Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-23

Advertisement

praveenraj

Well-known member
Member
இந்திரன் தன் பெற்றோர்களிடம் தானும் ஸ்ரீயும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகச் சொன்னதும் அவன் வீட்டிலுள்ள எல்லோரும் அவன் விருப்பத்திற்குச் சம்மதம் சொல்லிவிட ஸ்ரீயின் தந்தை கார்மேகம் அவர்களிடம் இவர்களின் திருமணத்தைப் பற்றிப் பேச சகுந்தலாவும் இமையவர்மனும் ஆயத்தமானர்கள். ஆனாலும் இன்னும் ஸ்ரீயும் தன் மேற்படிப்பை முடிக்கவில்லை அதேநேரம் இந்திரனும் இன்னும் முழுவதாக தங்களின் தொழிலை ஏற்று நடத்தவில்லை என்பதால் திருமணத்தைப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என்றும் யோசித்தனர். எடுத்ததுமே தலைமை பொறுப்புக்கு வர இந்திரனும் விரும்பவில்லை. ஒரு உண்மையான முதலாளி என்பவன் தன் தொழிலின் கடைமட்ட வேலைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது இந்திரனின் எண்ணம். ஆகவே அவனும் கொஞ்ச காலம் கம்பெனியில் வேலை செய்ய விரும்பியது மற்றவர்களைக் காட்டிலும் இமையவர்மனுக்கு அதீத மகிழ்ச்சியைத் தந்தது. பின்னே அவனுடைய கோவம், பிடிவாதம் பற்றி எல்லாம் அறிந்தவர் எங்கே இந்த குணத்தால் அவன் ஏதேனும் இழந்துவிடுவானோ என்றும் அஞ்சினார். மாறாக மற்ற விஷயங்களில் எப்படியோ, தொழில் விஷயத்தில் அவன் மிகவும் கண்ணியமாக இருந்தான். அவனுக்குள் ஒரு தீ கொழுந்துவிட்டுக்கொண்டே இருந்தது. அவன் தாத்தா வர்மாவின் பெயரைக் காப்பாற்றவேண்டும் என்றும் இன்னும் சொல்லப் போனால் அவரை விட ஒருபடி மேலே இருக்க வேண்டும் என்று எண்ணினான். அதும் இந்த ஆக்சிடென்ட்டிற்கு (பைக் ஆக்சிடென்ட்) பிறகான இந்தக் காலகட்டத்தில் அவனிடம் நிறைய மாற்றங்களை எல்லோரும் உணர்ந்தனர். நிச்சயம் இதில் ஸ்ரீயின் தாக்கம் அதிகம் என்று புரிந்தும் கொண்டனர். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதைப் போல ஸ்ரீயுடன் சேர்ந்ததால் அவனின் கோவம் மட்டுப்பட்டிருந்தது. எதையும் பொறுமையாக கவனிக்கவும் கையாளவும் தயாராகியிருந்தான். இருந்தும் தொழிலில் அவன் காட்டும் கடும் உழைப்பில் மாற்றம் நிகழவில்லை. இது சகுந்தலாவிற்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது.

அதே நேரம் அவனும் கதிரவனும் தொடங்கிய அந்தத் தொழிலையும் கைவிடவில்லை. இப்போதெல்லாம் அதிகமாக அவர்களின் ஸ்டார்ட் அப்பை கவனிக்க முடியாத காரணத்தால் கதிரவன் தான் அதைப் பொறுப்பேற்று நடத்தினான். என்ன தான் கதிரவன் இந்திரன் இருவரும் பார்ட்னர்ஸ் என்றாலும் இந்திரனைக் கண்டால் எல்லோரும் அதிக பயமும் மரியாதையும் செலுத்தினார்கள். இப்போது முழுக்க முழுக்க கதிரவனே நிர்வகிக்கப் போகிறான் என்றதும் அவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சித்தான்.

அவன் அன்னையின் விருப்பத்திற்கு ஏற்ப (ஆணை, கட்டளை என்றும் சொல்லலாம்) அவன் இப்போதெல்லாம் ரேஸ் சம்மந்த பட்ட எதிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால் பாதி நாட்கள் சென்னை மீதி நாட்கள் மும்பை என்று அலைந்து கொண்டிருந்தான். ஸ்ரீயும் சிந்துவும் வழக்கம் போல் தங்களது படிப்பைக் கவனிக்க ஸ்ரீ படிப்பு கூடவே தன் நாட்டியத்தையும் தொடர்ந்தாள். சிந்துவிற்கு அதில் பெரிய நாட்டமில்லை. இன்பேக்ட் ஸ்ரீ விரும்பினாள் என்பதற்காகவே தான் சிறுவயதிலிருந்து அவளோடு சிந்துவும் நாட்டிய பயிற்சிக்குச் சென்றாள். அதற்காக சிந்துவிற்கு நாட்டியம் பிடிக்காது என்று அர்த்தமில்லை. பிடிக்கும். கற்றுக்கொண்டாள் ஆனால் அதோடு நிறுத்தியும் கொண்டாள். ஸ்ரீ அப்படியில்லாமல் தாங்கள் பயின்ற நாட்டிய பள்ளியில் பகுதிநேர ஆசிரியராவும் இருந்தாள். ஆர்வமிருந்தும் வசதி இல்லாதவர்களுக்கு அங்கே இருக்கும் நடராஜர் கோவிலில் இலவசமாக பயிற்சி வகுப்பும் எடுத்தாள். ஸ்ரீயும் அவளோடு பயின்ற தோழிகளும் (இரண்டு நபர்கள் அபர்ணா, ரேகா) அந்தக் கோவிலில் வாரம் மூன்று நாட்கள் வகுப்பை எடுத்தனர். ஸ்ரீ இதற்காக இந்திரனிடம் தயங்கி தயங்கி பெர்மிஷன் கேட்க அவனோ அதற்கான 'கையூட்டை'ப் பெற்றுக்கொண்டு அனுமதித்திருந்தான். ஆக்சுவல்லி அதற்குப் பெயர் கையூட்டு இல்லை இதழ் பூட்டு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

நாட்கள் அழகாய் நகர்ந்துகொண்டு இருந்தது. மறுநாள் ஸ்ரீயின் பிறந்தநாள். ஏனோ அன்னை இல்லாததால் ஸ்ரீ எப்போதும் பிறந்தநாளைக் கொண்டாடவே மாட்டாள். இருந்தும் சகுந்தலாவும் சிந்துவும் அவளைக் கொண்டாட வைப்பார்கள். இந்த பர்த் டே அவளுக்கு ஸ்பெஷல். பின்னே இதுவரை சிங்கிளாக கொண்டாடியவள் இம்முறை சிங்கிள் ஸ்டேட்டஸ் பறிக்கப்பட்டு விட்டதால் அவளை சர்ப்ரைஸ் செய்ய இந்திரன் திட்டமிட்டு இருந்தான். இருந்தும் அவளுக்குள்ளும் அந்த எண்ணம் இருந்தது. நிச்சயம் இம்முறை இந்திரன் எதையாவது செய்யப் போகிறான் என்று ஆவலாகவே காத்திருக்க இந்திரனோ அதற்கு முந்தின மாலை வரை மும்பையில் இருந்தான். அன்று இரவு 10 வரை காத்திருந்தவள் இந்திரன் வராததால் கோவமாக சிந்துவுடன் உறங்கச் சென்றாள் (அவள் இப்போதெல்லாம் இங்கேயே தங்கிக்கொண்டாள்). ஒரு பதினொன்று போல வீட்டிற்கு வந்தவன் ஸ்ரீயின் வாயை மூடி அவளை 'கிட்னாப்' செய்தான். முதலில் மிரண்டவள் இந்திரன் தான் என்று தெரிந்ததும் அமைதியாகவே சென்றாள். அவளின் கண்களைத் துணியால் மூடியவன் அவளை காரில் ஏற்றிக்கொண்டு சென்றான். நீண்ட தூரம் செல்ல இப்போது ஸ்ரீதான் என்னவாக இருக்கும் என்று காத்திருக்க, ஓரிடத்தில் நின்றுதியவன் அவளை அழைத்துச் செல்ல ஏனோ தண்ணீர் சப்தம் மட்டும் அவளுக்குக் கேட்டது. எங்கே என்று தெரியாமல் அவனுடன் சென்றவள் சில படிக்கட்டுகளை ஏறி கொஞ்ச தூரம் சென்றவன் நிற்க ஏனோ அவன் நிற்கும் இடம் நிலையில்லாமல் ஆடவும் புரியாமல் இருந்தவளின் கண்களைக் கட்டவிழ்த்தான். அவள் கண்களைத் திறக்க 'நீலக் கடலானது' இப்போது நட்சத்திரங்களின் ஒளியிலும் நிலாவின் குளுமையிலும் கருமையாகவும் அமைதியாக இருக்க அந்த இரவு வானத்தை கிட்டத்தட்ட கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீரால் சூழப்பட்டு 'ஆழிச் சூழ்' உலகாகவே காட்சியளித்ததை ஒரு குழந்தைக்கே உரிய குதூகலத்தில் கண்டுகளித்தாள் ஸ்ரீ. கரையிலிருந்து நீண்ட தூரம் வந்ததால் அலைகளின் ஓசைக் கூட இப்போது இல்லாமல் அந்த நிசப்தமான இரவில் கப்பலின் நுனியில் (ஆம் அவர்கள் இருப்பது ஓர் சொகுசு கப்பல். என்ன அவர்கள் இருவர் மட்டும் தான் பயணிகள்) பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். பின்னிருந்து அவளைக் கட்டி அணைத்தவன் அவளின் காதின் ஓரத்தில்," லேக்கு பேபி யாருமில்லாத கப்பல்ல நடுக்கடல்ல பௌர்ணமி இரவுல இப்படி இருக்கனும் உன்னோட நீண்ட நாள் ஆசை தானே இது?" என்று அவன் சொல்லவும் திரும்பி அவனை முறைத்தாள் அவள்.
"புரியுது லேக்கு, உனக்கா கப்பல் கொண்டு வர முடிஞ்ச என்னால உன் பர்த் டே அன்னைக்கு பௌர்ணமியைக் கொண்டு வர முடியலையே? என்ன என் பேர் இந்திரனா இருந்தாலும் காஸ்மிக்கை (அண்டத்தை) கண்ட்ரோல் பண்ணக் கூடிய பவர் என்கிட்ட இல்லையே பேபி? என்ன பண்ண?" என்று குழந்தை போல உதடு பிதுக்கினான் இந்திரன். சரியாக மணியைப் பார்த்தவன்,"த்ரீ... டூ... ஒன்... அண்ட் மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே லேக்கா..." என்று சொல்லி அவளுக்காக வாங்கப்பட்டிருந்த கேக்கை எடுத்து அங்கே கைகளில் பிடித்தவன் அதை கட்செய்ய சொல்ல அவள் கண்கள் கலங்கியிருந்தது.

"ஹே பர்த் டே பேபி அழலாமா? கமான்..." என்று சொல்ல தன் ட்ரீம் நிகழ்வை தன் ட்ரீம் பையனுடன் தங்களின் புதிய வாழ்வை நோக்கி ஆவலாக கேக் கட் செய்தாள் ஸ்ரீலேகா. கேக் வெட்டியவள் முதல் துண்டை அவனுக்கு ஊட்ட அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு ரிங் எடுத்தவன்,"லேக்கு இந்த பியுட்டிபுல் மொமெண்ட்டை இன்னும் பியுட்டிபுல் ஆக்க வித் யூவர் பெர்மிஷன்... ஷல் ஐ?" என்று சொல்ல, அவளும் ஆவலாக கையை நீட்டினாள்.

இப்போது அவளை அருகே அழைத்தவன்,"லேக்கு இப்போ இந்த ரிங்கை நான் உனக்கு போட்டா பாரின் கல்ச்சர்ல நம்ம மேரேஜ் முடிஞ்ச மாதிரி தான். என்ன ஓகே வா?" என்று கேட்க அவளும் சிரித்து சம்மதித்தாள்.
"இருந்தாலும் இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்..." என்று சொல்லி அவளுக்கு ரிங்கை போட்டவன் அவளை அணைத்துக்கொள்ள கொஞ்ச நேரம் அப்படியே நின்று கடலை ரசித்தவர்கள் மீண்டும் திரும்ப ஆயத்தமான வேளையில் இந்திரன் லேகாவிடம் ஒன்றைக் கேட்டான்.
"எனக்கு ஒரு ஆசை லேகா..."

'என்ன?' என்றவாறு புருவம் உயர்த்தினாள் ஸ்ரீ,

"டைட்டானிக் படம் ஜாக் ரோஸ் மாதிரி ஒரு தடவை நின்னுட்டு போலாமா?" என்று கேட்க அவனின் இந்த வியர்ட் ஆசையில் தனக்குள்ளே சிரித்தவள் அவனுக்குச் சம்மதித்தாள். அதே போல் இருவரும் நின்று ஓ வென கத்திவிட்டு பின்பு அங்கிருந்து வீடு திரும்ப ஏனோ எல்லோரும் அவர்களுக்காகக் காத்திருந்து முறைத்தனர். சிந்து அவளுக்காக சர்ப்ரைஸ் செய்ய காத்திருந்த வேளையில் ஸ்ரீயைக் காணாமல் தேட, இந்திரன் வந்து விட்டான் என்று அறிந்தவள் எல்லோரையும் அழைத்து காத்திருந்தாள்.


தன் கரத்திலிருந்த அந்தக் கணையாழியை (மோதிரம்) தன் கைகளால் வருடியவள், "இஜித் நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன். ஆக்சுவல்லி நான் இல்ல நாங்க. நாங்க மூணு பேர்..." என்றவள் தங்கள் நிலையை நினைக்கையில் அவளுக்குமனம் வலித்தது.
*******************
அங்கே அந்த இன்ஸ்பெக்டரை பற்றி விசாரிக்கச் சென்ற தருணிற்கு அவரோ மூன்று நாட்களுக்கு முன்பு அவசரமாக ஒரு கேஸ் சம்மந்தமாக சென்றவரை இன்று வரை காணவில்லை என்று சொல்லப்பட தருணுக்கு உண்மையில் இதில் ஏதோ பெரிய வில்லங்கம் இருக்கிறது என்று பட்சி சொன்னது.

"சரி இப்போ அவர் எங்க போனார்?" என்று கேட்டவனுக்கு சிதம்பரம் அருகில் ஒரு ஸ்டேஷனில் இருக்கிறார் என்று தெரியவர உடனே அங்கே இப்போது செல்ல முடியாது என்று அறிந்தவன் இப்போது சுபத்திராவின் அழைப்புக்காகக் காத்திருந்தான்.

"பாஸ் ஒரு சந்தேகம்..." என்றான் குகன்.

"நான் ரொம்ப பெரிய குழப்பத்துல இருக்கேன். ப்ளீஸ் விளையாடாத குகா?"

"இல்ல பாஸ். நாம ஏன் நேரா இந்திரன் வீட்டுலையே பேசக்கூடாது? இந்த மாதிரி எங்களுக்கு நீங்க உதவி செஞ்சா உங்க பொண்ணுங்க சாவைப் பற்றி நாங்க கண்டுபிடிக்குறோம்னு?"

"உங்களுக்கு எதுக்கு இந்த வேலைனு அவங்க கேட்க மாட்டாங்களா?"

"இல்ல இந்திரனுக்கு ஆபத்து இருக்கு. அதும் கதிரவனாலேனு சொல்லிடலாம் பாஸ்..."

"டேய் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம்னு அனுமானத்தோட செயல் பட நாம ஒன்னும் கதாசிரியர்கள் இல்ல. இங்க எல்லாத்துக்கும் தகுந்த ஆதாரம் வேண்டும். அதுக்கு முன்னாடி இப்போ அவங்க வீட்டுல அந்தப் பொண்ணுங்களோட இறப்பை அவங்க கடந்து வந்திருக்கலாம். இப்போ போய் நாம் அவங்களை கன்ப்யூஸ் பண்ணக் கூடாது. அண்ட் எல்லாத்தையும் விட நாம ஒர்க் பண்றது கதிரவனுக்காக. இப்போ அந்த கதிரவன் நல்லவனா கெட்டவனான்னு கூட நமக்குத் தெரியில. ஒருவேளை நாம இதைப் பற்றி விசாரிக்கறோம்னு கதிரவனுக்குத் தெரிஞ்சா கூட நம்ம கதையை முடிச்சிடுவான்..."

"பாஸ்? என்ன சொல்றீங்க? நான் இன்னும் விர்ஜின் பையன்..."

"ஆமா எனக்கு அப்படியே ரெண்டு கல்யாணம் பத்து புள்ளைங்க இருக்காங்க..." என்று தருண் முறைக்க,

தீவிரமாக யோசித்தவன்,"பாஸ் உங்க வயசே 27. இதுல ரெண்டு கல்யாணம் கூட ஓகே... எப்படி பாஸ் பத்து பிள்ளைங்க?" என்று சீரியசாக கேட்டவனை அக்கினியாய் முறைத்தான் தருண்.

"ஓகே பாஸ் இப்போ நாம எதுக்கு இந்த ஹாஸ்பிடல்ல இருக்கோம்?"

"ஆமாயில்ல? வா போலாம்..."

அப்போது அந்த அம்மா அங்கே அழுதபடியே கேன்டீன் வந்தார். "ஒரு நிமிஷம் பாஸ்..." என்று அங்கே சென்ற குகன் அவரிடம் பேசிவிட்டு தருணை நோக்கி வந்தான்.

"என்னடா சமூக சேவையா?"

"பாவம் பாஸ் அந்த அம்மா. அவங்க பொண்ணை இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணியிருக்காங்க. செத்து போயிடுச்சாம். அது தான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்காங்க... சோ சேட் பாஸ்..."

"நமக்கே இங்க தலைக்கு மேல பிரச்சனை இருக்கு... இதுல இது வேறயா?" என்று சொன்ன தருண் அங்கிருந்து விலக கேண்டீனிலிருந்து அந்த அம்மா அழுதபடியே வந்தார். இங்கே காரில் ஏறி அமர்ந்த தருணுக்கு வண்டி ஸ்டார்ட் ஆகாமல் போக குகன் மீது தன் எரிச்சலைக் காட்டிக்கொண்டு இருந்தான்.
*****************
இந்திரன் இப்படித் தொடர் கேள்வி கணைகளைத் தொடுப்பான் என்று தாமோ எதிர்பார்க்கவில்லை. ஆனால் இறுதியில் இந்திரன் போட்ட முடிச்சியும் அவரை அதிகம் குழம்ப வைக்க யோசித்தவர் இந்திரனைப் பார்த்து,

"ஓகே. நீ எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு. இந்திரன்... இல்ல இல்ல, இந்திரஜித் வர்மன். இந்தியாவின் பொருளாதாரத்தையும் உற்பத்தி சார்ந்த தயாரிப்புகளிலும் நிர்ணயிக்கிற ஒரு முக்கியமான அங்கமான வர்மா குரூப்ஸ் ஓட அடுத்த தலைமுறை வாரிசு. உன்னைக் கொல்ல முயற்சி நடக்காம இருந்திருந்தா தான் ஆச்சரியம். பிசினெஸ் எதிக்ஸ் (தொழில் தர்மம்) எல்லாம் பார்த்து மதிச்சு இங்க இப்போ யாருமே பிசினெஸ் பண்றதில்லை இந்திரா. அது ஒரு காலம்... இங்க எல்லோரும் நாம எப்போ வளருவோம்னு எதிர்பார்த்து பிசினெஸ் செய்யுறது இல்லை. அவன் எப்போ விழுவான் இல்லை எப்படி விழவெக்கலாம்னு யோசிச்சு தான் பிசினெஸ் பண்றாங்க. யா காலம் மாறிப்போயிடுச்சி. யாரையும் தப்பு சொல்ல நான் விரும்பல..." என்றவர் அவனைப் பார்த்தார். இப்போது அவரின் பார்வையின் அர்த்தம்,'இந்தத் தகவல் போதுமா?' என்பது போல் தான் இருந்தது.

"ரைட் அங்கிள். பட் எப்படி? அந்த ஆக்சிடென்ட் எப்படி சாத்தியமாச்சி? எனக்கு இன்னும் புரியில..."

"வெரி சிம்பிள். உன்னை பல நாள் வாட்ச் பண்ணி இருக்காங்க. நீ போற ரூட் வரை எல்லாம் அத்துப்படி. எல்லாத்துக்கும் மேல அந்த கார். யா உன்னோட சொகுசு கார் அதை ஹேக் பண்ணியிருக்காங்க. எல்லாமே ஆட்டோமேஷன் தானே? ஹேக்கர்ஸ்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. அண்ட் எல்லாத்துக்கும் மேல கார்ல அந்த சமயத்துல கார்பன் மோனாக்சைட் (co - ஒரு வகை காற்று. கார்பன் டைஆக்சைடில் இருந்து ஒரு ஆக்சிஜென் பிரிந்தால் கார்பன் மோனாக்சைட் வரும். இது நிறமற்ற வாசமற்ற சுவையற்ற ஒரு வாயு. ஒருவேளை இதை நாம் நுகர நேர்ந்தால் உடனே நம் ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபினுடன் கலந்து 'கார்பாக்சிஹீமோகுளோபின்' என்று ஒரு கலவை உருவாகி ஹீமோகுளோபின் கொண்டுச்செல்லும் ஆக்சிஜனை தடுத்து உடம்பில் இருக்கும் திசுக்களுக்கு செல்லும் ஆக்சிஜனை கட்டுப்படுத்தும். அது உடனே நம் உடலை முடக்கிவிடும். அது தலைவலி, சோர்வு, வாந்தி, குழப்பம் பார்வைக் கோளாறு, ஒழுங்கின்மை, மயக்கம் முதலியவற்றை உண்டு செய்யும்.) இருந்திருக்கு. அது எப்படி அங்கனு எனக்குப் புரியில. தெரியில. எஸ் காசு கொடுத்தா இங்க எல்லாமே ஈஸியா செய்யலாம். நாம தான் கவனமா இருந்திருக்கணும். இது ஆக்சிடென்ட் ஆக்கப்பட்ட ஒரு கொலை முயற்சி..."

இந்திரனுக்கு இதையெல்லாம் கேட்கும் போதே ஒரு மாதிரி ஆனது. 'இது எப்படி சாத்தியம்?' என்று அவனுள் நிறைய கேள்விகள். ஆனால் ஒன்று அவனுக்குப் புரிந்ததும் அன்று நடந்ததை எல்லாம் அப்படியே ஞாபகம் வந்தது.
கதையின் முதல் அத்தியாயம் :

"உங்காளு படம் ரிலீஸ் ஆகுது போல?" என்றான் இந்திரன் ஸ்ரீயைப் பார்த்து,

"ஹா ஹா எப்படியும் ஊத்திக்கும்..." என்றாள் சிந்து

உடனே ஓட்டிக்கொண்டிருந்தவன் ஹைபை கொடுக்க கைகளைப் பின்னால் நீட்டினான்.

இவனின் செயல்களில் காண்டன ஸ்ரீ தன் முட்டைக் கண்களை கொண்டு இந்திரனை உருட்டி மிரட்ட,

"என்ன முறைப்பு?" என்றாள் சிந்து.

"ஏய் எதுக்கு அவளை அதற்ற?" என்றான் இந்திரன்.

"பார்ரா உனக்காகத் தானே பேசுறேன்?" என்றாள் சிந்து

"இல்லம்மா எங்களுக்குள்ள யாரும் வரவேணாம் ப்ளீஸ்..."

"பார்ரா அவ்வளவு ஆகிடுச்சா?" என்ற சிந்துவுக்கு,

"ஆமா..." - அவள் (ஸ்ரீ )

"அடிங்கு குந்தாணி. ஊமை குசும்பி..." என்றாள் சிந்து,

"வேணாம் பாப்பா..." என்றான் இந்திரன்.

"மறுபடியும் பார்ரா?" என்றாள் சிந்து.

"ஓயாம எல்லாம் உன் மூஞ்சியைப் பார்க்க முடியாது..." என்றாள் ஸ்ரீ

"காமெடி? நாளைக்கு ஞாபகப் படுத்து நாளானைக்கு சிரிக்கிறேன்..." - சிந்து

அவளோ (ஸ்ரீ ) சிந்துவின் தொடையைக் கிள்ள,

"அடிங்கு என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்றாள் சிந்து.

"ஒருத்தர் இன்னொருத்தர..." என்றான் இந்திரன்.

"டேய் உங்க அலும்பு தாங்கல. ஈஸ்வரா என்ன ஏன் இந்த கழிசடை பசங்க கிட்டயெல்லாம் கூட்டுச் சேர்க்க வெக்கிற?" என்றவளின் தொடை பலமாகவே கிள்ளப்பட,"சரி சரி என் ஏன் இந்தக் கூட்டத்துக்கு மத்தியில பெத்து விட்டுட்டுப் போன?"

"ஹா ஹா ஹா..." இருவரும் சிரிக்க,

"ஆமா ஜூஸ் எங்க?" - என்றான் இந்திரன்.

"உன்கிட்ட (ஸ்ரீ ) தானே கொடுத்தேன். எங்கடி?" என்ற சிந்துவுக்கு,

"டேஸ் போர்டுல..." என்றாள் ஸ்ரீ.

"யாராவது அங்க போய் வெப்பாங்களா?எடுடா..." என்றாள் சிந்து.

"என்னது?" என்று அதிர்ச்சியாகத் திரும்பினான் இந்திரன்,

"எடுடானு சொன்னேன்..." என்ற சிந்து நமட்டு சிரிப்பு சிரிக்க,

அவளோ(ஸ்ரீயோ) சிந்துவை மீண்டும் கிள்ளினாள்.

"எல்லாம் என் கிரகம்?" என்றான் இந்திரன்,

"என்னடி ஆளாளுக்கு மிரட்டுறீங்க? இருங்க உங்கள நான் டார்சர் பண்றேன் பாருங்க..." என்ற சிந்து முன்னே எட்டி டேஷ்போர்டு அருகே வர,

அதற்குள் வண்டி ஓட்டிக்கொண்டு இருந்த இந்திரன் எட்டி டேஷ் போர்டு திறக்க, சிறிது வினாடியில்...

"ஏய் ஏய் ஏய்..." என்ற கூக்குரலுடன் அந்த விபத்து நிகழ்ந்தது.


டேஷ் போர்டு திறந்ததும் தான் ஆக்சிடென்ட் நடந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று இந்திரன் யோசித்தும் எதுவும் நினைவுக்கு வரவில்லை. அவன் தலையெல்லாம் விண்ணென்று வலிக்க கோவம், இயலாமை, ஆற்றாமை எல்லாம் ஒன்று திரள கோவத்தில் கத்தி அங்கிருந்த பிளேவர் வாஷை தூக்கி உடைத்தான்.

"இந்திரா காம் டவுன். ப்ளீஸ் இந்திரா. நீ அந்த ஆக்சிடெண்டுக்கு காரணமில்லை. நீ அந்த ஆக்சிடெண்ட்டை நடத்தல. உன்னால ஸ்ரீயும் சிந்துவும் சாகல..." என்று தேற்றினார் தாமோ.

"எப்படி அங்கிள்? எப்படி நான் தானே அந்த டேஷ் போர்ட திறந்தேன்? அப்போ நான் தானே அதுக்கு முழு காரணம்..." என்று அவன் மீண்டும் கோவத்தில் கத்த,
"அன்னைக்கு நீ திறக்காம இருந்திருந்தாலும் அந்த ஆக்சிடென்ட் நடந்திருக்கும்..." என்று தாமோ சொன்னதும் தான் திறக்காமல் இருந்திருந்தாலும் நிச்சயம் சிந்து திறந்திருப்பாள் என்பதை அப்போது தான் யோசித்தான். எதையும் பேசக்கூடிய நிலையில் அவனில்லை. அவன் சோர்ந்து அமர அதற்குள் தாமோதரன் அவனுக்குக் குடிக்க தண்ணீர் கொண்டு வந்தார்.
**********************
தயாளனுக்கு இப்போது உடல்நிலை ஓரளவுக்கு முன்னேறி இருந்தது. ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.அன்று காலை விழித்தவர் எழுந்து நடைப்பயிற்சி செய்தார். அவரைப் பார்க்க ரபீக் மற்றும் மணிமாறன் இருவரும் வந்திருந்தனர். அவரின் உடல் நலன் கருதி எந்த கேஸ் சம்மந்தமாவும் அவரிடம் இவர்கள் பேசவில்லை. அன்று நடைப்பயிற்சி முடிந்து வந்து அமர்ந்தவர்,"ரபீக் அந்த கேஸ் சம்மந்தமா எதாவது முன்னேற்றம் வந்திருக்கா?" என்று அவனிடம் தயாளன் கேட்டுக்கொண்டு மேலும் தான் இல்லாத இந்த நேரத்தில் தங்களின் தொழில் எப்படி செல்கிறது என்று விசாரித்தார்.

தயாளனின் வயது ஒரு அறுபது இருக்கும். அவரின் மனைவி இறந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை எதுவும் இல்லை. அதனால் ரபீக் மற்றும் மணிமாறன் இருவருடனும் கொஞ்சம் பிசினெஸ் தாண்டி உரிமையாகப் பழகுவார்.
"டேய் ரபீக் என் பேத்தி என்ன சொல்றா? எப்படியிருக்கா?" என்று ரபீக்கின் மகள் ஜைராவை விசாரித்துவிட்டு அவர்களை அனுப்பி வைத்தார். அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்தவர்,"அதெல்லாம் ஒன்னுமில்ல கண்ணா. நான் பர்பெக்ட்ல்லி ஆல்ரைட். என்னைப் பற்றி நீ ஒன்னும் கவலைப் பட வேண்டாம்..." என்று பேசி முடிக்க மறுமுனையில் அவனும் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். தன்னோடு பேசியவனின் நலனுக்காக மனதால் பிராத்தித்தார் தயாளன்.

கஜா காசிமேடு கஜா தான் தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் என்ற மணிமாறன் மற்றும் ரபீக் இருவரிடமும் ஒப்புதலுக்காகவே தலையாட்டியவர் உண்மையில் தன்னுடைய இந்த நிலைக்கு யார் காரணம் என்று கிட்டத்தட்ட தெரிந்தும் கொண்டார். மனதில் திடீரென்று ஒரு யோசனை வந்தது. மறுகணமே அதை உதறி விட்டார். 'ஒருமுறை நேரில் அழைத்து பொறுமையாகப் பேசிப்பார்ப்போம்' என்று எண்ணினார் தயாளன். அவனைத் திருத்தி விடலாம் என்று அவருக்குள் ஒரு நம்பிக்கை. குரோதம் என்பது எல்லை கடந்து சென்று விட்டால் அது தீயைப் போன்றது என்றும் அதற்கு யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்றெல்லாம் பார்க்கத் தெரியாது என்றும் அதற்கு அழிக்க மட்டுமே தெரியும் என்றும் பாவம் அவர் அறியவில்லை போலும்... (வானிலை மாறும்...)
 
அப்போ தயாளனுக்கு தெரியும்போல அந்த சைக்கோ யாருன்னு ???
 
அப்போ தயாளனுக்கு தெரியும்போல அந்த சைக்கோ யாருன்னு ???
எனக்கும் தெரியுமே? அது எனக்கும் தயாளனுக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்... சீக்கிரம் சொல்லிடுறேன்... நன்றி
 
எனக்கும் தெரியுமே? அது எனக்கும் தயாளனுக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்... சீக்கிரம் சொல்லிடுறேன்... நன்றி
தயாளன் தான் நம்ம ji :ROFLMAO: :ROFLMAO: :p:p
 
எனக்கும் தெரியுமே? அது எனக்கும் தயாளனுக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்... சீக்கிரம் சொல்லிடுறேன்... நன்றி
உங்களுக்கு தெரியும்னு எங்களுக்கும் தெரியுமே... ஆனா நீங்க தான் சொல்ல மாட்டிங்களே ???
 
Top