலேதும் சொல்லவில்லை. நகைக்கடைக்கு சில நாட்களாய் ஒண்டிவீரர் போகாததால் பொறுப்பு முழுக்க சத்தியராஜிடம் வந்திருந்தது. எனவே காலை நேரே வயலுக்கு சென்று மேற்ப்பார்வையிட்டுவிட்டு அங்கிருந்தே நகைக்கடைக்கு சென்றுவிடுவார். இன்றும் அப்படியே!

வேலைக்கு செல்ல வேண்டி இன்பன் வெளியேற, கோகிலா தீவர யோசனையோடு நின்றிருப்பதை கண்டு அவன் ‘அதிர்ச்சி’ என எண்ணிக்கொண்டான்.

அவளிடம் சென்றவன், “எனக்கும் கல்யாணம் நிச்சயம் செய்ய போறாங்க! இனியாவது ‘எடுத்த சபதம் முடிப்பேன், கலங்காதே’ன்னு பாட்டு பாடி ஸீன் போடாம உன் வருங்கால புருஷனோட பேசிப்பழகு!” என்று சொல்லிவிட்டு செல்ல, அவள் மூளைக்குள், ‘உன் கல்யாணம் நடக்குறவரைக்கும் இன்பா மாமாக்கு கல்யாணம் ஆகாதுடி கோக்கி, உனக்கு அது போதுமே?! கம் ஆன் கம் ஆன்’ அவளுக்கு தேவையான விஷயம் மட்டுமே அவளை ஊக்குவித்துக்கொண்டிருந்தது.

“நான் மில்லுக்கு போறேன்” காண்டீபனின் குரலில் தெளிந்த கோகிலா, “அடேய் அபூர்வ வகை டைனோசர் முட்ட, உன் காண்டுக்கு என் சபதத்துல தீயை வச்சுட்டியேடா” என்று கருவியவள், “நானும் மில்லுக்கு போறேன்” என அறிவிப்பாய் சொல்லிக்கொண்டு அவனுக்கு முன்னே முன் கதவை திறந்துக்கொண்டு காரில் அமர்ந்துவிட்டாள்.

“சாப்பிட்டுட்டு போ கோக்கிமா” என்ற தங்கத்தின் குரலுக்கு பிரதிபலிப்பே இல்லை.

தன்னருகே அமர்ந்துக்கொண்டிருக்கும் கோகிலாவை கண்டதும் காண்டீபனுக்கு, இருந்த மனநிலையில் எரிச்சல் மேலானது. மில்லுக்கு போகாமல் சிறிது நேரம் எங்கேனும் தனிமையாய் இருந்துவிட்டு வரலாம் என்று எண்ணி அவன் கிளம்ப, நத்தை போல ஒட்டிக்கொண்டவளை கண்டு அவன் முகம் சுளிக்க, “உங்களை விட நான் செம்ம காண்டுல இருக்கேன்! மரியாதையா வண்டியை கிளப்புங்க! உங்கக்கிட்ட முக்கியமா பேசணும்” காண்டீபனை முந்திக்கொண்டு பேசினாள் கோகிலா.

‘இவ எதுக்கு என்மேல காண்டாகனும்’ என துணுக்குற்றவன், “எனக்கு வேலை இருக்கு நீ இறங்கு” என்றான் கடுமையாய்.

“உனக்கு ஒருமுறை சொன்னா புரியாதாடா, முக்கியமா பேசனும்ன்னு சொல்றேன்ல, ஒழுங்கா மூடிட்டு வண்டியை எடு!” கோகிலா அடித்தொண்டையில் கத்த, திடுக்கிட்டுதான் போனான் காண்டீபன். இது நாள் வரை அவனிடம் யாருமே அதட்டிக்கூட பேசியதில்லை. பள்ளிக்கல்லூரிகளில் கூட இவனை கௌரவமாகவே நடத்துவர். ஆனால் இவளோ, மரியாதையா? கிலோ என்ன விலை? என்று கேட்கிறாளே!!!

தோட்ட வேலையில் இருந்த ஒருசிலர் அவள் சத்தத்தில் எட்டிப்பார்ப்பதை போல தோன்ற உடனே வண்டியை கிளப்பினான் காண்டீபன். கோகிலா அதன் பின் ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை. ‘அவள் எப்படி தன்னிடம் மரியாதைக்குறைவாய் பேசலாம்’ என அவன் முறுக்கிக்கொண்டாலும், ஏனோ மனம் சற்று அமைதியடைவதை போலவே இருந்தது.

‘குண்டேரிப்பள்ளம்’ கோபிசெட்டிப்பாளையத்தின் ரம்யமான சுற்றுலாத்தளங்களுள் ஒன்று. அரை மணி நேர பயணம் அங்கே முடிவடையை பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். பாலத்தில் அவர்கள் நடக்க தொடங்கியதுமே சுட்ட சோளம், பொரிந்த மீன், தள்ளுவண்டி ஐஸ்கீரீம் என பலவித நறுமணம் கோகிலாவின் நாசி வழி நுழைந்து நாவில் நர்த்தனமாட, வயிறு ‘கபகப’வென பசியால் துள்ளியது.

‘கோக்கி! நீ வாழ்க்கை சம்பந்தமா பேச வந்துருக்க, இப்போ இந்த மாறி சில்லி உணர்வுகளுக்கெல்லாம் நீ மதிப்பு குடுக்கலாமா? பேசி முடிச்சுட்டு போகும்போது வாங்கி சாப்பிட்டுக்கலாம்’ தனக்கு தானே அவள் சமாதானம் பேசிக்கொண்டிருக்கையில் இன்னும் பலமாய் மீன் வறுவலின் வாசனை அவளை தூக்க, அவள் முன் சிறு வாழையிலையில் வெட்கத்தில் சிவந்து, கோவத்தில் பொரிந்து, நம் நாக்குக்காக உயிர் துறந்த மீனை ஏந்திக்கொண்டு நின்றான் காண்டீபன்.

பாலத்தின் திட்டில் சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டவள் அவன் கொடுத்ததை அள்ளி வாயில் அப்பிக்கொள்ள, ‘பசி ருசியறியாது’ என்பார்கள், இவள் பசி ருசியையும் அறிந்துக்கொண்டதால் நான்கு மீன்களை துவம்சம் செய்த பிறகே நிமிர்ந்து காண்டீபனை கண்டாள்.

அவன் முகத்தில் கடுமையையும் தாண்டி, ‘இதான் முக்கியமா பேசுற லட்சணமா?’ என்ற கேலி தென்ப்பட, ‘இதோடு காலை உணவு போதும்’ என முடித்துக்கொண்டவள் ஆற்றிலேயே கைக்கழுவிவிட்டு, “உங்ககிட்ட முக்கியமா பேசணும்” என்றாள் காண்டீபனிடம்.

“இன்னும் ரெண்டு மீனு வேணுமா?” காண்டீபன் நக்கலாய் கேட்க, “கணக்கு வச்சுக்கோங்க, வீட்டுக்கு வந்து காசு தாரேன்” என்று அவள் சொல்லிட, இளக்கம் எட்டி ஓடியது அவனிடமிருந்து.

“உன் காசை நீயே வச்சுக்கோ!” என்றான் பட்டென.

அதை கொஞ்சமும் காதுகொடுத்து கேட்காதவள், “லுக் மிஸ்டர் காண்டு! என் கல்யாணத்தை நான் நிறுத்த போறேன்!” என்று முன்னறிவிப்பின்றி போட்டு உடைக்க, “என்னவோ ஐஞ்சாம் நம்பர் பஸ்ஸை நிறுத்த போறேங்குற மாறி அசால்ட்டா சொல்ற? நீ லூசோன்னு சந்தேகம் தான் இருந்துச்சு, இப்போ உறுதியே ஆகிடுச்சு” என்றான் காண்டீபன் கடுப்புடன்.

“ப்ச்! சொல்றதை மட்டும் கேளுங்க! நான் என் கல்யாணத்தை நிறுத்தப் போறேன், அதனால இன்பா மாமா கல்யாணத்துல நீங்க தேவையில்லாம மூக்கை நுழைக்காதீங்க! என்னால ரெண்டு கல்யாணத்தை எல்லாம் நிறுத்த முடியாது! சோ டிபீகல்ட் யூ க்நொவ்” என்றவள் பேச்சில் தலையும் புரியாது வாலும் புரியாது வெளிப்படையான குழப்பத்தோடு அவன் நிற்க,

‘மக்கு மன்னாரு’ என மெல்லமாய் திட்டியவள், “இன்னும் புரியலையா?” என்றாள் துளிர்விட்ட சினத்துடன்.

“நீ உன் கல்யாணத்தை நிறுத்துறதுக்கும் இன்பன் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் காண்டீபன்.

“நான் அவரை விரும்புறேன்” என்று பூசகமின்றி பளிச்சென அவள் சொன்னதில் காண்டீபனுக்கு தான் ‘தன் காதில் பிசகோ?’ என அச்சம் உண்டானது.

“என்ன சொன்ன? சரியா புரியல?” மீண்டும் தெரிந்துக்கொள்ள அவன் கேட்க, “உன்கொண்ணன் இன்பனை நான் லவ் பண்றேன்! கேக்குதாடா காது கேக்காத கடுவன் பூனை!” அவன் உயரத்திற்கு எம்பி, விரல் நீட்டி காட்டுகத்தல் கத்தியவளை விட்டு நான்கடிகள் பின்னே ஓடினான் காண்டீபன்.

அவள் சொன்னதை கிரகிக்கவே இயலவில்லை அவனால். வேகமாய் தலையை உலுக்கிக்கொண்டான். ‘விளையாடுகிறாளோ?’ என சந்தேகமாய் அவளை காண, இம்மி கேலியும் இன்றி தீர்க்கமான முகத்துடன் நின்றிருந்தாள் கோகிலா.

“உனக்கு தான் நிச்சயம் முடிஞ்சுடுச்சே?” இன்னும் விலகாத சந்தேகத்துடன் அவன் கேட்கவே, “ப்ச்!! அதுக்கென்ன? நிட்சயம் ஆகிட்டா லவ் வராதுன்னு சட்டம் இருக்கா?” என்றாள் இடக்காய்.

இப்போது அவன் கோவத்துடன் அவள் அருகே சென்று, “அறிவிருக்கா உனக்கெல்லாம்? ஒருத்தனை கட்டிக்குறேன்னு மோதிரம் மாத்திட்டு வந்துட்டு, இப்போ இன்னொருத்தனை விரும்புறேன்னு கூச்சமே இல்லாம சொல்ற? இதான் உங்கம்மா வளர்த்த லட்சணமா? நல்லா அவங்களை மாறியே வளர்த்து விட்டுருக்காங்க!?” சீற்றமாய் பேசியவன் இறுதி வரியை எகத்தாளமாய் சொல்ல, “என்னை பத்தி மட்டும் பேசு, தேவையில்லாம பேரெண்ட்ஸ இழுக்காத!” என்று தன் குச்சி விரல் நீட்டி எச்சரித்தாள் கோகிலா.

“உண்மையை சொன்னா கோவம் வரத்தானே செய்யும்?” அவன் மீண்டும் பேச, “உங்ககிட்ட சண்டை போட நான் வரலை! இன்பா மாமா கல்யாணத்துல நீங்க எதுவும் பங்கெடுக்காம இருந்தாலே போதும்!!” என்றாள் கரம் குவித்து, வேண்டுதலாய் அல்ல, கோவமாய்...!

“அது எங்க வீட்டு விழா! அதை நானே தடுக்கவோ ஒதுக்கவோ நினைக்க மாட்டேன்!!” வலுவாய் அவன் சொல்லிட, “ஹும்! காட்டுக்குரங்குகிட்ட காதலை பத்தி சொன்னா, அது ‘கர்..கர்...’ன்னு தான் கத்தும்” சற்றே சத்தமாய் அவள் சொல்லிவிட, “என்ன சொன்ன?” என எகிறினான் காண்டீபன்.

“ப்ச்! புரிஞ்சுக்கோங்க! என் கண்ணு முன்னாடியே மாமா இன்னொருத்திக்கு உரிமையாகுறதை என்னால பார்க்க முடியாது! நீங்க லவ் பண்ற பொண்ணை இன்னொருத்தனோட நிச்சயம் பண்ணிவச்சு பார்க்க முடியுமா உங்களால?” அவள் என்னவோ, ‘என் நிலையில் இருந்து யோசி’ என இயல்பாகத்தான் கேட்டாள். காண்டீபனுக்கு தான் கண்கள் சிவந்தது.

“சொல்லுங்க! உங்களால நீங்க லவ் பண்ணுன பொண்ண இன்னொருத்தனுக்கு விட்டுத்தர முடியுமா? அப்போ என்னால மட்டும்.....” கோகிலா வாக்கியத்தை முடிக்கக்கூட இல்லை. அதற்குள், “முடியும்... என்னால முடியும்!! அதை தான் செய்யுறேன்! என்னால முடியும்” என கத்தினான் காண்டீபன்.

“வாட் டூ யூ மீன்?” என கோகிலா திகைப்புடன் கேட்க, மௌனம் சாதித்தான் காண்டீபன். ஒரு வேகத்தில் உளறிவிட்டான். மீண்டும் அவள் கேட்கையில் சொல்ல அவனுக்கு கூச்சமாய் இருந்தது, காதலியை அண்ணியாக்க முயல்கிறேன் என்ற எண்ணம் அவனுக்கே அசூயையை தந்தது.

“நீங்க வெளிப்படையா பேசுங்க, அப்போதான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும்” கோகிலா கேட்க, “ஒன்னும் இல்ல” என்றான் அவன்.

பாலத்தின் திட்டில் ‘பொத்’தென அமர்ந்தாள் கோகிலா. அவளுக்கு சற்று தள்ளி முகத்தை இரு கைகளால் தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்த காண்டீபனை பார்க்கையில் பாவமாய் கூட இருந்தது அவளுக்கு.

“உங்களை நான் எப்படி கூப்புடுறது?” திடுமென அவள் கேட்டிட, “ஆங்...!” என விழித்தான் அவன். மீண்டும் அவள் கேட்கவே, “ஏன்?” என்றான் அவன்.

“இல்ல, முழு பேரு சொல்லி கூப்பிட சௌகர்யமா இல்ல, சுருக்கலாம்ன்னு பார்த்தா, காண்டு காண்டுன்னு கூப்பிட்டு நீங்க காண்டாமிருகமாவே மாறிடுவீங்கலோன்னு பயம்..அதான்” என்று கோகிலா சொன்னதும் அவன் முகத்தில் கீற்றாய் புன்னகை இழையோடியது.

அவன் சற்றே தெளிந்துவிட்டான் என தெரிந்ததும், “உங்களுக்கு க்ளோஸ் பிரண்ட்ஸ் யாரும் இல்லையா?” என்றாள். அவனோ, “எனக்கு பிரண்ட்ஸே கிடையாது, இதுல க்ளோஸ் பிரன்ட் எங்கிருந்து?” என்றான் சலிப்பாய்.

“இனி ஒரு க்ளோஸ் பிரண்ட் உங்களுக்கு இருக்காங்க!! அது யார் தெரியுமா? நான்தான்!!” என அவள் உடையில் இல்லாத காலரை தூக்கிவிட்டு புன்னகிக்க, “ஐயையோ, லூசு கூடல்லாம் சேர்ந்தா எங்கப்பா திட்டுவாரு” பயம் போல சொன்னவனுக்கும் அவள் புன்னகை தொத்திக்கொண்டது.

அவன் கேலியை காற்றில் விட்டவள், “இப்போ உங்க க்ளோஸ் பிரண்டான என்கிட்டே மறைக்காம சொல்லுங்க! நீங்க சுசியை லவ் பண்றீங்க தானே?” என்றாள் அவன் கண்களை பார்த்து.

“உன.. உனக்கெப்படி தெ..ரியும்?” அவன் திடுக்கிட, “நீங்க சொன்னதை வச்சு கெஸ் பண்ணேன்! டவுட்டு தான் இருந்துச்சு, இப்போ உங்க திக்கல்ல தீர்மானமே ஆகிடுச்சு!!” என்று சிரித்தாள் கோகிலா.

அவன் பதிலுரைக்காது இருக்க, “அவகிட்ட உங்க காதலை சொல்லி நீங்களே கல்யாணம் முடிச்சுக்கலாமே?” என்றாள்.

“அவகிட்ட பேசனும்ன்னாலே எனக்கு நாக்கு கொளருது, வியர்த்து கொட்டுது, கை கால் எல்லாம் நடுங்குது” என்று ஆறடி சிறுவனாய் அவன் சொன்னதில், “இதே... இதேதான் நானும் இன்பா மாமாகிட்ட சொன்னேன்! உங்க தம்பிக்கு பிபி அதிகமா இருக்கு, நல்ல டாக்டரா பார்க்கனும்ன்னு! அவர்தான் நம்பல, இப்ப நீங்களே சொல்லிட்டீங்க” என்று சீரியசாய் சொல்பவளை, “ஏய் போ லூசு” என சலித்துக்கொண்டான் காண்டீபன்.

“ஹும்! இப்போ சர் நார்மல் ஆகியாச்சா? மறைக்காம சொல்லுங்க, சுசீலா மேல உங்களுக்கு இஷ்டம் இருக்கு தானே?” என்றாள்.

“இருந்துச்சு” என இறந்தகாலத்தில் அவன் பதில் சொல்ல, “ஏன் இப்போ செத்துபோச்சா?” என கிண்டலடித்தாள் கோகிலா. அவன் முறைக்கவே, “மிஸ்டர் காண்டு, காதலுங்குறது அலசி போட்ட போர்வை மாறி, ஒரே ஆளே புழிஞ்சா வேலைக்கு ஆகாது! இரண்டு பேருமா சேர்ந்து புழிஞ்சா தான் வேலையும் முடியும், துணியும் காயும்! அதே மாறி.........” கருத்து சொல்ல வந்தவளை கை நீட்டி அமர்த்தியவன், “ரொம்ப கேவலமா இருக்கு! நீ நேராவே சொல்லிடு, உவமை உவமேயம் எல்லாம் வேணாம்” என்றிட, “பில்லாசபி படிச்சவனுக்கு பொண்டாட்டி ஆக போறோமேன்னு நாலேஜ்ஜ வளர்த்துக்கிட்டா பொறுக்காதே” என முனகிக்கொண்டாள் கோகிலா.

“காண்டு....” அவள் ஆரம்பிக்க, “நீ என்னை காட்ஜில்லான்னு கூட கூப்பிடு, ஆனா காண்டுன்னு மட்டும் சொல்லாத! கேட்க முடில” என்று அவன் சொன்னதும், உடனே திருத்திக்கொண்டாள்.

“அதாவது காட்ஜில்லா....” அவன் சொன்னதையே தீவிரமாய் அவள் எடுத்துக்கொள்ள, ‘இவ என்ன டிசைனோ?’ என அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

“நீ மட்டுமே லவ்விகிட்டு இருந்தா எப்புடி? அந்த பொண்ணையும் லவ்வ விடு!” என்றவள் சொல்ல, “சத்தியமா புரியல” என தலையில் அடித்துக்கொண்டான் காண்டீபன்.

‘கொடும’ என வாய்விட்டே அலுத்துக்கொண்டவள், “உன் லவ்வ அவகிட்ட சொல்லிட்டியா?” என்றாள். அவன் மறுப்பாய் தலையசைக்க, “கிழிஞ்சுது போ! ‘இதயமே...ஹோ இதயமே’ தானா? பெரிய ரவுடி மாறி, சும்மா விரைப்பா அங்குட்டும் இங்குட்டும் நடந்துகிட்டு ஸீனு தான் போட்டுருக்க? ஒரு பொண்ணுட்ட லவ்வ சொல்லக்கூட திராணி இல்ல” அநியாயத்துக்கு கோகிலா திட்ட, முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டான் அவன்.

பாபம் பார்த்தவள், “சரி நீயும் நானும் இனிமே ஒரே டீம்! ப்ளான் என்னன்னா, என் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி நான் இன்பா மாமாவை கட்டிக்குவேன், அதுக்கு பிறகு நீ உன் லவ்வ சொல்லி சுசீக்கு புரிய வச்சு அவளை கட்டிக்கோ! சிம்பிள்” என அவள் சிரிக்க, “என் லவ்வு இருக்கட்டும்! நீ ஏன் கல்யாணத்தை நிறுத்துறதுக்கு இவ்வளோ சிரமப்படணும்? உங்கப்பா கிட்ட விருப்பம் இல்லன்னு சொன்னா அவரே நிறுத்தப் போறாரு!” என்றான் காண்டீபன்.

“அதுலதான் சின்ன சிக்கல்!” என்றவளிடம், அவன் காரணம் கேட்க, “செய்வாரு தான்! ஆனா கல்யாணம் நின்ன பிறகு வேற ஒருத்தனை பார்த்து என்னை கட்டி வைக்க முயற்சி பண்ணுனா?” என்று அவள் கேட்க, “இன்பன் சும்மா விட்டுடுவானா?” என்றான் காண்டீபன்.

அவள் பதில் சொல்லும் முன்னரே அவனுக்கு இன்னொன்றும் தோன்றி குழப்பியது. “ஏய்!! லவ் பண்றவன் எதுக்கு சுசியை கட்டிக்க சம்மதம்ன்னு காலைல சொன்னான்?” என்றான் வியப்பாய்.

“அதான் எனக்கும் தெரியல” என கையை விரித்தாள் கோகிலா.

“அப்போ முதல்ல அவனை புடி! அவன் உன்னை பிடிச்சுருக்குன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டா, எந்த தடையும் இல்லாம உங்க கல்யாணம் நடக்கும், பின்னாடியே எங்க கல்யாணமும் நடக்கும்” என அவன் சொல்ல, “அதேதான் காட்ஜில்லா, எல்லார் முன்னாடியும் எனக்கு கோகிலா தான் வேணும்ன்னு சொல்லி, என்னை அவரே கல்யாணம் பண்ணுவாருன்னு சேலன்ஞ் பண்ணிருக்கேன்! கண்டிப்பா நடக்கணும்! நடத்துவோம்” என்று வீரம் பேசியவளை கண்டு துணுக்குற்றான் காண்டீபன். அவள் சொன்னதை மீண்டும் மனதுக்குள் கொண்டு வந்தவன், “அடியேய்! அப்போ நீயும் ஒன் சைட் லவ் தானா?” என வாயை பிளந்தான் காண்டீபன்.

“ஒன் சைட் லவ்வுக்கா இவ்வளோ ஸீன் போடுற நீ? இதுல எனக்கு உபதேசம் வேற!!” மீண்டும் அவன் கேட்க, “இது ஒன் சைட் இல்ல காட்ஜில்லா, மாமா அவர் விருப்பத்தை ஒத்துக்க மாட்டேங்குறாரு!” என்றிட, அவன் ‘ஏன்?’ என கேட்டதற்கு, “அவன் ஒரு அர்த்த பழைய விக்ரமன் பட ஹீரோ! ‘தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி’ன்னு பாடுறவனை தட்டிகிட்டு போய் பாரின்ல டூயட் ஆடணும்ன்னு ஆசைப்பட்டா உடனே நடக்குமா?” என ஏகத்துக்கும் அலுத்துக்கொண்டாள்.

அப்போது தான் மருத்துவவமனையில் ஒண்டிவீரர் இன்பனிடம் கேட்ட சத்தியம் நினைவு வர, மறைக்காமல் அதை கோகிலாவிடம் சொன்னான் காண்டீபன். கேட்டதும் அவள் கோபம் அதிகமாக, “சென்டிமென்டல் இடியட்” என திட்டினாள் வாய்விட்டு.

“நீ போற வழி சரியா தப்பான்னு எனக்கு தெரியல கோகிலா, ஆனா ஒருவேளை நீ சொன்னது போல எல்லாம் நடந்தா எனக்கு என் சுசி கிடைப்பா! சுயநலத்தோட அமைதியா இருக்கப்போறேன்” என்றான் அவன், அவள் திட்டத்திற்கு சம்மதம் என மறைமுகமாய்.

“தட்ஸ் பெட்டர்! இனி சுசியை இம்ப்ரெஸ் பண்ணுற வழிய பாரு” கோகிலா சிரிக்க, அவன் முகம் சுருங்கியது.

“இல்ல கோகிலா, நீ சொல்றது நடக்குறதுக்கான சாத்தியக்கூறு இருக்கான்னு எனக்கு தெரியல! நடந்துட்டா நல்லது! ஒருவேளை பிசகிட்டா, சுசீலா எனக்கு அண்ணியா வந்துடுவா!” எழுந்த வலியை கண் மூடி அடக்கியவன், “அவளை விட்டு விலகி நின்னே பழகிக்குறேன்! அதான் எல்லாத்துக்கும் நல்லது!!” என்றான் இறுகிய குரலில்.

அவன் வேதனை புரிந்தவள், “டோன்ட் வொரி! எனக்கு இன்பா மாமா கிடைக்கலன்னாலும் உனக்கு சுசீ கிடைப்பா! ஏன்னா மாமா சுசீலாவை கல்யாணம் செய்துக்கப்போறதே இல்லை! எனக்கு என் மாமாவை தெரியும்!” என்றாள் நம்பிக்கையாய்.

அவளது இதே எண்ணம் தான் இன்பனுள்ளும்! இப்போதைக்கு கோகிலாவின் திருமணம் நடக்க வேண்டி, அவள் மனதை மாற்றவென ஒப்பு தாம்பூலம் மாற்றிக்கொள்ள ஒப்புக்கொண்டானே ஒழிய, ஒரு கணம் கூட சுசீலாவை திருமணம் செய்ய அவன் எண்ணவேயில்லை. ஆரம்பம் முதலே சுசீலா காண்டீபனுக்கு முறையானவள் என்ற கண்ணோட்டத்துடனே பார்த்து மனதில் பதிந்து விட்டது. அதை என்றும் அவனால் மாற்றிக்கொள்ள இயலாது. கோகிலாவின் திருமணம் முடிந்ததும் யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் எங்கேனும் சென்றுவிடுவது என முடிவெடுத்திருக்கிறான்!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!

-தொடரும்...
 
Hi,
காண்டு கூட குளோஸ் ஆகி
லவ் மேட்டர் சொல்லிட்டாளே :love: ?
சூப்பர் எப்பி..
பொம்பள பிள்ளை எப்படி பளிச்சென்று மனதில் உள்ளதை சொல்லுது..
அண்ணனும் தம்பியும் டியூசன் போங்கடா....
 
Last edited:

super sis semaiya iruku
 
Top