Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-25

Advertisement

praveenraj

Well-known member
Member
அந்த லிஸ்டை எடுத்தவன் அப்போதே டாக்டர் ஜீவாவை தன் கேபினுக்கு அழைத்துப் பேசினான்.

"சொல்லுங்க சார்..." என்றார் ஜீவா.

"டேய் ஜீவா, நான் இந்த ஹாஸ்பிடல் mdயா இப்போ பேசல. ஒரு ப்ரெண்டா உன்கிட்டப் பேசுறேன். பேசலாமா?" என்று கேட்க,

"என்ன குமரா? என்ன ஆச்சு? கவலை வேண்டாம் டா. இப்போ நாம பாரதி சார் செஞ்ச அதே ரிசர்ச் எல்லாம் நாமளும் பண்ணிட்டு தான் இருக்கோம். எப்படியும் சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம். ஒன்னும் பிரச்சனை இல்ல..."

"உன்கிட்ட நான் கொஞ்சம் பெர்சனலா பேசணும் ஜீவா..."

"சொல்லு குமரா?"

"எனக்குத் தெரிஞ்சு அவரோட ரிசர்ச்ல அவரோட அதிக காலம் செலவழித்தது நீ தான்னு நெனைக்கிறன் ரைட்டா?"

"ஆமாம். மே பி இருக்கலாம்..."

"உனக்குத் தெரிஞ்சு எப்பவாவது சார் ஏதாவது டென்சனாவோ இல்ல படபடப்பாவோ இல்ல ஏதாவது குழப்பத்துலையோ இருந்திருக்காரா? இல்ல அவர் பேமிலி பற்றி ஏதாவது உன்கிட்ட மனசுவிட்டுப் பேசியிருக்காரா?"

"அப்படியெல்லாம் இல்ல டா. என்கிட்ட பெரும்பாலும் அபிஷியலா தான் பேசுவார். எப்பயாவது வேணுனா,'ஏன்டா ஜீவா ஏன் இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கல? நீ ஊம்னு சொல்லு நானே பொண்ணு பார்க்கறேன். இல்ல யாரையாவது லவ் பண்ணாலும் சொல்லு நான் போய்ப் பேசுறேன்...'னு இப்படித்தான் சொல்லுவாரு. இதைத் தவிர்த்து பெர்சனலா பேசியதில்லை டா..."

"ஓ! வேற எதுவும் பேசுனதில்லையா?"

"டேய் என்னைப்பற்றி உனக்கும் நல்லாவே தெரியும். நான் எப்பயுமே தனிமை விரும்பி. உங்க யாருகூடவும் அவ்வளவா மிங்கில் ஆகமாட்டேன். அதுனால என்னவோ எனக்கு சாரோட ஹாஸ்பிடலை விட்டு போகவே இன்பேக்ட் சாரை விட்டு போகவே மனசில்லை. அவரு கூடவே ரிசெர்ச்ல தங்கிட்டேன்..."

"சரி நீ ஏன் டா கல்யாணம் பண்ணிக்கல? யாரையாவது விரும்புறையா?"

"டேய் என்ன ஆச்சு குமரா? ஏன் இப்படி எல்லாம் பேசுற? ஆர் யூ ஓகே?"

"என்ன கிண்டலா?"

"பின்ன எப்பயும் கீ கொடுத்த பொம்மை மாதிரிதானே இருப்ப. இப்போ என்ன விஷயம்?"

"சும்மா டா. ஆமா நீ ஏன் இப்படி இருக்க? எதுமேலையும் பெருசா இன்டெரெஸ்ட் இல்லாம?"

யோசித்தவன்,"ஓகே உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அது..."

"என்னடா?"

"இல்ல நம்ம ஹாஸ்பிடல் நர்ஸ் மிஸ் சுஜிதா இருக்காங்க இல்ல?"

"ஆமா இருக்காங்க... என்ன அவங்களுக்கு?" என்று ஓரளவுக்குப் புரிந்தவனாய் ராகம் இழுத்தான்.

"அவங்க மேல எனக்கு கொஞ்சம் விருப்பம் இருக்கு. எப்படிச் சொல்றதுன்னு தெரியாம தவிக்கிறேன்..."

"டேய் இதை சார் கேட்கும் போதே சொல்லியிருக்கலாமில்ல?"

"அது கொஞ்ச நாள் கழிச்சு அவர்கிட்டப் பேசலாம்னு இருந்தேன். ஆனா இப்படி சார் திடீர்னு தவருவாருனு யாரும் எதிர் பார்க்கல தானே?" என்னும் போது லெபோரெக்டரியில் இருந்து அழைப்பு வர ஜீவா அங்கே சென்றான். ஜீவை அவனுக்கு சின்ன வயதிலிருந்து தெரியும். இது தான் அவன் சுபாவம். அதிகபடியான தயக்கமும் கூச்சமும் உடையவன். எதிலும் பெரிய நாட்டம் இல்லாதவன். ஓகே என்று ஜீவாவின் பெயரை க்ராஸ் செய்தான் குமரன்.
**********************
"என்ன இந்திரா?" என்ற தமோவிற்கு,

"அது... நீங்க அன்னைக்கு ஹாஸ்பிடல்ல தானே இருந்தீங்க?"

"என்னைக்கு இந்திரா?"

"அந்த ஆக்சிடென்ட் நடந்த அன்னைக்கு..." என்று திக்கித் திணறி சொன்னான் இந்திரன்.

"மறந்துட்டயா இந்திரா? நான் நம்ம ஆபிஸ் விஷயமா வியட்னாம் போயிருந்தேன். அப்போ தான் எனக்கு விஷயம் தெரிய வந்தது. நான் எல்லாம் போட்டது போட்டப்படியே விட்டுட்டு இங்க வரவும்..." என்றவர் அன்றைய நிலையை யோசித்து மௌனமாகி,"எனக்குத் தெரிஞ்சு இத்தனை வருஷத்துல உங்க அப்பாவை அவ்வளவு பலவீனமா நான் பார்த்ததே இல்ல. மனுஷன் நடைபிணமா ஆகிட்டாரு. ஒரு பக்கம் நீ ஐசியுல கோமாவுக்கு போற ஸ்டேஜ்ல இருந்த, மறுபக்கம் சிந்து குட்டியும் ஸ்ரீயும்..." என்று நிறுத்தியவர்,
"உண்மையிலே சொல்றேன் இந்திரா, எந்த ஒரு பெற்றோர்களுக்கும் அந்த நிலைமை வரவே கூடாது. உங்க அம்மா பாவம் அப்படியே மயங்கிட்டாங்க. அன்னைக்கு நிலைமைக்கு இறந்துப் போன அவங்க ரெண்டு பேரைக் காட்டிலும் உயிருக்குப் போராடின உனக்காக தான் எல்லோரும் ரொம்ப பயந்தோம். அட்லீஸ்ட் நீயாவது பிழைக்க மாட்டியானு ஏங்கினோம். நான் கூட அவங்களை நேர்ல கடைசியா ஒரு முறை பார்க்கல இந்திரா..." என்று தாமோ நிறுத்த,

இந்திரன் தீவிரமாக யோசித்தான்.

"இன்னொன்னு, அப்போ கதிரவன் கூட இங்க இல்ல. எனக்கு அதுனால தான் அவன் மேலையும் சந்தேகம். நீ அடிபட்டு ஹாஸ்ப்பிடல இருக்கறது தெரிஞ்சும் ஏன் சிந்து ஸ்ரீ இறந்தது தெரிந்தும் அவன் லேட்டா தான் வந்தான்..." என்று கதிரவன் மீது தனக்கிருக்கும் சந்தேகத்திற்கான ஆரம்ப புள்ளியைச் தெரிவித்தார் தாமோ.

"அங்கிள் யாருமே அவங்களைப் பார்க்கலையா?"

"அது..."

"பரவாயில்ல சொல்லுங்க..."
"கார் ஆக்சிடென்ட் ஆனதுல கண்ணாடி எல்லாம் அவங்க மூஞ்சில விழுந்து முகம் ரொம்ப டேமேஜ் ஆகிட்டதா டாக்டர் சொன்னாங்க..." என்றதும் ஏனோ அதை நினைத்துப் பார்க்கவே இந்திரனுக்கு மனமில்லை. முகம் இறுக,"சரி அங்கிள் நாம கிளம்பலாம்..." என்று அவன் கிளம்ப,

"இந்திரா, எதையோ மறைச்சிட்டனு சொன்னியே?"

"இன்னும் கொஞ்ச நாளுல எல்லாம் தெளிவா சொல்றேன் அங்கிள். நான் கிளம்பறேன்..." என்று சொல்லிவிட்டு விலகியவன்,"அங்கிள். கதிரவன் உங்களை பாலோ பண்ரான்னு சொன்னீங்களே? உண்மையா?"

"ஆமா இந்திரா. தருண்னு ஒரு டிடெக்டிவ் வெச்சி என்னை பாலோ பண்றான். நான் உன்ன அட்டகட்டில அட்டேக் பண்ண வந்தவங்களை விசாரிக்க தயாளனை வெச்சி கண்டுபிடிக்க முயற்சி பண்ணா அவன் என்னையே பாலோ பண்றான் இந்திரா. அந்த டிடெக்டிவ் தயாளன் தான் இதெல்லாம் என்கிட்டச் சொன்னது. இந்தா அவரு கொடுத்த பைல்ஸ்..." என்று சில கோப்புகளை நீட்ட அதைப் பெற்றுக்கொண்டவன் அங்கிருந்து கிளம்பினான்.
********************
அங்கே அவனுக்கு அந்த விஷயம் தெரிவிக்கப் பட்டது. தருண் அந்த ஹாஸ்பிடலுக்கு வந்து இந்திரனின் ஆக்சிடெண்ட்டை பற்றி விசாரிக்க ஆரமித்தது ஏனோ அவனுக்கு சொல்ல முடியாத ஒரு பயத்தைத் தந்து சென்றது.
'எப்படி இத்தனை நாட்கள் கழித்து இப்படியொரு சந்தேகம் வந்தது? யாருக்காக அவர்கள் வந்து விசாரித்தார்கள்? ஏதாவது தவறு செய்துவிட்டோமா? இல்லையே எல்லாம் போட்ட திட்டத்தின் படிதானே ஒழுக்கா போயிட்டு இருக்கு...' என்று யோசித்தவனுக்கு ஏனோ இமையவர்மனை நினைக்கும் போது அவனுக்குச் சொல்ல முடியாத ஒரு வன்மம் வந்து சென்றது. கூடவே இந்திரனைப் பற்றி தினமும் நாளிதழ்களில் வரும் செய்திகள் அவனை இம்சித்தது. ஒரு பதற்றம் ஒரு மெல்லிய பயம் அவனுள் வர உடனே சுதாரித்தவன்,"இல்ல நான் தோற்க மாட்டேன். தோற்கவே மாட்டேன். ஒருவேளை நான் தோற்கும் நிலை வந்தாலும் அந்த இமையவர்மனையும் இந்திரனையும் கதிகலங்க வெச்சிட்டு தான் தோற்பேன். எஸ் அந்த ஸ்ரீ மற்றும் சிந்து ரெண்டு பேரையும் கொன்னு இவ்வளவு நாள் உயிரோட இருந்த அவங்க ரெண்டுபேருக்கும் இறுதி காரியம் செஞ்ச அவங்களை சொல்லமுடியாத குற்றயுணர்ச்சிலும் வேதனையிலும் தள்ளி நகர வேதனையைக் காட்டிட்டுத் தான் நான் தோற்பேன்..." என்று சூளுரைத்தான் அவன்.

"டேய் இந்திரா, கூடிய சீக்கிரம் நீ காலிடா..."
******************
ஏனோ ஜீவாவை இவ்வாறு குறுக்கு விசாரணை செய்ததே குமரனுக்கு ஒரு மாதிரி இருந்தது. 'இதில் இன்னும் இருக்கும் ஒவ்வொருவரையும் எப்படி விசாரணை செய்யப் போகிறேன்? அதும் அந்த லிஸ்டில் இரண்டு நபர்கள் ரொம்ப வில்லங்கம் பிடித்தவர்கள் ஆச்சே? சும்மா நாட்களிலே அவர்களுக்கு என்னைக் கண்டால் ஆகாது. இதில் இந்த மருத்துவமனையின் md யாக என்னை பாரதி சார் நியமித்தது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பைத் தரும்...' என்று குமரனும் அறிவான் தான்.

அவர்களின் பெயர்களைப் பார்த்தவனுக்கு இப்போதே மனதில் ஒரு வித கிலி ஆட்கொண்டது. இதில் அவ்விருவரில் ஒருவன் சென்னையில் தான் இருக்கிறான். மற்றொருவன் மும்பையில் இருக்கிறான். இப்போதெல்லாம் அந்த இரு பெண்களில் ஒருவர் தன்னுடன் அவ்வளவாக பேசுவதே இல்லையே. இத்தனைக்கும் அவர்கள் இருவரும் அவனுக்கு ஜூனியர்கள் வேறு. அவர்களின் இடத்திலிருந்து ஒருகணம் யோசிக்கும் போது குமரனுக்கு அவர்களின் நிலையும் சரியென்றே பட்டது. பின்னே எல்லோரும் ஒன்றாக வளர்ந்தவர்கள் ஒரே படிப்பைப் படித்தவர்கள் தான். இதில் அவன் ஒருவன் மட்டும் தானே தலைமைப் பொறுப்பில் இருக்கிறான். மற்றவர்கள் எல்லோரும் டாக்டராக மட்டுமே பணிபுரிகிறார்களே? ஏன் மஹேந்திரனுக்கும் அந்த எண்ணம் இருக்கிறது என்று திருக்குமரனுக்கும் தெரியும் தான். என்ன ஒன்று அதை மகேந்திரன் வெளிப்படையாக கேட்கவுமில்லை காட்டிக்கொள்ளவும் இல்லை. இவனும் அவன் கேட்டால் சொல்லிக் கொள்ளலாம் என்று இருக்கிறான். ஆனால் பாரதி சார் அவனிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் போது,"குமரா எனக்கு நீ ஏதாவது நன்றிக்கடன் செய்யணும்னு நெனச்சா, இந்த ஹாஸ்பிடலை இப்போ எப்படி இருக்கோ இதே மாதிரி... இல்ல இல்ல இதைவிட சிறப்பா வழிநடத்தி நீ கொண்டுப் போகணும். சரியா?" என்று அல்லவா கேட்டார். அந்த வரிசையில் ஜீவாவும் சமுத்திரனும் மட்டும் தான் எந்த ஈகோவும் இல்லாமல் இவனிடம் பழகுபவர்கள்.

இதற்கு இடையில் அந்த ஜோன்ஸ் பற்றி விசாரிக்க அவன் எதிர்பார்த்தது போலவே அவனிடம் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் நல்லதாக இல்லை. வெறும் பணத்தை மட்டும் ஐராவதி அவனிடம் அவள் இழந்தால் பிரச்சனை இல்லை தான். ஆனால் பணத்தைத் தாண்டி வேறு எதாவது என்றால் என்று யோசிக்கையிலே குமரனுக்கு கிலி ஆட்கொண்டது. ஐராவதியின் இன்னொசென்ஸ் குணம் வேறு அவனுக்கு இப்போது தான் அந்த டிடெக்டிவ் மூலமாகத் தெரியவந்தது.கூடவே அன்று தன்னிடம் இந்த ஹாஸ்பிடல் பற்றிப் பேசும் போது அவள் கூறிய அந்தச் சொற்கள் (இது என் அப்பா சம்பாதிச்சது... என்று குமாரனை வசைப்பாடினாளே?) நிச்சயம் அவளாகச் சொன்னது போல அவனுக்குத் தெரியவில்லை. யாரோ சொல்லித்தருவது போல் தான் அவனுக்குத் தெரிந்தது. ஒருவேளை இது ஜோன்ஸாக இருக்குமோ? அப்படி இருந்தால் அவன் எதற்கு இப்படிச் செய்கிறான் என்று குழம்பினான் குமரன்.
*********************
அன்று தாமோவிடம் பேசியவன் வீட்டிற்குப் போகவே பிடிக்காமல் அங்கேயே அமர்ந்திருந்தான். மாலை ஆகியும் இன்னும் இந்திரன் வீட்டிற்கு வரவில்லை என்று அறிந்துகொண்ட சகுந்தலா உடனே இமையவர்மனிடம் இதைத் தெரியப்படுத்த இறுதியில் தங்களின் பீச் ஹவுசில் தான் இருக்கிறான் என்றதும் தான் அவர்களுக்கு நிம்மதியே வந்தது. ஏனோ இந்திரனைப் பற்றிய பயத்தில் பெற்றோர்கள் இருக்க கமலேஷ் அங்கே வந்தான்.
"அப்பா உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்..."

"என்ன கமலா?"

"அது... அண்ணா அந்த ஆக்சிடென்ட் எப்படி நடந்ததுன்னு என்கிட்ட விசாரித்தார்..." என்று சொல்ல ஏனோ தம்பதியர்கள் இருவரும் அதிர்ந்தனர். இன்னும் அவன் அதே நினைவில் தான் இருக்கிறானா? என்று எண்ணிய பயம் தான் அது.
"நீ என்ன சொன்ன கமலா?"

"அன்னைக்கு நடந்ததைச் சொன்னேன். சரினு சொல்லிட்டு வெக்க போனவர் நான் நம்ம பீச் ஹவுஸ்ல தான் இருக்கேன்னு சொல்லிட்டு வெச்சிட்டாரு..." என்றான்.

ஏனோ இந்திரன் இதனால் ஏதேனும் துன்பப் படுவானோ என்று எண்ணிய கமலேஷ் அடுத்த கேள்வியைக் கேட்டான்,

"அப்பா, அந்த ஆக்சிடென்ட் எப்படி நடந்தது? யாரு காரணம்? அண்ணனை அட்டகட்டில அட்டேக் பண்ண வந்தது யாரு? நீங்க நினைக்கிற மாதிரி சித்தப்பா குடும்பம் தான் இதுக்கெல்லாம் காரணமா?" என்று இதுவரை தனக்கும் விடை கிடைக்காதக் கேள்விகளை எல்லாம் கேட்டான் கமலேஷ். சகுந்தலாவிற்கும் இதே கேள்விகள் பலமுறை வந்தது உண்மை. ஆனால் இது ஒரு விபத்து என்று தான் இது நாள் வரை நினைத்துக்கொண்டு இருக்கிறார். இப்போது தான் இது கொலை முயற்சியாக ஏன் இருக்கக் கூடாது என்று யோசித்து தன் கணவரைப் பார்த்தார். அப்போது காஃபீ கொண்டு வந்த மாதுளை அங்கே அவர்களின் அனுமதிக்காக நிற்க, உள்ளே வந்து கொடுத்துவிட்டு அவள் சென்றாள்.

எதுவும் பேசாதவர் காஃபியை குடித்து விட்டு,"இதைப்பற்றி தான் தாமோ விசாரிச்சிட்டு இருக்கான். ஒரு முடிவு தெரியாம எதையும் யார்கிட்டயும் சொல்ல நான் விரும்பல..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார் இமைய வர்மன். அப்போது கமலேஷின் போன் அடிக்க எடுத்தவன் மறுமுனையில் பேசியதைக் கேட்டு,"ஆம் சித்தப்பா அப்பா இங்க தான் இருக்காரு. அண்ணா இன்னும் வீட்டுக்கு வரல..." என்று சொல்லிமுடிக்கும் முன்னே அவனிடமிருந்து கைப்பேசியைப் பிடுங்கிய இமையவர்மன்,"எதுக்கு என் பையனைப் பற்றி விசாரிக்கற? ஏன் இன்னமும் அவன் உயிரோட இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?" என்று கேட்க, ஏனோ இத்தனை வருடங்களில் ஒருநாளும் இப்படிப் பேசிடாதவரை சகுந்தலா மற்றும் கமலேஷ் இருவரும் விந்தையாகவே பார்த்தனர்.

"அண்ணா நான் சொல்றதை ஒரே நிமிஷம் காது கொடுத்து கேளுங்க. நீங்க நினைக்கிற மாதிரி அந்த ஆக்சிடெண்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நான்..." என்று எதையோ சொல்ல வந்தவர் நிறுத்திவிட்டு,"என் மேல... இல்ல இல்ல ஹர்ஷா மேல சத்தியமா சொல்றேன் அந்த ஆக்சிடன்டுக்கும் சிந்துவோட மரணத்துக்கும் நான் காரணமில்லை. என்னை நம்புங்க. நான் உங்க கிட்ட நேர்ல பேசணும். நாளைக்கு நான் வீட்டுக்கு வரவானு கேட்க தான் இப்போ போன் பண்ணேன்..." என்று சொல்லிவிட்டு அழைப்பை வைத்தார் சந்திரவர்மன்.

ஏனோ சந்திர வர்மன் பேசியது உண்மை போல தான் இமையனுக்குத் தெரிந்தது. இருந்தும் அந்த ஆக்சிடென்ட் நடந்த அன்று அவர் சென்னையில் இருந்தது தான் இமையனுக்கு சந்தேகம் தர லாஜிக்காகவும் யோசித்தார். 'அன்னைக்கு இவன் சென்னையில இருந்தா அது இவனுக்கு தானே ஆபத்தா இருந்திருக்கும்? அப்போ இவன் இல்லையோ? அப்றோம் ஏன் அந்த மாசத்துல மட்டும் நாலு முறை சென்னை வந்திருக்கான்?' என்று யோசித்தார் இமையன்.
இவர்களின் பிசினெஸ் என்று பிரிந்ததோ அன்றே அவர்களின் தலைமையகமும் பிரிந்துவிட்டது. சந்திர வர்மன் தொழில் எல்லாம் மும்பையிலும் இமையனுடையது எல்லாம் சென்னையிலும் இயங்கியது. இதனாலே தான் தங்கள் மும்பை வீட்டிற்குக் கூட இமையனின் குடும்பம் செல்வதில்லை. கொஞ்சம் யோசனையில் மூழ்கினார் இமையவர்மன்.

எப்படி சந்திரன் சிலவற்றை சொல்லாமல் மறைக்கிறாரோ அதேபோல் இமையனும் சிலதை மறைத்துக்கொண்டு தான் இருக்கிறார். இவர்கள் ரெண்டு பேரும் மறைக்கும் இந்த விஷயங்கள் தான் இந்த மொத்த பிரச்சனைக்கும் காரணம் என்று பாவம் சகோதரர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை!
*******************
மாலையில் ஹோட்டலில் இருந்து நேராக தருண் மட்டும் சுபத்திராவின் வீட்டை நோக்கிச் சென்றான். குகனோ தருண் சொன்ன நபரை தேடி பெங்களூருக்குச் சென்று இந்திரனின் குடும்பத்தைப் பற்றி எல்லாமும் விசாரிக்கச் சென்றான்.

அழைப்பு மணியை அழுத்த நீலகண்டனின் மனைவி தான் வந்து கதவைத் திறந்தார். தருணைக் கண்டதும்,"வாப்பா. நீங்க வருவீங்கன்னு இப்போ தான் பாப்பா சொல்லுச்சு..." என்று சொல்லி அவனை உள்ளே அழைத்தார்.

"பாப்பா?" என்று புரியாமல் விழித்த தருணுக்கு,

"அது என் பொண்ணை நாங்க அப்படித் தான் கூப்பிடுவோம்..." என்றார் அவர். சிரித்தவன் சென்று நீலகண்டனைப் பார்த்தான். கொஞ்சம் அவருடன் பேசவும் சுபத்திரா வரவும் சரியாக இருந்தது. இருவரும் அவளுடைய ஆஃபிஸியல் அறைக்குள் செல்ல,"பாப்பா என்ன குடிக்கற?" என்ற தன் அன்னையை முறைத்தாள் சுபி.

"ஏன் பாப்பா முறைக்கிற?" என்றதும் தருணை உள்ளே அமருமாறு சொல்லிவிட்டு,"அம்மா... இப்படி அடுத்தவங்க இருக்கும் போது என்னை பாப்பானு கூப்பிடக் கூடாதுனு எத்தனை முறை சொல்லியிருக்கேன்?" என்று எரிந்து விழுந்தாள் சுபி. அந்தக் குரல் தன் காதுகளிலும் விழ சிரித்தபடியே இருந்தான் தருண். கையில் காஃபி கோப்பைகளுடன் வந்தவளை ரசித்தவன் சுதாரித்து பேச ஆரமித்தான்.

"சொல்லுங்க என்ன விஷயம்?"

"அது தான் சொன்னேனே?"

"அது போன்ல சொன்னிங்க. நானும் வேலையா இருந்தேன். இப்போ நேர்ல எனக்கு எல்லாம் க்ளியர் பண்ணுங்க..." என்று கேட்கவும் தருண் அனைத்தையும் சொன்னான்.

"ஆக்சிடெண்ட்னா fir (முதல் தகவல் அறிக்கை) போட்டிருப்பாங்க தானே? அதை விசாரிசீங்களா?"

"அதுக்குத் தான் போலீஸ் ஸ்டேஷன் போனேன். ஆனா அந்த இன்ஸ்பெக்டர் இப்போ ட்ரான்ஸ்பெர் ஆகிட்டாராம்..."

"யூசுவல் ட்ரான்ஸ்பேரா இல்ல நடவடிக்கை எடுத்தா?"

"தெரியில..."

"லிசென் மிஸ்டர், நீங்க ஒன்னும் சினிமாவுல காட்டுற டிடெக்டிவ் மாதிரி உங்க இஷ்டத்துக்கு நேரா போய் எல்லாம் விசாரிக்க முடியாது. யூ நீட் எ வாரென்ட். தெரியுமா?" என்று எள்ளலாய் வினவியவளுக்கு,

"தெரியும். ஆனா இந்த மாதிரி லீகலா மூவ் பண்ணா விஷயம் சம்பந்தப்பட்டவனுக்குத் தெரிஞ்சு அவன் ஈஸியா எஸ் ஆகிடுவான். அதான் இப்படி மூவ் பண்ணேன்..."

அவளும் சிரித்தாள். "உண்மை தானே? சரி நீங்க ஒன்னு பண்ணுங்க அந்த இந்திரன் பேமிலில யாரையாவது மீட் பண்ணி பேசுங்க..." என்பதற்குள் தருணை குகன் அழைத்தான்.
"பாஸ் இந்திரனை மீட் பண்ண நாளைக்கு ஈவினிங் அப்பாய்ண்ட் மென்ட் கிடைச்சிருக்கு பாஸ்..." என்றான்.

"எப்படி டா எப்படி?" என்று ஆனந்த அதிர்ச்சி கொண்டான் தருண். பின்னே இத்தனை சுலபத்தில் கிடைக்காது என்று அவன் எண்ணியிருந்தான்.

"உங்க ஃப்ரண்ட் போன் பண்ணாரு. நீங்க அட்டென்ட் பண்ணலையாம். அதுனால எனக்குக் கூப்பிட்டாரு..." என்றான்.

ஓகே என்றவன் விஷயத்தை சுபத்திராவிடம் சொல்ல,

"போங்க இனிமேல் போய் தைரியமா விசாரிங்க..." என்று சொன்னாள் சுபி.

"உங்களுக்கு இந்த கேஸ்ல ஏதாவது க்ளூ தெரியுதா?" என்று சீரியசாக கேட்ட தருணிற்கு,

"மிஸ்டர் அது உங்க வேலை. நீங்க குற்றவாளியைக் கண்டுபிடிச்சதுக்கு அப்றோம் அவன் உண்மையான குற்றவாளியா இல்லையானு கண்டுபிடிக்கறது மட்டும் தான் எங்க வேலை..." என்றாள் சுபத்திரா.
"ஓ! நாங்க தெருதெருவா அலைந்து திரிஞ்சு குற்றவாளியைக் கண்டு பிடிப்போமா நீங்க நோகாம நோன்பு கும்பிடுவீங்களாம்? நல்லா இருக்கே?" என்று தருண் உரைக்க,

"மிஸ்டர் அதுக்கு நீங்க லா படிச்சு இருக்கனும். தட்ஸ் நாட் மை பால்ட்..." என்றதும் தருண் சிரித்தான்.

"ஓகே ஜோக்ஸ் அபார்ட். முதல அந்த ஹாஸ்பிடலை விசாரிங்க. ஒருவேளை லீகலா மூவ் பண்ண முடியலைன்னா என்கிட்டச் சொல்லுங்க அன்-ஆஃபிஸியலா நான் ஹெல்ப் பண்றேன். அண்ட் நாளைக்கு இந்திரனை மீட் பண்ணும் போது என்ன சொல்லுவீங்க? இந்த மாதிரி உங்க நண்பனா துரோகியானு தெரியாத ஒருத்தர் எங்களைத் தொடர்புக்கொண்டு உங்களைப் பற்றி விசாரிக்கச் சொன்னாருன்னா?" என்று கேட்ட,

"அதெல்லாம் மேட்டரே இல்ல. நான் பார்த்துப்பேன்..."

"சரி நான் தூங்கணும். டைம் ஆச்சு. வில் யூ?" என்று சுபி நிறுத்த,

"வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்னு சொல்றீங்க ரைட்?"

"அப்படியும் வெச்சுக்கலாம்..." என்று அவள் சொல்ல சிரித்தபடியே தருண் அங்கிருந்து வந்தான். கதிரவன் தன்னை மீண்டும் மீண்டும் அழைத்திருப்பதைப் பார்த்து மீண்டும் அவனுக்கு அழைத்தான்.

"என்ன பண்ணிட்டு இருந்த?" என்று கோவமாகவே கேட்டான் கதிரவன்.

"ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருந்தேன். என்ன விஷயம்?"

அவனோ மாதுளையின் புகைப்படத்தை அனுப்பி அவளைப் பற்றி அனைத்தும் விசாரிக்க வேண்டும் என்று சொன்னான். மாதுளை இந்திரனின் வீட்டில் தான் இருக்கிறாள் என்று அறிந்தவன் துரிதமாக அதில் இறங்கினான். பாவம் அவனுக்கு அவளைப் பற்றி எதுவும் உடனே கிடைக்கவில்லை. இன்றைய தினத்தின் அலைச்சல் காரணமாகவும் நாளை மும்பை செல்ல வேண்டிய காரணத்தாலும் உறங்கச் சென்றான்.குகன் பெங்களூரு சென்றதால் நாளை நேராக அவனை மும்பை வரச் சொல்லிவிட்டான் தருண்.
************************
அங்கே தனியே குழப்பத்தில் இருந்த இந்திரன்,"ஓகே நாளைக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிய தீரணும். அந்த சந்தர்ப்பத்தை எப்படி எல்லோரும் கையாளராங்கனு வெச்சி தான் ஒரு முடிவுக்கு வரணும்..." என்று முடிவெடுத்தான்.
'எப்படி? அப்போ எனக்கான எதிரி தான் யாரு?' என்று தீவிரமாக யோசித்தான் இந்திரன் இதுவரை அவனுக்கு இருக்கும் எதிரிகள் யாரும் இதைச் செய்யவில்லை என்று அவனுக்கு நன்கு புரிந்தது. அவன் மேல் வன்மத்தில் இருக்கும் நபர்களைப் பற்றி யோசித்தான். பிசினெஸ் தாண்டி யாரையும் அவனுக்குத் தெரியவில்லை. அப்போது தான் தாமோ சொன்னது நினைவு வர பிசினெஸ் இல்லாம வேற யாரு? என்ற யோசனையில் இருந்தான்.
தருணிற்கு நாளை மாலை ஒரு ஹோட்டலில் அப்பாய்ண்ட் மென்ட் கொடுத்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றதை யோசித்தான். தருணைப் பற்றி ஏற்கனவே தாமோ தன்னிடம் சொன்னதால் ஓரளவுக்குத் தெரிந்தவன் இப்போது தன்னை சந்திக்கவும் அப்பாய்ண்ட் மென்ட் கேட்டதால் உடனே கொடுத்து விட்டான்.

இரவு போல வீட்டிற்கு வந்தவன் சாப்பிட்டு விட்டு நேராக தன் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டான்.

நாளைய பொழுது இந்திரனுக்கு நிறைய அதிர்ச்சிகளையும் கூடவே ஆச்சரியங்களையும் வைத்துள்ளது என்பதை இன்று இப்போது அவன் அறியவில்லை. (வானிலை மாறும்...)
 
அதிர்ச்சி, ஆச்ரியங்களோடு...வர்மா பிரதர்ஸ் மறைக்கும் விஷயங்களும் வெளி வருமோ...?
 
எங்களுக்கும் அதிர்ச்சி, ஆச்சர்யம் கிடைக்குமா. :unsure: :unsure: :ROFLMAO: :ROFLMAO:
நியாயமா வரணும். வராட்டி அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது...???
 
அதிர்ச்சி, ஆச்ரியங்களோடு...வர்மா பிரதர்ஸ் மறைக்கும் விஷயங்களும் வெளி வருமோ...?
எஸ் அடுத்த ரெண்டு மூணு எபிசோட்ல எல்லாம் க்ளியர் ஆகிடும். இன்னும் மேக்சிமம் 5 எபிஸ்ல கதை முடிஞ்சிடும்... நன்றி??
 
ஆமாம், Feb ல புது கதை start பண்ண போறேன் சொன்னிங்க....எப்போ வரும் :unsure: :unsure: (y)(y)
எதிர்பாரா விதமா எனக்கு சில எக்ஸாம்ஸ் வந்திடுச்சு. மார்ச் 12 வரை நான் கொஞ்சம் இல்லை இல்லை ரொம்ப பிசி. சோ அதன் பிறகு கண்டிப்பா மைவிடு தூது வரும். அது எனக்கு ரொம்ப பிடிச்ச கதை... ரசிச்சு எழுதுறேன்... எழுதுவேன்... சீக்கிரம் வந்திடும்...
 

Advertisement

Top