Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சக்கரை மட்டும் கலப்போம் நாம் ...3

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
காலையில் அம்மா செவ்வந்தியிடம் திட்டுவாங்கிக்கொண்டே கிளம்பினாள் ஆசை ...... அம்மாவிடம் கெஞ்சி கொஞ்சி அன்று அவள் பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாவிற்கு கிளம்பி கொண்டிருந்தாள் .....
செவ்வந்தி : " ஆசை ..... அந்த சாந்தி மகள் கூடவே பள்ளி கூடத்துக்கு போயிட்டு வெரசா வீடு வந்து சேர்ந்துரு கண்ணு ...... அப்பத்தா வைவாங்க ..... நினைப்புலே வெச்சுக்கோ ....."
ஆசை : " அம்மா ... நான் ஸ்கூல் போகலை அம்மா ... நம்ம ஊரு மாரியம்மன் கோவில் கிட்டக்க இன்னிக்கு கபடி போட்டி நடக்குதுல்ல ....அதை பாக்க போறேன்மா ......"
நடக்கவிருக்கும் விபரீதத்தை யாரும் அறியவில்லை ....
செவ்வந்தி : " என்ன புள்ள நீ ???? அங்க எல்லாம் போக கூடாது ...... இப்போ வந்து சொல்ற கபடி போட்டி பாக்க போறேன்னு ???? அண்ணன் கூட போறதுக்கு மட்டும்தான் ஐயன் சரினு சொல்லிருக்காரு ...மறந்துடீங்களா அம்மணி ???? "
ஆசை : " அம்மா ...நான் நேத்தே ஐயன்கிட்ட கேட்டுட்டேன் மா ..... இப்போ வந்து நொய்நொய்னு சும்மா எதாவது சொல்லிட்டு இருக்காதீங்க ...என்ற செல்ல அம்மாதானே ???? இந்த துப்பட்டாவுக்கு மட்டும் பின்னை குத்தி விடேன் ..... அண்ணன் பாத்தான் அவ்ளோதான் என்ன தொலைச்சிருவான் ....." என்று சொல்லிக்கொண்டே பின்னை கொடுக்க துப்பட்டாவை மடித்து நேர்த்தியாக பின்னை மாட்டிவிட்டவாறு மகளுக்கு தேவையான அறிவுரைகளை கூறிக்கொண்டிருந்தார் ....
அவை அனைத்தையுமே காதில் போட்டுக்கொண்டவள் ........ "சரி மா ...நான் பத்திரமா வீட்டுக்கு வந்துருவேன் .... நம்ம மாரியம்மன் கோவிலுக்கு தானே போறேன் ... அதுக்கு ஏன் மா இவ்ளோ பயப்புடறீங்க ???? சமத்தா வந்துருவேன் சரியா ???" என்று கொஞ்சி கெஞ்சி அவரை சாமாளித்துவிட்டு விடைபெற்றாள் ......
செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவர் பெருமூச்சுடன் உள்ளே சென்று மீதமிருந்த வேலைகளை பார்க்க துவங்கினார் ......
" ஹே ...... ஹே ....... மாறா ..... அவன் காலை தூக்குறப்போ தொட்டுட்டு வா டா...." என்று கத்தி கத்தி அந்த இடத்தையே அலறவிட்டுக்கொண்டிருந்தாள் சுடர் ...... யாரையும் தொடாமல் மாறன் அவனது அணிக்கு திரும்ப ...... அடுத்த இறக்கமாக எதிர் அணியில் ஒருவன் களத்தில் ஆட துவங்கினான் .....
"கபடி ...கபடி ...கபடி .... கபடி..... " என்று முணுமுணுத்துக்கொண்டே எதிர் அணியில் இருப்பவர்களை தொட முயற்சிக்க ..... " டேய் மாறா ..எல்லாரும் சேர்ந்து அவனை அமுக்கி பிடிங்க ....." என்று சுடர் கத்திக்கொண்டிருக்க ....அவள் புறம் அந்த ஆட்டக்காரனின் கவனம் திரும்பியது .... அவன் அசந்திருந்த அந்த நொடியை பயன் படுத்தியவர்கள் அவனை அமுக்கி பிடிக்க .... ஆட்டத்திலிருந்து வெளியேறியவன் வெறியுடன் அமர்ந்திருந்தான் ... அவன் கண் முழுக்க சுடரின்மேலே இருக்க ..... அதை பார்த்த மாறனிற்கு மனதுக்குள் அவனது வாயை உடைக்கும் அளவிற்கு கோவம் வந்தது ...... மாறன் அவனை முறைப்பதை கண்டவன் .... உதட்டை சுழித்து பழிப்பு காட்ட ..... மாறனிற்கு வெறி ஏறியது .....
அடுத்தகட்டமாக ... மாறன் களத்தில் இறங்க ..... வெளியேறியவன் அவனது ஆட்களிடம் கண்ணால் ஏதோ சைகை காட்ட ... அவர்களும் ஒரு ஏளன புன்னகையுடன் மாறனை எதிர்கொண்டனர் .... அவன் உள்ளே நுழைந்த அடுத்தநொடி அனைவரும் ஒன்றாக அவன்மேல் பாய்ந்தனர் ... ஒருவன் அவன் கைகளை வளைத்து பிடிக்கிறேன் பேர்வழி என்று கையை முறுக்கி உடைக்க .... மற்றவன் மாறனின் இடுப்பில் அவனது கால் முட்டியால் நன்றாக ஊன்றி அவனது முதுகு தண்டை பதம் பார்த்தான் .....
வலி தாங்காமல் அவன் அலறிய அலறலில் சுடருக்கு கண்களில் கண்ணீர் பெருகியது ...... அவனது அலறலில் வேகமாக அவர்களை நெருங்கி வந்தவள் ... ரௌத்திரமாக அவனது முதுகில் கால் வைத்திருந்தவனை தள்ளிவிட அவன் கீழே விழுந்தான் ..... மாறன் கதறி துடிக்க .... அவனை பிடித்து இழுத்தவள் அவன் நிற்க முடியாமல் தடுமாற ...அவனது இடுப்பில் கையிட்டு அவனை சாய்வாக பிடிக்க அப்பொழுதே அவர்கள் ஆட்கள் வந்து மாறனை பிடித்தார்கள் .....
நொடியில் நடந்த இந்த நிகழ்விலும் .... மாறனின் அலறலிலும் நிலைமையை உணர்ந்த விழா குழுவினர் வேகமாக இறங்கி களத்திற்கு வந்தவர்கள் .... அவர்கள் வருவதற்குள் மாறனின் ஆட்கள் எதிரணியை வெளுக்க துவங்க ... சுடரோ அவனை தவிர வேறு எதையுமே கவனிக்கவில்லை ...... மாறனின் வலி அதிகமாக அவனது அலறலும் அதிகமாகியது ..... சுடரின் தோள்களை அழுந்த பற்றியவன் .....
" என்னாலே முடியலை சுடர் .... என்னால முடியலை ...செத்துருவேன் போல இருக்கு ....ரொம்ப வலிக்குது ....." என்று கதற ....
" யாரவது இங்க வாங்களேன் ....." என்று அவள் கத்திய கத்தலில் மாறனின் ஆட்கள் அங்கு விரைய ... இங்கு விழா கமிட்டியினர் எதிரணியினரை எச்சரித்துவிட்டு ...... போட்டியை கலைத்துவிட ஆலோசித்து கொண்டிருந்தனர் .......
மாறானது அலறலை பார்த்த அவனது ஆட்கள் அவனை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்து செல்ல ..... அவனை பார்த்து தைரியம் சொன்னவள் ...தனது துப்பட்டாவை இழுத்து முடித்துக்கொண்டு ....விழா கமிட்டியினரை பார்க்க வந்தாள் .....நேராக ஊர்தலைவரிடம் சென்றவள் ............
" ஐயா ...எனக்கு இந்த போட்டியை பாதியிலே நிப்பாட்டுறதில் விருப்பம் இல்லை ... நம்ம ஊரு திருவிழா போட்டி ... கண்டிப்பா பாதியில நிக்க கூடாது ..... மாறனை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தவங்களை சும்மா விட கூடாது .. என்னாலே அவங்களை சும்மா விட முடியாது ... நீங்க சரினு சொன்னா மாறனுக்கு பதிலா நான் களத்துல இறங்கி அவங்களை ஒருவழி பண்ணுவேன் ... இல்லைனா களத்துக்கு வெளிய வெச்சு அவங்களை ஒரு வழி பண்ணுவேன் .... களத்துக்கு வெளியே நான் அவங்களை எதாவது செஞ்சு ஊர் பிரச்னையா மாறிடுச்சுனா என்கிட்ட கேக்காதீங்க .... ஏனா , நான் உங்ககிட்ட இப்போவே சொல்லிட்டேன் ... இதுக்குமேல ... முடிவு உங்க கையிலேதான் இருக்கு " என்று அவர்களை கலங்கடித்து பதிலுக்காக காத்திருக்க .....
அவர்களில் ஒரு பெருசு " ஏன்மா சுடர் ... எதுக்கு தேவையில்லாத பிரச்சனை ..... ஆம்பளை புள்ள நம்ம மாறனுக்கே இந்த நிலைமை ... நீ பொட்டை புள்ளை ..... உன்னை நாங்க எப்படி மா விளையாட விடுறது ???? நீயே யோசிச்சு பாரு கண்ணு .... உங்க அப்பா ராஜவேலுக்கு தெரிஞ்சிது .... அம்புட்டுதான் ..... " என்று சொல்ல .....
" அதுலாம் எங்க ஐயன்கிட்ட நான் பேசிக்குவேனுங்க ..... நீங்க .... நான் விளையாட முடியுமா முடியாதானு மட்டும் யோசிச்சு சொல்லுங்க ....." என்று அடித்து கூற ....
அந்த பெரியவர் எதிரணியினரிடம் சென்று ஏதோ பேசிவிட்டு திரும்பி வந்தவர் ..... " அவங்களுக்கு இந்த பொண்ணு விளையாடுறதுல ஒன்னும் பிரச்சனை இல்லையாம் ..... ஆனா ..... " என்று இழுத்து நிறுத்த ....
" ஆனா ???? " என்று இன்னொரு நரைத்தமுடி கேட்க .....
" ஆனா , அந்த பொண்ணுக்கு எதாவது ஆச்சுன்னா எங்ககிட்ட கேக்காதீங்க ... அப்டினு விவகாரமா பேசுறானுவ ...... எனக்கு இது என்னவோ சரியா வருன்னு தோணலை கண்ணு ...." என்று இவர் கூறிக்கொண்டிரும்போதே .... நேராக களத்திற்கு சென்றவள் குனிந்து மண்ணை வணங்கிவிட்டு ..... அவர்கள் அணியில் போட்டியில் மீதமிருந்த 4 பேருடன் கலந்தாலோசிக்க ...... அதற்குள் விழா கமிட்டியினர் அவளது முடிவை புரிந்துகொண்டு அவர்களது இடத்தில் தஞ்சம் புகுந்தனர் .....
ஆட்டம் மறுபடியும் ஆரம்பிக்க .... அவர்கள் அணியில் ஒருவன் எதிரணியின் களத்தில் இறங்கினான் ..... அவன் இறங்கியதுமே அவனை வெளியில் அவர்கள் தள்ளியிருக்க .... அவனும் தோற்று சுடரின் அணியில் இப்பொழுது மொத்தம் 3 பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர் ....
இப்பொழுது சுடரை நோட்டம்விட்டவனும் மர்ம புன்னகையுடன் உள்ளே வர .... சுடர் மந்தகாசமான புன்னகையுடன் அவனை நோக்கினாள் ......
" 3 பேரு மட்டும் இருக்கப்போவே ...இவளுக்கு திமிர பாரு .... " என்று மனதினுள் அந்த ஜொள்ளுப்பார்ட்டி நினைத்துக்கொள்ள .....
" செத்த டி மகனே ... என்று இவள் எண்ணி கொண்டாள் ....."
" உள்ளே வந்தவனை புள்ளிகள் எடுக்க விடாமல் இவர்கள் ஆட ...அவனது நேரம் முடிந்தவுடன் அவன் அணிக்கு சென்று அவர்களுடன் இணைந்தான் ....
அடுத்து இவர்கள் அணியிரிலிருந்து ஒரு ஓர் பையனை இவள் இறக்கி நேரத்தை வீணாக்கும்படி கூறியிருந்தாள் .. அவனும் அதை அச்சு பிசகாமல் செய்ய ..
மறுபடி அவனது அணியிலிருந்து அடுத்து இன்னொருவரை இவர்கள் களத்தில் இறக்க .... "அவன் கபடி கபடி என்று முணுமுணுத்து மீதி இருந்த இரு ஆண்களையும் தொட்டவனின் நேரம் முடிந்துவிட .... அவனும் அவனது அணியுடன் இணைந்துகொள்ள ...... இப்பொழுது இந்த அணியில் எஞ்சியிருந்தது சுடர் மட்டுமே ... இப்பொழுது அவளின் சுற்று வர ... உள்ளே சென்று நேரத்தை கடத்தியவள் ... வந்து அவளது இடத்தில் நின்றுகொண்டாள் ..... அவள் நின்றதை பார்த்து எதிரணியினர் சிரிக்க இவளும் சிரித்தாள் .....
சற்றே குழம்பிய மனநிலையில் நமது ஜொள்ளுப்பார்ட்டி இப்பொழுது களத்திலிறங்க .... அவனை பார்த்து சிரித்துக்கொண்டே அவனுக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்தாள் ..... சட்டென இவன் அவளது மேலே கைவைக்க போக ..... கண் இமைக்கும் நொடியினில் அவன் அங்கிருந்த தடுப்பு சுவற்றில் மோதி கீழே விழுந்திருந்தான் .....
சுற்றி இருந்த அனைவரும் அவனை வெறித்து பார்க்க ..... எதுவுமே நடக்கவில்லை என்ற நிலையில் சுடர் ..... கையை கட்டிக்கொண்டு நின்றாள் ... அங்கு விழுந்த ஜொள்ளு பார்ட்டியின் மண்டை உடைந்திருக்க ..... அவனது அணியினர் அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர் ....
அடுத்து இவள் களத்தில் இறங்க ...... அவர்களது நண்பனை இவள் தாக்கிவிட்ட வெறியில் இருந்தவர்கள் ... இவள் செய்த சூனியத்தை கவனிக்கவில்லை ... களத்தில் இறங்கியவள் ....... கபடி ... கபடி .... என்று கூறிக்கொண்டே ..... ஆம்பளையா இருந்தா பிடிச்சு நிறுத்துங்கடா பாப்போம் ..."என்று சவால் விட ..... அதிலே இன்னும் கோபம் கொப்பளிக்க அனைவரும் முன்னேறி வர ...... காலை வைத்து அவர்களுள் ஒருவரை இவள் உதைக்க முற்பட ... அனைவரும் அவள் காலை பிடித்திருந்தவாரே அவள் வெள்ளை கோட்டை தொட்டிருந்தாள் .......... அங்கிருந்த அனைவரும் ஆர்ப்பரிக்க ............ அங்கிருந்த சிலர் இவளை தூக்கினர் .....
எதிரணியில் அனைவரும் மூக்கு உடைபட்டு இருக்க .......... சுடர் எதுவுமே நடவதவாறு அங்கிருந்து கிளம்ப .... அவளை அங்கிருந்த திருவிழா கமிட்டியினர் .......... தடுத்து நிறுத்தியிருந்தனர் ......
"அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும்
அந்த தீயை அணைக்கும்
நீ பயமின்றி துணிந்து செல்லு

உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பொய்யாக காட்டும்
எந்த வர்க்கத்தோடும் இணையாதே
இதோ காயங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழ்ந்தாரும்

உனக்காக நீயே உதிப்பாய் அம்மா
உனதாற்றல் உணர்த்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய் "


இங்கு இவ்வளவு நடந்துகொண்டிருக்க ........ அங்கு ஆசையோ எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள் ...... கடவுளுக்கு அவளது வேண்டுதல் கேட்டதோ என்னவோ தெரியவில்லை.....
அதே நேரம் அங்கு சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு முதியவருக்கு .... மூன்று ஆண்மகன்கள் , அதுவும் இளம்வயது ஆண்மகன்கள் தனியாக கூடி ஒரு புதரின் அருகில் நின்று பேசுவதை கவனித்தார் ... ஏதோ தப்பாக நடந்திருக்கிறது என்பதை ஊகித்தவர் ... அதுவும் அவர்களை கடந்து செல்லும்போது அவர்களை ஊன்றி பார்க்க ... அவர்களது நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளும் அவர்கள் முகத்தில் இருந்த பதட்டமும் ஊர்ஜிதப்படுத்த ...... அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை மனதுக்குள் கணக்கிட்டவர் .... அவர்களை கடந்து யோசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தார் .... அப்பொழுது எதிரில் இரு லைன்மேன் ( மின்கம்பம் ஏறுவாங்க ) வர ...இவர் மயக்கம் போடுவதைப்போல நடிக்க .... இவரை பார்த்தவர்கள் வண்டியை நிறுத்தி இவர் அருகில் வர ..... அவர்களுள் ஒருவர் அம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுக்க .. மற்றொருவர் இவரை எழுப்பி நிற்க வைக்க ...... அப்பொழுது இவர் அவர்களிடம் அவர் அந்த புதரை நோக்கி கைகாட்ட .... இருவரும் அங்கு நெருங்கிய சமயம் அங்கிருந்த மூவரும் இவர்கள் வருவதை பார்த்துவிட்டு ஆசையை இழுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்ய ... இவளோ அசையாமல் அங்கேயே போராட ...... இவளை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட .. இவள் இருந்த நிலையை பார்த்தவர்கள் நேராக போலீசிற்கு தொடர்புகொண்டு சொல்ல மற்றொருவர் அவருடைய வண்டியிலிருந்த தண்ணீர் பாட்டிலை இவளிடம் நீட்டினார்.....
அங்கு போலீஸ் வந்து நடந்ததை அவளிடம் விசாரிக்க அவளோ எதுவும் கூறும் நிலையில் இல்லை ..... இவளது பெற்றோரிடம் தெரிவிக்கும் முயற்சி எடுக்க .... அப்பொழுது அந்த கபடி போட்டியிலிருந்து வந்து கொண்டிருந்த ஊர் மக்கள் என்னவென்று விசாரித்து பஞ்சாயத்துக்கு கூட்டி வந்திருந்தனர் ......
அந்த நிலையில் ஆசையை பார்த்த செவ்வந்தியின் தாயுள்ளம் பதறி போக ..... அவளிடம் வந்து விசாரிக்க துவங்கிய நேரம் அங்கு சுடர் வந்திருந்தாள் ....... சுடர் கேட்டவுடன் அவள் அனைத்தையும் கூற துவங்கினாள் ......
வீட்டிலிருந்து வெளியே வந்து கபடி போட்டி நடக்கும் இடத்தை நோக்கி நடக்க துவங்கினாள் ஆசை ..... மைக்கில் கபடி போட்டி துவங்க போவதாக ஒலிபெருக்கிகளில் அறிவிப்பு வர ....... நேரமாகிவிட்டது என்று உணர்ந்து குறுக்கு வழியில் செல்ல முடிவெடுத்தாள்... பின்னால் திரும்பி யாரேனும் வருகிறார்களா என்று சுற்றி முற்றி பார்த்தாள்..... கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லாது போக தனித்தே அந்த ஆள் நடமாட்டம் அற்ற பாதையில் நடக்கத் துவங்கினாள் ....
அப்பொழுது அவள் யோசித்திருந்தால் இப்பொழுது சந்திக்கும் பிரச்சனைகளை அவள் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது ....
அவள் பாதி தூரம் கடந்து சென்றிருக்க அப்பொழுது அந்த வரப்புகளில் ஓரமாக அமர்ந்து மூவர் குடித்துக் கொண்டிருந்தனர் ... அவர்களை பார்த்த உடனே இவளுக்கு வியர்க்கத் துவங்கியது .... அவர்களை அவள் கடந்து செல்ல முற்பட ....அவர்களது பார்வையை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் அச்சம் ஏற்பட்டது ....
அந்த இடத்தில் நிற்பது சரி அல்ல என்பதை உணர்ந்து வேகவேகமாக நடக்க துவங்கினாள்.... சற்று நேரம் கடந்து பின்பு அவர்கள் இவளை தொடர்வதை இவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது ...... வேகம் கூட்டி நடக்க அவர்களும் இவளது வேகத்திற்கேற்ப நடக்கத் தொடங்கினர் ...... இவளுக்கு நெஞ்சு படபடவென அடிக்க சற்று நேரத்தில் ஓடத் தொடங்கினாள் .....
" அவங்க கிட்ட மாட்ட மாட்டேனு தான் நினைச்சேன்..... என்னால் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடினேன்..... ஆனா என்னால முடியல..... கொஞ்ச தூரத்திலேயே அவங்க என்னை துரத்தி பிடிச்சிட்டாங்க........ அவங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்திக்கணும்னு கையை காலை உதறி தப்பிக்க பாத்தேன் ......... அப்போது அவங்க இன்னும் இறுக்கி பிடிச்சாங்க..... அப்போது நான் என்னோட கைய கால இன்னும் வேகமா உதறி என்னுடைய எதிர்ப்பை காட்டினேன்..... அப்போதான் அவங்கள்ல ஒருத்தன் என் கண்ணத்தில் வேகமாக அறைவிட்டு கீழே தள்ளினான் ..... எனக்கு நினைவு தப்ப ஆரம்பிச்சது ...... அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல..... அவங்க மூனு பேரும் என் கையை பிடிச்சு தர தரனு இழுத்தாங்க ...அப்போதான் கொஞ்ச கொஞ்சமா நினைவு வர ஆரம்பிச்சுது ...... எழுப்பி தண்ணீர் கொடுத்தாங்க ..... கொஞ்ச நேரத்திலேயே போலீஸ் வந்தாங்க ..... என்கிட்ட என்ன நடந்துச்சுன்னு கேட்டாங்க ..... இவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருக்கு......" இன்று கதறிக்கொண்டே அவள் சுடரை இறுகத் தழுவிக்கொண்டாள்.....
பஞ்சாயத்தில் உள்ளவர்கள் இதனைக்கேட்டு அவர்களுக்குள் சலசலத்துக் கொள்ள பஞ்சாயத்து தலைவர் அவளிடம் பேச தொடங்கினார் ....
" ஏன் மா ... ஆசை.... உனக்கு அவங்க முகம் ஞாபகம் இருக்கா ??? "
ஆசை: " நல்லா நியாபகம் இருக்கு ..... என்ன நடந்துச்சுன்னு தெரியாம நான் என்ன சொல்லட்டும் ???" என்று கூறிக்கொண்டே மயங்கி விழ அருகில் இருந்த சுடர் அவளை தாங்கிப் பிடித்தாள்.......
ஓரமாக நின்றுகொண்டிருந்த செவ்வந்தியை நோக்கி நாட்டாமை " ஏம்மா செவ்வந்தி என்ன பண்ணலாம்னு நினைக்கிறே ???? அந்த பயலுக யாருன்னு தெரியல ???? ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விசாரிக்க சொல்லலாமா ??? அதுதான் எனக்கு சரின்னு படுது .... இது உன் புள்ளையோட வாழ்க்கை நீ தான் சொல்லணும்.... அப்படி கம்பிளைந்து கொடுக்குறதுல உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே ......... "
இல்லை என்று மறுப்பாக தலையசைத்தார் செவ்வந்தி ........
செவ்வந்தி : " அப்டி கேக்குறதுனால என்ன மாறப்போகுது ???? " என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஆசையை பக்கத்திலிருந்த பெண்ணின் மடியில் சாய்த்துவிட்டு செவ்வந்தியிடம் வந்தாள் சுடர் .....
சுடர் : " அத்தை என்ன சொல்றிங்க நீங்க ????? நம்ம பொண்ணுமேலே கைய வெச்சிருக்காங்க ..... இப்போ ரோட்ல போற பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுனவங்க நாளைக்கு ஒரு பச்ச கொழந்தைகிட்ட பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் ????? சரி ... நாளைக்கே என்கிட்ட மறுபடி இந்த மாதிரி நடந்துச்சுனா .... ஒருவேளை என்னை பயன்படுத்தி அவங்க ஆசையை தீர்த்துக்கிட்டு என்னை கொன்னுட்டா அப்போ என்ன அத்தை பண்ணுவீங்க ???? நீங்க இப்டி விட்றதுனாலே நாளைக்கு என்னை மாதிரி ஒரு சுடர் பாதிக்கப்படுவா .... இன்னொரு ஆசை பாதிக்கப்படுவா ........ அப்டி இன்னொரு பொண்ணுக்கு இந்த மாதிரி நடக்க கூடாதுனு நினைச்சீங்கனா போலீஸ் கம்பளைண்ட் கொடுங்க .... நானும் உங்க பொண்ணுதான் .... எனக்காக இந்த உதவியை பண்ணுங்க அத்தை .... ப்ளீஸ் ...." என்று கைகூப்பி நிக்க ..... சரியென்று தலைவரை பார்த்து கூறினார் ..... வீட்டிற்கு மாறன் அழைத்து வந்துவிட்டதாக ஒருவர் வந்து கூற ..... இதற்குமேல் போலீஸ் அந்த காமுகர்களை தேடிக்கண்டுபிடித்து தண்டனை வழங்கும் என்று நம்பிக்கையுடன் அந்த பஞ்சாயத்து கலைந்தது ..... அனைவரும் கலைந்து அவர்கள் வீடுநோக்கி செல்ல ..... நடக்க கூட திராணி இல்லாமல் அங்கிருந்த மரத்தினடியில் ஆசையின் அருகில் சென்று அமர்ந்தார் செவ்வந்தி .... ஆசையின் வாடிய முகமும் மாறனின் நிலையும் அவரை வெகுவாக பாதித்திருந்தது ..... அவரது கலங்கிய முகத்தினை பார்த்த சுடரின் தாய் ...." அண்ணி ...நான் ஆசையை என்கூட எங்கவீட்டுக்கு கூட்டிட்டு போகவா ??? நீங்களும் மாறனை கவனிப்பீங்க ..... சுடரும் இன்னும் 20 நாள் வீட்டுலே தான் இருப்பா ....... நான் ஒரு ரெண்டு நாளைக்கு அப்புறம் புள்ளைய கூட்டிட்டு வரேன் அண்ணி ..... நம்ம சக்திக்கும் 35 நாளைக்கு காலேஜ் லீவு .... நான் அப்புறம் கூட்டிட்டு வரேன் ..... வா ஆசை .... நம்ம போகலாம் ... சக்தி அக்கா ஊருலருந்து வந்தப்போ புடிச்சு உன்னை பாக்கனுன்னு கேட்டுட்டே இருந்தா ......" என்று கூறிக்கொண்டே ஆசையின் கையை பிடித்து ... அவளை அணைவாக நிறுத்த .....
" அத்தை ...நான் வேணுன்னு பண்ணலை அத்தை ..... என்னை மன்னிச்சிருங்க ... " என்று கூற ....." அடி என் ராசாத்தி ....நீ எதுக்கு டி தங்கம் மன்னிப்பு கேக்குற ???? " என்று சுடரின் தாய் சமாதான படுத்தினார் ... அம்மா என்னை அடிச்சிருவாங்கனு தானே என்னை இப்டி கூட்டிட்டு போறீங்க ????? " என்று கேட்டவாறே நடக்க துவங்கினாள் .....
சுடர் செவ்வந்தியின் கையை பிடித்துக்கொண்டு ...." நம்ம வீட்டுக்கு போகலாம் அத்தை ...... மாறன் வந்துருப்பான் ...... பாவம் அவனே வலில ரொம்ப துடிச்சான் ... என்னனு நாம அவனை போய் பாப்போம் வாங்க என்று அவரை கூட்டிக்கொண்டு வீடுநோக்கி நடந்தாள் ...... " சுடர் வீட்டிற்கு சென்றதும் மாறனை சகஜமாக்கிவிட ... அவனும் சுடரின் அருகாமையில் உலகை மறந்தான் ....

வீட்டிற்கு சென்று ஆசையை சக்தியிடம் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சுடரின் தாய் வேலையை பார்க்க சென்றுவிட ....... சக்தி எவ்வளவு முயற்சி செய்தும் ஆசை இன்னும் அந்த நிகழ்வில் இருந்து மீளாமல் இருக்க ....
அப்பொழுது அவர்கள் வீடு காம்பெளண்ட் சுவற்றின் அருகில் விளையாடும் பிள்ளைகளின் குரல் கேட்க .... 12 வயதே ஆன ஆசை அவர்கள் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவள் வயது பிள்ளைகளை பார்த்தபின்பு .... அனைத்தையும் மறந்தவளாக அவர்களை நோக்கி சென்றாள் ....
உள்ளே சென்று சமையல் வேலையை முடித்த சுடரின் தாய் சற்று நேரத்தில் வெளியே வந்து பார்க்க ... அங்கு அவர் கண்டது .... கொட்டாங்குச்சியில் மண்ணைக்கொட்டி நீரை ஊற்றி கலக்கிக்கொண்டிருக்கும் சக்தியையும் அவள் அருகில் கண்கள் விரிய முத்துப்பற்கள் தெரிய நிற்கும் ஆசையையும்தான் .....
வந்தவர் நேராக சக்தியிடம் சென்று .... அடியேய் கழுதை ...... 23 வயசு பொண்ணு டி நீ ... கொஞ்சமாவது வளர்ந்த புள்ளை மாதிரி நடந்துக்கோ .... 6 மாசத்துல உனக்கு கல்யாணம் ..... மனசுல வெச்சுக்கோ ..... என்று அவளிடம் கூறிக்கொண்டே உள்ளே செல்ல சக்தியின் முகம் வெளுத்திருந்தது .... அதை கவனிக்க விடாமல் சமையலறையிலிருந்து விசில் சத்தம் கேட்க .... அங்கு சென்றுவிட்டார் .... அங்கு நின்று அவளது முகத்தை கவனித்திருந்தால் பின்னால் நடக்கும் விபரீதங்களை தடுத்திருக்கலாம் .......
 
Top