Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-22

Advertisement

praveenraj

Well-known member
Member
அங்கே தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்ரீயும் சிந்துவும் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர். இருவரும் தனித்தனியே ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கலாம் ஆனால் பேசிக்கொள்ள முடியாது. தினமும் ஒரு அரை மணிநேரம் மட்டும் இருவரும் சந்திக்க அனுமதி அளிக்கப்படும். இதில் ஒரே நல்லது என்னவென்றால் இன்று வரை அவனால் அவர்கள் கற்பிற்கும் உணவிற்கும் எவ்வித குறையும் ஏற்படவில்லை. இதிலே அவர்களுக்கு அவர்களின் நிலை நன்கு புரிந்தது. நாம் கோவிலுக்கு கிடா வெட்டும் முன் ஒரு குட்டி ஆட்டை வாங்கி அதற்கு நல்ல தீனி அளிக்கப்பட்டு நன்றாக வளர்த்துவோம் தானே? கிட்டத்தட்ட தங்களின் நிலை அது தான் என்று அவர்கள் இங்கே வந்த சில நாட்களிலே தெரிந்துகொண்டனர். இதற்கு இடையில் தான் ஸ்ரீக்கு கொஞ்சம் கொஞ்சமாக தன் உடலில் மாற்றங்கள் தெரிய அவளைப் பார்க்க வரும் பெண்மணிகள் மூலமாக அவளுக்கு அவள் கர்ப்பமாக இருப்பது ஊர்ஜிதப் படுத்தப்பட்டது. இந்த விஷயத்தை ஏனோ அவளுக்கு சிந்துவிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. எதேர்சையாக நாள் கணக்கைப் பார்க்க எல்லாம் சரியாக மேட்ச் ஆனது. மும்பையில் அந்த இரவு இந்திரனுடன் தங்கியபோது நடந்தது அது! ஏனோ அவளுக்கு அழுகை தான் வந்தது. தான் உயிருடன் இருப்பதே இந்திரனுக்குத் தெரியாத போது தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதை எப்படிச் சொல்ல முடியும்? மேலும் இது ஒன்று தான் அவளை அடைத்து வைத்திருப்பவன் அவளிடம் நெருங்காமல் இருக்க காரணம் என்று அவளும் அறிந்துகொண்டாள். ஆம் இவனை அவளுக்குத் தெரியும். இவனை தனக்குத் தெரியும் என்பதைக் கூட அவள் சிந்துவிடம் சொல்லவில்லை. ஏனோ சொல்லத் தோன்றவில்லை. எங்கே இந்திரன் இறந்து விட்டானோ என்று அதிகம் பயந்தவள் அன்று அவன் வந்து கத்திவிட்டுச் சென்ற போது தான் நிம்மதியாக இருந்தது. இங்கிருந்து அவர்கள் தப்பிப்பது அவ்வளவு சுலபமில்லை என்று அவளுக்குத் தெரிந்தது. காரணம் இது அண்டர்கிரௌண்டில் இருக்கும் ஒரு ரகசிய அறை. அதாவது தரைமட்டத்திற்கும் கீழே இருக்கும் அறை. (பெரிய மால்களில் இருக்கும் பார்க்கிங் வசதி இடம் போல்) . அதைத் தவிர இது எந்த ஊரு எந்த இடம் எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை.

அன்றும் வழக்கம் போல சிந்துவையும் ஸ்ரீயையும் கவனித்துக்கொள்ளும் அந்தப் பெண்மணிகள் வந்திருந்தனர். ஸ்ரீயின் உடல்நிலையைப் பரிசோதித்து விட்டு அவர்களை மீண்டும் அவர்களுக்கான அறையில் தங்கவைக்க முயல ஏனோ ஸ்ரீ முதன்முதலில் அவரிடம் ஒரு வேண்டுக்கோளை வைத்தாள். "நான் சிந்துவிடம் கொஞ்சம் தனியா பேச வேண்டும்..." என்று சொல்ல அதற்கு அவரும் சம்மதித்தார். சிந்துவை நோக்கிச் சென்ற ஸ்ரீயைப் பார்த்தவள் முகத்தில் சொல்லப்படாதக் கோவம் அதேநேரம் இயலாமை வருத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஏதும் பேசாமல் ஸ்ரீயைக் கட்டிப்பிடித்து அழுதாள் சிந்து. "என்னை மன்னிச்சுடு சிந்து. நான் உன்கிட்ட இதைச் சொல்லியிருக்கணும். ஆனா மறைச்சிட்டேன். நாம உயிர் வாழுவோமான்னே நமக்குத் தெரியாத நிலையில எங்க குழந்தையைப் பற்றிச் சொல்ல?" என்று அவளின் காதில் மெல்ல சொன்னாள். அவளின் வயிற்றைத் தொட்டுத் தடவிய சிந்துவுக்கு அழுகை வந்தாலும் அவளின் நிலை அறிந்து,"விடு ஸ்ரீ. இதுவரை கூட நாம மீண்டும் நம்ம வீட்டுக்குப் போவோம்னு எல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கை எதுவும் இல்ல. ஏன்னா நம்ம ரெண்டு பேரோட துருதிர்ஷ்டம் அது. ஆனா இப்போ எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் வயத்துல இருக்குற இந்தக் குட்டி பாப்பா வெளிய வரும் போது நம்ம வாழ்க்கை நிச்சயம் மாறியிருக்கும். நீ வேணுனா பாரு, நாம மூணு பேரும் திரும்ப நம்ம வீட்டுக்குப் போகத் தான் போறோம். அங்க தான் இந்தக் குட்டி பாப்பா பிறக்கப் போறான். இவன் கம்சனை கொன்ன கிருஷ்ண பரமாத்மா மாதிரிநம்மை அடச்சுவெச்சிருக்கும் இவனைக் கொன்னு நம்மளை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவான்..." என்றவள்,"நான் இருக்கேன் ஸ்ரீ. நம்பு ..." என்று சொல்லி சிறிது உரையாடி விட்டுப் பிரிந்தனர்.

ஸ்ரீக்கும் இப்போது தான் மனம் சற்று நிம்மதியாக இருந்தது. பின்னே இதுநாள் வரை இதை அவள் மட்டும் தெரிந்துகொண்டு சிந்துவிடமிருந்து மறைத்தது என்னவோ போலே இருந்தது. இருந்தும் இது எப்படி நடந்தது என்பதைப் பற்றி அவள் கேட்பாள் என்று ஸ்ரீ எண்ணியிருக்க மாறாக சிந்து எதையுமே கேட்காமல் சென்றது அவளுக்கு ஒரு வருத்தம் மற்றும் ஒரு சின்ன ஏமாற்றம். மெல்ல அன்றைய தின நிகழ்வுக்குச் சென்றாள் ஸ்ரீ.

***********************

தருணும் குகனும் அன்று ஆக்சிடென்ட் நடந்த தினத்தைக் குறித்துகொண்டு அது நடந்த இடத்தையும் அதைப்பற்றிய செய்தி குறிப்புகளையும் ஆராந்து எடுத்துச் சென்றனர். அந்த கேஸ் எந்த ஸ்டேஷனில் விசாரிக்கப்பட்டது என்றும் யார் விசாரித்தார்கள் என்றும் தேட அந்த ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்க எண்ணியவர்களுக்கோ இந்த கேஸ் நடந்த போது இங்கே இன்ஸ்பெக்டராக இருந்தவர் இப்போது இங்கு இல்லை என்றும் பணியிடை மாற்றம் பெற்றார் என்றும் சொல்லப்பட்டது. இருந்தும் அந்தக் காவல் நிலையத்தில் இருந்த கோப்புகளை எல்லாம் வாங்கிக்கொண்டு அடுத்ததாக அவர்களை அட்மிட் செய்யப்பட்ட ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர். அது சென்னையில் மிகவும் பிரபலமாக இருக்கும் மருத்துவமனை இல்லை என்றாலும் ஆக்சிடென்ட் நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் மருத்துவமனை என்பதால் இங்கே அட்மிட் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் யோசித்துவிட்டு அந்த மருத்துவமனைக்கு வந்தார்கள். அங்கே ரிசெப்ஷனில் இவர்கள் கேட்ட தரவுகளை எல்லாம் மேனேஜ்மேண்ட் சம்மதம் இல்லாமல் கிடைக்காது என்று ரிசப்ஷனிஸ்ட் மறுத்துவிட தான் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் என்று சொல்லியும் மறுத்ததால் திருநெல்வேலியில் தனக்கிருக்கும் போலிஸ் நண்பன் ஒருவரையும் அவன் லீகல் எக்ஸ்பெர்டான மிஸ் சுபத்திராவையும் தொடர்புகொண்டான். சுபத்திராவின் தந்தை நீலகண்டன் தான் வழக்கமாக தருணிற்கு ஆஜராகும் லாயர். சமீபங்களாக அவருக்கு உடல் நிலை ஒத்துழைக்காததால் அவரின் மகள் அவனுடைய கேஸ்களை பார்க்கிறார். (சுபத்திரா தருண்-குகன் மூவரும் ஒரு காம்போ கேரெக்டர்ஸ். இவர்களைப் பற்றி அதிகம் வராது. ஜஸ்ட் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் சுஜாதாவின் கணேஷ் வஸந்த் போல் உருவாக்க எண்ணி நான் படைத்த கதாபாத்திரங்கள் இவை! இதுவே இவர்களின் அறிமுகக் கதை.)

"ஹலோ..." என்றவளிடம்,"மிஸ் சுபத்திரா நீங்க எங்க இருக்கீங்க? நான் உங்களை அவசரமா மீட் பண்ணனுமே? ப்ளீஸ்..." என்று தருண் கேட்க,

"நான் இப்போ மெட்ராஸ் ஹை கோர்ட் மதுரை பென்சில இருக்கேனே. மதியம் தான் கேஸ் ஹியரிங். அதுதான் சும்மா பேபேர்ஸ் எல்லாம் பார்த்திட்டு இருக்கேன். என்ன விஷயம் தருண்? எனிதிங் சீரியஸ்?"

இந்திரனைப் பற்றி எல்லாமும் சொன்னவன் அந்த ஆக்சிடெண்ட்டை பற்றி விசாரிக்கவேண்டும் என்றும் இந்த ஹாஸ்பிடலிடமிருந்து சில டீடெய்ல்ஸ் வேண்டும் என்றும் சொன்னான்.

"தருண் ஹாஸ்பிடல்ல அவ்வளவு சீக்கிரம் டீடெய்ல்ஸ் தரமாட்டாங்க. போலீஸ் போய் விசாரிக்கணும். மேலும் இதுல நீங்க எப்படி அந்த டீடெய்ல்ஸ் கேட்கலாம்? உங்களை மிஸ்டர் இமையவர்மனோ இல்ல அவர் பேமிலியில யாராவதோ இதைப் பற்றிக் கண்டுபிடிக்க கம்பளைண்ட் கொடுத்து இருந்தா தான் விசாரிக்க முடியும். உங்க கிளைன்ட்காக நீங்க ஹாஸ்பிடல்ல விசாரிக்க முடியாது..." என்று நடைமுறைச் சிக்கலை விளக்கினாள்.

"ஐயோ எனக்கும் அது தெரியும் சுபி..."

தன்னை சைட் கேப்பில் சுபி என்று அழைத்ததை எண்ணி அதிர்ச்சியில்,"வாட்?" என்றாள்.

அதைப் புரிந்தவன்,"சாரி சுபத்திரா. இப்போ வேற ஆப்சன் இல்லையா?"

"எனக்கு மதியம் ஹியரிங் இருக்கு. முடிச்சதும் நான் வேற ஆப்சன் இருக்கானு பார்க்கறேன்..." என்று அவள் சொல்ல தருணும் எதையும் பேசாமல் அங்கிருந்து வந்துவிட்டான். காரில் ஏறவும் தான் குகனைக் காணவில்லை என்று அறிந்தவன் அவனைத் தேடி உள்ளே வந்தான். அங்கே குகன் ஹாஸ்பிடல் எம்பிளாய் ஒருவருடன் வாக்குவாதத்தில் இருக்க தருண் அவர்களிடம் பேசி சமாளித்துவிட்டு குகனை அழைத்து வந்தான்.

என்றைக்கும் இல்லாத மாதிரி இன்று குகன் கோவப்பட்டதைக் கண்டவன்,"என்ன ஆச்சு டா? ஏன் இப்படி சண்டை போடுற? ஹாஸ்பிடல்னு கூடப் பார்க்காம இப்படியா பிஹேவ் பண்ணுவ?"

"பாஸ் நீங்க சும்மா இருங்க. அவனுங்க ஏதோ தப்பு பன்றானுங்க. அந்த வயசான அம்மாவை அந்த ப்யூன் எதோ சொல்லிட்டு இருந்தான். திடீர்னு அந்த அம்மா மயங்கியும் கூட அவனுங்க யாரும் அவங்களைத் தூக்கவே இல்ல... அது தான் சண்டை போட்டேன்..."

"டேய் இவங்க கிட்ட இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாது. இந்த மாதிரி எமெர்ஜென்சி வேலையில இருக்கறவங்கள அவங்க வேலை செய்யும் போது தடுக்கவோ சண்டைப்போடவோ கூடாது. அது பெரிய அபென்ஸ். தெரியுமா?"

"அதெல்லாம் தெரியும் பாஸ். ஆனா அந்த அம்மா மயங்கியும் யாரும் கண்டுக்கல..." என்றவன்,"சாரி பாஸ் எமோஷன் ஆகிட்டேன். ஆமா வந்த விஷயம் என்ன ஆச்சு? என்ன சொன்னாங்க லாயர் மேடம்?"

"வேலையா இருக்காங்களாம். கொஞ்ச நேரத்துல கூப்பிடுறாங்களாம்..."

"சரி பாஸ் வாங்க ஏதாவது சாப்பிடலாம்..." என்று குகன் அழைக்க,"டேய் ஒரு வேலையும் செய்யல. இந்த கேஸ்ல ஒரு இம்ப்ரூவ் மெண்டும் இல்ல டா..." என்று சலித்துக்கொண்டான் தருண்.

"சரி அந்த இன்ஸ்பெக்டரையாவது போய் பார்ப்போம். டீடெய்ல்ஸ் கேட்டு இருக்கேன். வந்ததும் போலாம். வாங்க பாஸ்..." என்றான் குகன்.

***********************

இங்கே இந்திரன் நேற்று சொன்னப்படி தாமோவை தங்கள் பீச் ஹவுசில் பார்க்க முடிவெடுத்தவன் ஏனோ காலையிலிருந்து அதற்காகவே ஆவலாக இருந்தான். ஆபிஸ்க்கு வந்தவன் தன் வேலைகளில் மூழ்கிவிட கதிரவனும் வந்து அவன் வேலையைச் செய்தபடியே இருந்தான். நேற்றிலிருந்து இன்றுவரை கதிரவன் இந்திரனின் முகம் பார்த்துப் பேசவில்லை. இந்திரனும் தனக்குத் தோன்றியதை தாமோவிடம் கேட்க ஆவலாகக் காத்திருந்தான். மாலை வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமாகவே இந்திரன் சென்று விட ஏனோ கதிரவன் மாதுளை ஆகியோருக்கு இது வியப்பாக இருந்தது. இந்திரன் சென்றதை அறிந்துகொண்ட தாமோதரன் அவரும் அங்கிருந்து கிளம்பினார். அவரிடம்," ஆபிஸ் டைமில் எங்கே போறீங்க?" என்று யாரும் கேட்க முடியாது என்ற காரணத்தால் கதிரவன் அமைதியாக இருந்தான்.

சொல்லப் போனால் ஒருவகையில் கதிரவனுக்கு இதுவும் நல்லதாகவே தான் பட்டது. பின்னே இந்திரனும் தாமோவும் இல்லாத சமயத்தில் தான் இந்த மாதுளையிடம் தனக்கிருக்கும் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள காத்திருந்தான். கொஞ்ச நேரம் கழித்து அவனுடைய அறையில் இருந்த சில பைல்களை எல்லாம் வேண்டுமென்றே கீழே போட்டவன் இப்போது மாதுளையை அழைத்ததும் வந்தவளிடம்,"சாரி மாதுளை ஒரு ஹெல்ப் வேணும். ஒரு முக்கியமான பைல் வேணும்னு தேடுனேன் பாருங்க அதுல இதெல்லாம் கீழ விழுந்திடுச்சி. எல்லாம் ரொம்ப முக்கியமான பைல்ஸ். சோ கொஞ்சம் எடுத்து வெச்சிடுறீங்களா?" என்று அவளுக்கு வேலை கொடுத்துவிட்டு இல்லாத வேலையை இருப்பதாக லேப்டாப்பில் கவனமாக இருப்பதைப்போல் பாசாங்கு செய்தவன் அவளிடம் ஏதேனும் மாறுதல்கள் தெரிகிறதா இல்லையா என்று பார்க்கத் துவங்கினான்.

மாதுளையோ கர்மசிரத்தையாக அங்கே கீழே கிடந்த பைல்களை எல்லாம் எடுத்து அடுக்கி அந்த ரேக்கில் வைத்தாள். அவள் கிளம்புவதாக சைகை செய்யவும் அவளைத் தடுத்தவன்,"மாதுளை தேங்க்ஸ் அண்ட் சாரி. தேங்க்ஸ் எல்லா பைலையும் அடுக்கி வெச்சதுக்கு. சாரி உங்களுக்கு சிரமம் கொடுத்ததுக்கு. இருங்க காஃபீ ஆர்டர் பண்ணியிருக்கேன் வரட்டும். குடிச்சிட்டுப் போங்க..." என்று சொல்லிவிட்டு மீண்டும் கணினியில் மும்முரமானான். ஒருவரைப் பற்றி ஏதேனும் ரகசியம் அறிந்தவர்கள் அவர்களிடம் சாதரணமாக இருக்க மாட்டார்கள். இது தான் இவன் செய்த சோதனைக்கான காரணம். மாறாக அவளோ ரொம்ப கூலாக இருப்பது அவனுக்கு இன்னும் கோவத்தைத் தான் தந்தது. ஏற்கனவே இந்த இந்திரன் வேறு எல்லாம் தெரிந்த மாதிரியும் இல்லாமல் அதேநேரம் தெரியாத மாதிரியும் இல்லாமல் தன்னை அதிக மனவுளைச்சல் செய்ய இப்போது இதேபோல் இவளும் நடந்துகொள்வது அவனுக்கு ப்ரெஸரை தான் கூட்டியது. காஃபீ குடித்ததும் அவள் எழுந்து ஒரு புன்முறுவலிட்டு அங்கிருந்து போக வேண்டுமென்றே தான் இருந்த சோபாவை ஆட்டியதும் அதன் அருகில் இருந்த மேஜையில் இருந்து ஒரு ஷீல்டு கீழே விழுந்தது. பயந்து துள்ளியவள் அப்படியே அதையும் எடுத்துவைத்துவிட்டு சென்றாள். 'அப்போ இவ உண்மையிலே ஊமை தான் போல?' என்று யோசித்தவன் இருந்தும் முன்பைக் காட்டிலும் இப்போது அவள் மீது அதிக கவனத்தைச் செலுத்தினான்.

அப்போது கதிரவனுக்கு அசோக் சௌனியிடமிருந்து அழைப்பு வந்தது.

"என்னடா நடக்குது? அவன் பாட்டுக்கு வந்தான் எல்லாத்தையும் கம்மிவிலையில தருவேன்னு சொல்லிட்டு என் ஷேர் எல்லாம் இறக்கிட்டுப் போயிட்டான். சரி உன்ன வெச்சி ஏதாவது காரியம் சாதிக்கலாம்னா நீயும் ஒரு டேஷுக்கும் பிரயோஜனமில்லை. என் நிலை என்ன தெரியுமா? எப்படிக் கொதிக்குதுனு தெரியுமா? என் பட்டான் காலத்துல இருந்து நாங்க தான் தொழில் நிருவத்துல ராஜாங்க. என் தாத்தா அப்பானு எல்லாம் கரெக்ட்டா வந்தது. ஆனா என் தலைமையில? இந்தப் பாழாப்போன வர்மன் வந்து மண்ணை அள்ளிப்போட்டுட்டான். உனக்கு ஒன்னு தெரியுமா நம்ம நாட்டோட பிரதமர்களோட எங்க குடும்பத்துக்கு அவ்வளவு நெருக்கம். ரெண்டு போர் வந்தபோது நாங்க எவ்வளவு பணத்தை இந்த நாட்டுக்காக முதலீடு பண்ணியிருக்கோம் தெரியுமா? ஆண்டியா இருக்கவனுக்கு என்னைக்குமே கவலை இல்லை. ஆனா அரசனா இருந்திட்டு இப்படி ஆண்டியா இருக்குறவனுக்குத் தான் இதோட கஷ்டம் தெரியும். எனக்கு அவங்க உடனே நிறைய நஷ்டத்தைச் சந்திக்கணும். நான் அதையெல்லாம் என் கண்கூடப் பார்க்கணும்..." என்று வழக்கம் போல் கத்திவிட்டு இந்திரன் மீதிருக்கும் தன் கோவத்தையெல்லாம் கதிரவனிடம் காட்டிவிட்டு கட் செய்துவிட்டார்.

அவனின் ஆற்றாமை கோவம் எல்லாம் தலைத்தூக்க அந்த செல் போனை ஓங்கி கீழே போட்டான் கதிரவன். பல ஆயிரங்கள் மதிப்புள்ள அது சுக்குநூறாக தரையில் கிடந்தது.

**************************

அங்கே தான் சொன்ன நேரத்திற்கும் முன்பே இந்திரன் அவர்களின் பீச் ஹவுஸுக்குள் சென்றுவிட அந்த பால்கனியிலிருந்து சீ வீவ் பாயிண்டையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இன்று வரை எவ்வளவு யோசித்தும் அன்று ஆக்சிடென்ட் நடந்த நிகழ்வுக்கும் சரி அட்டகட்டியில் நடந்த விபத்துக்கும் சரி அவனிடம் ஒரு தெளிவான விடை இல்லை. ஒருபக்கம் நேற்று பார்த்த ஸ்ரீயின் புகைப்படம் அவனிடம் எதையோ உணர்த்தத் துடிப்பதைப்போல் அவன் உள்ளுணர்வு இருந்தது. ஆனால் என்ன சொல்ல வருகிறது? ஒருவேளை இது எல்லாம் என் மன விஸ்கியா? என்று குழம்பினான். (அது என்ன எப்போதும் மன பிராந்தி தான் இருக்கணும்னா ஏன் மன விஸ்கியெல்லாம் இருக்கக் கூடாதா??) அந்த பீச்சையே வெறித்தவன் ஒவ்வொரு முறையும் அந்த அலைகள் வந்து கரையை அரிச்சுவிட்டு (erosion -மண்ணரிப்பு) செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கும் மனதில் சொல்லமுடியாத வலி பரவியது. மனதை எங்கோ நிறுத்திவிட்டு அந்தக் கடலையே பார்த்துக்கொண்டு இருக்க அப்போது வந்த தாமோ அவனின் மனதை அறிந்தவராக,"இந்திரா வாழ்க்கையும் இது போல தான். சும்மா வந்துபோகும் அலைங்க திடீர்னு சுனாமியாவும் மாறிடுதில்லை? அதுபோல் சில நேரம் நம்ம வாழ்க்கையை சில சம்பவங்கள் மொத்தமா தலைகீழா புரட்டிப்போட்டு விடும். ஆனால் திரும்ப நாம எழுந்து வரணும்..." என்று நிறுத்த,

"அங்கிள் நான் நேரா விஷயத்துக்கே வரேன். எனக்கு நடந்தது ஆக்சிடெண்ட்டா இல்ல மர்டர் அட்டெம்ப்ட்டா? அது எப்படி யாரால எதுக்கு நடந்தது? அண்ட் இன்னொரு விஷயம் அது ஒரு சொகுசு கார். அவ்வளவு சீக்கிரம் என் கையை விட்டு பேலன்ஸ் போகாது. அப்படியே ஆக்சிடென்ட் ஆனாலும் அதுல இருக்கறவங்க சாவறதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மி. சோ என்ன நடந்துச்சின்னு எனக்குத் தெரியணும். அண்ட் இப்போ இந்த கதிரவன் மேல உங்களுக்கு எப்படி டவுட் வந்தது? அப்பா நம்புற மாதிரி இந்த ஆக்சிடெண்டுக்கும் சித்தப்பா குடும்பத்துக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கா? இல்ல மர்டர் அட்டெம்ப்டினா என்ன குறிவெச்சதுக்கு கூட ஒரு காரணம் இருக்கு. ஆனா இதுல சிந்துவும் ஸ்ரீயும் வர காரணம் என்ன? ஓகே சிந்துவைக் கூட என் தங்கச்சின்னு வெச்சி அக்செப்ட் பண்ணிக்கலாம். ஆனா ஸ்ரீயை எதுக்கு குறி வெக்கணும்? ஒருவேளை இதுக்கெல்லாம் பின்னாடி கதிரவன் தான் இருக்கானா என்ன? அண்ட் உங்ககிட்ட நான் ஒருவிஷயம் மறைச்சிட்டேன். ஆக்சுவல்லி எனக்கு அதுல நிறைய குழப்பம் இருக்கு. எய்த்தேர் ஐ மே பி ராங். ஆனா எனக்குப் புரியில..." என்று இறுதியில் ஒரு புதிர் போட்ட இந்திரனிடம்,

"என்ன இந்திரா? என்ன விஷயம் அது?"

"அங்கிள் நான் முதல கேட்ட கேள்விகளுக்கு அன்செர் பண்ணுங்க. இதை நான் பின்னால சொல்றேன்..."

***********************

இந்த ஜெனிரிக் மருந்துகளைத் தயாரிக்கும் துறையில் தான் டாக்டர் சந்தான பாரதி தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தார். குறைந்த விலையில் தரமான மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியைத் தொடங்கியவர் அதற்காக பண்டைய இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா முதலியவற்றை ஆராய்ந்து அந்த மூலிகைகளின் மகத்துவத்தை அறிந்து அவற்றை தேடி அலைய குறிப்பிட்ட ஒரு நோய்க்கான மருந்தை கண்டுப்பிடிக்க முடியும் என்று அறிந்தவர் அதற்கான மருந்தைத் தேடி மேற்கு தொடர்ச்சி மலையில் தன் தேடலைத் துவங்கினார். அப்போது தான் பழங்குடியின மக்களை எல்லாம் ஆராய்ந்ததில் அவர்களின் மருத்துவ முறையை எல்லாம் கவனமாக அறிந்துகொண்டு அதன் மகத்துவத்தைக் கொண்டு புதியதாக ஒரு மருந்தை கண்டுப்பிடித்து அதற்கான காப்புரிமையை அதே பழங்குடியின மக்களின் பெயரில் பெற்று தந்துவிடலாம் என்றும் முடிவெடுத்தார். இதனால் அவருடைய கனவான குறைந்த விலை மருந்தும் கிடைக்கும் அவர்களின் tkவை (traditional knowledge - பாரம்பரிய அறிவு) காப்புரிமையும் பெற்றுவிடலாம் என்று எண்ணினார். (உண்மையில் நம்முடைய பாரம்பரியமான வேப்ப இலையை கிருமிநாசினி என்று அவர்கள் கண்டுபிடித்ததாக ஒரு அமெரிக்க நிறுவனம் பேட்டண்ட் பெற்று விட்டது. இது உண்மை!) அதற்காக தன் ஆயுள் முழுக்க அலைந்து திரிந்து அந்த பாரம்பரிய அறிவைக் கொண்டு api தயாரித்து வைத்திருந்த வேளையில் தான் இப்போது அவரும் இல்லை அந்த api பற்றிய குறிப்பும் இல்லை.

tk என்பது wipo விடம் (world intellectual property organaisation - உலக அறிவுசார் சொத்து உரிமைகள் ஆணையம்) இருக்கும் ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. அதாவது இது போல் பாரம்பரிய அறிவுகளைத் திருடி யாரும் லாபம் பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அது செயல்படுகிறது.

தன் லட்சியமான இதை மேற்கொள்ளும் போது தான் சந்தான பாரதி ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவர் அந்த apiயைக் கண்டுபிடித்து அதைக் கொண்டு சோதனை முயற்சியாக மருந்தையும் கண்டுபிடித்து அதை சோதனையும் செய்து அதில் வெற்றியும் கொண்டார். ஆனால் அந்த மருந்து சம்மந்தமான கோப்புகளை எல்லாம் மிக ரகசியமாக வைத்திருந்தார். இந்த விஷயம் அறிந்த நிறைய தொழிலதிபர்கள் அதை தங்கள் நிறுவனத்திற்கு தந்துவிடும் படி அவரைக் கெஞ்சிக்கொண்டும் மிரட்டிக்கொண்டும் இருந்தது. இருந்தும் தன் லட்சியத்தில் உறுதியாக இருந்தவர் தனக்கு ஆதரவாகவும் தன் ஆராய்ச்சிக்கெல்லாம் உறுதுணையாகவும் இருந்த அந்தப் பெரிய மனிதரையே இந்த மருந்தை தயாரிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டு இருந்தார். ஒருவரிடம் இருக்கும் வரை தான் அது ரகசியம் என்று அறிந்தவர் அவர் இறக்கும் வரை அந்த ஆராய்ச்சியின் தரவுகளை எல்லாம் அவர் மட்டுமே வைத்திருந்தார். அவர் இறந்து விடுவார் என்று எப்போது உணர்ந்தாரோ அப்போதே அதை அந்தப் பெரிய மனிதரின் பொறுப்பில் ஒப்படைக்க முயற்சி செய்து ஒப்படைத்தும் விட்டார். இந்த ரகசியத்தைத் தேடி வருபவர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற அவர் கணக்கின் படியே இன்று அவரும் உயிரோடு இல்லை. அவர் மனைவியும் உயிருடன் இல்லை. அவரின் மகளான ஐராவதி மட்டும் உயிருடன் இருக்கிறாள். ஆனால் இதைப்பற்றி எதுவும் அவளுக்குத் தெரியாது. ஆனால் இது சம்மந்தமாக ஒரே ஒரு குறிப்பை மட்டும் அவர் விட்டுச் சென்று இருக்கிறார். அதைக் கண்டுப்பிடிக்க வேண்டியே திரு, மகேந்திரன் என்று அவருடன் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த அனைவரும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். எங்கே அந்த ரகசியம் ஒளிந்திருக்கிறதோ? (வானிலை மாறும்...)

கதை ப்ரீ க்ளைமேக்ஸை நெருங்கி விட்டது. இன்னும் சரியாக 110 நிமிட வாசிப்பில் கதை நிறைவடையும். கதையின் வேகம் ஓகேவா?
 
நாங்க இதுவரை கேட்ட கேள்விகளை எல்லாம் இந்திரன் கேட்கிறான்..
அவன் கார்ல் விபத்தினால் யாரும் இறந்திருக்க முடியாது என்ற
முக்கிய புள்ளியை பிடித்து விட்டான்...
தாமுவின் பதிலுக்காக வெயிட்டீங்...

அந்த பெரியவர், மாதுளை தாத்தாவா...?
 
தள்ளி தள்ளி நிக்குற புள்ளியெல்லாம் கொஞ்சமா நெருங்கி வர்ற மாதிரி தெரியுது.... பார்ப்போம் ???
 
இப்போ கொஞ்சம் idea கிடைக்குது...பார்க்கலாம்
இல்லை எல்லாமே என் "மனவிஸ்ஸ்கி" யோ என்னவோ :ROFLMAO: :ROFLMAO:
அது எனக்குத் தெரியாது. இருந்தும் உங்க மனவிஸ்கி எல்லாம் உண்மையாக இருக்க வேண்டுகிறேன்? நன்றி?
 
Top